அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-6
சீடன் : ஏன் உங்களுக்கு நாட்டின் மேல் ஆசை இல்லையா? நாட்டின் மேல் ஆசைப்பட்டுத் தானே இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நாட்டின் மேல் ஆசை இல்லை என்றால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே!
உங்களுக்கும் நாட்டின் மேல் ஆசை அதனால் தான் நீங்களும் கௌரவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
அர்ஜுனன் : எங்களுக்கு நாட்டின் மேல் ஆசை கிடையாது. துரியோதனன் நாட்டை ஆட்சி செய்யக் கூடாது என்ற காரணத்தினால் தான் நாங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், துரியோதனனுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியாது
அப்படியே நாட்டை ஆட்சி செய்தாலும் ஒழுங்காக ஆட்சி செய்ய மாட்டான்
மக்களைப் பாதுகாக்க மாட்டான்
நாட்டை அவனிடம் கொடுத்தால் நாட்டை காடாக்கி விடுவான்
நாங்கள் துரியோதனனிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க,
மக்களைப் பாதுகாக்க நாட்டை நாங்கள் ஆண்டு கொண்டு இருக்கிறோம்.
சீடன் : நீங்கள் மக்களைச் சரியாக பாதுகாத்து இருந்தால் நான் ஏன் உங்களைத் தேடி வருகிறேன் நீங்கள் மக்களைச் சரியாக பாதுகாக்காத காரணத்தினால் தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
துரியோதனன் சரியாக ஆட்சி செய்ய மாட்டான் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்
உங்கள் ஆட்சி சரியில்லை
மக்களைப் பாதுகாக்க உங்களுக்குத் தெரியவில்லை
அதனால் துரியோதனனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு செல்லுங்கள்
துரியோதனன் ஆட்சி செய்யட்டும் ஆட்சி நன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம்
உங்கள் ஆட்சியை விட அவர் ஆட்சி நன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம்
அதன் பிறகு முடிவு செய்வோம்
துரியோதனனுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரிகிறதா ?
மக்களைப் பாதுகாக்கத் தெரிகிறதா?
துரியோதனனுடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?
என்று பார்போம்.
துரியோதனனை ஆட்சி செய்ய விடாமல் அவருக்கு
ஆட்சி செய்யத் தெரியாது என்று எப்படி சொல்கிறீர்கள்
உங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியவில்லை
அதனால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படையுங்கள்
அவர் ஆட்சி செய்யட்டும் அப்புறம் பார்ப்போம்.
அர்ஜுனன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
சீடன் : நாட்டில் அமைதி வேண்டும்
மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும்
அதற்கு முதற்கட்டமாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற எங்களுடைய பசுக்களை மீட்டு வந்து எங்களிடம் ஒப்படையுங்கள்.
அர்ஜுனன் : நீங்கள் ஆசிரமத்திற்கு செல்லுங்கள்
நான் உங்கள் பசுக்களை மீட்டு வருகிறேன்
(சீடன் ஆசிரமத்தை நோக்கிச் செல்கிறான். அர்ஜுனன் தர்மரும், திரௌபதியும் இருக்கும் அறைக்குள் நுழைந்து தனது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பசுக்களை மீட்டுக் கொண்டு வர செல்கிறான்.)
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----16-02-2025
/////////////////////////////////
No comments:
Post a Comment