August 18, 2024

ஜபம்-பதிவு-1015 மரணமற்ற அஸ்வத்தாமன்-147 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1015

மரணமற்ற அஸ்வத்தாமன்-147

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

 

உன்னை எப்படி கர்ணனுடன் ஒப்பிட முடியும்.

உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

கர்ணனுடன் ஒப்பிடும் அளவிற்கு உனக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

கர்ணனுடன் உன்னை ஒப்பிடும் அளவுக்கு

நீ ஒன்றும் வீரத்தில் சிறந்தவன் இல்லை.

நீ ஒரு அடிமை.

கிருஷ்ணனின் அடிமை.

கிருஷ்ணன் சொன்னதைச் செய்யும் அடிமை

சுயபுத்தி இல்லாத அடிமை.

 

குருஷேத்திரப் போர்க்களத்தில் வில்லை எடுத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தாய். நான் வீரன் வீரன் என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தாய். நீ எல்லாம் வீரத்தைப் பற்றிப் பேசுகிறாய். வேடிக்கையாக இருக்கிறது

 

கிருஷ்ணன் உனக்கு சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அஸ்வத்தாமன் மரணமற்றவன்

அவனைக் கொல்ல முடியாது

அவனை அடிமைப்படுத்த முடியாது.

அவனை வீழ்த்த முடியாது.

அவனை சூழ்ச்சி செய்து நாட்டை விட்டுத் தான் துரத்த முடியும் என்று சொல்லி இருப்பானே.

 

என்னை எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே.

 

சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் வீழ்த்தினீர்கள், சூழ்ச்சி செய்து தானே அனைவரையும் கொன்றீர்கள். அதனால் என்னையும் எப்படி சூழ்ச்சி செய்து விரட்டுவது என்பதை சொல்லிக் கொடுத்து அனுப்பி இருப்பானே அந்த சூழ்ச்சி மேதை கிருஷ்ணன்.

 

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் கிருஷ்ணன் அதை செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள்.

 

இப்போது என்னை விரட்ட எந்த சூழ்ச்சியுடன் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்குத் தான் வீரம் என்பதே கிடையாதே.

 

அர்ஜுனா!

நான் வீரன், நான் வீரன் என்று சொல்லிக் கொண்டு திரிகிறாயே! உனக்கு வெட்கமாக இல்லை.

 

நீயெல்லாம் ஒரு வீரன்

உன்னையும் வீரன் என்று நம்பிக் கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னைப் போற்றுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

உன்னை வாழ்த்துவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

ஒன்றும் அறியாத அடிமைக் கூட்டம்

உன்னை வீரன் என்று நம்பிக் கொண்டு இருக்கிறது.

 

வீரம் இல்லாத உனக்கு வில் எதற்கு? எதற்காக வில்லை கையில் எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறாய். சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதற்கு கைகளில் வில். அதை கீழே எறிந்து விட்டு சூழ்ச்சியை செயல்படுத்து..

 

அர்ஜுனன் : போதும் பேசுவதை நிறுத்து அஸ்வத்தாமா! உனக்கு பேச மட்டும் தான் தெரியும்.

 

அஸ்வத்தாமன் : ஆமாம் எனக்கு உண்மையை பேசத் தெரியும்,

வீரம் என்றால் என்ன என்று தெரியும்

வீரம் இல்லாதவர்கள் யார் என்று தெரியும்

வீரத்துடன் போரிடாதவர்கள் யார் என்று தெரியும்

வீரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் யார் என்று தெரியும்

வீரர்களைப் பார்த்து பயப்படுபவர்கள் யார் என்று தெரியும்

 

சூழ்ச்சி செய்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சியை உணர்ந்து கொள்ளத் தெரியும்

சூழ்ச்சி செய்பவர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து வெற்றி பெற நினைப்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொல்பவர்கள் யார் என்று தெரியும்

சூழ்ச்சி செய்து கொன்றவர்கள் யார் என்று தெரியும்

 

(அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் இடையே கடுமையான சண்டை நடக்கிறது.

 

சண்டையின் உச்சகட்டத்தில் பிரம்மாஸ்திரத்தை அஸ்வத்தாமன் விட அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை விடுகிறான்)

 

வேத வியாசர் : அர்ஜுனா, அஸ்வத்தாமா இருவரும் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள்.

 

அஸ்வத்தாமன் : எதற்காக நான் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

 

அர்ஜுனனையும், பாண்டவர்களையும் அழிப்பதற்காகத் தானே செலுத்தினேன்.

அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இறக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கொல்வதற்காகத் தானே செலுத்தினேன்.

 

அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால் மேலும் மேலும் அக்கிரங்களைச் செய்து கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தானே செலுத்தினேன்.

 

சூழ்ச்சிகள் செய்து இன்னும் பல குடும்பங்களை அழிப்பார்கள் என்ற காரணத்திற்காகத் தானே செலுத்தினேன்.

 

பாண்டவர்களைக் கொல்வேன் என்று துரியோதனனுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காகத் தானே செலுத்தினேன்.

 

இதில் என்ன தவறு இருக்கிறது

 

இதில் ஒரு தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment