August 18, 2024

ஜபம்-பதிவு-1009 மரணமற்ற அஸ்வத்தாமன்-141 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1009

மரணமற்ற அஸ்வத்தாமன்-141

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமனை யாராலும் தடுக்க முடியாது

அவனைக் கொல்லக் கூடாது

அப்படிக் கொன்றால் அது உலகத்தின் அழிவு

ஆனால் அவன் அனைவரையும் கொல்லலாம்.

யாரும் அவனைத் தடுக்க முடியாது.

அவன் பாண்டவர்கள் ஐவரையும் கொல்லும் திறன் படைத்தவன்

அதனால் தான் அவர்களைக் கூட்டிக் கொண்டு சென்றேன்

இத்தகைய சூழ்நிலையில் இதைத் தவிர்த்து வேறு எதையும் செய்ய முடியாது.

பாஞ்சாலி : அவர்களுக்குப் பதில் என் பிள்ளைகளைக் கொன்று விட்டீர்கள்

கிருஷ்ணன் : கர்மாவைப் பற்றித் தெரியாத காரணத்தினால் தான் சிலர் கடவுளையே குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளையே குறை சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள்

இந்த மனிதர்களுக்கு கர்மா என்றால் என்ன என்று தெரியவில்லை

கர்மா எப்படி இயங்கும் என்பதும் தெரியவில்லை

கர்மா எப்படி தன்னுடைய விளைவுகளைக் கொடுக்கிறது என்பதும் தெரியவில்லை

கர்மாவிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதும் தெரியவில்லை.

கர்மா தன்னுடைய விளைவைக் கொடுக்கும் வரை அமைதியாக இருக்காது என்பதும் தெரியவில்லை.

கடவுளைக் கும்பிட்டாலும் கர்மா பாதிக்கும் என்பதும் தெரியவில்லை

ஆன்மீகத்தில் உயர்ந்த நிலை அடைந்தாலும் கர்மா இருக்கும் வரை அது தன் விளைவுகளைக் கொடுக்கும் என்பது தெரியவில்லை

கர்மாவைப் பற்றி சொன்னாலும் தெரியவில்லை

அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளவும் தெரியவில்லை

இந்த மனிதர்களை என்ன செய்வது

பாஞ்சாலி : அஸ்வத்தாமனை விரட்டப் போவது யார். யார் இந்தச் செயலை எனக்காகச் செய்யப் போகிறார்கள்.

இந்த செயலைச் செய்து முடிக்கும் வரை, என் மனம் அமைதி அடையும் வரை, நான் உண்ணப் போவதில்லை, உறங்கப் போவதில்லை, என் பிள்ளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்யப் போவதில்லை.

கிருஷ்ணன் : எப்போது பார்த்தாலும் ஒன்று சாபம் இட வேண்டும் அல்லது சபதம் எடுக்க வேண்டும்

இதே வேலையாகத் தான் பாண்டவர்களும், பாண்டவர்களைச் சார்ந்த  அனைவரும் இருக்கீறீர்கள்

சரி சபதம் எடுக்கிறீர்கள் அதை உங்களால் தனிப்பட்ட முறையில் நிறைவேற்ற முடிந்ததா இல்லையே

அனைத்தையும் நான் தான் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது

அதற்காக நான் செய்யும் செயல்களால் என்னை எல்லோரும் கெட்டவன் என்கிறார்கள்

சபதத்தை முடிக்கக் கூடிய திறமை இருந்தால் மட்டுமே சபதம் எடுக்க வேண்டும்

சபதத்தை முடிக்கக் கூடிய திறமை இல்லாமல் ஏன் அனைவரும் சபதம் எடுக்கிறீர்கள்

இதுவரை நீங்கள் எடுத்த சபதம் ஏதேனும் ஒன்றை நான் இல்லாமல் நீங்கள் சுயமாக நிறைவேற்றி இருக்கிறீர்களா

ஒன்றையும் என்னுடைய துணை இல்லாமல் நிறைவேற்றவில்லை.

நீங்கள் அனைவரும் சிந்திக்காமல், நாம் எடுக்கும் சபதத்தை நம்மால் முடிக்க முடியுமா என்று சிந்திக்காமல் உணர்ச்சி வயப்பட்டு எடுத்து விடுகிறீர்கள்

அதனை முடிக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் அதை முடிக்க நான் வர வேண்டி இருக்கிறது. அதை நான் தான் வந்து முடித்து வைக்க வேண்டி இருக்கிறது

பிறகு எதற்காக சபதம் எடுக்கிறீர்கள்

கௌரவர்கள் யாராவது சபதம் எடுக்கிறீர்களா

அவர்களுக்கு அவர்களுடைய சக்தி தெரியும்

தங்களால் இந்த செயலைச் செய்ய முடியுமா என்று தெரியும்

தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள்.

முடியாவிட்டால் விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்

அவர்கள் சபதம் பெரும்பாலும் எடுப்பதே இல்லை.

சபதமும், சாபமும் தேவையில்லாதது என்பதை அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்

ஆனால் பாண்டவர்களும் பாண்டவர்களைச் சார்ந்தவர்களும் எதற்கு எடுத்தாலும் சபதம் எடுப்பதையே தொழிலாக வைத்து இருக்கிறீர்கள்

சாபம் இடுவதையே பிழைப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள்

பீமன் துரியோதனனை கொல்வதாக சபதம் எடுத்தான். அதை அவனால் சுயமாக செய்ய முடிந்ததா. செய்ய முடியவில்லை.

துரியோதனனை தொடையில் அடித்தால் தான் கொல்ல முடியும் என்று நான் சொல்லிக் கொடுத்ததால் தான் பீமன் துரியோதனனைக் கொன்றான். இல்லை என்றால் பீமனால் துரியோதனனைக் கொன்று இருக்கவே முடியாது

துரியோதனன் செய்த தவறுக்கு அவனை போரில் கொல்ல முடிந்தால் கொல்லலாம் என்று பீமன் இருந்து இருக்க வேண்டும்

ஆனால் அவ்வாறு செய்யாமல் சபதம் எடுக்கிறேன் துரியோதனனைக் கொல்வேன் என்று சபதம் எடுக்கிறேன் என்று சபதம் எடுத்தத்தால் என்ன பயன் ஏற்பட்டது. ஒரு பயனும் ஏற்படவில்லை

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment