August 18, 2024

ஜபம்-பதிவு-1016 மரணமற்ற அஸ்வத்தாமன்-148 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1016

மரணமற்ற அஸ்வத்தாமன்-148

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

வேத வியாசர் : நீ விடும் பிரம்மாஸ்திரம் பாண்டவர்களை  மட்டும் அழித்தால் பரவாயில்லை. ஆனால் பிரம்மாஸ்திரம் இந்த உலகத்தையே அழித்து விடும்.

 

பிரம்மாஸ்திரம் இந்த உலகத்தையே அழித்துவிடும். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழித்து விடும். எதிர்காலத்தில் இந்த உலகத்தில் எந்த ஒரு உயிரினமும் வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்று உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லிக் கொடுத்தவர் சொல்லவில்லையா

 

 

உன்னுடைய பகை உணர்ச்சி உன்னுடைய பகைவனை மட்டும் அழிக்கக் கூடிய நிலையில் இருக்க வேண்டும். இந்த உலகத்தை அழிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது

 

பாண்டவர்கள் மேல் நீ கொண்ட வெறுப்பு இந்த உலகத்தை அழிக்கக் காரணமாகி விடக்கூடாது.

 

(அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்)

 

வேத வியாசர் : அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டு விட்டான். நடக்கப் போகும் விரும்பத் தகாத நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீயும் பிரம்மாஸ்திரத்தைத் திரும்ப அழைத்துக் கொள்.

 

(அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ளாமல் இருக்கிறான்.)

 

வேத வியாசர் : அஸ்வத்தாமா! பிரம்மாஸ்திரத்தை ஏன் திரும்ப அழைத்துக் கொள்ளாமல் இருக்கிறாய்? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய். நேரம் சென்று கொண்டிருக்கிறது. பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்.

 

அஸ்வத்தாமன் : பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியாது!

 

வேத வியாசர் : பிரம்மாஸ்திரத்தை முழுவதுமாக தெரியாமல் பயன்படுத்தக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?

 

அஸ்வத்தாமன் :  எனக்குத் தெரியும். அதனால் தான் என் தந்தையிடம் முழுமையாக கற்றுக் கொடுங்கள் என்றேன். என் தந்தை எனக்கு முழுமையாகக் கற்றுக் கொடுக்கவில்லை..

 

வேத வியாசர் : எதற்காக கற்றுக் கொடுக்கவில்லை?

 

அஸ்வத்தாமன் : எனக்கு நல்லவனாக நடிக்கத் தெரியவில்லை. அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்க எனக்குத் தெரியவில்லை.அதனால் எனக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

 

அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்க எனக்குத் தெரிந்து இருந்தால் அர்ஜுனனுக்கு எவ்வாறு பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக சொல்லிக் கொடுத்தாரோ அவ்வாறே எனக்கும் முழுமையாக சொல்லிக் கொடுத்து இருப்பார்

 

எனக்கு அர்ஜுனனைப் போல் நல்லவனாக நடிக்கத் தெரியாத காரணத்தினால் தான் பிரம்மாஸ்திரத்தைப் பற்றி என்னுடைய தந்தை முழுமையாக எனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை

 

என் தந்தை அர்ஜுனனை நல்லவன் என்று நம்பினார்.

தன்னை ஏமாற்ற மாட்டான் என்று நம்பினார்.

தனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்று நம்பினார்.

தனக்கு கெடுதல் செய்ய மாட்டான் என்று நம்பினார்.

அதனால் தான் அர்ஜுனனுக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார்.

பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக கற்றுக் கொடுத்தார்.

ஆனால் அர்ஜுனன் என் தந்தை கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதை தடுக்கக் கூட வரவில்லை. அதை தடுப்பதற்கு எந்த ஒரு செயலும் செய்யவில்லை. எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

 

என் தந்தை அர்ஜுனனை நம்பி இருந்தார். ஆனால் அர்ஜுனன் என் தந்தைக்கு துரோகம் செய்து விட்டான்.

 

நல்லவனாக இருந்த என்னை என் தந்தை நம்பவில்லை. அர்ஜுனனைப் போல் நல்லவனாக எனக்கு நடிக்கத் தெரியவில்லை. அதனால் என் தந்தை பிரம்மாஸ்திரத்தைப் பற்றி முழுமையாக எனக்கு சொல்லிக் கொடுக்கவில்லை.

 

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment