August 18, 2024

ஜபம்-பதிவு-1017 மரணமற்ற அஸ்வத்தாமன்-149 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1017

மரணமற்ற அஸ்வத்தாமன்-149

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஆனால், நல்லவன் போல் நடித்த அர்ஜுனனை என் தந்தை நம்பி விட்டார். அதனால் தான் பிரம்மாஸ்திரத்தை முழுவதுமாக அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்.

 

இத்தகைய காரணத்தினால் தான் பிரம்மாஸ்திரத்தை செலுத்தும் வித்தை எனக்குத் தெரியும், திரும்ப அழைத்துக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியாது.

 

இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள்.

 

வேத வியாசர் : பிரம்மாஸ்திரத்தை திரும்ப அழைக்கும் வித்தை தெரியவில்லை என்றால் அதன் பாதையை மாற்று. அதை எதன் மீதாவது செலுத்து.

 

அஸ்வத்தாமன் : இரவிலே பாண்டவர்களைக் கொல்ல வந்த போது கிருஷ்ணன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அப்போது பாண்டவர்கள் தப்பித்தார்கள். ஆனால் பாண்டவர்களின் வாரிசை கொன்று விட்டேன்.

 

இப்போதும் பாண்டவர்களைக் கொல்ல வந்தேன். ஆனால், வேத வியாசரான தாங்கள் அவர்களைக் காப்பாற்றி விட்டீர்கள். என்னால் பாண்டவர்களைக் கொல்ல முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுடைய வாரிசைக் கொல்கிறேன்.

 

உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி செலுத்துகிறேன். உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்கிறேன். பாண்டவர்களின் வாரிசு இந்த உலகத்தில் இல்லாமல் அழிக்கிறேன்.

 

பாண்டவர்களைப் போல அந்த குழந்தையும் இந்த உலகத்தில் பிறந்து சூழ்ச்சி செய்து வாழ வேண்டாம்.

 

அதனால் பிரம்மாஸ்திரமே உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் போய் கொன்று விடு.

 

(பிரம்மாஸ்திரம் உத்தரை இருக்கும் இடத்திற்குச் சென்று அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையை நோக்கி சென்று உத்தரையின் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொன்று விடுகிறது)

 

கிருஷ்ணன் : அஸ்வத்தாமா எவ்வளவு கொடுமையான செயலைச் செய்து இருக்கிறாய்?

ஒரு குழந்தையைக் கொல்வது பாவம் இல்லையா?

அஸ்வத்தாமன் : எதைப் பாவம் என்கிறாய். நான் செய்தது பாவம் கிடையாது. பாவத்துடன் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

பாண்டவர்களாகிய பாவிகளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தேடிக் கொண்ட பாண்டவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையை கொல்வது பாவம் கிடையாது

அதுவும் அர்ஜுனனின் வாரிசைக் கொல்வது பாவமே கிடையாது.

குழந்தை பிறந்து, வளர்ந்து பாண்டவர்களைப் போல் சூழ்ச்சிகள் செய்து பாவத்தைத் தான் தேடிக்கொள்ளப் போகிறது.

அந்த குழந்தையைப் பாவம் பிடித்து கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத் தான் உத்தரையின் குழந்தையைக் கொன்றேன்.

கிருஷ்ணன் : நீ கொன்று விட்டால் குழந்தை இறந்து விடும் என்று நினைத்தாயா?

குழந்தையைக் காப்பாற்ற யாரும் இல்லை என்று நினைத்தாயா?

குழந்தைக்கு உயிர் கொடுக்க யாரும் இல்லை என்று நினைத்தாயா?

நான் இருக்கிறேன். இறந்த குழந்தைக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

குழந்தையை உயிரோடு எழுப்ப நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வாரிசுக்கு உயிர் கொடுக்க நான் இருக்கிறேன்.

பாண்டவர்களின் வம்சத்தை அழியாமல் காப்பதற்கு நான் இருக்கிறேன்.

பாணடவர்களுக்காக நான் இருக்கிறேன்.

பாண்டவர்களையும், பாண்டவர்களின் வம்சத்தையும் அழியாமல் பாதுகாக்க நான் இருக்கிறேன்.

நான் இருக்கும் வரை பாண்டவர்களையும், பாண்டவர்கள் வம்சத்தையும் யாரும் ஒன்றும் செய்து விடவும் முடியாது. அழித்து விடவும் முடியாது.

அஸ்வத்தாமா!

நீ செய்த செயல் எவ்வளவு கொடுமையான செயல் தெரியுமா

யாரும் செய்யாத செயல் தெரியுமா

யாருமே செய்ய யோசிக்கக் கூடிய செயல் தெரியுமா

இதுவரை இந்த செயலை யாரும் செய்ததில்லை தெரியுமா

நான் உனக்கு தரப்போகும் சாபம் இந்த உலகத்திற்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

வருங்காலத்தில் இந்தகைய ஒரு செயலை செய்ய யாரும் யோசிக்கவே கூடாது செய்ய முயற்சி செய்யவே கூடாது.

பாவம் செய்தால் எத்தகைய தண்டனை கிடைக்கும் என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

பணம் பதவி அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் பாவம் செய்து விட்டு யாரும் தப்பிக்க முடியாது என்பதை இந்த உலகம் உன்னைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment