August 18, 2024

ஜபம்-பதிவு-1014 மரணமற்ற அஸ்வத்தாமன்-146 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1014

மரணமற்ற அஸ்வத்தாமன்-146

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

பாண்டவர்களைக் கொல்லாவிட்டாலும் பரவாயில்லை. பாண்டவர்களின் வாரிசுகளையாவது கொன்றேனே அதுவே எனக்குப் போதும்.

அன்று இரவில் நீங்கள் ஐவரும் இருந்திருந்தால் அனைவரும் கொல்லப்பட்டு இருப்பீரகள் என்று கிருஷ்ணனுக்குத் தெரியும்

என்னை எதிர்த்து உங்களால் போரிட்டு ஜெயிக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னுடன் சண்டையிட்டு நீங்கள் உயிர் பிழைக்க முடியாது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்.

என்னை எதிர்த்து சண்டையிட்டால நீங்கள் இறந்து விடுவீர்கள் என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும்,

உங்கள் உயிரைக் காப்பாற்ற கிருஷ்ணன் உங்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். மறைவான இடத்தில் கொண்டு சென்று உங்களை மறைத்து வைத்து விட்டான்.

நீங்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி போய் ஒளிந்து கொண்டீர்கள்.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொண்ட நீங்கள் கோழைகளா? அல்லது உங்களை அழிக்க வந்த நான் கோழையா?

நீங்கள் தான் கோழைகள். வீரர்கள் போல நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை வீரர்கள் போல் இந்த உலகத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

உங்களுடைய போலி நாடகத்தை நம்பி ஏமாந்து, இந்த உலகமும் உங்களை வீர்ர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறது.

உங்களை வாழ்த்திக் கொண்டு இருக்கிறது. போற்றிக் கொண்டு இருக்கிறது.

அர்ஜுனா!

ஜெயத்ரதனை சூரிய உதயத்திற்குள் கொல்வேன் அப்படி என்னால் கொல்ல முடியவில்லை என்றால் தீயில் விழுந்து இறந்து போவேன் என்று வீரவேசமாக சபதம் எடுத்து விட்டு

 

ஜெயத்ரதனை நெருங்க முடியாமல், ஜெயத்ரதனைக் கொல்ல முடியாமல், எங்கே தோற்று விடுவோமோ? நெருப்பில் இறங்கி இறந்து இறந்து விடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ? என்று பயந்து 

 

என் தந்தையின் காலில் விழுந்து, அழுது புரண்டு, நீதி என்றும். நியாயம் என்றும், தர்மம் என்றும், பேசி, உயிர் வாழ்வதற்குப் பிச்சை கேட்டு,

 

உங்கள் சீடனுக்கு இந்த நிலை ஏற்படலாமா என்று கதறி கண்ணீர் விட்டு என் தந்தையின் காலைப் பிடித்துக் கதறியதால், நீ செல்வதற்கு என் தந்தை வழி விட்டார்.

 

பின்னர் கிருஷ்ணனின் சூழ்ச்சியால் சூரியனை மறைத்து ஜெயத்ரதனை வெளியே வரச்செய்து ஜெயத்ரதன் வெளியே வந்ததும், சூரியன் இன்னும் அஸ்தனமம் ஆகவில்லை ஜெயத்ரதனைக் கொல் என்று கிருஷ்ணன் சொன்னதும், சுயபுத்தி இல்லாமல் ஜெயத்ரதனைக் கொன்றாயே நீ தானடா கோழை.

 

கர்ணன் ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த போது கர்ணனைக் கொன்றாயே நீ தான் கோழை.

 

அர்ஜுனா

இந்த 18 நாள் நடந்த குருஷேத்திரப் போரில் உருப்படியாக என்ன செய்தாய்.  உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை.

எந்த ஒரு சாதனையையும் செய்யவில்லை. வீரத்துடன் போரிடவில்லை. நேர்மையாக யாரையும் கொல்லவில்லை.

கிருஷ்ணன் போரிடு என்று சொல்லும் போது போரிட்டாய்.

கிருஷ்ணன் போரிடாதே என்று சொல்லும் போது போரிடவில்லை.

 

கிருஷ்ணன் அம்பை விடு என்று சொல்லும் போது அம்பை விட்டாய்.

கிருஷ்ணன் அம்பை விடாதே என்று சொல்லும் போது அம்பை விடவில்லை.

 

கிருஷ்ணன் எதிரியைக் கொல் என்று சொல்லும் போது எதிரியைக் கொன்றாய்.

கிருஷ்ணன் எதிரியைக் கொல்லாதே என்று சொல்லும் போது எதிரியைக் கொல்லவில்லை.

 

சொல்லப்போனால் இந்தப் போரில் நீ சுயமாக எதுவும் செய்யவில்லை. சொந்தமாக செயல்படவில்லை. சுயபுத்தியுடன் போரிடவில்லை.

 

கிருஷ்ணனுக்கு அடிமையாக இருந்தாய். கிருஷ்ணன் சொல்லியதை செயல்படுத்தினாய். கிருஷ்ணன் சொன்னபடி நடந்து கொண்டாய்.

 

கிருஷ்ணன் உன்னை இயக்கினான். நீ இயங்கினாய். கிருஷ்ணனின் கைப்பாவையாக இருந்தாய்.

 

கிருஷ்ணன் செய்த சூழ்ச்சியை நீ செயல்படுத்தினாய். அவ்வளவு தான் இந்தப் போரில் எங்கே உன் வீரம் வெளிப்பட்டது. எங்கேயும், எந்த இடத்திலும் உன்னுடைய வீரம் வெளிப்படவேயில்லை.

 

பீஷ்மரை சிகண்டி கொன்றான்

என் தந்தை துரோணரை திருஷ்டத்யும்னன் கொன்றான்

சல்லியனை தர்மர் கொன்றான்

துரியோதனனையும் மற்ற கௌரவர்கள் 99 பேரையும் பீமன் கொன்றான்

 

இந்தப் போரில் என்ன பெரியதாக சாதித்து விட்டாய். இந்தப் போரில் நீ ஒன்றுமே சாதிக்கவில்லை.

 

 

உன்னை கர்ணனுடன் ஒப்பிடுகிறார்கள். அது தவறானது. கேவலமானது. வெட்கக் கேடானது. உன்னை கர்ணனுடன் ஒப்பிடவே கூடாது.

 

கர்ணன் போரில் தனியாக சுயபுத்தியுடன் போரிட்டான். வீரத்துடன் போரிட்டான். நேர்மையாக போரிட்டான். ஆனால் நீ கிருஷ்ணன் சொன்னதைச் செய்தாய். கிருஷ்ணனுக்கு அடிமையாக செயல்பட்டாய். கிருஷ்ணனின் சூழ்ச்சிகளைச் செயல்படுத்தினாய்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment