August 11, 2022

ஜபம்-பதிவு-841 (சாவேயில்லாத சிகண்டி-175)

 ஜபம்-பதிவு-841

(சாவேயில்லாத

சிகண்டி-175)

 

துரியோதனன் :

இந்த உலகத்தில்

உள்ள மக்களுக்கு

எது உண்மை

எது பொய்

என்பது தெரியாது

 

எது உண்மை

என்பதைத்

தெரிந்து கொள்ள

முயற்சி செய்யவும்

மாட்டார்கள்

 

நினைத்தபடி

அவர்களுடைய

வாழ்க்கை நடந்து

கொண்டிருக்கிறதா

அதுவே

அவர்களுக்குப் போதும்

 

நினைத்தபடி

அவர்களுடைய

வாழ்க்கை

அமையவில்லை

என்றால்

மட்டுமே அவர்களுக்கு

இந்த உலகம்

அவர்களுடைய

நினைவுக்கு வரும்

 

உலகத்தை குற்றம்

சொல்வார்கள்

உலகம் சீரழிந்து

கிடக்கிறது என்பார்கள்

ஆனால்

உலகத்தை சீர்திருத்த

எந்த ஒரு

செயலும் செய்ய

மாட்டார்கள்

 

உலகத்தை குறை

சொல்கிறாயே

உலகத்தை

சீர்திருத்தலாம்

வா என்றால்

எனக்கு குடும்பம்

இருக்கிறது

நான் இல்லாவிட்டால்

என்னுடைய

குடும்பத்தை யார்

காப்பாற்றுவர்கள் என்று

சுயநலமாக

பேசிக் கொண்டு

உலகத்தை சீர்திருத்த

வரமாட்டார்கள்

இந்த சுயநலம்

கொண்டவர்கள்

 

பொது நலம்

கொண்டவர்களுக்கு

மட்டுமே இந்த

உலகத்தைப் பற்றியும்

இந்த உலகத்தில்

உள்ள குறைகளைப்

பற்றியும்

பேசுவதற்கு

உரிமை இருக்கிது

 

சுயநலவாதிகளுக்கு

தைரியமில்லாத

கோழைகளுக்கு

இந்த உலகத்தைப்

பற்றிப் பேச எந்த

உரிமையும் இல்லை

 

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

தவறானதை சொன்னால்

அவர்கள் பின்னால்

சொல்வார்கள்

அவர்கள் சொல்படி

நடப்பார்கள்

அவர்களுக்கு அடிமையாக

இருப்பார்கள்

 

உண்மையானவர்கள்

உண்மையை சொன்னால்

அவர்களை ஏளனம்

செய்வார்கள்

அவர்களை அவமானப்

படுத்துவார்கள்

அவர்களை ஒதுக்கித்

தள்ளுவார்கள்

 

இந்த உலகத்தில் உள்ள

மக்கள்

உண்மையைப் புரிந்து

கொள்ளவில்லையே என்று

வருத்தப் பட்டுக்

கொண்டிருந்தால்

நம்முடைய

செயல்களைச்

செய்யாமல்

விட்டு விட்டால்

நம்முடைய கடமையை

நிறைவேற்றாமல்

போய் விட்டால்

நம்முடைய வாழ்க்கை

தான் பாதிக்கப்படும்

 

அறிவுள்ளவர்கள்

புரிந்து கொள்ளட்டும்

அறிவில்லாதவர்கள

புரிந்து கொள்ளாமல்

போகட்டும்

என்று நாம்

நம்முடைய கடமையை

சரியாக செய்து

கொண்டே போனால்

வாழ்க்கையில்

நிம்மதி இருக்கும்

இல்லை என்றால்

நம்முடைய

வாழ்க்கையில் நிம்மதி

என்பதே இருக்காது

 

யுயுத்சுவைப் போல்

இன்னும் எத்தனை

துரோகிகள் முளைக்கப்

போகிறார்கள்

என்பதை

இனி நடக்கப்போகும்

குருக்ஷேத்திரப்போரில்

பார்க்கப் போகிறோம்

 

போருக்கு ஆயத்தமாகு

 

முதல் நாள்

குருக்ஷேத்திரப் போர்

தொடங்கிற்று

 

ஒன்பது நாள்

நடந்து முடிந்த

குருக்ஷேத்திரப் போரில்

பீஷ்மர் அதிக

அளவில் பாண்டவர்கள்

படையில் சேதத்தை

ஏற்படுத்தினார்.

 

பீஷ்மரை எப்படி

வீழ்த்துவது என்பதைப்

பற்றி பேசுவதற்கு

ஒன்பதாம்

நாள் இரவு

பாண்டவர்கள்

கூடாரத்தில் நடைபெற்ற

கூட்டத்திற்கு

சிகண்டி வந்தார்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment