December 04, 2022

ஜபம்-பதிவு-904 மரணமற்ற அஸ்வத்தாமன்-36 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-904

மரணமற்ற

அஸ்வத்தாமன்-36

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஏழைகளுடன்

பழகக் கூடாது

ஏழைகளுடன்

உறவு வைத்துக்

கொள்ளக் கூடாது

ஏழைகளுடன்

உறவு வைத்துக்

கொண்டால்

பணக்காரர்கள்

நம்முடன் பழக

மாட்டார்கள்

என்று சொல்லி

வளர்க்கின்றனர்

 

படிக்காத

பிள்ளைகளுடன்

சேர்ந்தால்

நமக்கும் படிப்பு

வராது

 

படிக்கும்

பிள்ளைகளுடன்

சேர்ந்தால் தான்

நமக்கு படிப்பு வரும்

அதனால் படிக்கும்

பிள்ளைகளுடன்

மட்டும் தான்

சேர வேண்டும்

படிக்காத

பிள்ளைகளுடன்

சேராதே

என்று சொல்லி

வளர்க்கின்றனர்

 

பிறரை மதித்து

நடக்க வேண்டும்

என்பதை சொல்லிக்

கொடுத்து

வளர்ப்பதில்லை

 

பிற உயிர்களிடம்

அன்பு காட்ட

வேண்டும்

கருணை காட்ட

வேண்டும்

இரக்கம் காட்ட

வேண்டும்

என்பதை சொல்லிக்

கொடுத்து

வளர்ப்பதில்லை

 

பிற உயிர்களுக்கு

துன்பம் செய்யக்

கூடாது என்று

சொல்லிக்

கொடுத்து

வளர்ப்பதில்லை

 

பிள்ளைகளுக்கு

என்ன சொல்லி

கொடுத்து வளர்க்க

வேண்டுமோ

அதை சொல்லிக்

கொடுத்து

வளர்ப்பதில்லை

 

பிள்ளைகளுக்கு

எதை சொல்லிக்

கொடுத்து

வளர்க்கக்

கூடாதோ

அதை சொல்லிக்

கொடுத்து

வளர்க்கின்றனர்

 

பெற்றோர்களால்

சரியான வழி

காட்டுதல்

இல்லாமல்

வளர்க்கப்படும்

பிள்ளைகள்

கெட்டுப்

போகிறார்கள்

 

பெற்றோர்களின்

சரியான

வழிகாட்டுதல்

இல்லாமல்

வளர்க்கப்படும்

பிள்ளைகள்

வளர்ந்த பிறகு

நான் தான்

கஷ்டப்பட்டு

படித்தேன்

 

நான் தான்

கஷ்டப்பட்டு வேலை

வாங்கினேன்

 

நான் தான்

கஷ்டப்பட்டு

சம்பாதித்தேன்

அனைத்தையும்

நான் தான்

எனக்காகச் செய்து

கொண்டேன்

 

எனக்காக நீங்கள்

என்ன செய்தீர்கள்

 

சொத்து சேர்த்து

வைத்தீர்களா

வீடு கட்டி

வைத்தீர்களா

நிலம் வாங்கி

வைத்தீர்களா

நகை வாங்கி

வைத்தீர்களா

என்று

பெற்றோர்களை

கேள்விகள்

கேட்டுக் கொண்டு

அவர்கள் மனதை

வருத்தப்பட

வைத்துக் கொண்டு

பெற்றோர்களை

மதிக்காமல்

தலைக் கனத்தில்

ஆடிக்

கொண்டிருக்கின்றனர்

 

பெற்றோர்கள்

பிள்ளைகளுக்கு

நல்ல பழக்க

வழக்கங்களைச்

சொல்லிக் கொடுத்து

வளர்ப்பதில்லை

அதனால் அவர்கள்

நல்ல பிள்ளைகளாக

வளர்வதில்லை

நல்ல பிள்ளைகளாக

இருப்பதில்லை

கெட்டுப் போகிறார்கள்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------04-12-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

//////////////////////

 

 

No comments:

Post a Comment