March 30, 2020

பரம்பொருள்-பதிவு-165


              ஜபம்-பதிவு-413
            (பரம்பொருள்-165)

அரவான்  :
“அழகு என்ற
உளி எடுத்து,
பருவம் என்ற
பாறையில்,
கவர்ச்சியாக
செதுக்கப்பட்ட,
மனதை மயக்கும்
சிலையாக-நீ,
இருக்கிறாய் “

“அது மட்டுமா ?”

“காற்றுப் பட்டு
கலைந்து ஓடும்
கருநிற மேகங்களைப்
போன்று காற்றில்
அசைந்தாடிக்
கொண்டிருக்கும்
கருநிற மேகங்களைப்
போன்ற உன்னுடைய
கூந்தலும் ;”

“வானத்தில்
ஒளிர்ந்து
ஒளி வீசி மக்களின்
மனதை மயக்கிக்
கொண்டிருக்கும்
பிறைச்சந்திரனை
வெட்டி எடுத்து
வந்து வைத்தது
போல் இருக்கும்
பிறைச்சந்திரனைப்
போன்ற உன்னுடைய
நெற்றியும் ;”

“எதிரிகளை
வீழ்த்துவதற்கென்றே
உருவாக்கப்பட்ட
வீரம் செறிந்த
வில்லைப் போன்று
வளைந்திருக்கும்
வில்லைப்
போன்ற உன்னுடைய
புருவங்களும் ;”

“வில்லிலிருந்து
புறப்பட்ட அம்பு
எதிரிகளை
வீழ்த்தாமல்
பாதை மாறி வந்து
என்னுடைய
இதயத்தை
துளைத்துக்
கொண்டிருக்கும்
அம்பை விடக்
கூர்மையான
உன்னுடைய
கண்களும் ;”

“அமைதியாக
ஆரவாரம் அற்று
அடக்க நிலையில்
இருக்கும்
என்னுடைய
உணர்வுகளைத்
தட்டி எழுப்பி
கிறங்கடிக்கும்
உணர்வு மிக்க
உன்னுடைய நீண்ட
மூக்கும் ;”

“இரத்தமே
இருப்பதிலே
சிவப்பு என்றால் - அந்த
இரத்தத்தையே
மிஞ்சும் வகையில்
சிவப்பாக இருக்கும்
உன்னுடைய
கவர்ச்சியான
இதழ்களும் ; “

“தேன் எப்படி
தேன் கூட்டிற்குள்
இருக்குமோ
அதைப்போல்
அமிர்தம்
குடிகொண்டு
வழிந்தோடி
போதையை
உண்டாக்கும்
வகையில்
அமிர்தம் நிறைந்து
இருக்கும்
உன்னுடைய
வாயும் ;”

“ஆப்பிளை
வெட்டி எடுத்து
இருபுறமும்
வைத்தது போல்
இருந்து கொண்டு
ரோஜாவைப் போல்
ஒளி வீசி
மிளிர்ந்து
கொண்டிருக்கும்
வசீகரிக்கும்
உன்னுடைய
கன்னங்களும் ;”

“மாதுளம் பழத்தில்
உள்ள முத்துக்களை
வரிசையாக அடுக்கி
வைத்தாற் போல்
பளபளப்பாக இருக்கும்
உன்னுடைய
ஒளிவீசும்
பற்களும் ;”

“பௌர்ணமி நிலவை
கொண்டு வந்து
உருக்கி வார்த்து
செய்தது போல்
இருக்கும்
மதியை மயக்கும்
பௌர்ணமியைப்
போன்ற உன்னுடைய
முகமும் ;”

“காண்போர் கண்களை
கவர்ந்திழுக்கும்
வகையில் மின்னும்
அணிகலன்களை
அணிந்து
பூங்கொடிகள் சுற்றிய
கமுகைப்
போன்று இருக்கும்
உன்னுடைய
கழுத்தும் ;”

“மூங்கிலை
வளைத்து வைத்து
உருவாக்கியது போல்
இருக்கும் மூங்கிலைப்
போன்ற உன்னுடைய
தோள்களும் ;”

“வான வில்லாள்
ஓரளவிற்குத் தான்
வளைய முடியும்
என்னால் அதையும்
தாண்டி வளைய
முடியும் என்று
நெளிந்தாடிக்
கொண்டிருக்கும்
வானவில்லைப்
போன்ற உன்னுடைய
இடையும் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////




No comments:

Post a Comment