March 30, 2020

பரம்பொருள்-பதிவு-166


              ஜபம்-பதிவு-414
            (பரம்பொருள்-166)

“கார்த்திகைப்
பூக்களை எடுத்து
வரிசையாக
கட்டி வைத்தது
போல இருக்கும்
கார்த்திகைப்
பூப்போன்ற
உன்னுடைய
விரல்களும் ;”

“தண்ணீருக்குள்
இருக்கும் தாமரை
எப்படி அழகாக
இருக்குமோ
அதைப்போல
அழகை வெளிச்சம்
போட்டுக் காட்டிக்
கொண்டிருக்கும்
தாமரை பூப்போன்ற
உன்னுடைய
கால்களும் ;”

“மல்லிகையை விட
மென்மையாக இருக்கும்
மிருதுவான
மல்லிகை பூப்போன்ற
உன்னுடைய
பாதங்களும் ;”

“சோலையில்
இனிய கீதம்
பாடித் திரிந்து
கொண்டிருந்த
குயிலானது
உன்னுடைய குரலின்
இனிமையைக்
கேட்டு விட்டு தான்
குயிலானது
பாடுவதையே
நிறுத்தி விட்டது  
என்று சொல்லும்
வகையில்-அழகிய
குயிலோசையையே
மிஞ்சும் உன்னுடைய
குரலும் ; “

“மின்னல் அடித்து
எத்தனை பேர்கள்
இறந்தார்கள் என்று
எனக்குத் தெரியாது  ;
ஆனால் நீ
ஒவ்வொரு முறை
சிரிக்கும் போதும்
எழுகின்ற மின்னல்
ஒளியில் ஒவ்வொரு
முறையும் நான்
இறந்து
கொண்டிருக்கிறேன்  ;”

“நடையில்
தன்னை மிஞ்சியவர்
இந்த உலகத்தில்
எவரும் இல்லை
என்று இறுமாப்பில்
நடந்து கொண்டிருந்த
அன்னமே வெட்கித்
தலை குனியும்
வகையில் இருக்கும்
அன்னத்தை
மிஞ்சிய உன்னுடைய
நடையும் ;”

“தங்கத்தை
உருக்கி வார்த்து 
செய்தது போல்
இருக்கும்
தங்கச் சிலையைப்
போன்ற உன்னுடைய
உருவமும்  ;”

“ஊர்வசி
ரம்பை
மேனகை
திலோத்தம்மை
போன்ற
தேவமாதர்களே
கண்டு
பொறாமைப்படும்
படியாக இருக்கும்
உன்னுடைய
அழகும் ;”

“என்னை
உனக்கு
அடிமையாக்கி
விட்டது “

“அடிமை
எப்படி இருப்பான் ;
எப்படி
கஷ்டப்படுவான் ;
எத்தகைய மன
உளைச்சலைக்
கொண்டிருப்பான் ;
என்பதெல்லாம்
எனக்குத்
தெரியாது - ஆனால்
ஒரு அடிமை
அடையும் அனைத்து
விதமான
உபாதைகளையும்
நான் அனுபவித்து
விட்டேன்
உன்னைக்
கண்டது முதல் ; “

“ஆமாம்! நான்
உன்னுடைய
அடிமையாகவே
மாறி விட்டேன் “

“இந்த அடிமையை
ஆளும் அழகு
ராணி நீ தான் “

திருநங்கை :
“நீங்கள் என்னுடைய
அடிமை என்று
சொல்லாதீர்கள்  ;
நீங்கள் எனக்கு
அடிமையும் இல்லை ;
நான் உங்களுக்கு
ராணியும் இல்லை ;”

“அடிமை என்பவர்
ஏவலுக்கு
கட்டுப்பட்டவர் ;
நீங்கள் என்னுடைய
ஏவலுக்கு
கட்டுப்பட்டவர் இல்லை ;
நீங்கள் என்னுடைய
அன்புக்கு
கட்டுப்பட்டவர் ;
உங்களை அன்பால்
ஆளும் ராணி
நான் என்று
சொல்லுங்கள்
அந்த வார்த்தை
எனக்கு இனிக்கும் ; “

அரவான்  :
“நான் தான்
கவிதையாக
பேசுகிறேன் என்றாய் ;
இப்போது நீயும்
கவிதையாக பேச
ஆரம்பித்து
விட்டாய் ;“

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 30-03-2020
//////////////////////////////////////////





No comments:

Post a Comment