December 28, 2011

தச அவதாரம்




தச அவதாரம்

பரிணாமக் கோட்பாட்டின் தந்தை எனப்படுபவர் சார்லஸ் டார்வின்.

உயிரினங்கள் நீரினில் உருவாகி பல்வேறு மாற்றங்களை அடைந்து மனிதன் என்ற நிலையை அடைந்நதது என்பது டார்வினின் கோட்பாடு.

டார்வினின் கோட்பாடு வெளிவருவதற்கு முன்பே பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே இந்திய இலக்கியங்களில் பரிணாமக் கோட்பாடு பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

அந்த விவரங்கள் பக்தி இலக்கியங்களில் காணப் படுவதால் பக்தியாக மட்டுமே, மத ரீதியாக மட்டுமே, பார்க்கப் பட்டு விட்டதால் அதில் உள்ள உண்மைத்தன்மை இந்த உலகத்திற்கு தெரிய முடியாமல் போய் விட்டது.



டார்வினின் பரிணாமக் கோட்பாடு இந்திய இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது  என்பதைப் பற்றிப் பாரப்போம்.

திருமாலின் அவதாரங்கள் பத்து எனக் குறிப்பிடப்படுகின்றன்.
அவை ,

             
                           1. மச்ச அவதாரம்
                  2. கூர்ம அவதாரம்
                  3. வராக அவதாரம்
                  4. நரசிம்ம அவதாரம்
                  5. வாமன அவதாரம்
                  6. பரசுராம அவதாரம்
                  7. ராம அவதாரம்
                  8. பலராம அவதாரம்
                  9. கிருஷ்ண அவதாரம்
                  10. கல்கி அவதாரம்



1. மச்ச அவதாரம் :
(மச்சம் என்றால் மீன்)
மீன் நீரினில் வசிக்கும் உயிரினம் .

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது  என்பதைக் குறிப்பதே மச்ச அவதாரம் ஆகும்.




2. கூர்ம அவதாரம்  :
(கூர்மம் என்றால் ஆமை)
ஆமை நீரிலும் வாழும் நிலத்திலும் வாழக் கூடிய ஒரு உயிரினம் .

நீரில் வாழ்ந்த உயிரினங்கள நீரானது வற்றிப் போன காலங்களில் நிலத்திலும் வாழ்வதற்குரிய மாற்றங்களை உடல் அமைப்பில் பெற்று காலப்போக்கில் நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

தகவமைப்பு என்பது குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும் வண்ணம் மாற்றிக் கொள்ளுதல்.

பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் கால மாற்றத்திற்கு தகுந்த படி நீரிலும் , நிலத்திலும் வாழ்வதற்கரிய உடல் அமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே கூர்ம அவதாரம்.  




3. வராக அவதாரம்  :
(வராகம் என்றால் பன்றி)
நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நீரானது வற்றிப் போன காலங்களில நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெறுகிறது.

பன்றி நிலத்தில் வாழும் ஒரு உயிரினம். ஆனால் அது நீரில் வாழ்ந்த அதன் பதிவுகள் கலையாத காரணத்தினால் அதன் பதிவுகளின் துhண்டுதலினால் அடிக்கடி போய் சாக்கடையில் போய் படுத்து கொள்கிறது.

பரிணாம வளர்ச்சியில் நீரிலும் , நிலத்திலும் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்தில் மட்டுமே வாழ்வதற்குரிய தகவமைப்பைப் பெற்றன என்பதைக் குறிப்பதே வராக அவதாரம் ஆகும்.




4. நரசிம்ம அவதாரம்:
நரன் என்றால் மனிதன் சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மம் என்றால் மனிதனும், சிங்கமும் சேர்ந்தது என்று பொருள்.

சிங்க தலையும், மனித உடலும் சேர்ந்தது தான் நரசிம்மம். பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதன் வரும்போது விலங்கின் உடலும், மனிதன் உடலும் சேர்ந்து தான் இருந்தது.

அதைக் குறிப்பிடுவதே சிங்க தலையும்,  மனித உடலும் ஆகும்.

 நாளடைவில் தான் முழு மனிதன் உடல் உருவானது.

பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடையும் போது விலங்கும், மனிதனும் சேர்ந்த நிலை தான் இருந்தது என்பதைக் குறிப்பதே நரசிம்ம அவதாரம்.




5. வாமன அவதாரம் :
வாமன அவதாரம் மூன்று அடி அளவு தான் உடையது.

பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து மனிதனாக அதாவது முழுமையான மனிதனாக மாற்றம் அடையும் போது முதன் முதலில் குள்ளமாக மூன்றடிக்குள் தான் இருந்தான் என்பதைக் குறிப்பதே வாமன அவதாரம்.




6. பரசுராம அவதாரம் :
மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக காட்டு மரங்களை வெட்டியும்,

 தன் பசியை தீர்த்துக் கொள்வதற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடியும் காட்டில் உயிர் வாழ்ந்தான்


பரிணாம வளர்ச்சியில் காட்டில் வாழ்ந்த மனிதன் காட்டில் உயிர் வாழ்வதற்கும்,

தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும்,

ஏற்ற விதத்தில் கையில் கோடாரி வைத்திருந்த மனிதனாக பரசுராம அவதாரத்தை உருவகப் படுத்தி வைத்திருக்கிறார்கள் .




7. ராம அவதாரம் :
காட்டில் வாழ்ந்த மனிதன் நாட்டில் தனக்கென்று ஒரு இராச்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அரசாட்சி செய்தான்.

நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பதிவின் காரணமாக பதிவின் பாதிப்பு காரணமாக  காட்டில் சுற்றி திரிந்தான்

நாட்டில் இருந்த ராமர் சீதையை தேடி காட்டில் அலைந்தது இதன் அடிப்படையில் தான்.

பரிணாம வளர்ச்சியில் காட்டுக்குள் வாழ்ந்த மனிதன் நாட்டில் வந்து வாழ்ந்ததைக் குறிப்பதே ராம அவதாரம் ஆகும்.




8. பலராம அவதாரம் :
நாட்டில் வாழ்ந்த மனிதன் தன் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் பலராமர் விவசாயம் செய்வதற்கு ஏற்ற விதத்தில் கலப்பையை கையில் வைத்திருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியில் நாட்டில் வாழ்ந்த மனிதன் விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பதைக் குறிப்பதே பலராமர் தன் தோளில் சுமக்கும் கலப்பை ஆகும். இதுவே பலராமர் அவதாரம் ஆகும்.




9. கிருஷ்ண அவதாரம் :
கிருஷ்ண அவதாரம் என்பது அறிவு முதிர்ச்சியடைந்த நிலை ஆகும்

தீமைகள் பெருகி விட்ட நிலையில் தான் வாழ பிறரையும் அழிக்கலாம் என்ற நிலை உருவாகி இருந்த நிலையில், அந்த நிலையை மாற்ற எத்தகைய நிலையை பின்பற்றலாம் என்பதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனின் சிந்திக்கும் திறன் எத்தகைய வழிகளில் செயல்படுகிறது என்பதைக் குறிப்பதே கிருஷ்ண அவதாரம் ஆகும்.




10. கல்கி அவதாரம் :
பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் சூரிய குடும்பத்தில் வேறு ஏதேனும் கிரகத்தில் வாழ முடியுமா என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறான்

குதிரையில் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான் குதிரையின் பின்னங்கால்கள் இரண்டும் தரையிலும் முன்னங் கால்கள் இரண்டும்

பூமியில் படாமல் மேல் நோக்கி துhக்கி இருப்பதைப் பார்க்கலாம் இது மனிதன் வேறு கிரகத்தில் சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.

பரிணாம வளர்ச்சியில் மனிதன் பூமியில் இருந்து வேறு கிரகத்திற்கு சென்று வசிக்க இடம் தேடுவதைக் குறிக்கிறது.





டார்வின் சொல்லும் பரிணாமக் கோட்பாட்டை நம் இலக்கியங்கள் முன்பே சொல்லி இருக்கின்ற.

 மதம் பக்தி நீக்கி பார்த்தால் ஆழ்ந்த அறிவியல் அறிவு நம் முன்னோர்களுக்கு எப்படி இருந்ததை என்பதையும், அதை புரிந்து கொள்ளும் சக்தி நமக்கு இல்லை என்பதையும் குறிக்கிறது .

December 27, 2011

போகர்-7000-சாயாதரிசனம்தோற்றப்பலன்கள்-பதிவு-9-சுபம்




        போகர்-7000- சாயா தரிசனம்-தோற்றப் பலன்கள்-பதிவு-9-சுபம்

                           “”பதிவு ஒன்பதை விரித்துச் சொல்ல
                                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் - தோற்றப் பலன்கள்:

பாடல்- 1:
சாயா தரிசனம் செய்பவர்  , சாயா தரிசனம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேளையில் காணும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும்,
அந்த மாற்றங்கள் என்ன ரகசியத்தைச் சொல்ல வருகின்றன என்பதையும் தொடர்ந்து பார்ப்போம் .


         “”””””பார்க்கையிலே சிரசதுவும் தோற்றாவிட்டால்
                                    பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு
                 தீர்க்கமுடன் இருகரமும் காணாவிட்டால்
                                   தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு
                சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு
                                    செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
                 ஆறவே அறுதிங்கள் மரணமாவான்
                                      அப்பனே சாயாவின் புருஷன்தானே”””””””””
                                                                    -----------போகர் ------7000------------
         “”””””பார்க்கையிலே சிரசதுவும் தோற்றாவிட்டால்
                                       பாலகனே ஒருதிங்கள் சாவான்பாரு””””””
சாயா தரிசனம் செய்பவர்  , சாயா தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபமாய் எதிரே தெரியும் உருவத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை வைத்து சாயா தரிசனம் செய்பவர்  தனக்கு வருங்காலத்தில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளை, மாற்றங்களை , நன்மை , தீமைகளை அறியும் வகைகளைப் பற்றி போகர் கூறுகிறார் .

சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் தலை இல்லாவிட்டால் அதாவது தன் ரூபத்தில் தலை தெரியாவிட்டால் சாயா தரிசனம் செய்பவர்  ஒரு மாதத்தில் இறந்து விடுவார்.



            “””””””தீர்க்கமுடன் இருகரமும் காணாவிட்டால்
                                           தினமதுவும் மூன்றுதிங்கள் மறிப்பான்பாரு””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் இரண்டு கரங்களும் இல்லாவிட்டால் அதாவது தன் ரூபத்தில் இரண்டு கைகளும் தெரியாவிட்டால் சாயா தரிசனம் செய்பவர்  மூன்று மாதங்களில் இறந்து விடுவார் .



        “”””””சேர்க்கவே மார்பதனில் துவாரங்கண்டு
                                     செங்கதிரோன் கண்ணிற்குத் தோற்றுமாகில்
                ஆறவே அறுதிங்கள் மரணமாவான்
                                     அப்பனே சாயாவின் புருஷன்தானே”””””””””
சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் மார்பில் ஓட்டை தெரிந்து அந்த ஓட்டை வழியாக பார்த்தால் செம்மை நிறமுள்ள சூரியன் நம் கண்களுக்குத் தெரியுமானால் சாயா தரிசனம் செய்பவர்  ஆறு மாதங்களில் இறந்து விடுவார்.

சாயா தரிசனம் செய்பவர் , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்களை வைத்து நமக்கு வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை தெரிந்து கொள்ளலாம்.
எனவே சாயா தரிசனம் செய்து வருங்காலத்தில் நமக்கு ஏற்படக் கூடியவைகளை தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்  போகர்.



பாடல்-2
              “”””””தானான தரிசனங்கள் காணும்போது
                                         தகமையுள்ள சொரூபமது குறைவுகண்டால்
                        கோனான காலாங்கி வாக்குபோலே
                                        கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை
                       தேனான மனோன்மணியாள் சொரூபம்போல     
                                       தெளிவாக உன்ரூபம் கண்டாயானால்
                       பானான பாருலகில் வெகுகாலம்தான்
                                         பாலகனே இருப்பதுவும் உறுதியாமே “””””””””
                                                                    -----------போகர் ----7000-----------
      “”””””தானான தரிசனங்கள் காணும்போது
                                   தகமையுள்ள சொரூபமது குறைவுகண்டால்
               கோனான காலாங்கி வாக்குபோலே
                                    கொற்றவனே முடிவதற்கு பிசகொன்றில்லை””””””
சாயா தரிசனம் செய்பவர்  , சாயா தரிசனம் செய்து தன் ரூபத்தை தரிசனம் செய்யும் பொழுது தன் ரூபத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதாவது உருவத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சாயா தரிசனம் செய்பவர் .

என் குருநாதர்  காலங்கிநாதர்  சொன்னது போல , அவருடைய வாக்கு போல, சாயா தரிசனம் செய்பவர்  இறப்பார்  என்பது உண்மை , அதில் பொய் என்ற ஒன்றும் இல்லை என்கிறார்  போகர் .



        “””””””தேனான மனோன்மணியாள் சொரூபம்போல     
                                         தெளிவாக உன்ரூபம் கண்டாயானால்
                   பானான பாருலகில் வெகுகாலம்தான்
                                         பாலகனே இருப்பதுவும் உறுதியாமே “””””””””
மனோன்மணி :
மனோன் மணி என்றால் மனம் மணி ஆன நிலை என்று பொருள் .
அதாவது மனம் சுருங்கி உயிருடன் இணைந்து பரமாக மாறுவதால் அது அதுவாக மாறுகிறது மனம் மணி ஆகிறது .

மனம் சலனமற்று புலனடக்கம் பெற்று உறுதி பெற்ற நிலை .
தன் உயிர்  நிலை உணர்ந்த பின் அங்கு கிட்டிய ஆற்றலால் உயிருக்கு மூல நிலை அறிந்து உணர்ந்து ஆன்மா முழு அமைதி பெறுகிறது இந்த நிலை தான் மனோன்மணி எனப்படும் .

மனம் மணியானவர் ,மனம் தெளிவு பெற்றவர் , உருவம் எப்படி இருக்குமோ  அப்படிபட்ட ஒரு உருவத்தை ஒரு முழுமையான உருவத்தை எந்தவிதமான குறைவுகளும் இல்லாமல் சாயா தரிசனம் செய்பவர்  தன் உருவத்தைக் கண்டால்  ,
சாயா தரிசனத்தில் உருவத்தில் எந்த வித குறைபாடுகளும் , எந்த வித மாற்றங்களும் இல்லாமல் இருந்தால் ,
சாயா தரிசனம் செயபவர் ,  இந்த உலகத்தில் வெகுகாலம் இருப்பார் ,வாழ்வார் என்பது உண்மை என்கிறார்  போகர் .


சாயா தரிசனம் என்றால் என்ன என்றும் ,
சாயா தரிசனம் எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் ,
சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் சக்திகள் , பலன்கள் , மகிமைகள் எவை என்றும்,
போகர்  கூறியவற்றை பார்த்தோம் .

என்னால் முடிந்தவரை சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் வார்த்தைகளால் சொல்லி விட்டேன் .

மேலும் சாயா தரிசனத்தை செய்து அதன் பலன்களைப் பெற விருப்பப் படுபவர் ,  சாயா தரிசனம் செய்து அதன் பலன்களை அனுபவித்த ,அனுபவ சாலிகளை அணுகி குருவாக ஏற்றுக் கொண்டு சாயா தரிசனத்தை கற்றுக் கொண்டு பலன் பெறவும்.


சாயா தரிசனத்தை செய்வோம் .
நல்ல பலன்களைப் பெறுவோம்.
சிறப்பான சக்திகளைப் பெறுவோம் .
அதை நல்ல வழிகளுக்கு மட்டுமே பயன் படுத்துவோம்



                      "“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                           போற்றினேன் சாயாதரிசனம் தான்முற்றதாமே “”