February 06, 2012

இயேசு கிறிஸ்து-அகத்தியர்-வாழாமலுலகம்- பதிவு-6




            இயேசு கிறிஸ்து-அகத்தியர்-பதிவு-6
      
                               “”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                                               ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
கடவுள் நிலை உணராமல் ,
கடவுள் நிலை உணர்ந்தது போல் ,
காட்டிக் கொள்ளும்
கயமைத்தனம் கொண்ட ,
கசடர்களைப் பற்றி ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

வசனம்-1:

“அப்பொழுது : இதோ ,கிறிஸ்து இங்கே இருக்கிறார்,  அதோ, அங்கேயிருக்கிறார்  என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள்.”
                                                                மாற்கு-13:21

                             பிரபஞ்ச விதிப்படி
                             உண்மை – பொய் ,
                             இன்பம் – துன்பம் ,
                             நல்லது – கெட்டது ,
                             உயர்ந்தவர்  - தாழ்ந்தவர் ,
என்ற இரு வேறுபட்ட எதிர்  நிலைகள் எப்பொழுதும் , என்றென்றும் , எந்த கால கட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும் .

நெல்லுக்கு இடையில் , பயிர்களுக்கு இடையில் , களை எவ்வாறு தேவையற்று முளைக்குமோ அதைப் போல ,
உண்மை நிலை உணர்ந்தவர்கள் ,
ஆண்டவனை அறிந்தவர்கள் ,
இயேசுவை பின்பற்றுபவர்கள் ,
மத்தியில்
ஆண்டவனை உணராதவர்கள் ,
ஆண்டவனை உணர்ந்தது போல் நடிப்பவர்கள் ,
இயேசுவை நேரில் பார்த்தது போல் , அவரிடம் ஆசி பெற்றது போல் , அவர் வழி நடப்பது போல் பேசுபவர்கள் உண்டு .

அவர்களை , அத்தகைய தவறான முறையில் செயல்படுபவர்களை , சரியான முறையில் அடையாளம் கண்டு ,
சமுதாயத்தில் இருந்து களை எடுக்கவில்லை எனில் உண்மை உணர்ந்தவர்களுக்கும் தவறான பெயர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

அத்தகைய போலி வேடதாரிகள் ,
ஆண்டவனை நேரில் பார்த்தது போல பேசுவார்கள் ,
ஆண்டவனை தங்கள் மனம் குளிரும் அளவுக்கு தரிசனம் செய்தது போல பேசுவார்கள் ,
ஆண்டவனை நேரில் தரிசித்து ஆசி பெற்றது போல் பேசுவார்கள் ,
அவர்கள் இதோ இயேசு அங்கே இருக்கிறார்  பாருங்கள் ,
இதோ இங்கே இருக்கிறார்  பாருங்கள் ,
ஆண்டவனை தரிசனம் பண்ணுங்கள் என்பார்கள் ,
அங்கே இருக்கிறார்  உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா என்பார்கள் ,
மாயாஜால வார்த்தைகளை பேசுவார்கள் ,
உங்கள் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பேசுவார்கள் ,
உங்கள் மனதை தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு பேசுவார்கள் ,
உங்கள் அறிவை மழுங்க வைத்து விட்டு பேசுவார்கள் ,
அவர்கள் சிந்தனையை செயல்படாமல் வைத்து விட்டு பேசுவார்கள் ,
உங்கள் புத்தியை அழித்து விட்டு பேசுவார்கள் ,
உங்கள் நெஞ்சை அடிமைப் படுத்தி விட்டு பேசுவார்கள் ,

அத்தகைய போலி வேடதாரிகளின்
புரட்டு வார்த்தைகளை ,
புளுகு மூட்டைகளை ,
நம்பாது இருங்கள் , நம்பாதீர்கள் என்கிறார்  இயேசு .



வசனம்-2:

“ஏனெனில் , கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.”
 
                                                                மாற்கு-13:22

இதற்கெல்லாம் மேலாக ஒரு படி மேலே போய்,
தான் தான் இந்த உலகத்தை ரட்சிக்க வந்த இயேசு என்றும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வார்கள் ,
தங்களையே கடவுளாக உருவகப் படுத்திக் கொள்வார்கள் ,
அடையாளம் காட்டிக் கொள்வார்கள் ,
கடவுளின் பெயரையே இழிவு படுத்துவார்கள் ,

மேலும் தீர்க்க தரிசனம் உரைக்கிறேன் என்று உண்மையை உணராமல் ,
ஆண்டவர்  யார்  என்ற உண்மையில் தெளிவு பெறாமல் ,
இயேசுவை புரிந்து கொள்ளாமல் ,
இயேசுவை உணர்ந்து கொள்ளாமல் ,
கள்ளத் தீர்க்க தரிசிகளும் ,
திருட்டுத்தனம் கொண்ட ,
பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட ,
தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற சுய நலம் கொண்ட ,
குடும்ப சுகங்களை மட்டுமே நினைவில் கொண்ட ,
சுய நலத்தை மட்டுமே தன்னுள் கொண்ட ,
கள்ளத் தீர்க்கதரிசிகள் பலபேர்  உருவாகி
வருவார்கள் .

அவர்களால் உண்மையாகவே
இந்த சமுதாயத்திற்கு பாடுபடும் ,
இந்த மக்களுக்காக பாடுபடும் ,
பொது நலம் கொண்ட ,
இரக்கத் தன்மை கொண்ட ,
அன்பு நெஞ்சத்தை தன்னுள் கொண்ட ,
கருணை செயல்கள் கொண்ட ,

உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் ,
உண்மையான தீர்க்கதரிசிகளுக்கு அவமானத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுவார்கள் .

ஆண்டவனைப் பற்றி அறிந்து அவர்  சொன்ன பாதையைப் பின்பற்றி ,
செல்லும் உண்மை கிறித்தவர்களையும் ,
தெளிவாக உண்மை உணர்ந்தவர்களையும் ,
விளக்கமாக நியாயம் தெரிந்தவர்களையும் ,
இன்பம் துன்பம் இரண்டின் வேறுபாடு அறிந்தவர்களையும் ,
அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்களையும் ,
பரந்த மனப்பான்மை கொண்டவர்களையும் ,
அறிவில் தெளிவு பெற்றவர்களையும் ,
வசனத்தில் விளக்கம் பெற்றவர்களையும் ,
ஆண்டவன் அருளைப் பெற்றவர்களையும் ,
ஆண்டவன் அருளால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும் ,
ஆண்டவனுக்காக தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அளித்துக் கொண்டிருப்பவர்களையும் ,
கூட விட்டு வைக்காமல் ,

அவர்கள் மனம் மாறும்படி ,
செயல்கள் பல செய்து காட்டி ,
தாங்கள் தான் உண்மையான தீர்க்கதரிசிகள் என்று உண்மையான கிறித்தவர்களே நம்பும் படி ,
வஞ்சிக்கத்தக்க வார்த்தைகளைப் பேசி மாயாஜால வேலைகளைச் செய்து காட்டி ,
தந்திர செயல்கள் பலவற்றை நிகழ்த்திக் காட்டி ,

ஆண்டவனிடம் உண்மையாக இருப்பவர்களையும் ,
ஆண்டவனை விசுவாசிக்கிறவர்களையும் ,
ஏமாற்றும் விதமாக பலவிதமான அற்புதங்களை செய்து காட்டுவார்கள் ,



வசனம்-3:

“நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள் ; இதோ , எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.”
 
                                                                மாற்கு-13:23

அத்தகைய தன்மைகள் கொண்டவர்களை ,
நயவஞ்சக பிசாசுகளை ,
தவறான எண்ணம் கொண்டவர்களை ,
சுயநல விரும்பிகளை நம்பாதீர்கள்.
அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் .
தவறான வழியைப் பின்பற்றி செல்லாதீர்கள் .
உண்மை நிலை உணர்ந்து அதன் வழி செல்லுங்கள் .
நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் ,
உங்கள் வாழ்க்கை தவறான பாதையில் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் ,
தவறான ஆட்கள் பின் சென்று விடக் கூடாது என்பதற்காகவும் ,
இதையெல்லாம் நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லுகிறேன் என்கிறார் இயேசு .



அகத்தியர் :
           “””””வாழாம லுலகம்விட்டு வேடம் பூண்டு
                                       வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
                  தாழ்வான குடிதோறு மிரப்பான் மட்டை
                                      தவமறியா சண்டாளர்  முழுமா டப்பா
                  பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
                                     பதறாத வயிற்றுக்கா மயங்கி டாதே
                  கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
                                      கலங்காதே யுடலுயிரென் றுரைத் திடாதே””””””
                                                       --அகத்தியர்----அகத்தியர்  ஞானம்-16--------

        “””””வாழாம லுலகம்விட்டு வேடம் பூண்டு
                                      வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்”””””
இந்த உலகத்தில் வாழும் வழி அறியாமல் ,
பிழைக்க வழி தெரியாமல் ,
தொழில் செய்யும் திறன் இல்லாமல் ,
சம்பாதிக்கும் அறிவு இல்லாமல் ,
வேலை செய்யும் திராணி இல்லாமல் ,
பணம் சம்பாதிக்கும் வழி தெரியாமல் ,

தன் வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும் ,
துன்பத்தை நீக்கி இன்பத்தை பெறுவதற்காகவும் ,
மகிழ்ச்சி கடலில் திளைப்பதற்காகவும் ,

உண்மையாக வேலை செய்து உழைத்து வாழாமல் ,
தன் வயிற்றுப் பசியின் தேவையை தீர்த்துக் கொள்வதற்காகவும் ,
வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் ,

உண்மையை உணர்ந்ததாகவும் ,
ஆண்டவனை அறிந்ததாகவும் ,
சத்தியத்தை தெரிந்ததாகவும் ,
தங்களை காட்டிக் கொண்டு
போலியாக சாமியார்  வேடம் போட்டுக் கொண்டு ,
வார்த்தைகளால் ஜாலம் காட்டி ,
மக்களை மயக்கும் விதத்தில் பேசிக் கொண்டு ,
போலி சாமியார்கள் உருவாகி உலாவுவார்கள் .



            “”””””தாழ்வான குடிதோறு மிரப்பான் மட்டை”””””
தாழ்வான குடிதோறும் இருப்பான் என்றால் ,
உண்மை நிலை உணராதவர்கள் ,
உண்மை நிலையை அறிய வேண்டும் என்று நினைக்காதவர்கள் ,
உண்மை நிலையை அடைய வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்கள்,
உண்மை நிலை எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் ,
உண்மை நிலையைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் ,
பொய்யை உண்மை என்று நம்புபவர்கள் ,
பொய்மைக்கு சிம்மாசனம் கொடுப்பவர்கள் ,
பொய்மைக்கு கிரீடம் சூட்டுபவர்கள் ,
அறியாமைச் சகதியில் புரள்பவர்கள் ,
அறிவற்ற சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் ,
ஆகியோர்  இருக்கும் சமுதாயத்தில் எல்லாம் இத்தகைய போலி சாமியார்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை , ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்கிறார் அகத்தியர் .



“”””””தவமறியா சண்டாளர்  முழுமா டப்பா”””””
நான் யார்  என்றும் ,
தன்னை படைத்தவன் யார்  என்றும்,
இந்த உலகத்தை கட்டி காப்பவன் யார்  என்றும் ,
கடவுளின் உண்மை தன்மை அறியாத சண்டாளர்கள் ,
இத்தகைய போலி சாமியார்களை முழு மாடு என்கிறார்  அகத்தியர்.

மாட்டை இழிவு படுத்துவதற்காக அப்படி சொல்லவில்லை அகத்தியர் . எந்த உயிரையும் தாழ்வாக நினைப்பவர்கள் இல்லை சித்தர்கள் .
அவர்  ஏன் போலி சாமியார்களை முழு மாடு என்று சொல்கிறார்  என்று பார்ப்போம் .
மனிதன் என்ற தன்மையை விட்டு கீழே இறங்கி ,
விலங்குக்குரிய தன்மையைப் பெற்று ,
அதன் தன்மைகளைப் பெற்று ,
விலங்குகள் போல் செயல்பட்டு ,
கண்ட இடத்தில் தின்று ,
கண்ட இடத்தில் கழித்து விட்டு ,
கண்ட இடத்தில் சுற்றித் திரியும் விலங்குகளைப் போன்ற ,
செயல்களையும் அறிவையும்  பெற்றவர்கள் போலி சாமியார்கள் என்கிறார் அகத்தியர் .



            “””””பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
                                     பதறாத வயிற்றுக்கா மயங்கி டாதே”””””
போலி சாமியார்களின் கபட வார்த்தைகளைக் கேட்டு ,
அவர்  சொல்படி பின்பற்றி ,
அவர்  வழி நடக்காதே!

தன் வயிற்றுப் பசி தீர்ந்து விடும்
தன் வறுமை நீங்கி விடும்
தன் வாழ்க்கை செழித்து விடும்
அவர்களை ,
அந்த போலி சாமியார்களை பின்பற்றினால் நடந்து விடும்
என்ற தவறான எண்ணம் கொண்டு மயங்கி விட வேண்டாம் .
பசியின் தேவையை தீர்ப்பதற்காக ,
தவறான மனிதர்களிடம்
போலி சாமியார்களிடம்
மாட்டிக் கொள்ள வேண்டாம் என்கிறார் அகத்தியர்.



      “””””கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
                                 கலங்காதே யுடலுயிரென் றுரைத் திடாதே””””””
போலி சாமியார்களின் தவறான பேச்சுக்களை ,
கருத்தாழம் இல்லாத வார்த்தைகளை ,
உண்மை உணராத சொற்களை ,
தொடர்ந்து கேட்டு கேட்டு மனம் கலங்காதே ,
அதாவது மனதை கலங்க வைத்து விடாதே ,
மனதை குழப்பத்தில் ஆழ்த்தி விடாதே ,
வழி மாறிப் போய் விடாதே ,
தவறான வழியைப் பின்பற்றாதே ,
பாதை மாறிப் போய் விடாதே ,

அவர்  பேச்சைக் கேட்டு
உடலுக்கும் , உயிருக்கும் உள்ள வேறுபாட்டை உணராமல் ,
ஸ்துhல உடலுக்கும் , சூக்கும உடலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல் ,
உடலும் , உயிரும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு அலையாதே ,

உடலை உயிர்  என்று சொல்லி ,
மனம் அற்ற மூடரைப் போல ,
அறிவற்ற நிலையை அடையாதீர்கள் .

போலி சாமியார்களின் தவறான வார்த்தைகளைக் கண்டு ,
தவறான வழிகளைப் பின்பற்றி செல்லாதீர்கள் என்கிறார்  அகத்தியர்.



இயேசு கிறிஸ்து - அகத்தியர்:
இயேசு , கள்ளத் தீர்க்கதரிசிகளை நம்ப வேண்டாம் என்றார்.

அவ்வாறே ,
அகத்தியரும் , போலி சாமியார்களை நம்ப வேண்டாம் என்கிறார்.

                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                             போற்றினேன் பதிவுஆறு  ந்தான்முற்றே “”

February 04, 2012

இயேசு கிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-காட்டானை-பதிவு-5

  


    இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-பதிவு-5
                     “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                    ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்”

இயேசு கிறிஸ்து :
பரலோக ராஜ்யத்தின் சிறப்புகளைப் பற்றி பல்வேறு வசனங்கள் மூலம் விளக்கிய இயேசு ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதைப் பற்றி ,
பரலோக ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான வழி முறைகள் எவை என்பதைப் பற்றி ,
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் இயேசு விளக்குகிறார்:

“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகா விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”
                                                                  மத்தேயு  - 18 : 3

குழந்தை என்னும் நிலையை அடைந்தால் ஒழிய ,
குழந்தையின் மனநிலையைப் பெற்றால் ஒழிய ,
குழந்தையின் குணநலன்களால் நிரப்பப் பட்டால் ஒழிய ,
குழந்தையின் களங்கமில்லாத ,
          அசுத்தமில்லாத ,
          தீயவை நினைக்காத ,
          இன்பம் கண்டு வெறி பிடித்து ஆடாத ,
          துன்பம் கண்டு துவழாத ,
          பிறருக்கு கெடுதல்களை நினைக்காத ,
          இறந்த காலத்தை நினைத்து வருத்தப்படாத ,
          எதிர்  காலத்தை நினைத்து பயப்படாத ,
          கணத்திற்கு கணம் வாழ்ந்து கொண்டிருக்கும்
          குழந்தையின் தன்மையை ,
          அடைந்தவர்கள் மட்டுமே
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்கிறார் இயேசு .
அதாவது நீங்கள் குழந்தையாக மாறினாலொழிய பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்கிறார்  இயேசு.



மனதின் தன்மைகள் :
ஓருவன்
தான் என்னும் அதிகாரப் பற்று
தனது என்னும் பொருட் பற்று - ஆகிய
இரண்டு தன்மைகளைத் தன்னுள் கொண்டு இருப்பதால் ,

அறியாமை  , அலட்சியம்  , உணர்ச்சி வயப்படுதல் - ஆகிய
மூன்று விதமான நிலைகளில் தவறுகளைச் செய்கிறான் .

இதனால்
இன்பம் , துன்பம் , அமைதி , பேரின்பம் - ஆகிய
நான்கின் - நாலறிவின்
உற்பத்தி ஸ்தானம் எழும் இடம் எது என்று அறிய முடியாமல்  தவிக்கிறான் .

இதன் காரணமாக
பொய் , சூது , கொலை , கொள்ளை , கற்பு நெறி பிறழ்தல்
ஆகிய ஐந்து விதமான
பஞ்சமா பாதகங்களை,

தன்னுள் எழும்
பேராசை , சினம் , கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி , உயர்வு - தாழ்வு மனப்பான்மை , வஞ்சம் - ஆகிய
ஆறுவகையான குணங்களைக் கொண்டு தவறுகளைச் செய்கிறான் .

இதன் காரணமாக
ஏழேழு ஜென்மங்களாக
கர்ம வினையில் மாட்டிக் கொண்டு துன்பச் சகதியில் நீந்துவதால்,

பிறப்பு - இறப்பு அறுத்து ,
முக்தி என்னும் நிலையை அடைவது என்பது ,

எட்டும் கனியாக இருக்க வேண்டியது,
எட்டாக் கனி ஆகி விடுகிறது .

மனம் தெளிவு பெற்று
ஒன்பது ஓட்டைகளை , 
அடைக்கும் திறன் அறியப் பெறும் போது மனிதன் ,

பத்தாவது வாசலைத் திறந்து ,
அமுதத்தை உண்டு முக்தி அடைகிறான்.



மனந்திரும்புங்கள் :
மனதை அடக்க நினைத்தால் அலையும் ,
அறிய நினைத்தால் அடங்கும்.
மனதை அடக்கி நாம் எந்த செயலையும் நமக்கு தேவையானவற்றையும் சக்திகளையும் பெற முடியாது.
மனம் சாதாரண நிலையிலேயே அதன் பலன் அதிகம் .
மனதை மேலும் அடக்க அடக்க அதன் சக்தியானது அதிகரித்துக் கொண்டே போகும் .
மனதை ஒரு அளவுக்கு மேல் அடக்க முடியாது , அப்படியே அடக்கினாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அடங்காது வெளிக்கிளம்பி விடும் .

                               அதன் ஆவேசத்தில் ,
                               அதன் அக்னிப் பிரவாகத்தில் ,
                               அதன் உணர்ச்சி துடிப்பில் ,
நாம் பல வித துன்பங்களை இழப்புகளை சோதனைகளை சந்திக்க நேரிடும்.
எனவே மனதை அடக்க நினைக்கக் கூடாது .
மனதை அறிய வேண்டும்.
மனம் எங்கிருந்து கிளம்புகிறதோ அங்கேயே திருப்ப வேண்டும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி மேலே எறியப்பட்ட கல் , மீண்டும் பூமியை நோக்கி கண்டிப்பாக வந்தே தீரும் .பூமியில் வந்து விழுந்ததும் அது அமைதி அடைகிறது .
பூமியிலிருந்து மேலே துhக்கி எறியப்பட்ட கல் மீண்டும் பூமிக்கே வந்த பிறகு அமைதி நிலையை அடைகிறது .
எந்த இடத்திலிருந்து , எங்கிருந்து கிளம்பி சென்றதோ , மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்து விட்ட பிறகு அந்த பொருள் அமைதி நிலையை அடைகிறது  .

அதைப் போல் ,
மனம் எங்கிருந்தோ கிளம்பியதோ அந்த இடத்தைக் கண்டு பிடித்து இணைத்து விட்டால் மனம் அமைதி பெறும் அலையாது சுற்றித் திரியாது .
உயிரின் படர்க்கை நிலை தான் மனம் .
உயிர்  விரிந்து படர்க்கை நிலை அடைந்து இயங்கும் போது மனமாக மாற்றம் அடைகிறது .
மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு மனமானது அதாவது உயிருக்கே திரும்பும் போது மனம் அமைதி அடைகிறது .
இதைத் தான் இயேசு மனந் திரும்புங்கள் என்கிறார் .



துhய்மையடையும் நிலை :
மனம் உயிருடன் இணைத்து விட்ட முறை அறிந்த பின் மனதை உயிருடன் இணைத்து உயிரைத் துhய்மைப் படுத்த வேண்டும் .

உயிர்  துhய்மை பெற வேண்டுமென்றால் ,
                                 களங்கமில்லா உள்ளம் ,
                                கவலைப் படாத நெஞ்சம் , 
                                எதற்கும் அஞ்சாத துணிவு ,
                                தோல்வி கண்டு துவழா மனம் ,
                                வெற்றி கண்டு ஆடா செயல் ,
                                   பிறரை மதிக்கும் பண்பு,

மற்றவரை வருத்தப்பட வைக்காத சிந்தனை ,
ஏழ்மையை துhற்றாத சொல் ,
அறியாமையை பயன்படுத்தாத மனிதத் தன்மை ,
ஆகியவற்றை தன்னுள் கொண்டு,

கயமைத்தனமான எண்ணங்களும் ,
பொய் பித்தலாட்டங்களைக் கொண்ட பேச்சுக்களும் ,
கொலை வெறி பாதகங்களும் ,
வேசித் தன்மை கொண்ட சூழ்ச்சிகளும் ,
ஜாதி ,மத ,இன ,மொழி வேறுபாடுகளும் ,
உயர்வு -  தாழ்வு மனப்பான்மை கொண்ட வெறியாட்டங்களும் ,
களைந்து துhய்மை பெறும் பொழுது ,
உயிரானது சுத்தமாகி படர்க்கை நிலை அடையும் பொழுது ,
குழந்தைத் தனமாகி விடுகிறது.
பிள்ளைகளுக்குரிய குணநலன்களைப் பெற்று விடுகிறது .


அத்தகைய தன்மையை அடைந்து விட்டால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற்றால் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .

இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெறாதவர்கள் .
இத்தகைய தன்மையை குணநலன்களைப் பெற முடியாதவர்கள் பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாது .
என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார்  இயேசு .



அழுகுணிச் சித்தர் :

      “””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
               நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ
               நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
               காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
                                                     -------அழுகுணிச் சித்தர் -------

 “””காட்டானை””””
கடவுள் இந்த உலகத்தில் பல்வேறு வடிவங்கள் கொண்டு இயங்கிக் கொண்டு இருக்கிறான் .
நீக்கமற நிறைந்து இருக்கிறான் .
இறைவன் அறிவாக இருக்கிறான் .
இறைவன் அன்பாக இருக்கிறான் .
இறைவன் கருணையாக இருக்கிறான் .

இவ்வாறு பல்வேறு வடிவங்கள் கொண்டு தன்மைகள் கொண்டு இறைவன் இருந்தாலும்,
மனிதர்களால் அவனை எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது,
இறைவனை அறிந்து கொள்ள முடியாது ,
இறைவனை புரிந்து கொள்ள முடியாது,

காட்டானை என்றால் கடவுள் தான் யார் என்பதையும் ,
               தன்னுடைய சிறப்புகள் என்ன என்பதையும் ,
               தன்னுடைய சக்திகள் எவை என்பதையும் ,
வெளிக் காட்டாதவன் வெளியில் காட்டிக் கொள்ளாதவன் என்று பொருள்.




“””””காட்டானை மேலேறி “””””
காட்டானை மேலேறி என்றால்
சிறப்புக்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பி
மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சகஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைப்பதற்காக
குண்டலினி சக்தியை மேலே ஏற்றி தவம் இயற்றும் பொழுது என்று பொருள் .



கடைத்தெரு
கடைத்தெரு என்றால் கடைசி நிலையான இறை நிலை , இருப்பு நிலை, பரம்பொருள் என்று பொருள்
மனிதர்கள் உயிர்  வாழ்வதற்கு ,
வாழ்க்கையை நடத்துவதற்கு ,
பொருட்களை பரிமாறி கொள்வதற்கு ,
அன்றாட தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு ,
ஊரின் கடைசியில் ஒரு தெரு வைத்திருந்தனர் .
அந்தத் தெருவில் பொருட்களை மாற்றிக் கொள்வதற்கும் பண்டங்களை மாற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தினர் .

இந்த பிரபஞ்சம் நிலம் , நீர் , நெருப்பு, காற்று ,விண் என்ற பஞ்ச பூதங்களால் ஆனது .
இந்த பஞ்ச பூதங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளது ,
மூல நிலையாக உள்ளது, இயக்க நிலையான விண் என்ற உயிர்  ஆகும் .

இந்த இயக்க நிலையான விண் என்ற உயிர்  இருப்பு நிலையான இறை நிலையிலிருந்து எழுச்சி பெற்றது என்ற சொல்லும் போது பஞ்சபூதங்களுக்கு முடிவாக உள்ளது பரம்பொருள் என்ற இருப்பு நிலை ஆகும் .
அதனால் தான் பஞ்சபூதங்களுக்கு கடைசியாக உள்ள இறைநிலையை, இருப்பு நிலையை பரம்பொருளை கடைத்தெரு என்றனர்  அதாவது கடைசியாக உள்ள நிலை என்று பொருள் .



“””””காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
         நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்ப்பரன்றோ”””””””
தான் யார்  என்று வெளிக்காட்டாமல் இருப்பவனை அறிந்து கொள்வதற்காக ,
ரகசியங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட இறைவனை உணர்ந்து கொள்வதற்காக ,
குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து எழுப்பி சஹஸ்ராரத்தில் பிரம்மரந்திரத்தில் வைத்து தவங்கள் இயற்றி ,
ஐந்து புலன்களில் இயங்கிப் பெற்ற அனுபவங்களைத் தன்னுள் கொண்டு ,
வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை மனதில் நிறுத்தி ,
இறுதி நிலையான கடை நிலையான இறுதி நிலையாக உள்ள ,
                               இறை நிலையை நோக்கி   ,
                               இருப்பு நிலையை நோக்கி ,
                               சுத்த வெளியை நோக்கி ,
வெட்ட வெளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது ,

உலக வாழ்க்கையின் மூலம் நாம் அடைந்த அனுபவங்கள் பெற்ற கர்ம வினைகள் ஒவ்வொன்றும் ,
நாம் அந்த இறை நிலையை அடைய விடாமல் தடுக்கின்றன .

கர்ம வினையின் முழுத்தாக்கங்கள் -
                           கழிக்க முடியாத சோகங்கள் ,
                           மாற்ற முடியாத துன்பங்கள் ,
                           ஆற்ற முடியாத கவலைகள் ,
                           தோல்வியின் துயர ரேகைகள் ,
                            துன்பங்களின் நிலைகள் ,
நம்மை ஆட்டி வைத்து இரத்த கண்ணீரை வரவழைத்து -
                            இன்பத்தின் இதய வீணைகள் ,
                             மகிழ்ச்சியின் சுகபோகங்கள் ,
                             வெற்றியின் தாலாட்டுகள் ,
                             முன்னேற்றத்தின் அருஞ்சுவைகள் ,
ஆகிய இன்பங்களின் நிலைகளையும் கொடுத்து ,

இறை நிலையை நீ அடைந்து விடுவாயா ? என்று அதை அடையும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று ,
எள்ளி நகையாடி சிரித்து மகிழ்ந்து நம்மைப் பார்ப்பர் .
ஏளனம் செய்வர் .



      “”””நாட்டார்  நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
            காட்டானை மேலேறி என்கண்ணம்மா
                                   கண்குளிரப் பாரேனோ””””””
நம்மை இறை நிலையை அடைய விடாமல் தடுத்தாலும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளித்தும் ,
வாழ்க்கைக்கு தேவையானவற்றை அளிக்காது ,
தடுத்து நம்மிடையே விளையாடினாலும் ,
குண்டலினி சக்தியை மேலேற்றி தவங்கள் பல இயற்றி ,
தடைகள் பல வென்று ,
சூழ்ச்சிகள் பல கொன்று ,
இறுதி நிலையான அந்த இறை நிலையை இருப்பு நிலையை அடைவேன் என்கிறார்  அழுகுணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகுணிச் சித்தர் :
இயேசு நம்மிடமுள்ள தீயவைகளை விலக்கி குழந்தையாக மாறினால் பரலோக ராஜ்ஜியத்தை அடையலாம் என்கிறார்  
( பாவங்களை நீக்கி இறைவனை அடையலாம் )

அவ்வாறே
அழுகுணிச் சித்தரும் கர்ம வினைகளின் மூலம் பெறப்பட்டவைகளை நீக்கிய பிறகு இறை நிலையை அடையலாம் என்கிறார்  
( கர்ம வினைகளை நீக்கி இறைவனை அடையலாம் )  


                        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                            போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”