June 15, 2012

இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44


     
        இயேசு கிறிஸ்து-ஔவையார்-பண்டுமுளைப்பது- பதிவு-44   
               
      “”பதிவு நாற்பத்திநான்கை விரித்துச் சொல்ல 
                             ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது ; அதை ஒரு மனுஷன் கண்டு , மறைத்து ,அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய் ,தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.”
                                            --------மத்தேயு - 13 : 44

பரலோக ராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                             --------மத்தேயு - 13 : 45

அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு , போய் தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று , அதைக் கொள்ளுகிறான்.”
                                           ----------மத்தேயு - 13 : 46

பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு , சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக் கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது.”
                                           ---------மத்தேயு - 13 : 47

அது நிறைந்த போது , அதைக் கரையில் இழுத்து உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவார்கள்.”
                                             --------மத்தேயு - 13 : 48

பண்பற்ற நிலையில் பரதேசிகளின்
களிமொழி கொஞ்சும்
கண் கவர்  வார்த்தையில் கலங்கி
இன்ப நீரோடையில்
எழில் கீதம் இசைக்கலாம் !
எழுந்து நடம் ஆடலாம் !
அழகுத் தோரணையில்
ஆவாரம் பூ சூடலாம் !
உயர்வின் உச்சியில் புரளலாம் !
புண்பட்ட மனங்களை
ஒதுக்கி விட்டு
ஒய்யார கீதம் இசைக்கலாம் !
ஊழிக் காலம் நம்மை
ஓன்றும் செய்யாது
நன்றியை கொல்லலாம் !
துரோகத்துடன் கை குலுக்கலாம் !
ஆணவக் காரர்கள்
அகம்பாவப் போர்வையில்
அதிகார உச்சியில்
இன்றைய வாழ்வை
நித்தியம் என்று நினைத்து
அநித்தியத்தின் பொருள் உணராமல்
நிலையில்லா வாழ்வை
உண்மை என்று உணர்ந்து
உவகையில் விளையாடி
உச்சி குளிரும்
அந்த பிச்சைக்கார ஏமாளிகளின்
கோமாளிக் கூத்துக்களைக் கண்டு
நாமும் வாழலாம்
நய வஞ்சகத்தின் அரவணைப்புடன்
உயர்வுப் பிச்சை
உழைப்பு தரும் வெகுமானம்
என்பதை மறந்து
அதன் வழி செல்லாமல்
ஏமாற்றி விட்டோம்
அதன் வழி
அரியணை ஏறி விட்டோம் !
இனி இறங்க மாட்டோம் - என்று
பணத்தின் மிதப்பில் குதித்தால்
உயர்வின் அஸ்திவாரம் ஆடிவிடும் .
நசுங்கி விடும் வாழ்வு ,
சிதைந்து விடும் சிந்தனை,
முளைத்து விடும் சவக் குழியின் மேல் புல்.
துரோகத்தின் விளைவால்
முடி சூட்டிய முடிகள்
முடியிழந்து நாறியிருக்கின்றன !
அடி வருடிகளின்
அரசியல் பிச்சை கழுவேறியிருக்கின்றன !
ஏமாற்றுக் காரர்களின்
பொல்லாத ஏமாற்று வித்தை
சில காலம் தான் !
உண்மை உணர்ந்து
தவறின் பிழை உணர்ந்து
செயல் உணர்ந்து
செயலின் விளைவை உணர்ந்து
வருந்தா விட்டால்
நாளைய சந்ததி கண்டிப்பாக
நம் முகத்தில் எச்சம்
உமிழக் கூட வெட்கப்படும் !
என்பதை மனக்கண் முன்
கொண்டு வரும் போது
நெஞ்சில் நிறுத்தும் போது
நித்தியத்திற்கும் , அநித்தியத்திற்கும்
உள்ள வேறுபாட்டை உணரலாம் !
ஆண்டவர்  ஒருவரே நித்தியம்
மற்றவை அனைத்தும் அநித்தியம்.
என்றும் இருந்து இந்த
உலகத்தில் உள்ள உயிர்களை
காப்பாற்றி வரும் ஆண்டவர் ;
ஆண்டு கொண்டிருப்பவர் ;
வழி நடத்துபவர் ;
கட்டி காப்பாற்றுபவர் ;
உயிர்களை ரட்சிப்பவர் ;
அன்பைப் பொழிபவர் ;
அத்தகைய ,
ஆண்டவரை உணர்ந்து ,
ஆண்டவரை அறிந்து ,
ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ,
ஆண்டவரால் ரட்சிக்கப் படுபவரால்
ஆண்டவரால் வழி நடத்துபவரால் மட்டுமே
இதை உணர்ந்து கொள்ள முடியும் ;
நித்தியத்தின் பொருள் உணர முடியும் ;
ஆண்டவரின் மகிமை உணர முடியும் ;

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அநித்தியமே
மாறக் கூடியது ;
மாற்றத்திற்கு உட்பட்டது ;
மாறும் நிலையை உடையது ;
அழியக் கூடியது ;
அழிவை நோக்கியது ;
அழிவை நோக்கி பயணிக்கக் கூடியது.

வாழ்க்கை என்பது இறப்பை நோக்கிய ஒரு பயணம்.
இதனை தடுப்பவர் , நித்திய வாழ்வைப் பெறுகிறார்
நித்தியமே ஆண்டவர்; என்பதை உணருகிறார் ;
பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைப் பெறுகிறார் ;
பிதாவின் அன்புக்கு பாத்திரமாகிறார் ;
பாpசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறார் ;
பிதாவின் குமாரனுக்குள் உட்பிரவேசிக்கிறார் ;

இந்த உலகத்தில் நமக்கு தேவை என்று
எதை சேமித்து வைக்கிறோமோ?
அது நமக்கு சொந்தமில்லை.
என்னுடைய வீடு என்கிறோம்
இன்று நமதாக இருந்த வீடு , நமது இறப்பிற்கு பிறகு ,
நமது மகளுக்கோ , மகனுக்கோ உரிமையாகிறது .
அவர்களுக்கு பிறகு பேரனுக்கோ ,
பேத்திக்கோ சொந்தமாகிறது .
கடனில் மாட்டிக் கொண்டால்
வேறொருவரிடம் கை மாறுகிறது
பல தரப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக் கொள்கிறது .
வாங்கிய நிலங்கள் ,
கட்டிய வீடுகள் ,
தேடிய செல்வங்கள் ,
பதுக்கிய சொத்துக்கள் ,
மாட்டிய உடைகள் ,
பூட்டிய அணிகலன்கள் ,
ஆக்கிய வியாபாரங்கள் ,
உருவாக்கிய சேமிப்புகள் ,
எதையும் நம்மால் கொண்டு செல்ல முடியாது .
இறந்த பிறகு எல்லாவற்றையும் கொண்டு செல்ல முடியாது .

பிரிந்து கிடப்பதை ,
குவிந்து கிடப்பதை ,
அடுக்கி கிடப்பதை ,
வரிசையாக கிடப்பதை ,
பரந்து கிடப்பதை ,
ஒன்றாக்கி இணைத்து விட்டால்
ஒன்றுக்குள் புகுத்தி விட்டால்
ஒருமைக்குள் அடக்கிவிட்டால்
ஒன்றை கொண்டு செல்ல முடியும் .
பலவற்றை கொண்டு செல்வதை விட
ஒன்றை கொண்டு செல்ல முடியும்.
ஒன்றை கொண்டு செல்வது எளிது
உலக வாழ்க்கைத் தேவைக்காக செயல்படும்
செயல்களால் விளைந்த பாவங்கள் எல்லாவற்றையும்
வைத்துக் கொண்டு பரலோக ராஜ்யத்திற்குள்
ஒருவனால் பிரவேசிக்க முடியாது.
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியாது.
வாழ்க்கைத் தேவையின் அத்தியாவசியத்தை உணர்ந்து ,
எது வாழ்க்கைத் தேவை என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமக்குத் தேவை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவை நமது வாழ்க்கைத் தேவையைப்
பூர்த்தி செய்யும் என்பதை உணர்ந்து ,
எந்த வாழ்க்கைத் தேவையை வைத்துக் கொண்டு
நம்மால் வாழ முடியாது .
எந்த வாழ்க்கைத் தேவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது .
என்பதை உணர்ந்து
வாழ்க்கைத் தேவையை முறைப்படுத்தி
வாழ்க்கைத் தேவையை நெறிக்குள் உட்படுத்தி
வாழ்க்கைத் தேவையை ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து
பாவங்களை நீக்கி ,
புண்ணியத்தை விதைத்து ,
புண்ணியத்தை பாய்ச்சி ,
புண்ணியத்தை அறுவடை செய்து ,
புண்ணியம் என்ற ஒன்றை கைக்கொள்ள வேண்டும் .

புண்ணியம் என்ற ஒன்றை பெற்றவனால் மட்டுமே ,
புண்ணியம் என்ற ஒன்றினால் நிரப்பப்பட்டவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியும் .
பரலோக ராஜ்யத்தின் நித்தியத்தை
நித்திய பொக்கிஷத்தை அடைய முடியும் .
சேர்த்து வைக்கப்பட்ட செல்வங்கள் என்று
சொல்லப்படக்கூடிய சேர்த்து வைத்த பாவங்கள்
அனைத்தையும் நீக்கி,
புண்ணியம் என்ற ஒன்றைப் பெற்று
புண்ணியம் என்ற ஒன்றைக் கொண்டு
பொக்கிஷங்கள் பலவற்றை தன்னுள் கொண்ட
பரலோக ராஜ்யம் என்ற நிலத்தை வாங்குகிறான்.

தான் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று
சொல்லப்படக்கூடிய பாவங்கள் அனைத்தையும் விலக்கி
புண்ணியம் என்ற ஒரே சொத்தாக புண்ணியம்
என்ற ஒரே முத்தாக மாற்றிக் கொள்கிறான்.
புண்ணியம் என்ற ஒரே முத்தை பெற்றுக் கொண்டு
சிறக்கிறான்.

பாவங்கள் எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
ஒருவனால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.
எனவே பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற ஒன்றாக மாற்றி
புண்ணியம் என்ற ஒன்றை மட்டும் பெற்று
புண்ணியம் என்ற ஒரே முத்தாக உருவாக்கி
அதன் பயனாக பரலோகராஜ்யத்தைப்
பெற்று கொள்கிறான்.

வாழ்க்கைத் தேவையின் செயல்களால்
விளைந்தசொத்துக்களை
பாவங்கள் எல்லாவற்றையும் நீக்கி
புண்ணியம் என்ற முத்தைப் பெற்றவன்
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க தகுதி
உடையவன்.

பரலோகராஜ்யத்தில் அனைத்தும் உள்ளது
பரலோகராஜ்யம் தன்னுள் அனைத்தையும் கொண்டுள்ளது
பரலோகராஜ்யம் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது
என்பதை உணர்பவனால் மட்டுமே ,
பாவம் நீக்கி புண்ணியம் பெறுபவனால் மட்டுமே ,
பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற முடியும்.

வலையை கடலிலே விரித்து ,மீனைப் பிடித்து ,
அதையை கரையிலே இழுத்து,
நல்லவை - அல்லவைகளைப் பிரித்து எடுத்து,
தேவையானவைகளை எடுத்துக் கொண்டு,
தேவையற்றவைகளை எறிந்து போடுவார்கள்.
தேவையற்றவைகளை உதறி எறிவார்கள்.
அதைப் போல,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெற்று
தன் அத்தியாவசியத் தேவை ,
அவசியமானத் தேவை ,
விருப்பமானத் தேவை ,
ஆசைத் தேவை ,
ஆகியவற்றை அடைய ,
புண்ணியம் என்ற திறவுகோலினால்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசித்து
பரலோகராஜ்யத்தின் அருளைப் பெறுவார்கள் .

பரலோகராஜ்யத்தின் மகிமை உணர்ந்தவர்கள்
பரலோகராஜ்யத்திற்குள் உட்பிரவேசிக்கும்
வழியை உணர்ந்தவர்கள் .

அழியக்கூடிய
அநித்திய வாழ்வில்
கவனம் செலுத்தாமல்
நித்தியத்தின் பொருள் உணர்ந்து
நித்திய வாழ்வைத் தேட வேண்டும்
என்கிறார்  இயேசு .



ஒவையார்:

“”பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்
ஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவுஇன்றி
ஏற்ற கருமம் செயல்””
                                      ------ஒவையார்----மூதுரை----

துரோகம் என்பது வேறு
விரோதம் என்பது வேறு

துரோகம் செய்பவன் துரோகி
விரோதம் பாராட்டுபவன் விரோதி

விரோதியால் ஆபத்து நேராக உண்டு
துரோகியால் ஆபத்து மறைமுகமாக உண்டு

விரோதியின் ஆபத்தை சமாளிக்கலாம்
துரோகியின் ஆபத்தை சமாளிப்பது கடினம்

கொள்கை மாறுபட்டால் பிரிந்து சென்று நேராக
எதிர்ப்பான் விரோதி
மாறுபட்டாலும் பிரிந்து செல்லாமல்
குழி பறிப்பான் துரோகி

விரோதி நேராக நின்று எதிர்ப்பான்
துரோகி வேறு ஒருவனுடன் சேர்ந்து
மறைமுகமாக எதிர்ப்பான்

வளர்த்தவனை எதிர்த்து விட்டுச் செல்வான் விரோதி
வளர்த்தவனை அழித்து விடத் துடிப்பான் துரோகி

நண்பர்கள் விரோதியாகலாம்
விரோதிகள் நண்பராகலாம்

நண்பன் துரோகியாகலாம்
துரோகி நண்பனாக முடியாது

விரோதி நண்பன் ஆனால் உயிரை கொடுப்பான்
நண்பன் துரோகியானால் உயிரை எடுப்பான்

விரோதியிடம் நாம் கவனமாக இருப்பதை விட
துரோகியிடம் கவனமாக இருக்க வேண்டும்

இரண்டு வேறுபட்ட நிலைகளை , முரண்பாடுகளை
ஓன்றுடன் ஒன்று ஒப்பிட்டு
உபயோகப் படுத்துபவன் மனிதன்.
ஒப்பீடு மனிதனால் உபயோகப்படுத்தப்படும்
அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.

ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டே
பழக்கப் பட்டவன் மனிதன்.
ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
உலகத்தில் உள்ளவற்றை ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவான்;
ஒன்று உயர்ந்தது ; மற்றொன்று தாழ்ந்தது ;
என்று வேறு படுத்துவான்.
ஒன்றை விட மற்றொன்று சிறந்தது என்று கணிப்பான்.

ஒன்றை , ஒரு விளக்கத்தை
தெளிவுபடுத்துவதாக இருந்தால்,
ஒப்பீடு உபயோகப்படும்.

உலகத்தில் உள்ள பொருட்களை
ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்த முடியாது
தொடர்பு காண முடியாது.
இறைவன் உலகில் உள்ள பொருட்களை
ஒன்றை மாதிரி  மற்றொன்றை படைக்கவே இல்லை.
உலகில் உள்ள பொருட்களில் ஒன்றைப் போல
ஒன்று இருக்கவே இருக்காது.
ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மையை
தன்னுள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும்
ஒரு சிறப்பை ,
ஒரு பண்பை ,
ஒரு தனித்துவத்தை ,
ஒரு குணத்தை ,
ஒரு நிறத்தை ,
ஒரு வடிவத்தை ,
ஒரு மணத்தை ,
ஒரு சுவையை ,
தன்னுள் கொண்டிருக்கும்
உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உள்ள
தனித்தன்மையை உணர்ந்து கொள்ளும் போது
மனிதன் பிரபஞ்ச ரகசியங்களையும்
நித்திய - அநித்திய
வேறுபாடுகளைப் புரிந்து கொள்கிறான்


மாளிகையில் வசந்தத்தை அனுபவிக்கும் மனிதனுக்கும்
வீதியோரத்தில் முடங்கிக் கிடக்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.

செல்வம் உடையவனுக்கும்
செல்வம் இல்லாதவனுக்கும்,
படித்தவனுக்கும்
படிக்காதவனுக்கும்,
அறிவு உள்ளவனுக்கும்
அறிவு இல்லாதவனுக்கும்,
உயர்வான நிலையை அடைந்தவனுக்கும்
உயர்வான நிலையை அடையாதவனுக்கும்,
வெற்றியை கைக் கொண்டவனுக்கும்
வெற்றியை கைக் கொள்ளாதவனுக்கும்,
மேன்மை அடைந்தவனுக்கும்
மேன்மை அடையாதவனுக்கும்,
ஏற்றத்தைப் பெற்றவனுக்கும்
ஏற்றத்தைப் பெறாதவனுக்கும் வேறுபாடு உண்டு.

பிறவிப் பெருங்கடலை அறுத்து
பிறப்பு - இறப்பு சுழற்சியை எரித்து
எல்லாம் வல்ல இறைவனுடன்
இணைய வேண்டுமானால்
கர்ம வினைகளை முற்றிலுமாக களைய வேண்டும் ;
கர்ம வினைகளை கழற்ற வேண்டும் ;
கர்ம வினைகளை கழிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை எரிக்க வேண்டும் ;
கர்ம வினைகளை தொலைக்க வேண்டும் ;
கர்ம வினைகளை உதற வேண்டும் ;
இதை உணர்ந்து கொள்பவரால் மட்டுமே
ஓப்பீடைப் பற்றியும் ,
நித்தியம் - அநித்தியம் பற்றியும் ,
கர்ம வினை பற்றியும் ,
பாவ - புண்ணியம் பற்றியும் ,
ஒற்றுமை - வேற்றுமை பற்றியும் ,
அறிந்து கொள்ள முடியும்.

கர்ம வினையே ஒருவனை
பிறப்பு - இறப்பு சூழ்நிலையில் சிக்க வைக்கிறது ;
பிறவிப் பெருங்கடலில் நீந்த வைக்கிறது ;
இன்பத்தின் ஏற்றத்திலும்
துன்பத்தின் சகதியிலும் விழ வைக்கிறது ;
கர்ம வினைகளை
அழிப்பவரால் மட்டுமே
இறைவனுடன் இணைய முடியும்.

பாவ - புண்ணியத்தில்
பாவத்தை முற்றிலுமாக களைந்து
புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.
புண்ணியத்தையும் களைந்த பிறகே
பிறப்பு - இறப்பை நிறுத்த முடியும்
புண்ணியத்தை மட்டும் கொண்டால்
அதற்கான சிறப்பான ஒரு பிறவி உண்டு .  
ஆகவே கர்ம வினைகளை முற்றிலுமாக
களைந்தால் மட்டுமே
பிறப்பு - இறப்பை அறுக்க முடியும்.
இறைவனுடன் இணைய முடியும்.

அரிசி தான் அரிசியாக முளைக்கிறது
வெறும் அரிசி போட்டால் அரிசி முளைக்காது
அரிசியுடன்  உமி சேர்த்தால் மட்டுமே அரிசி முளைக்கும்.
அரிசியிலிருந்து உமியை பிரித்தால் அரிசி முளைக்காது.
ஆன்மாவில் கர்மவினை இருக்கும் வரை தான்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி உண்டு.
ஆன்மாவில் கர்ம வினைப் பதிவுகள் இல்லையெனில்
ஆன்மாவுக்கு பிறப்பு - இறப்பு சுழற்சி கிடையாது.
அரிசியை விட்டு உமியைப் பிரித்தால்
அரிசி எவ்வாறு முளைக்காதோ?
அதைப்போல ,
ஆன்மாவை விட்டு கர்மவினையைப் பிரித்தால்
ஆன்மாவிற்கு பிறவி கிடையாது.

பிறவிப் பெருங்கடலில் நீந்தாமல் இருக்க
கர்ம வினைகளை முற்றிலுமாக கழிக்க
அளந்து பார்க்காமல்
அளவுக்குள் கொண்டு வராமல்
வரையறைக்குள் நிறுத்தாமல்
எல்லைக்;குள் மாட்டிக் கொள்ளாமல்
எவ்வளவு நன்மை பயக்கும் செயல்களை
எவ்வளவு நன்மைக்கு உகந்த செயல்களை
எவ்வளவு நல்லவைகளை தன்னுள் கொண்ட செயல்களை 
செய்ய முடியுமோ ?
அவ்வளவு செயல்களைச் செய்து
பாவத்தின் பலனைக் கழித்து
புண்ணிய பலனைச் சேர்ப்பதற்குரிய
செயல்களை வகுக்க வேண்டும்.
செய்ய வேண்டும்.

கொண்டபேர்  என்றால் கர்மவினைகளை தன்னுள்
கொண்டவர்கள் என்று பொருள்.

ஆற்றல் உடையார்க்கு என்றால்
தன்னால் முடிந்த அளவிற்கு என்று பொருள்.

கொண்டபேர்  ஆற்றல் உடையார்க்கு என்றால்
கர்மவினைகளை தன்னுள் கொண்டவர்கள்
கர்மவினையால் பாதிக்கப் பட்டு
எவ்வளவு தான்  துன்புற்றாலும்
அந்த துன்பத்தின் இடையிலும்
தன் ஆற்றலுக்கு முடிந்த அளவில்
நல்ல காரியங்களை அதிக அளவில் செய்ய வேண்டும்
நன்மைகள் அதிகம் செய்வதால்
கர்ம வினையின் தாக்கம் குறையும்
நன்மைகள் செய்யாவிட்டால் கர்ம வினையின்
தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியாது .


நல்லவைகளை தொடர்ந்து செய்து
கர்ம வினைகளைக் கழித்து
பிறப்பு - இறப்பு அறுத்து
இறைவனுடன் ஒன்றாக இணைந்து
தான் அவனாக மாற வேண்டும்
நித்திய வாழ்வைப் பெற வேண்டும்
என்கிறார்  ஔவையார் .



இயேசு கிறிஸ்து – ஔவையார்:

இயேசு ,
பாவத்தை நீக்கி
புண்ணியத்தை பெற்றவனால் மட்டுமே
பரலோக ராஜ்யத்தை கைக்கொள்ள முடியும்
என்கிறார்.

அவ்வாறே ,
ஔவையாரும் ,
கர்ம வினைகளைக் கழித்தவரால் மட்டுமே
இறைவனுடன் சேர முடியும் என்கிறார்.


      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                போற்றினேன் பதிவுநாற்பத்திநான்கு ந்தான்முற்றே""

June 08, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-துhரந்துhரந்- பதிவு-43



         இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-துhரந்துhரந்- பதிவு-43
               
             “”பதிவு நாற்பத்திமூன்றை விரித்துச் சொல்ல                         
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :                 

 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று ,  பரிசேயர்  அவரிடத்தில் கேட்ட பொழுது , அவர்களுக்கு அவர்  பிரதியுத்தரமாக : தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது .”
                                           ---------லுhக்கா - 17 : 20

இதோ , இங்கே என்றும் , அதோ , அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது ; இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் .”
                                           ---------லுhக்கா - 17 : 21

இளைய தேகம் வாடிடும்
இனிமை தான் தேடிடும்
புதிய ராகம் மீட்டிடும்
புதுமை தான் கண்டிடும் .

                           விடியல் தேடி ஓடிடும்
                          விதியை எண்ணி வருந்திடும்
                          கடமை செய்து பார்த்திடும்
                         கண்ணியம் தான் மறந்திடும் .

பொறுமை இழந்து தவித்திடும்
பொல்லாங்கு பேசி அலைந்திடும்
நித்திரை இழந்து விழித்திடும்
நிம்மதி விற்று கரைந்திடும் .

                         பழையதை எண்ணி வருந்திடும்
                         பாதையை மறந்து திரிந்திடும்
                         உழைப்பை விற்று உறங்கிடும்
                         உண்மை மறைத்து பேசிடும் .

துரோகம் செய்து வாழ்ந்திடும்
துன்பம் தந்து சிரித்திடும்
அபயம் தர மறுத்திடும்
அன்பைக் காட்ட மறந்திடும்.

எண்ணியது எண்ணியபடி நடக்க
நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்த தன்
தேவை எது என்று தெரியாமல்
தேவையின் அர்த்தம் புரியாமல்
தேவையின் முக்கியத்துவம் விளங்காமல்
தேவையை அடைய தேடுதலில் ஈடுபட்டு
தேடிக் கொண்டே இருக்கிறது
தேவை தீராமல்
மனித மனம் .

தேவை – தேடுபவரின் மனதைப் பொறுத்து
அர்த்தம் வேறுபடுகிறது        .
தேவையானது புறத் தேவை , அகத் தேவை
என்ற இரண்டு நிலைகளைக் கொண்டது .
மனித மனம் புறத்தேவையை மட்டுமே நாடிச் செல்கிறது
மனித மனம் புறத்திலே இயங்கி பழக்கப்பட்டு விட்டதால்
புறப்பொருட்களோடு தொடர்பு கொண்டு பழக்கப்பட்டு விட்டதால்
புற உலகத்தோடு இயங்கும் தன்மையைப் பெற்று விட்டதால்
புறத்தேவையை நோக்கியே மனித மனம் செல்கிறது ;
புறப் பொருட்களையே தேடி ஓடுகிறது ;
புறப் பொருட்களையே மனம் நாடுகிறது ;
அகத் தேவையை உணர மறுக்கிறது ;
அகத்திற்குள் உள்ளதை உணர மறுக்கிறது .

வாழ்க்கையை ஓட்டுவதற்கு தேவைப்படும் தேவைகள் புறத் தேவைகள்
இறைவனை அடைவதற்காக தேவைப்படும் தேவைகள் அகத் தேவைகள்
புறத் தேவையை பூர்த்தி செய்யும் ஒருவனால் மட்டும்
அகத் தேவையை பூர்த்தி செய்து இறைவனை அறிய முடியும்  

மனித மனம் புறத் தேவையை நோக்கியே
சென்று கொண்டிருக்கிறது.

கல்வியில் உயர் நிலை அடைய ;
உயர்  கல்வியில் சிறப்பு நிலை அடைய ;
வேலை பெற்று தகுதி நிலை அடைய ;
தொழில் செய்து உன்னத நிலை அடைய ;
வீடு கட்டி நிம்மதி நிலை அடைய ;
திருமணம் செய்து ஆனந்த நிலை அடைய ;
குழந்தை பெற்று இன்ப நிலை அடைய ;
புதவிகள் பெற்று உயர்வு நிலை அடைய ;
அதிகாரங்கள் பெற்று மரியாதை நிலை அடைய ;
சொத்துக்கள் சேர்த்து சுகபோக நிலை அடைய ;
உயர்வில் குளித்து மேல் நிலை அடைய ;
ஏற்றத்தை அடைந்து மகிழ்ச்சி நிலை அடைய ;

என்று பல்வேறுபட்ட புற நிலைகளில் மனம் ஈடுபட்டு
புறத்தேவைகளை நிறைவு செய்ய
புறத்தேவையை நாடியே மனம் ஓடுகிறது ; மனம் இயங்குகிறது .

புறத்தேவைகள் நிறைவடைந்தால் மட்டுமே ,
புறத்தேவைகளை முழுவதும் அனுபவித்தால் மட்டுமே ,
புறத்தேவைகளின தேவை தீர்ந்தால் மட்டுமே ,
புறத்தேவையின் எல்லையைக் கடந்தால் மட்டுமே ,
புறத்தேவையை விட்டு அகத்திற்குள் செல்ல முடியும் .

வாழ்க்கைத் தேவையை ஒருவர்  
முழுவதுமாக அனுபவிக்காமல் ; பூரணமாக உணராமல் ;
உண்மை தெளியாமல் ; விளக்கம் பெறாமல் ;
அகத்தேவையை உணர்ந்து அகத்திற்குள் செல்ல முடியாது .

புறத்தேவையை நாடி ஓடி செல்லும் மனித மனதால்
அகத்தேவை எவை என்று உணரவும் முடியாது ,
அகத்திற்குள் செல்லவும் முடியாது ,
ஆண்டவனை தரிசிக்கவும் முடியாது ,
தேவனுடைய ராஜ்யத்தை காணவும் முடியாது ,
தேவனை தரிசிக்கவும் முடியாது ,
தேவனுடைய ஆசிர்வாதம் பெறவும் முடியாது ,

புறத்தேவையின் உண்மை நிலை உணர்ந்து
புறத்தேவையில் தெளிவு பெற்று
புறத்தேவையில் முழுமை பெற்று
புறத்தேவையின் அநித்திய நிலை உணர்ந்து
நித்திய நிலையாக இருக்கும் ஆண்டவனை
ஆண்டவனுடைய ராஜ்யத்தை
தேவனுடைய ராஜ்யத்தை அடைய
அகத்தேவை உணர்ந்து அகத்திற்குள்
மனித மனம் செல்ல வேண்டும் .

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வரும் என்று
பரிசேயர்  இயேசுவிடம் கேட்ட பொழுது
புறத்தை விட்டு
புறத்தேவைகளை விட்டு
அகத்திற்குள் செல்பவனால் மட்டுமே
தேவனுடைய ராஜ்யத்தைக் காண
முடியும் என்கிறார் .

தேவனுடைய ராஜ்யம் இதோ இங்கே இருக்கிறது
அதோ அங்கே இருக்கிறது
அதோ அந்த இடத்தில் இருக்கிறது என்று
ஒவ்வொரு இடமாக ஒவ்வொரு திசையாக
காட்ட வேண்டிய அவசியம் இல்லை .

ஏனென்றால் தேவனும் தேவனுடைய ராஜ்யத்தையும்
புறத்தே காண முடியாது .
நம்மைச் சுற்றி புறத்தே இருப்பவை எல்லாம்
அழியக் கூடியவை மாறக் கூடியவை
மாற்றம் பெறக் கூடியவை .

அழியக் கூடிய ஒன்றினுள்
என்றும் அழியாத
என்றும் நிரந்தரமான
என்றும் நித்தியமான
ஆண்டவரை எப்படி காண முடியும்
எப்படி தரிசிக்க முடியும்
எப்படி ஆசிர்வாதம் பெற முடியும் .

அழியாத ஒன்றினுள் அழியக் கூடிய
ஒன்றினைக் காண முடியும் .
அழியக் கூடிய ஒன்றினுள் அழியாத ஒன்றை நாம்
காண வேண்டுமானால்,
புறத்தேவையை நிறைவு செய்து
அகத்திற்குள் சென்றால் மட்டுமே காண முடியும் .

அகத்தில் ஏற்றப்படும் தீபமே
புறத்தில் ஒளியைக் காட்டும் .

நிலத்தில் புதைக்கப்பட்ட விதையே புறத்தில்
அதன் வடிவைக் காட்டும் .
அகத்திற்குள் செல்பவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்ல முடிந்தவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்லும் தகுதியைப் பெற்றவனால் மட்டுமே ,
அகத்திற்குள் செல்லும் வழியை உணர்ந்தவனால் மட்டுமே ,
ஆண்டவனை உணர முடியும் .
ஆண்டவனை அறிய முடியும் .
ஆண்டவரை தரிசிக்க முடியும் .
ஆண்டவர்  ஆசிர்வாதம் பெற முடியும் .
ஆண்டவனுடைய ராஜ்யத்தை உணர முடியும் .
ஆண்டவருடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும் .

அதனால் தான் இயேசு தேவனுடைய ராஜ்யம்
உங்களுக்குள் இருக்கிறது
தேவனுடைய ராஜ்யம் அகத்தில் இருக்கிறது .

ஆண்டவரை அகத்தில் தேடுங்கள்
புறத்தே தேடி ஓடி காலத்தை வீணாக்காதீர்கள் .
மடமையில் மூழ்காதீர் ;
சிந்தனை தடுமாறாதீர் ;
தவறான வழி செல்லாதீர் ;
அறியாமையில் மாட்டாதீர் ;
என்கிறார்  இயேசு .

அகத்தில் ஆண்டவரை தேடுங்கள்
தேவனுடைய ராஜ்யத்தைக் காணுங்கள்
என்கிறார்  இயேசு .



சிவவாக்கியர்:

துhரந்துhரந் துhரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முள்ளே யறிந்துணர்ந்து கொள்ளுமே
                 ------சிவவாக்கியர்----பெரியஞானக் கோவை---

ஓன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
அறிந்து கொண்டு பிரித்துப் பார்ப்பவனால் மட்டுமே
ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி  அறிய முடியும்.

ஓன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
அறிய முடியாதவனால் பிரித்து பார்த்து
ஓன்றை ஒன்று வேறுபடுத்தி  அறிய முடியாது.

பிரித்துப் பார்க்கும் திறன் உடையவனால் மட்டுமே
வேறுபடுத்தி அறிய முடியும்.
பிரித்துப் பார்க்கும் திறன் அற்றவனால்
எதையும் வேறுபடுத்தி அறிய முடியாது .

ஒன்றுக்குள் ஒன்று மறைந்திருப்பதை
ஒளிந்திருப்பதை கலந்திருப்பதை உணர்ந்து
அவற்றைப் பிரித்துப் பார்த்து அதன் தன்மைகளை
வேறுபடுத்தி பார்த்து விளக்கம் பெறுபவனால் மட்டுமே
உண்மை நிலை உணர முடியும் .

பாலுக்குள் , தயிர் ,  வெண்ணெய் , நெய் ஆகியவை
ஒன்றுக்குள் ஒன்று கலந்திருக்கிறது மறைந்திருக்கிறது .
என்பதை உணர்ந்து
அறிவு விளக்கம் பெற்று
பிரித்துப் பார்க்கும் திறன் பெற்று
வேறுபடுத்தி அறிந்து
அவற்றுக்குள் உள்ள மாறுபாட்டை உணர்ந்து
பயன்படுத்தும் திறன் பெற்றவனால் மட்டுமே
அவற்றின் தனித்தன்மையை உணர முடியும் .

ஒன்றுக்குள் ஒன்று எவ்வாறு கலந்திருக்கிறது
எந்த விகிதத்தில் எந்த முறையில்
எந்த அடிப்படையில் கலந்திருக்கிறது
என்பதை சிந்திப்பவனால் ,
ஆராய்ச்சி செய்பவனால் ,
முயற்சி மேற்கொள்பவனால் ,
பயிற்சியில் ஈடுபடுபவனால் மட்டுமே உணர முடியும் .

பாலுக்குள் , தயிர் , வெண்ணெய் , நெய்
ஆகியவை மறைந்திருக்கிறது என்பதை
ஆதியிலே கண்டவன் மகா திறமைசாலி .
தான் கண்டதை ,
தான் பெற்றதை ,
தான் உணர்ந்ததை ,
தான் அனுபவித்ததை ,
மற்றவரும் பெற்று பயன் பெற வேண்டும்
சமுதாயம் செழிக்க வேண்டும்
சமுதாயம் வளம் பெற வேண்டும்
என்ற உயரிய நோக்கில் ,
அனைவரும் எளிதாக பயன்பெறும் வகையில்
செயல் வடிவம் கொடுத்து பயனை நுகர்ந்து பார்க்க
செய்தவன் உயர்  மனம் கொண்டவன் .

தனக்கு கிடைத்த வித்தைகளை ,
உண்மையின் விளக்கங்களை ,
ரகசியத்தின்  தன்மைகளை ,
சூட்சுமத்தின் பண்புகளை ,
மாற்றங்களின் மறைப்புகளை ,
முன்னேற்றத்தின் பாடங்களை ,
இந்த சமுதாயம் பயன்பெற அளிக்காமல்
குரு என்ற பெயரில் சுற்றி வருபவன்
மகா அயோக்கியன் .

இத்தகைய தன்மை கொண்ட , சுயநலம் கொண்டவர்களால்
உண்மைத் தன்மைகள் பலர்  பயன்படுத்தி விளக்கம் பெற்று
சிறப்புற்று வாழ முடியாமல்
காலமாற்றத்தால் கசங்கி ஆணவத்தால்
புதையுண்டு போய் விட்டது .
தானும் முழுமையாக விளக்கம் பெற முடியாமல்
மற்றவரையும் விளக்கம் பெற்று வாழச் செய்யாமல்
தனக்கு கிடைத்த சில அரிய பொக்கிஷங்களின்
மதிப்பு உணர முடியாமல்
மற்றவருக்காகவாவது அதைக் கொடுத்து
மற்றவர்களாவது பயன் அடைய வேண்டும் .
அதன் ரகசியம் தெரிய வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கம் இல்லாமல்
சுயநலத்துடன் திரியும் ஆணவத்துடன் அலையும்
குரு என்ற முத்திரை குத்திக் கொண்டு
யாருக்கும் எதையும் காட்டாமல் அளிக்காமல்
தன்னுள் மறைத்து வைத்துக் கொண்டு
அலைபவர்கள் பலர் .

அவர்கள் தங்களிடம் உள்ளவைகளை
மற்றவருக்கு பிரித்து கொடுக்கும்
மனப்பான்மை இல்லாதவர்கள் .

ஒன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை
முழுமையாக உணராதவர்கள் ;
முழுமையாக உணர முடியாதவர்கள் ;
விளக்கம் பெறாதவர்கள் ;
அனுபவம் அடையாதவர்கள் ;
தான் கற்றதை மற்றவருக்கு
சொல்லித் தர தயங்குவார்கள் .

தன்னை விட தன்னிடம் கற்றவன் ;
உயர்ந்த நிலை அடைந்து விடுவான் ;
மேன்மை நிலை பெற்று விடுவான் ;
ரகசிய நிலை உணர்ந்து விடுவான் ;
ஆன்ம பலம் பெற்று விடுவான் ;
அறியாமை நீக்கி உயர்ந்து விடுவான் ;
ஏழ்மை விலக்கி வளமாகி விடுவான் ;
இயலாமை நீக்கி எழுந்து விடுவான் ;
வறுமை நீக்கி செழித்து விடுவான் ;
மறைபொருள் அறிந்து உயர்ந்து விடுவான் ;
சூட்சும ரகசியம் தெரிந்து விடுவான் ;
கருணை எல்லையை தொட்டு விடுவான் ;
அன்பின் மேன்மையை அடைந்து விடுவான் ;
இல்லறத்தின் இனிமையை சுவைத்து விடுவான் ;
சுகபோக வாழ்வை பெற்று விடுவான் ;
கவலைகளை எரித்து கரைத்து விடுவான் ;
புகழின் உச்சியில் அமர்ந்து விடுவான் ;
போய்வேஷம் போடுபவரை அழித்து விடுவான் ;
நல்லெண்ணம் கொண்டவரை உயர்த்தி விடுவான் ;
மகிழ்ச்சி மழையில் நனைந்து விடுவான் ;
தோல்விகளை மண்ணில் புதைத்து விடுவான் ;
நல்லோர்  கருணையில் சிறப்புற்று வாழ்வான் ;

என்ற எண்ணம் கொண்டதனால்
அரைகுறை விளக்கம் பெற்றோர்
தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு
சொல்லித் தருவதுமில்லை .

யாரையும் சீடராக ஏற்றுக் கொள்வதுமில்லை .
இத்தகைய தன்மை கொண்டவர்கள்
தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு
சொல்லாமல் மறைப்பவர்கள் ;
சமுதாயத்திற்கு தராமல் மறுப்பவர்கள்;
காலத்தின் அனல் காற்றில்
    வெந்து போவார்கள் ;
    அழிந்து போவார்கள் ;
    மாண்டுபோவார்கள் ;
    உதிர்ந்து போவார்கள் ;
    கரைந்து போவார்கள் ;
    மறைந்து போவார்கள் ;
    கருகிப் போவார்கள் ;
    எரிந்து போவார்கள் ;

முழுமையாக உணர்ந்தவனால் மட்டுமே
தான் அறிந்ததை விளக்கும் அறிவு இருக்கும் ;
தான் பெற்றதை அளிக்கும் மனம் இருக்கும் ;
தான் கற்றதை கொடுக்கும் அறிவு இருக்கும் ;
சீடனுக்கு சொல்லிக் கொடுக்கும்
உயர்ந்த குணம் இருக்கும் ;

இத்தகைய உயர்ந்த நிலையை
பிரித்துப் பார்க்கும் மனநிலையை அடைந்தவனால் மட்டுமே
ஒன்றுக்குள் ஒன்று கலந்திருப்பதை உணர முடியும் .

இந்த உலகம் முழுவதும் நீக்கமற
நிறைந்து இருப்பவன் இறைவன் ;
அனைத்திலும் கலந்திருப்பவன் இறைவன் ;
ஓர்  அறிவு  உயிர்  முதல் ஆறறிவு உயிர்  வரை
அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவன் இறைவன் ;
திட , திரவ , வாயு நிலைகளிலும்
உருவாகி , அருவாகி , அருஉருவமாகி இருப்பவன் ;
இயக்க நிலையிலும் ,
இயக்கமற்ற நிலையிலும் ,
     ஆதி – அந்தமாகவும் ,
     பாவ – புண்ணியமாகவும் ,
     கர்ம வினைதாக்கமாகவும் ,
     இன்ப – துன்பமாகவும் ,
     பிறப்பு – இறப்பாகவும் ,
     தோற்ற – மறைவாகவும் ,
அனைத்திலும் நம்மிலும் நம்மைச்சுற்றிலும்
அனைத்திலும் நிறைந்திருப்பவன் இறைவன் .

அனைத்திலும் கலந்து ஒன்றுக்குள் ஒன்றாய்
நிறைந்து இருக்கும் இறைவனை காண முடியாததால்,
உணர முடியாததால்,
ஒவ்வொன்றிலும் உள்ள இறைவனை
பிரித்து உணர முடியாததால்
கடவுள் நம்மை விட்டு தொலைவில் இருக்கிறார் ;
காண முடியாத நிலையில் இருக்கிறார் ;
தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருக்கிறார் ;
உரையாட முடியாத நிலையில் இருக்கிறார் ;
நம்மை விட்டு பிரிந்து வெகு தொலைவில் இருக்கிறார் ;
என்று தெரிந்து கொண்டு ,
ஊர்  ஊராக அலைந்து ,
நாடு நாடாக திரிந்து ,
காடு காடாக அலைந்து ,
இறைவனை தேடி
இறைவன் இருக்கும் இடம் நாடி
இறைவன் அருள் பெற வேண்டி
இறைவனை ஊர்  ஊராக கோயில்களில்
குகைகளில் தேடி அலைபவர்களே !

இந்த அண்டம் முழுவதும் இறைவனாக இருப்பவன்
பிண்டத்தில் இறைவனாக , உயிராக , அறிவாக
இருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

புறம் என்பது அகத்தின் வெளிப்பாடு
அகத்தை உணர்ந்தால் புறத்தை உணர முடியும்
அகத்தை உணராமல் புறத்தை உணர முடியாது
புறத்தை உணர்வதன் மூலம் அகத்தை உணர முடியாது
அகத் தெளிவு பெற்றவனால் மட்டுமே புறத்தெளிவு பெற முடியும்
அகநிலை தெளிவடைபவனால் மட்டுமே புறநிலை
தெளிவு பெற முடியும் .

அகத்திலே நம்முள்ளே இருக்கும் இறைவனே
புறத்திலே உலகம் முழுவதும் இறைவனாக இருக்கிறான்
என்பதை உணர முடியும் .

அகத்தில் கடவுளைக் காண்பவன்
புறத்தில் கடவுளைக் காண்பான் .

நம்மையும் நம்முள் இருக்கும் இறைவனையும்
பிரித்துப் பார்த்து இறைவனை
உணர முடிந்தவனால் மட்டுமே
புறத்திலே இந்த உலகம் முழுவதும் நிறைந்திருக்கும்
பொருட்கள் ஊடே கலந்திருக்கும்
இறைவனை பிரித்துப் பார்த்து வேறுபடுத்தி உணர்ந்து
இறைவனை அறிந்து
உலகம் முழுதும் நிறைந்து இருப்பவன்
இறைவன் என்பதில் தெளிவு அடைய முடியும் .

கடவுள் வெளியே இருக்கிறார் ;
வெகு தொலைவில் இருக்கிறார் ;
நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார் ;
என்ற அறியாமையை விலக்கி,
கடவுள் எங்கும் இருக்கிறார் ;
எல்லா இடத்திலும் இருக்கிறார் ;
அனைத்திலும் கலந்து இருக்கிறார் ;
எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறார் ;
என்பதை அறிய நமக்குள்ளே சென்று
நம்முள்ளே உள்ள இறைவனை அடையும்
வழிகளை ஆராய்ந்து ,
முறைகளை கற்றுணர்ந்து ,
மறைபொருள் தெளிந்து ,
இறைவனை தரிசியுங்கள் .
தான் அவனாக மாறும்போது அனைத்துமாக ,
இந்த பிரபஞ்சமாக , உலகமாக , உயிர்களாக
பரிணமித்திருப்பதை அறிந்து கொள்ளலாம் .

எல்லாமாக விரிந்திருப்பதே கடவுள் ;
எல்லாமாக உருவாகி இருப்பதே கடவுள் ;
எல்லாமாக பரிணமித்து இருப்பதே கடவுள் ;
என்பதில் தெளிவு பெற வேண்டுமானால்
முதலில் நாம் நம்முள்ளே உள்ள
இறைவனை உணர்ந்து கொள்ள வேண்டும் .  

அக உணர்வைப் பெற்றால்
மட்டுமே அனைத்து உணர்வுகளையும் பெற
முடியும் என்கிறார் சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து- சிவவாக்கியர்:
இயேசு ,
கடவுளை வெளியில் தேடி அலையாதீர்கள்
கடவுள் அனைவர்  உள்ளும் இருக்கிறார்
எனவே , கடவுளை உள்ளே தேடுங்கள் என்கிறார் .


அவ்வாறே ,
சிவவாக்கியரும் ,
கடவுளை தேடி ஊர்  ஊராக அலையாதீர்கள்
வெகு துhரம் சென்று தேடாதீர்கள்                         
நமக்கு உள்ளே கடவுள் இருக்கிறார்
கடவுளை உள்ளே தேடுங்கள்
உள்ளே இருக்கும் கடவுளை உணர்வதன் மூலம்
அனைத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்கிறார்.

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                           போற்றினேன் பதிவுநாற்பத்திமூன்று ந்தான்முற்றே