August 05, 2012

இயேசு கிறிஸ்து-திருநாவுக்கரசர்-நாமார்க்கும்பதிவு49



        இயேசு கிறிஸ்து-திருநாவுக்கரசர்-நாமார்க்கும்-பதிவு-49
               
         “”பதிவு நாற்பத்திஒன்பதை விரித்துச் சொல்ல
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் .
                                                ------மத்தேயு - 13 : 3
அவன் விதைக்கையில் , சில விதை வழியருகே விழுந்தது ; பறவைகள் வந்து அதை பட்சித்துப் போட்டது .
                                                ------மத்தேயு - 13 : 4
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது ; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது .
                                                -----மத்தேயு - 13 : 5
வெயில் ஏறின போதோ , தீய்ந்து போய் வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று .
                                                -----மத்தேயு - 13 : 6
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது ; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது .
                                                -----மத்தேயு - 13 : 7
சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து , சிலது நுhறாகவும் , சிலது அறுபதாகவும் , சிலது முப்பதாகவும் பலன் தந்தது .
                                                -----மத்தேயு - 13 : 8
கேட்கிறவனுக்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றார் .”
                                                -----மத்தேயு - 13 : 9

ஒருவன் , ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும் போது , பொல்லாங்கன் வந்து , அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொள்ளுகிறான் ; அவனே வழியருகே விதைக்கப் பட்டவன் .
                                                -----மத்தேயு - 13 : 19
கற்பாறை இடங்களில் விதைக்கப் பட்டவன் , வசனத்தைக் கேட்டு உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக் கொள்ளுகிறவன் ;”
                                                -----மத்தேயு - 13 : 20
ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய் , கொஞ்சக் காலமாத்திரம் நிலைத்திருப்பான் ; வசனத்தினிமித்தம் உபத்திரவனும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் .
                                                -----மத்தேயு - 13 : 21
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்டவன் ,வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும் , உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் , அவனும் பலனற்றுப் போவான் .
                                                -----மத்தேயு - 13 : 22
நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து , நுhறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார் .”
                                                -----மத்தேயு - 13 : 23

அன்று சரியாக இருந்தது ;  இன்று தவறாக இருக்கலாம்.
அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கலாம் .
சரியாக இருப்பது என்றும் சரியாக இருக்காது
தவறாக இருப்பது என்றும் தவறாக இருக்காது
சரியாக இருப்பதும் , தவறாக இருப்பதும்
காலமாற்றத்திற்கு ஏற்றபடி ,
எப்பொழுதும் மாறிக் கொண்டே தான் இருக்கும் .

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
மாறாதது மாற்றம் மட்டும் தான் .
மாறிக் கொண்டே இருப்பதும் மாற்றம் மட்டும் தான்.

இயக்க நிலையில் உள்ளவை ,
இயக்கத்திற்கு உட்பட்டவை ,
இயக்கத்திற்கு கட்டுப்பட்டவை ,
இயங்கிக் கொண்டிருப்பவை ,
மாற்றத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும்
மாற்றத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்
மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும்
மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்.

அன்று சரியாக இருந்தது ; இன்று எவ்வாறு தவறாகலாம்,
அது எப்படி என்பதை பார்ப்போம் :
வெகுதொலைவு பிரயாணங்களுக்கு
மாட்டு வண்டியோ , குதிரை வண்டியோ
பயன்படுத்துவது  அன்று சரி ;
இன்று அதைப் பயன்படுத்துவது தவறு ;
அறிவியல் வளர்ச்சி ,
விஞ்ஞான முன்னேற்றம் ,
இவற்றின் தாக்கங்களினால் ஏற்பட்ட மாற்றங்களினால்
பிரயாணத்திற்கு மகிழுந்து , பேருந்து , தொடர்வண்டி
போன்றவற்றைப் பயன்படுத்துவதே இக்காலத்திற்கு சரி .

மாட்டு வண்டியையோ , குதிரை வண்டியையோ
பயன்படுத்துவது தவறாக கருதப்படுகிறது இன்று;
அன்று சரியாக இருந்தது ; இன்று தவறாக இருக்கிறது .

அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கிறது .
அது எப்படி என்று பார்ப்போம் :
டியூஷன் படிப்பது அன்று தவறாக கருதப்பட்டது
மதிப்பெண் குறைந்தவர்கள் ,
மதிப்பெண் எடுக்க தடுமாறுபவர்கள் ,
பாடத்தின் மேல் விருப்பமில்லாதவர்கள் ,
படிப்பறிவு குறைந்தவர்கள் ,
படிப்பின் மேல் ஈடுபாடு இல்லாதவர்கள்,
பாடம் புரியாதவர்கள் ,
பாடத்தை படிக்க முடியாதவர்கள் ,
பாடத்தின் மேல் பிடிப்பு குறைந்தவர்கள் ,
என்று பொதுவாக மந்தமானவர்கள் ,
அறிவுத்திறன் குறைவு உடையவர்களாக கருதப்படுபவர்கள் ,
என்று டியூஷன் படிப்பவர்களை இந்த சமுதாயம்
தவறான பார்வையில் பார்த்தது ;
தவறான கண்ணோட்டத்துடன் நோக்கியது ;
அன்று டியூஷன் படிப்பது தவறாக கருதப்பட்டது ;
ஆனால் இன்று டியூஷன் படிப்பது கல்வியின் பிரிக்க முடியாத
ஒரு அங்கமாகி விட்டது .
டியூஷன் படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும்
என்ற நிலை உருவாகி விட்டது .
அன்று அறிவுத்திறன் குறைந்தவர்களால்
படிக்கப்பட்ட  டியூஷன் இன்று அனைவராலும் படிக்கப் படுகிறது .

அன்று தவறானதாகக் கருதப்பட்டது ;
இன்று சரியாக கருதப்படுகிறது.
அன்று சரியாக இருந்தது  ; இன்று தவறாக இருக்கிறது .
அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கிறது .
சரியும் ,  தவறும் கால மாற்றத்தால் மாற்றமடைகிறது .

மாற்றத்தின் தன்மையையும் ,
வேறுபாட்டின் அர்த்தத்தையும் , உணர்ந்து கொண்டால்
உண்மையின் உருவம் உள்ளத்தில் தெளிவாகும்.
வேறுபாட்டினை உணர்பவர்களால் மட்டுமே
உண்மையின் உருவினை உணர முடியும்.
அறிவில் தெளிவு பெற முடியும்.
அறிவில் தெளிவு பெற வேறுபாட்டின் தன்மையினை அறிந்து கொள்ள
பல்வேறு இடங்களில் விதைக்கப்பட்ட விதைகளின் தன்மையினை
அர்த்தத்தின் ஆழத்தினை உணர வேண்டும்.

விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான்.
விதைத்தல் என்றால் ஒன்றை உருவாக்க முயலுதல் என்று பொருள்.
விதைப்பவன் என்றால் உருவாக்குபவன் என்று பொருள் கொள்ளலாம் .

இந்த வசனத்தில் விதைக்கிறவன் என்றால் ஆண்டவர்  என்றும்
விதைகள் என்றால் ஆண்டவர் அருளிய வசனங்கள்
ஆண்டவர்  காட்டிய வழிகள்
ஆண்டவர்  கொடுத்த உண்மைகள் என்றும் பொருள் .

ஆண்டவராகிய விதைக்கிறவர்  அருளுரைகளாகிய விதைகளை
பலதரப்பட்ட மனம் கொண்ட மனிதர்  இதயங்களில் விதைக்கும் போது
ஏற்படக் கூடிய மாற்றங்களின் தன்மைகளை , விளைவுகளை
ஒப்பிடுதல் மூலம் இயேசு விளக்குகிறார் .

வழியருகே விதைக்கப்பட்ட விதைகளை எப்படி
பறவைகள் வந்து கொண்டு சென்று விடுகிறதோ ? அதைப் போல,
ஆண்டவர் அருளிய வசனங்களை
ஏற்றுக் கொள்ளாதவன் ;
சிந்தித்துத் தெளியாதவன் ;
நல்லவை எவை என்று புரியாதவன் ;
அல்லவைகளை புரிந்து கொள்ள முடியாதவன் ;
காதால் கேட்டு விட்டு வசனங்களை கைக்கொள்ளாதவன் ;
மனதில் விதைக்கப்பட்ட ஆண்டவரின் அருளுரைகள் , வசனங்கள்
காலத்தால் அழிந்துவிடும்
காலத்தால் கரைந்து விடும்
காலம் களவாடி சென்று விடும் என்பதைத் தான்
பொல்லாங்கன் பறித்து சென்று விடுவான் என்கிறார் .

மண் அதிகம் ஆழமில்லாத கற்பாறைகள் நிறைந்த இடத்தில்
விழுந்த விதை சீக்கிரமாய் முளைத்து
வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல்
வேரில்லாமல் உலர்ந்து போயிற்று .
அதைப்போல ,
பழமையில் ஊறிப் போனவன்
புதியதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நினைப்பில் ,
புதியதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையில் ,
புதியதை சுவைக்க வேண்டும் என்ற உந்துதலில் ,
புதியதில் திளைக்க வேண்டும் என்ற கற்பனையில் ,
ஆண்டவரின் வசனங்களை அருளுரைகளை ஏற்றுக் கொள்கிறான்.

மகிழ்ச்சியுடனும் , அதிக ஆர்வத்துடனும் ,
இன்ப வேகத்துடனும் ஏற்றுக் கொள்கிறான் .
எந்த அளவு வேகத்துடன் ஆண்டவரின் வசனங்களை
ஏற்றுக் கொள்கிறானோ ?
அதே அளவு வேகம் தொடர்ந்து இருப்பதில்லை
ஆர்வம் நீடிப்பதில்லை .

ஆண்டவரின் வசனத்தை ஏற்றுக் கொண்டாலே
எல்லாம் கிடைத்து விடும் ;
வாழ்வு வசந்தமாகி விடும் ;
என்ற நினைப்பில் இருப்பதனால் வாழ்வில் எதிர்ப்படும்
தாளாத சோகங்கள் ,
மாறாத துயரங்கள் ,
கவலையின் தாக்கங்கள் ,
கண்ணீரின் தாக்குதல்கள் ,
ஆகியவற்றால் தாக்குண்டு
ஆண்டவர்  நம்மை காப்பாற்றுவார்
என்ற அறிவு இல்லாமல்
ஆண்டவர்  மேல் நம்பிக்கை இல்லாமல்
ஆண்டவர்  மேல் வைத்த விசுவாசம் குறைந்ததால்
வாழ்வில் இடறலடைவான் ;
உள்ளத்தில் கலக்கமடைவான் ;
மனதில் இருளடைவான் ;
இதனால் எவ்வளவு விரைவாக ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறானோ
அவ்வளவு விரைவாக ஆண்டவரை மறப்பான் .
ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வான் .

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்ட விதையை
முள் வளர்ந்து அதை நெருக்கியது
வளர விடாமல் தடுத்தது
அதைப் போல ,
உலகப் பற்றுதல்களில் மாட்டிக் கொண்டவன் ;
தன் வீடு , தன் மக்கள் , தன் குடும்பம் என்று சிக்கிக் கொண்டவன் ;
எதிர்கால பாதுகாப்பிற்காக சொத்துக்களை சேர்த்து வைப்பவன் ;
மகிழ்ச்சியான வாழ்வைப் பெற ஐஸ்வரியத்தை நாடுபவன் ;
நிம்மதியான வாழ்க்கை அமைதியான மனம் வேண்டும்
என்று நினைப்பவனுக்கு ,
புயலடிக்கும் கவலை ,
சுழன்றடிக்கும் துன்பம் ,
கலங்கடிக்கும் கண்ணீர் ,
வருந்தவைக்கும துயரம் ,
மிரளவைக்கும் தோல்வி ,
பதறவைக்கும் இழப்பு ,
கதறவைக்கும் வருத்தம் ,
திகைக்க வைக்கும் கஷ்டம் ,
தன்னை தன் வாழ்வை சுக்கு நுhறாக்கும் போது
துயர மேகங்கள் சூழும் போது
சாத்தான் கபட நாடகம் போடும் போது
ஆண்டவர்  மேல் உள்ள பற்றை விலக்க
சாத்தான் நடத்தும் நயவஞ்சக வேலை இது என்று உணராமல்
ஆண்டவர்  மேல் உண்மையான அன்பு இருந்தும்
ஆண்டவர்  மேல் உண்மையான பற்று இருந்தும்
சாத்தான் செய்யும் சதி வேலைகளில் சிக்கிக் கொள்வதால்
அவனும் ஆண்டவர்  மேல் உள்ள நம்பிக்கையை இழப்பதால்
அவனும் பயனற்றுப் போகிறான் .

நல்ல நிலத்தில் விழுந்து விதையானது
பல்கி பெருகி பலன் தரும்  .
அதைப் போல ,
ஆண்டவரை உண்மையாக ஏற்றுக் கொண்டவர் ;
ஆண்டவரே உண்மை என்று அறிந்து ஏற்றுக் கொண்டவர் ;
ஆண்டவரே நித்தியம் ; ஆண்டவரே சத்தியம் ;
என்பதை உணர்ந்தவர்
இன்பம் , துன்பம் இரண்டும் இறைவன் வகுத்த நீதி
இதை ஏற்றுக் கொள்வதே மனித ஜாதி
என்ற நிலை கொண்டு ,
இன்பம் வந்தால் இறைவன் அளித்தார்  என்றும் ,
துன்பம் வந்தால் இறைவன் கைவிட்டார்  என்றும் நினையாமல் ,
வருத்தம் கொள்ளாமல் ,
இன்பம் வந்த போது இறைவன் நம்மை
உயர்த்தி கொண்டு செல்கிறார்  என்றும் ,
துன்பம் வந்த போது இறைவன் நம்மை கைவிட மாட்டார்
நம்மை காப்பாற்றுவார்  ;  வழி நடத்திச் செல்வார் ;
என்ற நம்பிக்கை கொண்டு ஆண்டவர்  மேல் உண்மையாக
விசுவாசம் நம்பிக்கை கொள்பவன் வாழ்க்கையானது
இன்ப ஊற்றாய் பல்கிப் பெருகும் .
உயர்வுகள் ஒன்று நுhறாகவும் , நுhறு ஆயிரமாகவும் ,
ஆயிரம் பத்தாயிரமாகவும் ஆகும்.

ஆண்டவரின் மேல் உண்மையான விசுவாசமும்
ஆண்டவர்  வசனத்தின் மேல் உண்மையான கைக் கொள்ளளும்
கொண்டவர்  வாழ்க்கையானது
இன்பங்கள் பெருகி நன்மை பயக்கும் என்கிறார்  இயேசு.



திருநாவுக்கரசர் :
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
                நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
                இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
                சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
                கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
                 -----திருநாவுக்கரசர்--தேவாரம்-ஆறாந் திருமுறை----

சரி என்பதற்கும் , தவறு என்பதற்கும் ,
சிறிதளவு வேறுபாடு உள்ளது .
சரி இல்லாதது தவறு ; தவறு இல்லாதது சரி ;
சரி என்றால் முழுவதும் சரியாக இருக்கும் என்றோ ?
தவறு என்றால் முழுவதும் தவறாக இருக்கும் என்றோ  ?
சொல்ல முடியாது .
சரிக்குள்ளும் தவறு இருக்கும் ;
தவறுக்குள்ளும் சரி இருக்கும் ;

ஒருவரை முற்றிலும் சரியானவர்  என்றோ
முற்றிலும் தவறானவர்  என்றோ கூறிவிட முடியாது .
சரியானவருக்குள்ளும் தவறானவைகள் இருக்கும் ;
தவறானவருக்குள்ளும் சரியானவைகள் இருக்கும் ;

சமுதாயத்தில் சரியாக உள்ளவரிடம் தவறுகள்
இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை .
அதே போல் ,
தவறுகள் உள்ளவரிடம் சரியானவைகள் இருக்கும் என்பதை
ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை .

சமுதாயத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவரிடம்
கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்காது என்றும் ,
கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரிடம்
நல்ல பழக்க வழக்கங்கள் இருக்காது என்றும் ,
ஒரு வரையரையை நாம் வகுத்து வைத்திருக்கிறோம் .

சமுதாயத்தில் உயர்ந்தவர்
உயர்ந்த நிலையில் இருப்பவர்
நல்லவை பல செய்பவர் ;
தர்மங்கள் பல ஆற்றுபவர் ;
தொண்டுகள் பல செய்பவர் ;
கருணை உள்ளம் கொண்டவர் ;
இரக்க சுபாவம் பெற்றவர் ;
மற்றவர்  துயர்நீக்க உழைப்பவர் ;
மற்றவர்  துன்பம் கண்டு கலங்குபவர் ;
என்று பல்வேறு நல்ல குணங்களைப் படைத்து
உயர் நெறியில் நின்று உத்தமராக
நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்பவர் ;
என்ற நிலையில் உள்ளவரை குற்றம் சுமத்தி
அவரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டும் போது
அவரிடம் மறைந்துள்ள தீய பழக்கங்களை விளக்கிக் காட்டும் போது
அவரிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டும் போது
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை .
நல்லவரை எப்படி குற்றம் சுமத்தலாம்
குறைகளை கண்டு பிடிக்கலாம்
தவறுகளை சுட்டி காட்டலாம்
என்று நம் மீது பாய்கிறது ;
நம்மை பிராண்டுகிறது ;
வார்த்தைகளால் விளாசுகிறது ;
எழுத்துக்களால் வசைபாடுகிறது ;
கூக்குரலால் கதறுகிறது ;
போராட்டங்களால் எதிர்க்கிறது ;

சரியா ? தவறா? என்று யோசிப்பதில்லை .
சரிக்குள் சரி தான் இருக்கும்  ;தவறு இருக்காது ;
என்ற நினைப்பில் தான் இந்த சமுதாயம்
கண்ணை மூடிக் கொண்டு கதறுகிறது .

தவறுகள் பல செய்தவர் ;
குற்றங்களை கூசாமல் நிகழ்த்தியவர் ;
பிறர்  மனம் வாடும் படி செயல்கள் செய்பவர் ;
உயிரினங்களை வாட்டுபவர் ;
ஏழ்மையை பரிகாசம் செய்பவர் ;
வறுமையை ஏறி மிதிப்பவர் ;
துன்பங்களை பிறருக்கு அளிப்பவர் ;
என்று பல்வேறு மனம் கொண்டோரை
தவறுகள் பல செய்பவரை தவறானவர்  என்ற முத்திரை குத்தி
தவறானவருக்குள்ளும்  சரியானவைகள் இருக்கும் 

என்பதை ஏற்க மறுத்து
தவறானவராகவே இந்த சமுதாயம் கருதுகிறது .

தவறானவருக்குள்ளும் சரியானவைகள் இருக்கும் என்பதை
மனதில் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் ,
காலமாற்றத்தின் தன்மைகளாலும் செய்யப்பட்ட குற்றங்களுக்கு
உரிய தண்டனைகளை குற்றவாளிகளுக்கு அளித்து
அவர்கள் மன மாற்றம் அடைந்து
சிந்தனை தெளிவு பெற்று
அறிவு விளக்கம் பெற்று
தவறானவர்  சரியானவராக வெளியே வந்தாலும்
சமுதாயம் தவறானவரை சரியானவராக ஏற்றுக் கொள்ள மறுப்பதினால்
தவறானவர்  சரியானவராக மாறினாலும் ,
சமுதாய துhண்டுதலினாலும் ,
முறையற்ற பேச்சுக்களினாலும் ,
தரங்கெட்ட நடத்தைகளினாலும் ,
தவறானர்  சரியானவராக இல்லாமல்
சரியானவைகளை வெளிப்படுத்தாமல்
தவறானவர்  தவறானவைகளையே வெளிப்படுத்துகிறார் .

தவறானவருக்குள் இருக்கும் சரியானவைகளை
இந்த சமுதாயம்  ஏற்றுக் கொள்ளாததே
தவறானவர்  சரியானவைகளை வெளிப்படுத்தாமல்
தவறானவராக இருக்க காரணம் .

சரியானவைக்குள் இருக்கும் தவறுகளையும் ;
தவறானவைக்குள் இருக்கும் சரியானவைகளையும் ;
அறிந்தாலும் , உணர்ந்தாலும் சுட்டிக் காட்டாமல்
சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாமல்
அமைதியாக இருப்பவரால் மட்டுமே
நிம்மதியான , அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் .

சமுதாய அவலங்களை சுட்டிக் காட்டினால்
தன் அமைதி போகும் என்று தெரிந்தும்
சமுதாய அவலங்களை எதிர்ப்பவன் ;
காலத்தை கடந்து நிற்பான் ;
சமுதாய அலங்கோலங்களை மனதில் கொண்டு
அதை சீர்படுத்த வேண்டும் என்று
செயல் மேற்கொள்ளுபவன் தான் காலத்தை கடந்து நிற்பான் ;
பொதுவுடைமைவாதியாக , சமுதாய சீர்திருத்த வாதியாக ,
பகுத்தறிவுப் பாசறையாக இருப்பான் .
நிம்மதியான  வாழ்க்கை , அமைதியான குடும்பம் வேண்டும்
என்று நினைப்பவன் யாருக்கும் தெரியாமல்
மண்ணோடு மண்ணாக மட்கிப் போவான் .

இவைகளில் எவை தேவை என்பதை அவனவனே
தன் தன்மைக்கேற்ப தீர்மானித்துக் கொள்கிறான் .
சுயநலமாக இருப்பதற்கு தைரியம் தேவையில்லை.
பொதுநலமாக இருப்பதற்குத் தான் அதிக அளவு தைரியம் தேவை ;
உண்மையை ஓங்கி ஒலிப்பதற்கு அதிக அளவு தைரியம் தேவை ;

உண்மையை உண்மையாக உணர்ந்தவனால் மட்டுமே
உண்மையை உண்மையென உணர்ந்தவனால் மட்டுமே
உண்மையின் உண்மை மற்றதெல்லாம் பொய்மை
என்று அறிந்தவனால் மட்டுமே ,
உண்மையின் வழி நின்று செல்படுபவனால் மட்டுமே ,
உண்மையுடன் இணைந்து உண்மையாக மாறியவனால் மட்டுமே ,
உண்மைக்குள் கலந்தவனால் மட்டுமே ,
உண்மையில் கரைந்தவனால் மட்டுமே ,
உண்மையின் பிம்பமாகத் திகழ்பவனால் மட்டுமே ,
உண்மையை உண்மையாக உண்மைத் தன்மையுடன் விளக்க முடியும் .
அத்தகைய உண்மையை திருநாவுக்கரசர்  

 கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் .

இட்ட பணி செய்து , ஏவல் பணி ஆற்றி ,
கைகட்டி , வாய் பொத்தி , சொல்லியதை செய்து வாழும்
அடிமை அல்ல நான் .யாருக்கும் நான் அடிமை இல்லை .
கேட்டுப் பெற வேண்டிய நிலையில்
அண்டி அடிமையாக வாழ வேண்டிய நிலையில் நான் இல்லை .

வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும்
இறப்பைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் .
ஏனென்றால் , இறப்பின் மேல் எனக்கு பயமில்லை .
இறப்பைக் கண்டு பயப்படுபவனுக்கு தான்
இறப்பின் மேல்பயம் இருக்கும் .
சிற்றின்ப சகதியில் புரள்பவனுக்குத் தான்
இறப்பின் மேல் பயம் இருக்கும் .
பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்துபவனுக்கு
இறப்பின் மேல் பயமில்லை.
அதனால் நான் இறப்பைக் கண்டு கலங்க மாட்டேன் ;
இறப்பைக் கண்டு பயப்படமாட்டேன் ;
இறப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன் என்கிறார் .

நரகச் சேற்றில் விழ மாட்டேன் ;
துன்பச் சேற்றில் மூழ்க மாட்டேன் ;
வறுமைச் சேற்றில் புரள மாட்டேன் ;
ஏழ்மைச் சேற்றில் மாட்ட மாட்டேன் ;
கவலைச் சேற்றில் சிக்க மாட்டேன் ;
கண்ணீர்  சேற்றில் உருள மாட்டேன் ;
துயரச் சேற்றில் கலங்க மாட்டேன் ;
யாரிடத்தும் சென்று கையேந்த மாட்டேன் ;
தேவை இதுவென சொல்லி நிற்க மாட்டேன் ;
தேவையை தீர்க்கச் சொல்லி
யாரிடத்தும் சென்று பணிய மாட்டேன் ;
சிற்றின்பத் தேவையை தீர்க்க யாரிடத்தும் பணிய மாட்டேன் ;

பணிந்து நின்று என் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டிய
அவசியம் எனக்கு இல்லை . ஏனெனில் ,
என் வாழ்வில் என்றும் , எப்பொழுதும் , எக்காலமும் ,
என் வாழ்வில் நடப்பது இன்பமே துன்பம் இல்லை ;
இன்பம் அன்றி எதுவும் என் வாழ்வில் நிகழ்வதில்லை ;
துன்பம் அற்ற நிம்மதியான அமைதியான மகிழ்வுகள் பூத்துக் குலுங்கும் ;
இன்பங்கள் காய்த்துக் குலுங்கும் ;
நறுமணம் கமழும் ; தென்றல் வீசும் ; இனிமையாக வாழ்வு
என் வாழ்வு துன்பங்கள் அற்ற  வாழ்வு என்கிறார் .

இத்தகைய ஒரு அருமையான ஒரு வாழ்வை அடைய
காரணம் என்ன என்பதை விளக்குகிறார் .
யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவனை ;
வாக்குக்கு எட்டாதவனை ;
வார்த்தைக்குள் அகப்படாதவனை ;
எல்லாம் வல்ல சங்கரனை ;
வெண்மையான சங்கினை  ; காதில் அணியாகக் கொண்டவனை ;
இத்தகைய தன்மைகளை தன்னுள் கொண்டவனை ;
சிறப்புகள் பல பெற்றவனை ;
மகிமைகள் பல புரிபவனை ;
அருளாசிகள் பல வழங்குபவனை ;
கொடைகள் பல தருபவனை ;
கேட்டவைகள் பல கொடுப்பவனை ;
கவலைகள் பல தீர்ப்பவனை ;
துன்பங்கள் பல கரைப்பவனை ;
கண்ணீர்  பல துடைப்பவனை ;
அத்தகையவனுக்கே மீளா அடிமையாகி இருக்கிறேன் .
பரிபூரண சரணாகதி அடைந்து இருக்கிறேன் ;
எல்லாம் அவனே என்று என்னை ஒப்புக் கொடுத்திருக்கிறேன் ;
அவனே ஆதி அந்தம் என்பதை உணர்ந்திருக்கிறேன் ;
அவனனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை அறிந்திருக்கிறேன் ;
இயக்கமும் அவனே , இயக்கமற்று இருப்பவனும் அவனே ,
என்பதை புரிந்து இருக்கிறேன் ;
அதனால் தான் அவன் தாள் வணங்கி
சிவந்த திருவடிகளைப் பற்றி அவனே கதி என்று இருக்கிறேன் ;
இறைவனே எல்லாம் என்று இருக்கிறேன் ;
என்னை இயக்குபவனும் அவனே ,
என்னுள் இருந்து இயங்குபவனும் அவனே ,
என்பதை நான் உணர்ந்துள்ளதால்,
எந்த நிலையிலும் என்னை தாழ்ந்த நிலைக்கு தள்ள மாட்டான் ;
வருத்த நிலைக்கு விட மாட்டான் ;
என்ற என்னுடைய முழு நம்பிக்கையே
இறைவனிடம் வைத்துள்ள என் முழு நம்பிக்கையே
நான்  துன்பமற்று இன்பம் நிறைந்து வாழக் காரணம்
என்கிறார்  திருநாவுக்கரசர் .



இயேசு கிறிஸ்து - திருநாவுக்கரசர் :
இயேசு ,
பலவகைப்பட்ட மனிதர்  மனங்களில்
ஆண்டவருடைய வசனங்கள் விதைக்கப்பட்டாலும்
ஆண்டவரை உண்மையாக விசுவாசித்து
ஆண்டவர்  வசனங்களை கைக் கொண்டு
ஆண்டவர்  வழி நடப்பவர்  வாழ்க்கை மட்டுமே
இன்பங்கள் பல்கிப் பெருகி வாழ்க்கை உயர்வான நிலையை
அடைந்து நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார் .

அவ்வாறே ,
திருநாவுக்கரசரும் ,
ஆண்டவர்  மேல் நான் வைத்த உண்மையான நம்பிக்கையே
ஆண்டவரிடம் நான் கொண்ட பரிபூரண சரணாகதியே
என் வாழ்வு துன்பங்கள் அற்று ; கவலைகள் அற்று ;
இன்பமாக இருக்கக் காரணம்
ஆகவே கடவுளை உண்மையாக நம்பியவனுக்கு
வாழ்வில் எந்த நாளும் துன்பமில்லை என்கிறார் .

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுநாற்பத்திஒன்பது  ந்தான்முற்றே “”

July 28, 2012

இயேசுகிறிஸ்து-இடைக்காட்டுச்சித்தர்-வானியல்-பதிவு48

      

        இயேசு கிறிஸ்து-இடைக்காட்டுச் சித்தர்-வானியல்-பதிவு-48
               
          “”பதிவு நாற்பத்திஎட்டை விரித்துச் சொல்ல  
                                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ண வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டான் ; அவர்  அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.”
                                                                ----லுhக்கா - 7 : 36
அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர்; பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து , ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து ,”
                                                                ----லுhக்கா - 7 : 37
அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுது கொண்டு , அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து , தன் தலைமயிரினால் துடைத்து  , அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து , பரிமளதைலத்தைப் பூசினாள்.
                                                                ----லுhக்கா - 7 : 38
அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட போது , இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார் ;  இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
                                                                ----லுhக்கா - 7 : 39
இயேசு அவனை நோக்கி : சீமோனே உனக்கு நான் ஒரு காரியம் சொல்ல வேண்டும் என்றார் . அதற்கு அவன்  : போதகரே , சொல்லும் என்றான்.
                                                                ---லுhக்கா - 7 : 40
அப்பொழுது அவர் ; ஒருவனிடத்தில் இரண்டு பேர்; கடன்பட்டிருந்தார்கள் ; ஒருவன் ஐந்நுhறு வெள்ளிக்காசும் , மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது.
                                                                ----லுhக்கா - 7 : 41
கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது , இருவருக்கும் கடனை மனித்து விட்டான். இப்படியிருக்க அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.”
                                                                ----லுhக்கா - 7 : 42
சீமோன் பிரதியுத்தரமாக : எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான் ; அதற்கு அவர் : சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி  ,”
                                                                ----லுhக்கா - 7 : 43
ஸ்திரீயினிடமாய்த் திரும்பி , சீமோனை நோக்கி : இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே ; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன் , நீ என் கால்களுக்குத் தண்ணீர்  தரவில்லை , இவளோ கண்ணீரினால் என் கால்களை நனைத்து , தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
                                                                ----லுhக்கா - 7 : 44
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை , இவளோ , நான் உட்பிரபிரவேசித்தது முதல் , என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள் .”
                                                                ----லுhக்கா - 7 : 45
நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை , இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
                                                                ----லுhக்கா - 7 : 46
ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன் ; இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது ; இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே , எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப் படுகிறதோ , அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்று சொல்லி; ”
                                                                ----லுhக்கா - 7 : 47
அவளை நோக்கி : உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
                                                                ----லுhக்கா - 7 : 48
அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள் : பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள்.
                                                                ----லுhக்கா - 7 : 49
அவர்  ஸ்திரீயை நோக்கி : உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சாமாதானத்தோடே போ என்றார் .”
                                                                ----லுhக்கா - 7 : 50
கனவு என்பது வேறு
கற்பனை என்பது வேறு

விழிப்பற்ற நிலையில் வருவது கனவு
விழிப்பு நிலையில் வருவது கற்பனை

கற்பனை நம் ஆளுகைக்கு உட்பட்டது
கனவு நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல
நிறைவேற்ற வேண்டியவைகளை ,
இன்பத்தின் சுவைகளை ,
அழகின் இனிமைகளை ,
வெற்றியின் இலக்கணங்களை ,
ஆசைகளின் உருவங்களை ,
சிந்தனையின் பிம்பங்களை ,
எதிர்கால நினைவுகளை ,
நிகழ்கால நடைமுறைகளை ,
அறிவின் விளக்கங்களை ,
விஞ்ஞானத்தின் செயல்களை ,
கண்டுபிடிப்பின் முதன்மைகளை ,
உயர்வின் அரியணைகளை ,
செல்வத்தின் சாளரங்களை ,
பொக்கிஷத்தின் சாவிகளை ,
புதையலின் சூட்சுமங்களை ,
முன்னேற்றத்தின் முழுமைகளை ,

கற்பனையில்  கோர்வையாக எந்த வகையில்
எந்த விதத்தில் - என்று வரிசைப் படுத்தி
கற்பனை செய்ய முடியும்.
ஏனென்றால் , கற்பனையை நாமே உருவாக்கலாம்
ஆனால் கனவை நம்மால் உருவாக்க இயலாது .

நம் எண்ணத்திற்கு ஏற்ற வகையில் ,
நம் உணர்வுக்கு உகந்த வகையில் ,
நம் இன்பத்திற்கு பொருத்தமான வகையில் ,
நம் நடைமுறை வாழ்க்கைக்கு தகுந்த வகையில் ,
கனவு காண இயலாது .
ஏனென்றால் , கனவு நம் ஆளுகைக்கு உட்பட்டதல்ல
கனவு நம் ஆளுகைக்கு அப்பாற்பட்டது  .
கனவு விழிப்பு நிலையில் உருவாவதல்ல
கனவு விழிப்பற்ற நிலையில் வருவது.
கனவு எண்ணப்படி வருவதல்ல;
கனவு முறைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
கனவு வரிசைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
கனவு கோர்வையாக வருவதல்ல ;
கனவு முறைப்படுத்தப்பட்டபடி வருவதல்ல ;
முன்னுக்கு பின் முரணாகவும்
ஓன்றுக்கொன்று தொடர்பு அற்ற நிலையிலும்
தொடர்ச்சி இல்லாத நிலையிலும்
புரிந்து கொள்ள முடியாத வகையிலும் வருவது கனவு.
கனவு நம் ஆளுகைக்கு உட்படாத காரணத்தால்
நாம் என்ன நினைக்கிறோமோ அதை கனவில் கொண்டு வர முடியாது.
ஆனால் கற்பனையில் நாம் என்ன செய்ய வேண்டும்
என்று நினைக்கிறோமோ அதை கொண்டு வர முடியும்
ஏனென்றால் கற்பனை நம் ஆளுகைக்கு உட்பட்டது.

கனவு நிலையில் இருப்பவனால் சிந்திக்க முடியாது
சிந்தனை கதவுகள் தட்டப்படும் போது
அன்பு கருணை நெஞ்சில் ஊற்றெடுக்கும்
அன்பின் இலக்கணங்களை
கருணையின் திருஉருவங்களை
இரக்கத்தின் பிம்பங்களைக் காண முடியும் .

அன்பே ! உருவான இயேசு கிறிஸ்து
பரிசேயன் ஒருவன் அழைப்பின் பேரில்
உணவு உண்பதற்கு பரிசேயன் வீட்டில் பிரவேசித்து பந்தியிருந்தார்.
மேரி  மேக்தலினா - ஒரு விலை மாது
இயேசு பரிசேயன் வீட்டில் பந்தியிருக்கிறதை அறிந்து
பரிமளத் தைலம் கொண்டு வந்தாள் .
அவருடைய கால் மாட்டில் பின்புறமாக இருந்து அழுது கொண்டே
அவர்  பாதங்களின் மேல் கண்ணீர் பொழிந்து
அவற்றைக் கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள் .

அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு இவர்
இறை வாக்கினராய் இருந்தால் தம்மைத் தொடும்
இவள் யார்  எத்தகையவள் என்று அறிந்திருப்பார்.
இவளோ பாவி ,
தவறான வழி நடப்பவள் ,
தவறான காரியங்களைச் செய்பவள் ,
தவறான நடைமுறைகளை பின்பற்றுபவள் ,
தவறை கடைப்பிடிப்பவள் ,
இத்தகைய தன்மை கொண்டவளை ,
இத்தகைய குணங்களை கொண்டவளை ,
இயேசு ஒன்றுமே சொல்லவில்லை .
அவள் செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
முகம் சுளிக்கவில்லை
கோபக் கனலை வீசவில்லை என்று
தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் .

அவனுடைய மனநிலையை உணர்ந்து கொண்ட இயேசு
அவனுக்கு பதிலளிக்கும் வகையில்    
இயேசு அவனை நோக்கி சீமோனே
நான் உனக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று கூற ,
அவனும் போதகரே சொல்லும் என்றான்.
உள்ளே இயேசுவை தவறாக நினைத்துக் கொண்டு
வெளியே இயேசுவை மதிப்பது போல்
மரியாதை செய்வது போல் காட்டிக் கொண்டு
போதகரே சொல்லும் என்றான் .

இயேசு சொல்ல ஆரம்பித்தார்  கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு
கடன்காரர்  இருவர்  இருந்தனர்.
ஒருவன் ஐநுhறு வெள்ளிக் காசும் , மற்றவன்
ஐம்பது வெள்ளிக் காசும் கடன்பட்டிருந்தான் .
கடனைத் திருப்பிக் கொடுக்க அவர்களால் முடியாமற் போகவே
கடன் கொடுத்தவன் இருவர்  கடனையும் மன்னித்து விட்டான் .
அவர்களுள் யார் கடன் கொடுத்தவனுக்கு அதிகமாக அன்பு செய்வான்?
யாருக்கு அதிக கடனை மன்னித்தானோ?”
அவன் தான் என்று நினைக்கிறேன் என்றான் சீமோன் .
நீர்  சொன்னதே சரி  என்றார்  இயேசு .

அவள் என் மேல் கொண்ட அன்பை ,
என் மேல் கொண்ட நம்பிக்கையை ,
என் மேல் வைத்த விசுவாசத்தை ,
கள்ளங் கபடமில்லாமல்
யாரேனும் திட்டுவார்களா
யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பார்களா
யாரேனும் மறுப்பு காட்டுவார்களா
யாரேனும் தகாத வார்த்தைகளை கூறுவார்களா
யாரேனும் அவ மரியாதை செய்வார்களா
யாரேனும் மனதை புண்படுத்துவார்களா
யாரேனும் வருத்தப்பட வைப்பார்களா
என்று நினையாமல் என் மேல் உண்மையான அன்பு கொண்டு
கண்ணீரினால் என் கால்களை நனைத்து
தன் தலை மயிரினால் அவைகளைத் துடைத்தாள் .
நீயோ என் கால்களுக்கு தண்ணீர்  தரவில்லை .

நான் உள்ளே பிரவேசித்தது முதல்
என் பாதங்களை முத்தஞ் செய்தாள்
நீயோ முத்தஞ் செய்யவில்லை .

இவள் என் பாதங்களுக்கு பரிமளத் தைலம் பூசினாள்
நீயோ என் தலைக்கு எண்ணெய் பூசவில்லை
அவள் என் மேல் கொண்ட உண்மையான அன்பை
துhய்மையான அன்பை
களங்கமற்ற அன்பை
தன் செய்கையின் மூலம் வெளிப்படுத்தினாள் .
அதனால் நான் உனக்குச் சொல்வதாவது
அவள் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன .
அவள் காட்டியே பேரன்பே அதற்குச் சான்று    
குறைவாக மன்னிப்பு பெறுபவனோ
குறைவாக அன்பு செய்கிறான் என்றார்.

நான் உனக்குச் சொல்கிறேன் அவள்
அதிக அளவு என்னை மிகவும் நேசித்தாள்
குறைந்த அளவு நேசித்தாலும்
சிறிதளவாவது மன்னிப்பு கிடைக்கும்
ஆனால் அவள் அதிக அளவு நேசித்தாள் என்றார் .

பின் அவளை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார் .
இயேசு உன் பாவங்கள் போக இதைச் செய்
அதைச் செய் என்று சொல்லவில்லை.
உன் செயலே உன்னை இன்னார்  என்று காட்டி விட்டது .
ஆதரவற்றவள் ; சமுதாயத்தால் கைவிடப்பட்டவள்;
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவள் ;
சமுதாய தாக்குதலுக்கு உட்பட்டவள் ;
சமுதாய அவமதிப்புக்கு ஆளாக்கப்பட்டவள் ;
மனவேதனைக்கு தள்ளப்பட்டவள் ;
என்று உன் செயல் காட்டிவிட்டது .
நீ பாவம் செய்திருந்தாலும் உன் அன்பு பரிசுத்தமானது
உனது அன்பே உன் புறம் அழுக்காக இருந்தாலும்
களங்கப்பட்டு இருந்தாலும்
அகம் துhய்மையாக களங்கமற்று இருப்பதைக் காட்டுகிறது
ஆகவே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார் .

பாவங்களை மன்னிக்கும் இவர்  யார் என்று
அவரோடு பந்தியிருந்தவர்கள் தங்களுக்குள்ளே
சொல்லிக் கொண்டார்கள் .
இயேசுவால் இது நிகழும் என்று
பந்தியிருந்தவர்களுக்கு தெரியவில்லை
இது இயேசுவால் இது நிகழும் என்று அந்த ஸ்திரீ
விசுவாசம் கொண்ட காரணத்தாலேயே
சந்தேகம் துளியும் இல்லாமல்
உண்மையான அன்பு செய்த காரணத்தினாலேயே
இயேசு அதை உணர்ந்து உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.

உனது விசுவாசம் உன்னை மீட்டது
உனது விசுவாசம் உன்னை இரட்சித்தது
சாமாதானத்தோடே போ என்றார்.

உன்னுடைய விசுவாசம் , உன்னுடைய நம்பிக்கை ,
என் மேல் நீ வைத்த நம்பிக்கை ,
உனது நம்பிக்கை உன்னை காப்பாற்றி விட்டது என்றார்  இயேசு .
ஆகவே மனக்குழப்பம் கொள்ளத் தேவையில்லை ,
நிம்மதியான மனதுடன் , அமைதியான நெஞ்சத்துடன் ,
குழப்பமில்லா இதயத்துடன் , சமாதானமாய்ப் போ என்றார் .

ஆண்டவர்  மேல் விசுவாசமும் ,உண்மையான அன்பும் ,நம்பிக்கையும்,
கொள்பவர்களால் மட்டுமே ஆண்டவர்  அருளைப் பெற முடியும் .

ஆண்டவர்  ஆசி பெற முடியும் என்பது
இயேசுவின் செயல் விளக்கிக் காட்டுகிறது .
ஆண்டவர்  மேல் உண்மையான நம்பிக்கை
வைப்பவர்களால் மட்டுமே
தனக்கு தேவையானவைப் பெற்று
இன்புற்று இருக்க முடியும் என்கிறார்  இயேசு .



இடைக்காட்டுச் சித்தர் :

      “வானியல் போல வயங்கும் பிரமமே
                     சூனிய மென்றறிந் தேத்தாக்கால்
        ஊனிய லாவிக் கொருகதி யில்லையென்
                    றோர்ந்துகொள் ளுவீர்நீர்  கோனாரே
                    -----இடைக்காட்டுச் சித்தர்---பெரியஞானக் கோவை---

கற்பனை எங்கு ஏற்படுகிறது ;
எதன் அடிப்படையில் ஏற்படுகிறது ;
எதனை அடைய ஏற்படுகிறது ;
எதனைப் பொறுத்து ஏற்படுகிறது ;
எப்படிப் பட்ட நிலையில் ஏற்படுகிறது ;
நல்லவைகளைக் கொண்டு ஏற்படுகிறதா ;
அல்லவைகளைக் கொண்டு ஏற்படுகிறதா ;
முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஏற்படுகிறதா ;
வெற்றியை இலக்காக வைத்து ஏற்படுகிறதா ;
என்பதைப் பொறுத்து கற்பனையின் தரம் இருக்கும் .

கற்பனையை குறிப்பிட்ட எல்லைக்குள்ளும் அடக்கலாம்
எல்லையற்ற நிலையிலும் பரந்து விரிந்த நிலையிலும்
கற்பனை சிறகை விரிக்கலாம் .

குழந்தையின் கற்பனை இனிப்பு பொருட்களின் மீது இருக்கும் ;
தாயின் கற்பனை குழந்தையின் முன்னேற்றத்தின் மீது இருக்கும் ;
தந்தையின் கற்பனை குடும்பத்தின் உயர்வின் மீது இருக்கும் ;
இளைஞனின் கற்பனை உயர்ந்த வேலையின் மீது இருக்கும் ;
தொழிலாளியின் கற்பனை அமைதியான வாழ்வின் மீது இருக்கும்;     
போராளியின் கற்பனை வெற்றியின் மீது இருக்கும் ;
அரசியல்வாதியின் கற்பனை ஆட்சியின் மீது இருக்கும் ;
ஆணின் கற்பனை புதுமைகளின் மீது இருக்கும் ;
பெண்ணின் கற்பனை மாற்றங்களின் மீது இருக்கும் ;

சிந்தனையின் வேகத்தைப் பொறுத்து
உயர்வின் இலக்கைப் பொறுத்து
கற்பனையின் எழுச்சி இருக்கும் .

ஒரு தலை ராகம் மீட்டிய ஒருமை ராகம்
கற்பனைக் கோட்டைக்குள்
கனலாக கொதித்த போது ,
இதயராகமாக
இதயத்தில் நின்ற போது ,
போகாத இடந்தன்னில்
போகும் வழி ஆகியதால் ,
சேராத இடந் தன்னில்
சேரும் வகை ஆகி விட்டால் ,
முடியாத நினைவும்
பாடாத கனவும்
சேராத சொர்க்கமும்
எழுந்து தான் நிற்கும் !
நான் மீட்டியதை - நீ அறியவில்லை
நீ மீட்டியதை - நான் அறியவில்லை
தன்னந்தனியாத
தனித்த இடந்தன்னில்
தனிமையாய் - நாம் மீட்டியது
அநாதை முத்திரை குத்திக் கொண்டது .
சாகாத வரம் தான் - அது
பெற்று விடுமானால்
அன்புக்கு ஏது பெருமை?
உயிருக்கு ஏது பெருமை?
விடியும் என்று நினைத்துக் கொண்டு
விடியா திசை நோக்கி
விடியும் என்று காத்திருப்பதால்
விடிவுக்கு ஏது விடிவு?
மறக்க முடியுமா……….?
மறந்து விடக் கூடிய நினைவா?
மறக்கக் கூடிய நினைவென்றால்
மறந்து விடலாம்.
மறந்து விட முடியுமா? இதை
மறந்து விடும் அளவுக்கு
இது என்ன
காம வேள்வில் பூத்த
கட்டிலறைக் காட்சியா?
முத்துக் குளிப்பு நடத்திய
முத்தத்தின்
முதலிரவு நினைவா?
கரங்களின் தழுவலில் பூத்த
கனல் நெருப்பின்
காதல் வேகமா?
இவையனைத்தும் தான்
கற்பனையில் பூத்த
காதலின் இலக்கணம் என்றால்
உள்ளின் உண்மை உருவகம்
உருவகிக்க முடியாதது தான் !
அன்பின் துhய்மைகளை
அனுபவிக்காதவர்கள் தீட்டிய
ஆளுமைகளை
ஆளாக்க முடியாதவர்கள்
ஆக்கி வைத்தவை இவை ! எவை !
இன்பத்தின் உறைவிடம்
அன்பின் பிறப்பிடம்
பிறப்பில்லா பிறப்பு
பிறப்புக்கு உண்டென்றால்
பிறப்பு என்ற ஒன்று பிறப்புக்கு ஏது ?
இறப்பெல்லாம் பிறப்பாகி விட்டால்
இறப்புக்கு ஏது இறப்பு ?
இறவாப் புகழுடன்
இன்பமுடன் வாழ வேண்டுமானால்
உள்ளத்தின் உரு தெரிய வேண்டும்
உண்மையின் பொருள்
உணர வேண்டும் .
காதல் அன்பாகி விட்டால்
அன்பு காதலாகி விடும்
காதலுக்கும் அன்புக்கும்
வேறுபாடு தெரியா விட்டால்
வேற்றுமையின் வேறுபாடு
எங்கே தெரியும் !
முடிவு தேடுபவன்
முடிவு நிலை அறியாதவன்
முடிவின் பொருள் உணராதவன்
இவை தான்
இறுதி என்று நினைப்பவன்
இல்வாழ்க்கையின்
இன்பம் அறியாதவன்
இல்வாழ்வு இன்பத்தில்
இன்ப துhரிகை
தீட்டியவர்கள் காட்டிய
தீந்தமிழ் இலக்கணத்தை
உணர்ந்தவர்கள் உரைத்தவற்றை
உள்ளத்தில் உருவகித்தால்
உவமையின்
உண்மை வாழ்வு தெரியும் !
உண்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே
வாழ்வின் ரகசியத்தை உணரத் துடிப்பவர்களால் மட்டுமே
ஆதி - அந்தத்தை அறிய துடிப்பவர்களால் மட்டுமே
பிறப்பு - இறப்பு ரகசியத்தை கட்டவிழ்க்க நினைப்பவர்களால் மட்டுமே
ஆண்டவனை நம்புவர்களால் மட்டுமே
ஆண்டவன் படைத்த படைப்பை ஏற்றுக் கொள்பவர்களால் மட்டுமே
ஆண்டவன் அருளைப் பெற முடியும்.

5 பூதங்கள்
9 கிரகங்கள்
12 வீடுகள்
27 நட்சத்திரங்கள்
108 பாதங்கள்
ஆகியவற்றைத் தன்னில் கொண்டு
சக்தி களமாக
பேரியக்க மண்டலமாக
இயக்க நிலையாக
இயங்கு ஒழுங்கு மாறாமல்
இயங்கி கொண்டிருப்பது பிரம்மமே .
பிரம்மம் இயக்க நிலைக்கு வரும் போது
சக்தி களம் என என்று பெயரிட்டு அழைக்கப் படுகிறது .

பிரம்மம் அமைதி நிலையில் இருக்கும் போது
அமைதியாக இருக்கும் போது
சிவகளம் , சுத்தவெளி , சூன்யம் எனப்படுகிறது .
சிவகளமே - சக்திகளமாகவும்
இருப்பு நிலையே - இயக்க நிலையாகவும் மாற்றமடைகிறது .

இருப்பு நிலை - இயக்க நிலையாக
மாற்ற மடைந்து பரிணத்து நின்றாலும்
இருப்பு நிலையில் உள்ளவைகளே
இயக்க நிலையில் பிரவகித்து நிற்கும்
பெயர்  தான் மாறுபடுமே ஒழிய பண்பு மாறாது .

இருப்பு நிலை அசைந்தால் இயக்க நிலை
இயக்க நிலை நின்றால் இருப்பு நிலை
இருப்புக்குள் இயக்கமும் - இயக்கத்திற்குள் இருப்பும் இருக்கிறது .
இதனை ஆண்டவர்  அருளால் உணரப் பெற்றவர்களால் மட்டுமே
தான் அவனாக மாறி தன்னை அறிய முடியும் .
தன் தலைவனை அறிய முடியும் .
தன்னை அறியாதவனால் தன் தலைவனை அறிய முடியாது .
தான் அவனாக மாறியவனுக்கு பிறப்பு - இறப்பு கிடையாது
தான் அவனாக மாறாதவனுக்கு பிறப்பு - இறப்பு உண்டு
கர்ம வினை உண்டு பாவ - புண்ணியம் உண்டு .

கடவுளின் அருளால் கடவுளுடன் இணைந்தவனுக்கு
இருப்பு நிலையே இயக்கத்தில் இயக்க நிலையாகவும்
இயக்க நிலையே ஒடுக்கத்தில் இருப்பு நிலையாகவும் இருக்கிறது
என்பதை உணர்ந்து பிறப்பை - இறப்பை அறுத்து
கர்ம வினையை எரித்து
உயர்  நிலை அடைய முடியும் .

அத்தகைய நிலையை எட்ட முடியாதவனுக்கு
உயிரானது உடல் என்ற கூட்டிற்குள் மாட்டிக் கொண்டு
பிறப்பு - இறப்பு என்ற சுழற்சியில் சிக்கிக் கொண்டு
மனித வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு தள்ளாத சோகத்தில்
தளாத துன்பத்தில் மாட்டிக் கொண்டு அல்லாட வேண்டியிருக்கும்
என்கிறார்  இடைக்காட்டுச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - இடைக்காட்டுச் சித்தர்:

இயேசு ,
ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைத்தால் 
ஆண்டவரின் அருளைப் பெறலாம்
என்பதை தன் செயலின் மூலம் எடுத்துக் காட்டி
ஆண்டவரை நம்புகிறவர்களுக்கு
ஆண்டவரை விசுவாசிக்கிறவர்களுக்கு
அவருடைய அருள் கிடைக்கும் என்பதை விளக்கினார் .

அவ்வாறே ,
இடைக்காட்டுச் சித்தரும் ,
கடவுள் மேல் உண்மையான நம்பிக்கை வைத்தால்
கடவுள் அருளைப் பெற்று கடவுளை உணர்ந்து
கடவுளுடன் இணையலாம் என்கிறார் .


               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                 போற்றினேன் பதிவுநாற்பத்திஎட்டு ந்தான்முற்றே “”