July 19, 2015

இயேசு கிறிஸ்து-அகஸ்தியர்-பாரப்பா-பதிவு-72




                இயேசு கிறிஸ்து-அகஸ்தியர்-பாரப்பா-பதிவு-72 

“””””பதிவு எழுபத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                 ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””””

இயேசு கிறிஸ்து:

“”“அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.”””
                         -----------மத்தேயு - 9 : 1

“”“அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு,
திமிர்வாதக்காரனை நோக்கி:  மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு  மன்னிக்கப்பட்டது என்றார்.”””
                        -----------மத்தேயு - 9 : 2


“”“அப்பொழுது, வேதபாரகரில் சிலர்:  இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்கள்.”””
                         -----------மத்தேயு - 9 : 3


“”“இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து:  நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?”””
                        -----------மத்தேயு - 9 : 4


“”“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து
நடவென்று சொல்வதோ, எது எளிது?”””
                        -----------மத்தேயு - 9 : 5


“”“பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம்
உண்டென்பதை நீங்கள்அறிய வேண்டும் என்று சொல்லி,
திமிர்வாதக்காரனை நோக்கி:  நீ எழுந்து, உன் படுக்கையை
எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.”””
                       -----------மத்தேயு - 9 : 6



“”“”“உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.”””
                       -----------மத்தேயு - 9 : 7


“”“ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட
அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்
படுத்தினார்கள்.”””
                     -----------மத்தேயு - 9 : 8


“”“இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில்
உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு:  எனக்குப்
பின் சென்று வா: என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.”””
                    -----------மத்தேயு - 9 : 9


“”“பின்பு அவர் வீட்டிலே போஜன பந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் 
சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்”””
                     ----------மத்தேயு - 9 : 10


“”“பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி:  உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று  கேட்டார்கள்”””
                   -----------மத்தேயு - 9 : 11


“”“இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.”””
                  -----------மத்தேயு - 9 : 12


“”“பலியையல்ல, இரக்கத்தையே விரும்பிகிறேன் என்பதின் கருத்து
இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;  நீதிமான்களையல்ல,
பாவிகளையே மனந் திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்”””
                -----------மத்தேயு - 9 : 13


“”“அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவர்டத்தில் வந்து:
நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே;  உம்முடைய
சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.”””
               -----------மத்தேயு - 9 : 14



“”“அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தொழர் துயரப்படுவார்களா?  மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.”””
              -----------மத்தேயு - 9 : 15


சமுதாயம் எதனை மதிக்க வேண்டுமோ
அதை மதிப்பதில்லை ;
சமுதாயம் எதை மதிக்கக் கூடாதோ 
அதை மதிக்கிறது ;

மதிக்க வேண்டியவைகளை
மதிக்காமல் விட்டதால் ,
மதிக்கப்பட வேண்டியவைகள்
மதிக்காமல் விடப்பட்டன.

மதிக்கக் கூடாதவைகள்,
மதிக்கப்பட வேண்டாதவைகள்,
மதிக்கப்படுவதால்,
மதிப்புக்கு உட்படுத்தப்படுவதால்,
மதிப்புக்கு உரியதாக கருதப்படுவதால்,
மதிப்புக்கு உரியதாக கருத வைக்கப்பட்டு விட்டதால்,
மதிப்புக்கு வேண்டப்படாதவைகள்
மதிப்புக்கு உரியதாக கருதப்படுகின்றன;
மதிப்புக்குரியதாக மாற்றப்பட்டு விட்டன;
மதிப்புக்குரியவைகள் தேவையற்றதாகவும்
மதிப்புக்கு உரியவையாக இல்லாதவை தேவையுள்ளதாகவும்
சமுதாயத்தில் மாற்றப்பட்டுள்ளது.

எது மதிப்புக்குரியதோ
அது சமுதாயத்தில் தேவையற்றதாகவும்
எது மதிப்பு அற்றதோ
அது சமுதாயத்தில் தேவையுள்ளதாகவும்
சமுதாயத்தில் உருவாக்கப்பட்டு விட்டது.

எது மதிப்பு உடையது என்றும்
எது மதிப்பு அற்றது என்றும்
சமுதாயத்தில் சிலருக்கு தெரியும்;
சமுதாயத்தில் தெரிந்த சிலர்
தெரியாத சிலரை
தங்களுக்கு அடிமையாக வைத்துக் கொண்டு
மதிப்பு வாய்ந்ததை தேவையற்றது என்றும்
மதிப்பு அற்றதை தேவையுள்ளது என்றும்
நம்ப வைத்து விட்டனர்.

தெரிந்தவர்கள் ,
சுய நலம் மிக்கவர்கள்,
தான் வாழ வேண்டும்
தன் குடும்பம் மட்டும் வாழ வேண்டும் -என்ற
சுயநலம் எண்ணம் கொண்டவர்கள்,
தனக்கு ஆதாயம் இருப்பதை
உணர்ந்தவர்கள்,
இதனால் தனக்கு
வருமானம் உண்டு;
உயர்வுகள் உண்டு;
பொருளாதார ஏற்றங்கள் உண்டு;
வாழ்வில் உயர்வுகள் உண்டு;
என்பதை உணர்ந்தவர்கள்
மதிப்பு உள்ளதை
சமுதாயத்திற்கு தேவையற்றது - என்று
நம்ப வைக்கப் பாடுபடுகின்றனர்.

மதிப்பு உடையதை
தேவையுள்ளது என்று
சமுதாயத்திற்கு கூறி உணர்த்த
மறுத்து விட்டனர்.
இதனால் உண்மை மறந்து
பொய் வளர ஆரம்பித்து விட்டது.

சமுதாயத்தில்
மதிப்புடையது எது என்றும்
மதிப்பற்றது எது என்றும்
தெரியாத காரணத்தினால்
தேவையுடையது எது என்றும்
தேவையற்றது எது என்றும்
சமுதாயத்திற்கு உணர்த்தப்படாததால்
தேவையுடையது மதிப்பில்லாமலும்
தேவையற்றது மதிப்புடையதாகவும்
மாறி விட்டது.

எது நமக்கு தேவை என்பதை
அறிந்து கொண்டால்
அது மதிப்பு மிக்கது என்றும்
எது நமக்கு தேவையில்லை
என்பதை அறிந்து கொண்டால்
அது மதிப்பு அற்றது
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் நாம்
நமக்கு எது தேவை
நமக்கு எது தேவையில்லை என்பது
தெரியாத காரணத்தினால்
மதிப்பு மிக்கதை
மதிப்பு அற்றதாகவும்
மதிப்பு அற்றதை
மதிப்பு மிக்கதாகவும்
நினைக்கத் தொடங்கி விட்டோம்.
மதிப்பு மிக்கது எது என்றும்,
மதிப்பு அற்றது எது என்றும்,
சமுதாயத்திற்கு தெரியாத காரணத்தினால்,
சமுதாயத்திற்கு புரியாத காரணத்தினால்,
சமுதாயம் அறியாத காரணத்தினால்,
சமுதாயம் உணராத காரணத்தினால்,
தேவையற்றதை மதிப்பதும்
தேவையுள்ளதை மதிக்காமல் விடுவதும்
தேவையற்றது உயர்ந்து போவதற்கும்
தேவையுள்ளது அழிந்து போவதற்கும்
தேவைற்றது வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்
தேவையுள்ளது மறைந்து கொண்டிருப்பதற்கும்
சமுதாயத்தில் அறியாதவர்கள்
இருக்கின்ற காரத்தினால்
இந்த நிலை ஏற்படுகிறது.

அறிந்த சிலர் ;
சூழ்ச்சியை புரிந்த சிலர்;
தன் தேவையை பெற முயற்சிக்கும் சிலர்;
சூதில் சுகம் காண்பவர்;
சூழ்ச்சியில் மகிழ்ச்சி காண்பவர்;
தன்னலத்தில் உயர்வு காண்பவர்;
சுயநலத்தில் சந்தோஷம் காண்பவர்;
ஆகியோர்
சமுதாயத்தின் அறியாமையை
தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதால்
மதிப்பு அற்றது தேவையுள்ளதாகவும்
மதிப்பு உடையது தேவையற்றதாகவும்
சித்தரிக்கப்பட்டு
சமுதாயத்தை சிந்திக்க விடாமல்
சுயநலமிக்கவர்கள் சமுதாயத்தை தன்
ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டனர்.

சமுதாயத்தில் மதிப்பு உடையது
தேவை உடையது விவசாயம் - ஆனால்
அது சமுதாயத்தில் மதிப்பு அற்றதாக
மாற்றி வைக்கப்பட்டு விட்டது;
தேவையற்றதாக யோசிக்க வைத்துவிட்டது;

சமுதாயத்தில் மதிப்பு உடையதாக
இருக்க வேண்டிய
விவசாய நிலங்கள்;
விளை நிலங்கள்;
நஞ்சை நிலங்கள்;
வீடுகட்டும் நிலங்களாக மாற்றப்பட்டு விட்டன.
வீடு கட்டுவதற்காக என்று தனியாக இருக்கின்ற
வீட்டு நிலங்களை வீடு கட்டாமல்
விவசாய நிலங்களை வீடு கட்டும் நிலங்களாக மாற்றுவது
தேவையற்றது
ஆனால் அது தான்
சமுதாயத்தில் தேவையுள்ள ஒன்றாக
மாற்றப்பட்டு விட்டது;
முக்கியமான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது;
அத்தியாவசியமான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது;

தேவையற்றது
ஆனால் அது தான்
சமுதாயத்தில் தேவையுள்ளதாகவும்
மதிப்பு உடையதாகவும் இருக்கிறது.

விவசாய நாடு
விவசாய பூமி - என்று
இந்தியாவை சொல்கிறோம் - ஆனால்
விவசாயத்திற்கு உரிய மரியாதையை நாம் அளிக்கவில்லை.

விவசாயம் உயர்ந்தது;
விவசாயம் அத்தியாவசியமானது;
விவசாயம் உன்னதமானது;
விவசாயம் மேன்மையானது;
விவசாயம் மதிப்பு மிக்கது;
விவசாயம் வாழ்வளிப்பது;
விவசாயம் தலை சிறந்தது;
விவசாயம் சிறப்பு மிக்கது;
விவசாயம் அனைத்திற்கும் அடிப்படையானது;
விவசாயம் அனைவருக்கும் தேவையானது;
விவசாம் வாழ்வை உயர்த்தக் கூடியது;
விவசாயம் நாட்டை உயர்த்தக் கூடியது;
விவசாயம் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடியது;
விவசாயம் அடுத்த தலைமுறைகளை
வாழ வைக்கக் கூடியது;
விவசாயம் நம் தலைமுறைகளை பாதுகாத்து
அடுத்த தலைமுறைக்கு நம்மை
கொண்டு போய் சேர்ப்பது;
என்பதை
இந்த சமுதாயம் உணர வேண்டும்.

இந்த சமுதாயத்தை உணர வைக்க வேண்டும்;
இந்த சமுதாயத்தை புரியவைக்க வேண்டும்;
இந்த சமுதாயத்தை அறியாமையில் இருந்து
விழிப்புணர்வுக்கு கொண்டு வர வேண்டும்;
அப்படி கொண்டு வரும் போது தான்
அப்படி கொண்டு வந்தால் தான்
விவசாயத்தின் உண்மை உரு அனைவருக்கும் தெரியும்
விவசாயத்தின் மேன்மை அனைவருக்கும் புரியும்
விவசாயத்தின் அத்தியாவசியம்

பலருக்கும் தெரியாத காரணத்தினால்
விவசாயம் சமுதாயத்தில் மதிப்பிழந்து நிற்கிறது.

சமுதாயம்
விவசாயம் ; விவசாயி ; விவசாய நிலங்கள்
ஆகிய மூன்று முக்கியமானவைகளை
மதிப்பதில்லை.

நாம் புனிதமான ஒன்றை மதிக்கத் தவறி விட்டால்
புனிதமான ஒன்றின் மகத்துவம் புரியாவிட்டால்
புனிதமானது  இந்த
சமுதாயத்தில்
எதிர்காலத்தில்
யாருக்கும் பலனில்லாமல் போகும்.

விவசாயத்தை இந்த சமுதாயம்
ஏற்றுக் கொள்ளும் வகையிலும்
மதிக்கத்தக்க வகையிலும் மாற்றப்பட்டால்
நாளைய சமுதாயத்திற்கு உணவு கிடைக்கும்;
விவசாயத்தை நாம் மதிக்காமல்
ஒதுக்கி விட்டால்
விவசாயம் யாருக்கும் பயன்படாமல்
எதிர்காலத்தில் பட்டினிச் சாவுகள்
நிகழ வாய்ப்பு ஏற்படும்.
விவசாயம் மதித்தால்
நாளை இச்சமுதாயம் வாழும்;
விவசாயத்தை மதிக்காமல் விட்டால்
நாளை இச் சமுதாயம் வாழாது;

விவசாயத்தை
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளும் வகையில்
செயல்களைச் செய்தாலொழிய
விவசாயத்தை வாழ வைக்க முடியாது.
விவசாய படிப்பை ஊக்குவிக்க வேண்டும்

மருத்துவ படிப்பும்,
பொறியியல் படிப்பும்,
உயர்வாக கருதப்படுவதும்;
லட்சக்கணக்கில் பணத்தை
செலவழித்து இடம் வாங்குவதும்;
லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து படிப்பதும்;
சமுதாயம் இவைகளையும்
இவைகளை படிப்பவர்களை மதிப்பதும்;
அவர்கள் சமுதாயத்தில் உயர்வாக
கருதப்படுவதும்;
இந்த சமுதாயத்தில் தொடர்ந்து
நடந்து வரும்  ஒரு  நிகழ்வு;

முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள
இவைகள் மாற்றப்பட வேண்டும்;
இவைகளை விட உயர்வான ஒன்று
இந்த சமுதாயத்தில் இருக்கிறது என்பதை
இந்த சமுதாயம்
உணரும் படிச் செய்ய வேண்டும்;
விவசாயம் முதன்மையாகவும்
மருத்துவ படிப்பும்;
பொறியியல் படிப்பும்;
அடுத்த அடுத்த நிலைக்கும்
மாற்றப்பட வேண்டும்;
அதாவது சமுதாயத்தில்
விவசாயம் என்பது முதலாவதாகவும்
மருத்துவ படிப்பும்,
பொறியியல் படிப்பும்,
அடுத்த அடுத்த நிலைக்கும்
மாற்றப்பட வேண்டும்;

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில்
விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்.

விவசாய நிலங்களை
வீடு கட்ட நிலங்களாக,
மாற்றுபவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும்;
விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் என்ற பெயரில்
வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும்;
டாக்டர், இஞ்சினியர் - என்று
இந்த சமுதாயத்தில் சொல்லும்போது
எவ்வளவு மரியாதையை
இந்த சமுதாயம் அளிக்கிறதோ
அதே அளவு மரியாதையை
விவசாயத்திற்கும்,
விவசாயிக்கும் அளிக்க வேண்டும்;
அளிக்கக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும்;

தமிழை வளர்க்கிறோம் என்று
சொல்வதால் ஒரு பயனும் இல்லை;
தாய் மொழியாக
முதல் மொழியாக
தனது கல்வியில்
ஆரம்பக்கல்வி முதல்
உயர் கல்வி வரை
மட்டுமல்லாது
கல்லூரிக் கல்வியையும்
தமிழில் 
படிப்பவர்களுக்கே
அரசாங்க வேலை அளிக்கப்படும் - என்று
உத்தரவு பிரகனப்படுத்தப்பட்டால்
எத்தனை பேர் தமிழ் படிப்பார்கள்

தமிழ் படித்தவர்களுக்கே
தமிழ் நாட்டு வேலையில்
முன்னுரிமை தரப்படும் என்று
சட்டம் கொண்டு வரப்பட்டால்
தமிழை எத்தனை பேர் ஓடி ஓடி படிப்பார்கள்.

அதைப் போலத்தான்
விவசாய படிப்பிற்கும்
விவசாயிக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும்போது
விவசாயம் வளரும்.

மதிப்பு மிக்க தேவையுள்ள
விவசாயம் வளர வேண்டுமானால்
இந்த சமுதாயம்
விவசாயத்தை போற்ற வேண்டும்;
இல்லையென்றால்
தேவையுள்ள விவசாய நிலங்களை
வீட்டுமனைகளாக மாற்றி விற்பவர்கள்;
வளர்வார்கள்;

விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழும்போது
எதிர் காலத்தில் சாப்பாடு இல்லாமல் தான்
இருக்க முடியும்;
விவசாயம் அழிக்கப்பட்டால்,
விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டால்,
விவசாயி அழிக்கப்பட்டால்,
நாளைய தலைமுறை
உணவில்லாமல் இறக்க வேண்டியதுதான்.

ஆகவே ஒவ்வொருவரும்
எது தேவை உடையது என்றும்,
புனிதமானது என்றும் ,
எது தேவையற்றது என்றும்,
புனிதமற்றது என்றும்,
புரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை
இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள்
இயேசு அவனை நோக்கி திடங்கொள்
உன் பாவங்கள்
மன்னிக்கப்பட்டது என்றார்.

வேத பாரகரில் சிலர்
தங்கள் உங்களில் இவன்
தேவதூஷணம் சொல்கிறான் என்று
தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்
கொண்டார்கள்.

அவர்கள் மனதில் நினைத்ததை
இயேசு அறிந்து
நீங்கள் உங்கள் உள்ளங்களில்
தவறானவைகளைச் ஏன் சிந்திக்கிறீர்கள்.

உன்னுடைய பாவங்கள்
மன்னிக்கப்பட்டது என்று சொல்வது எளிதா?
எழுந்து நடவென்று சொல்வது எளிதா?
எது எளிது?

பூமியில் பாவங்களை
மன்னிக்கக்கூடிய அதிகாரம்
மனுஷகுமாரனுக்கு
உண்டு என்பதை
நீங்கள் அறிய வேண்டும் - என்று
இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி
எழுந்து
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு
உன் வீட்டுக்குப் போ என்றார்.

உடனே அவன் எழுந்து வீட்டுக்குப் போனான்

பாவங்களை நம்மால் தீர்க்க முடியாது;
பாவங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்;
பாவத்தினால் உண்டாகும் விளைவுகளை
நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்;
பாவத்தின் விளைவுகளிலிருந்து நாம் நாம் தப்ப முடியாது;
பாவத்தின் விளைவுகளிலிருந்து நாம் தப்பி ஓடி விட முடியாது;
எங்கே போய் நாம் ஓடி ஒளிந்து கொண்டாலும் ,
மறைவான இடத்தில் மறைந்து கொண்டாலும்,
மறைவான பிரதேசத்தில் ஓடி ஒளிந்து கொண்டாலும்,
பாவச்செயலை யாருக்கும் தெரியாமல் செய்தோம்
நாம் செய்த பாவச்செயலை யாரும் பார்க்கவில்லை
என்று நினைத்தாலோ
அது அறிவற்ற தனம்.

ஒரு பாவத்தை செய்து விட்டு
அதன் விளைவிலிருந்து
தப்ப முடியாது - ஆனால்
நாம் செய்தது பாவம் என்று உணர்ந்து
ஆண்டவரிடம் சரணடைந்தால்,
ஆண்டவருடன் இணைந்தால்,
ஆண்டவரை விசுவாசித்தால்,
ஆண்டவரிடம் தன்னை ஒப்படைத்தால்,
உண்மையாக ஆண்டவரை நம்பினால்,
இயேசுவை உண்மையான தேவன்
என்று விசுவாசித்தால்,
இயேசுவிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்தால்,
ஆண்டவர் நம் பாவத்தை தான் ஏற்றுக் கொண்டு
நமக்காக மரித்தவர்;
நமக்காக இரத்தம் சிந்தியவர்;
நம் பாவத்தை ஏற்றுக் கொள்வார்;
நம் பாவத்தை தீர்ப்பார்;
நம் கவலைகளை குறைப்பார்;
நம் வருத்தங்களை களைவார்;
நம் குறைகளை நீக்குவார்;
நம் இயலாமையை போக்குவார்;
நம் ஏழ்மையை மாற்றுவார்;
நம் வாழ்வை உயர்த்துவார்;
மதிப்பு மிக்கது எது என்றும்
தேவையானது எது என்றும்
உணர்ந்தவனால மட்டுமே
ஆண்டவரை உணர முடியும்.

மதிப்பு மிக்க ஆண்டவருடன்
தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம்
தங்கள் பாவங்கள் நீங்க சுகம் பெறலாம்;
என்று உணர்ந்தவர்களால் மட்டுமே
மதிப்பு மிக்க ஆண்டவரை நாடுவதன் மூலம்
பாவத்தை நீக்கி உயர் வாழ்வை அடைய முடியும்;

அதனால் இயேசு,
பாவங்கள் மன்னிக்கப் பட்டது
என்று சொல்வது எளிதா?
எழுந்து நடவென்று சொல்வது
எளிதா?  என்றார்

பாவங்கள் மன்னிக்கப்பட்டது
என்று சொல்வதற்கும்
எழுந்து நட என்று சொல்வதற்கும்
வேறுபாடு இருக்கிறது.

பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றால்,
பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று பொருள்
அடுத்த செயல்
எப்பொழுது நடக்கும் என்று தெரியாது ;
ஆனால்
எழுந்து நட என்று சொல்லும் போது
அங்கே இரண்டு செயல்கள் நடை பெறுகிறது
ஒன்று பாவங்கள் மன்னிக்கப்பட்டது
இரண்டு எழுந்து நடந்து செல்வது;

பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்லும் போது
ஒரு செயல் மட்டுமே நடக்கிறது;
அது பாவங்கள் மன்னிக்கப்பட்டது
இங்கு எழுந்து நடக்கும் செயல் என்பது இல்லை.

பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்பதில்
இரண்டு செயல்கள் நடைபெறுகிறது;
பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்ற செயலும்
எழுந்து நட என்ற வார்த்தையில்
பாவங்கள் மன்னிக்கப்பட்டன எழுந்து நட என்று
இரண்டு செயல்களும் நடைபெறுகிறது.

அதனால் தான் இயேசு
பாவங்கள் மன்னிக்கப்பட்டன
என்று சொல்வது எளிதா?
எழுந்துநட என்று சொல்வது எளிதா?
என்கிறார்.

வார்த்தையில் உள்ள அர்த்தத்தின்
ஆழத்தினை புரிந்து கொள்ளாதவர்
மனம் குழப்பத்தில் இருந்ததால்
இயேசு.
பாவங்களை மன்னிக்க
மனுஷகுமாரனுக்கு
அதிகாரம் உண்டென்பதை
உணர வேண்டும் என்கிறார்.

பரிசுத்தமான உண்மையான
தேவகுமாரனால் மட்டுமே பாவத்தை போக்க முடியும்
என்பதை மக்கள் உணர வேண்டும்
என்ற எண்ணத்தாலேயே
இயேசு
எனக்கு பாவங்களை போக்கும்
அதிகாரம் இருக்கிறது
அதாவது
என்னால் பாவங்களை போக்க முடியும்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

திமிர்வாதக்காரனை நோக்கி
நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு
உன் வீட்டுக்குப்போ என்றார் இயேசு.
அவன் எழுந்து வீட்டுக்குப் போனான்.

இயேசு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது - என்று
சொல்லவில்லை
நீ எழுந்து
உன் படுக்கையை எடுத்துக் கொண்டு போ
என்கிறார்.
நீ படுக்கையை எடுத்துக் கொண்டு போ என்றால்
உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது
எழுந்து நட என்ற அர்த்தம்.

இயேசு பாவங்கள் மன்னிக்கப்பட்டது
என்று சொல்லவில்லை
எழுந்து நட என்று சொல்கிறார்.
பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றால்
பாவங்கள் மன்னிக்கப்படும்
எழுந்து நடப்பான் என்று சொல்ல முடியாது;
ஆனால்,
எழுந்து நட என்றால்
பாவங்கள் மன்னிக்கப்பட்டு எழுந்து நடப்பது
என்று பொருள்;
அதனால் தான் இயேசு
எழுந்து நட என்றார்.

ஜனங்கள் அதைக் கண்டு
அவரை மகிமைப் படுத்தினார்கள்
பின்பு அவர் வீட்டிலேயே
போஜன பந்தியிருக்கையில்
அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து
இயேசுவோடும் அவர் சீஷரோடும் கூடப் பந்தியிருந்தார்கள்.

பரிசேயர் அதைக் கண்டு
அவருடைய சீஷர்களை நோக்கி
உங்கள் இயேசு
ஆயக்காரரோடும் பாவிகளோடும்
போஜனம் பண்ணுகிறதென்ன
என்று கேட்டார்கள்.

நாம் நல்லவர்களாக இருந்தால்
நல்லவர்கள் கூடத் தான்
இருக்க வேண்டும்;
கெட்டவர்களாக இருந்தால்
கெட்டவர்களுடன் தான் இருக்க வேண்டும்;
என்ற எழுதப்படாத விதி இருக்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களுடன்
நட்பு கொண்டிருந்தால்
கெட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தால்
இந்த சமுதாயம் நல்லவர்களை
சந்தேகக் கண் கொண்டு பார்க்கும்.

நல்லவர்கள் கெட்டவர்களுடன்
உறவு கொள்வதை
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை.

அதனால் தான் பரிசேயர்
சந்தேகக்கண் கொண்டு
புனிதமான உங்கள் போதகர்
தவறானவர்களுடன் உறவு கொண்டு இருக்கிறார்களே
இது தவறில்லையா என்று கேட்டார்கள்.

அதற்கு இயேசு
உடல் நலக் குறைவு உடையவனுக்கே
வைத்தியன் தேவை;
உடல்நலக் குறைவு இல்லாதவனுக்கு
வைத்தியன் தேவை இல்லை;

நான் பாவிகளைத் தான்
மனம் திருந்தி வாழ வைக்க வந்தேன்;
பாவத்தால் பாதிக்கப்பட்டு
வாழ்வில் துவண்டவர்களுக்கே
பாவத்தை நீக்கி நல்வாழ்வு அளிக்க வந்தேன்;
பாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
என்னை உணர்ந்து கொண்டால்,
என்னை ஏற்றுக்கொண்டால்,
என்னை விசுவாசித்தால்,
என்னுடன் இரண்டறக் கலந்தால்,


அவர்களுடைய பாவங்களை நீக்கி
பாவங்களிலிருந்து விடுபட்டு
மனம் திருந்தி வாழ்வதற்கு
உயர்வு அளிப்பேன்.
பாவம் செய்ததை நினைத்து
வருந்தி இருப்பவர்களுக்கே
பாவத்தை நீக்க வேண்டும்.

பாவிகளற்றவர் யார்;
பாவியாக இல்லாதவர் யார்;
பாவம் செய்யாதவர் யார்;
பாவம் இல்லாத இடத்தில்,
பாவம் இல்லாத உலகத்திற்கு,
பாவத்தை நீக்க ,
நான் வர வேண்டிய அவசியமில்லை.

பாவத்தால் இவ்வுலகம்
நிரம்பி வழிந்து கொண்டிருப்பதும்;
பாவிகளால் இவ்வுலகம்
தவறான வழி நோக்கி சென்று கொண்டிருப்பதும்;
பாவங்களை மனிதர்கள்
பயமில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதும்;
பாவத்தின் பலன் நம்மை பாதிக்கும்
என்று  தெரிந்தும்
பாவங்களை தொடர்ந்து
செய்து கொண்டிருப்பதும்;
இத்தகைய நிலையில் உள்ள
பாவத்தால் சூழப்பட்ட இவ்வுலகத்தை
பாவத்தால் நிரப்பப்பட்ட மனிதர்களை மீட்கவே
பாவத்திலிருந்து மனிதர்களை மீட்டு இரட்சிக்கவே 
நான் வந்தேன்.

உடல் நலக்குறைவு உள்ளவனுக்கே
வைத்தியன் தேவை;
உடல் நலக்குறைவு இல்லாதவனுக்கு
வைத்தியன் தேவை இல்லை;

அதனால் தான்
நான்
உடல் நலக்குறைவை தீர்க்கும் வைத்தியனாக
பாவங்களை போக்குபவனாக வந்தேன் என்றார்.

தான் செல்லும் வழி
தவறான வழி என்று உணராமலேயே
தவறான வழியில் செல்பவர்களை மாற்றி
நேர்வழியில் செல்லத்தக்க
முறைகளை உருவாக்கி

இதுவல்ல வாழ்க்கை;
இது தான் வாழ்க்கை;
இதுதான் உண்மை;
என்பதை உணர வைத்து
பாவத்தின் பலனை அறியவைத்து;
பாவத்தின் விளைவை புரிய வைத்து;
பாவத்திலிருந்து பாவிகளை
மனந்திரும்ப அழைக்க வந்தேன் என்றார்.

யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து
நாங்களும் பரிசேயரும்
அநேகந்தரம் உபவாசிக்கிறோம்
உம்முடைய சீஷர்கள்
உபவாசியாமல் இருக்கிறது
என்னவென்று கேட்டார்கள்.

உபவாசம் என்பது,
ஆண்டவருடன் இணைவதற்கான ஒரு வழி;
ஆண்டவருடன் நம்மை,
இணைப்பதற்கான ஒரு பாலம்;
உபவாசம் என்பது,
ஆண்டவரை அறிந்து கொள்வதற்கும்;
ஆண்டவரை புரிந்து கொள்வதற்கும்;
ஒரு பாதை.
இத்தகைய ஆண்டவர்
நம்முடன் இருக்கும் போது - ஏன்
நாம் உபவாசிக்க வேண்டும்.
ஆண்டவர் நம்முடன் இருக்கும்போது
நாம் உபவாசிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆண்டவர் நம்முடன்
இல்லாத போது தான் நாம்
உபவாசிக்க வேண்டும்

இயேசு சீடர்களுடன்
இருக்கின்ற காரணத்தினால்
அவருடைய சீஷர்கள்
உபவாசிக்க வேண்டிய அவசியமில்லை.

இயேசு அவர்களுடன் இல்லாத பட்சத்தில்
இயேசு அவர்களுடன் இல்லாத நிலையில் தான்
இயேசுவின் சீடர்கள் உபவாகிக்க வேண்டும்.

இயேசு சீடர்களுடன் இருக்கின்ற காரணத்தினால்
இயேசுவின் சீடர்கள் உபவாசிக்க
வேண்டிய அவசியமில்லை.

அதனால் தான் இயேசு,
மணவாளன் தங்களுடன் இருக்கையில்
மணவாளனுடைய தோழர்கள்
துயரப்பட மாட்டார்கள்.

மணவாளன் தங்களுடன்
இல்லாத நிலையில் தான்
மணவாளனுடைய தோழர்கள் வருத்தப்பட வேண்டும்.

நான் அவர்களுடன் இருப்பதால்
என்னுடைய சீடர்கள்
உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை,
நான் அவர்களை விட்டு
விலகிச் சென்ற பிறகு
அவர்கள் உபவாசம் இருப்பார்கள்
என்றார் இயேசு.

இவ்வுலகத்தை ஆண்டு கொண்டிருப்பவரும்;
இவ்வுலகத்தை காத்து கொண்டிருப்பவரும்;
இவ்வுலகத்தின் அனைத்து உயிர்களையும்
காப்பாற்றி வருபவரும்;
கடவுள் இயேசு என்பதை,
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
நம்முடைய பாவங்களை
ஆண்டவராகிய இயேசு
நீக்குவதன் மூலமே
இன்பம் பெற்று வாழ முடியும்-என்று
உணர்ந்தவர்களால் மட்டுமே
கருணை கொண்ட இயேசுவை அணுகி
பாவத்தை நீக்கி இன்பம் பெறக்கூடிய
உயர்நிலையை அடையமுடியும்;
பயனுள்ள தேவையை நிறைவு செய்ய முடியும்;
என்கிறது பைபிள்.


எழுந்து நட என்று கூறுவதன் மூலம்
பாவத்தை நீக்கி இன்பம் அளித்தார்;
ஒன்றாக அமர்ந்து போஜனம் பண்ணுகையில்
நாம் பாவத்தை நீக்கவே
வந்தேன் என்றார்;
தன்னுடன் இருக்கும் வரை
தன்னுடன் இணைந்து இருக்கும் வரை
பாவங்களால் ஏற்படும் விளைவு அணுகாது என்றார்;

தன்னை நம்புகிறவர்களின்
பாவங்களை நீக்க வந்தேன்
தன்னுடன் இணைந்து இருக்கும் வரை
பாவத்தினால் ஏற்படக்கூடிய விளைவு அண்டாது
என்று கூறுவதன் மூலம்

இந்த உலகத்தை பாவத்திலிருந்து மீட்கவே
இவ்வுலகம் வந்தேன்
என்று தெளிவு படக்கூறுகிறார்.
தன்னுடன் இருக்கும் வரை
எந்நாளும் துன்பமில்லை என்கிறார்.

மதிப்பு மிக்கதை உணருங்கள்
உங்களுக்கு தேவையானது
உங்களைத் தேடி வரும்
என்கிறது பைபிள்.
மதிப்பு மிக்கதை உணராமல்
மதிப்பற்றதை உணர்ந்தால்
தேவையுள்ளது வராமல்
தேவையற்றது தான்
நம்மைத் தேடி வரும்
என்கிறது பைபிள்.








அகஸ்தியர் :

               “”“”””பாரப்பா வுலகுதனிற் பிறவி கோடி
படைப்புகளோ பலவிதமாய் கோடா கோடி
வீரப்பா அண்டத்திற் பிறவி கோடி
வெளியிலே யாடுதப்பா வுற்றுப் பாரு
ஆரப்பா அணுவெளியி லுள்ள நீதான்
ஆச்சரியம் புழுக்கூடு வலைமோ தப்பா
கூரப்பா அண்டத்திற் பிண்ட மாகும்
குணவியவா னானக்காற் சத்திய மாமே””””””
---------- அகஸ்தியர்
----------அகஸ்தியர் ஞானம்-9
பெரிய ஞானக்கோவை

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்
செயல்பட்டுக் கொண்டிருக்கும்
எந்த பொருளை எடுத்துக் கொண்டாலும்
அதில் மூன்று நிலைகள் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்
அந்த மூன்று நிலைகளும்
பிரபஞ்ச ரகசியங்களை
தன்னுள் வைத்திருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்
தன்னுள் வைத்திருப்பதை மறைத்து வைத்திருப்பதை
தெரிந்து கொள்ளலாம்.

வெளிப்படையான விஷயமாக இருந்தாலும்
உணர்ந்து கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தாலும்
அது மறைபொருளாக மறைத்து வைக்கப்பட்டிருப்பதை
அறிந்து கொள்ளலாம்.

பெரும்பாலானவர்களுக்கு
ஒவ்வொரு விஷயத்திலும்
மூன்று நிலைகள் இருப்பதையே?
அந்த மூன்று விஷயங்களில் உள்ள
மூன்று நிலைகள் தான்
பிரபஞ்ச ரகசியங்களை தன்னுள்
கொண்டிருக்கிறது என்பதையோ ?
இந்த சமுதாயம் அறியாமல் இருக்கிறது.

வெளிப்படையாக இருக்கும் ஒன்று;
தன்னை வெளிப்படுத்திய ஒன்று;
தானே தன்னை வெளிப்படுத்திய ஒன்று;
தானே தானாக மாற்றமடைந்த ஒன்று;
ஒன்றே பலவாறாக பரிணமித்த ஒன்று;
ஒன்றே மற்றொன்றாக மாறிய ஒன்று;
ஒன்றே பலவாறாக உருமாறிய ஒன்று;
ஒன்றினுள் பலவாறாக தோன்றிய ஒன்று;
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக பரிணமித்த ஒன்று;

அந்த ஒன்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது
தன் ரகசியங்களை,
தன் மறைபொருளை,
தன் ஆதிநிலைகளை,
தன் சூட்சுமங்களை ,
தான் வெளிப்படுத்திய
தான் உருமாறிய
தானே தானாக மாறிய
பல்வேறு விஷயங்களிலும்,
இயக்க நிலையில் உள்ளவைகளிலும்,
இயக்கமற்ற நிலைகளில் உள்ளவைகளிலும்,
தன்னை வெளிப்படுத்தி வைத்திருந்தாலும்
உணர முடியாத நிலையில்
மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

ஆதி
சக்தியாகி
சக்தி பஞ்ச பூதங்களாகிய
இந்த மூன்று நிலைகளும்
பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறது.

ஆதிநிலையை - காரண உடல் என்றும்
சக்தி நிலை¬யை - இயக்க ஆற்றல், சூட்சும உடல் என்றும்
பஞ்சபூதங்களின் கூட்டுநிலையை -  தூல உடல் என்றும்
எடுத்துக் கொள்ளலாம்,

நமது உடலில்
தூல உடல் - சூக்கும உடல் - காரண உடல்
ஆகிய முக்கியமான
மூன்று நிலைகள் இருக்கிறது.

தூல உடல் பஞ்ச பூதங்களின் கூட்டு
சூக்கும உடல் சக்தி நிலை
காரண உடல் ஆதி நிலை
என்ற ரகசியங்களை தாங்கி
மனித உடல் இருக்கிறது.

தூல உடல்- சூக்கும உடல்- காரண உடல்
என்ற மூன்று நிலைகளை
மனித உடல் கொண்டு இருக்கிறது.

தூல உடலைப் பார்க்க முடியும்;
சூக்கும உடலை பார்க்க முடியாது
ஆனால்,
சூக்கும உடலை உணந்தவர்களால் மட்டுமே
சூக்கும உடலை பார்க்கவும்;
உணரவும் முடியும்;

காரண உடலை அவ்வளவு
எளிதில் உணர முடியாது;
அப்படி உணரும் நிலை வந்து விட்டால்,
உணரும் பேறு கிடைத்து விட்டால்,
உணரக்கூடிய தகுதி வந்து விட்டால்,
உணரக்கூடிய காலம் வந்து விட்டால்,
காரண உடலை உணரலாம்.

இந்த மூன்று நிலைகளும்
மனித உடலில் ரகசியங்களாக
மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

தன்னை உணரும்போது
தன்னை படைத்தவனை உணரலாம்;
தன்னை உணர முடியவில்லை என்றால்
தன்னை படைத்தவனை உணர முடியாது;
முதலில் தன்னை உணர வேண்டும்
தன்னை உணரும் தகுதி வந்து விட்டால்
இறைவனை அறியும் வாய்ப்பு தன்னால் கிடைத்து விடும்.

தன்னை ஒருவன் அறியவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிய முற்படவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிய முயற்சிகளை
மேற்கொள்ளவில்லை எனில்,
தன்னை ஒருவன் அறிந்துகொள்ள விரும்பவில்லை எனில்,
தன்னை அறிய ஒருவன் சிந்திக்கவில்லை எனில்,
தன்னை படைத்தவனை அறிய முடியாது.

தன்னை உணர்ந்தவனால் மட்மே
தன்னை படைத்தவனை உணர முடியும்
தன்னை உணராதவனால்
தன்னை படைத்தவனை
உணர முடியாது.

தன்னை படைத்தவனை
உணர வேண்டுமென்றால்
தன்னை முதலில்
உணர வேண்டும்;
தன்னை உணராமல்
தன்னை படைத்தவனை
உணர முடியாது;

தன்னை படைத்தவன்
எங்கிருக்கிறான் என்பதைத்
தேடுவதை நிறுத்துங்கள்;
நாம் எப்படி படைக்கப் பட்டோம்;
நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம்;
நாம் எந்த காரணத்திற்காகப் படைக்கப்பட்டோம்;
என்று ஆராயும் போது
என்று ஆராய முற்படும் போது
என்று ஆராய்ச்சியில் இறங்கும் போது
முயற்சி, பயிற்சி மற்றும் முன்வினை
ஆகியவற்றின் மூலம்
அவனே நானாக இருப்பதை
அறிந்து கொள்ளலாம்.

படைத்தவனுள் நாமும்
நம்முள் படைத்தவனும் இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்.

அவனே நாமாக மாறி இருப்பதையும்
நம்முள் அவனே இருப்பதையும்
உணர்ந்து கொள்ளலாம்.

அண்டத்தில் உள்ள அனைத்தும்
இந்த பிண்டத்தில் உள்ளதையும்
இந்த பிண்டத்தில் உள்ளதே
அண்டத்தில் உள்ளது
என்பதையும்
தெரிந்து கொள்ளலாம்,


அனைத்திலும் அவன் இருப்பதையும்
அவனுள் நாம் இருப்பதையும்
நம்முள் அவன் இருப்பதையும்
அவனே நாமாக இருப்பதையும்
உணர்ந்து கொள்ளலாம்.

அனைத்தினுள்ளும்
அவன் இருப்பதை
உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால்
நம்முள் அவன் இருப்பதை
முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம்முள் அவன் பரிணாமத்தின் ரகசியங்கள்
அனைத்தையும் வைத்திருக்கிறான்
ஆதிநிலை முதல்
பிரபஞ்ச பரிணாம தோற்றங்கள் வரை
அனைத்தையும் நம்முள் வைத்து இருக்கிறான்.

அதைத் தான்
மனித உடலில்
மூன்று நிலைகளாக
தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற மூன்று உடல்களாக வைத்திருக்கிறான்.

இந்த மூன்று உடல்களைப் பற்றித் தெரிந்துகொண்டால்
ஆதிநிலை ,
அதிலிருந்து பின்னமாகிய உயிரின் நிலை,
உயிரிலே அடங்கிய புலன்கள் மூலம் வெளிப்படும்
பஞ்ச பூத கூட்டான தூல உடல் மூலம் வெளிப்படும்
மனத்தால் உணரத்தக்க மலர்ச்சிகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த மூன்று நிலைகளும்
உடலில் எவ்வாறு உள்ளதோ
அவ்வாறே பிரபஞ்ச பொருட்களிலும்
உள்ளது.

எந்த ஒரு சக்தி வெளிப்பட வேண்டும் என்றாலும்
அதற்கு ஒரு பொருள் தேவை;
பொருள் இல்லை என்றால்
எந்த ஒரு சக்தியும் தன்னை வெளிப்படுத்த முடியாது;

ஒரு சக்தி வெளிப்படும் போது
ஒரு பொருளின் மூலம்
வெளிப்படும் போது
இந்த மூன்றையும் வெளிப்படுத்தும்;

இந்த மூன்றும்
அதில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
மின்சாரம் பல்பின் வழியாக
வெளிப்படும்போது ஒளியாகிறது;
மின்சாரம் மின்விசிறி வழியாக
வெளிப்படும்போது காற்றாகிறது;
மின்சாரம் மின்அடுப்பு வழியாக
வெளிப்படும்போது நெருப்பாகிறது;

அதாவது
ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடைகிறது
ஒன்று மற்றொன்றாக மாற்றம் அடைந்தாலும்
அந்த ஒன்றே தன்னை
வேறு ஒன்றாக வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒன்று வேறொன்றாக மாறுகிறது
ஒன்றே மற்றொன்றாக மாற்றம் அடைகிறது.

ஒன்று மற்றொன்றாக
மாற்றம் அடையும்போது
மாறறத்தை பார்த்தால்
மாற்றத்திற்கு காரணமானது எது என்றும்,
மாற்றத்திற்கு மூலமானது எது என்றும்,
மாற்றத்திற்கு அடிப்படையானது எது என்றும்,
தெரிந்து கொள்ளலாம்.


மாற்றத்தைப் பார்த்தால்
மாற்றத்திற்கு காரணமான
மூலத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இது தான் அனைத்திற்கும் ஆதி நிலையா என்றும்,
இது தான் அனைத்திற்கும் மூல நிலையா என்றும்,
இது தான் அனைத்திற்கும் அடிப்படையானதா என்றும்,
இது தான் அனைத்திற்கும் ஆதாரமானதா என்றும்,
இது தான் அனைத்தையும்
தன்னுள் வைத்திருக்கிறதா என்றும்,
இது தான் அனைத்தையும்
கட்டிக் காப்பாற்றி வருகிறதா என்பதையும்,
இது தான் அனைத்தையும்
வழி நடத்திச் செல்கிறதா என்பதையும்,
அறிந்து கொள்ளலாம்.

எனவே,
மூலத்தை முதலில் தெரிந்து கொள்ள
முயற்சி எடுக்காமல்
மாற்றத்தை தெரிந்து கொண்டு
மாற்றத்திற்கு காரணமான
மூலத்தை தெரிந்து கொள்ள
முற்பட  வேண்டும்.
மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வருவது
சற்று சிரமம் குறைவு
உணர்வது எளிது
கண்டு பிடிக்க முயற்சிப்பது எளிது
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வருவது சற்று கடினம்
மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வர வேண்டும்;
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வர வேண்டும்;

எனவே மாற்றத்திலிருந்து மூலத்திற்கு வர வேண்டும்
மூலத்திலிருந்து மாற்றத்திற்கு வர
முயற்சி செய்வது
விடையை பெறுவதில்
கடின நிலையை உருவாக்கி விடும்.

ஒரு பல்ப் எரிவதைப் பார்த்தால்
அதில் மூன்று நிலைகளும்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு பல்ப்
இது பஞ்ச பூதங்களின் கூட்டு
பொருள் நிலையில் உள்ளது - பார்க்கலாம்;

மின்சாரம்
சக்திநிலை - இயக்க நிலையில் உள்ளது -
உணர முடியும் பார்க்க முடியாது

மின்சாரம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும்
மின்சாரம் உருவாகக் காரணமாக இருக்கும்
மூலம்
அனைத்திற்கும் மூலமாக உள்ள
ஆதிநிலை
அதை உணர முடியும்;
பார்க்க முடியாது;

பல்ப் பார்க்க முடியும்;
மின்சாரம், ஆதிநிலை
இரண்டையும் உணர முடியும்;

மின்சாரம் என்ற சக்தி வெளிப்பட
பல்ப் என்ற
ஒரு பொருள் தேவை
எந்த சக்தியும் தன்னை வெளிப்படுத்த
ஒரு பொருள் தேவை.

ஒரு சக்தி தன்னை
வெளிப்படுத்த வேண்டுமென்றால்
அதற்கு
ஒரு பொருள் தேவை.
ஒரு பொருள் இல்லை என்றால்
எந்த சக்தியும் தன்னை
வெளிப்படுத்த முடியாது.

பல்ப் என்பது தூல உடல்
மின்சாரம் என்பது சூட்சும உடல்
ஆதி நிலை என்பது காரண உடல்.

இதில் பல்ப், மின்சாரம்
தூல உடல், சூட்சும உடல் இரண்டையும்
ஓரளவு அறிந்துகொள்ளலாம்;
ஆனால் காரண உடலை
அறிந்து கொள்வது சற்று கடினம்;

முதல் நிலை அதாவது மூலநிலையை
ஆதிநிலை என்கிறோம்;
ஆதியிலிருந்து பின்னமாகிய
உயிரியின் நிலையை சக்தி நிலை என்கிறோம்;
சக்திகள் இணைந்து உருவான
பஞ்சபூத கூட்டை தூல நிலை என்கிறோம்;

ஆதி நிலையை காரண உடல் என்றும்;
சக்தி நிலையை சூட்சும உடல் என்றும்;
பஞ்சபூத கூட்டை தூல உடல் என்றும்;
அழைக்கிறோம்
இந்த நிலையில் தான்
நம் உடல் இருக்கிறது;
இந்த மூன்று விஷயத்தையும்
தன்னுள் கொண்டு தான்
இந்த உடல் இயங்குகிறது;

உயிர் என்ற சூட்சும உடல்
அதாவது சக்தி நிலை
தன்னை வெளிப்படுத்திக்கொள்ள
தூல உடல் என்ற பொருள் தேவை;
உயிர் இயங்க மெய் தேவை;
மெய் இல்லையென்றால் உயிர் இயங்க முடியாது;

சூட்சும உடல் இயங்க தூல உடல் தேவை;
உயிர் என்ற சக்தி
தூல உடல் என்ற பொருளின் மூலம்
தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது;

சூட்சும உடல், தூல உடலின் மூலம்
தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும்
சூட்சும உடல் மற்றும் தூல உடலுக்கு
மூலம் காரண உடல்          
காரண உடல் தான் இந்த இரண்டுக்கும் மூலம்
ஆதிநிலை
ஆதிநிலையான
காரண உடலுடன்
சூக்கும உடலும், தூல உடலும் பின்னப்பட்டிருக்கிறது.
இணைந்து இருக்கிறது
கலந்து இருக்கிறது

தூல உடலை உணரும்போது
சூக்கும உடலை உணர்ந்து கொள்ளலாம்;
சூக்கும உடலை உணரும்போது
காரண உடலை உணர்ந்து கொள்ளலாம்;
இதுதான் மாற்றத்திலிருந்து
மூலத்திற்கு செல்லும் வழி

இயக்கமற்றது
இயக்கமாகி தன்னை பொருளின் மூலம்
வெளிப்படுத்தும்போது
வெளிப்படுத்தப்பட்ட பொருளிலிருந்து
வெளிப்படுத்திய
வெளிப்படுத்துவதற்கு காரணமான மூலத்தை அடைவது
மூலத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கும்.

மின்சாரம் எப்படி
பல்ப் மூலமாக வெளிப்படுகிறதோ
அவ்வாறே உயிரானது உடல்மூலம் வெளிப்படுகிறது
மின்சாரம் பல்ப் மூலம் வெளிப்படும் போது ஒளியாகிறது;
மின்சாரம் மின் விசிறி மூலம் வெளிப்படும்போது காற்றாகிறது;
மின்சாரம் மின் அடுப்பின் மூலம் வெளிப்படும்போது வெப்பமாகிறது;

அதைப்போல உயிரானது
உயிரில் கலந்துள்ள காந்த ஆற்றலால்
பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய
நிலம், நீர், நெருப்பு, காற்று, விண்
ஆகியவற்றில் நிறைந்து இருக்கக்கூடிய
காந்த ஆற்றல்
அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகிய
பஞ்சதன் மாத்திரைகளாக மாற்றம் அடைகிறது.

இந்த பஞ்ச தன் மாத்திரைகள்
புலன்கள் மூலமாக
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
மெய் வழியாக அழுத்தமாகவும் ;
வாய் வழியாக சுவையாகவும்;
கண் வழியாக ஒளியாகவும்;
செவி வழியாக ஒலியாகவும்;
மூக்கு வழியாக மணமாகவும்;
தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

ஒரு சூட்சும விஷயம்
ஒரு சூட்சும நிலை
தன்னை
ஒரு பொருள் மூலம் வெளிப்படுத்திக்கொள்கிறது
அதாவது ஒரு சக்தி தன்னை
ஒரு பொருளின் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறது.

சூட்சும உடல்,
தூல உடலின் மூலம்  வெளிப்பட்டிருக்கிறது
மின்சாரம் பல்பின் மூலம்
வெளிப்படுவதைப் போல
சூட்சும உடல்
தூல உடலின் மூலம் வெளிப்படுகிறது.

பல்ப் எரிவதை பார்த்து
மின்சாரத்தால் இயங்குகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்
அதைப் போல,
உடல் இயங்குவதை வைத்து
உயிர் இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் இரண்டுக்கும் மூலமானது
ஆதிநிலை
அதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
அனைத்தும்
உருவாக காரணம் எது என்றும்
காரண உடல் எது என்றும்
தெரிந்து கொள்ள வேண்டும்.

தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற நிலையில்
மூல நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

காரண உடல், சூக்கும உடல், தூல உடல்
என்ற வரிசையில்
மூல நிலையைத் தெரிந்து கொள்வது கடினம்.

நாம் பிறக்கும் போது
சூக்கும உடலும், தூல உடலும்
ஆதி நிலை அதாவது
காரண உடலுடன் இணைக்கப்பட்டிருந்தது.

ஆதி நிலை தான்
இந்த இரண்டையும் உருவாக்கியது;
ஆதி நிலை தான்
இந்த இரண்டையும் இயக்கியது;

ஆதி நிலை இந்த இரண்டை
நேரிடையாக இயக்கும்போது
கர்ம வினைகள் இல்லை.

ஆதி நிலை
இந்த இரண்டை
விட்டு விலகி இருக்கும் போது,
இந்த இரண்டு
அந்த ஒன்றை உணராத போது,
இந்த இரண்டு
அந்த ஒன்றிலிருந்து பிரிந்து இருக்கும் போது,
கர்ம வினைகள் உருவாகிறது.

மூன்று வயது வரை
ஆதி நிலை
தூல உடலுடனும்
சூக்கும உடலுடனும்
இணைந்து இருக்கிறது
இணைக்கப்பட்டிருக்கிறது.

மூன்று வயதுக்கு மேல்
ஆதி நிலையான காரண உடல்
தூல உடலில் இருந்தும்
சூக்கும உடலில் இருந்தும்
விலகி இருக்கிறது
அதனால் கர்ம வினைகள்
உருவாகிறது.

ஆதிநிலையான காரண உடல்
சூக்கும உடலுடனும்
காரண உடலுடனும்
இணைந்து இருக்கும் போது
கர்ம வினைகள் உருவாவது இல்லை.

ஆதி நிலையான காரண உடல்
சூக்கும உடலுடனும்
தூல உடலுடனும்
பிரிந்து இருக்கும் போது கர்ம வினைகள்
உருவாகிறது.

அதனால் தான்
 மூன்று வயதுக்கு கீழ்
நாம் செய்த செயல்கள்
நாம் நினைவு படுத்தினால்
நமக்கு நினைவுக்கு வருவதில்லை.
3 வயதுக்கு கீழ்
நாம் செய்த செயல்கள்
எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும்
நமக்கு நினைவுக்கு வராது.

தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
ஆகியவற்றின் ரகசியத்தை
உணர்ந்து கொள்ளும் போது
இயக்கமற்ற நிலை,
இயக்கம் வெளிப்படும் நிலை,
ஆகியவற்றை
அதாவது
சிவநிலை என்கிற ஆதிநிலை
சக்தி நிலை என்கிற உயிர் நிலை
பஞ்சபூத கூட்டு நிலையில்
உயிர் வெளிப்படும் பொருள்
ஆகியவற்றை உணர்ந்து கொள்ளலாம்.

அதாவது தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்;
ஒன்று மற்றொன்றாக
மாறிக் கொண்டே இருக்கும் நிலையில்,
ஒன்றிலிருந்து மற்றொன்று
உருவாகிக் கொண்டே இருக்கும் நிலையில்,
ஒன்று மற்றொன்றாக
பரிணமிக்கும் நிலையில்,

மாற்றத்தை புரிந்துகொண்டால்
மாறுவதற்கு காரணமாக
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நன்றாக உற்றுக் கவனித்தோமானால்
உலகத்தில் உள்ள படைப்புகள்
எண்ணிக்கையில் கோடானு கோடி
கோடானு கோடி படைப்புகள்
இந்த பிரபஞ்த்தில் படைக்கப் பட்டிருக்கிறது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள
கோடானு கோடி படைப்புகள்
கண்ணில் அடங்காத படைப்புகள்
கோடானு கோடி உயிர்கள்
படைக்கப்பட்டிருக்கிறது
நன்றாக உற்றுக் கவனித்தோமேயாகில்
உலகில் உள்ள
ஒரு பொருள் மற்றொன்றாக
இருக்கவே முடியாது.

ஒரு கல் எடுத்துக் கொண்டால்
ஒரு கல்லைப் போல
வேறு ஒரு கல் இருக்கவே முடியாது.

ஒரு மண் என்ற
ஒன்றை எடுத்துக் கொண்டாலும்
ஒன்று மற்றொன்றைப் போல
இருக்கவே முடியாது.

மண்ணே வேறு பட்டு இருக்கும் போது
பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களில்
ஒரு பொருள் மற்றொரு பொருளாக
எப்படி இருக்க முடியும்.

பிரபஞ்சத்தில் ஒரு பொருள்
மற்றொன்றைப் போல இல்லவே இல்லை
ஒரு உயிர் மற்றொன்றைப் போல இல்லவே இல்லை
எல்லாமே தனித்த நிலையிலும்
தனிப்பட்ட குணங்களை
தன்னுள் கொண்டும் இருக்கிறது.

ஒரு மனிதன்
மற்றொரு மனிதனைப் போல இருப்பதே இல்லை
இரட்டைப் பிறவி என்று சொன்னாலும்
ஒருவர் மற்றொருவரைப் போல இருப்பது இல்லை
ஒன்று மற்றொன்றைப் போல இல்லை
வேறுபாடுகள் இருக்கத் தான் செய்யும்.

இதையெல்லாம் நன்றாக உற்றுப்பார்த்தால்
பிரபஞ்சத்தில் உள்ள
அனைத்தையும் உற்றுப்பார்த்தால்
ஒன்று மற்றொன்றிலிருந்து
வேறுபட்டு இருப்பதைக் காணலாம்.

அவ்வளவு துல்லியமாக நுணுக்கமாக
இயக்க ஒழுங்கு மாறாமல் படைக்கப்பட்டு
இயங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

அமாவாசை, பௌர்ணமி
சந்திர கிரகணம், சூரிய கிரகணம்
அண்டத்தில் நடக்கிறது
அதாவது,
அண்ட வெளியில் நடப்பதைப் பார்க்கிறோம்.
இவைகள் அனைத்தும்
நம்முள்ளும் நடக்கிறது
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சோதிடத்தில் ஒரு கட்டத்தில்
சூரியனும், சந்திரனும் சேரும்போது
சில விதிமுறைகளையும் தன்னுள் கொண்டிருக்கும் போது
அமாவாசையில் பிறந்தவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனும், சந்திரனும் பிரிந்து இருக்கும் போது
அதாவது சூரியனிலிருந்து சந்திரன் நேர் எதிராக
180 டிகிரி தூரத்தில் இருக்கும் போது
பௌர்ணமியில் பிறந்தவர் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் .

சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும்
சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார்
என்பதைக் குறிப்பதே திதி.

ஒரு திதி என்பது 12 பாகை
தேய்பிறை திதிகள் - 14
வளர்பிறை திதிகள் - 14
அமாவாசை - 1
பௌர்ணமி - 1
ஆக மொத்தம் 30 திதிகள்

ஒவ்வொரு திதிக்கும் ஒரு பலன் உண்டு
சூரியனிலிருந்து சந்திரன் படிப்படியாக
விலகும்போது தனிப்பட்ட பலன்கள்
அதனால் தான் ஒவ்வொரு திதியிலும்
இதைத் தான்
செய்ய வேண்டும்

வளர்பிறை திதி
தேய்பிறை திதி
அஷ்டமி
நவமி
என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்

நம் உடலில்
சூரியனும், சந்திரனும் சேர்ந்து
இருக்கும் போது இருண்ட நிலை உண்டாகும்.
அது தான் நம் உடலில் அமாவாசை
அதை கண்டு பிடித்து விட்டோமேயாகில்
நம் உடலில் உண்டாகும்
அமாவாசையைக் கண்டு பிடித்துவிட்டால்
ஒவ்வொரு திதியென்றும்
நம் உடலில் ஏற்படக் கூடிய
மாற்றங்களை தெரிந்து கொள்ளலாம்.
உடலுக்குள் நடக்கும் மாற்றங்களை
புரிந்துகொள்ளலாம்

அண்டத்தில் அமாவாசை,பௌர்ணமி
ஆகியவை என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ
அந்த மாற்றங்கள் உடலுக்குள்ளும் ஏற்படுகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள்
பிண்டத்திலும் ஏற்படுகிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பிண்டத்தில் நடப்பது தான்
அண்டத்திலும் நடக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நமது உடலில் அதாவது பிண்டத்தில்
தூல உடல் , சூக்கும உடல், காரண உடல்
உடலாக இருப்பது
பிரபஞ்சத்தில் அதாவது அண்டத்தில்
ஆதிநிலை, உயிர் நிலை, உயிர் வெளிப்படும் பொருள்
இயக்கமற்ற நிலை
இயக்க நிலை
இயக்கம் வெளிப்படும் பொருள்
ஆகிய நிலைகளில் இருக்கின்றது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது தான்
அண்டத்திலும் இருக்கிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


பிரபஞ்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இயக்கமற்ற நிலை
இயக்கம் நிலை
இயக்கம் வெளிப்படும் பொருள்
அனைத்தும்
நம்முள்ளும் இருக்கிறது
என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு புழுக்கூடுக்குள்
புழு எப்படி இருக்குமோ
அப்படி இருக்கிறது பிரபஞ்சம்
கூட்டுக்குள் புழு இருக்கும் போது
இயக்கமற்ற நிலை
கூட்டுக்குள் இருந்து
புழு வெளியே வரும் போது
இயக்க நிலை.

ஆதி நிலை
இயக்கம் பெறும் போது
சக்தி நிலை
அனைத்தும்
இருக்கும் போது
இயக்கமற்ற நிலை


இருப்பது இருப்பதிலிருந்து
மாற்றம் அடையும் போது
இயக்க நிலை.

ஒன்று மற்றொன்றாக மாறினாலும்
ஒன்றே மற்றொன்றாக இருக்கிறது;
ஒன்றை மற்றொன்றிலிருந்து
வேறுபடுத்திக் காட்ட
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது;

மாறிக் கொண்டே இருந்தாலும்
மாற்றத்திற்கான அடிப்படைப் பொருள் ஒன்று தான்
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அண்டத்தில் நடந்து கொண்டிருப்பதும்
நடத்திக் கொண்டிருப்பவனும்
நடப்பதற்கு காரணமாக இருப்பவனும்
நடப்பதற்கு மூலமாக இருப்பவனும்
பிண்டத்தை நடத்துகிறான் என்பதையும்
அண்டத்தில் உள்ளதே
பிண்டத்திலும் இருக்கிறது
பிண்டத்தில் இருப்பதே
அண்டத்திலும் இருக்கிறது
என்பதை உணரும் போது
மனம் தெளிவு பெறுகிறான்
என்கிறார் அகஸ்தியர்.


இயேசு கிறிஸ்து - அகஸ்தியர்

பைபிள்,
ஆணடவரிடம் இணையும் போது மட்டுமே
நம்முடைய பாவங்கள் கழியும்
ஆண்டவரிடம் இணையாவிட்டால் நம்முடைய
பாவங்கள் கழியாது என்கிறது.

அவ்வாறே
அகஸ்தியரும்,
இயக்க நிலையில் உள்ளவைகள்
இறைவனிடம் இணைவதின் மூலமே
கர்மவினைகளைக் கழிக்க முடியும்
இறைவனுடன் இணையாவிட்டால்
கர்மவினைகளைக் கழிக்க முடியாது
என்கிறார்


”””போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
               போற்றினேன் பதிவுஎழுபத்துஇரண்டு ந்தான்முற்றே””””






March 14, 2015

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-காலைமாலை-பதிவு-71




இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-காலைமாலை-பதிவு-71


                 ”பதிவு எழுபத்தொன்றை விரித்துச் சொல்ல
                                ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


இயேசு கிறிஸ்து:


“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம்
தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.”

                                           ---------மத்தேயு - 13 : 24

“மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.”
                                        ---------மத்தேயு - 13 : 25

“பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது.”
                                          ---------மத்தேயு - 13 : 26

“வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே,
நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை
அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.”

                                           ---------மத்தேயு - 13 : 27

“அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது
வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிக்போடஉமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.”
                                             ---------மத்தேயு - 13 : 28

“அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள்
கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும்அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.”
                                             ---------மத்தேயு - 13 : 29

“அறுப்புக் காலத்தில் நான்அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி,அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”
                                                                                                                                                                                                                ---------மத்தேயு - 13 : 30

“அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பி விட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.”
                                            ---------மத்தேயு - 13 : 36


“அவர் பிரதியுத்தரமாக:  நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்:
                                              ---------மத்தேயு - 13 : 37

“நிலம் உலகம்;  நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள்
பொல்லாங்கனுடைய புத்திரர்;
                                               ---------மத்தேயு - 13 : 38

“அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள்.”
                                                ---------மத்தேயு - 13 : 39

“ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல,
இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.”
                                                 ---------மத்தேயு - 13 : 40

“மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்: அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து,
                                                  ---------மத்தேயு - 13 : 41

“அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே
அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.”
                                                    ---------மத்தேயு - 13 : 42

“அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.”
                                                    ---------மத்தேயு - 13 : 43



சமுதாயம் எந்த செயலைச்செய்தாலும்
இரண்டு விதமாக வழிகளைப் பின்பற்றுகிறது
ஒன்று : நேர்வழி
மற்றொன்று : குறுக்கு வழி

நேர்வழியில் செல்பவர்களை விட
குறுக்கு வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை தான் அதிகம்.

நேர்வழியில் சென்று காரியம்
சாதிப்பவர்களை விட,
குறுக்கு வழியில் சென்று காரியம்
சாதிப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

திறமை இல்லாதவர்கள்
சொந்த உழைப்பில்
முன்னேற முடியாதவர்கள் ,
மற்றவர் திறமையோடு
போட்டி போட முடியாதவர்கள் ,
எப்படியாவது தன் திட்டத்தை
எதை பயன்படுத்தியாவது,
எதன் மூலமாகவாவது,
எதைக் கொடுத்தாவது,
யாரைக் கொடுத்தாவது,
யாரைக் கெடுத்தாவது,
யாரை  அழித்தாவது,
தன் திட்டத்தை
நிறைவேற்றிக் கொள்ள நினைப்பவர்கள்,
மற்றவர்கள் வாழ்வை அழித்தாவது
தன் வாழ்வை வாழ நினைப்பவர்கள்
தவறான வழியில் செல்பவர்களை
தன் ஆசையை நிறைவேற்ற பயன்படுத்துபவர்கள்,

தவறுகளை அச்சமில்லாமல்
செய்து கொண்டிருப்பவர்களை
தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்பவர்கள்,
செய்யும் தவறுகளை சமுதாயம்
சரி என்று ஒப்புக் கொள்ளும்
தவறுகளைக் கொண்டவர்களின்
உதவியோடு தொடர்ந்து
தவறுகளை துணிந்து செய்வது
என்று குறுக்கு வழியில் செல்பவர்கள்,
தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில்
செயல் புரிந்து வருகின்றனர்.

இதனால் நேர்வழியில் செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து
குறுக்கு வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நேர் வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
இதற்குக் காரணம்,
குறுக்கு வழியில் செல்பவர்களை
சுகபோகத்திலும், மகிழ்ச்சியிலும், கவலையற்றும்

இருப்பதைக் காணும் நேர்வழியில்
செல்லும் சிலர்
குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பதால் தான்
அவர்களைப் பின்பற்றுபவர்கள் இருப்பதால் தான்
குறுக்கு வழியில் செல்பவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது ;
நேர் வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது ;
என்று நினைப்பது தவறு.

இரு மாறுபட்ட நிலைகள்
இரு மாறுபட்ட தன்மைகள்
என்றும் இருக்கும் எப்போதும் இருக்கும்.

உலகம் முழுவதும்
குறுக்கு வழியில் செல்பவர்களின் எண்ணிக்கை இருந்தாலும்
ஒரே ஒரு நபராவது கண்டிப்பாக நேர்வழியில்
செல்பவர் இருப்பார் என்பதை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறுக்கு வழியில் செல்வதை
இச் சமுதாயம் பல்வேறு நிலைகளில்,
முக்கியமான நிகழ்வுகளில் பயன்படுத்தி வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை
நாம் அறிந்தோ
அல்லது
அறியாமலோ குறுக்கு வழியை பயன்படுத்தி வருகிறோம்.

சிலர் தெரிந்தே குறுக்கு வழியைப் பின்பற்றி
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

கல்வி என்று எடுத்துக் கொண்டால்
சமுதாயம் அதை
ஒன்று : நேர்வழியிலும் அணுகுகிறது ;
மற்றொன்று   : குறுக்கு வழியிலும் அணுகுகிறது ;
என்பதை சமுதாயத்தில்
உள்ள இரண்டு மாறுபட்ட பிரிவினரே
உணர்ந்து வைத்திருக்கின்றனர்
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு சில பள்ளிகளில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பாடங்கள்
பத்தாம் வகுப்பிலும்,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடங்கள்
பன்னிரண்டாம் வகுப்பிலும் எடுக்கப்படுகிறது.

அதன் மூலம் கிடைக்கும் மதிப்பெண்கள்
பெறும் மதிப்பெண்கள்
நேர்வழியில் எடுக்கப்படுபவை என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

அந்த அந்த வகுப்பிற்கான பாடங்களை
அந்த அந்த வகுப்பிலேயே படிப்பது என்பதும்
அதில் தேர்ச்சி பெறுவதும் - தான்
உண்மையான திறமை
இது தான் கல்வியை
நேர்வழியில் அணுகுவது - என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
பத்தாம் வகுப்பில் ஒரு வருடம் மட்டுமே படிக்காமல்,
பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு
ஆகிய இரண்டு வகுப்புகளில்
இரண்டு வருடங்கள் படிப்பதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை
ஒன்பதாம் வகுப்பில் படிக்காமல்
தவற விடுவதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
தவற விடுவதற்கு காரணமாக இருப்பதும்,
ஒன்பதாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
குற்றத்திற்கு துணை போவதும்
பெருங் குற்றம்.

ஒரு வருடம் பாடத்தை இரண்டு வருடங்கள்
படிப்பது என்பதே மிகப் பெரிய குற்றம் என்றால்,
அதில் ஒரு வருட பாடத்தை இழப்பது என்பது
எவ்வளவு பெரிய குற்றம்.

அதைப்போல,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை
பன்னிரண்டாம் வகுப்பில் ஒரு வருடம் மட்டும் படிக்காமல்,
பன்னிரண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுக்கான பாடத்தை

பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு
ஆகிய இரண்டு வகுப்புகளில்
இரண்டு வருடங்கள் படிப்பதும்,

பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்காமல்
தவற விடுவதும்,
பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
தவற விடுவதற்கு காரணமாக இருப்பதும்,
பதினொன்றாம் வகுப்பு பாடத்தை படிக்க விடாமல்
குற்றத்திற்கு துணை போவதும்
பெருங் குற்றம்

ஒரு வருடம் பாடத்தை இரண்டு வருடங்கள்
படிப்பது என்பதே மிகப் பெரிய குற்றம் என்றால்
அதில் ஒரு வருட பாடத்தை இழப்பது என்பது
எவ்வளவு பெரிய குற்றம்.

ஒரு வருட படிப்பை இரண்டு வருடங்கள் படிப்பது என்பது
ஒரு வருட படிப்பை தவற விடுவதும்,
ஒரு குறிப்பிட்ட வருடத்திற்குரிய
பாடங்களில் உள்ள
தகவல்கள் அறியாமல் போவதற்கும் ,
அறிவைப் பெற முடியாமல் போவதற்கும் ,
அறிவைப் பெறாமல் தவற விடுவதற்கும் ,
காரணமாகிறது.

வரிசையாக படித்து பெற வேண்டிய
அறிவைப் பெறாமல்
வரிசையைத் தாண்டி செல்வதால்
வரிசையாகப் பெற வேண்டிய
அறிவைத் தவற விடுகிறோம்.

வரிசையாக படிக்காமல்
தாவித் தாவிப் படித்து,
முழுமையான அறிவைப் பெறாமல் இருக்கும்
இத்தகைய குறை மதி கொண்டோர்
வேலை பெற்று வேலை செய்தால்
வேலை எப்படி சிறப்பாக இருக்கும்,
அரை குறையாத் தான் இருக்கும்.

ஒரு வருட படிப்பை
இரண்டு வருடங்கள் படிப்பது,
முறையற்ற செயல்

இதைத் தான்
குறுக்கு வழியின் மூலம் செல்வது என்பார்கள்.

ஒரு வருட பாடத்தை
ஒரு வருடம் படிப்பது நேர்வழி ;
ஒரு வருட பாடத்தை
இரண்டு ஆண்டுகள் படிப்பது குறுக்கு வழி ;

ஒரு வருட பாடத்தை
ஒரு வருடம் படித்து தேர்ச்சி பெறுபவர்கள்
உண்மையான உழைப்பாளிகள்,
திறமைசாலிகள்
அவர்கள் பயன்படுத்துவது நேர்வழி.

ஒரு வருட பாடத்தை
இரண்டு வருடங்கள்
படித்து தேர்ச்சி பெறுவது
என்பது
திறமையற்றவர்கள் ;
உழைத்து முன்னேற வேண்டும்
என்ற சிந்தனை இல்லாதவர்கள் ;
பயன்படுத்துவது குறுக்கு வழி .
பத்தாம் வகுப்பு பாடத்தை
ஒன்பதாம் வகுப்பிலேயே
சில பள்ளிகளில் எடுப்பது  எதற்கு?

ஒன்பதாம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும்
பத்தாம் வகுப்பு பாடத்தை பத்தாம் வகுப்பிலும்
ஆகிய இரண்டு வருடங்கள் எடுக்கலாமே ?
இரண்டு வருட பாடத்தை,
இரண்டு வருடங்கள் எடுக்கவில்லை எனில்,
எதற்கு ஒன்பதாம் வகுப்பு,
ஒன்பதாம் வகுப்பை எடுத்து விடலாமே
அதைப்போல,
பன்னிரண்டாம் வகுப்பை
பதினொன்றாம் வகுப்பிலேயே
சில பள்ளிகளில் பாடம் எடுப்பதற்கு
எதற்கு பதினொன்றாம் வகுப்பு
எடுத்து விடலாமே
பதினொன்றாம் வகுப்பை
என்கின்றனர் சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

சமுதாயத்தில் உள்ள
மற்றொரு பிரிவினர்
சமுதாயத்தில் நிலவும்
இத்தகைய
இரு வேறுபட்ட நிலைகளை ,
இரு மாறுபட்ட நிலைகளை ,
உணர்ந்து சிலர்
இத்தகைய தவறான நிலையை,
கல்வியில் காணப்படும் இத்தகைய
தவறான போக்கை கண்டு வேதனையுறும் சிலர்
நேர்வழி, குறுக்கு வழி என்று
இரு வேறுபட்ட நிலைகள் கல்வியில் இருக்கின்றது
என்று மனம் வேதனையுறுகின்றனர்.

ஒரு வருடம் படித்து மதிப்பெண்
பெறுபவர்களுடன்
இரண்டு வருடம் படித்து
மதிப்பெண் பெறுபவர்களை
ஒப்பீடு செய்வது என்பது தவறான செயல்.

ஒரு வகுப்பு பாடத்தை
ஒரு வருடம் படிப்பவர்கள் ;
ஒரு வகுப்பு பாடத்தை
இரண்டு வருடம் படிப்பவர்கள் ;
என்று இரு நிலைகளை
சமுதாயத்தில் உருவாக்கி வைத்து விட்டனர்.

ஒரு வகுப்பு பாடத்தை
இரண்டு வருடங்கள் படித்து ,
மதிப்பெண் பெற்று ,
உயர்நிலை அடைபவர்களை பார்க்கும்
ஒரு வகுப்பு பாடத்தை
ஒரு வருடம் படிப்பவர்கள்,
குறுக்கு வழியில் சென்றால் தான்
வாழ்வில் உயர்நிலை அடைய முடியும் என்ற
தவறான எண்ணம் கொண்டு
நேர் வழியில் செல்லாமல்
குறுக்கு வழியில் சென்று
ஒரு வருட பாடத்தை
இரண்டு வருடங்கள் படிக்கின்றனர்.

ஒரு வருட வகுப்பு பாடத்தை
இரண்டு வருடங்கள் படித்து
தேர்ச்சி பெறுவது என்பது
திறமையற்றவர்கள் செய்யும் செயலல்லவா
குறுக்கு வழியில் செல்பவர்களின்
செயல் அல்லவா
என்கின்றனர்
மனம் வேதனையுறும் சில உண்மையான
சமூக ஆர்வலர்கள்.

சமுதாயத்தில் இப்படி
இரு மாறுபட்ட நிலைகள்
இருக்கும் போது
கல்வி எப்படி உயர்நிலை அடைந்திருக்கிறது
என்று சொல்ல முடியும் ;
தாழ்ந்து போய் தானே இருக்கிறது என்று
தான் சொல்ல முடியும் ;
தாழந்து போய் தானே இருக்கிறது
என்கின்றனர்
சமுதாயத்தில் ஒரு பிரிவினர்.

குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு
குறுக்கு வழியில் செல்ல
வழிகாட்டுபவர்கள் இருக்கும் போது,
குறுக்கு வழியில்
செல்பவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கத்தானே செய்யும்
என்கின்றனர் உண்மையை உணர்ந்திருப்பவர்கள்.

எனவே,
கல்வியில் இரு மாறுபட்ட நிலைகளாக
நேர்வழி, குறுக்கு வழி
என்ற இரண்டு நிலைகள்
இருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சமுதாயத்தில் எந்தத் துறையை எடுத்தாலும்
இந்த இரண்டு நிலைகளும்
எல்லா நிலைகளிலும்
எல்லாத் துறைகளிலும்
பயன் படுத்தப்பட்டு வருகிறது
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இரண்டு மாறுபட்ட நிலைகள்
எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும்
தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு
வந்து கொண்டு தான் இருக்கும்.

இரண்டு மாறுபட்ட நிலைகளை
மாற்ற முடியாது
இரண்டுவழிகளில் ஒரு வழி
மட்டும் இருக்கும்
மற்ற வழி இருக்காது
என்று சொல்ல முடியாது.

இரண்டு மாறுபட்ட நிலைகள் என்பது,
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி
என்றும் இரு மாறுபட்ட நிலைகள்
இருந்து கொண்டு தான் இருக்கும்.
நேர்வழி, குறுக்கு வழி என்ற இருவழிகள்
எல்லா நிலைகளிலும்,
எல்லா தொழில்களிலும்,
எல்லா செயல்களிலும்,
தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு
வந்து கொண்டு தான் இருக்கும்.

சில வெட்ட வெளிச்சமாக தெரியும்;
சில வெட்டவெளிச்சமாக தெரியாது;

தெளிவாக தெரிந்து கொள்ள
வேண்டுமானால்.

சினிமாத் துறையை எடுத்துக் கொள்ளலாம்
சினிமாத் துறையில்
நேர்வழி, குறுக்கு வழி - ஆகிய
இரண்டு வழிகள் பயன் படுத்தப்பட்டு வருவதைக் காணலாம்

சினிமாத் துறையில்
இரண்டு வழிகளில் நுழையலாம்
அதனை இரண்டு வேறுபட்ட
பெயர்களில் அழைக்கலாம்
நேர்வழி, குறுக்கு வழி
என்று சொல்லலாம்.

யாருடைய உதவியும் இல்லாமல்,
யாருடைய ஆதரவும் இல்லாமல்,
யாருடைய சிபாரிசும் இல்லாமல்,
யாருடைய தயவும் இல்லாமல்,
யாருடைய அரவணைப்பும் இல்லாமல்,
யாருடைய பின்புலமும் இல்லாமல்,
யாருடைய வாரிசாகவும் இல்லாமல்,
யாருடைய தொடர்பும் இல்லாமல்,
சொந்தத் திறமையால் ,
சொந்த உழைப்பால்,
பல கம்பெனி ஏறி இறங்கி
பல ஆட்களைத் தேடிச் சென்று
ஆதரவு கேட்டு
வாய்ப்பு கேட்டு,
அசிங்கப்பட்டு,
அவமானப்பட்டு,
இருக்க இடம் இல்லாமல்
பசித்த வயிற்றுக்கு உணவில்லாமல்,
தாகத்திற்கு தண்ணீர் இல்லாமல்,
நாயாய் அலைந்து,
பேயாய்த் திரிந்து,
சொந்தத் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பு பெற்று,
அதனைப் பயன்படுத்தி
தன் உழைப்பால் முன்னேறி
உயர் நிலைகளை அடைந்து
வெற்றி பல பெற்று,
தடைகளைக் கடந்து
தருக்கர்களைக் களைந்து,
துரோகிகளை வேரறுத்து,
எதிரிகளைப் பந்தாடி,
வாலாட்டிகளை உதறித் தள்ளி,
கை பிடிப்போரையும்,
கால் பிடிப்போரையும்,
தள்ளி வைத்து
புகழ் பாடிகளை பக்கத்தில் வைக்காமல்
உதறித் தள்ளி,
நல்லவரையும், கெட்டவரையும்
பேதம் பிரித்து
அறிந்துகொள்ளும் திறமையை வளர்த்து,
உயர் நிலை அடைந்தவர்களை
நேர்வழியை தேர்ந்தேடுத்தவர்கள் என்று சொல்லலாம்.

சினிமாத் துறையில்
ஏற்கனவே
இருப்பவர்களுடைய ஆதரவைப் பெற்றோ
அவர்களுடைய தயவால் வாய்ப்பைப் பெற்றோ,
தந்தை - மகன்
என்ற உறவு முறையிலோ;
அண்ணன் - தம்பி
என்ற பாச முறையிலோ ;
மாமன் - மச்சான் என்ற
சொந்த முறையிலோ ;
உறவுக்காரர் என்ற முறையிலோ ;

வாய்ப்பு பெற்று
எந்தவித தொந்தரவும் இல்லாமல்,
எந்தவித இழப்பும் இல்லாமல்,
எந்தவித துயரமும் இல்லாமல்,
எந்தவித அவமானமும் இல்லாமல்,
எந்தவித தொந்தரவும் இல்லாமல்,
எந்தவித வருத்தமும் இல்லாமல்,
வாய்ப்பைப் பெற்று
அதன் மூலம் ஏற்கனவே உள்ள
அறிமுகமான நபர்களிடம் தானும் அறிமுகமாகி,
ஒன்றுக்குள் ஒன்றாகி,
உயர்ந்த நிலையில் இருக்கிறாரே அவருக்கு
வேண்டப்பட்டவர் இவர் என்ற
அடைமொழியுடன்
அவருக்கு தெரிந்தவர்  என்ற சிபாரிசுடன் இருப்பதால்,

பலருடைய தொல்லையும் இல்லாமல்,
பலருடைய இடையூறும் இல்லாமல்,
யாருடைய தொந்தரவும் இல்லாமல்,
மரியாதையுடன் நடத்தப்பட்டு,
சந்தோஷக் களிப்பில்;
மகிழ்வின் உச்சத்தில்;
மரியாதையின் சிம்மாசனத்தில்;
இன்பத்தின் எழிலில் நனைந்து
தொடர்ந்து பல தோல்விகளை
படம் கண்டாலும்,
அவருடைய வாரிசு
அவருக்கு இவர் தெரிந்தவர்
அவருடைய உறவினர் இவர் என்று,
அவருடைய சிபாரிசில் வந்தவர்
அவருடைய அதரவைப் பெற்றவர்
என்ற அடைமொழியுடன்
படங்கள்
பல தோல்விகள் கண்டாலும்,
ஊடகங்கள் பலவும்
வாரிசு என்று புகழ் பாடி,
துதி பாடி,
ஒன்றும் இல்லாததை இருப்பது போல் காட்டி,
அவரை உயர்நிலைக்கு
கொண்டு வர அரும்பாடுபட்டு
அவரை தள்ளி நகர்த்திக் கொண்டு வந்து,
திறமை இருப்பவர் ;
அறிவில் சிறந்தவர்;
உழைப்பால் உயர்ந்தவர்;
என்ற அடைமொழிகளை அளித்து
உயர்நிலைக்கு
கொண்டு வர முயற்சி செய்வதை
குறுக்கு வழியில் வருவது
என்று சொல்லலாம்.

நேர்வழியில் வந்தாலும்
குறுக்கு வழியில் வந்தாலும்
திறமை இல்லாமல் மேலே வர முடியாது.

திறமை இருந்தால் மட்டுமே
இரண்டு வழிகளில்
எந்தவழியில் வந்தாலும்
வெற்றி பெற முடியும்.

நேர்மையான வழி என்றுமே
உயர் நிலைக்குத் தான்கொண்டு செல்லும் ;
தாழ்நிலைக்கு கொண்டு செல்லாது ;

உயர்வானவர்களுடன் நட்பு கொண்டிருந்தால் மட்டுமே
உயர்வானவவைகளை சிந்திக்க முடியும் ;
தாழ்வான எண்ணம் கொண்ட
சிந்தனை வயப்பட்டவர்களிடம்
நட்பு கொண்டிருந்தால்
தாழ்வானவைகளையே சிந்திக்க முடியும் ;

இயேசு வேறொரு உவமையை
அவர்களுக்கு சொன்னார்
பரலோக ராஜ்யம் தனது நிலத்தில்
நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு
ஒப்பாயிருக்கிறது என்றார்.

வீட்டெஜமான் தன்னுடைய நிலத்தில்
கோதுமைகளை விதைத்திருந்தான்
கோதுமை வளர்ந்து நன்றாக
செடியான நிலையில்-அதில்
களைகளும் வளர்ந்து விட்டன.

இதனால் அவனுடைய வேலையாட்கள்
அவனிடத்தில் வந்து
கோதுமைகளுடன் களைகளும்
வளர்ந்து இருக்கின்றன
களைகளை நாங்கள்
பிடுங்கிப் போடவா என்றார்கள்.
வீட்டெஜமான் அதற்கு வேண்டாம் என்றார்
களைகளை பிடுங்கும் போது
கோதுமையையும் வேரோடு
பிடுங்க வேண்டி வரும்
கோதுமைக்கும் பாதிப்பு வரும்
கோதுமையை நன்றாக வளர விட்டு
பிறகு களைகளை பிடுங்க வேண்டும்.

கோதுமை வளராமல் களைகளை
பிடுங்கினால் கோதுமைக்கு பாதிப்பு ஏற்படும்.

கோதுமை வளரும் மட்டும்
காத்திருப்போம் என்றான் வீட்டெஜமான்.

கோதுமை நன்றாக வளர்ந்து
அறுப்புக்கு தயாரான நிலையில்
முதலாவது களைகளை பிடுங்கி
அவைகளைச் சுட்டெரித்து விட்டால்
கோதுமையை எந்தவித சேதாரமின்றி அறுக்க முடியும்.

அறுத்து என் களஞ்சியத்தில்
சேர்ப்பேன் என்று சொன்னான்.
கடவுள் எப்போதும்
மனிதனை நல்ல எண்ணங்களுடன் தான் படைக்கிறான்
ஆனால் அவன் இவ்வுலக வாழ்க்கையில் தான்
நலமாக வாழ வேண்டும் என்று
பல்வேறுபட்ட தகாத செயல்களைச் செய்து
பிறரை அழித்து,
பிறர் சந்தோஷங்களை அழித்து
பிறர் நலன்களை அழித்து,
பிறர் உறவுகளை அழித்து,
பிறர் முன்னேற்றங்களை அழித்து,
பிறர் வாழ்வை அழித்து,
தான் வாழ
தன் குடும்பம் வாழ
பல்வேறுபட்ட தகாத செயல்களைச் செய்து
பாவத்தில் மாட்டிக் கொள்கிறான்.

அதனால் அவனுடைய மனம்
இரண்டாக பிளவு பட்டு விட்டது.

நேர் வழி, குறுக்கு வழி
என்ற இரண்டு வழிகளை
தேர்ந்தெடுக்கிறான்.

உண்மையாக இருப்பவன்
நேர்வழியையும்
தவறான சிந்தனை உடையவன்
குறுக்கு வழியையும்
தேர்ந்தெடுக்கிறான்.

ஒருவனுடைய மனதில்
நல்ல எண்ணமும்
தவறான எண்ணமும் இருக்கும்.

அதனால்
அவன் நேர்வழியையும்
குறுக்கு வழியையும்
சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி
தேர்ந்தெடுக்க தள்ளப்படுகிறான்.

மனிதனில்
நல்ல எண்ணம் அதிகமாக இருந்து
கெட்ட எண்ணம் குறைவாக இருக்கும் போது
நேர்வழியையும்,

நல்ல எண்ணம் குறைவாக இருந்து
கெட்டஎண்ணம் அதிகமாக இருந்தால்
குறுக்கு வழியையும் தேர்ந்தெடுக்கிறான்.

பேராசை, சினம், கடும்பற்று,
முறையற்ற பால் கவர்ச்சி,
உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்
ஆகிய அறுகுணங்களை
அதிகமாக கொண்டவன்
கண்டிப்பாக குறுக்கு வழியைத் தான் தேர்ந்தெடுப்பான்.

இந்த அறுவகை குணங்களும்
இல்லாதவன் தான்
நேர்வழியைத் தேர்ந்தெடுப்பான்.

ஒவ்வொரு மனிதனுள்ளும்
நல்ல எண்ணமும்
கெட்ட எண்ணமும்
ஆகிய
இரண்டு எண்ணங்களும் கொண்டு இருப்பதால்
அவனுள் நேர் வழியும் இருக்கிறது ;
குறுக்கு வழியும் இருக்கிறது ;

எண்ணங்களின் மாற்றத்திற்கு ஏற்ப
எண்ணங்களின் தாழ்வுக் கேற்ப
எந்த எண்ணம் உயர்வாக இருக்கிறதோ
அந்த எண்ணத்திற்கேற்ப
நேர் வழியும்,
குறுக்கு வழியும்
மாறுபடுகிறது.

நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை
அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது.

ஒன்றை எடுக்க வேண்டுமானால்
அதை முற்றிலுமாக அழிக்க வேண்டும்
அல்லது
அதை எரித்து விட வேண்டும்
எரித்துவிட்டால்
எந்த ஒன்றும் மீண்டும் வளராது
வேரோடும் வேரடி
மண்ணோடும் அழிக்க வேண்டும்.


நல்ல எண்ணங்களை
பெருக்கிக் கொண்டே வந்தோமேயானால்
தீய எண்ணங்கள்
குறைந்துகொண்டே வரும்.

நல்லது வளர வளர
கெட்டது குறைந்து கொண்டே வரும்.
நல்லவற்றை வளரவிட, வளரவிட
கெட்டது குறைந்துகொண்டே வரும்.
குறைந்த கெட்ட எண்ணங்களை அழிப்பது எளிது.

நல்ல எண்ணங்களுடன் கலந்திருக்கும்
கெட்ட எண்ணங்களை அழிக்க
நாம் முற்படுவோமேயாகில்
கெட்ட எண்ணங்கள் மேலும்
மேலும் பலம் பெறும்.
பலம் பெற்ற கெட்ட எண்ணங்களை
அழிப்பது கடினம்

கெட்ட எண்ணங்கள் மேலும் வளர வளர-அது
நல்ல எண்ணங்களை அழித்து விடும்.

கெட்ட எண்ணங்கள்
நல்ல எண்ணங்களை
அழித்து விடும்.
எனவே,
நல்ல எண்ணங்களை வளர விட்டோமேயானால்,
நல்ல எண்ணங்களை அதிகப்படுத்தினோமேயாகில்,
நல்ல எண்ணங்களை பெருக விட்டோமேயாகில்,
கெட்ட எண்ணங்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.

நல்ல எண்ணங்கள் அதிகரித்தால் மட்டுமே
கெட்ட எண்ணங்கள் குறையும்.

கெட்ட எண்ணங்கள் அழிய வேண்டுமானால்
நல்ல எண்ணங்கள் வளர வேண்டும்.

அதனால் தான் இயேசு,
கெட்டவைகளை அழிக்க வேண்டுமானால்
நல்லவைகளை வளர்க்க வேண்டும் என்றார்.

நல்லவைகள் வளர்ந்து விட்டால்
கெட்டவைகளை

வேரோடும் வேரடி மண்ணோடும்
பிடுங்கி எரித்துவிடலாம் என்கிறார்
இயேசு

அதனால் தான்,
கோதுமையை வளர விடுங்கள்
கோதுமை வளரட்டும்
கோதுமை வளரட்டும்
கோதுமையை அறுக்கும் காலம் வரும் போது
முதலில் களைகளைப் பிடுங்கி
சுட்டெரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்.

பிறகு கோதுமையை எந்தவித
இடையூறும் இன்றி
எந்த வித சேதாரமுமின்றி பிடுங்கி
களஞ்சியத்தில் சேர்க்கலாம் என்கிறார்.

கெட்டதை அழிக்க வேண்டுமானால்
நல்லதை வளர விட வேண்டும்
நல்லது வளர்ந்தால் மட்டுமே
கெட்டதை அழிக்க முடியும்

நல்லது வளராமல்
கெட்டதை அழிக்க முடியாது என்கிறார்.

அப்பொழுது இயேசு
ஜனங்களை அனுப்பி விட்டு வீட்டுக்குப்போனார்.

அவருடைய சீஷர்கள்
அவரிடத்தில் வந்து
நிலத்தின் களைகளைப்
பற்றிய உவமையை
எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்
என்று கேட்டார்கள்.

ஆண்டவர்
இந்த உலகத்தில்
அனைவரையும் நல்லவர்களாகத்தான் படைக்கிறான்
ஆனால் சத்துரு அவர்கள் உள்ளத்தில்
தீயவைகளை விதைத்து
கெட்டவர்களாக்குகிறான்.
ஆண்டவரை உணர்ந்தவர்கள்
ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்கள்
சத்துருவின் செயல்களுக்கும்
அவனது ஆசைகளுக்கும்
இணங்காமல் இருப்பதால்
உண்மையாக இருக்கிறார்கள்
அதனால்,
நல்லவனாக இருக்கிறார்கள்.

நல்லவர்கள் கோதுமைகள் ;
கெட்டவர்கள் களைகள் ;
இந்த உலகம் நிலம்.

கெட்டவர்கள் அழிய வேண்டுமானால்
நல்லவர்கள் அதிக அளவில்
வளர வேண்டும்
நல்லவர்கள் அதிக அளவில்
உருவாக வேண்டும்
அப்படி உருவாகவில்லை என்றால்
கெட்டவர்கள் அட்டூழியம் தான் அதிகரிக்கும்
கெட்டவர்களின் செயல்கள் தான் அதிகரிக்கும்

கெட்டவர்களை அழிப்பதன் மூலம்
கெட்டவர்களின் பலம்தான் கூடும்
எனவே,
ஆண்டவரை உணர்ந்து
ஆண்டவரை ஏற்றுக் கொள்வதன் மூலம்
சாத்தானின் பிடியிலிருந்து தப்பிக்கலாம்.
சாத்தானின் ஆசைக்கு
இணங்காமல் இருக்கலாம்
சாத்தான் காட்டிய பாதையில்
போகாமல் இருக்கலாம்.

இந்த உலகத்தில்
நல்லவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்க, அதிகரிக்க
கெட்டவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரை
ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை
அதிகரிக்க, அதிகரிக்க
சத்துருவின் பிடியில்
இருப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரின் ராஜ்யம் வரும்போது
நல்லவர்கள் வளம்பெறுவர்
கெட்டவர்கள் அழிந்து போவர்.

களைகளை எரித்து விட்டால் எப்படி
கோதுமைகளை களஞ்சியத்தில்
சேர்க்க முடியுமோ?

அதைப்போல,
மனுஷகுமாரன் தமது
தூதர்களை அனுப்பி
இடறல் செய்பவர்களையும்
அக்கிரமஞ் செய்கிறவர்களையும்
அநியாயம் பண்ணுகிறவர்களையும்,
சகலவிதமான இடறல்களை செய்கிறவர்களையும்,
அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்
அங்கே அழுகையும் கண்ணீரும் தான் இருக்கும்
அப்பொழுது நீதி மான்கள்
நல்லவர்கள்,
நல்ல எண்ணம் கொண்டவர்கள்,
நல்ல வழியைத் தேர்ந்தெடுப்பவர்கள்,
நேர்வழியைப் பின்பற்றுபவர்கள்,

பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போல
பிரகாசிப்பார்கள்.
இதனை அறிந்து கொள்ள
விரும்புபவன் அறிந்து
கொள்ளட்டும் என்றார்
இயேசு.

கெட்டவர்கள் அழிய வேண்டும் என்றால்
நல்லவர்கள் எண்ணிக்கை வளர வேண்டும்
நல்லவர்கள் உருவாக வேண்டுமென்றால்
ஆண்டவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆண்டவரை
ஏற்றுக் கொள்ளப்படுபவர்களால் மட்டுமே
நல்லவர்களாக முடியும்
என்றும்
ஆண்டவரால்
ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் மட்டுமே
நல்லவர்களாக
இருக்க முடியும் என்றும் விளக்குகிறார்
இயேசு.



சிவவாக்கியர்
“”””””காலைமாலை நீரிலே முழுகுமந்த மூடர்காள்
    காலைமாலை நீரிலே கிடந்ததேரை யென்பெறும்
    காலமே யெழுந்நீருந்து கண்கள் மூன்றி லொன்றினால்
    மூலமே நினைந்திராகில் முத்தசித்தி யாகுமே””””””””

---------சிவவாக்கியர்-பெரிய ஞானக் கோவை

புதுமை என்ற சொல்லை
நாம் பல்வேறு காரணங்களுக்காக
பயன் படுத்தி வருகிறோம்
புதுமை என்ற சொல்லை
நாம் புரட்சியின் பிரதிபலிப்பாகப் பார்க்கிறோம்.

ஏதோ ஒன்று சாதிக்கப்பட்டு
விட்டதாக நினைத்து கொண்டாடுகிறோம்
மாறுபட்ட ஒரு நிகழ்வு ;
காணாத ஒரு நிகழ்வு ;
அறியாத ஒரு நிகழ்வு ;
பாராத ஒரு நிகழ்வு ;
நடந்ததாக நினைத்து புதுமையைக் கொண்டாடுகிறோம்
புரட்சியைப் படைத்து படைத்து விட்டதாக
பெருமை கொள்கிறோம்

புதுமை என்றால்
என்ன என்று தெரியாதவர்கள் ;
சரியாக அறியாதவர்கள் ;
உண்மையின் உண்மை நிலை உணராதவர்கள் ;
சிந்தனைவாதிகள் என்று தங்களை தாங்களே
சொல்லிக் கொள்பவர்கள் ;
பகுத்தறிவாதிகள் என்று
தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் ;
விஞ்ஞானத்தின் தலை சிறந்த அறிவாளிகள் - என்று
தங்களை வெளிப்படுத்திக் கொள்பவர்கள் ;
சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும்
சமூக சீர்திருத்தவாதிகள் என்று தங்களை
பெருமைப் படுத்திக்கொள்பவர்கள்;
என்று
பல்வேறு நிலையில் உள்ளவர்கள்
பல்வேறு தன்மைகளைக் கொண்டவர்கள்
புதுமையை தாங்கள் தான்
கண்டு பிடித்ததாகவும்

புதுமை என்ற சொல்லே தாங்கள் தான்
அடித்தளம் இட்டது போலவும்
புதுமையை படைப்பதின் மூலம்
நாகரிகம் வளர்ச்சி அடையும் என்றும்
புதிய உலகை படைக்க முடியும் என்றும்
இன்றைய உலகிற்கு அனைத்து துறைகளிலும்
புதுமை தேவை என்றும்
புதுமையைப் பற்றி புகழும் அதே நேரத்தில்
பழமையை இகழ்கின்றனர்.

புதுமையின் மகத்துவம் பற்றி
புரியாமல் பிதற்றுகின்றனர் ;

பழமையை எள்ளி நகையாடுகின்றனர் ;
பழமையினுள் உள்ளே மறைந்திருக்கும் உண்மையை
உணராமல் பிதற்றுகின்றனர் ;

பழமையின் மகத்துவம் புரியாமல் ,
பழமையின் மறைபொருள் தெரியாமல் ,
பழமையின் உண்மைத் தன்மை விளங்காமல்
பழமையை மூட நம்பிக்கையில்
குறியீடாகப் பார்க்கின்றனர்.

பழமையைப் புரிந்துகொள்ளாதவர்களின்
தேவையற்ற வார்த்தைகளால்
பழமையின் மகத்துவம் சமுதாயத்திற்கு புரியாமல் போகிறது.

பழமையை எதிர்ப்பதன் மூலம் தங்களை
புதுமையின் நாயகர்களாகவும்
சமூக சீர்திருத்தத்தின் தந்தையாகவும்
பழமையை எதிர்க்கும் தன்மானச் சிங்கமாகவும்
மூட நம்பிக்கையை எதிர்க்க வந்த
முழு முதற் அறிவாளியாகவும்
தங்களை இந்த சமுதாயத்தில் காட்டிக் கொள்ளவும்
தங்களை முன்னிலைப் படுத்தி
ஆதாயம் தேடிக் கொள்ளவும்
முயற்சி செய்துவருகின்றனர்.

பழமையின் உண்மை உரு தெரியாமல்
பழமையை இகழ்கின்றனர்.

புதுமை என்ற சொல் எதைக் குறிக்கிறது
எந்த விளக்கத்தைக் குறிக்கிறது

எந்த பொருளை விளக்க வருகிறது என்று
யாருக்கும் தெரிவதில்லை.

புதுமை என்ற சொல்லை நாம்
பழமையின் மாறுபாடு என்று சொல்லலாம்;
பழமையின் முன்னேற்றம் என்று சொல்லலாம்;

பழமையிலிருந்து புதுமை பிறக்க முடியும்
பழமை தனித்து இயங்க முடியும்
புதுமை தனித்து இயங்க முடியாது
பழமையின் வளர்ச்சியியே புதுமை.

புதுமை என்ற ஒன்று தனியாக இல்லை
பழமையின் வெளிப்பாடே புதுமை
பழமை என்பது கடல் என்றால்
புதுமை என்பது அலை
கடல் இல்லை என்றால் அலை இல்லை.

கடல் என்பது பழமை ;
அலை என்பது புதுமை ;


பழமையிலிருந்து புதுமை பிறக்கிறது
நேற்றைய புதுமை ; இன்றைய பழமை
இன்றைய புதுமை ; நாளைய பழமை
பழமைக்கும் புதுமைக்கும் உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
பழமைக்கும், புதுமைக்கும் உள்ள வேறுபாட்டையும்
பழமையில் உள்ள உண்மைகளையும்
புதுமையில் உள்ள வேறுபாடுகளையும்
உணர்ந்து கொள்பவர்களால் மட்டுமே
பழமையின் பெருமையினை
உணர முடியும்

பழமை புதுமை இரண்டும்
இரண்டு வேறுபட்ட காலநிலைகளைத் தன்னுள் கொண்டது.

மாறுபட்ட இரண்டு காலங்களில் நடக்கும்
இரண்டு வேறுவிதமாக மாறுபட்ட நிகழ்வுகள்
பழமை, புதுமை என்ற
இரு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது.

காலங்கள் பற்றி தெரிந்தவர்கள்
காலத்தைப் பற்றி உணர்ந்தவர்களால் மட்டுமே
பழமைக்கும், புதுமைக்கும்
உள்ள வேறுபாட்டை  உணர முடியும்.

காலத்தை புரிந்து கொள்வதற்காக
காலத்தை மூன்று பிரிவுகளாக
பிரித்து வைத்துள்ளனர்
நம் முன்னோர்கள் ;
காலத்தை
இறந்த காலம் என்றும்,
நிகழ் காலம் என்றும்,
எதிர்காலம் என்றும்
மூன்று நிலைகளில் பிரித்து வைத்துள்ளனர்.

நடந்து முடிந்தவைகளை
இறந்த காலம் என்றும்
நடந்து கொண்டிருப்பவைகளை
நிகழ்காலம் என்றும்
நடக்க இருப்பவைகளை
எதிர்காலம் என்றும்
ஒன்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக
மூன்று நிலைகளில்
மூன்று காலங்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர்
பழமையை இறந்த காலத்துடனும்
புதுமையை நிகழ்காலத்துடனும்
எதிர்காலத்துடனும் தொடர்பு படுத்தி வைத்திருந்தனர்

பழமையை இறந்த காலத்துடனும்
புதுமையை நிகழ் காலத்துடனும்
தொடர்பு படுத்தி வைத்திருக்கின்றனர்

மூன்றாக இருந்த காலம்
பழமை புதுமை என்ற நிலைகளில்
பழமை மற்றும் புதுமையை
இறந்த காலம்  என்றும்
நிகழ்காலம் என்றும்
என்ற இரண்டு காலங்களாக
பிரித்துவைத்திருக்கின்றனர்

மூன்று காலமாக இருந்தது
இரண்டு காலமாக மாறி விட்டது.

மூன்று காலமாக இருந்தது
இரண்டு காலமாக பழமைக்கும், புதுமைக்கும்
உதாரணமாக மாற்றி வைத்துவிட்டனர்
காலங்களை தாங்கள் புரிந்து கொள்வதற்காகவும்;
ஒரு நிகழ்வை வேறு
ஒரு நிகழ்வுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதற்கும்;
ஒரு நிகழ்வுக்கும், மற்றொரு நிகழ்வுக்கும்
உள்ள வேறுபாட்டை
உணர்ந்து கொள்வதற்கும்
காலம் என்பது
பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்றை புரிந்துகொள்வதற்காக காலத்தை
மூன்றாக பிரித்த நாம்
பழமை, புதுமை என்று வரும்போது
இரண்டாக பிரித்திருக்கும் நாம்
நாம் காலம் என்பது மாறாதது
என்பதை உணர்ந்து கொள்ளும் போது
அறிவு விளக்கம் பெறுகிறது.

காலத்தைப் பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டுமானால்
ஒரு உதாரணத்தை நாம்
புரிந்துகொள்ள வேண்டியது
அவசியமாகும்.
நாம் ஓடும் ஒரு ஆற்றின் முன் நிற்கிறோம்
நம் வலது புறத்தில் இருந்து தண்ணீரானது
நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது
அதை எதிர்காலம் என்றும்,
நம் முன் அந்த ஆற்றின் தண்ணீர் வரும் போது
நிகழ் காலம் என்றும்,
ஆற்றின் தண்ணீரானது நம்மைக் கடந்து
நமக்கு இடது புறமாக செல்லும் போது
இறந்த காலம் என்றும்
மூன்று நிலைகளாக ஆற்றைப் பிரித்து
மூன்று காலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

ஆறு ஒன்று தான்
தண்ணீர் அது இயங்கும் விதத்தைப் பொறுத்து
ஆற்றின் தண்ணீரை மூன்று காலங்களுடன்
இணைத்து ஒப்பிடுகிறோம்.

இதே நாம் சற்று வலது புறம் நின்றால் காலம் மாறும்
ஆறும் ஒன்று தான்
தண்ணீரும் ஒன்று தான்
ஆறில் ஓடும் தண்ணீரும் ஒன்று தான்
அது இயக்கத்தைப் பொறுத்தும்
நகரும் இடங்களை
வேறுபாட்டை பொறுத்தும்
காலமானது மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இன்னும் நன்றாக ஆற்றை உற்று நோக்கினால்
காலம் இரண்டு மட்டுமே இருப்பதை உணராலாம்
இறந்த காலம்
எதிர் காலம்
இருப்பதை உணரலாம்

நம் வலது புறத்தில் உள்ள
ஆற்றின் தண்ணீர் எதிர் காலம்
என்றும்
இடது பக்க ஆற்றின் ஓட்டத்தை
இறந்த காலம் என்றும் கூறலாம்.

நம் முன் நிற்கும் ஆற்றின் ஓட்டம்
நிகழ்காலம் இல்லை.
நிகழ்காலம் அங்கு இல்லை
எதிர்காலம் இறந்தகாலமாக
மாறுபாடு அடைகிறது.

எதிர்காலம் நிகழ்காலமாக மாறாமல்
எதிர்காலம் நேரடியாக இறந்த காலமாக மாற்றமடைகிறது

நிகழ்காலம் ஒன்று இருக்கும் போது
எதிர்காலம் , இறந்த காலம்
என்ற காலங்கள் இருப்பதில்லை ;
இறந்த காலம், எதிர் காலம் இருக்கும் போது
நிகழ் காலம் இருப்பதில்லை ;
நிகழ்காலத்தில் இருப்பவனால் மட்டுமே
காலத்தை உணர முடியும்.

காலத்தை உணர வேண்டுமானால்
நிகழ்காலத்தில் இருக்க வேண்டும் ;
நிகழ் காலத்தில் இருப்பவனால் மட்டுமே
காலத்தை உணர முடியும் ;

காலத்தை உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால்,
பழமைக்கும், புதுமைக்கும்
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
கொள்ள வேண்டுமென்றால் ,
சில உதாரணங்களை
நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
பழமையை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால்
சினிமாவில் உள்ள இருந்த மூன்று தமிழ் பிரம்மாக்களை
நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தமிழர்கள் தமிழை இயல், இசை, நாடகம்
என்று மூன்று பிரிவுகளாக பிரித்துவைத்திருக்கின்றனர்
இயல், இசை, நாடகம் இந்தமூன்றின் மூலம்
இறைவனை அடையலாம் என்பதை உணர்ந்தே
நம் முன்னோர்கள்
தமிழை மூன்றாகப் பிரித்து வைத்துள்ளனர்.

இதனை இப்படியும் சொல்லலாம்
இயல், இசை, நாடகம்என்ற முத்தமிழை
தூல உடல், சூக்கும உடல், காரண உடல்
என்ற மூன்றுடன் தொடர்பு ஏற்படுத்தலாம்.

இயல் மூலம் தூல உடலை தொடலாம் ;
இசை மூலம் சூக்கும உடலை உயிரை தொடலாம் ;
நாடகம் மூலம் காரண உடலை இறைவனை தொடலாம் ;

முத்தமிழ் மூன்று உடலுடன் தொடர்புடையது
முத்தமிழ் மூலம் இறைவனை அடையலாம்
என்பதை
உணர்ந்தே தமிழர்கள்
தமிழை மூன்று தமிழாக பிரித்து வைத்துள்ளனர்.

இயலுக்கு கவியரசர் கண்ணதாசனை சொல்லாம்
இந்த உலகத்திலேயே கண்ணதாசனைப் போல
ஒரு கவிஞன் பிறந்ததும் இல்லை ;
இனி பிறக்கப் போவதும் இல்லை;
கண்ணதாசனுக்கு ஒப்பாரும் இல்லை ;
கண்ணதாசனுக்கு மிக்காரும் இல்லை ;
கண்ணதாசனுக்கு இணையான கவிஞர்
இந்த  உலகத்திலேயே இல்லை ;
வாழ்வின் நெறிமுறைகளை கோட்பாடுகளை
கொள்கைகளை
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்
எளிமையான பாடல்களில் தந்தவர்.

இலக்கியங்களிலும்,
சித்தர் பாடல்களிலும்,
இதிகாசங்களிலும்,
புராணங்களிலும்,
வேதங்களிலும்,
சாஸ்திரங்களிலும்,
இருந்த உண்மைப் பொருள்களை தத்துவங்களை
பாமரனும், உழைத்து பாடுபடும்
ஏழைத் தோழனும்
புரிந்துகொள்ளும் வகையில்
மனம் தெளிவு பெறும் வகையில்
அறிவு விளக்கம் பெறும் வகையில்
கடினமான வார்த்தைகளை
எளிமையான வார்த்தைகளாக்கி
இந்த சமுதாயத்திற்கு தந்தவர்.

இன்றும் அவருடைய பாடல் பாதிப்பு இல்லாமல்
யாரும் பாடல் எழுதுவதில்லை.

தத்துவப் பாடல்கள் என்றால்
கண்ணதாசன் பாடல் என்று தான் இருக்கிறது
வேறு எந்த கவிஞர் பெயரும் இல்லை.
இன்று உள்ளவர்கள் அனைவரும்
தங்கள் பெயரின் முன்னால்
பட்டங்களை  சூட்டிக் கொள்கிறார்களே தவிர
பட்டங்களை சூட்டிக் கொள்ள விருப்பப்
படுகிறார்களே ஒழிய
பாடல்களை தரமாக தரவேண்டும் என்று யாரும்
விரும்புவதில்லை.

தாங்கள் இயற்றிய பாடல்களில் உள்ள கருத்துக்களை
தாங்களே எழுதியது போலவும்,
தத்துவம் நிறைந்த
பாடல்களை எழுதியதாகவும்,
தங்களை தாங்களே
பெருமையாக கூறிக்கொள்ளும் நிலையிலும்,
தாங்களே தங்கள் பாடலுக்கு
விளக்கம் சொல்லும் நிலையில் இருக்கின்றனர்.

கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு
இந்த உலகம் புரிந்து கொண்டு விளக்கம் கொடுத்தது
அன்று
ஆனால் இன்றோ
கவிஞர்கள் எழுதும் பாடல்களுக்கு
கவிஞர்களே விளக்கம் கொடுக்கின்றனர்
மக்களுக்கு கவிதை புரியாத காரணத்தினால்
அந்த அளவிற்கு இன்று கவிதையில்
தரம் தாழ்ந்து போய் இருக்கிறது.

இன்றைய கவிஞர்கள்  புரியாத வார்த்தையை
எழுதுவதன் மூலம்
தங்களை தாங்களே சிறந்த கவிஞர் என்று
நினைத்துக் கொள்கின்றனர்.

புதுமை என்ற பெயரில் பெருமையடித்துக் கொள்கின்றனர்.
பழமையின் மகத்துவம் தெரியாமல்
புதுமை என்ற பெயரில் பெருமையடித்துக்
கொள்கின்றனர்.

இயல் இறைவனை
அடையக்கூடிய வழிகளைக் காட்டுகிறது.
இறைவனை எப்படி அடையலாம் என்ற
வழிமுறைகளைக் கூறுகிறது
அதாவது எந்த இயல் தூல உடலைத் தொடுகிறதோ
அதுவே உண்மையான இயல்.

இறைவா நிலையையுடைய கவிதை மட்டுமே
தூல உடலைத் தொட முடியும் ;
இறக்கக் கூடிய கவிதைகள்
தூல உடலைத் தொட முடியாது ;

கண்ணதாசன் கவிதைகள்
இறவா நிலையை உடையவை ;
இறைத் தன்மையை தன்னுள் கொண்டவை ;
தெய்வீகத் தன்மையை தன்னுள் பெற்று இருப்பவை ;

கண்ணதாசன் பாடல்களை
நாம் கேட்டோமேயானால்
நாம் படித்தோமேயானால்
அந்த கவிதை
நம் உணர்வுகளை ஆட்டுவிப்பதை உணரலாம்.
சிந்தனையை தட்டுவதைத் தெரிந்து கொள்ளலாம்
மற்றவர்களுடைய எந்த கவிதையும்
நம்முடைய ஒவ்வொரு அணுவையும்
துளைத்துச் செல்வதை உணர முடியாது.

கண்ணதாசன் கவிதைகள்
தூல உடல் வரை செல்லும்
தெய்வீகத்தன்மையை திறந்து காட்டும்,
கடவுளைஅடையும் வழியைச் சொல்லும்.

தூல உடலிலிருந்து
சூக்கும உடல் செல்ல இசையை நாட வேண்டும்
அதற்கு
இசைக்கடவுள் இளையராஜா இசையைச் சொல்லலாம்

இசை என்பது உயிரின் ஆழம் வரை
செல்ல வேண்டும்

இசை என்பது
உயிரின் மூலத்தை அறிய உதவும்
திறவு கோலாக இருக்க வேண்டும் ;
இசை என்பது
உடலை ஆட்டுவிக்கும்
உடலை அதிரவைக்கும்
வேட்டுச் சத்தமாக இருக்கக் கூடாது ;

இன்று இசை என்ற பெயரில்
சத்தங்கள் தான் எழுப்பப்படுகிறது
உயிர்த் தன்மை இல்லை

இசை என்றால் என்ன என்று தெரியாதவர்களும்,
இசை என்றால் என்ற என்று புரியாதவர்களும்,
இசையமைப்பதால் தான் இசையின்
உயிர்த்தன்மை கெட்டுவிட்டது
உயிர்த்தன்மையுடன்
இருக்க வேண்டிய இசை
இன்று உயிரற்ற தன்மையுடன் இருக்கின்றது.

நான் இந்த இசையை
இப்படி அமைத்தேன்
இந்த இசையை அப்படி அமைத்தேன்
என்று தங்களைத் தாங்களே
பாராட்டிக் கொள்ளும்
நிலை தான் இருக்கிறது

இளையராஜாவின் இசையில்
உயிர்த்தன்மை இருக்கும்
பாடலுக்கு நடுவே வரும் இசை கூட
பாடலாக உயிர்த்தன்மை கொண்ட
பாடலாக இருக்கும்.

இளையராஜாவின் இசையைக் கேட்கும் போது
மனதில் ஒரு அமைதி நிலை தவழும்.

தூல உடலைக் கடந்து
சூட்சும உடலைப் போய்  தொடர்பு கொள்ளும்.
தூல உடலைத் துளைத்து
சூட்சும உடலுடன்
தொடர்பு கொள்வது என்பது தவத்தினால் சாத்தியம்

ஆனால், இளையராஜாவின் இசை
தூல உடலைக் கடக்கும்
சூட்சும உடலுடன் தொடர்பு கொள்ளும்

உயிருள்ள இசை என்றால்
அது உயிர் வரை செல்ல வேண்டும்
இளையராஜாவின் இசை உயிர் வரை செல்லும்
உயிர்த்தன்மை உள்ள இசை.

இளையராஜாவின் இசையை
அமைதியான நிலையில்
ஆள் அரமற்ற சூழலில் மனது குழப்பமில்லாமல்
தெளிவாக இருக்கும் போது கேட்டால்,
நமக்கும் பிரபஞ்சத்திற்கும்
ஒரு பிணைப்பு ஏற்பட்டு
பிரபஞ்ச சக்தி நம்முள்
இறங்குவதை உணரலாம்.

இயைராஜாவின் இசை
தெய்வீகத் தன்மையுடன்
இருப்பதற்குக் காரணம்
அந்த இசை தெய்வீகத்திலிருந்து
இறக்கப்பட்டதே காரணம் ஆகும்.

உயிர்வரை செல்ல காரணம்
உயிர்த் துடிப்புடன்
இருப்பதால் தான்.

தவத்தின் சில உயர்படி நிலைகளைக்கடக்க நாம்
இளையராஜாவின் இசையைப் பயன்படுத்தலாம்.

இசை கடவுளை அடையக்கூடிய
வழிகளைக் கண்டறிந்து அதன்வழி செல்லும்.

இயல் என்பது
கடவுளை அடையக்கூடிய
வழிகளைச் சொல்லும்
இசை என்பது
கடவுளை அடையக்கூடிய
வழிகளைக் கண்டறிந்து அதன் வழி செல்லும்.
இதற்கு ஒரு மிகப்பெரிய
தூண்டுகோலாகவும்,
வழிகாட்டியாகவும்
இளையராஜாவின் இசை இருப்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.

நாடகத்திற்கு
ஒரே ஒரு உதாரணம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே
நடிப்புக்கென்று தனி இலக்கணம் வகுத்தவர்
ஏற்ற கதாபாத்திரமாகவே மாறக் கூடியவர்
நவரசமும் அவரிடம் ததும்பி விளையாடும்,
அவர் போட்ட நடிப்பு என்ற ரோட்டின் மேல் தான்
அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

நடிப்புலகில் அவருக்கு
நான் தான் வாரிசு - என்று
பல பேர் சொல்லிக் கொண்டாலும்
பல பேர் சொல்வதில் பெருமை கொண்டாலும்
அன்றும், இன்றும், என்றும்
அவருக்கு இணையாக
நடிக்க நடிப்புலகில் யாரும் கிடையாது.
நடிப்புலகில் அவருக்கு வாரிசு என்று
யாரும் கிடையாது.
அவருக்கு நடிப்புலகில்
நான் தான் வாரிசு என்று
பலரும் தங்களை சொல்லிக் கொள்ளலாமே தவிர
யாரும் அவருக்கு நடிப்புலகில் வாரிசாக முடியாது.
வாரிசாகவும் முடியாது.

அவர் உடம்பில் உள்ள
ஒவ்வொரு அணுவும் நடிக்கும் ;
அவர் பேசும்  தமிழ் இனிக்கும் ;
தமிழ்ச் சொற்கள் அவர் வாயிலிருந்து வெடிக்கும் ;
அவர் சொல் கேட்டால் நம் மெய் சிலிர்க்கும் ;
பொன்னை நிகர்த்த உடலினன் ;
அரிமா ஒத்த நடையினன்;

அவர் நா அசைத்த போது தான்
தமிழ் நாட்டில் தமிழன்னையே
தூக்கத்திலிருநது விழித்துக் கொண்டார்.

அவருக்கு ஒத்த
அவர் நடிப்புக்கு ஒத்த
கதாபாத்திரங்கள் உருவாக்கப்படவில்லை
என்றே சொல்லலாம்.

கலைக்காக தன்னையே அர்ப்பணித்த தலைமகன்
தமிழ்த்தாயின் முதல்மகன்

இயல்
கடவுளை அடையக்கூடிய வழிகளைச் சொன்னால்
இசை
கடவுளை அடையக்கூடிய வழிகளைக்கடந்து
அதன் வழி சென்றால்
நாடகம்
கடவுகளாகவே மாறக்கூடிய நிலையை உருவாக்கும்.

இயல் தூல உடல் வரையும்,
இசை சூக்கும உடல் வரையும்,
நாடகம் காரண உடல் வரையும்
செல்லும்

இயலும், இசையும்
வெளியிலிருந்து உள்ளே வருபவை.

நாடகம் மட்டுமே உள்ளே இருப்பவை
அது அதுவாக மாறினால் அதுவே சொல்லும்
அது அதுவாக மாற வேண்டுமானால்
நாடகம் முக்கியம்

அதனால் தான் நடராஜர் நாட்டியமாடும்
கோலத்தில் இருப்பார்.
நாட்டியம் மட்டுமே நம்மை இறைவனுடன்
பிணைப்பை ஏற்படுத்தும்.

வெளியிலிருந்து ஒன்றைப் பெற்று
நாம் பெறும் விளைவை விட
நம்மை நாமே ஆட்டுவித்து
பெறப்படும் விளைவிற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

கவலையான நேரத்தில்
இயலும், இசையும் பயன்படுத்துவோமேயால் கவலை குறையாது
கவலை மறக்க முடியாது.

ஆனால்,
நாட்டியம் ஆடும் போது
அனைத்தும் மறந்து விடும்.
வெளியிலிருந்த வருவதற்கும்,
உள்ளே இருப்பதற்கும் இது தான்
வேறுபாடு.

வெளியிலிருந்து வருபவை
நம்மில் பாதிப்பை ஏற்படுத்தும்
மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஓர் அம்பை எடுத்து
பழத்தின்மேல் எய்தும்போது
அம்பானது பழத்தின் மேல் குத்தி நின்றால்
அதற்குப் பெயர் பாதிப்பு.

பழம் இரண்டாக உடைந்தால்
பல தூண்டுகளோகளே உடைந்தால்
அதற்குப் பெயர் மாற்றம்

இயலும், இசையும் பாதிப்பை ஏற்படுத்தும்
நாடகம் மாற்றத்தை ஏற்படுத்தும்

உள்ளிலிருந்து எழுபவை
மாற்றத்தை ஏற்படுத்தும்
வெளியிலிருந்து வருபவை
பாதிப்பை தாக்கத்தை ஏற்படுத்தும்.

மனக் கவலை ஏற்படும்போது
நமக்கு தெரிந்த நடனங்களை நாட்டியங்களை
ஆடிக் கொண்டே இருந்தால்
கால்கள் சோர்ந்து போகும் வரை
ஆடிக்கொண்டே இருந்தால்
மனம் அங்கு இயங்காமல்
இருப்பதால் நன்கு உணரலாம்.

மனம் இயங்காத நிலையில்
உயிர் தன் மூலத்தை உணர்ந்து
அதுவாகவே மாறும் நிலையினை உணரலாம்.

அது அதுவாக மாற வேண்டுமானால்
எதிலிருந்து வந்தோமோ
எதில் போய் சேரப் போகிறோமோ
அதுவாகவே மாற வேண்டுமானால்
உள்ளுக்குள் உள்ள அந்த
விதைகள் திறக்க வேண்டும்.

அனைவருக்கும் விதை
விதைக்கப்பட்டே இருக்கிறது.

ஒரு சிலர் மட்டுமே அந்த விதையை
கண் திறக்கச் செய்கின்றனர்.

நம்முள் உள்ள ஆன்மீக விதையை
நாம் திறக்க வேண்டும்
அல்லது
ஆன்மீக விதையை திறந்தவர்கள்
நம் விதையை திறக்கலாம்

உள்ளுக்குள் உள்ள விதை
கண் திறக்காமல் ஆன்மீகமே மலராது
உண்மையை உணர்ந்தவர்கள்
தாங்கள் உணர்ந்த உண்மையை
மறை பொருள்களாக எழுதி வைத்திருக்கின்றனர்.

உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது
போலப் பேசினாலும் ,
அதில் உண்மை என்பது இருப்பதில்லை.
உண்மை எது  பொய் எது என்று தெரியாமல்
உண்மையை உணராத போலிகள்
உண்மையை உணர்ந்தவர்கள்
போல் நடிப்பார்கள்.

நாம் அனைவரும் இந்த சமுதாயத்தில்
நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்
நடிப்பவர்கள் தான் இந்த சமுதாயத்தில் வாழ முடியும்
நடிக்கத் தெரியாதவர்கள் இந்த சமுதாயத்தில் வாழ முடியாது.

உண்மைக்கு இநத் சமுதாயத்தில் மதிப்பில்லை
போலிக்கு தான் முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.

உண்மையை உணர்ந்தவர்கள்
உண்மையை தாங்கள் உணர்ந்த
உண்மையை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை
அது தானாகவே மக்கள்உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால் உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது போல நடிப்பவர்கள்
தாங்கள் உண்மையை உணர்ந்தது போல்
வெளிக் காட்டிக் கொண்டாலும்
அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

உண்மைதான் நீண்ட நாட்கள் நிற்கும் ;
பொய் நீண்ட நாட்களுக்கு நிற்காது ;

உண்மையை உணர வேண்டுமானால்
உண்மையை உணர்ந்தவர்களை
பின்பற்ற வேண்டும் ;
உண்மையை உணராதவர்கள்
உண்மையை உணர்ந்தது போல்
நடிப்பவர்களை பின்பற்றினால்
உண்மையை உணராமல்
நாமும் உண்மையை
உணர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டு
உண்மையை உணர்ந்ததாக நினைத்துக்கொண்டு
இந்த உலகத்தில் அலைய வேண்டியது தான்

புதுமைக்கும், பழமைக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்ந்து கொள்ளவில்லை எனில்,
உண்மைக்கும், பொய்யுக்கும் உள்ள வேறுபாட்டை
உணர்ந்துகொள்ள வில்லை எனில்,

காலத்தில் உள்ள வேறுபாட்டை
உணர்ந்துகொள்ள வில்லை எனில்
நம்மைச் சுற்றி நடக்கும்
நிகழ்வுகளின் சூட்சுமத்தை
புரிந்து கொள்ள முடியாது.

நடந்து கொண்டிருப்பது
எதனால் என்றும்
நடக்க வைப்பவன் யார் என்றும்
அறிந்துகொள்ள வில்லை எனில்,
எதை அறிந்து கொள்ள வேண்டுமோ
அதை அறிந்துகொள்ளவில்லை எனில்,
எதை புரிந்து கொள்ள வேண்டுமோ
அதை புரிந்து கொள்ள வில்லை எனில்,
எதை சிந்தித்து தெரிந்து
கொள்ள வேண்டுமோ
அதை தெரிந்து கொள்ளவில்லை எனில்,
நாம் உண்மைகளை
உணரவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

இதனால் போலியானவர்கள்
பின்னால் செல்லக்கூடிய நிலை உருவாகி விடும்.
நாம் ஜெபம் செய்வதற்கு முன்பும்
நாம் பிரார்த்தனை செய்வதற்கு முன்பும்
காலையும் மாலையும் குளிக்கிறோம்
உடலைத் தூய்மைப் படுத்துகிறோம.

உடலைத் தூய்மைப்படுத்தித் தான்
ஜெபம், மந்திரம் செய்ய வேண்டும்
என்ற முறைகளை வகுத்து வைத்திருக்கிறோம்.

உடல் தூய்மை முக்கியம் என்ற
முக்கியமான  நிலையை  உருவாக்கி வைத்திருக்கிறோம்
அதன் மூலம்
நமக்கு செய்த தவத்தின் பயன் கிடைக்கும்
என்ற முறைகளை வகுத்து வைத்திருக்கிறோம்.

காலை, மாலை மட்டுமில்லாமல்
எப்போதும் நீரிலேயே கிடக்கும்
தேரையானது என்ன சக்தியைப் பெற்றது,
எந்த பலனைப் பெற்றது
ஒரு பயனும் இல்லையே.


உண்மையை உணர முயற்சி செய்தவர்கள்
தவறான நிலையை நோக்கி
சென்று கொண்டிருக்கிறார்கள்.

உண்மையை உணராதவர்கள்
சொல்லி வைத்தவைகள்
பின்னால் சென்றால்
உண்மையை உணரமுடியாமல்
தவிக்க வேண்டியது தான்.

இரண்டு கண்கள்
புற உலகைக் காட்டும் ;
மூன்றாவது கண் மட்டுமே
அக உலகை காட்டும் ;
அக உலகத்தில் பிரவேசிக்க வேண்டுமானால்
மூன்றாவது கண் திறக்கப்பட வேண்டும்.

மூன்றாவது கண் எங்கே இருக்கிறது
அதை எப்படி திறக்க வேண்டும்
அதை திறப்பதற்கான வழி வகை
என்ன என்பதை உணர்ந்து
மூன்றாவது கண்ணை திறக்க வேண்டும்.
மூன்றாவது கண் எங்கே இருக்கிறது
அதை திறக்கும் வழி என்ன
என்பதை அறிந்து,
அதை திறப்பவர்களால்
மட்டுமே முக்தி அடைய முடியும்.
மூன்றவாது கண்ணை திறக்காதவர்களுக்கு
முக்தி இல்லை.

இந்த மூன்றாவது கண்ணை
திறப்பதற்குத் தான்
ஆன்மீக உலகில்
பல்வேறு விதமான முறைகள்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவம், தியானம்,பிரார்த்தனை,
யோகா, பிராணாயாமம் - இன்னும் பல வழிகளில்
செய்யப்படும் முயற்சிகள் யாவும்
இந்த மூன்றாவது கண்ணை திறப்பதற்காகத் தான்.

நெற்றிக் கண்
மூன்றாவது கண் என்ற அழைக்கப்படும்  நெற்றிக்கண்

அதை திறந்து உயர்நிலை பெற்றவர்களால்
நம் மூன்றாவது கண்ணை திறக்க முடியும்
அதுபோல,
கர்ம வினைகள் கழிந்தால்
மூன்றாவது கண் திறக்கும்
அல்லது
மூன்றாவது கண் திறந்தால்
கர்ம வினைகள் கழியும்.

மூன்றாவது கண்ணை
திறந்தவர்கள் யார் என்று அறிந்து,
அவர்களை பின்பற்றினால் மட்டுமே
உண்மையை உணர முடியும்.

உண்மையை உணர்ந்தவர்கள்
யார் என்று அறிந்து
அவர்களை பின்பற்றினால்
மட்டுமே மட்டுமே உண்மையை உணரமுடியும்

உண்மையை உணராதவர்களை பின்பற்றினால்
உண்மையை
உணர முடியாமல்¢போய் விடும்.
எனவே,
உண்மையை உணர்ந்தவர்களைப் பின்பற்றி,
மூன்றாவது கண்ணைத் திறந்து
உண்மையை உணர்வதன் மூலமே
உண்மைக்கும், பொய்யுக்கும்
உள்ள வேறுபாட்டை
உணந்து கொள்ள முடியும்
என்கிறார் சிவவாக்கியர்

இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர்:

நல்ல எண்ணங்கள் வளர வளர
கெட்ட எண்ணங்கள் அழிந்து விடும்
எனவே
நல்லவர்களின் எண்ணிக்கை வளர வளரத் தான்
கெட்டவர்கள் அழிந்து விடுவர் என்கிறார்
இயேசு


அவ்வாறே,
சிவவாக்கியரும்
உண்மைகள் வளர வளர
போலிகள் அழியும்


எனவே
நல்லவைகளை செய்யும் நல்லவர்கள் வளர வளரத் தான்
கெட்டவைகளை செய்யும் கெட்டவர்கள் அழிய முடியும்
என்கிறார்.


“”””””போதித்த குருவின் பாதம் தெண்டனிட்டுப்
                   போற்றினேன் பதிவுஎழுத்தொன் றுந்தான் முற்றே”””””