September 24, 2017

இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(5)


இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(5)

  """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
       ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

அழுகுணிச் சித்தர்:

அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்பவர்களுக்கும்
அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்துப் பேசுபவர்களுக்கும் சிறிய
அளவில் தான் வேறுபாடு இருக்கிறது.

அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்பவர்கள்
தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு
வாழ்க்கையில் முன்னேறுவார்கள்;
தாங்கள் சார்ந்த தொழிலில்
உயர் நிலை அடைவார்கள்;
ஆனால் அறிவுரை சொன்னால் ஏற்றுக் கொள்ளாமல்
எதிர்த்துப் பேசுபவர்கள்
வாழ்க்கையில் முன்னேற முடியாமல்
தாங்கள் சார்ந்த துறையில்
எந்தத் துறையில் தாங்கள்
முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்களோ
அந்தத் துறையில் முன்னேற முடியாமல்,
தாழ்நிலை அடைவதோடு
இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள்
என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

யார் அறிவுரை சொன்னாலும்
சொல்பவரின் தகுதியைப் பார்க்காமல்
சொல்பவரின் அறிவுரையைப் பார்த்து
திருத்திக்  கொண்டால்
வாழ்க்கை இன்பமயமாக
ஒளி மயமாக இருக்கும் என்பதை
உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த உலகம் அனைத்தும் தோன்றுவதற்குக்
காரணமாக இருக்கக் கூடிய இறைவன்
இந்த உலகத்தை படைத்து, காத்து, அழித்து வருபவன்;
அனைத்திற்கும் மூலமாக இருப்பவன்;
ஆதிக்கும், அந்தத்திற்கும் காரணமாக இருப்பவன்;
முதலுக்கும், முடிவுக்கும் காரணமாக இருப்பவன்;
அத்தகைய இறைவன்
நம் உடலுக்குள் எங்கே இருக்கிறான் என்பதை
நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மூலப் பதியடியோ என்றால்
இந்த உலகம் மற்றும்
உலக உயிர்கள் அனைத்தும்
தோன்றுவதற்கு முழுமுதற் காரணமாக
இருப்பவன் என்று பொருள்.

மூவிரண்டு
மூன்று மற்றும் இரண்டு இரண்டையும்
கூட்டினால்
ஐந்து
ஐந்து என்பது
ஐம்புலன்களைக் குறிக்கும்
ஐம்புலன்கள் என்பவை
மெய், வாய், கண், மூக்கு, செவி
இந்த ஐம்புலன்கள் இருக்கும்
வீட்டிற்குள் இருக்கிறான்
இறைவன்.

ஐம்புலன்கள் வழியாக
உணரப்படுபவை பஞ்சதன் மாத்திரை
அவை
அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
ஆகியவை ஆகும்.

ஐம்புலன் என சொல்லப்படுகின்ற
மெய், வாய், கண், மூக்கு, செவி
ஆகியவற்றின் மூலம் உணரப்படுகின்ற
பஞ்சதன் மாத்திரைகளான
அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
இவைகள் ஐந்தும் கூடி நம் உடலில்
எந்த இடத்தில் இருக்கின்றன என்பதை
யோசிக்க வேண்டும்.

சிரசை எடுத்துக் கொண்டால்
ஐம்புலன்கள் உண்டு;
மெய், வாய், கண், மூக்கு, செவி
அதன் மூலமாக உணரப்படும்
பஞ்சதன் மாத்திரைகளான
அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம்
சிரசில் தான் உண்டு;
கடவுள் உருவான இடமும்,
கடவுள் இருக்கும் இடமும்,
மூலமான இடமும்,
சிரசில் தான் உள்ளது.

அந்த இடத்தை கண்டு பிடிப்பதில் சிரமம் அதிகம்
அதனால் அதை ஒரு தவத்தின் மூலம் கண்டறிந்து
அதை அடைய முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த தவம் சமுதாயத்தில்
பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை;
பலருக்கு அப்படி ஒரு தவம்
இருக்கிறதா என்று தெரியாது;
சிலருக்கு மட்டுமே அந்த தவம் தெரியும்;
பெரும்பாலும் அந்த தவம்
சமுதாயத்தில் இருந்து  மறைந்து விட்டது
|என்று கூட சொல்லலாம்;
ஆனால் சமுதாயத்தில்
ஆன்மீகத்தில் ஒரு உயர்நிலையை அடைந்த
ஒரு சிலர் மட்டுமே அந்த தவத்தை
கட்டிக் காப்பாற்றி கொண்டு செல்கின்றனர்.

அந்த தவம் தான் மனோன்மணித் தவம்
மனோன்மணித் தவம்
இந்த உலகத்தில்
இரண்டு முறைகளில் செய்யப்பட்டு வருகிறது
ஆனால்
அதில்  ஒரு முறை தான் சரியானதாகக் கருதப்படுகிறது
இரண்டு முறைகளில் எந்த முறை சரியான முறை
என்பது சரியான குருவிடம் கேட்டு பயின்றால்
நன்மை பயக்கும்.

மனதுக்கு உட்பொருளானதும்
உறுதியும், பெருமையுமிக்கதுமான ஒரு சிறந்து மையமாகும்.
உயிருக்கும், உடலுக்கும் இடையில் உள்ள தொடர்பையும்,
ஒரு பொருளுக்கும், அறிவிற்கும் உள்ள தொடர்பையும்,
உயிருக்கும், இறை நிலைக்கும் இடையில் உள்ள தொடர்பையும்
சரியாக வைத்துக் கொள்ள
மனோன்மணித் தவம் உதவுகிறது.
மன ஆற்றலை நிர்வகிக்கிறது.
மனோ சக்தியை பெருகச் செய்கிறது.


முறை - 1
1.முதலில் தரையில் நன்றாக அமர்ந்து கொள்ள வேண்டும்..
2.காப்பு மந்திரம்  அல்லது கட்டு மந்திரம்
போட்டுக் கொள்ள வேண்டும்.
3.மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறு ஆதாரங்களைக் கடந்து
ஆக்கினையில் குண்டலினி சக்தியை நிறுத்த வேண்டும்.
4.ஆக்கினையில் தொடர்ந்து 5 நிமிடங்கள் நினைவை நிறுத்தி
தொடர்ந்து குண்டலினி சக்தியின் இயக்கத்தை கவனிக்க வேண்டும்.
5. ஆக்கினையில் இருந்து குண்டலினி சக்தியை
துரியத்தில் வைத்து தொடர்ந்து 10 நிமிடங்கள்
நினைவை நிறுத்தி தவம் செய்ய வேண்டும்.
குண்டலினி சக்தியின் சுழற்சியை தொடர்ந்து
கவனித்து வர வேண்டும்.
6.பிறகு நேராக உச்சிக்குக் கீழே நேராக நடுமையத்திற்கு
செல்ல வேண்டும்.
7, அந்த இடம் மிக முக்கியமான இடம் ஆகும்.
8. இரண்டு காதுகளுக்குள் இடையே நேராக உட்புறம் ஒரு கோடு
கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
9.நெற்றி மையத்திலிருந்து நேராக உள்நோக்கி பின் தலை வரை
உட்புறமாக கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
10.உச்சியிலிருந்து நேராக உட்புறமாக உள்ளே கற்பனையாக
ஒரு கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
11.இந்த மூன்று கோடுகளும் சந்திக்கும் மையப்புள்ளி முச்சந்தி
அங்கே தான் நாம் நினைவை நிறுத்த வேண்டும்.


முறை - 2
1.முதலில் தரையில் நன்றாக அமர்ந்து கொள்ள வேண்டும்..
2.காப்பு மந்திரம்  அல்லது கட்டு மந்திரம்
போட்டுக் கொள்ள வேண்டும்.
3.மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி
ஆறு ஆதாரங்களைக் கடந்து
ஆக்கினையில் குண்டலினி சக்தியை நிறுத்த வேண்டும்.
4.ஆக்கினையில் தொடர்ந்து 5 நிமிடங்கள் நினைவை நிறுத்தி
தொடர்ந்து குண்டலினி சக்தியின் இயக்கத்தை கவனிக்க வேண்டும்.
5. ஆக்கினையில் இருந்து நேராக உள் நோக்கி செல்ல வேண்டும்.
6. அவ்வாறு உள்நோக்கி செல்லும் போது முக்கிமான
மூன்று விஷயங்களை கவனித்துப் பின் செல்ல வேண்டும்.
7.பிறகு நேராக உச்சிக்குக் கீழே நேராக நடுமையத்திற்கு
செல்ல வேண்டும்.
8, அந்த இடம் மிக முக்கியமான இடம் ஆகும்,
9. இரண்டு காதுகளுக்குள் இடையே நேராக உட்புறம் ஒரு கோடு
கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
10.நெற்றி மையத்திலிருந்து நேராக உள்நோக்கி பின் தலை வரை
உட்புறமாக கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
11.உச்சியிலிருந்து நேராக உட்புறமாக உள்ளே கற்பனையாக
ஒரு கற்பனையாக ஒரு கோடு வரைய வேண்டும்.
12.இந்த மூன்று கோடுகளும் சந்திக்கும் மையப்புள்ளி முச்சந்தி
அங்கே தான் நாம் நினைவை நிறுத்த வேண்டும்.

இந்த இரண்டு முறைகளில்
எந்த முறை சரியான முறை என்றும்,
தவம் இயக்கத்திற்கு வரக்கூடிய முறை எது என்றும்,
எது பலன் கொடுக்கக்கூடியது என்றும்,
தகுந்த குருவின் மூலம் கேட்டு,
புரிந்து, தெரிந்து, அறிந்து
செய்ய வேண்டும்.

இரண்டு முறைகளில் எது சரியான முறை
என்று கண்டு பிடித்து செயல்முறைகளைப் பின்பற்றி
செயல் செய்தாலே தவத்தின் பலன் கிடைக்கும்.


இது தான் கடவுள் இருக்கும்
இடத்திற்கான மையப்புள்ளி,
தோற்றத்தின் ஆரம்பம்,
மூலத்திற்கான ஆரம்பம்,
ஆரம்பத்திற்கான மூலம்,
தொடர்ந்து நினைவை நிறுத்தி தவம் செய்ய,
தொடர்ந்து பல நாட்கள் தவம் செய்ய,
தொடர்ந்து பல மாதங்கள் தவம் செய்ய,
தொடர்ந்து பல வருடங்கள் தவம் செய்ய,
ஒரு அழுத்தம்
ஒரு சுழற்சி தெரியும்
அது தான் கடவுள் இருக்கும் இடம்.
சில சமயம் உணர்வு தெரியலாம்
தெரியாமல் போகலாம்
அந்த இடம் தெரிய வாய்ப்பிருக்கிறது
அல்லது தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

அந்த இடத்தில் அழுத்தம்
அவ்வளவு எளிதாக தெரியாத காரணத்தினால்
பலர் இந்த தவத்தை பண்ணுவதில்லை
அந்த இடம் அவ்வளவு
எளிதாக யாருக்கும் வசப்படுவதில்லை
என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த இடத்தை உணர்ந்து கொள்வதற்கும்
அதன் பலன்களை தெரிந்து கொள்வதற்கும்
ஒரு உபாயம் உண்டு,
மனோண்மனித் தவத்தால் யாருக்கு
உள்ளே அழுத்தம் தெரிந்து
மனோண்மணித் தவம் இயக்கத்திற்கு வந்து
அதன் பலனைப் பெற்றார்களோ,
அவர்கள் நம் உடலுக்குள்
முச்சந்திக்குள் இருக்கும்
கடவுளை காட்ட முடியும்.

இதை திறப்பது ஒரு முக்கிமான
முறை மூலம் திறக்கலாம்
தீட்சை அளிப்பதை
மூன்று முறைகளில்
அளிக்கலாம்.
ஒன்று   : ஸ்பரிச தீட்சை
இரண்டு : சட்சு தீட்சை
மூன்று  : ஞான தீட்சை

ஸ்பரிச தீட்சை என்றால்
மற்றவரை தொட்டு
தன் சக்தியை மற்றவருக்கு அளித்து
அதன் மூலம் தன் சக்தியை மற்றவருக்கு
பாய்ச்சுவது.

சட்சு தீட்சை என்றால்
கண் பார்வையின் மூலம்
தன் சக்தியை
மற்றவர் கண்ணிற்கு செலுத்தி
அதன் மூலம் தன் சக்தியை மற்றவருக்கு
பாய்ச்சுவது.

ஞான தீட்சை என்பது
நினைவின் மூலம்
தன் சக்தியை
மற்றவருடைய முக்கியமான
மையங்களில் செலுத்தி
அதன் மூலம் தன் சக்தியை மற்றவருக்கு
பாய்ச்சுவது.
.
மனோண்மணித் தவத்தை
இந்த மூன்று தீட்சை முறைகளில் ஞான தீட்சை
முறையில் தீட்சை அளித்து
மணோண்மனித் தவத்தை இயக்கலாம்.

இது பெரும்பாலும் குரு சீடர்
பரம்பரை மூலம் அழியாமல்
பாதுகாக்கப்பட்டு வருகிறது என்ற ரகசியத்தை மட்டும்
இந்த இடத்தில் நாம் முக்கியமாக
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மூலப்பதியடியோ மூவிரண்டு விடத்திலே என்றால்
இந்த உலகம் மற்றும் உலக உயிர்கள் தோன்றுவதற்கு
காரணமாக இருக்கக் கூடிய இறைவன்
நம் உடலில் சிரசில்
ஐம்புலன்கள் சூழ இருக்கிறான் என்று பொருள்.

சிலருக்கு வாழ்க்கை அழகாகவும்,
சிலருக்கு வாழ்க்கை
அலங்கோலமாகவும் இருக்கும்;
அதற்காக அலங்கோலமான வாழ்க்கை
வாழ்பவர்களைப் பார்த்து
அழகான வாழ்க்கை வாழ்பவர்கள்
கேலியும், கிண்டலும் செய்யக்கூடாது,.
ஏனென்றால்,
அழகான வாழ்க்கை வாழ்பவர்களுடைய வாழ்க்கை
அடுத்த வேளை அலங்கோலமாக மாறலாம்;
அலங்கோலமான வாழ்க்கை
வாழ்பவர்களுடைய வாழ்க்கை
அடுத்த நிமிடமே அழகான வாழ்க்கையாக மாறலாம்
யாருடைய வாழ்க்கை எப்படி
எந்த நேரத்தில் மாறும் என்று சொல்ல முடியாது

உயர்ந்தவர் வாழ்க்கை
தாழ்ந்த நிலையை அடையலாம்;
தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கை
உயர்ந்த நிலைக்கும் மாறலாம்;
யாருடைய வாழ்க்கையும் எப்படி
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறலாம்.

எதுவும் நிலை இல்லை
மாறிக் கொண்டே இருக்கும்;
மாறிக் கொண்டே இருப்பதால்
யாரும் யாரை பார்த்துக் கிண்டல்
செய்யக்கூடாது
என்பதை உணர்ந்து கொண்‘டாலே
தாழ்ந்தவர்களை இழிவாக பார்ப்பதும்.
தாழ்ந்தவர்களை இழிவாக நடத்துவதும்,
தாழ்ந்தவர்களை இழிவாக நினைப்பதும்,
மாறிவிடும்.

உயர்ந்து இருப்பதும்
தாழ்ந்து இருப்பதும்;
உயர்வான நிலையில் இருப்பதும்
தாழ்வான நிலையில் இருப்பதும்;
வாழ்க்கையில் எல்லாம் கிடைத்து இருப்பதும்
வாழ்க்கையில் எதுவும் கிடைக்காமல் இருப்பதும்;
சிலருக்கு சரியான நேரத்தில் திருமணம் நடப்பதும்
சிலருக்கு காலம் தாழ்த்தி திருமணம் நடப்பதும்
சிலருக்கு திருமணமே நடக்காமல் இருப்பதும்;
சிலருக்கு வேலை கிடைப்பதும்
சிலருக்கு வேலை கிடைக்காமல் இருப்பதும்;
சிலருக்கு நல்ல வேலை கிடைப்பதும்
சிலருக்கு நல்ல வேலை கிடைக்காமல் இருப்பதும்;
சிலருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பதும்
சிலருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் இருப்பதும்;
சிலருக்கு பிடித்த படிப்பு படிப்பதும்
சிலருக்கு பிடித்த படிப்பு படிக்க முடியாமல் போவதும்;
சிலருக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைப்பதும்
சிலருக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல் இருப்பதும்;
அவரவர் கர்மாவைப் பொறுத்தது.

கர்மா என்றால் என்ன என்றும்,
கர்மா என்ன செய்யும் என்றும்,
கர்மா என்ன என்ன விளைவுகளை
ஏற்படுத்தும் என்றும்,
கர்மா என்ன என்ன செயல்களைச் செய்யும் என்றும்,
கர்மா என்ன என்ன விதமான
பலன்களைக் கொடுக்கும் என்றும்,
கர்மா எப்படி இயங்குகிறது என்றும்,
கர்மா எப்படி மற்றவர்களை
இயக்குகிறது என்றும்,
கர்மாவினால் ஒருவர் எப்படி உயர்கிறார் என்றும்,
கர்மாவினால் ஒருவர் எப்படி தாழ்கிறார் என்றும்,
கர்மா ஒருவரை எப்படி பாதிக்கிறது என்றும்,
கர்மா ஒருவரை எப்படி பாதிக்காமல் விட்டு விடுகிறது என்றும்,
கர்மாவினால் ஏற்படக்கூடிய செயல்கள்
என்ன என்பதைப் பற்றியும்,
அதை எதிர்கொள்வது எப்படி என்பதைப் பற்றியும்,
கர்மா ஒருவருடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம்
விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றியும்,
அனைவரும் உணர்ந்து கொண்டால்,
நம்மை உயர்ந்த நிலையில் வைத்திருக்கும்
கர்மா எப்பொழுது வேண்டுமானாலும்
தாழ்ந்த நிலைக்கு கொண்டு வரலாம்;
தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை
எந்த நேரத்திலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரலாம்;
என்பதை உணர்ந்து கொண்டால்,
கர்மாவின் விளைவுகளை உணர்ந்து கொண்டால்,
யாரும் யாரையும் தாழ்வாக நினைக்க மாட்டார்கள்,
யாரும் யாரையும் உயர்வாக நினைக்க மாட்டார்கள்,
அதனால்யாரும் நிலையாக உயர்வாக
இருந்தது கிடையாது;
யாரும்  நிலையாக தாழ்வாக இருந்தது கிடையாது;
இதற்கெல்லாம் காரணம்
ஒருவர் உயர்வதும்; தாழ்வதும்;
ஒருவர் உயர்வான வாழ்க்கை வாழ்வதும்
ஒருவர் தாழ்வான வாழ்க்கை வாழ்வதும்;
ஒருவருடைய வாழ்க்கை தாழ்வான நிலையிலிருந்து
உயர்வான நிலைக்கு மாறுவதும்
ஒருவருடைய வாழ்க்கை உயர்வான நிலையிலிருந்து
தாழ்வான நிலைக்கு மாறுவதும்;
கர்மாவினால் என்பதை புரிந்து கொண்டால்.
யாரும், யாரையும் கிண்டலும், கேலியும்
செய்ய மாட்டார்கள்.

கர்மா என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்;
கர்மா என்ன செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்;
கர்மா என்ன விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்;
கர்மா வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்களை
ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்;
ஆனால் சமுதாயத்தில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு
கர்மா என்றால் என்ன என்றே தெரிவதில்லை
கர்மாவைப் பற்றிய புரிதல் இல்லை/
ஏனென்னால் கர்மாவைப் பற்றி
புரிந்து கொண்டவர்கள் சிலர்
அந்த சிலரும் கர்மாவைப் பற்றி பேச
பயப்படுகின்றனர்.
ஏனென்றால்
கர்மாவைப் பற்றிக் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் சொல்ல முடியாமல் போவது தான் காரணம்.
கர்மாவைப் பற்றி யாராலும் தெளிவாக
விளக்க முடியாததும்,
கர்மாவைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியாததும்,
கர்மாவைப் பற்றி தெரிந்தவர்கள் அதை
மற்றவர்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில்
சொல்ல முடியாததும்,
கர்மாவைப் பற்றி சொன்னால்
எங்கே தாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ
என்று சொல்லாமல் இருப்பதும்,
மக்கள் கர்மாவைப் பற்றி  தெரிந்து கொள்ள
முடியாமல் போனதற்கு காரணம்.
மேலும் கர்மாவைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாததே
மக்கள் கர்மாவைப் பற்றி
தெரிந்து கொள்ளாததற்கு காரணம்.

கர்மாவைப் பற்றி தெரிந்து கொண்டாலே
யாரும் யாரையும் இழிவாக நினைக்க மாட்டார்கள்;
யாரும் யாரைப் பற்றியும் தவறாக நினைக்க மாட்டார்கள்;
யாரும் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்கள்;
யாரும் யாரையும் கெடுக்க வேண்டும் என்று
நினைக்க மாட்டார்கள்;
யாரும் யாரையும் அழிக்க வேண்டும் என்று
யோசிக்க மாட்டார்கள்;
பொதுவாக சொன்னால் யாரும்
பாவம் செய்ய பயப்படுவார்கள்;

கர்மாவைப் பற்றிய புரிதலை
மக்களுக்கு புரியும் விதத்தில்
மனதில் பதிய வைத்து விட்டாலே
குற்றங்கள் நடக்காமல்,
பாவங்கள் நிகழாமல்,
பாவச் செயல்கள் எழாமல்,
செய்து விடலாம்..
கர்மாவைப் பற்றி தெரியாத காரணத்தினால்
பாவங்கள் அதிகரித்து உள்ளன என்பதை
அறிந்து கொள்ள வேண்டும்;
பாவங்கள் எப்படி அதிகரித்து உள்ளன
என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
கர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்;
கர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ளாதவரை
பாவங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது.

ஏனென்றால் கர்மா மனிதனை மட்டுமல்ல
கடவுளையும் பாதிக்கும்
கர்மா மனிதனை பாதித்தால்
கடவுளிடம் செல்லலாம்.
கடவுளையே கர்மா பாதித்தால்
மனிதன் யாரிடம் செல்வான்.
கர்மா எல்லா கடவுளையும் பாதிப்பதில்லை
எந்த கடவுளை பாதிக்கிறது
என்று தெரிந்து கொண்டால்
கர்மாவைப் பற்றி
தெரிந்து கொள்ளலாம்.



---------இதன் தொடர்ச்சி
             இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்-பதிவு-81-(6)
                                                                                        ------------பார்க்கவும், படிக்கவும்




இயேசுகிறிஸ்து-அழுகுணிச்சித்தர்-மூலப்-பதிவு-81-(6)


இயேசு கிறிஸ்து-அழுகுணிச் சித்தர்-மூலப்பதியடியோ-பதிவு-81-(6)

     """"பதிவு எண்பத்துஒன்றை விரித்துச் சொல்ல
         ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

அழுகுணிச் சித்தர்:

கடவுளை இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்

 ஒன்று : இயக்க நிலையில் இருக்கும் கடவுள்
இரண்டு : இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுள்

இயக்க நிலையில் இருக்கும் கடவுளுக்கும்
இயக்கமற்ற  நிலையில் இருக்கும் கடவுளுக்கும்
மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது;
ஆனால் அதை புரிந்து கொள்வது கடினம்;
புரிந்து கொண்டவர்களும் குறைவு;
புரிந்து கொண்டாலும் சொல்ல முடியாமல்
இருப்பவர்களும் குறைவு;

இயக்க நிலையில் இருக்கும் கடவுள் என்பது
இயங்கிக் கொண்டிருக்கும் நிலையைக்
குறிக்கும்;
இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுள் என்பது
இயக்கமற்ற  நிலையில் இருக்கும்
கடவுளைக் குறிக்கும்
ஆனால் இயங்கிக் கொண்டிருக்கும்
நிலையைத் தான் குறிக்கும்;
இயக்கமற்ற கடவுள் என்பது
ஒன்றே  ஒன்று தான்;
இயக்கநிலையில் இருக்கும் கடவுள் என்பது
பல நிலைகளில் இருக்கும்
கடவுளைக் குறிக்கும்;

இயக்கமற்ற கடவுள் என்பது
எதைக் குறிக்கிறது என்றால்
ஆதி நிலை, முதல் நிலை, மூல நிலை
சுத்த வெளி, வெட்ட வெளி, பரம்பொருள்
என்று வார்த்தைகளால் சொல்லப்படுபவைகளைக் குறிக்கும்;
இதை இயக்கமற்ற கடவுள் என்கிறோம்.
ஆனால் இயங்கிக் கொண்டிருக்கிறது;
இதைப் பற்றி படித்தால் தெரியாது;
இதைப் பற்றி சொன்னால் புரியாது;
இதைப் பற்றி உணர்ந்தால் மட்டுமே தெரியும்;
அது அதுவானால் மட்டுமே தெரியும்;
உணராமல் இயக்கமற்ற கடவுள்
எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி மற்றவற்றை இயக்கிக்
கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி மற்றவற்றை
காத்துக் கொண்டிருக்கிறது என்பதையும்,
எப்படி உணர்ந்து கொள்ள முடியாத
செயல்களையும் செய்கிறது என்பதையும்,
உணர்ந்து கொள்ள முடியும்.

இயக்கமுள்ள கடவுளை
எல்லோராலும் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்;
எல்லோராலும் அறிந்து கொள்ள முடியும்;
அதன் செயல்களை புரிந்து கொள்ள முடியும்;

இயக்கமற்ற கடவுளுக்கும்,
இயக்கமுள்ள கடவுளுக்கும்,
உள்ள வேறுபாட்டை உணர்ந்து
கொள்ள வேண்டுமானால்
எளிமையான உதாரணம் ஒன்றை
எடுத்துக் கொள்ளலாம்.

சிவம் மற்றும் சிவன்
இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது
சிவம் இயக்கமற்ற  நிலையில்
இருக்கக்கூடிய கடவுள்;
சிவன் இயக்க நிலையில்
இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய கடவுள்;

இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய
கடவுளை குறிக்க வேண்டியே
உருவம் கொண்ட சிவனை வைத்திருப்பார்கள்;
உருவம் கொண்ட சிவன்
இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய கடவுள்;

சிவலிங்கம் உருவமற்ற கடவுள்;
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய கடவுள்;
இயக்கமற்ற கடவுளைக் குறிக்க வேண்டும்
என்பதற்காகத் தான் சிவம் என்றார்கள்.
சிவத்தை உருவகப் படுத்தினார்கள்;

இயக்கமற்ற நிலையில் இருப்பது;
ஆனால் இயங்கிக் கொண்டிருப்பது;
அது தான் சிவம்;
இயங்கிக் கொண்டிருப்பது
சிவன்;

சிவம் மற்றும் சிவன் இரண்டுக்கும்
உள்ள முக்கிய வேறுபாடு
இது தான்.

இயங்கிக் கொண்டிருக்கக்  கூடிய கடவுளையும்;
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய கடவுளையும்;
அந்த அந்த  நிலைகளுக்குரிய
பொருள்களை வைத்து அறியலாம் உணரலாம்.

இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமற்ற நிலையில் உள்ளவைகளைக்
கொண்டு அறியலாம்.
இயக்கநிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ளவைகளைக்
கொண்டும் அறியலாம்
இயக்கமற்ற நிலைகளில் உள்ளவைகளைக்‘
கொண்டும் அறியலாம்.

இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமற்ற நிலையில் உள்ள
பொருட்களைக் கொண்டு அறியலாம்;
இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்கமுள்ள நிலையில் உள்ள
பொருட்களைக் கொண்டு அறிய முடியாது;
இயக்கநிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ள பொருட்களைக்
கொண்டும் அறியலாம்;
இயக்கமற்ற நிலையில் உள்ள பொருட்களைக்
கொண்டும் அறியலாம்;

இயக்க நிலையில் உள்ள கடவுளை அறிய
இயக்க நிலையில் உள்ள பொருள்
எது என்பதை அறிவது கடினம்
இருந்தாலும் அறிந்து  கொள்ளலாம்
இந்த பொருட்களைப் பயன்படுத்தினால்
அதை அடையலாம்
என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால்,
இயக்கமற்ற நிலையில் இருக்கும்
கடவுளை அறிந்து கொள்ளக் கூடிய
பொருள் எது என்பதை அறிந்து கொள்வது கடினம்.

இயக்கமற்ற நிலையில் இருக்கும் கடவுளை
இயக்கமற்ற பொருளைக் கொண்டு
தான் அறிய முடியும்;
இயக்கமுள்ள பொருளைக் கொண்டு
அறிய முடியாது;
ஆனால்,
இயக்கமுள்ள கடவுளை
இயக்கமுள்ள பொருளைக் கொண்டும் அறியலாம்;
இயக்கமற்ற பொருளைக் கொண்டும் அறிலாம்;

இயக்கமுள்ள கடவுளையும்,
இயக்கமற்ற கடவுளையும்,
அறிந்து கொள்ளக் கூடிய
பொருள் எது என்பதை
உணர்ந்து கொள்வதற்காக,
சமுதாயத்தில் பல்வேறு முறைகள் உள்ளன.
மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக பல்வேறு முறைகள்
ஏற்படுத்தப் பட்டுள்ளன.

கடவுளை அறியக்  கூடிய  வழிகளை
முக்கியமாக இரண்டு நிலைகளில் பிரிக்கலாம்;
பல்வேறு முறைகளில் பிரிக்கலாம் என்றாலும்
இரண்டு முக்கியமான நிலைகளாக பிரிக்கலாம்;

ஒன்று     :  பக்தி  மார்க்கம்
இரண்டு   :  ஞான மார்க்கம்

பக்தி மார்க்கம் என்றால்
இன்னது செய்தால்
இன்னது விளையும்
ஆகவே இன்னது  செய்து வாழ் என்று
யாராவது சொல்லி அதை நாம் பின்பற்றினால்
அதற்குப் பெயர் பக்தி மார்க்கம்
மார்க்கம் என்றால் வழி.

ஞானமார்க்கம் என்பது
இன்னது செய்தால் இன்னது விளையும்
ஆகவே இன்னது செய்து வாழ வேண்டும்
என்று தானே உணர்ந்து செய்து வாழ்வது
ஞான மார்க்கம்.

பக்தி மார்க்கம் என்பது
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
கடவுளுடன் தொடர்பு கொள்வது.

ஞான மார்க்கம் என்பது
இயக்கமற்ற ஒன்றைக் கொண்டு
இயக்கமற்ற கடவுளுடன் தொடர்பு கொள்வது.

பக்தி மார்க்கம் என்பது
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
இயக்க நிலையில் உள்ள கடவுளுடன்
தொடர்பு கொள்வது.
இயக்கநிலையில் உள்ளவைகள் கொண்டு
இயக்கமற்ற கடவுளுடன் தொடர்பு
கொள்ள முடியாது.

ஞான மார்க்கம் என்பது
இயக்க மற்ற நிலையில் உள்ள ஒன்றைக்
கொண்டு இயக்கமற்ற நிலையில் உள்ள
கடவுளை தொடர்பு கொள்ளவும் முடியும்;
இயக்க நிலையில் உள்ள கடவுளையும்
தொடர்பு கொள்ள முடியும்;

இயக்க நிலையில்  உள்ள
கடவுளுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பொருளுக்கும்
இயக்கமற்ற நிலையில்
உள்ள தொடர்பு கொள்ளக்கூடிய பொருளுக்கும்
சிறிதளவு வேறுபாடும் உண்டு;
பெருமளவு வேறுபாடும் உண்டு;

அதனைப் புரிந்து கொண்டு
எது அது என்பதை அறிந்து கொண்டால்
நாம் எதை அறிய நினைக்கிறோமோ
அதை அறியலாம்.

மந்திரங்கள், பூசைகள், ஓமங்கள்
ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்
மந்திரங்கள்
இயக்க நிலையில் உள்ளவைகள்
இந்த இயக்க நிலையில் உள்ளவைகளை
இயக்க நிலையில் உள்ள
கடவுளை அறிந்து கொள்ள
பயன்படுத்தலாம்;
இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம்
இயக்க நிலையில் உள்ள
கடவுளிடம் நமக்கு தேவையானதை
பெற்றுக் கொள்ளலாம்;
நம்முடைய குறைகளை
தீர்த்துக் கொள்ளலாம்;

மந்திரங்கள் என்பவை
ஒலி உச்சரிப்பு
ஒலி இயங்க ஒரு ஊடகம்
ஒரு ஊடகம் இல்லாமல்
மந்திரத்தால் இயங்க முடியாது;
மந்திரங்கள் எனப்படுபவை
இயக்க நிலையில் இருக்கக் கூடியவை
இயக்க நிலையில் உள்ளவைகளைக் கொண்டு
இயக்கமற்ற நிலையில் உள்ள கடவுளை
அறிந்து கொள்ள முடியாது.

மந்திரங்கள் இயக்கமற்ற நிலையில் இயங்காது;
எனவே,
இயக்க நிலையில் உள்ள மந்திரங்களைக்  கொண்டு
இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய
கடவுளை தொடர்பு கொள்ள முடியாது;
இயக்க நிலையில் இருக்கும்
கடவுளை மட்டுமே தொடர்பு கொள்ள
முடியும்;

இயக்கமற்ற நிலையில் இருக்கக் கூடிய
பொருள் ஒன்று உள்ளது;
அது மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது;
அதை வாசி என்கிறோம்;
அது இயக்கமற்றது;
ஆனால் இயங்கக் கூடியது;
இயக்கமற்றதையும், இயக்கமுள்ளதையும்
தன்னுள் கொண்டுள்ளது;
இயக்கமற்றது
ஆனால் இயங்கிக் கொண்டிருப்பது;
இயக்கமற்ற நிலையில் இருக்கும்
கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கு
இந்த வாசியைத் தான்
பயன்படுத்துகிறோம்.

சமுதாயத்தில் ஆன்மீகத்தில்
உயர்நிலை அடைந்தவர்கள்
இந்த வாசியை பயன்படுத்தித் தான்
இயக்கமற்ற நிலையை அடைகிறார்கள்;

வீடுபேறு பெறுகிறார்கள்;
அது அதுவாக மாறுகிறார்கள்;

வாசியை வைத்து
இயக்கமற்ற கடவுளுடனும் தொடர்பு கொள்ளலாம்;
இயக்க நிலையில் உள்ள கடவுளுடனும்
தொடர்பு கொள்ளலாம்;

நம் சுவாசக் காற்றானது
நம் உடலில் வளைந்து நெளிந்து செல்கிறது
அவ்வாறு செல்வதால் அது
கடவுள் இருக்கும் இடமான
முச்சந்திக்குள் செல்ல முடியாது;

சுவாசக் காற்றானது நேராகச் சென்றால் மட்டுமே
அது கடவுள் இருக்கும் இடத்தை அடைய முடியும்;
அவ்வாறு நம் சுவாசக் காற்றானது
நேரானால் மட்டும்
இறைவன் இருக்கும்
இடத்தை அடைய முடியாது;

நம் சுவாசத்தை நேராக்கினால் மட்டும்
இறைவன் இருக்கும் இடத்தை அடைய முடியாது;
கர்மா கழிந்தால் மட்டுமே
நம் சுவாசம் இறைவன் இருக்கும்
இடைத்தை அடைய முடியும்
அதற்கு நாம் பயன்படுத்துவது தான் வாசி.

வாசி நாம் செய்ய செய்ய
பயிற்சி முறையை தொடர்ந்து செய்து வர
நம் சுவாசம் நேராகிறது மற்றும்
நம் கர்மா கழிகிறது;
கர்மா கொஞ்சம் கொஞ்சமாக கழிகிறது;

வாசி தொடர்ந்து செய்து வர
வளைந்து வளைந்து சென்ற
சுவாசக் காற்றானது நேராகிறது;
வளைந்து வளைந்து
உடலில் உள்ள துளைகள் வழியாக
வெளியே சென்ற சுவாசக் காற்றானது
வெளியே செல்லாமல்
உடலுக்குள்ளேயே சு.ற்றுகிறது;

கோலப்பதியடியோ என்றால் நம்
உடலில் வளைந்து நெளிந்து
சென்ற காற்றானது என்று பொருள்.

குதர்க்கத் தெரு நடுவே என்றால்
வளைந்து நெளிந்த காற்றானது
வாசிப் பயிற்சி செய்வதன் மூலம்
நேராக செல்கிறது
சூட்சும வழியாக செல்கிறது என்று பொருள்
யாரும் அவ்வளவு எளிதில்
கண்டுபிடிக்க முடியாத இடம்  என்று பொருள்
அதாவது நமது சுவாசக் காற்றானது
நேராகிறது என்று பொருள்.

சாலப்பதிதனிலே தணலாய் நின்ற கம்பம் என்றால்
வாசிப் பயிற்சி  செய்ததன் மூலம்
நேரான சுவாசக் காற்றானது அக்கினியாகும்
கம்பம் எவ்வாறு நேராக இருக்கிறதோ
அவ்வாறு நேராக நம் சுவாசக் காற்றானது
மாறுகிறது என்று பொருள்.

மேலப்பதிதனிலே என் கண்ணம்மா உன்
விளையாட்டைப் பாரேனோ
வாசிப்பயிற்சி செய்து வர
தொடர்ந்து செய்து வர,
நம் சுவாசக் காற்றானது நேராகிறது;
அக்கினிக் கம்பமாகிறது;
நம் கர்மா கழிகிறது;
அதன் விளைவாக சுவாசக் காற்றானது
பத்தாவது வாசலைத் திறந்து
கடவுள் இருக்கும் இடத்தை அடைகிறது;
அதனால் மனிதன் அதுவாகவே மாறுகிறான்;
மனிதன் கடவுள் அருளைப் பெறுகிறான்;
கடவுள் நிலையை அடைகிறான்;
அதுவாகவே மாறுகிறான்;

அதனால் அவன் பரம்பொருளின்
அனைத்து ரகசியங்களையும் தெரிந்து கொள்கிறான்;
கடவுளின் விளையாட்டைத் தெரிந்து கொள்கிறேன்;
பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து கொள்கிறான்;
பரம்பொருளை உணர்ந்து கொள்கிறான்;
மூலத்தைத் தெரிந்து கொள்கிறான்;
சூட்சுமங்களை அறிந்து கொள்கிறான்;
ரகசியங்களை அறிந்து கொள்கிறான்;

கடவுள் நம் உடலில்
எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து,
அவரை அடையக்கூடிய வழி எது என்பதை அறிந்து,
எதை வைத்து அவரை அடைய வேண்டும் என்பதை அறிந்து,
அதை பயன்படுத்தி அறிந்து கொள்வதன் மூலம்
பரம்பொருளின் தன்மைகளைத் தெரிந்து
கொள்ளலாம் என்கிறார்
அழுகுணிச்சித்தர்.


இயேசு கிறிஸ்து -  அழுகுணிச் சித்தர்:

உயிரற்றவைகளையும்
உயிருள்ளவைகளையும்
விட்டு விட்டு வருபவர்களுக்கே
பரலோக ராஜ்ஜியம் கிடைக்கும் என்கிறார்
இயேசு,

அவ்வாறே,
அழுகுணிச் சித்தரும்,
இயக்கமற்றதுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால்
அனைத்து கர்மாக்களையும் கழித்து விட்டால்
மட்டுமே முடியும் என்கிறார்.

 """"போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                போற்றினேன் பதிவுஎண்பத்து ஒன்றுந்தான்முற்றே""""