May 18, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-4


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-4

கடவுளைப் பற்றி
பேசுபவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : ஆத்திகர்
இரண்டு : நாத்திகர்

ஆத்திகர் என்றால்
கடவுள் உண்டு என்று
சொல்பவர்
நாத்திகர் என்றால்
கடவுள் இல்லை
என்று சொல்பவர்
என்று இச்சமுதாயத்தால்
காலம் காலமாக
சொல்லப்பட்டு வருகிறது.

கடவுள் என்பவர் யார் ?
அவர் எங்கிருக்கிறார் ?
அவரை அடையக்கூடிய
பொருள் எது ?
என்று கண்டறிந்து
அதை பயன்படுத்தி
கடவுளை உணர்ந்தவர்
ஆத்திகர் எனப்படுவர்

கடவுள் என்பவர் யார் ?
அவர் எங்கிருக்கிறார் ?
அவரை அடையக்கூடிய
பொருள் எது ?
என்று கண்டறியாமல்
அதை பயன்படுத்தாமல்
கடவுளை உணராமல்
இருப்பவர்
நாத்திகர் எனப்படுவர்

சுருக்கமாகச் சொன்னால்
ஆத்திகர் என்றால்
கடவுளை உணர்ந்தவர்கள்
நாத்திகர் என்றால்
கடவுளை உணராதவர்கள்
என்று தான் பொருள்
கொள்ள வேண்டும்

இவை இரண்டையும்
தவிர்த்து
புதியதாக பகுத்தறிவாதி
என்ற சொல்
தற்போது
பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

பகுத்தறிவாதி
என்றால் பெரும்பாலும்
இரண்டு நிலைகளைத்
தன்னுள்
கொண்டுள்ளவர்களாக
கருதப்படுகிறது

ஒன்று  :கடவுள் இல்லை
         என்று சொல்பவர்கள்

இரண்டு :மூடப்
         பழக்கவழக்கங்களை
         எதிர்ப்பவர்கள்


என்று சொல்லப்படுகிறது

உண்மையில்
பகுத்தறிவாதிகள்
என்றால்
பகுத்து அறிபவர்கள்
பகுத்தறிவாதிகள்
எனப்படுவர்

ஒரு கல்லை
எடுத்துக் கொண்டால்
அந்த கல்
பஞ்ச பூதங்களால்
ஆனது
பஞ்ச பூதங்கள்
இருப்பு நிலையும்
இயக்க நிலையும்
இணைந்து உருவானது
இயக்க நிலையை
கழித்து விட்டால்
இருக்கும் நிலையான
இருப்பு நிலையே
மூல நிலை
இந்த மூல நிலையே
ஆதியும், அந்தமும்
கொண்ட நிலையாகும்

உலகில் உள்ள
அனைத்து
பொருள்களுக்கும்
ஆதி அந்தமாக
இருப்பது
இருப்பு நிலையே
என்பதை
யார் அறிந்து
கொண்டிருக்கிறாரோ
அவரே பகுத்தறிவாதி

அதாவது பகுத்தறிவாதி
என்றால்
ஒரு பொருளின்
ஆதி அந்தம்
தெரிந்தவர்கள்
பகுத்தறிவாதிகள்
எனப்படுவர்

பகுத்தறிவாதி
என்பவர்
ஆத்திகர்
என்ற நிலையிலேயே
வந்து விடுவதால்
தனியாக
பகுத்தறிவாதி என்ற
பெயர் தேவையில்லை
என்ற காரணத்தினால்
தான்
நம் முன்னோர்கள்
கடவுளைப் பற்றி
பேசுபவர்களை
ஆத்திகர்
நாத்திகர்
என்ற இரண்டு
நிலைகளிலேயே
பிரித்து வைத்தனர்
என்பதை உணரும் போது
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்
என்பது
போற்றுதலுக்குரியது

-------- இன்னும் வரும்
///////////////////////////////////////////

May 17, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-3


                 நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-3

அந்தக் காலத்தில்
ஆண்கள்
பொருள் தேடி
வேலை விஷயமாக
வெளி இடங்களுக்கு
சென்று விடுவர்

பெண்கள் காட்டிற்கு சென்று
மரம் வெட்டுவது,
வயலில் இறங்கி
சேற்றில் நாற்று நடுவது,
களை பறிப்பது
போன்ற வேலைகளை
செய்து வந்தனர்

பெண்கள் சேற்றில்
இறங்கி வேலை
செய்வதாலும்
காட்டில் மரம்
வெட்டுவதாலும்
பெண்களின்
கைகளில் உள்ள
நகக்கண்களில்
கால்களில் உள்ள
நகக் கண்களில்
கிருமிகளின்
தொற்று ஏற்பட வாய்ப்பு
அதிகம் இருந்தது.

இதனால் விரல்களில்
நகச்சுத்தி ஏற்பட
வாய்ப்பு இருந்தது
இதனை தவிர்ப்பதற்காகவும்
நோய்த் தொற்றிலிருந்து
பெண்களை
காப்பாற்றுவதற்காகவும்
கண்டு பிடிக்கப்பட்டு
பயன்படுத்தப்பட்டது
தான் மருதாணி

மருததாணியை செடியிலிருந்து
நேரடியாக பறித்து
அரைத்து கை விரல்களில்
உள்ள நகக்கண்களில்
தொப்பி போல்
அழுத்தி வைத்து விடுவர்
கையைச் சுற்றி
சில இடங்களில்
மருதாணியை பூசி விடுவர்

அதைப்போல்
கால்களிலும்
நகக்கண்களில்
கால் பாதங்களில்
மருதாணி போட்டு விடுவர்
கால் விரல்களில்
தொப்பி போல்
மருதாணியை
போட்டு விடுவர்
கால் பாதங்களில்
சுற்றி மருதாணி
பூசி விடுவர்

கை, கால்களில்
பூசப்பட்ட மருதாணியானது
காய்ந்தவுடன்
மருதாணியை எடுத்து
கையை, காலை
கழுவி விட வேண்டும்
மருதாணியில்
உள்ள சாறு சிறந்த
கிருமி நாசினியாகும்
மருதாணியின் சாறு
நகக்கண்களில்
உள்ள கிருமிகளைக்
கொன்று நோய்த்
தொற்று ஏற்படாமல்
நம்மை பாதுகாத்து விடும்

மருதாணியை பூசுவதால்
கைவிரல்களில்
உள்ள நகக் கண்களில்
கால் விரல்களில்
உள்ள நகக் கண்களில்
உள்ள கிருமிகள்
அழிந்து விடுகின்றன
அதைப்போல் கால்களில்
பூசப்பட்ட மருதாணியால்
கால் பாதங்களில்
பித்த வெடிப்பு
போன்றவை ஏற்படாமல்
இருக்கும்

மருதாணி
போடும் முறையில்
மிகப்பெரிய
மருத்துவ முறையை
மறைத்து வைத்திருந்தனர்
நம் முன்னோர்கள்

நகச்சுத்தி எனப்படும்
நோய் விரல்களில்
வராமல் தடுக்கும்
இயல்புடையது மருதாணி
மேலும் மருதாணி
குளிர்ச்சியை
ஏற்படுத்தும் தன்மையை
உடையது
அதுமட்டுமின்றி
பல்வேறு விதமான
மருத்துவ குணங்களை
தன்னுள் கொண்டது
மருதாணி

ஆனால் தற்போது
இத்தகைய
மருதாணியை பூசாமல்
கெமிக்கலில் செய்யப்பட்ட
மருதாணியை
பயன்படுத்தி
உடல் நலத்திற்கு
கேடுகளை விளைவித்துக்
கொள்கின்றனர் மக்கள்.


ஆரோக்கியத்திற்காக
பூசப்பட்ட
மருதாணி இன்று
அழகுக்காக பூசப்படுகிறது

மருதாணியில் உள்ள
மருத்துவத்தின்
மகிமையை
புரிந்து கொண்டு
அதை
பயன்படுத்தச் சொன்ன
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 16, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-2


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-2

மக்கள் நடமாட்டம்
அதிகம் இல்லாத
அடர்ந்த காட்டில்
ஒரு பகுதியில்
குடில் அமைத்து
ஒரு குருவும்
பல சீடர்களும்
வாழ்ந்து வந்தார்கள்

அவர்கள் அனைவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட
அன்றாடபணிகள்
அனைத்தையும்
முடித்து விட்டு
மாலை வந்ததும்
ஒன்றாகக் குடிலில்
கூடுவார்கள்.

மாலை 06.00 மணிக்கு
குரு சீடர்களுக்கு
சொற்பொழிவின் மூலம்
ஆன்மீகக் கருத்துக்களையும்,
கடைபிடிக்க வேண்டிய
ஒழுக்கங்களையும்,
பின்பற்ற வேண்டிய
பழக்க வழக்கங்களைப்
பற்றியும் சொற்பொழிவு
ஆற்றுவார்

அவ்வாறு ஒரு நாள்
குரு சொற்பொழிவு
ஆற்றிக் கொண்டிருக்கும்போது
ஒரு பூனை அங்கும்
இங்கும் ஓடியது,
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது

இரண்டாம் நாள்
குரு பேசும்போதும்
முதல் நாள் வந்த
அந்த பூனையே
மீண்டும் அந்த
குடிலைச்சுற்றி
சுற்றி வந்தது
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது
எனவே, குரு
அந்த பூனையை பிடித்து
தன் பேச்சு
முடியும் வரை.
தூணில் கட்டி
வைக்கச் சொன்னார்

மூன்றாம் நாளும்
அந்த பூனை
இடையூறு செய்தது
குரு தன்
சீடர்களை நோக்கி
நாளை முதல் நான்
பேச்சை ஆரம்பிப்பதற்கு
முன்னர் அந்த பூனை
எங்கிருந்தாலும் கண்டு
பிடித்து கொண்டு வந்து
என் கண்ணில் படுமாறு
பூனையை தூணில்
கட்டி வைக்க வேண்டும்
என்று ஆணை இட்டார்

அவ்வாறே நான்காம் நாள்
சீடர்களும் குரு பேச்சை
ஆரம்பிப்பதற்கு முன்
பூனையை
தேடிக்கண்டு பிடித்து
குருவின் பார்வையில்
படும்படி
குருவின் அருகில் உள்ள
ஒரு தூணில் கட்டி
வைத்து விட்டனர்.

இவ்வாறே தொடர்ந்து
வந்த நாட்களிலும்
குரு உரை ஆற்றும் முன்னர்
சீடர்கள் பூனை எங்கிருந்தாலும
அதை தேடிக்கண்டுபிடித்து
பிடித்து வந்து
குருவின் அருகில்
உள்ள ஒரு தூணில்
குரு கண்ணில் படுமாறு
கட்டி வைத்து விட்டனர்

சிறிது நாட்கள் கழிந்த பின்பு
குரு இறந்து விட்டார்
அதே நாளில் அந்த
பூனையும் இறந்து விட்டது
எனவே குருவுக்கு சமாதி
வைக்கும் போது
குரு அருகிலேயே
பூனையையும் அடக்கம்
பண்ணி விட்டனர்.

குருவுக்கு செய்ய
வேண்டிய காரியங்கள்
அனைத்தும்
முடிந்த பின்பு
அடுத்த ஒருவர்
குரு என்ற நிலைக்கு
வந்தார்.

அவர் முதல் நாள்
மாலை பேச ஆரம்பிக்கும்
போது கோபத்துடன்
சீடர்களை நோக்கி
குரு பேசும்போது
தூணில் ஒரு பூனை
கட்ட வேண்டும்
என்ற முறை உங்களுக்கு
தெரியாதா
முதலில் ஒரு பூனையை
பிடித்து வாருங்கள்
அதை அந்த
தூணில் கட்டுங்கள்
நான் பேசுகிறேன் என்றார்

தனக்கு முன்னால்
இருந்த குரு
பேசும் போது
பூனையை எதற்காக
தூணில் கட்டி வைத்தார்
என்ற விவரம் கூட
தெரியாமல்
அடுத்த வந்த குரு
தனக்கு முன்னால்
இருந்த குரு பின்பற்றிய
அதே முறையை
பின்பற்றி
தான் பேசும் போதும்
பூனையை தன் கண்ணில்
படுமாறு தூணில்
கட்டி வைக்கச் சொல்கிறார்.

இதைப்போலத் தான் நாம்
நம்முடைய முன்னோர்கள்
நமக்கு சொல்லி
விட்டுச் சென்ற
பழக்க வழக்கங்களில்
உள்ள அர்த்தம்
சரியா தவறா
என்று புரியாமல் நாம்
சடங்குகளையும்
பண்டிகைகளையும்
விழாக்களையும்
பின்பற்றி வருகிறோம்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-1


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-1

கொண்டு வந்தால் தந்தை ;
கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும் தாய் ;
சீர் கொண்டு வந்தால் சகோதரி ;
கொலையும்  செய்வாள் பத்தினி ;
உயிர் காப்பான் தோழன் ;

      -----எழுதிய ஆசிரியர்
         பெயர் தெரியவில்லை

இந்த சமுதாயத்தை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : முன்னோர்கள் சொல்லிச்
        சென்ற பழக்கவழக்கங்களை
         நம்புகிறவர்கள்

இரண்டு : முன்னோர்கள் சொல்லிச்
          சென்ற பழக்க வழக்கங்களை
         நம்பாதவர்கள்

சமுதாயத்தில் இருக்கும்
சடங்குகளை
பண்டிகைகளை
விழாக்களை
நாம் எதற்காக
கொண்டாடுகிறோம்
என்று கூட தெரியாமல்
அதில் உள்ள உண்மை
அர்த்தம் புரியாமல்
நாம் தொடர்ந்து
கண்ணை மூடிப்
பின்பற்றி வருகிறோம்

நம்பியவர்கள்
அவைகளை
நம்பிக்கையுடன்
இதில் ஏதாவது
அர்த்தம் இருக்கும்
நம் முன்னோர்கள்
நாம் நன்றாக
வாழ வேண்டும்
என்பதற்காக தான்
இதை உண்டாக்கி
வைத்து இருப்பார்கள்
என்ற நோக்கத்துடன்
அதில் உள்ள அர்த்தம்
புரியா விட்டாலும்
நம் முன்னோர்களின்
மேல் உள்ள
நம்பிக்கையினால்
அதை பின்பற்றி
வருபவர்கள்
முதல் பிரிவினர்.

நாம் கொண்டாடும்
சடங்குகள்
பண்டிகைகள்
விழாக்கள்
ஆகியவற்றில்
எந்தவித அர்த்தமும்
கிடையாது
அது மூட நம்பிக்கை
என்று அதை
கிண்டல் ,கேலி
செய்வதுடன்
அதை கொண்டாடுபவர்களை
அதாவது நம்முடைய
முன்னோர்களின்
பழக்க வழக்கங்களை
பின்பற்றுபவர்களை
கிண்டல், கேலி
செய்து வருபவர்கள்
இரண்டாம் பிரிவினர்.

நம் முன்னோர்கள்
ஒன்றும்
முட்டாள்கள் அல்ல
நாம் பின்பற்றும்
பழக்கவழக்கங்கள்
நம் வாழ்க்கையுடன்
ஒன்றுபட்டு
நமக்கு பயன் அளிக்கும்
என்ற நிலையில் தான்
வாழ்வியலை ஒட்டி
சடங்குகளையும்,
பண்டிகைகளையும்,
விழாக்களையும்,
உண்டாக்கி வைத்தனர்.

நாம் கண்ணை மூடி
பின்பற்றாமல் அதில் உள்ள
ஆழ்ந்த அர்த்தங்களை
புரிந்து கொண்டு
பயன்படுத்த வேண்டும்

அது மட்டுமல்லாமல்
மூடப் பழக்கம் என்று
கிண்டல், கேலி
செய்பவர்களையும்
அந்த பழக்கவழக்கங்களில்
உள்ள உள்ளளார்ந்த
அர்த்தத்தை சொல்லி
விளங்க வைக்க வேண்டும்

நம்புகிறவர்களுக்கே
அதில் உள்ள அர்த்தம்
தெரியாமல் பின்பற்றும்போது
நம்பாதவர்களுக்கு
எப்படி சொல்லி
புரிய வைக்க முடியும்

அதனால் தான்
சமுதாயம் இரண்டாக
பிரிந்து கிடக்கிறது
முன்னோர்களின்
பழக்க வழக்கங்களை
நம்புகிறவர்கள்
முன்னோர்களின்
பழக்கவழக்கங்களை
நம்பாதவர்கள்
என்ற இரண்டு பிரிவுகள்
ஏற்படக் காரணமாக
இருக்கிறது

முன்னோர்களின் பழக்க
வழக்கங்களை நம்புகிறவர்கள்
அதில் உள்ள அர்த்தத்தை
தெரிந்து கொண்டு
பின்பற்றுவார்களேயானால்
நம்பாதவர்களுக்கும்
அதை சொல்ல முடியும்
அதை விளக்க முடியும்

முன்னோர்களின் பழக்க
வழக்கங்களில் உள்ள
அர்த்தத்தை நாம்
தெரிந்து கொள்ள
முயற்சி செய்வோம்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////