October 30, 2018

திருக்குறள்-பதிவு-41


                     திருக்குறள்-பதிவு-41

பல ஆண்டு காலமாக
மக்களால் சரி என்று
ஏற்றுக் கொள்ளப்பட்டு
உண்மை என்று
நம்பப்பட்டு வந்த
ஒரு விதியை தவறு
என்று நிரூபிப்பதற்காக
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஒரு
விஞ்ஞானி ஏறிச் சென்று
கொண்டு இருந்தார்

மாபெரும் விஞ்ஞானி
அரிஸ்டாட்டில்
அவர்களின் விதியை
தவறு என்று
நிரூபிப்பதற்காக
அந்த விஞ்ஞானி
பைசா நகரத்து
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஏறிச் சென்று
கொண்டு இருந்தார்

இயேசு கிறிஸ்து
பிறப்பதற்கு
400 வருஷங்களுக்கு
முன்னர்
மகா அலெக்ஸாண்டர்
கீரிஸ் தேசத்தில்
அரசாண்டு கொண்டு
இருந்த போது
அவருக்கு ஆசிரியராக
இருந்தவர் தான்
இந்த அரிஸ்டாட்டில்
என்ற பேரறிஞர்
அவர் உலகப் புகழ்
பெற்ற பெரியவர்களில்
ஒருவர் அவர்
பல்வேறு துறைகளிலும்
ஆராய்ச்சிகள் பல
செய்து தான் கண்ட
ஆராய்ச்சிகளைப் பற்றியும்
ஆராய்ச்சியின்
முடிவுகளைப் பற்றியும்
நூல்கள் பல
எழுதி உள்ளார்

அரிஸ்டாட்டில் ஆராய்ச்சி
செய்து கண்ட
முடிவுகளையே அந்தக்
காலத்து மக்கள்
மற்றும் அறிஞர்கள்
எல்லோரும்
மறுக்க முடியாத
உண்மைகள் என்று
ஏற்றுக் கொண்டு
வந்து உள்ளனர்
அவருடைய ஆராய்ச்சிகள்
அனைத்தும்
இந்தக் காலத்திலும்
அனைத்து தரப்பினரும்
வியக்க வைக்கும்
விதத்தில் அமைந்து
இருப்பது அவருடைய
கண்டுபிடிப்பின்
சிறப்பாகும்

அத்தகைய உயர்ந்த
விஞ்ஞானியான
அரிஸ்டாட்டில் சொன்ன
விதி இது தான்

“”வெவ்வேறு
எடையுடைய
இரண்டு பொருட்களை
ஒரே உயரத்திலிருந்து
ஒரே நேரத்தில்
கீழே போட்டால்
அதிக எடையுடைய
பொருள் முதலிலும்,
லேசான பொருள்
பின்னரும்
தரையில் விழும்

அதாவது
ஒரே உயரத்திலிருந்து
கீழே விழும் இரண்டு
பொருட்களின்
எடைக்கு ஏற்றபடி
பூமியைத் தொடும்
காலம் மாறும் என்பது
தான் அரிஸ்டாட்டிலால்
சொல்லப்பட்டவிதி 

அரிஸ்டாட்டிலால்
சொல்லப்பட்ட இந்த
விதியைத் தான்
இந்த உலகம்
1900 வருடங்களாக
தவறு கண்டுபிடிக்காமல்
சரி என்று நம்பிக்
கொண்டு இருந்தது

அரிஸ்டாட்டிலின்
இந்த விதி தவறு
என்று அந்த
விஞ்ஞானி கருதினார்,

வெவ்வேறு எடை
கொண்ட இரண்டு
பொருட்கள்
ஒரே நேரத்தில்
மேலிருந்து
கீழே விழும்போது
அவை ஒரே நேரத்தில்
பூமியை அடையும்
என்று கூறினார்
அதை இந்த உலகம்
ஏற்றுக் கொள்ள மறுத்தது

அரிஸ்டாட்டில்
சொன்ன விதி தவறு
என்று நிரூபிக்க
விரும்பினார்
அந்த விஞ்ஞானி
நிறைய பார்வையாளர்களை
தன்னுடன் அழைத்துக்
கொண்டு சென்று
அவர்களை தரையில்
நிறுத்தி விட்டு
உலகப் புகழ்பெற்ற
பைஸா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
உச்சிக்கு ஏறிப்போனார்
அங்கிருந்து இரண்டு
இரும்பு குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழச் செய்தார்

ஒரு குண்டு
10 ராத்தல் எடை
கொண்டதாகவும்,
ஒரு குண்டு
ஒரு ராத்தல் எடை
கொண்டதாகவும் இருந்தன
அரிஸ்டாட்டில்
சொன்ன விதி
சரியாக இருக்குமானால்
ஒரு ராத்தல் குண்டு
தரையைத் தொட
10 நிமிடங்கள்
எடுத்துக் கொண்டால்
10 ராத்தல் குண்டு
ஒரு நிமிடம் எடுத்துக்
கொள்ள வேண்டும்
ஆனால் இரண்டு
குண்டுகளும் ஒரே
சமயத்தில் தரையில்
வந்து விழுந்தன

மேலிருந்து இரண்டு
வெவ்வேறு எடையுள்ள
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
எடுத்துக் காட்டினார்
அந்த விஞ்ஞானி

அந்த விஞ்ஞானி
செய்த இந்த சோதனை
வெவ்வேறு எடை
கொண்ட இரண்டு
பொருட்கள்
ஒரே நேரத்தில்
மேலிருந்து
கீழே விழும்போது
அவை வெவ்வேறு
நேரத்தில்
பூமியை அடையும்
என்ற அரிஸ்டாட்டிலின்
விதியினை தவறு
என்று நிரூபித்ததன்
மூலம் விஞ்ஞானத்திற்கு
புதிய அறிவுக் கதவு
திறக்கப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  30-10-2018
////////////////////////////////////////////////////


October 28, 2018

திருக்குறள்-பதிவு-40



                          திருக்குறள்-பதிவு-40

“”””கெடாஅ வழிவந்த
கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும்
உலகு”””””

உலகில் நண்பர்கள்
கொள்ளும் நட்பை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  :
தற்காலிகமான
நட்பு

இரண்டு :
நீண்ட காலமான
நட்பு

ஒரு இடத்தில்
வாழும்போதோ.
பள்ளியில்
படிக்கும் போதோ.
கல்லூரியில்
படிக்கும் போதோ.
வேலை
செய்யும் போதோ.
நண்பர்களாக
இருந்து
விட்டுப் பிரிந்து
சென்றவர்களுடைய
நட்பை
தற்காலிகமான
நட்பு எனலாம்.

ஒரு இடத்தில்
வாழும்போதோ,
பள்ளியில்
படிக்கும் போதோ,
கல்லூரியில்
படிக்கும் போதோ,
வேலை
செய்யும் போதோ,
நண்பர்களாக
இருந்தவர்கள்
வாழ்க்கை முழுவதும்
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருந்து கொண்டு
வருபவர்களுடைய
நட்பை
நீண்டகாலமான
நட்பு எனலாம்

ஏதேனும் ஒரு
காலகட்டத்தில்
ஆரம்பித்த நட்பு
பள்ளிப்படிப்பை
முடித்து விட்டு
பிரிந்து சென்றாலும்;
அதனைத் தொடர்ந்து
கல்லூரிப் படிப்பை
படித்து
முடித்து விட்டு
பிரிந்து சென்றாலும்;
அதனைத் தொடர்ந்து
வேலை தேடி
வேலையில் சேர்ந்து
வேலை செய்தாலும்;
அதனைத் தொடர்ந்து
திருமணம் நடந்து
வாழ்க்கையை
வாழ்ந்து
கொண்டிருந்தாலும்;
ஏதேனும் ஒரு
காலகட்டத்தில்
ஆரம்பித்த நட்பு
தொடர்ந்து
கொண்டிருந்தால்
அந்த நட்பை
நீண்ட காலமான
நட்பு எனலாம்
ஒத்த கருத்து
இல்லாமல் எந்த
நட்பும் நீண்ட காலம்
நட்பு கொண்டு
இருக்க முடியாது

ஒத்த
கருத்துடையவர்கள்
தான் நீண்டகாலமான
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருக்க முடியும்
ஒத்த கருத்து
இல்லாதவர்கள்
தற்காலிகமான
நட்பு கொண்ட
நண்பர்களாகத்
தான் இருக்க
முடியும்

நம்முடைய
வாழ்க்கையில்
நம்முடன்
நீண்ட காலமான
நட்பு கொண்டு
நம்முடன் வரும்
நண்பர்களை
ஆராய்ந்து பார்த்தால்
நாமும்
நம்முடைய
நண்பர்களும்
ஒத்த கருத்து
உடையவர்களாக
இருப்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்

நம்முடைய
வாழ்க்கையில்
வந்து சென்ற
தற்காலிகமான நட்பு
கொண்ட நண்பர்களை
ஆராய்ந்துப் பார்த்தால்
தற்காலிகமான நட்பு
கொண்ட நண்பர்கள்
அனைவரும்
ஒரு தேவையின்
அடிப்படையில்
நம்மிடம்
சேர்ந்திருக்கிறார்கள்
அவர்கள் தேவை
தீர்ந்தவுடன்
அவர்கள் நம்மை
விட்டு பிரிந்து
சென்று இருக்கிறார்கள்
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்
  
தேவையின்
அடிப்படையிலும்
ஒத்த கருத்து
இல்லாமலும்
தற்காலிகமான நட்பு
கொண்டு பிரிந்து
செல்லாமல்,
ஒத்த கருத்துடன்
நீண்டகாலமான
நட்பு கொண்டு
நண்பர்களாக
இருப்பவர்களைத் தான்
இந்த உலகம்
விரும்பும் என்பதை
உணர்ந்து கொண்டு
நாமும் தேவையின்
அடிப்படையில்
நட்பு கொள்ளாமல்
ஒத்த கருத்தின்
அடிப்படையில்
நீண்டகாலமான நட்பு
கொண்டு நண்பர்களாக
இருக்க வேண்டும்
என்பதைத் தான்

“”””கெடாஅ வழிவந்த
கேண்மையார்
கேண்மை
விடாஅர் விழையும்
உலகு”””””

 என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  27-10-2018
///////////////////////////////////////////


October 26, 2018

திருக்குறள்-பதிவு-39


                       திருக்குறள்-பதிவு-39

“”””பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப்படும்”””

எண்ணிலடங்காத
பல பிறவிகளை
பல்வேறுபட்ட
காலங்களில்
பல்வேறு நிலைகளில்
நாம் எடுத்து
துன்பம் என்னும்
துயரச் சேற்றில்
சிக்கி ஆற்றொணாத்
துயரத்தில்
தள்ளாடிக் கொண்டு
இருக்கிறோம்
இவ்வாறு தொடர்ந்து
நாம் ஓயாமல்
பல பிறவிகள்
எடுக்கக் காரணம்
பற்றை நாம்
பற்றிக் கொண்டு
இருப்பதே ஆகும்

நம்முடைய
உடைமை மீது
நாம் வைக்கும்
விருப்பத்தை
பற்று என்கிறோம்

இத்தகைய
பற்றை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று  : அகப்பற்று
இரண்டு : புறப்பற்று

நான் என்கிற
எண்ணம் தான்
அகப்பற்று எனப்படும்

எனது என்கிற
எண்ணம் தான்
புறப்பற்று எனப்படும்

நான் உழைத்தேன்
நான் சம்பாதித்தேன்
நான் எல்லோரையும்
காப்பாற்றினேன்
நான் நடத்தினேன்
நான் மிகவும்
அறிவாளி
நான் இந்த
செயலை செய்தேன்
இந்த செயலை
எண்ணால் தான்
செய்ய முடியும்
வேறு யாராலும்
செய்ய முடியாது
என்ற எண்ணம் தான்
நான் என்னும்
இந்த எண்ணம் தான்
அகப்பற்று எனப்படும்

என்னுடைய வீடு
என்னுடைய நிலம்
என்னுடைய நகை
என்னுடைய பணம்
என்னுடைய சொத்து
என்று கூறுகிறோமே
அந்த எனது
என்ற எண்ணம் தான்
புறப்பற்று எனப்படும்

ஒரு சட்டியில்
அரிசியைப் போட்டு
கட்டையினால்
நெருப்பை மூட்டி
அரிசியை கொதிக்க
வைத்துக்
கொண்டிருக்கிறோம்
அரிசியானது
கொதித்துக்
கொண்டிருக்கிறது
எரியும் கட்டையை
எடுத்து விட்டால்
அரிசியானது கொதிப்பது
நின்று விடும்
எரியும் கட்டை
என்பது காரணம்
அரிசி கொதிப்பது
என்பது காரியம்
காரணம் இல்லாமல்
காரியம் இல்லை

பற்று என்ற
காரணத்துடன்
பிறவி என்ற
காரியம் பிணைந்து
இருக்கிறது

எரியும் நெருப்புக்
கட்டையை எடுத்தால்
எப்படி அரிசியானது
கொதிப்பது
நின்று விடுகிறதோ
அதைப்போல
அகப்பற்று
புறப்பற்று
என்ற இரண்டு
பற்றுகளையும்
நம்மிடம் இருந்து
எடுத்து விடும்போது
நாம் இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விடுகிறோம்
எனவே, அது
அதுவாக மாறி
விடுவதால் நமக்கு
பிறவி என்பது
ஏற்படாது

அகப்பற்று
புறப்பற்று
என்ற இரண்டு
பற்றுகளையும்
விட்டு விட்டு
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விட்டவர்களுக்கு
பிறவி என்பது
கிடையாது
பற்றை எல்லாம்
விடாமல்
பற்றை பற்றிக்
கொண்டு
இருப்பவர்களுக்கு
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இறைவனாகவே
மாறாமல்
இருப்பவர்களுக்கு
பிறவி என்பது
ஏற்பட்டு வருத்தப்பட்டு
துன்பப்பட வேண்டியது
என்பதைத் தான்

பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப்படும்

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  26-10-2018
/////////////////////////////////////////////////