November 23, 2018

திருக்குறள்-பதிவு-56


                      திருக்குறள்-பதிவு-56

அறிவு வளர்ச்சி
அடைந்து வரும்போது
பைபிளில் உள்ள
முரண்பாடுகள்
திருத்தப்பட வேண்டும்
பைபிளில் உள்ள
கருத்துக்களை
ரோமன் கத்தோலிக்
நம்பிக்கையுடன்
இணைத்து எந்த
விஞ்ஞான
மெய்ப்பாட்டுக்கும்
மேற்கோளாகக் காட்டி
வாதிடக் கூடாது
என்று சொன்ன
கலிலியோ
தனது மூத்த மகள்
வெர்ஜீனியாவை
(Virginia Galieli)
பதிமூன்றாம் வயதில்
பிளாரென்ஸ் நகருக்கு
அருகே இருந்த
கிறிஸ்துவக்
கன்னி மாடத்தில்
(Christian Convent)
குடும்ப சூழ்நிலையின்
காரணமாக கன்னியாக
சேர்த்து விட நேர்ந்தது.

கன்னி மாடத்தில்
வெர்ஜீனியாவின்
ஞானப் பெயர்
மரியா ஸெலஸ்டி
(Maria Celeste)
என்று மாற்றப்பட்டு
அழைக்கப்பட்டு வந்தது

கலிலியோ தன் மகள்
வெர்ஜீனியாவின் மேல்
அளவற்ற அன்பு
வைத்து இருந்தார்.

வெர்ஜீனியா தன் தந்தை
கலிலியோவைப் போல்
கூர்ந்த அறிவும்
தெளிந்த சிந்தனையும்
நுணுக்கமான
ஆராயும் திறனும்
பெற்று அறிவில்
சிறந்து விளங்கினார்
என்று சொல்லலாம்

கலிலியோ
தொலை நோக்கியின்
மூலம் இப்பிரபஞ்சத்தில்
உள்ள கோள்களை
ஆராய்ச்சி செய்து
கொண்டிருந்த
சமயங்களில் எல்லாம்
வெர்ஜீனியாவும்
தன் தந்தையுடன்
சேர்ந்து அண்டக்
கோள்களை ஆராய்ச்சி
செய்து இருக்கிறார்

வெர்ஜீனியா தன்
தந்தை கலிலியோவை
கடவுளுக்கு இணையாக
மதித்து போற்றி
வாழ்ந்திருக்கிறாள்
என்பதையும் ;
கலிலியோ தான்
ஆராய்ச்சி செய்து
கண்ட பிரபஞ்சத்தின்
விந்தைகளை ;
கலிலியோ தன்
கண்களால் கண்ட
இப்பிரபஞ்சத்தின்
உண்மைகளை ;
கலிலியோ ஆராய்ச்சி
செய்து தான்
கண்ட முடிவுகளை ;
கலிலியோ
தான் ஆராய்ச்சி
செய்யும்போது
தனக்கு ஏற்பட்ட
கஷ்டங்களை ;
கலிலியோ
ஆராய்ச்சி செய்த
போது கலிலியோவிற்கு
ஏற்படுத்தப்பட்ட
இடையூறுகளை ;
கலிலியோ தன்
மகள் வெர்ஜீனியாவிற்கு
கூறி இருப்பதை ;
கன்னி மாடத்திலிருந்து
வெர்ஜீனியா
எழுதிய கடிதங்களில்
இருந்து தெரிந்து
கொள்ளலாம்


வெர்ஜீனியா
கலிலியோவிற்கு
21 ஆண்டுகளில்
124 கடிதங்கள்
எழுதி இருக்கிறாள்
வெர்ஜீனியாவின்
கடிதங்கள்
போற்றுதலுக்குரிய
அரிய கடிதங்களாக
மதிக்கப்படுகிறது ;
வரலாற்று ஆவணமாக
போற்றப்படுகிறது ;
வெர்ஜீனியாவின்
கடிதங்களில்
கலிலியோவின்
பல கண்டுபிடிப்புகள்
காணப்படுகின்றன
அவைகள் ஒன்றாக
தொகுக்கப்பட்டு
அத்தொகுப்பு அவரது
சரிதைக் காவியமாக
இன்றளவும்
பாதுகாக்கப்பட்டு
வருகிறது

கன்னிமாடத்தில்
தனித்து வாழ்ந்து
கொண்டிருந்த
கலிலியோவின்
அன்பு மகள்
செல்ல மகள்
வெர்ஜீனியா
1634-ஆம் ஆண்டு
மரணமடைந்தார்

வெர்ஜீனியா
மரணமடைந்து
விட்ட காரணத்தினால்
வெர்ஜீனியாவிற்கு
கலிலியோ எழுதிய
கடிதங்கள் அனைத்தும்
வெர்ஜீனியா இறந்த
பிறகு ரோமபுரிக்
கோயிலுக்கு பயந்து
கன்னிமாடத்தில்
எரிக்கப்பட்டது

வெர்ஜீனியா
மரணமடைந்த செய்தி
வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டு இருந்த
கலிலியோவிற்கு
தெரிவிக்கப் பட்டது
இச்செய்தியைக்
கேட்ட கலிலியோ
அதிர்ச்சி அடைந்தார்
சோகத்தில் வீழ்ந்தார்

தன்னுடைய
அன்பு மகள்
மரணமடைந்த செய்தி
கலிலியோவை
சோகத்தில்
ஆழ்த்திய போதிலும் ;
உலகத்தில் உள்ள
கிறிஸ்தவர்கள்
அனைவரும்
கலிலியோவுக்கு
எதிராக எதிர்த்து
நின்ற போதிலும் ;
வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டு இருந்த
கலிலியோ
தன்னுடைய
ஆராய்ச்சியை
தொடர்ந்து செய்து
கொண்டு இருந்தார்

---------  இன்னும் வரும்
---------  23-11-2018
///////////////////////////////////////////////////////////



November 22, 2018

திருக்குறள்-பதிவு-55


                     திருக்குறள்-பதிவு-55

உலகத்தில் உள்ள
எதிரிகளை எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று
நாம் உருவாக்கும்
எதிரி

இரண்டு
தானே உருவாகும்
எதிரி

நாம் இந்த
சமுதாயத்தில்
எந்தவித
பிரச்சினையும்
இல்லாமல்
நிம்மதியாக வாழ
வேண்டுமானால்
நாம் எதிரிகள்
யாரையும்
உருவாக்கிக்
கொள்ளாமல்,
நமக்கு எதிராக
எதிரிகள் யாரும்
உருவாகாமல்,
பார்த்துக் கொள்ள
வேண்டும்

எதிரிகளை
நாமே உருவாக்கிக்
கொண்டாலோ
(அல்லது)
நமக்கு எதிராக
எதிரிகள் தானாகவே
உருவானாலோ
நம்மால் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக வாழ
முடியாது

நம்முடன் நீண்ட
காலம் நண்பராக
இருந்த ஒருவர்
செய்த செயல்
நமக்கு பிடிக்காத
காரணத்தினால்
அவருடன் சண்டை
ஏற்பட்டு அந்த
நண்பர் நமக்கு
எதிரியானால்
அந்த எதிரி நாம்
உருவாக்கும் எதிரி

உலகம்
முழுவதும் உள்ள
பல்லாயிரக் கணக்கான
கிறிஸ்தவ மக்கள்
பைபிளை
புனித நூலாக
வைத்துப் போற்றுகின்றனர்
இத்தகைய
புனித நூலான
பைபிளில் உள்ள  
கருத்தான
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
கருத்து தவறானது
என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது
என்றும் கலிலியோ
சொன்ன காரணத்தினால்
உலகம் முழுவதும்
உள்ள கிறிஸ்தவ
மக்கள் கலிலியோவிற்கு
எதிராக எதிரியாக
நின்றனர்
இந்த எதிரி தானே
உருவாகும் எதிரி

நாம் உருவாக்கும்
எதிரியாக இருந்தாலும்
தானே உருவாகும்
எதிரியாக இருந்தாலும்
எதிரி என்பவர்
நம் வாழ்க்கையில்
இருந்தால்
நம்மால் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக
வாழ முடியாது

நாம் இந்த
சமுதாயத்தில்
நிம்மதியாக வாழ
வேண்டுமானால்
எதிரிகள் யாரும்
நம் வாழ்க்கையில்
இருக்கக் கூடாது

ஒரு சில எதிரிகள்
நமக்கு இருந்தாலே
நம்மால் நிம்மதியாக
இந்த சமுதாயத்தில்
வாழ முடியாது
என்றால்
உலகம் முழுவதும்
உள்ள பல்லாயிரக்
கணக்கான
கிறிஸ்தவர்கள்
கலிலியோவிற்கு
எதிரியாக மாறி
செய்த செயல்களால்
கலிலியோ தன்னுடைய
வாழ்க்கையில்
எவ்வளவு கஷ்டங்களை
அனுபவித்து இருந்திருப்பார் ;
எவ்வளவு இழப்புகளை
சந்தித்து இருந்திருப்பார் ;
எவ்வளவு அவமானங்களை
பெற்று இருந்திருப்பார் ;
எவ்வளவு திட்டுக்களை
கேட்டு இருந்திருப்பார் ;
எவ்வளவு கொடுமைகளை
கண்டு இருந்திருப்பார் ;
இவ்வளவு
பிரச்சினைகளையும்
தாங்கிக் கொண்டு
கலிலியோ தன்
குடும்பத்தை எப்படி
நடத்திக் கொண்டு
இருந்திருப்பார் ;
இவ்வளவு
இழப்புகளையும்
தாங்கிக் கொண்டு
கலிலியோ எப்படி
ஆராய்ச்சி செய்து
கொண்டு இருந்திருப்பார் ;
என்பதை நாம்
நினைத்துப் பார்த்தால்
கலிலியோவின்
வாழ்க்கை எப்படி
போராட்டமாக
இருந்திருக்கும் என்பதை
நம்மால் உணர்ந்து
கொள்ள முடியும்

---------  இன்னும் வரும்
---------  22-11-2018
///////////////////////////////////////////////////////////


November 21, 2018

திருக்குறள்-பதிவு-54


                      திருக்குறள்-பதிவு-54

பைபிள் என்பது
விண்ணில் உள்ள
பிதாவைப் பற்றி
அறிந்து கொள்வதற்கான
ஒரு மதநூல்
தானே தவிர;
பைபிள் ஒன்றும்
விண்ணில் உள்ள
கோள்களைப் பற்றி
அறிந்து கொள்வதற்கான
ஒரு அறிவியல் நூல்
அல்ல; என்று சொன்ன
கலிலியோவின்
புத்தகம் மொத்தமாக
போட்டு எரிக்கப்பட்டுக்
கொண்டிருந்தது

கலிலியோவின் புத்தகத்தை
போட்டு எரிப்பதுடன்
கிறிஸ்தவ மதவாதிகளின்
கோபம் அடங்கவில்லை
எரிந்து கொண்டிருக்கும்
புத்தகத்தைச்சுற்றி
மதவாதிகள் சுற்றி வந்து
கலிலியோ ஒழிக !
சாத்தான்
கலிலியோ ஒழிக !
மதத் துரோகி
கலிலியோ ஒழிக !
என்று கோஷம்
எழுப்பினர்

சிலர் அதற்கும் மேலே
போய் கலிலியோவைக்
கொல்ல வேண்டும்;
கலிலியோவை உயிரோடு
எரிக்க வேண்டும்;
என்று கத்தி
ஆர்ப்பாட்டம் பண்ணிக்
கொண்டு இருந்தனர்

இவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்
கலிலியோவிற்கு
எதிராக நாடு முழுவதும்
நடந்து கொண்டிருந்த
சமயத்தில் கலிலியோ
வீட்டுக் காவலில்
வைக்கப்பட்டார்.

விசாரணை
மண்டபத்தில் வைத்து
கலிலியோவை விசாரித்து
கலிலியோவை
வீட்டுக் காவலில்
வைக்க வேண்டும் என்று
தண்டனை வழங்கப் பட்டு
கலிலியோ வீட்டுக்
காவலில் வைக்கப்பட்ட
போது கலிலியோவிற்கு
வயது 69


பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்று சொன்ன
டாலமியின் கருத்து
தவறானது என்றும்,
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று சொன்ன
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கருத்து
சரியானது என்றும்
நான் என்னுடைய
ஆய்வின் மூலம்
நிரூபித்து இருக்கிறேன்.

என்னுடைய கருத்து
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருக்கின்ற காரணத்தினால்
நான் சொன்ன கருத்து
தவறானது என்று
நீங்கள் சொல்வதை
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாது

சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நான் சொன்ன
கருத்து சரிதான்
அதை என்னால்
மாற்றிக் கொள்ள
முடியாது என்று
கலிலியோ
எதற்கும் அஞ்சாமல்
போப் அவர்களின்
எச்சரிக்கைக்கும்
பயப்படாமல்
உயிரைப் பற்றி
கவலைப்படாமல்
தன்னுடைய கருத்தை
கூறிய காரணத்தினால்
விசாரணையின்
முடிவில் கலிலியோவை
மண்டியிட வைத்து
விடலாம்
என்று நினைத்த
கிறிஸ்தவ மதவாதிகள்
எண்ணம் ஈடேறவில்லை

பல்வேறு விதமான
சட்டதிட்டங்களுடன்
கடுமையான
விதிகளுடன் கலிலியோ
வீட்டுக் காவலில்
வைக்கப் பட்டார்

கலிலியோவிற்கும்
வெளி உலகத்திற்கும்
எந்தவிதத்திலும் தொடர்பு
இருக்கக் கூடாது
என்று கலிலியோவின்
வெளி உலகத்
தொடர்புகள் அனைத்தும்
துண்டிக்கப் பட்டன
வெளி உலகத்திலிருந்து
பிரிக்கப்பட்டு கலிலியோ
இந்த உலகத்திலிருந்து
தனிமைப்படுத்தப் பட்டார்

கலிலியோவிற்கு
ஆராய்ச்சி செய்வதற்கு
பல்வேறு கடுமையான
நிபந்தனைகளுடன்
அனுமதி அளிக்கப்பட்டது
அவருடைய கண்டுபிடிப்புகள்
பைபிளுக்கு எதிராக
இருக்கக் கூடாது எனவும்,
கிறிஸ்தவர்களின் மனதை
புண்படுத்தும் விதத்தில்
எந்தவிதமான கண்டுபிடிப்பும்
இருக்கக் கூடாது
எனவும் கடுமையான
நிபந்தனைகள் விதிக்கப்பட்டு
கலிலியோ ஆராய்ச்சி
செய்வதற்கு அனுமதி
அளிக்கப்பட்டது

கலிலியோ இவைகள்
எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
வெளி உலகத்திலிருந்து
தான் தனிமைப்
படுத்தப் பட்டிருக்கிறோம்
என்று தெரிந்தும்;
உலக தொடர்பிலிருந்து
தான் துண்டிக்கப்
பட்டிருக்கிறோம்
என்று தெரிந்தும்;
வீட்டுக் காவலில்
தனக்கு எதிராக
கடுமையான விதி
முறைகள் பின்பற்றப்
படுகின்றன
என்று தெரிந்தும்;
மோசமான சட்ட
திட்டங்கள் தனக்கு
எதிராக செயல்
படுத்தப் பட்டிருக்கிறது
என்பது தெரிந்தும்;
எவைகளைப் பற்றியும்
கவலைப்படாமல்
மண்டியிடாத
மாபெரும் விஞ்ஞானியான
கலிலியோ வீட்டுக்
காவலில் தன்னுடைய
ஆராய்ச்சிகளை தொடர்ந்து
செய்து கொண்டிருந்தார்

--------- இன்னும் வரும்
---------  21-11-2018
///////////////////////////////////////////////////////////