December 02, 2018

திருக்குறள்-பதிவு-61


                    திருக்குறள்-பதிவு-61

ஒத்த எண்ணம்
கொண்டவர்கள்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டு இருந்தாலும்,
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருப்பார்கள்

தாயையும், தாரத்தையும்
எடுத்துக் கொள்வோம்
  
மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பு
மகன் இரும்புவதை
நேரில் காணும் தாய்
இவ்வாறு சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆன பின்பு மகனுடன்
தொலைபேசியில்
பேசும் போது தாய்
இவ்வாறு சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பும் ;
மகனுக்கு திருமணம்
ஆன பின்பும் ;
மகனுக்கு உடல்நிலை
சரியில்லாதபோது
தாய் சொல்லும்
வார்த்தைகள் இவை.

காதலனுக்கும், காதலிக்கும்
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலியை
நேரில் சந்திக்கும்
காதலன் இரும்புகிறான்
காதலி இவ்வாறு
சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு  தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

காதலன், காதலி
திருமணம் செய்து
கணவன், மனைவி
ஆன பின்பு,
மனைவி தொலைபேசியில்
பேசும்போது
கணவன் இரும்புகிறான்
மனைவி இவ்வாறு
சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

காதலன், காதலிக்கு
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலனுக்கு
உடல்நிலை சரியில்லாத
போது காதலியும் ;
காதலன், காதலிக்கு
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
ஆன பின்பு ;
கணவனுக்கு உடல்நிலை
சரியில்லாத போது
மனைவியும் ;
சொல்லும்
வார்த்தைகள் இவை.
  
தாயும், தாரமும்
சொன்ன வார்த்தைகளை
நன்றாக ஒப்பிட்டு
மீண்டும் ஒரு முறை
படித்துப் பார்த்தால்
ஒரு எழுத்து மாறாமல்
வேறு வேறு
சூழ்நிலைகளில் இருவரும்
பேசி  இருப்பதை நாம்
உணர்ந்து கொள்ளலாம்
இவ்வாறு
தாயும். தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும் எண்ணத்தில்
ஒன்று படுகிறார்கள்
அதாவது தாயானவள்
தன்னுடைய மகனுடைய
உடல்நலத்தின் மீதும்
தாரமானவள் தன்னுடைய
கணவனின் உடல்நலத்தின்
மீதும் அக்கறையுடன்
இருக்கிறார்கள்
இது தான்
தாயும், தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும்
எண்ணத்தில்
ஒன்றுபடுவது

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
தாங்கள் கண்டு பிடித்த
கண்டு பிடிப்புகளை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னது
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டதைக் குறிக்கிறது
தாங்கள் சொன்ன
கருத்திற்காக தங்களுடைய
உயிரை இழப்பதற்கும்
தயாராக இருந்தது
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருந்ததைக் குறிக்கிறது

---------  இன்னும் வரும்
---------  02-12-2018
///////////////////////////////////////////////////////////


November 30, 2018

வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்






                            வாழ்த்து மடல்


தலைமை ஆசிரியர்
பணிக்கான
ஆணையைப் பெற்று,  
தலைமை ஆசிரியர்
பணியில்
30-11-2018-ஆம் தேதி
வெள்ளிக் கிழமை
பணியில் சேர்ந்த
என்னுடைய
இரண்டாவது
அண்ணன்
திரு,K.தர்மேந்திரராஜ்
அவர்களை
வாழ்த்துகிறேன் !

சுட்டெரிக்கும்
சூரியனின்
சுடர் நெருப்பில்
உதித்து வந்த
உயர்வுகளின் தலைவனே !

சுழன்றடிக்கும்
சூறாவளிக்
காற்றைக்
கடந்து வந்த
காவியத்தின் நாயகனே !

கல்லாதவருக்கும்
இல்லாதவருக்கும்
கல்விக் கண் திறந்த
அருட்பெருஞ்
ஜோதியில் பூத்த
அறிவுக் கடலே !

உறவுகளின்
உன்னத அன்பில்
உயிர்த்திருக்கும்
அன்பில் விளைந்திருக்கும்
அருள் நிதியே !

அறிவை
அறிவால் அறிந்து ;
அறிவை பயன்படுத்தும்
வழி அறிந்து ;
அறிவாய்
நின்றவர்களையும்
வீழ்த்தும்
உபாயம் அறிந்து ;
போட்டியாளர்களை
போட்டித்
தேர்வில் வீழ்த்தி ;
போட்டித்
தேர்வில் கிடைத்த
வெற்றி மாலையையும்
புகழ் மாலையையும்
அணிந்து ;
அன்பாய் ,
அறிவாய் ,
எளிமையாய் ,
ஆசிரியப்
பணியில் சேர்ந்து ;

மாணவர்கள்
உயர்வு ஒன்றையே
கருத்தில் கொண்டு
அதற்காக உழைத்து ,
உணவு அருந்தாமல்
கண் உறக்கம்
கொள்ளாமல் ,
ஆசிரியப்
பணிக்கென்று
தனியாக ஒரு
நேரத்தை ஒதுக்காமல் ,
பள்ளி ;
மாணவர்கள் ;
பாடம் ; - என்ற
மூன்றை மட்டுமே
வாழ்க்கையின்
தாரக மந்திரமாகக்
கொண்டு
உழைத்தால்
இப்படித் தான்
உழைக்க வேண்டும்
என்று
உழைப்பிற்கு
உதாரணமாக இருந்து ,
ஆசிரியராக இருந்தால்
இப்படித் தான்
இருக்க வேண்டும்
என்று
பெரியோர்களால்
பாராட்டப்பட்டு ,
சிறந்த ஆசிரியராக
பணியில்
சிறப்பிடம் பெற்று ,

காலம் தன்
கணக்கை முடிக்க
கபட நாடகம்
நடத்தினாலும் ,
விதி தன்
முடிவுரையை தீட்ட
எழுதுகோலை எடுத்து
எழுத துடித்தாலும் ,
வரலாற்றை மாற்றி
புதிய வரலாறு
படைத்து
புதிய வார்ப்பாய் ;
புனித மனிதனாய் ;
உயிர்த்தெழுந்து , 

தலைமை ஆசிரியராக
பதவி ஏற்றிருக்கும்
தங்களுக்கு
கடவுள் அருள்
மட்டுமல்ல
கடவுள் துணையும்
என்றும் உண்டு
என்று வாழ்த்தும் !

அன்பு தம்பி
K.பாலகங்காதரன்

தம்பியின் மனைவி
P.பிரதீபா பாலகங்காதரன்

அன்பு அம்மா
K.சொர்ணம்


////////////////////////////////////////////////







November 29, 2018

திருக்குறள்- பதிவு-60


                      திருக்குறள்- பதிவு-60

பிறரை ஏமாற்றுவதை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று:
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இரண்டு:
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது
என்பது சிறிது காலம்
தான் நீடிக்கும் - ஆனால்,
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது
என்பது 
காலம் காலமாக
நீடித்துக் கொண்டிருக்கும்

முதல் பெண்ணின்
மகள் வீட்டை
விட்டு வெளியேறி
தான் காதலித்த
பையனை திருமணம்
செய்து கொண்டார்
இதைக் கேள்வி பட்ட
இரண்டாவது பெண்
முதல் பெண்ணிடம்
உங்கள் மகள்
வீட்டை விட்டு போய்
காதலித்த பையனை
திருமணம் செய்து
கொண்டதாக
கேள்வி பட்டேன்
வருத்தமாக இருக்கிறது
என்று சொல்கிறார்
அதற்கு முதல் பெண்
அப்படி எல்லாம்
ஒன்றும் இல்லை
என்னுடைய மகள்
அவளுடைய
மாமாவினுடைய
வீட்டிற்கு சென்று
இருக்கிறாள்
என்கிறாள் இது தான்
பிறருக்கு தெரிந்து
பிறரை ஏமாற்றுவது

இந்தியன் என்ற
படத்தையும்
அந்நியன் என்ற
படத்தையும்
எடுத்துக் கொண்டால்
இரண்டு படங்களும்
ஒரே கருத்தைத் தான்
சொல்ல வருவது
தெரியும் அதாவது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”
என்ற கருத்தை
சொல்ல வரும் படம்

இந்தியன் படத்தை
எடுத்துக் கொள்வோம்
அதில் இரண்டு கமல்
முதல் கமல்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது கமல்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்

இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று பேர்கள்
பிரித்து செய்வார்கள்
அதாவது
ஒருவர் மூன்று
நிலைகளில் பிரிந்து
செயலைச் செய்வார்
முதல் நிலையில்
இருக்கும் விக்ரம்
வேலை செய்வார்
காதல் செய்வார்
இரண்டாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
காதல் செய்வார்
மூன்றாவது நிலையில்
இருக்கும் விக்ரம்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வார்


இந்தியன் படத்தில்
இருவர் செய்த செயலை
அந்நியன் படத்தில்
மூன்று நிலைகளில்
மூன்று நபர்கள்
பிரித்து செய்வார்கள்


இந்தியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டு பிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

அந்நியன் படத்தில்
கொலை செய்தவர்
யார் என்று
கண்டுபிடிக்க ஒரு
கும்பல் சுற்றிக்
கொண்டு அலையும்

இந்தியன் படத்தில்
முதல் கமல் மறைந்து
இரண்டாவது கமல்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
கமல் தப்பியது
போல் காட்டப்படும்

அந்நியன் படத்தில்
முதல் விக்ரம்
மற்றும் இரண்டாம்
விக்ரம் மறைந்து
மூன்றாவது விக்ரம்
தப்பு செய்தால்
கொலை செய்வேன்
என்பார்
கொலை செய்த
விக்ரம் தப்பியது
போல் காட்டப்படும்

இரண்டு படங்களும்
ஒரே ஒரு கருத்தைத்
தான் சொன்னது
“தப்பு செய்தால்
கொலை செய்ய
வேண்டும்
தப்பு செய்பவர்களை
கொலை செய்வதில்
தப்பில்லை”

இந்த இரண்டு
படங்களிலும்
சொல்லப்பட்ட கருத்து
ஒன்று என்றாலும்
பிரம்மாண்டம்
என்ற பெயரில்
கோடிக்கணக்கான
பணத்தை செலவழித்து
பெரிய நடிகர்கள்
சிறந்த தொழில்நுட்ப
வல்லுநர்கள்
ஆகியோரை வைத்து
ஒரு டைரக்டர்
அவர் படத்தை
அவரே காப்பி அடித்து
எடுத்த படத்தை
மக்களை பார்க்க
வைத்து இருக்கிறார்
இது தான்
பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுவது

பிறருக்கு தெரியாமல்
பிறரை ஏமாற்றுபவர்கள்
தான்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தை
ஆண்டு வந்திருக்கிறார்கள்

அவர்கள் தான் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியார்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
சொன்ன கருத்து தவறு
என்று சொன்னார்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  28-11-2018
///////////////////////////////////////////////////////////