December 06, 2018

திருக்குறள்-பதிவு-63


                       திருக்குறள்-பதிவு-63

கி.பி.87-150
ஆண்டுகளில் வாழ்ந்த
கிரேக்க ஞானி
டாலமி (Ptolemy)
தான் எழுதிய
இரண்டு நூல்களான
மாபெரும்
வானியல் ஞானி ;
(The Great
Astronomer)
அல்மகெஸ்ட் ;
(Almagest)
என்னும் இரண்டு
நூல்களில் தன்னுடைய
பூமி மையக்
கோட்பாட்டை விளக்கி
சொல்லி இருந்தார்

பூமியே பிரபஞ்சத்தின்
மையம் ஆகும் ;
அது அசையாமல்
நகராமல் அப்படியே
நிலைத்து நிற்கிறது ;
எல்லா அண்டங்களும்
பிரபஞ்சத்தின்
மையமாக இருக்கும்
பூமியை நோக்கி
வருகின்றன ;

பூமியை
மையமாக வைத்து
நிலவு,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
எனக் கூறப்படும்
வரிசையில்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
சுற்றி வருகின்றன ;

டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
ஒன்றுபட்டு இருந்த
காரணத்தினாலும் ;
ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
ஏற்றுக் கொண்ட
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளால்
ஒப்புக் கொள்ளப்பட்ட
காரணத்தினாலும் ;
1500 ஆண்டுகளாக
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு
வந்தது

1500 ஆண்டுகளாக
மக்களால்
நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற டாலமியின்
பூமி மையக்
கோட்பாட்டு
தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்ன
காரணத்திற்காக
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அச்சுறுத்தப்பட்டார்

பல்வேறு
அச்சுறுத்தல்களுக்கும்
இடையூறுகளுக்கும்
இடையில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
ஆராய்ச்சியை தொடர்ந்து
செய்து கொண்டு
இருந்தார்,

1517-ஆம்
ஆண்டு முதல்
1530-ஆம்
ஆண்டு வரை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
சூரிய மையக்
கோட்பாட்டை
பல்வேறு குறியீடுகள்
எண்கள்
எழுத்துக்கள்
வரை படங்கள்
ஆகியவற்றின் மூலம்
பல்வேறு
உதாரணங்கள் மூலம்
எடுத்துக் காட்டி  
அவர் தன்னுடைய
இரண்டாவது நூலான
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions of the
Heavenly Spheres
என்ற தன்னுடைய
நூலில் தன்னுடைய
சூரிய மையக்
கோட்பாட்டை
விளக்கி உள்ளார்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
இரண்டாவது நூலில்
வலியுறுத்தி சொன்ன
கோட்பாடு இது தான்
பூமி தினமும்
தன்னச்சில்
தன்னைத் தானே
ஒரு முறை
சுற்றிக் கொண்டு
சூரியனையும்
ஓராண்டில்
சுற்றி வருகிறது
அந்த சமயம் பூமி
பம்பரம் போன்று
தலை சாய்ந்து
ஆடுகிறது
பிற அண்டங்களும்
சூரியனை மையமாக
வைத்து சுற்றி
வருகின்றன
பிரபஞ்சத்தின்
உண்மையான மையம்
சூரியன்,
பூமி இல்லை
சூரியனை
விண்கோள்கள்
வட்ட வீதியில்
சீரான வேகத்தில்
(Uniform Motion
in Circular Orbits)
சுற்றி வருகின்றன
என்று ஆணித்தரமாக
கூறினார்

---------  இன்னும் வரும்
---------  06-12-2018
///////////////////////////////////////////////////////////


December 04, 2018

திருக்குறள்-பதிவு-62


                      திருக்குறள்-பதிவு-62

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
(Nicolaus Coper Nicus)
போலந்து நாட்டின்
ராயல் புருசியாவில்
தோர்ன் என்ற நகரில்
1473 -ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம்
19-ஆம் தேதி
பிறந்தார்

இவரது தந்தை
கிராக்கொவ் நகரில்
பெரிய வணிகர்
தாயார்
பார்பரா வாட்சன்ராட்
தோர்ன் நகரின்
மிகப் பெரிய
செல்வந்தரின் மகள்

இவர்களுக்கு
நான்கு பிள்ளைகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
கடைசி பிள்ளை
11-வது வயதில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தன்னுடைய
அப்பாவை இழந்தார்

நிக்கோலஸின்
தாய்மாமன்
லூகாஸ்
வாக்ஸன்ரோடு
என்பவர்
நிக்கோலஸையும்
அவரது உடன்பிறப்புகள்
ஒரு சகோதரர்
இரண்டு சகோதரிகள்
ஆகியோரையும்
வளர்த்தார்

கணிதப் பேராசிரியர்
டாமினிகோ நோவாரா
(DOMENICO NOVARA)
என்பவருடைய வீட்டில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தங்கி இருக்க
வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வானியல், பூகோளம்
ஆகியவற்றில்
ஆர்வம் எழக்
காரணமாக இருந்தவர்
டாமினிகோ நோவாரா

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் மற்றும்
டாமினிகோ நோவாரா
இருவரும் சேர்ந்து
வானத்தில் உள்ள
விண்மீன்களை
உற்று கவனிப்பதும்
சந்திர கிரகணத்தை
ஆராய்வதும்
போன்ற செயல்களைச்
செய்தனர்

டாலமி மற்றும்
கிரேக்க விஞ்ஞானிகளின்
வானியல் கொள்கைகளை
டாமினிகோ நோவாரா
அவருக்கு கற்பித்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
டாலமியின் பூமி மையக்
கோட்பாட்டை
படித்து அதை
ஏற்றுக் கொள்ளவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
மருத்துவப் படிப்பை
தொடராது வெறும்
மதச் சட்ட்த்தில்
டாக்டர் பட்டம் வாங்கி
போலந்துக்கு சென்றார்

அங்கே பிரௌன்பர்க்
என்னும் நகரில்
கிறிஸ்துவப் பாதிரியாக
நியமனம் ஆகிப்
பணிபுரிந்து வந்தார்,.

இத்தகைய
சூழ்நிலையில்
1514-ல் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ் அவர்கள்
Commentariolus
(Latin
For “Small
Commentary”)
என்ற 40 பக்கங்கள்
கொண்ட புத்தகம்
ஒன்றை வெளியிட்டார்
அதில் முக்கியமாக
7 கோட்பாடுகள்
கூறப்பட்டன

அதில் சொல்லப்பட்ட
முக்கியமான
கோட்பாடு இது தான்
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்ற வில்லை
சூரியனை மையமாக
வைத்து தான்
பூமி சுற்றுகிறது
என்பதே அந்த
கோட்பாடு

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் சேகரித்து
வைத்திருந்த
பல தகவல்களையும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து
வைத்திருந்த
தகவல்களையும்
வைத்து பல
ஆண்டுகளாக
மக்கள் நம்பிக்
கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டை மாற்றி
சூரிய மையக்
கோட்பாட்டை
எடுத்து வைத்தார்

மேலும் அறிவியலில்
பல ஆண்டுகளாக
பலர் சேகரித்து
வைத்திருக்கும்
தகவல்களை
வைத்து ஒரு
முடிவுக்கு வரலாம்
என்ற புதியதொரு
வழிமுறையையும்
கொண்டு வந்தார்

அதற்கு முன்பு
வரை யாராவது
ஒருவரின் எண்ணத்தில்
தோன்றுவது தான்
கண்டுபிடிப்புகள்
என்ற நிலையில்
இருந்தன

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இதனை
மாற்றிக் காட்டினார்
பல தகவல்களை
வைத்து இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்று முடிவுக்கு
வந்தார்
இப்போது பல
கண்டுபிடிப்புகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வழிமுறையையே
பின்பற்றி
நடத்தப்படுகின்றன

இதனை அறிமுகப்
படுத்தியவரும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  04-12-2018
///////////////////////////////////////////////////////////


December 02, 2018

திருக்குறள்-பதிவு-61


                    திருக்குறள்-பதிவு-61

ஒத்த எண்ணம்
கொண்டவர்கள்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டு இருந்தாலும்,
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருப்பார்கள்

தாயையும், தாரத்தையும்
எடுத்துக் கொள்வோம்
  
மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பு
மகன் இரும்புவதை
நேரில் காணும் தாய்
இவ்வாறு சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆன பின்பு மகனுடன்
தொலைபேசியில்
பேசும் போது தாய்
இவ்வாறு சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

மகனுக்கு திருமணம்
ஆவதற்கு முன்பும் ;
மகனுக்கு திருமணம்
ஆன பின்பும் ;
மகனுக்கு உடல்நிலை
சரியில்லாதபோது
தாய் சொல்லும்
வார்த்தைகள் இவை.

காதலனுக்கும், காதலிக்கும்
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலியை
நேரில் சந்திக்கும்
காதலன் இரும்புகிறான்
காதலி இவ்வாறு
சொல்கிறார்
ஏண்டா இரும்புகிறாய் ;
உடம்பு சரியில்லையா ?
மாத்திரை போட்டாயா ?
கஷாயம் வைத்து குடி
ஜுரம் குறையவில்லை
என்றால்
டாக்டரைப் போய் பார் ;
சும்மா வேலை வேலை
என்று அலையாதே ;
இரண்டு மூன்று
நாட்கள் விடுமுறை
எடுத்து ஓய்வு எடுத்த
பிறகு வேலைக்கு போ ;
நமக்கு உடம்பு  தான்
முக்கியம் வேலை
எப்போது வேண்டுமானாலும்
பார்த்துக் கொள்ளலாம் ;
முதலில் உடம்பைப் பார் ;
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய
முடியும் என்கிறார்.

காதலன், காதலி
திருமணம் செய்து
கணவன், மனைவி
ஆன பின்பு,
மனைவி தொலைபேசியில்
பேசும்போது
கணவன் இரும்புகிறான்
மனைவி இவ்வாறு
சொல்கிறார்
கண்ட கண்ட இடத்திற்கு
சுற்ற வேண்டியது ;
கண்ட கண்ட தண்ணீரை
குடிக்க வேண்டியது ;
மழையில் நனையாதே
நனையாதே என்று
சொன்னால் சொல்
பேச்சைக் கேட்காமல்
மழையில் நனைந்து
ஊர் ஊராக
அலைய வேண்டியது ;
இப்போது நோய் வந்தால்
யார் அவஸ்தைப்படுவது ;
என்கிறார்.

காதலன், காதலிக்கு
திருமணம் ஆவதற்கு
முன்பு காதலனுக்கு
உடல்நிலை சரியில்லாத
போது காதலியும் ;
காதலன், காதலிக்கு
திருமணம் முடிந்து
கணவன், மனைவி
ஆன பின்பு ;
கணவனுக்கு உடல்நிலை
சரியில்லாத போது
மனைவியும் ;
சொல்லும்
வார்த்தைகள் இவை.
  
தாயும், தாரமும்
சொன்ன வார்த்தைகளை
நன்றாக ஒப்பிட்டு
மீண்டும் ஒரு முறை
படித்துப் பார்த்தால்
ஒரு எழுத்து மாறாமல்
வேறு வேறு
சூழ்நிலைகளில் இருவரும்
பேசி  இருப்பதை நாம்
உணர்ந்து கொள்ளலாம்
இவ்வாறு
தாயும். தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும் எண்ணத்தில்
ஒன்று படுகிறார்கள்
அதாவது தாயானவள்
தன்னுடைய மகனுடைய
உடல்நலத்தின் மீதும்
தாரமானவள் தன்னுடைய
கணவனின் உடல்நலத்தின்
மீதும் அக்கறையுடன்
இருக்கிறார்கள்
இது தான்
தாயும், தாரமும்
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டாலும்
எண்ணத்தில்
ஒன்றுபடுவது

நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
கியோர்டானோ புருனோ
கலிலியோ ஆகியோர்
தாங்கள் கண்டு பிடித்த
கண்டு பிடிப்புகளை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னது
ஒரு விஷயத்தை
அணுகும் முறையில்
வேறுபட்டதைக் குறிக்கிறது
தாங்கள் சொன்ன
கருத்திற்காக தங்களுடைய
உயிரை இழப்பதற்கும்
தயாராக இருந்தது
எண்ணத்தில் ஒன்றுபட்டு
இருந்ததைக் குறிக்கிறது

---------  இன்னும் வரும்
---------  02-12-2018
///////////////////////////////////////////////////////////