March 08, 2019

திருக்குறள்-பதிவு-121


                    திருக்குறள்-பதிவு-121

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அவர் உயிரோடு
எரிக்கப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தில் வைக்க
வேண்டும் என்று
அரசாலும் ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்களாலும்
முடிவு செய்யப்பட்டது “

“ கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்டவருடைய
சிலையை வாட்டிகனுக்கு
அருதில் வைப்பது
என்பது  - தங்களை
இழிவு படுத்தும் செயல்
என்று கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை ;
சர்ச்சுகள் ; ஒட்டு
மொத்த  கிறிஸ்தவர்களும்
எதிர்த்தனர்  ; “

“ எதிர்ப்பானது
பேச்சு வார்த்தை
வாக்குவாதம், சண்டை
என்று சென்று
ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகனுக்கு அருகில்
வைக்கலாம் - ஆனால்
சூரியனை பார்த்தவாறு
அமைக்கப்பட வேண்டும்
என்று முடிவு
செய்யப்பட்டு சிலை
வடிக்கப்பட்டது ”

“ ஆனால் தற்போது
செதுக்கி வைக்கப்பட்டு
திறப்பு விழாவிற்காக
காத்துக் கொண்டிருக்கும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை
சூரியனைப் பார்த்தவாறு
இல்லாமல் ;
வாட்டிகன் நகரத்தை
நோக்கி பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ளது ; “

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு தங்களை
எதிர்த்த ஜியார்டானோ
புருனோவின் சிலையை
நிறுவுவது என்பது
தங்களால் ஏற்றுக்
கொள்ள முடியாத
ஒன்று - என்று
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ;
உலகில் உள்ள ஒட்டு
மொத்த கிறிஸ்தவ
மக்களும் ; எதிர்த்தனர்”

“ வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு வைக்கப்படும்
ஜியார்டானோ
புருனோவின் சிலை ஒட்டு
மொத்த கிறிஸ்தவர்களையும்
இழிவு படுத்தும்
ஒரு செயல்  ;
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு - இந்த
சிலையை வைக்கக்கூடாது ;
என்று அனைத்து
கிறிஸ்தவர்களும்
போராட்டம் நடத்தினர் ; “

“ சூரியனை பார்ப்பது
போல் சிலையை
நிறுவுகிறோம் - என்று
சொன்னவர்கள் ;
இன்று சிலையை
வாட்டிகன் நகரத்தைப்
பார்த்தவாறு அமைத்தது ;
என்பது – ஒரு
ஏமாற்று வேலை ;
நயவஞ்சக செயல் ;
பித்தலாட்டத்தின் உச்சம் ;
நம்பிக்கை துரோகம் ;
என்று கிறிஸ்தவர்கள்
அனைவரும் தங்கள்
எதிர்ப்பை தெரிவித்தனர் ; “

“ சூரியன் என்பது
இருளை நீக்கி
ஒளியைத் தருவது ;
இருண்டு கிடக்கும்
வாட்டிகன் நகரம்
ஜியார்டானோ
புருனோவின் பார்வை
பட்டு ஒளிபெற
வேண்டும் என்ற நல்ல
நோக்கத்திற்காகவே ;
ஜியார்டானோ புருனோவின்
சிலை வாட்டிகன்
நகரத்தைப் பார்த்து
அமைக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
வாட்டிகன் நகரத்தை
பார்த்த வண்ணம்
தான் இருக்கும் ;
சூரியனைப் பார்த்த
வண்ணம் சிலையை
மாற்றி அமைக்க
முடியாது ; ‘

“ இதற்காக எங்கள்
உயிரையும் இழப்பதற்கு
நாங்கள் தயாராக
இருக்கிறோம் ;
என்றனர் ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள் ; “

“ ஜியார்டானோ
புருனோவினுடைய
ஆதரவாளர்கள்
இவ்வாறு சொன்ன
காரணத்தினால்
சிறிய நெருப்பாக      
புகைந்து கொண்டிருந்த
பிரச்சினை - பெரிய
எரிமலையாக வெடிக்க
ஆரம்பித்ததது ;”

“ இரண்டு பிரிவினருக்கும்
வாக்குவாதங்கள் ;
பேச்சு வார்த்தைகள் ;
சண்டைகள் ;
உச்ச கட்டத்தை
அடைந்தன ; “

“ பேச்சு வார்த்தைகள்
பெரும்பாலும் ஒரு
குறிப்பிட்ட விஷயத்தை
மையமாக வைத்தே
பெரும்பாலும் இருந்தன “

“அந்த பேச்சுவார்த்தைகள்
நடந்த விதம்
இப்படித் தான்………………………?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  08-03-2019
//////////////////////////////////////////////

March 07, 2019

மகளிர் தின வாழ்த்து மடல்


                   மகளிர் தின வாழ்த்து மடல்
                            08-03-2019 

அன்பிற்கினியவர்களே,

“ பெண் புத்தி -
பின் புத்தி (பழமொழி)”

புத்தியை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்.

     ஒன்று  : முன்புத்தி
     இரண்டு : பின்புத்தி

முன்பு நடந்த
செயல்களுடைய
விளைவுகளின் நன்மை,
தீமைகளைக் கண்டு
அதனை
நினைவில் கொண்டு
அதனடிப்படையில்
தற்போது செயல்களைச்
செய்வதற்கு பயன்படுத்தும்
புத்திக்கு பெயர் முன்புத்தி.

தற்போது செய்யப்படும்
செயல்களால்
பிற்காலத்தில்
என்னவிதமான
விளைவுகளின் நன்மை,
தீமைகள் ஏற்படும்
என்பதை யோசித்து
அதனடிப்படையில்
செயல்களைச் செய்வதற்கு
பயன்படுத்தும்
புத்திக்கு பெயர் பின்புத்தி.

முன்புத்தி என்பது
முன்னால் நடந்த
செயல்களின் விளைவுகளை
மனதில் வைத்து தற்போது
செயல்களைச் செய்வது.
இது நடந்த நிகழ்வுகளை
அடிப்படையாகக் கொண்டு
செய்வது.

பின்புத்தி என்பது
பின்னால் நடக்கப்போகும்
விளைவுகளை மனதில்
வைத்து - தற்போது
செயல்களைச் செய்வது.
இது நடக்கப்போகும்
நிகழ்வுகளை
அடிப்படையாகக்
கொண்டு செய்வது.

முன்புத்தியில் செயலும்,
விளைவும் தெரியும்.

பின்புத்தியில் விளைவு
அனுமானமாகத் தான்
தெரியும்

இந்த பின்புத்தியை
அனைவராலும் பயன்
படுத்த முடியாது. - இதை
பெண்கள் அதிகமாக
பயன்படுத்துகிறார்கள்.

தனக்கு முன்னால்
காதலித்து திருமணம்
செய்து கொண்டு
இன்பமாக இருப்பவர்களின்
வாழ்க்கையை பார்க்கும்
ஒரு ஆண் நாமும்
ஒரு பெண்ணை
காதலித்து திருமணம்
செய்து கொண்டால்
இன்பமாக இருக்கலாம்
என்று நினைக்கிறான்.
தான் விருப்பப்படும்- ஒரு
பெண்ணை காதலிக்க
அவள் விருப்பத்தைக்
கேட்கிறான் - இது
முன்னால் நடந்த
செயல், விளைவுகளை
மனதில் வைத்து தற்போது
செயல்களைச் செய்வது
இது முன்புத்தி.

ஆனால் ஒரு பெண்
நாம் இப்போது
காதலித்தால்
பிற்காலம் நம் குடும்பம்
பாதிக்கப்படும் குடும்பத்தில்
அமைதி குலையும்
வருத்தங்கள் ஏற்படும்
என்ற நிலைகளை
மனதில் யோசித்து
காதலை தவிர்க்கிறார்.
இது பின்னால் நடக்கும்
விளைவை மனதில்
வைத்து தற்போது
செயல்களைச் செய்வது
இது பின்புத்தி,

கடன் வாங்கி
சொந்த வீடு கட்டி
இருப்பவர்களை பார்க்கும்
கணவன் தானும்
கடன் வாங்கி சொந்த
வீடு கட்ட வேண்டும்
என்று நினைத்து
செயல்களைச் செய்கிறான்.
இது முன்னால் ஒருவர்
செய்த செயல்,
விளைவுகளை மனதில்
வைத்து தற்போது
செயல்களைச் செய்வது.
இது முன்புத்தி.

கடன் வாங்கி
வீடு கட்டினால்
பிற்காலம்
கடனை அடைப்பது
கடினமாக இருக்கும்
கடனை அடைக்க
முடியாமல்
வருத்தப்பட
வேண்டியிருக்கும்
பல்வேறு இன்னல்களை
சந்திக்க நேரிடும்
என்று யோசித்து
தற்போது கடன் வாங்கி
வீடு கட்ட வேண்டாம்
என்று முடிவெடுப்பது
இது தற்போது
செய்யப்படும் செயலால்
பின்னால் ஏற்படும்
விளைவுகளை
மனதில் வைத்து
செயல்களைச் செய்வது.
இது பின்புத்தி

ஒரு பெண்
காதலியாக இருந்தாலும்,
மனைவியாக இருந்தாலும்,
எந்த ஒரு நிலையில்
இருந்தாலும் - தற்போது
ஒரு செயலைச்
செய்யும் போது பின்னால்
ஏற்படும் விளைவுகளின்
நன்மை, தீமைகளை
உணர்ந்து –
அதற்கேற்றவாறு
செயல்களைச் செய்வதால்
பெண்புத்தி பின்புத்தி
என்றார்கள்.

பெண்களின் பெருமையை
உயர்த்துவதற்காக
சொல்லப்பட்ட பழமொழி
இன்று பெண்களை
இழிவு படுத்தும்படி
அமைந்து விட்டது
என்பதை - நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்.

எந்த ஒன்றையும் நுணுகி
ஆராய்ந்து தொலை
நோக்கு பார்வையுடன்
செயல்படும் பெண்களை
பிறந்தது முதல்
இந்த உலகத்தில்
வாழும் காலம் வரை
தனக்காக இல்லாமல்
பிறருக்காகவே வாழும்
மனித தெய்வங்களான
பெண்களை
போற்றுவோம்- அவர்கள்
மதிப்புணர்ந்து அவர்களை
வணங்குவோம் !

08-03-2019 - மகளிர்
தின வாழ்த்துக்கள்.!!

என்றும் அன்புடன்,
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////////////////



March 06, 2019

திருக்குறள்-பதிவு-120


                    திருக்குறள்-பதிவு-120

“மூன்று கூறுகளாக
பிரிக்கப்பட்டுள்ள
ஜியார்டானோ
புருனோவின்
முழு உருவ
வெண்கல சிலை  ;
மூன்று விதமான
தன்மைகளைக்
கொண்டு ;
மூன்று விதமான
முக்கிய செய்திகளைச்
சொல்கிறது ; “  

“ முதல் கூறில்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல
சிலை உள்ளது  

“ இரண்டாவது கூறில்
ஜியார்டானோ
புருனோவுடன்
சம்பந்தப்பட்ட 8
நபர்களின் உருவங்கள்
பொறிக்கப்பட்டுள்ளது,  

“ மூன்றாவது கூறின்
மூன்று பக்கங்களில்
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கையில் நடந்த
மூன்று முக்கியமான
நிகழ்ச்சிகளும்,  

“ மூன்றாவது கூறின்
நான்காவது பக்கத்தில்
ஒரு முக்கிய
வாசகமும் இடம்
பெற்றுள்ளது, “

“ ஜியார்டானோ
புருனோ
சிலையின்
மூன்றாவது
கூறின் நான்காவது
பக்கத்தில்
எழுதப்பட்டுள்ள
எழுத்துக்கள்
இது தான். “

ITALIAN

IX GIVGNO
MDCCCLXXXIX
A BRVNO
IL SECOLO DA
LVI DIVINATO
QVI
DOVE IL ROGO
ARSE

ENGLISH

TO BRUNO-
FROM THE AGE
HE PREDICTED
HERE WHERE
THE FIRE BURNED

தமிழ்

சிலையின்
விவரங்களைப் பற்றி
தெரிவிக்கும் விதத்தில்
அமைந்துள்ள இந்த
வார்த்தைகளில்
இடம்பெற்றுள்ள
முக்கியமான ஒரு
வாசகம் இது தான்

“நெருப்பை
நெருப்பால்
எரித்த இடம்
இங்கு தான்”

இந்த மூன்று
கூறுகளும்
இணைந்தது தான்
ஜியார்டானோ
புருனோவின் முழு
உருவ வெண்கல சிலை.

“ ஜியார்டானோ புருனோ
என்பவர் யார்……..……..?
அவர் எத்தகைய
கொள்கைகளைக்
கொண்டவர் ;
அவர் தன்னுடைய
வாழ்க்கையை
எத்தகைய
போராட்டங்களுக்கு
மத்தியில் வாழ்ந்தவர் ;
அவர் எதற்காக
கொல்லப்பட்டார் ;
அவரைக்
கொன்றவர்கள்
யார்…………………..?
அவர்கள்
அனைவரும்
எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவர்கள் ;
ஆகியவற்றை
மட்டுமல்ல
ஜியார்டானோ
புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை
பற்றி தெரிந்து கொள்ள
வேண்டுமானால் ,
சிலையின் அனைத்து
கூறுகளில் உள்ள
ஆழமான
அர்த்தங்களைத்
தெரிந்து கொண்டாலே
போதும் ;”

“ 1889-ஆம் ஆண்டு
எட்டோர் ஃபெராரி
(Ettore Ferrari)
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலையை
வடித்து முடித்தார் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம்
9-ம் தேதி திறக்க
முடிவு செய்யப்பட்டது, “

“ ஆனால்,
ஜியார்டானோ
புருனோவின் சிலையை
திறக்கக்கூடாது - என்று
எதிர்ப்புக் குரல்கள்
ஓங்கி ஒலிக்கத்
தொடங்கியது
சண்டைகள்
நெருப்பென பற்றி
எரியத் தொடங்கியது “

“ ஜியார்டானோ
புருனோவின்
ஆரவாளர்களுக்கும் ;
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்ப்பாளர்களுக்கும் ;
இடையே மிகப்
பெரிய போர்
மூளத் தொடங்கியது ; “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  06-03-2019
//////////////////////////////////////////////