March 13, 2019

திருக்குறள்-பதிவு-125


                     திருக்குறள்-பதிவு-125

“உலகமே உற்றுக்
கவனித்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கும் நாளான
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம்
9-ம் தேதி அதிகாலை
சூரியன் உதிக்க
ஆரம்பித்து விட்டது ;
விடியல் விடியத்
தொடங்கி விட்டது ;
உயிர்கள் விழிக்கத்
தொடங்கி விட்டது ;”

“ வீடுகளிலும் ;
தெருக்களிலும் ;
கடைகளிலும் ;
மக்கள் கூடும்
அனைத்து இடங்களிலும் ;
மக்களுடைய
பேச்சுச் சத்தமோ
மக்களுடைய
காலடி ஓசையோ
எதுவுமே கேட்கவில்லை ;
மக்கள் அனைவரும்
தங்களுடைய வீட்டின்
கதவுகள் ;
ஜன்னல்கள் ; ஆகிய
அனைத்தையும்
அடைத்து வைத்து
விட்டு வீட்டிற்குள்
அமைதியாக இருந்தனர் “

“மக்கள் அனைவரும் தங்கள்
உயிரை கைகளில் பிடித்துக்
கொண்டு என்ன
நடக்கப் போகிறதோ என்ற
அச்சத்துடன் இருந்த
காரணத்தினால் - யாரும்
வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ”

“தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தது ;
அந்த நகரம் முழுவதும்
மயான அமைதி நிலவியது ;

“சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக
மேலேறத் தொடங்கியது ;”

“ அந்த நேரத்தில் யாரும்
எதிர்பாராத வகையில்
தெருக்களில் மக்கள்
பேசும் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
வீட்டிற்குள்
இருந்தவர்களுக்கு கேட்டது “

“ நேரம் ஆக ஆக
மக்களுடைய
பேச்சுச் சத்தமும் ;
காலடி ஓசையும் ;
அதிகரித்துக்
கொண்டே வந்தது; “

“ மக்கள் அனைவரும்
கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டை விட்டு வெளியே
வரத் தொடங்கினர் ;
அவர்கள் அனைவரும்
ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
என்ற இடத்தை நோக்கி
சென்று அந்த இடத்தில்
ஒன்றாக கூடினர் “

“ அந்த இடத்தில் உள்ள
வீடுகளில் உள்ளவர்கள்
தங்கள் வீடுகளிலுள்ள
கதவுகளையும் ;
ஜன்னல்களையும் ;
திறந்து வெளியே நடக்கும்
நிகழ்வுகளை பார்த்துக்
கொண்டு இருந்தனர் ;
மாடிகளில் ஏறி நின்று
கொண்டு பார்த்துக்
கொண்டு இருந்தனர் ; “

“அந்த இடம் முழுவதும்
மக்கள் வெள்ளத்தால்
நிரம்பி வழிந்தது ;
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்கள் மட்டுமல்ல
மக்களும் அதிக அளவில்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ;”

“ கத்தோலிக்க திருச்சபையின்
எச்சரிக்கையையும் மீறி
ஏராளமானவர்கள் அந்த
இடத்தில் கூடி இருந்தனர் “

“சிறுவர் முதல் முதியோர்
வரை வயது பேதம்
இல்லாமல் அந்த இடத்தில்
கூடி இருந்தனர் “

“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
உண்மையானது ;
நியாயமானது ; - என்று
நினைத்து அவரைப்
பின்பற்றுபவர்கள் ;
தலை சிறந்த
தத்துவ மேதைகள் ;
சிறந்த அறிஞர்கள் ;
புகழ் பெற்ற பேச்சாளர்கள் ;
என்று கணக்கிலடங்காதவர்கள்
அந்த இடத்தில்
கூடி இருந்தனர் ; “

“ மக்கள் வெள்ளத்தால்
அந்த இடமே நிரம்பி
வழிந்து கொண்டிருந்தது ;
மக்கள் தொடர்ந்து
அந்த இடத்தை நோக்கி
வந்து கொண்டு இருந்தனர் ; “

“ வெயிலின் தாக்கம்
அதிகமாக இருந்தது ;
மக்கள் அனைவரும்
வெயிலின் வெம்மையிலிருந்து
தங்களை பாதுகாத்துக்
கொள்வதற்காக
தாங்கள் கொண்டு வந்த
குடையை பிடித்துக் கொண்டு
நின்று கொண்டு இருந்தனர் ; “

“ பலத்த கரகோஷங்களுக்கு
இடையே மக்களுடைய
ஆரவாரங்களுக்கிடையே
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை ;
வாத்திகனைப் பார்த்தவாறு
அமைக்கப்பட்டுள்ள சிலை ;
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
திறக்கப்பட்டது ;”

“ அடிமை விலங்கை
அறுத்தெறிய வந்த
புரட்சியாளர் ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

“ மதவெறிக்கு
அடிபணியாத மாமேதை ;
ஜியார்டானோ புருனோ
வாழ்க ! “

என்று அங்கு கூடியிருந்த
மக்கள் எழுப்பிய கரகோஷம்
அந்த நகரத்தையே
அதிர வைத்தது.

“ சிலையைத் திறந்து
வைத்து - அறிஞர்கள்
ஆற்றிய உரை வரலாற்று
முக்கியத்துவம் கொண்டவை
அவைகள்……………………………….!”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  13-03-2019
//////////////////////////////////////////////
1889-ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 9-ம் தேதி
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தவாறு
திறக்கப்பட்ட
ஜியார்டானோ
புருனோவின்
சிலை இது தான்
///////////////////////////////////////////////







March 12, 2019

திருக்குறள்-பதிவு-124


                     திருக்குறள்-பதிவு-124

“ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் ;
ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
வாத்திகன் நகரத்தைப்
பார்த்தபடியும் தான் ;
அமைக்கப்படும் என்று
ஜியார்டானோ
புருனோவின்
ஆதரவாளர்கள்
திட்டவட்டமாக சொல்லி
விட்ட காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவின்
ஆதரவாளர்களும் ;
ஜியார்டானோ புருனோவின்
எதிர்ப்பாளர்களும் ;
தங்கள் பேச்சுவார்த்தைகளை
முடித்துக் கொண்டனர் “

“ ஜியார்டானோ புருனோ
உயிரோடு எரித்து
கொல்லப்பட்ட இடமான
காம்போ டி ஃபியோரி
(Campo dei Fiori)
மீது ஜியார்டானோ
புருனோவின் சிலை
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ புருனோ
எரிந்த சரியான
இடத்தில் ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
அமைக்கப்பட்டு
திறக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் பார்வை
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடியும் ;
சிலை வாத்திகன்
நகரத்தைப் பார்த்த
வண்ணமும் தான்
அமைக்கப்படும் என்றும் ;

ஜியார்டானோ
புருனோவின் சிலை
1889-ஆம் ஆண்டு
ஜுன்மாதம் 9-ம் தேதி
திட்டமிட்டபடி
திறக்கப்படும்
என்றும் அறிவிக்கப்பட்டது ; “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறக்கப்படக் கூடாது ;
அப்படியே திறக்கப்பட்டாலும்
வாத்திகன் நகரத்தை
பார்த்தபடி
இருக்கக் கூடாது ;
என்று போராடிய
வாத்திகன் நகரம் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை ;
சர்ச்சுகள் ; கிறிஸ்தவர்கள் ;
ஆகியோருக்கு இந்த
செய்தி பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையைச்
சேர்ந்தவர்கள்
ஒவ்வொரு வீட்டின்
கதவைத் தட்டி
அந்த வீட்டில்
உள்ளவர்களிடம்
பேசினர் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்க வேண்டும் ;
ஜியார்டானோ
புருனோவின் சிலை
திறப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்காமல் ஆதரவு
அளித்து சிலை
திறப்பு விழாவில்
கலந்து கொண்டால் ;

கிறிஸ்தவ மதத்தின்
மூலம் பெற்று வரும்
அனைத்து சலுகைகளும்
ரத்து செய்யப்படும் ;

சர்ச்சின்
உறுப்பினரிலிருந்து
நீக்கப்படுவார் ;
உலகின் எந்த மூலையில்
உள்ள சர்ச்சிலும்
அவர்கள் உறுப்பினராக
இருக்க முடியாது ;

சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்
கிறிஸ்தவ மதத்திலிருந்து
நீக்கப்படுவார் என்று
அறிவுறுத்தப்பட்டது ; “

“ இந்த செயல் அந்த
நகரம் முழுவதும்
நடைபெற்றது “

“ இதற்கு ஜியார்டானோ
புருனோ ஆதரவாளர்கள்
எதிர்வினை எதுவும்
ஆற்றாமல் இருந்தது
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையினர்
மத்தியிலும் ;
கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ;
மக்கள் மத்தியிலும் ;
பெருத்த ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது ; “

“ அவர்களுடைய அமைதி
எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்தும் என்று
தெரியாமல் அனைவரும்
ஆச்சரியம் கலந்த
பயத்துடன் இருந்தனர் ‘

“ சிலை திறப்பு விழாவிற்கு
முந்திய நாள்
என்ன நடக்கும்
எது நடக்கும் - என்று
கலக்கத்துடன் - அந்த
நகரமே அமைதியாக
இருந்தது - மக்கள்
நடமாட்டம் இல்லாமல்
தெருக்கள் அனைத்தும்
வெறிச்சோடிக் கிடந்தன “

“நேரம் ஆக ஆக
மக்கள் யாருமே
தெருவில் நடமாடவில்லை ;
ஏதேனும் அசம்பாவிதம்
நிகழ்ந்து அதில் மாட்டிக்
கொள்ளக்கூடாது ;
என்பதற்காக
மக்கள் அனைவரும்
முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக வீட்டை
பூட்டிக் கொண்டு
வீட்டிற்குள் இருந்தனர் ;
யாரும் வீட்டை விட்டு
வெளியே வரவில்லை ; ‘

“ சிலை திறப்புக்கு
முந்திய நாளே
இப்படி இருந்தால்
சிலை திறப்பு அன்று
எத்தகைய விளைவுகள்
ஏற்படுமோ என்று
அஞ்சி மக்கள்
அனைவரும் ஒருவித
பயத்துடனே இருந்தனர் “

“ ஜியார்டானோ புருனோவின்
சிலை திட்டமிட்டபடி
திறக்கப்படுமா
திறக்கப்படாதா என்ற
கேள்விக்குறியுடன்
உலகமே உறங்காமல்
விழித்துக் கொண்டிருந்தது “

“கொஞ்சம் கொஞ்சமாக
இரவு விடிந்து
கொண்டிருந்தது  

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  12-03-2019
//////////////////////////////////////////////


March 11, 2019

திருக்குறள்-பதிவு-123


                   திருக்குறள்-பதிவு-123

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நடிக்க வேண்டிய
அவசியம் எங்களுக்கு
இல்லை "

" நாங்கள் பிரச்சினையை
தீர்ப்பதற்காக வந்தோம் ;
நீங்கள் பிரச்சினையை
தீர்க்க வேண்டும்
என்ற நோக்கத்துடன்
வந்ததாகத் தெரியவில்லை ; "

" பிரச்சினையை மேலும்
மேலும் வளர்க்கும்
விதத்தில் பேசிக்
கொண்டிருக்கிறீர்கள் "

" ஜியார்டானோ
புருனோவை
மதத்துடன் தொடர்புபடுத்தி
மதப் பிரச்சினையை
பெரிசு பண்ணாமல்
அமைதியை நிலைநாட்ட
என்ன செய்ய வேண்டுமோ
அதை யோசியுங்கள்
அதை பேசுங்கள் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" அமைதியை எந்த
வகையில் நிலை நாட்ட
வேண்டும் – என்று
நீங்கள் நினைக்கிறீர்கள் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" சிலையை வாட்டிகனைப்
பார்ப்பது போல் அமைப்பது
அமைதியின்மையைத்
தான் ஏற்படுத்தும் "

" மேலும், மேலும்
பிரச்சினை ஏற்படத்
தான் வழிவகுக்கும் "

" ஜியார்டானோ
புருனோவினுடைய
சிலையை வாட்டிகனைப்
பார்ப்பது போல்
அமைக்காமல்
சூரியனை பார்ப்பது
போல் அமைக்க வேண்டும் "

" இது தான் பிரச்சினையை
தீர்ப்பதற்கான ஒரே வழி "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" சூரியனை நோக்கி
வைப்பதால் ஒரு பயனும்
இல்லை - அதனால் தான்
நாங்கள் வாட்டிகன்
நகரத்தைப் பார்ப்பது
போல் ஜியார்டானோ
புருனோவின் சிலையை
நிறுவ இருக்கிறோம் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" அவசரத்தில் எடுக்கப்படும்
முடிவுகள் அவதியைத்
தான் கொண்டு வரும் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
" இது அவசரத்தில்
எடுக்கப்பட்ட முடிவு அல்ல
யோசித்து எடுத்த முடிவு
இந்த முடிவில் எந்தவித
மாற்றமும் இல்லை "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நீங்கள் உங்கள் முடிவை
மாற்றிக் கொள்ளவில்லை
எனில் அது எத்தகைய
விளைவுகளை
ஏற்படுத்தும் என்பதை
யோசித்துப் பார்த்தீர்களா "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
 "நாங்கள் எதையும் பார்க்க
துணிந்து விட்டோம்
எதைக் கண்டும்
அஞ்ச மாட்டோம் "

" நாங்கள் சிலையை
வாட்டிகன் நகரத்தை
நோக்கித் தான்
அமைப்போம் "

" நாங்கள் சிலையை
மாற்றி அமைக்க
மாட்டோம் என்று
சொன்னால்……………………….? "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நாங்கள் மாற்றி
அமைப்போம் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள்
" உங்களால் முடியாது "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" ஏன் முடியாது "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" உங்களால்
ஒரு உயிரைத் தான்
கொல்ல முடியும் ;
எந்த ஒன்றையும்
ஆக்கவோ - மாற்றி
அமைக்கவோ
உங்களால் முடியாது "

" மாற்றி அமைக்க
வேண்டும் என்று
நீங்கள் எப்போதோ
முடிவு எடுத்து
இருந்தால் கிறிஸ்தவ
மதத்தில் சீர்திருத்தம்
கொண்டு வந்து
கிறிஸ்தவ மதத்தை
மாற்றி அமைத்து
இருப்பீர்கள் "

" உங்களால் முடியாத
காரணத்தினால் தான்
இங்கு வந்து
மன்றாடிக் கொண்டு
இருக்கிறீர்கள் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
" நாங்கள் யாரிடமும்
சென்று மன்றாட
வேண்டிய அவசியம்
எங்களுக்கு இல்லை "

" மக்களின்
அமைதிக்காகத் தான்
நாங்கள் அமைதியாக
இருக்கிறோம் ;'

" இறுதியாக என்ன
சொல்ல வருகிறீர்கள் "

" சிலையை சூரியனைப்
பார்த்தவாறு
நிறுவப் போகிறீர்களா
இல்லையா "

" உங்களுடைய இறுதி
முடிவு தான் என்ன "

யார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
"எங்களுக்கு இறுதி
முடிவு என்ற
ஒன்று இல்லை ;
ஒரே முடிவு தான்
ஜியார்டானோ
புருனோவின் சிலையை
சூரியனைப் பார்த்தவாறு
அமைக்க மாட்டோம்"

" வாட்டிகன் நகரத்தைப்
பார்ப்பது போல் தான்
அமைப்போம் "

ஜியார்டானோ புருனோ
எதிர்ப்பாளர்கள் :
 "சூரியனைப் பார்ப்பது
போல் நாங்கள்
வைப்போம் "

ஜியார்டானோ புருனோ
ஆதரவாளர்கள் :
" அது நாங்கள்
இறந்தால் தான்
நடக்கும் "

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-03-2019
//////////////////////////////////////////////