June 12, 2019

பரம்பொருள்-பதிவு-23


                        பரம்பொருள்-பதிவு-23

9.யாகசாலை
“ஆலயத்தின்
வடமேற்கு மூலையில்
யாகசாலை
அமைக்கக் கூடாது ;
ஆலயத்தின்
வடமேற்கு
மூலையைத்
தவிர வேறு
ஏதேனும்
திக்குகளில்
ஏதாவது ஒன்றில்
யாகசாலை
அமைக்க வேண்டும் ;”

“வடகிழக்கு
மூலை என்று
சொல்லப்படுகின்ற
ஈசானமூலை
யாகசாலை
அமைப்பதற்கு
உத்தமமாகக்
கருதப்படுகின்றது”

“யாகசாலை
அமைக்கும்போது
பந்தல்கால்களை
நிறுவுவதற்கென்று
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுதியான மரங்களை
உபயோகிப்பார்கள் ;
தென்னை
ஓலைகளைக் கொண்டு
பின்னப்பட்ட
தடுக்குகளை
மேலே கோப்பாக
மூடுவார்கள் ;
இவைகள் மழை
வெயில்
ஆகியவற்றிலிருந்து
யாகசாலையை
பாதுகாப்பாதுடன் ;
பந்தலுக்குக் கீழ்
உள்ள அனைத்து
பகுதிகளுக்கும்
குளிர்ச்சியைத் தந்து;
அந்த இடங்கள்
முழுவதையும்
குளிர்ச்சியாக
வைத்திருக்கும் ;”

“யாகசாலைப்
பகுதியை மூங்கில்
பிளாச்சுகளையும் ;
மண்சுவர்களையும் ;
கொண்டு எளிய
முறையில்
தற்காலிகத் தேவைக்கு
ஏற்றபடியே
அமைக்கிறார்கள் ;”

“இந்த எல்லைக்குள்
தேவைப்படும் வகையில்
தேவையான
இடத்தைக் கணக்கிட்டு
ஆகம சாஸ்திர
முறைகளின்படி
வேதிகை (மேடையை)
அமைப்பார்கள்”

“கோயிலில்
எத்தனை கடவுள்
சிலைகளை
நிறுவ வேண்டுமோ?
அத்தனை கடவுள்
சிலைகளிலும்
உள்ள கடவுள்
சக்தியை இயங்க
வைப்பதற்கு ;
எத்தனை கும்பங்கள்
வைக்க வேண்டுமோ
அத்தனை கும்பங்களை
வைக்க வேண்டும்”

“இந்த யாகசாலையில்
இரண்டு காலம்
முதல் ஆறுகாலம்
வரையில்
ஹோமம், பலி,
தியானம், பூஜை
முதலியவற்றால்
ஆராதனை
செய்வார்கள்”

“தூப, தீப, சோடச,
உபசாரங்கள்,
வேத பாராயணம்,
திருமுறை ஓதுதல்
முதலியவற்றோடு
ஒருகால பூஜை
நிறைவேறும்”

“இவ்வாறு 3, 5, 7
அல்லது 9 தினங்கள்
சக்திக்குத் தகுந்தபடி
யாகசாலையில்
பூஜைகள்
நடத்தப்படும்”

“இவ்வாறு தொடர்ந்து
பூஜைகள்
செய்வதன் மூலம்
பிரபஞ்சத்திலிருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பங்களில்
இறக்கப்பட்ட
கர்ப்பக்கிரகத்தில்
உள்ள கடவுள்
சிலையில் உள்ள
கடவுள் சக்தி மற்றும்
ஏனைய கடவுள்
சிலைகளில் உள்ள
கடவுள் சக்திகள்
அனைத்தும் அந்தந்த
கடவுள் சக்தி உள்ள
கும்பங்களில் தனது
பரிபூரண நிலையை
அடைகிறது “

“மந்திரங்களால்
செய்யப்படும்
தொடர்ச்சியான
கிரியைகளால் ஏற்படும்
சூட்சும சலனங்களால்
குறிப்பிட்ட
கடவுள் அம்சமானது
குறிப்பிட்ட கலசத்தில்
பரிபூரண நிலையில்
முழுமை அடைகிறது “

“பிரபஞ்சத்தில் இருந்து
கிரகிக்கப்பட்டு
கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்யும் பணியானது
யாகசாலையில்
நடைபெறுகிறது”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 11-06-2019
/////////////////////////////////////////////////////


June 08, 2019

பரம்பொருள்-பதிவு-22


                    பரம்பொருள்-பதிவு-22

8.கலாகர்ஷணம்
(சக்தி அழைத்தல்)

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து
கிரகித்த கடவுள்
சக்தியை
கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“அதாவது
கும்பாபிஷேகம்
செய்யப்படும்
கடவுள் சிலையின்
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து
கிரகித்தல்
என்று பொருள்”

“எந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
கும்பத்தில்
இறக்க வேண்டுமோ ?
அந்த கடவுள்
சிலைக்கு முன்னால்
ஏற்கனவே தயார்
செய்து
வைத்திருக்கும்
கும்பத்தை
அந்தக் கடவுள்
சிலைக்கு முன்னால்
வைக்க வேண்டும் “

“அந்த கடவுள்
சக்தியை
வித்யா தேகமாக
இருக்கும்
அந்தக் கும்பத்தில்
இறக்க வேண்டும்”

“கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியானது
குறிப்பிட்ட
காலம் வரையில்
அந்த கும்பத்தில்
இருக்கும் வகையில்
மந்திரக் கிரியைகள்
செய்யப்பட
வேண்டும்”

“அவ்வாறு செய்தபின்
அந்தக் கும்பத்தை
தகுந்த ஆசாரியன்
தலையில்
வைத்து கோயிலைச்
சுற்றி வரச்
செய்ய வேண்டும்”

“கும்பத்தை
ஆசாரியன்
தலையில் வைத்து
கோயிலைச்
சுற்றி வரச்
செய்யும் போது
மங்கள வாத்தியங்கள்
அனைத்தும்
இசைக்கப் பட
வேண்டும்;
வாத்திய
கோஷங்கள்
அனைத்தும்
முழங்கப்பட
வேண்டும் ;
நான்கு வேதங்கள்
பாராயணம்
செய்யப்பட வேண்டும் ;
திருமுறை
ஓதப்பட வேண்டும் ;
சாமரம் ,
குடை ,
கொடி விதானம் ,
மங்கள விதானம் ,
மங்கள தீபம் ,
தீவர்த்தி ,
இவைகளோடு
அழைத்து வர
வேண்டும் ;
வாசனைப்பொடி ,
சந்தனம் ,
பன்னீர்  ,
இவற்றைத்
தெளித்துக் கொண்டு
வர வேண்டும் ;”

“எட்டு திசைகளிலும்
தேங்காய்
சிடலையிட்டு ;
சூடம் காட்டிக்
கொண்டு ;
வரச் செய்து
சகலவிதமான
மரியாதைகள்
கும்பத்திற்குச் செய்து ;
கும்பத்தை
யாக சாலைக்குக்
கொண்டு வர
வேண்டும் ;”

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்தக் கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து ;
கும்பத்தில் இறக்கி ;
கும்பத்தில்
ஒரு குறிப்பிட்ட
காலம் வரை
இருக்கும் வகையில்
செயல்களைச் செய்து ;
கும்பத்திற்குரிய
சடங்குகளைச் செய்து ;
கும்பத்தை முறைப்படி
பூஜித்து ;
கோயிலைச் சுற்றி
வந்து யாகசாலையில்
வைக்க வேண்டும் ;
இந்த செயல்கள்
அனைத்தும்
கொண்டது தான்
கலாகர்ஷணம்
ஆகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-06-2019
/////////////////////////////////////////////////////


June 04, 2019

பரம்பொருள்-பதிவு-21


                         பரம்பொருள்-பதிவு-21

7.கும்பஸ்தாபனம்

“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல்
என்று பொருள்”

“அதாவது
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
கும்பமானது
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
ஏற்ற வகையில்
எத்தகைய முறைகளை
கும்பத்திற்கு செய்ய
வேண்டுமோ ?
அத்தகைய முறைகளை ;
கும்பத்திற்கு செய்து ;
கும்பத்தை தயார்
செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“கும்பத்தை
நிறுவும் இந்த
நிகழ்வு தான்
கும்பாபிஷேகத்தின்
போது நடைபெறும்
மிக முக்கியமான
நிகழ்வு ஆகும்”

“கும்பமானது
தங்கம், வெள்ளி
தாமிரம், மண்
ஆகியவற்றில்
ஏதேனும் ஒன்றைக்
கொண்டு செய்ததாக
இருக்க வேண்டும் ;
கும்பத்திற்கென்று
நிர்ணயிக்கப்பட்ட
நீளம், அகலம்
கொண்டதாக கும்பம்
இருக்க வேண்டும் ;”

“எந்தவிதமான
குறைபாடும் இல்லாமல்
இருக்கும்படி செய்யப்பட்ட
கும்பத்தையும் ;
பார்ப்பதற்கு
அழகான விதத்தில்
இருக்கும்படி
அமைந்ததாக இருக்கும்
கும்பத்தையும் ;
எத்தனை கும்பம்
தேவைப்படுகிறதோ
அத்தனை
கும்பத்தையும் ;
தேர்ந்து எடுத்துக்
கொள்ள வேண்டும் ;”

“கும்பத்தின் சிற்பதோஷம்
நீங்குவதற்காக
மந்திரத்தால் மந்திரித்து ;
கும்பத்தை
நெருப்பில் காட்டி ;
செம்மண்ணை
கும்பத்தின் மேலே பூசி ;
கும்பத்தை
நூலால் சுற்றி ;
பரிசுத்தமாக இருக்கும்
ஆற்று நீர் அல்லது
ஊற்றுநீரால்
கும்பத்தை
நிரப்ப வேண்டும் ; “

“கும்பத்திற்குள்
மாவிலைகளைச் செருகி ;
அதன் மீது
நல்லதாக இருக்கும்
ஒரு தேங்காயை
தேர்ந்தெடுத்து அந்த
தேங்காயை
கும்பத்தின் மேலே
வைக்க வேண்டும் ; ‘

“கும்பத்தின் மேலே
இருக்கும் தேங்காயை
சற்று மேலே தூக்கி
நவரத்தினம்
தங்கம், வெள்ளி
ஆகியவற்றை
கும்பத்திற்குள்
இட்ட பிறகு ;
மீண்டும் தேங்காயை
கும்பத்திற்கு மேலே
வைக்க வேண்டும் ; “

“கும்பத்திற்கு
வஸ்திரம் அணிவித்து ;
மலர், சந்தனம் ,
விபூதி , குங்குமம் ,
முதலியவைகளை
இட வேண்டும் ; “

“தானியங்களைப்
பரப்பி அதன் மீது
கும்பத்தை வைக்க
வேண்டும்”

“கும்பத்தை இறைவனின்
வித்யா தேகமாகக்
கருத வேண்டும் ;
எந்த கடவுள் சிலைக்கு
கும்பாபிஷேகம் செய்ய
இருக்கின்றோமோ
அந்த கடவுள்
சிலையின்
வித்யா தேகமாகக்
கும்பத்தைக் கருத
வேண்டும் ; ”

“கும்பத்தின் மேல்
வைக்கப்படும்
தேங்காய் இறைவனின்
தலையாகும் ;
மாவிலை தலையில்
உள்ள சிகையாகும் ;
கும்பத்தைச்
சுற்றி கட்டப்படும்
துணி தோலாகும் ;
கும்பத்தின் மேல்
பூசப்படும் செம்மண்
இரத்தமாகும் ;
கும்பத்தின் உலோகம்
சதைப்பகுதியாகும் ;
கும்பத்தில் சுற்றப்பட்ட
நூல் நரம்பாகும் ;
கும்பத்தில் இடப்பட்ட
நவரத்தினங்கள்
சுக்கிலமாகும் ;
நியாசம் செய்யப்பட்ட
மந்திரம் உயிராகும் ;
கும்பத்திற்கு அடியில்
இடப்படும் தானியம்
இறைவன் அமர்ந்திடும்
ஆசனமாகும் ;
என்பதை உணர்ந்து
கொண்டால்
கும்பமானது
இறைவனின்
வித்யா தேகமாக
இருக்கிறது என்பதை
உணர்ந்து கொள்ளலாம் ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-06-2019
/////////////////////////////////////////////////////


June 02, 2019

பரம்பொருள்-பதிவு-20


                      பரம்பொருள்-பதிவு-20

(6) ரசஷாபந்தனம்
(காப்பு கட்டுதல்)
“ரசஷாபந்தனம்
என்றால்
காப்பு கட்டுதல்
என்று பொருள்”

“தெய்வத் தன்மை
பொருந்திய
கும்பாபிஷேகத்தை
நடத்துபவர்களுக்கு
எந்தவிதமான
இடையூறும் ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக ;
செய்யப்படும்
சடங்கு முறையைத்
தான் காப்புக் கட்டுதல்
என்கிறோம் “

“பொது மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு
கும்பாபிஷேகத்தை
முன்னால்
நின்று செய்பவர் ;
மற்றும் அனைத்து
சிவாச்சாரியார்கள்
ஆகியோருக்கு
எந்தவிதமான
பிரச்சினையும்
ஏற்படாமல் இருக்க
வேண்டும்
என்பதற்காகவும் ;
எந்தவிதமான
இடையூறும்
ஏற்டபடாமல் இருக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
மந்திரித்த மஞ்சள்
கயிற்றை வலக்கை
மணிக்கட்டில்
கட்டுவார்கள் ;”

“கும்பாபிஷேகத்தை
நடத்திக் கொண்டிருக்கும்
சிவாச்சாரியார்களுக்கு
ஏதேனும்
ஆசௌசம் (தீட்டு)
ஏற்படக்கூடிய நிலை
அவர்களுடைய
வாழ்க்கையில்
ஏற்பட்டால் கூட
கையில் கட்டிய
காப்பு அவிழ்க்கப்படும்
வரையில்- அந்த
ஆசௌசம்(தீட்டு)
அவர்களைப் பாதிக்காது “

“இது தான்
காப்பு கட்டுதலின்
சிறப்பு மற்றும்
முக்கியத்துவம் ஆகும்”

7.கும்பஸ்தாபனம்
“கும்பஸ்தாபனம்
என்றால் கும்பத்தை
நிறுவுதல் என்று
பொருள்”

“ கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக் கொன்று
தொடர்புடையவை “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுள்
சிலைக்குரிய சக்தியை;
எத்தகைய
முறைகளைச் செய்து ;
அந்த கடவுளுக்குரிய
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிக்க
வேண்டுமோ ;
அத்தகைய
முறைகளைச் செய்து ;
கிரகிப்பதற்கு தேவையான
முறைகளைச் செய்வதற்கு ;
கும்பஸ்தாபனம்
எனப் பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப் பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் இருந்து
கடவுள் சக்தியைக்
கிரகித்து கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ ?
அந்த கடவுளுக்குரிய
சக்தியை
கும்பஸ்தாபனத்தில்
செய்து வைக்கப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி ;
கலாகர்ஷணம் மூலம்
கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை ;
முழுமையான
ஒன்றாக மாற்றுவதற்கு
தேவையான
சடங்குளை
யாகசாலையில்
செய்வதற்கு
யாகசாலை
என்று பெயர் “

“சுருக்கமாகச்
சொல்ல வேண்டுமானால்
எந்த கடவுள்
சிலையை
நிறுவப்போகிறோமோ
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை கும்பத்தில்
இறக்குவதற்காக
அந்த கடவுள்
சக்தியை பிரபஞ்சத்தில்
இருந்து கிரகிப்பதற்கு
தேவையான
முறைகளைச் செய்வது :

செய்யப்பட்ட
முறைகளைப்
பயன்படுத்தி
பிரபஞ்சத்தில் உள்ள
கடவுள் சக்தியை கிரகித்து
கும்பத்தில் இறக்குவது ;

கும்பத்தில் இறக்கப்பட்ட
கடவுள் சக்தியை
முழுமை அடையச்
செய்வது;

என்ற மூன்று
முக்கியமான செயல்களை
கும்பஸ்தாபனம் ;
கலாகர்ஷணம் ;
யாகசாலை ;
ஆகிய மூன்றும்
ஒன்றுக்கொன்று
தொடர்பு கொண்டு
தொடர்ச்சியான
சங்கிலித் தொடர்
போல் தொடர்ச்சியாக
செய்கின்றன “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 02-06-2019
/////////////////////////////////////////////////////