July 04, 2019

பரம்பொருள்-பதிவு-36


                  பரம்பொருள்-பதிவு-36

“நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும் அறிந்து
கொள்ள வேண்டும்- என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
மூன்று விஷயங்களை
உருவாக்கி இந்த
உலகத்திற்கு அளித்து
விட்டுச் சென்றுள்ளனர்
நம்முடைய முன்னோர்கள்”

ஒன்று
சிவலிங்கம்

இரண்டு
ஓம் என்ற எழுத்து

மூன்று
சின்முத்திரை

சிவலிங்கம் :
“ சிவன் கோயிலுக்கு
செல்லுங்கள் - அங்கு
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
சிவலிங்கத்தை கண்களை
நன்றாக திறந்து பார்த்துக்
கொண்டே சிறிது நேரம்
இருங்கள் - பிறகு மெள்ள
மெள்ள கண்களை மூடுங்கள் ;
சிவலிங்கத்தின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில் வெளியே
இரு புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின் மையம்
வரை செல்லுங்கள் ;
மையத்தில் சிவலிங்கம்
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள் உற்று
நோக்கிக் கொண்டே இருங்கள் ;
இப்போது உங்களுக்கு
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சிவலிங்கம்;”

ஓம் என்ற எழுத்து
“புதையல் தேடி செல்ல
வேண்டும் என்றால் ஒரு
வரைபடம் வேண்டும் ;
வரைபடத்தில் புதையல்
எந்த இடத்தில்
இருக்கிறது என்பதும் ;
புதையலை எந்த வழிகளைக்
கடந்து சென்று
எடுக்க வேண்டும் என்பதும் ;
அந்த வரைபடத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் ;”

“அதைப்போல் ஓம்
என்ற எழுத்தானது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
விளக்கிக் காட்டும்
வரைபடம் ஆகும் ;”

“ஓம் என்ற எழுத்தை
கண்களை நன்றாக திறந்து
பார்த்துக் கொண்டே சிறிது
நேரம் இருங்கள்- பிறகு
மெள்ள மெள்ள கண்களை
மூடுங்கள் - ஓம்
என்ற எழுத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசு
முழுவதும் பரவவிட்டு
நம்முடைய கண்களை
மூடிக் கொண்டு சிரசுக்குள்
தொடர்ந்து பார்த்துக்
கொண்டே இருங்கள்  
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் ஓம் என்ற எழுத்து;”

 சின்முத்திரை
“சின்முத்திரை என்பது
தவம் செய்யும் போது
பயன்படுத்துவதற்காகவோ
அல்லது
ஆன்மீக தத்துவங்களை
சொல்லுவதற்காகவோ
சின்முத்திரை
உண்டாக்கப்படவில்லை “

“ இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
காட்டுவதற்காக
உருவாக்கப்பட்ட முத்திரை
தான் சின்முத்திரை ;”

“சின்முத்திரையை
கைகளில் பிடித்துக்
கொள்ளுங்கள்- அந்த
சின்முத்திரையை
கண்களை நன்றாக
திறந்து பார்த்துக் கொண்டே
சிறிது நேரம் இருங்கள் ;
பிறகு மெள்ள மெள்ள
கண்களை மூடுங்கள் ;
சின்முத்திரையின் உருவத்தை
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
வெளியே இரு
புருவங்களுக்கு மத்தியில்
வைத்து அப்படியே
உள்ளுக்குள் சிரசின்
மையம் வரை செல்லுங்கள் ;
மையத்தில் சின்முத்திரை
தெள்ளத் தெளிவாகத் தெரியும்
வகையில் உள்ளுக்குள்
உற்று நோக்கிக் கொண்டே
இருங்கள் - இப்போது
உங்களுக்கு இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசில்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும்  ;
தெள்ளத் தெளிவாகக்
காட்டும் சின்முத்திரை;”

“இறைவன் நம்முடைய
உடலில் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதும்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதும் ;
மக்கள் அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
சிவலிங்கம் வடிவில்
சிற்பமாகவும் ;
ஓம் என்ற எழுத்தில்
எழுத்து வடிவமாகவும் ;
சின்முத்திரை வடிவில்
முத்திரையாகவும் ;
பல்வேறு நிலைகளில்
அளித்துச் சென்றுள்ள
நம்முடைய முன்னோர்களின்
செயல் வணங்கத்தக்கதாகும்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 04-07-2019
//////////////////////////////////////////////////////////


July 03, 2019

பரம்பொருள்-பதிவு-35


                     பரம்பொருள்-பதிவு-35

“ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியை
ஒருவர்
பல்வேறு முயற்சிகள்;
பல்வேறு தரப்பட்டவர்களின்
ஆலோசனைகள்;
பல்வேறு தரப்பட்டவர்கள்
மூலம் சொல்லித்தரப்பட்ட
விஷயங்கள் ;
ஆகியவற்றைப் பயன்படுத்தி
ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியைக்
கண்டுபிடித்து - அந்த
இடத்திற்கு அடிக்கடி
சென்று வருகிறார்;”

“ஒரு இடத்திலிருந்து
வேறொரு இடத்திற்கு
செல்லுகின்ற வழியைக்
கண்டு பிடித்த
அவரால் மட்டுமே
இந்த வழியைத் தெரியாத
வேறு ஒருவருக்கு
சொல்ல முடியும்”

“வழி தெரியாதவர்
வழி தெரியாதவருக்கு
எப்படி வழி
சொல்ல முடியும்
வழி தெரிந்தவர் மட்டுமே
வழி தெரியாதவருக்கு
வழி சொல்ல முடியும்”

“வழி தெரிந்தவர் சொல்லும்
வழியை வைத்துத் தான்
வழி தெரியாதவர்
அந்த வழியைக் கண்டு
பிடித்து செல்ல வேண்டிய
இடத்திற்கு செல்ல முடியும்”

“வழி தெரியாதவருக்கு
வழி தெரிந்தவர்
வழியை சொல்லவில்லை
என்றால்
வழி தெரியாதவர்
செல்ல வேண்டிய
இடத்திற்கு
வழி கண்டுபிடிக்க
முடியாத காரணத்தினால்
செல்ல முடியாமலேயே
போய் விடும்”

“வழி தெரியாதவருக்கு
வழி தெரிந்தவருடைய
உதவி கண்டிப்பாக
தேவை. ;
இல்லை என்றால்
வழி தெரியாதவர்
வழி தெரியாமலேயே
இருந்து விடுவார்”

“இதிலிருந்து வழி
தெரிந்தவர் எவ்வளவு
உயர்ந்தவர் என்பதையும்
அவர் தான்
வழியைக் காட்டும்
வழி காட்டி என்பதையும்
தெரிந்து கொள்ள
வேண்டும்”

“நாம் செல்ல வேண்டிய
இடத்திற்கு நமக்கு வழி
தெரியவில்லை
என்றால் ;
நம்மால் செல்ல
வேண்டிய இடத்திற்கு
வழியைக் கண்டுபிடிக்க
முடியவில்லை
என்றால் ;
வழி தெரிந்தவர் யாரும்
நமக்கு தெரியவில்லை
என்றால் ;
வழி தெரிந்தவர் யாரும்
நமக்கு சொல்லவில்லை
என்றால் ;
நம்மாலும் வழியைக்
கண்டு பிடிக்க
முடியவில்லை
என்றால் ;
நம்முடைய வாழ் நாளில்
நம்மால் செல்ல
வேண்டிய இடத்திற்கு
செல்ல முடியாமல்
போய் விடும் ;”

“சாதாரண வழியைக்
கண்டுபிடிப்பதிலேயே
இவ்வளவு பிரச்சினைகள்
இவ்வளவு சிரமங்கள்
இருக்கிறது என்றால்
இறைவனை அடையக்கூடிய
வழியைக் கண்டுபிடிப்பதில்
எவ்வளவு பிரச்சினைகள்
எவ்வளவு சிரமங்கள்
இருக்கும் - இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும்
இறைவனை அடையக்கூடிய
வழியையும் கண்டுபிடிப்பது
என்பது அவ்வளவு
எளிதான காரியமா
இல்லவே இல்லை”

“இதனை உணர்ந்த
நம் முன்னோர்கள் ;
மெய்ஞ்ஞானத்தின்
மூலம் உண்மையை
உணர்ந்தவர்கள் ;
இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும்
இறைவனை அடையக்கூடிய
வழியையும்
மக்களும் அனைவரும்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்துடன் செதுக்கி
வைத்தது தான்
சிவலிங்கம் “

“மிகப்பெரிய பிரம்ம
ரகசியத்தை நம்முடைய
கண்களின் முன்னால்
சிவலிங்கமாக
செதுக்கி வைத்து;
கண்களால்
காணும்படி வைத்து ;
அறிவால் உணர்ந்து
கொள்ளும்படி வைத்து ;
ஞானத்தால் தெளிவு
ஏற்படும்படி வைத்து ;
இறைநிலையுடன்
இரண்டறக்
கலக்கும்படி வைத்து ;
முக்தி கிடைப்பதற்கான
வழி வகைகளைச் செய்து
வைத்துச்;
சென்றுள்ள நம்முடைய
முன்னோர்களின்
அறிவுத் திறனை
போற்ற வேண்டியது
நம்முடைய கடமையாகும் ; “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 03-07-2019
//////////////////////////////////////////////////////////


July 01, 2019

பரம்பொருள்-பதிவு-34


                    பரம்பொருள்-பதிவு-34

" இருப்பு நிலை தான்
இயக்கமற்ற நிலை என்று
சொல்லப்படக்கூடிய
அருவ நிலையில் உள்ள
பரம்பொருள்  
இந்த பரம்பொருள் தான்
இரண்டு நிலைகளில்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது "

ஒன்று ;
“இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலை “

இரண்டு ;
“இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலை”

"சிவம் என்ற வார்த்தைக்கும்;
சிவன் என்ற வார்த்தைக்கும்;
வேறுபாடு இருக்கிறது "

"இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலை
சிவம் எனப்படுகிறது ;"

"இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய இருப்பு நிலை
சிவன் எனப்படுகிறது ;"

"சிவம் என்ற வார்த்தை
இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலையைக்
குறிக்கும் ; "

" சிவன் என்ற வார்த்தை
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலையைக்
குறிக்கும் ;"

" இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்புநிலையான சிவம்
அருவ நிலையைக்
குறிக்கும் ;"

" இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்புநிலையான சிவன்
உருவ நிலையைப்
குறிக்கும் ;"

" இந்து மதக்
கோயில்களில் உள்ள
சிவலிங்கம்
உருவமற்று இருக்கிறது ;
சிவலிங்கத்திற்கு
உருவம் என்ற
ஒன்று கிடையாது ;
உருவமற்ற நிலையில்
இருக்கக்கூடிய - இந்த
சிவலிங்கத்தைத் தான்
இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்புநிலையான - இந்த
சிவலிங்கத்தைத் தான்
நாம் சிவம் என்று
பெயரிட்டு அழைக்கிறோம் "

" புலித்தோலை
ஆடையாக அணிந்தபடி ;
பாம்பை கழுத்தில்
சுற்றியபடி ;
பிறைச் சந்திரனை
ஜடாமுடியில் வைத்தபடி ;
கங்கை நதியை
ஜடாமுடியில் சுமந்தபடி ;
மூன்றாவது கண் என்று
சொல்லப்படக்கூடிய
ஞானக்கண்ணை
நெற்றியில் மறைத்த படி ;
உருவநிலையில்
காட்சியளித்துக்
கொண்டிருக்கும்
இந்த நிலையைத் தான் ;
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்புநிலையான
இந்த நிலையைத் தான் ;
சிவன் என்று பெயரிட்டு
அழைக்கிறோம் "

" இது தான்
சிவம் என்ற வார்த்தைக்கும்
சிவன் என்ற வார்த்தைக்கும்
உள்ள முக்கியமான
வேறுபாடுகள் ஆகும் "

“இயக்கமற்று இருக்கக்கூடிய
இருப்பு நிலையான
சிவம் என்று
சொல்லப்படக்கூடிய
சிவலிங்கத்தை
வணங்கும் போது
அருவத்திலிருந்து
நேரடியாக அருவத்திற்கு
செல்ல முடியும் ;

“ ஆனால்
இயங்கிக் கொண்டு
இருக்கக்கூடிய
இருப்பு நிலையான
சிவன் என்று
சொல்லப்படக்கூடிய
சிவன் கடவுள் சிலையை
வணங்கும்போது
உருவத்திலிருந்து தான்
அருவத்திற்கு செல்ல
முடியும் “

“உலகத்தில் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களில் உள்ள
கடவுள் சிலை மற்றும்
சிவன் கடவுள் சிலை
ஆகிய கடவுள் சிலைகளை
வணங்கும் போது
உருவத்திலிருந்து தான்
அருவத்திற்கு செல்ல
முடியும் ;
ஆனால் சிவம் என்று
சொல்லப்படக்கூடிய
சிவலிங்கத்தை
வணங்கினால் மட்டுமே
அருவத்திலிருந்து
அருவத்திற்கு
செல்ல முடியும் ;

“இது தான்
சிவலிங்கத்திற்கு உள்ள
தனிச்சிறப்பு ஆகும் “

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 01-07-2019
//////////////////////////////////////////////////////////




June 30, 2019

பரம்பொருள்-பதிவு-33


                    பரம்பொருள்-பதிவு-33

" அவனன்றி ஒரு அணுவும்
அசையாது என்ற
வாக்கிற்கேற்ப - இந்த
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் தன்னுடைய
ஆளுகையின் கீழ் வைத்து
காப்பாற்றி வழிநடத்திக்
கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல
அருவ நிலையில்
உள்ள பரம்பொருள்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால்
மூன்று விஷயங்கள் நமக்கு
தெரிந்திருக்க வேண்டும் "

ஒன்று ;
" நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான் ? "

இரண்டு :
" இறைவனை
அடையக்கூடிய வழி எது ?"

மூன்று :
"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?"

" இந்த மூன்றும் யாருக்கு
தெரிந்திருக்கிறதோ
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இருக்கும் இறைவனை
உணர்ந்து கொள்ள முடியும் "

"இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இருக்கிறான் என்பதை
நாம் உணர்ந்து கொள்ள
வேண்டும் என்றால் - நாம்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது ?
என்பதை முதலில்
தெரிந்து வைத்திருக்க
வேண்டும் "

"இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது?
என்பதை யார் ஒருவர்
தெரிந்து கொண்டு அதை
பயன்படுத்துகிறாரோ ?
அவரால் மட்டுமே
தன்னுடைய உடலில்
தன்னுடைய சிரசுக்குள்
இறைவன் எந்த
இடத்தில் இருக்கிறான்
என்பதையும் ;
இறைவனை
அடையக்கூடிய வழி எது
என்பதையும் ;
தெரிந்து கொள்ள முடியும் "

" தனக்குள் இருக்கும்
இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக் கூடியது எது
என்பதை நம்முடைய
முன்னோர்கள் ; சித்தர்கள் ;
உண்மையை உணர்ந்தவர்கள் ;
அறிவு விளக்கம் பெற்றவர்கள் ;
சமாதியில் திளைத்தவர்கள் ;
ஞானத்தை சுவைத்தவர்கள் ;
முக்தியின் வாசலைத்
தட்டியவர்கள் ;
தங்களுடைய பாடல்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள் ;
பல்லாயிரக்கணக்கான
பாடல்களில் இறைவனை
அடைவதற்கு பயன்படுத்தக்
கூடியது எது ? என்பதை
எழுதி வைத்து
இருக்கிறார்கள் "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை உணர்ந்தாலும்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
இறைவன் எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
கண்டறிவது
மிகவும் கடினம்?"

" பார்க்க முடியாத இடத்தில்
இருக்கும் ஒன்றை  ;
இதுவரை பார்த்திராத
ஒன்றை ;
எப்படி நம்மால் நினைத்து
பார்க்க முடியும்
கற்பனை செய்து கூட
பார்க்க முடியாது "

" இறைவனை அடைவதற்கு
பயன்படுத்தக்கூடியது எது
என்பதை பலவித
சோதனைகளுக்குப் பிறகு
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
தொடர்ந்து பயிற்சி
செய்து வருபவர்கள்
இறைவன் தன்னுடைய
உடலில் எந்த
இடத்தில் இருக்கிறான்;
இறைவனை அடையக்கூடிய
வழி எது ;என்ற
இரண்டையும் தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகவும் ;
இந்த இரண்டையும்
தெரிந்து கொண்டு
அதனைப் பயன்படுத்தி
இறைவனுடன் இரண்டறக்
கலந்து முக்தி அடைய
வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்திற்காகவும் ;
வடிவமைக்கப்பட்டது தான்
சிவலிங்கம்"

" ஆமாம் சிவலிங்கம்
என்பது இறைவன்
நம்முடைய உடலில்
நம்முடைய சிரசுக்குள்
எந்த இடத்தில்
இருக்கிறான் என்பதையும் ;
இறைவனை அடையக்கூடிய
வழி எது என்பதையும் ;
சுட்டிக்காட்டும் குறியீடாக
இருப்பது தான்
சிவலிங்கம் ;"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 30-06-2019
//////////////////////////////////////////////////////////