September 11, 2019

பரம்பொருள்-பதிவு-62


             பரம்பொருள்-பதிவு-62

"சர்க்கஸில் செய்து
காட்டப்படும்
பல்வெறு சாகச
நிகழ்ச்சிகளில்
முக்கியமான ஒரு
சாகச நிகழ்ச்சியான
உலக உருண்டை போன்று
காணப்படும்
இரும்புக் கூண்டிற்குள்
சாகசக் கலைஞர் மோட்டார்
சைக்கிளை நிறுத்தாமல்
ஓட்டிக் கொண்டே
இருக்கும் சாகச
நிகழ்ச்சியை எடுத்துக்
கொண்டு ;அந்த நிகழ்ச்சியை
கோயிலில் நடைபெறும்
நிகழ்ச்சியுடன் ஒப்பிடும்
போது; கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
எப்படி செயல்படுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ளலாம் ;"

"உலக உருண்டை
போன்று காணப்படும்
இரும்புக் கூண்டு
நிலையாக அசையாமல்
இருக்கும்படி பொருத்தப்
பட்டுள்ளது ;
அந்த கூண்டைத் திறந்து
கொண்டு மோட்டார்
சைக்கிளுடன் ஒருவர்
உள்ளே செல்கிறார்;
பின்பு அவர் அந்த
கூண்டிற்குள் பொறுமையாக
மெதுவாக வண்டியை
ஓட்ட ஆரம்பித்து வட்ட
வடிவில் சுற்ற ஆரம்பித்து
வட்ட வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கிறார் ;
இதனால் இரும்புக்
கூண்டிற்குள் வட்டவடிவில்
ஒரு காட்சியை
உருவாக்குகிறார் ;"

"இரும்புக் கூண்டு
இயக்கமற்ற நிலையைக்
குறிக்கிறது ;
ஒருவர் மோட்டார்
சைக்கிளுடன் - அந்த
இரும்புக்கூண்டிற்குள்
நுழைவது கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்
படுவதைக் குறிக்கிறது ;
உள்ளே நுழைந்து அந்த
கூண்டிற்குள் வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே இருப்பது
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
இருப்பதைக் குறிக்கிறது ;
இரும்புக் கூண்டிற்குள்
மோட்டார் சைக்கிள்
மூலம் சுற்றிக் கொண்டே
வட்ட வடிவத்தை
உருவாக்குவது கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் சக்தி
வட்டத்தை
உருவாக்குவதைக் குறிக்கிறது ;"

"இரும்புக் கூண்டிற்குள்
மோட்டார் சைக்கிள்
ஓட்டும் நிகழ்வையும் ;
கோயிலுக்குள்
நடைபெறும் நிகழ்வையும் ;
ஒப்பிட்டு நோக்குவதன் மூலம்
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது எப்படி
செயல்படுகிறது என்பதைத்
தெரிந்து கொள்ளலாம் ;"

"இரும்புக் கூண்டு
இயக்கமற்ற நிலையைக்
குறிக்கிறது
அதைப்போல
கோயிலும் இயக்கமற்ற
நிலையைக் இருக்கிறது;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் மோட்டார்
சைக்கிளை எடுத்துக்
கொண்டு இரும்புக்
கூண்டிற்குள் நுழைகிறார் ;
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப் படுவதைக்.
குறிக்கிறது ;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் இரும்புக்
கூண்டிற்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கிறார் ;
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
சுற்றிக் கொண்டே
இருப்பதைக் குறிக்கிறது;"

"மோட்டார் சைக்கிள்
ஓட்டுபவர் இரும்புக்
கூண்டிற்குள் மோட்டார்
சைக்கிளைத் தொடர்ந்து
ஓட்டிக் கொண்டு
கற்றிக் கொண்டே
இருக்கும்போது
இரும்புக் கூண்டிற்குள்
ஒரு வட்ட வடிவம்
உருவாகுகிறது ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருக்கும் போது
கடவுள் சக்தியானது
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குவதைக்
குறிக்கிறது ;"

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானதுகோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் வட்ட
வடிவில் சுற்றிக்
கொண்டே இருக்கும்
போது கோயிலுக்குள்
வட்ட வடிவில் ஒரு
சக்தி வட்டத்தை
உருவாக்குகிறது ;"

"கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் வட்ட
வடிவில் சுற்றிக் கொண்டே
வருவதற்கும் ;
கோயிலுக்குள் வட்ட
வடிவில் ஒரு சக்தி வட்டத்தை
உருவாக்குவதற்கும் ;
இதன் மூலம் கடவுள்
சக்தியை கோயிலில்
குவித்து வைப்பதற்கும் ;
மெய்ஞ்ஞானம் உணர்ந்த
நம்முடைய முன்னோர்கள்
எத்தகைய முறைகளைக்
கையாண்டார்கள் என்பது
தெரியுமா………………………………..?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 11-09-2019
//////////////////////////////////////////////////////////

September 08, 2019

பரம்பொருள்-பதிவு-61


                 பரம்பொருள்-பதிவு-61

" கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்டு
இயங்கிக் கொண்டும் ;
நகர்ந்து கொண்டும் ;
இருக்கும்
கடவுள் சக்தியை ;
படைத்து, காத்து,
அழித்து, மறைத்து ,
அருள் செய்து,
ஐம்பெரும்
தொழிலை செய்து
கொண்டிருக்கும்
கடவுள் சக்தியை ;
இந்த உலகம்
அனைத்தையும்
காப்பாற்றி ,வழி
நடத்திக் கொண்டிருக்கும்,
கடவுள் சக்தியை ;
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைப்பதற்காக
ஒரு விதியைக்
கண்டுபிடித்து - அந்த
விதியைப் பயன்படுத்தி
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைத்தனர் ;
இந்திய நாட்டில் வாழ்ந்த
மெய்ஞ்ஞானம்
உணர்ந்தவர்களாகிய
நம்முடைய முன்னோர்கள்"

நம்முடைய முன்னோர்கள்
கண்டு பிடித்து
பயன்படுத்திய விதி தான்

"இயங்கிக் கொண்டும்
நகர்ந்து கொண்டும்
இருக்கக்கூடிய
கடவுள் சக்தியில்
உள்ள கடவுள்
தன்மையானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைக்கப்படும்
போதும் இருக்க
வேண்டுமானால்
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியைக் கொண்டு
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்படியான
சக்தி வட்டத்தை
உருவாக்க வேண்டும்"

"இந்த விதியைப்
பயன்படுத்தி தான்
கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
கோயிலுக்குள்
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் சுற்றிக்
கொண்டே
இருக்கும்படியான
சக்தி வட்டத்தை
உருவாக்கினர்
நம்முடைய முன்னோர்கள்"

"சக்தி வட்டத்தை
உருவாக்கினால் மட்டுமே
கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
அப்படியே இருக்கும் ;
கோயில் இருக்கும் வரை
எத்தனை நூற்றாண்டுகள்
கடந்தாலும் கடவுள்
சக்தியானது கோயிலுக்குள்
அப்படியே இருக்கும் "

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும் சக்தி
வட்டத்திற்குள்
பிரவேசிக்கும் பக்தர்கள்
தங்களுடைய தேவையைப்
பூர்த்தி செய்து
கொள்வதற்காக
தங்களுக்கு
தேவையானதை சுற்றிக்
கொண்டே இருக்கும்
சக்தி வட்டத்திலிருந்து
பெற்றுக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து
கொள்கின்றனர்"

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியை
சுற்றும் படியான
சக்தி வட்டத்தை
உருவாக்கி
குவித்து
வைக்கவிலையெனில்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள்
அப்படியே இருக்காது ;
மக்கள் கோயிலுக்கு
வந்து தங்களுடைய
தேவையைப் பூர்த்தி
செய்து கொள்ள முடியாது ;"

“கோயிலுக்குள்
சுற்றிக் கொண்டே
இருக்கும்படியான
கடவுள் சக்தியைக்
கொண்ட சக்தி வட்டம்
இருந்தால் மட்டுமே
கோயிலானது சக்தி
ஏறப்பெற்றதாக இருக்கும் ;
உயிர்த் துடிப்பு
கொண்டதாக இருக்கும் ;
ஆற்றல் நிறைந்த
களமாக இருக்கும் ;
புனிதத் தன்மை
உடையதாக இருக்கும் ;
பக்தர்கள் தங்களுடைய
தேவைவை பூர்த்தி
செய்து கொள்ளும்
புனிதத் தலமாக
இருக்கும் ; “

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியைக்
கொண்டு சுற்றும்
படியான சக்தி
வட்டத்தை எப்படி
உருவாக்கி வைத்தார்கள்
என்று தெரியுமா…………………………? ”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 08-09-2019
//////////////////////////////////////////////////////////

September 05, 2019

பரம்பொருள்-பதிவு-60


           பரம்பொருள்-பதிவு-60

“இந்த உலகம்
முழுவதும் நடைபெற்றுக்
கொண்டிருக்கும்
எந்த ஒரு செயலை
எடுத்துக் கொண்டாலும்
அந்த செயலில் இரண்டு
விதமான நிலைகள்
மறைந்து இருப்பதை
உணர்ந்து கொள்ளலாம்”

ஒன்று  :இயக்கமற்ற நிலை
இரண்டு: இயக்க நிலை

“இயக்கமற்ற நிலையும்
இயக்க நிலையும்
ஒன்றுக் கொன்று
தொடர்பு கொண்டு
ஒன்றுபட்டு இருக்கும்போது ;
இயங்கிக் கொண்டும்
நகர்ந்து கொண்டும்
இருக்கும் சக்தியானது
ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டிருந்தால்
செயலானது நடைபெறும் “
என்ற விதியை
இந்திய நாட்டில் வாழ்ந்த
நம்முடைய
முன்னோர்களாகிய
இந்தியர்கள் கண்டுபிடித்து
அதை உலகம்
முழுவதும் உள்ள
அனைத்து இந்து மதக்
கோயில்களிலும் மக்கள்
பயன்பெறும் வகையில்
அமைத்து வைத்தனர் “

“கோயில் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது ;
கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
குவித்து வைக்கப்பட்டு
இருக்கிறது ;
கோயிலுக்கு வரும்
பக்தர்கள் கடவுள்
சக்தியுடன் தொடர்பு
கொண்டு தங்களுடைய
தேவையை பூர்த்தி
செய்து கொள்கின்றனர்;”

“கோயிலுக்குள் இருக்கும்
இந்த அமைப்பை
அப்படியே காப்பி அடித்த
விஞ்ஞானம் அதை
பல்வேறு விதமான
கண்டு பிடிப்புகளில்
தற்போது வரை
பயன்படுத்தி வருகிறது”

“விஞ்ஞானம்
கண்டுபிடித்ததாக சொல்லும்
ஆட்டுக்கல்லை எடுத்துக்
கொள்வோம் ;
ஆட்டுக்கல் உருண்டை
வடிவமான கல்லில்
நடுவில் குழியைக்
கொண்டிருக்கும் - இந்தக்
குழியின் அகலத்தை விட
சிறிது குறைவான
சுற்றளவில் சிறிது
உயரமாக கையால்
பிடித்து அரைக்கக்கூடிய
வடிவமைப்பில் குழவிக்கல்
ஒன்றும் இதனுடன் இருக்கும் “

“இயக்கமற்ற நிலையில்
இருப்பது ஆட்டுக்கல்
அந்த ஆட்டுக்கல்லில்
நடுவில் உள்ள குழிக்குள்
அதாவது ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டிருப்பது குழவிக்கல் ;
ஆட்டுக் கல்லில் குழியாக
இருக்கும் பகுதியில்
அரைக்க வேண்டிய
தானியத்தைப் போட்டு
குழவியைக் கொண்டு
கையால் சுழற்றினால்
குழியில் இருக்கும்
தானியம் அரைபடும் ;”


“ஆட்டுக் கல்லையும்
கோயிலையும் ஒப்பிட்டு
நன்றாக உற்று நோக்குங்கள்”

“கோயில் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது;
அதைப்போல
ஆட்டுக்கல்லும் இயக்கமற்ற
நிலையில் இருக்கிறது;”

“கோயிலுக்குள் உற்பத்தி
செய்யப்பட்ட கடவுள்
சக்தியானது ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் இயங்கிக்
கொண்டு இருக்கிறது ;
அதைப்போல
ஆட்டுக்கல்லின்
குழிக்குள் இருக்கும்
குழவிக் கல்லானது ஒரு
குறிப்பிட்ட எல்லை
கொண்ட குழிக்குள்
இயங்கிக் கொண்டு
இருக்கிறது ;”

“கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்டஎல்லைக்குள்
குவித்து வைக்கப்பட்ட
கடவுள் சக்திக்குள் வரும்
பக்தர்கள் இயங்கிக்
கொண்டு இருக்கும்
கடவுள் சக்தியுடன்
தொடர்பு கொண்டு
தங்களுக்கு தேவையானதை
பூர்த்தி செய்து
கொள்கின்றனர் ;
அதைப்போல
ஆட்டுக்கல்லில் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
உள்ள குழிக்குள்
அரிசியானது வரும்போது
இயங்கிக் கொண்டு
இருக்கும் குழவிக்
கல்லானது அரிசியை
மாவாக மாற்றுகிறது;”

“இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவரும்
பயன்பெற வேண்டும்
என்ற உயர்ந்த
நோக்கத்துடன் இந்தியாவில்
வாழ்ந்த நம்முடைய
முன்னோர்களான
இந்தியர்களால்
மெய்ஞ்ஞானம் மூலம்
கண்டு பிடிக்கப்பட்ட
மிகப்பெரிய விஷயத்தை
காப்பி அடித்து
இன்று வரை
பல்வேறு விதமான
கண்டு பிடிப்புகளை
கண்டு பிடித்துக்
கொண்டிருக்கும்
விஞ்ஞானத்தை
மெய்ஞ்ஞானத்தை விட
உயர்ந்தது என்று
சொல்ல முடியாது”

“கோயிலுக்குள்
உற்பத்தி செய்யப்பட்ட
கடவுள் சக்தியை
மெய்ஞ்ஞானம் மூலம்
கண்டுபிடிக்கப்பட்ட
இந்த விதியைப்
பயன்படுத்தி  ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
எப்படி குவித்து
வைக்கிறார்கள் என்று
தெரியுமா………?”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 05-09-2019
//////////////////////////////////////////////////////////