October 02, 2019

பரம்பொருள்-பதிவு-67


             பரம்பொருள்-பதிவு-67

“திருதராஷ்டிரன்
தர்மரை அழைத்தான்
மகனே! நீ உன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
நகருக்கு சென்று
அங்கே போய்
தங்கியிரு என்றான் “

“திருதராஷ்டிரனின்
கோரிக்கையை
உத்தரவாகவே
ஏற்றுக் கொண்டு
தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
சென்று தங்கி
இருக்க முடிவு
செய்தான்”
       
“ஆனால் தர்மருக்கு
காண்டவபிரஸ்தம்
சென்று எப்படி
தங்குவது என்ற
யோசனை எழுந்தது ;
ஏனென்றால்
காண்டவபிரஸ்தம்
காட்டுப் பகுதியில்
இருந்தது ; ”

“அந்த ஊரே
பாழடைந்து
போய் விட்டதால்
மக்கள் யாரும்
அங்கு வசிக்கவில்லை. ;
மனிதர்கள் யாரும்
வசிக்கக்கூடிய
இடமாக
காண்டவபிரஸ்தம்
இல்லை ;”

“திருதராஷ்டிரன்
வார்த்தையை
மறுக்கக்கூடாது
என்ற காரணத்திற்காக
தர்மர் ஒன்றுக்கும்
உதவாமல் இருந்த
காண்டவபிரஸ்தம்
நகருக்கு தன்
தம்பிகளுடன்
வசிப்பதற்காக
புறப்பட்டார்”

“தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
செல்வதைக் கேள்விபட்ட
பரம்பொருளான
கிருஷ்ணரும்
உடன் சென்றார்”

“காண்டவபிரஸ்தம்
சென்றவுடன்
கிருஷ்ணர்
விஸ்வகர்மாவையும் ;
இந்திரனையும் ;
அழைத்தார்.
அவர்கள் இருவரும்
நேரில் வந்து
கிருஷ்ணரை
வணங்கி நின்றனர் “

“கிருஷ்ணர்
அவர்களை நோக்கி
இந்த காட்டை
அழித்து
இந்த உலகமே
இதுவரை
பார்த்திராத வகையில்
உலக மக்கள்
அனைவரும்
அதிசயிக்கத்தக்க
விதத்தில்
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
மூன்று உலகங்களிலும்
இப்படி ஒரு
நகரம் இல்லை
என்று அனைவரும்
புகழக்கூடிய
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
இனி இது போல்
ஒரு நகரத்தை
யாராலும் உருவாக்க
முடியாது என்று
உலகமே வியக்கும்
வகையில் அழகிய
நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
என ஆணையிட்டார்
பரம்பொருளான
கிருஷ்ணர்”

“இந்திரன்
மேற்பார்வையில்
விஸ்வகர்மா
காண்டவபிரஸ்தம்
நகரை முற்றிலும்
அடையாளம்
தெரியாத ஒரு
அழகிய நகரமாக
மாற்றி விட்டார்”

“காண்டவபிரஸ்தம்
நகரம் முழுவதும்
தங்கத்தாலேயே
கட்டப்பட்டிருக்கிறது
என்று சொல்லத்தக்க
வகையில் எங்கு
பார்த்தாலும்
தங்கத்தாலான
மாடமாளிகைகள்,
அழகிய அரண்மனைகள்,
பெரிய மதில்கள்,
தோரண வீதிகள்,
பூஞ்சோலைகள்
தடாகங்கள் என
அழகாகவும்
அருமையாகவும்
காண்போர்
வியக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருந்தது
காண்டவபிரஸ்தம்
நகரம்”

“இரவு நேரத்தில் கூட
காண்டவபிரஸ்தம்
நகரம் ஜொலித்தது ;

“காண்டவபிரஸ்தம்
நகரத்தின் அழகை
வார்த்தைகளால்
கூட வர்ணிக்க
முடியாது என்றால்
எத்தகைய
கலைநயத்துடன்
காண்டவபிரஸ்தம்
நகரம்
அமைக்கப்பட்டிருக்கும்
என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்”

“இந்திரனின்
மேற்பார்வையில்
கட்டப்பட்டதால்
அந்த நகருக்கு
இந்திரபிரஸ்தம்
என்று பெயர்
சூட்டினர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------02-10-2019
//////////////////////////////////////////////////////////


September 25, 2019

பரம்பொருள்-பதிவு-66


            பரம்பொருள்-பதிவு-66

"கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
இருப்பதால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
சக்தி வட்டமானது
உருவாக்கப்படுகிறது "

"கோயிலுக்குள்
உருவாக்கப்படும் இந்த
சக்தி வட்டமானது
கோயிலுக்கு வரும்
பக்தர்களுடைய
தேவையை
பூர்த்தி செய்யும்
வேலையை
செய்வதோடு
மட்டுமல்லாமல் ;
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் கோயிலுக்கு
உள்ளே விடாமல்
தடுத்து நிறுத்தும்
மிகப்பெரிய
வேலையையும் செய்து
கொண்டிருக்கின்றன ;"

சடவாயு :

"குழந்தையை
கருப்பையிலிருந்து
வெளியே தள்ளும்
வாயுவிற்கு சடவாயு
என்று பெயர்"

"சடவாயு ஒவ்வொரு
மனிதனுக்கும் மாறுபட்ட
தன்மையைக்
கொண்டதாக இருக்கும் ;
மனிதன்
போகும் இடங்கள் ;
தொட்ட இடங்கள் ;
ஆகிய அனைத்திலும்
சடவாயுவானது உண்டு ;
இறக்கும் வரை இந்த
சடவாயுவானது
கூடவே இருக்கும் ;
பிணம் அழுகிய
பின்பு தான் இந்த
சடவாயுவானது
வெளியேறும் ;"

"மனிதர்களால்
சடவாயுவை
உணர்ந்து கொள்ள
முடியாது; - ஆனால்
நாய், நரி, ஓநாய்,
ஆகியவற்றால்
சடவாயுவை உணர்ந்து
கொள்ள முடியும் ;
நாய் மோப்பம்
பிடிப்பது
மனிதர்களுடைய
சடவாயுவைத் தான் ;"

"மனிதனுடைய
நகம், முடி, எச்சில்,
வியர்வை
ஆகியவற்றில்
மனிதனுடைய
சடவாயு இருக்கும் ;
ஒருவரிடம் இருக்கும்
சடவாயு நிரம்பியுள்ள
பொருட்களைப்
பயன்படுத்தித் தான்
ஏவல், பில்லிசூன்யம்
ஆகியவை ஒருவருக்கு
செய்யப்படுகிறது ;
நாம் யாருடைய
சடவாயுவைப்
பயன்படுத்தி
ஒருவரை பாதிக்கும்
வகையில் செயலைச்
செய்தோமோ?
அந்த சடவாயுவை
உடைய மனிதனை
மட்டுமே செய்யப்பட்ட
கெடுதலானது
பாதிப்பை உண்டாக்கும் ;"

"நாய் மூத்திரம்
பெய்து குறிப்பிட்ட
தூரத்தைக் கொண்ட
ஒரு எல்லையை
உருவாக்கும் ;
அந்த எல்லைக்குள்
யாராவது வந்தால்
சடவாயுவை
மோப்பம் பிடித்து
ஓடிப்போய் குலைக்கும் ;
அதாவது தன்னுடைய
எல்லைக்கு உட்பட்ட
சக்திக்குள்
எந்தவிதமான
எதிர்ப்பு சக்தியையும்
நாய் உள்ளே விடாது ;"

"அதைப்போலத்தான்
கோயிலுக்குள்
உருவாக்கப்படும்
சக்தி வட்டமானது
வெளியில் உள்ள
எந்த ஒரு எதிர்ப்பு
சக்தியையும் ;
கோயிலுக்கு உள்ளே
விடாமல் தடுத்து
நிறுத்துகிறது ;'"

"உலகம் முழுவதும்
உள்ள இந்துமதக்
கோயில்களில்
நடைபெறும்
மூன்று முக்கியமான
வேலைகளில்
கோயிலுக்குள்
சக்தியை
உற்பத்தி செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;

"கோயிலுக்குள்
சக்தியை
குவித்து வைத்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதையும் ;
தெரிந்து கொண்டோம்; "

"கோயிலுக்குள்
சக்தியை
பரிமாற்றம் செய்தல்
என்ற வேலை
எப்படி நடைபெறுகிறது
என்பதைத் தெரிந்து
கொள்ள வேண்டாமா?"

"அதற்கு முன்…………………?"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
----------- 25-09-2019
//////////////////////////////////////////////////////////

September 24, 2019

பரம்பொருள்-பதிவு-65


            பரம்பொருள்-பதிவு-65

“இந்துமதக் கோயிலில்
கர்ப்பக்கிரகத்தில்
மேற்கில் அமர்ந்து
கிழக்கு நோக்கி
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள் சிலையிலிருந்து
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
கிழக்கில் இருக்கும்
தலைமை பலிபீடத்தில்
மோதுகிறது.”

"கிழக்கில்
இருக்கும்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தென்மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"மேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடமேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது"

"வடமேற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"வடக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
வடகிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது. "

"வடகிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்கிழக்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை அது
செல்லும் திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது."

"தென்கிழக்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தெற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்கிறது"

"தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தன் மீது மோதிய
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
மோதச் செய்வதற்காக
கடவுள் சக்தியை
அது செல்லும்
திசையிலேயே
நேராக செல்வதற்கான
வேலையைச் செய்கிறது
ஏற்கனவே,
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
தலைமை பலிபீடம்
தன் மீது மோதச் செய்த
கடவுள் சக்தியை
தென்மேற்கில் இருக்கும்
பலிபீடத்தின் மீது
திருப்பி விடும்
வேலையைச் செய்ததால்
தெற்கில்
இருக்கும் பலிபீடம்
கடவுள் சக்தியை
திருப்பிவிடும்
வேலையையும்,
நேராக செலுத்தும்
வேலையையும் செய்கிறது"

"இவ்வாறு
கர்ப்பக் கிரகத்தில் இருக்கும்
கடவுள் சிலையின்
மூலமாக உற்பத்தி
செய்யப்பட்டு
வெளிப்பட்டுக் கிளம்பும்
கடவுள் சக்தியானது
மூன்று வெவ்வெறு
விதமான தன்மைகளைக்
கொண்ட 9-பலிபீடங்களால்
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
கடவுள் சக்தியானது
சுற்றிக் கொண்டே
வரும்படிச் செய்யப்படுகிறது;

"இதனால்
கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு
குறிப்பிட்ட எல்லைக்குள்
வட்ட வடிவில் ஒரு சக்தி
வட்டத்தை உருவாக்குகிறது;
இதனால் கடவுள் சக்தியானது
கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் குவித்து
வைக்கப்படுகிறது "

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------24-09-2019
//////////////////////////////////////////////////////////