October 25, 2019

பரம்பொருள்-பதிவு-76


                 பரம்பொருள்-பதிவு-76

"பஞ்சபாண்டவர்கள்
தங்கி இருந்த
அரண்மனையை நோக்கி
ஒரு அந்தணன்
விரைவாக நடந்து
வந்து கொண்டிருந்தான், ;
கோபத்தின் சாயல்
அவன் முகத்தில் வெட்ட
வெளிச்சமாகத் தெரிந்தது ;,
இழப்பின் தவிப்பு
அவன் நடையின்
வேகத்தில் தெரிந்தது, ;
பஞ்ச பாண்டவர்கள்
தங்கி இருந்த
அரண்மனையை அடைந்த
அந்த அந்தணன்
இழந்ததின் தவிப்பை
கோபத்தின் கனலாக
வார்த்தைகளாக
வெளிப்படுத்தினான்,;" 

அந்தணன் :
"தர்மா! தர்மத்தின்
காவலனான நீ
ஆளும் நாட்டில்
இப்படி ஒரு
அநியாயம் நடக்கலாமா ?
மக்களை
பாதுகாப்பவனே மன்னன்  
மக்களை பாதுகாக்காமல் ;
மக்களுக்கு ஏற்பட்ட
துன்பத்தை நீக்காமல் ;
மக்களுக்கு ஏற்பட்ட
துன்பத்தை களைவதற்கு
எந்தவிதமான
நடவடிக்கையும்
மேற்கொள்ளாமல்  ;
இருக்கும் நீயெல்லாம்
ஒரு மன்னவனா !
தர்மா! மக்களை
துன்பத்தில் வருந்த
வைத்து விட்டு நீ!
அரண்மனையில் என்ன
செய்து கொண்டிருக்கிறாய்? "

" தர்மா! அரண்மனையை
விட்டு வெளியே வா !
நடந்து முடிந்த
அக்கிரமக்காரச்
செயலுக்கு என்ன பதில்
சொல்லப் போகிறாய்  ;
எனக்கு நேர்ந்த
அநியாயத்திற்கு  
என்ன சமாதானம்
சொல்லப் போகிறாய் ;
எனக்கு நேர்ந்த
கொடுமைக்கு
என்ன ஆறுதல்
சொல்லப் போகிறாய்;
விரைந்து வா! தர்மா!
விரைந்து வெளியே வா!
தர்மா! வெளியே வா !
எனக்கு ஒரு நியாயத்தை
சொல் தர்மா
நியாயத்தை சொல்! "

என்றான் அந்த
அந்தணன்.

"அந்தணன் கோபத்துடன்
கத்திய கூச்சல்
ஆயுதசாலைக்குள்
இருந்த தர்மருக்கு
கேட்கவில்லை. - ஆனால்
அரண்மனையின்
உப்பரிகையில் உலவிக்
கொண்டிருந்த அர்ஜுனனின்
காதில் அந்தணன்
கத்திய கூச்சல்
விழுந்தது. அந்தணன்
போட்ட கூச்சலைக் கேட்ட
அர்ஜுனன் வேகமாக
அந்தணன் நிற்குமிடம்
ஓடி வந்தான் ;
ஓடி வந்த அர்ஜுனன்
அந்தணன் எதிரே
வந்து நின்றான்"

அர்ஜுனன் :
"தங்களுக்கு என்ன
அநியாயம் நேர்ந்தது ?
தங்களுக்கு அநியாயத்தை
செய்தவர்கள் யார் ?
அவர்கள் என்ன
அநியாயத்தை
தங்களுக்கு செய்தார்கள் ?
தங்களுக்கு ஏன்
இந்த மனக்குறை ?
தங்களுக்கு
என்ன பிரச்சினை  ?
சொல்லுங்கள்.”

அந்தணன் :
“தர்மர் இல்லையா ?
இந்த நாட்டை ஆளும்
மன்னவன் இல்லையா?
எங்கே தர்மர் ?
நான் போட்ட கூச்சல்
தர்மரின் காதுகளில்
விழவில்லையா ?
அல்லது
விழுந்தும் விழாதது
போல் இருக்கிறாரா?
மக்களுக்கு குறை
நேர்ந்தால் ஓடோடி
வர மாட்டாரா மன்னர்?
எங்கே தர்மர் ?
எங்கே நாட்டை
ஆளும் மன்னர்?"


அர்ஜுனன் :
"அண்ணன்
அரண்மனையில்
ஆயுத சாலையை
பார்வையிடச்
சென்றிருக்கிறார்  ;
அதனால் தான் நீங்கள்
பேசியவை அவர்
காதில் விழவில்லை ;
அரண்மனையின்
உப்பரிகையில் உலவிக்
கொண்டிருந்த என்னுடைய
காதில் நீங்கள்
பேசியவை விழுந்தது ;
அதனால் நானே தங்கள்
குறைகளை கேட்க
ஓடோடி வந்தேன் ;
தங்களுக்கு என்ன
குறை நேர்ந்தது ;
தங்களுக்கு என்ன
அநியாயம் நேர்ந்தது  ;
தங்களுக்கு என்ன
பிரச்சினை நேர்ந்தது ;
தங்கள் பிரச்சினை
என்ன என்று என்னிடம்
சொல்லுங்கள்  ;
தங்களுக்கு நேர்ந்த
அநியாயத்தை என்னிடம்
சொல்லுங்கள்  ;
உங்களுக்கு யார்
எத்தகைய அநியாயத்தை
செய்திருந்தாலும்
நானே முன்னின்று
அதை தீர்த்து சரி
செய்கிறேன்
சொல்லுங்கள் தங்களுக்கு
நேர்ந்த அநியாயம்
என்ன என்று
சொல்லுங்கள்!
சொல்லுங்கள்!"

"அந்தணன் தனக்கு
நேர்ந்த அநியாயத்தை
சொல்லத் தொடங்கினான்"

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------25-10-2019
//////////////////////////////////////////


October 24, 2019

பரம்பொருள்-பதிவு-75


            பரம்பொருள்-பதிவு-75

"நாரதர் பேசிய
வார்த்தையில் இருந்த
அர்த்தங்களையும் ;
அவர் வழங்கிய
அறிவுரையில் இருந்த
உண்மைகளையும்;
அவர் சொன்ன
கதையில் இருந்த
நிஜங்களையும்;
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் தீவிரமாக
ஆராய்ந்து பார்த்து ;
ஆலோசனையில்
ஈடுபட்டனர்;"

"அதுமட்டுமில்லாது
இறந்த காலத்தில்
தாங்கள் ஒற்றுமையாக
இருந்த
நிலைமைகளையும் ;
நிகழ்காலத்தில் தாங்கள்
ஒற்றுமையாக இருந்து
கொண்டிருக்கின்ற
நிலைமைகளையும்;
யோசித்துப் பார்த்து
எதிர்காலத்தில் தாங்கள்
இவ்வாறே ஒற்றுமையாக
இருக்க வேண்டுமென்றால்
ஒரு விதியை உருவாக்க
வேண்டியது அவசியம்
என்பதை உணர்ந்து ;
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் சிந்தித்து
ஒரு முடிவு எடுத்து
ஒரு விதியை
உருவாக்கினர்,"

விதி :
"பஞ்ச பாண்டவர்களில்
ஒவ்வொருவரும்
சுழற்சி முறையில்
ஒரு வருடம்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்த வேண்டும்;
அவ்வாறு திரௌபதியுடன்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவர் குடும்பம் நடத்திக்
கொணடிருக்கும் போது
அவருக்கு மட்டுமே
திரௌபதியின் மேல்
முழு உரிமை உண்டு ;,
அவருக்கு மட்டுமே
திரௌபதி மனைவியாக
இருந்து கொண்டிருப்பார்;  
அவருக்கு மட்டுமே
திரௌபதி மனைவியாக
இருந்து கணவனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து கடமைகளையும்
செய்து கொண்டிருப்பார்;
அந்த காலகட்டத்தில்
அவர்கள் இருவருக்கு
மட்டுமே கணவன்
மனைவியாக வாழும்
உரிமை உண்டு;
மற்ற பஞ்ச
பாண்டவர்களுக்கு அந்த
உரிமை இல்லை ;".

"அந்த காலகட்டங்களில்
பஞ்ச பாண்டவர்களில்
உள்ள மற்றவர்களுக்கு
திரௌபதியின் மேல்
எந்தவிதமான
உரிமையும் கிடையாது ;
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருப்பவரைத்
தவிர்த்து மற்றவர்கள்
திரௌபதியிடம்
எந்தவிதமான உரிமையும்
கோரவும் முடியாது ;
கோரவும் கூடாது. ; "

"திரௌபதியும்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்திக் கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள்
அந்த அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக் கருதப்படும்;  
அந்த குற்றச் செயலுக்கு
தண்டனையாக குற்றம்
இழைத்தவர்
12 மாதங்கள் வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;"

--------என்ற விதியை
வகுத்தனர்"

"பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் கலந்து
ஆலோசித்து முடிவு
செய்து தாங்கள்
எதிர்காலத்தில்
ஒற்றுமையாக
இருக்க வேண்டும்
என்பதற்காக தாங்கள்
தங்களுக்காக வகுத்த
விதியை நாரதரிடம்
சொன்னார்கள்"

"இதனைக் கேட்ட
நாரதர் மிக்க மகிழ்ச்சி
அடைந்து பஞ்ச
பாண்டவர்களையம்,
திரௌபதியையும்
ஆசிர்வதித்து வாழ்த்தி
விடைபெற்றார், "

"பஞ்ச பாண்டவர்களில்
மூத்தவராக தர்மர்
இருந்த காரணத்தினால்
முதலில் தர்மர்
திரௌபதியுடன்
ஒரு வருடம்
குடும்பம் நடத்தும்
உரிமை பெற்றார்.
தர்மர் திரௌபதியுடன்
ஒரு வருடம்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் தாங்கள்
வகுத்த விதியை
எந்தவிதமான
பிசகும் இல்லாமல்
கடைபிடித்து பின்பற்றி
வாழ்ந்து வந்தனர்"

"தர்மரும்., திரௌபதியும்
ஒரு வருடம் குடும்பம்
நடத்திக் கொண்டிருந்த
சூழ்நிலையில்
ஒரு நாள்……….?"

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------24-10-2019
//////////////////////////////////////////




October 20, 2019

கல்யாணநாள் வாழ்த்துக்கு நன்றி -19-10-2019


கல்யாணநாள் வாழ்த்துக்கு

நன்றி -19-10-2019 


அன்பிற்கினியவர்களே!

19-10-2019-ம் தேதி அன்று
திருமண நாள் கண்ட
எங்களுக்கு
வாழ்த்து தெரிவித்த
உலகெங்கும் உள்ள
என்னுடைய நண்பர்கள் !
என்மேல் அன்பு கொண்ட
நல்ல உள்ளங்கள் !
நேரில் வீட்டிற்கு வந்து
வாழ்த்து தெரிவித்த
நட்பின் இதயங்கள் !
ஆகிய அனைவருக்கும்
எங்களுடைய  நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்”

“நான் தனியார் கம்பெனியில்
வேலை பார்த்துக்
கொண்டிருந்த சமயம்
நான் கவிதை எழுதுவது
அந்த கம்பெனியில் உள்ள
அனைவருக்கும்  தெரியும் ;
இதில் ஒரு விஷயம்
என்னவென்றால் அந்த
கம்பெனியில் என்னைப்போல்
கவிதை எழுதக் கூடியவன்
என்னுடைய நண்பன்
ஒருவனும் இருந்தான்;”

“இருவருமே தலைப்பு
கொடுத்து கவிதை
எழுதச் சொன்னாலோ ?
(அல்லது)
காட்சியைக் காட்டி
கவிதையை எழுதச்
சொன்னாலோ ?
(அல்லது)
ஒரு நிகழ்ச்சியை
சொல்லி கவிதை
எழுதச் சொன்னாலோ?
இருவருமே கவிதை
எழுதி விடுவோம்”

“இருவரையுமே போட்டி
போட வைத்து கவிதை
எழுதச் சொல்லி
பார்த்து ரசிப்பது
அந்த கம்பெனியில்
உள்ளவர்களின் பழக்கம்”

“எங்களுக்குள் நடுவர்
என்பவர் யாரும் இல்லை ;
போட்டி வைக்கும்
போது யார் கவிதை
எழுதவில்லையோ அவர்
தோற்றதாக அர்த்தம்
என்று வைத்திருந்தோம்”

“இரண்டு பேரும்
போட்டியில் கவிதை
எழுதாமல் இருந்ததில்லை!
அதனால் இருவருமே
தோற்றதில்லை ;
அந்த கம்பெனியில்
இருந்தவர்கள் யோசித்து
பலபேரை சந்தித்து
பல புத்தகங்களை படித்து
கஷ்டமாக இருக்கும்படி
தலைப்புகளைம் ;
காட்சிகளையும் ;
நிகழ்ச்சிகளையும் ;
அளித்தாலும் நாங்கள்
இருவருமே கவிதை எழுதி
விட்ட காரணத்தினால்
கிட்டதட்ட பல மாதங்கள்
எங்களுக்குள்ளே கவிதை
போட்டி நடந்து
கொண்டே இருந்தது ;”

“இத்தகைய சூழ்நிலையில்
ஒரு நண்பன் ஒரு
கஷ்டமான விதி சொல்லி
எங்கள் இருவரையும்
அரை மணி நேரத்திற்குள்
கவிதை எழுதச் சொன்னான்;
இருவரும் எதிர்எதிரே
அமர்ந்து கொண்டோம் ;
இருவருக்கும் பேப்பர்
பேனா தரப்பட்டது ;”

அந்த விதி இது தான்:

“கவிதையின் ஆரம்பம்
முதல் முடிவு வரை
கவிதையின் கடைசி வார்த்தை
ஒன்றாக இருக்க வேண்டும் ;
வரிசையின் கடைசி
வார்த்தைக்கு முந்தின
வாத்தையிலிந்து தான்
அடுத்த வரிசை
ஆரம்பிக்க வேண்டும் ;”

“இந்த விதி ரொம்ப
சிக்கலானது கவிதை
எழுதுவது கடினம் ;
நேரம் ஆரம்பானது
5 நிமிடம் 10 நிமிடம்
15 நிமிடம் இரண்டு
பேருமே எழுதவில்லை ;
20வது நிமிடம் என்னுடைய
நண்பன் எழுதத் தொடங்கி
விட்டான் 30 நிமிடம் எழுதி
முடித்து விட்டான் 30 நிமிடம்
முடிந்து விட்டது நான்
ஒன்றுமே எழுதவில்லை ;”

“ஒரு நண்பன் பேச
தொடங்கினான் பாலா
எழுதவில்லை என்ற
காரணத்தினால் அவன்
தோற்றுவிட்டதாக அறிவித்து
விடலாம் என்றனர் ;
நான் எழுதவில்லை ஆனால்
சொல்லமாட்டேன் என்று
சொல்லவில்லையே என்று
சொல்ல ஆரம்பித்து
சொல்லி முடித்தேன் - கவிதை
எழுதிய என்னுடைய நண்பன்
என்னை கட்டிப்பிடித்து பாலா
நீ தான் வென்றாய் நான்
தோற்று விட்டேன் என்று
சொல்லி தன்னுடைய
கவிதையை கிழித்து விட்டான்;”

“நண்பர்கள் அனைவரும்
பாலா வெற்றி பெற்றதாக
அறிவித்து விடலாம் என்றனர்;
நான் சொன்னேன் வெற்றி
பெற்றது நான் இல்லை
என்னுடைய நண்பன் தான்
பிறருடைய திறமையை
பாராட்டுவதற்கு பரந்த
மனப்பான்மை வேண்டும்
இருவருமே கவிஞர்கள்
என்ற போதிலும் என்னுடைய
திறமையை பாராட்டியதன்
மூலம் பண்பில் அவன்
உயர்ந்து நிற்கிறான் ;
நான் தோற்று இருந்தால்
என்னுடைய நண்பனை நான்
பாராட்டி இருக்க மாட்டேன் ;
உண்மையில் அவன்
தான் வென்றான்
நான் தோற்றேன் என்றேன்”

“என் வாழ்க்கையில்
எதிர்ப்படுபவருடைய நல்ல
குணநலன்களை நான் பின்பற்றி
கடைபிடித்து வருவது என்னுடைய
வழக்கம் - அந்த வகையில்
உயர்ந்தவராக இருந்தாலும்
தாழ்ந்தவராக இருந்தாலும்
யாராக இருந்தாலும் உண்மையான
திறமை யாரிடம் இருக்கிறதோ
அவரை பாராட்டும் தன்மையை
நான் என்னுடைய நண்பனிடம்
இருந்து கற்றுக் கொண்டேன்;”

நான் சொன்ன கவிதை
இது தான் : -

“செடியில் மலர் கண்டேன்
மலரின் இதழ் கண்டேன்
இதழின் அழகு கண்டேன்
அழகில் ஆசை கண்டேன்
ஆசையில் சொர்க்கம் கண்டேன்
சொர்க்கத்தில் இன்பம் கண்டேன்
இன்பத்தின் பொருள் கண்டேன்
பொருளின் பலன் கண்டேன்
பலனின் விளைவு கண்டேன்
விளைவின் துன்பம் கண்டேன்
துன்பத்தின் முடிவு கண்டேன்
முடிவின் தொடக்கம் கண்டேன்
தொடக்கத்தில் அன்பு கண்டேன்
அன்பின் தடை கண்டேன்
தடையின் எல்லை கண்டேன்
எல்லையின் வேற்றுமை கண்டேன்
வேற்றுமையின் அர்த்தம் கண்டேன்
அர்த்தத்தின் ஆழம் கண்டேன்
ஆழத்தில் ஒளி கண்டேன்
ஒளியின் தெளிவு கண்டேன்
தெளிவின் அடக்கம் கண்டேன்
அடக்கத்தில் உயர்வு கண்டேன்
உயர்வின் எழுச்சி கண்டேன்
எழுச்சியின் இலக்கணம் கண்டேன்
இலக்கணத்தின் இறுதி கண்டேன்
இறுதியில் கடவுளைக் கண்டேன்
கடவுளில் என்னைக் கண்டேன்”


----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்
  
-----------20-10-2019
///////////////////////////////////////////