July 12, 2021

பதிவு-3- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-3-

உலகத்தார்-

திருக்குறள்-

 

அவரால் மட்டுமே

நாம் செய்யும் செயல்

நல்லவிதமாக

முடியுமா அல்லது

கெட்ட விதமாக

முடியுமா என்பதை

தெரிந்து கொள்வதற்கு

மட்டும்

சகுனங்கள்

பயன்படுவதில்லை

என்பதையும்

 

துன்பத்திலிருந்து

நம்மைப் பாதுகாக்கும்

வேலையையும்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்

தெரிந்து

கொள்ள முடியும்.

 

நமக்கு வரப்போகும்

துன்பத்தை

நாம் உணர்ந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காக

நம்மாலோ அல்லது

நம்மைச் சுற்றி

உள்ளவர்களாலோ

எழுப்பப்படும்

வார்த்தைகள்

பலவாகும் அவற்றில்

ஒன்று தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

நம்மைப்

பாதுகாப்பதற்காக

வெளிப்படும்

வார்த்தை என்று

கூட சொல்லலாம்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சமுதாயத்தில்

வாழ்ந்த நம்முடைய

முன்னோர்கள்

பயன்படுத்திய வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள்

காலம் காலமாக

பயன்படுத்திக்

கொண்டு

இருக்கும் வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள் தற்போது

பயன்படுத்திக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

அற்புதம் நிறைந்த

பல விஷயங்களைத்

தன்னுள் கொண்டு

இயங்கிக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

பிரபஞ்ச ரகசியங்களில்

முக்கிய

ரகசியங்களைத் தன்னுள்

மறைத்துக் கொண்டு

உலா வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப் பொருளை

உணர்ந்தவர்கள்

அறிவு தெளிவு பெற்று

அமைதியாக

இச்சமுதாயத்தில்

வாழ்ந்து வருகின்றனர்

 

ஆனால் கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப்

பொருளை உணர

முடியாதவர்கள் தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கிண்டல் கேலி

செய்து வருகின்றனர்.

 

கல் வந்து எப்படி

நம்மை இடிக்கும்

நாம் தான் கல்லில்

சென்று இடிக்க வேண்டும்

 

கல்லுக்கு என்ன

உயிர் இருக்கிறதா

கல் வந்து

நம்மை இடிப்பதற்கு

நமக்கு தான்

உயிர் இருக்கிறது

நாம் தான் சென்று

கல்லை இடிக்க வேண்டும்.

 

கல் என்னை

இடித்து விட்டது என்று

சொல்வது தவறு

நாம் தான்

கல்லில் இடித்தோம் என்று

சொல்வது தான்

சரி என்று

சொல்லக் கூடியவர்கள்

இச்சமுதாயத்தில் நிறைய

எண்ணிக்கையில்

இருக்கிறார்கள்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கேலி செய்பவர்கள்

கிண்டல் செய்பவர்கள்

இந்த வார்த்தை

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தை என்பர்

 

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தையை

நாம் தவறாக

சொல்லக்கூடாது

சரியாக

சொல்ல வேண்டும்

என்பர்

 

இந்த சமுதாயத்தில்

காலம் காலமாக

சொல்லப்பட்டு

வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

 

பதிவு-2-உலகத்தார்- திருக்குறள்

 

பதிவு-2-

உலகத்தார்-

திருக்குறள்-

 

நாம் எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

செய்யக்கூடிய

அந்தச் செயல்

நல்லவிதமாக

முடியும் என்பதை

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

நல்ல குறியீடுகளின்

மூலம் நமக்கு

தெரியப்படுத்தும்

சகுனங்கள்

சுப சகுனங்கள்

எனப்படும்.

 

சுப சகுனங்களாக

வீணை, புல்லாங்குழல்,

மேளம், சங்கு,

பட்டத்து யானை

அல்லது

கோயில் யானை

இவைகளைப்

பார்ப்பதும்,

இவைகளின்

ஒலிகளைக் கேட்பதும்

சிறந்த

நற்சகுனங்களாக

கூறப்படுகிறது.

 

மேலும்,

அழகிய பெண்கள்,

நாட்டியப் பெண்கள்,

தயிர்,

இரட்டை பிராமணர்கள்,

மஞ்சள் கலந்த அரிசி

(அட்சதை) கரும்பு,

அருகம்புல்,

நீர் நிரம்பிய குடம்,

பூக்கள், மாலைகள்,

கன்னிப் பெண்கள்,

கருடன், ஆலயமணி ஓசை,

விளக்கு, தாமரைப்பூ,

நாய் தன் உடலை

சிலிர்ப்பது,

பிணம் எதிரே வருவது,

பசு மாடுகள்

இவைகளைக் காண்பது

சுப சகுனமாகும்

 

நாம் எந்த ஒரு

செயலைச் செய்யும்

போதும்

செய்யக்கூடிய

அந்தச் செயல்

கெட்டவிதமாக

முடியும் என்பதை

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

கெட்ட குறியீடுகளின்

மூலம் நமக்கு

தெரியப்படுத்தும்

சகுனங்கள்

அசுப சகுனங்கள்

எனப்படும்

 

அசுப சகுனங்களாக

அணையும் விளக்கு,

தண்ணீர் பாத்திரம்

சாய்ந்து நீர்

வெளியேறுவது,

உடுத்திய ஆடை

கிழிவது, .

செருப்பு அறுந்து போதல்,

அமங்கல வார்த்தை,

ஒற்றைத் தும்மல்,

சத்தமான வார்த்தைகள்,

வீட்டில் மரம் முறிதல்,

பல்லி இடப்புறம்

கத்துவது,

பன்றி, பாம்பு,

குதிரையைக் காண்பது,

சத்தமிடல்,

எண்ணெய்க்குடம்,

விளக்கு மாற்றை

கையில் வைத்திருப்பது,

தன் நட்சத்திரத்திற்கு

உரிய பட்சி

இடமிருந்து

வலமாகச் செல்வது,

விருட்சம் சாய்வது,

மிருகம் இறந்து

விட்டதாகக் கேட்பது,

எருமை மாடு

தென்படுவது ஆகியவை

அசுப சகுனங்களாக

கருதப்படுகின்றன.

 

பறவைகள்

கூட்டமாகப் பறந்தால்

சுப சகுனமாகவும்,

அவை

கத்திக் கொண்டே

பறந்தால்

அபசகுனமாகவும்

ஆகிறது

 

இரண்டு

நமக்கு துன்பம்

வரப்போவதை

முன்கூட்டியே நமக்கு

தெரியப்படுத்தும்

வேலையைச்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்,

 

வரப்போகும்

துன்பம் நம்மைப்

பாதிக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

நம்மைப் பாதுகாக்கும்

வேலையையும்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்,

நமக்கு வரக்கூடிய

துன்பத்திலிருந்து

நம்மைப் பாதுகாக்கும்

பணியைச்

சகுனங்கள் செய்து

கொண்டிருக்கும் போது

நாமும், நம்மைச்

சுற்றியுள்ளவர்களும்

வெளிப்படுத்தும்

வார்த்தைகள்

சகுனங்கள்

நம்மை எப்படி

பாதுகாக்கின்றன

நம்மைப்

பாதுகாப்பதற்காக

எத்தகைய

வார்த்தைகளை

எல்லாம்

சகுனங்கள்

பயன்படுத்துகின்றன

என்பதையும்

 

யார் ஒருவர்

தெரிந்து

கொள்கிறாரோ

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

பதிவு-1- உலகத்தார்- திருக்குறள்

 

பதிவு-1-

திருக்குறள்-

 

“”உலகத்தார்

உண்டுஎன்பது

இல்என்பான்

வையத்து

அலகையா

வைக்கப்படும்””

 

-----திருக்குறள்

-----திருவள்ளுவர்

 

“”நம்முடைய

முன்னோர்கள்

ஆராய்ந்து

ஆனுபவித்து

உணர்ந்து

சொன்னவைகளில்

உள்ள

உண்மைகளை

உணர்ந்து

அதைப்பின்பற்றி

நிம்மதியாக

வாழத் தெரியாதவன்

இறந்தும் நிம்மதியற்ற

வாழ்வை வாழும்

ஒரு பேயைப்

போலத் தான்

தானும்

உயிரோடு

இருக்கும் போதே

நிம்மதியற்று

வாழ்வான்”””

 

என்பதே இந்த

திருக்குறளுக்கு

சரியான விளக்கம்

அதைப்பற்றிப்

பார்ப்போம்

 

நம்மைச் சுற்றி

இயங்கிக் கொண்டிருக்கும்

இயற்கை நிகழ்வுகள்

நமக்கு அடுத்து

நடக்கப்போவது

எப்படிப்பட்ட

தன்மையினை

உடையது என்பதை

நமக்கு உணர்த்தி

நாம் செய்யும்

செயல்களுக்கு

உறுதுணையாக

இருப்பது

சகுனங்கள் எனப்படும்..

 

நாம் ஒரு

வேலைக்காக

சென்று கொண்டு

இருக்கிறோம்

அப்போது ஒரு

பூனை நம்

குறுக்கே செல்கிறது

பூனை நம்

குறுக்கே செல்வது

சகுனம் எனப்படும்.

 

பூனை நம்

குறுக்கே எப்படி

செல்கிறது

என்பதைக் குறித்து

வெளிப்படும் சகுனம்

சுப சகுனமா

அல்லது

அசுப சகுனமா

என்பது

அறியப்படுகிறது

 

பூனை வலமிருந்து

இடம் போனால்

நல்லது அதாவது

சுப சகுனம்

பூனை இடமிருந்து

வலம் போனால்

கெடுதி அதாவது

அசுப சகுனம்

 

சகுனங்கள்

என்பவை மிக

முக்கியமாக இரண்டு

விஷயங்களைச்

செய்கின்றன,

 

ஒன்று :

நாம் எந்த ஒரு

செயலைச்

செய்யும் போதும்

செய்யக்கூடிய

அந்தச் செயல்

நல்லவிதமாக

முடியுமா அல்லது

கெ,ட்ட விதமாக

முடியுமா என்பதை

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

குறியீடுகளின்

நமக்குத்

தெரியப்படுத்தும்

விஷயத்தைச்

சகுனங்கள்

செய்கின்றன.

 

இரண்டு :

நமக்கு ஏதேனும்

கெட்டவிதமான செயல்

நடைபெறப்

போவதாக இருந்தால்

அந்த கெட்ட

விதமான செயலால்

நமக்கு பாதிப்பு

ஏற்படாத வண்ணம்

நம்மை

பாதுகாக்க வேண்டும்

என்பதற்காக

நம்மைச் சுற்றி

நடைபெறும்

செயல்களில் உள்ள

குறியீடுகளின் மூலம்

நமக்குத்

தெரியப்படுத்தி

நம்மை

பாதுகாப்பதற்கான  ஒரு

விஷயத்தைச்

சகுனங்கள் செய்கின்றன.

 

ஒன்று

நாம் செய்யும் செயல்

நல்லவிதமாக

முடியுமா என்பதை

சுப சகுனங்கள்

மூலமாகவும்

நாம் செய்யும் செயல்

கெட்ட விதமாக

முடியுமா என்பதை

அசுப சகுனங்கள்

மூலமாகவும்

தெரிந்து கொள்ளலாம்

 

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////