February 04, 2022

பதிவு-7-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-7-செயற்கரிய-

திருக்குறள்

 

ஏன் அடங்காமல்

இருக்கிறாய்

ஏன் யாரையும்

உன் அருகில்

வர விடாமல்

தடுக்கிறாய்

ஏன் உன் மேல்

சவாரி செய்ய

விடாமல் தடுக்கிறாய்

 

உனக்கு

என்ன ஆனது

உனக்கு என்ன

தான் பிரச்சினை

ஏன்

பயப்படுகிறாய்

எதற்காகப்

பயப்படுகிறாய்

எதைப் பார்த்து

பயப்படுகிறாய்

என்று

பேசிக் கொண்டே

அதன் கண்ணருகில்

வந்து

குதிரையின்

கண்களைப்

பார்த்தான்.

குதிரையின்

கண்களில்

பயம் தெரிந்தது.

 

எதற்காக குதிரை

பயப்படுகிறது என்று

அதன் கண்களை

உற்று நோக்கினான்

அலெக்சாண்டர்

 

குதிரை

எதைப் பார்த்து

பயப்படுகிறது

என்பதைக்

கண்டறிவதற்காக

மேலே வானத்தைப்

பார்த்தான்.

கீழே பூமியைப்

பார்த்தான்

சுற்றும் முற்றும்

பார்த்தான்.

குதிரையைச்

சுற்றிலும் பார்த்தான்.

சிறிது நேரம்

யோசித்தான்.

கண்டு பிடித்து

விட்டான்

அலெக்சாண்டர்.

 

சூரியனின்

எதிர்த்திசையில்

குதிரை

நிறுத்தப்பட்டுள்ளதால்

உண்டான

தன்னுடைய

நிழலைப் பார்த்தே

குதிரை

பயப்படுகிறது

 

பார்ப்பதற்கு

கருமையான

நிறத்தில் இருக்கும்

அச்சத்தை

ஏற்படுத்தக்கூடிய

வகையில் இருக்கும்

தன்னுடைய

நிழலைப் பார்த்தே

குதிரை பயப்படுகிறது.

 

அந்த நிழல்

ஏதோ ஒரு

பயங்கரமான

கருமை

நிறம் கொண்ட

கொடிய மிருகம்

என்று அந்தக்

குதிரை நினைக்கிறது

 

அந்த

கொடிய மிருகம்

தன்னை

பின்தொடர்கிறது

தன்னை கொல்ல

முயற்சி செய்கிறது

தன்னை அழிக்க

நினைக்கிறது

என்று

நினைப்பதால்

குதிரை பயப்படுகிறது.

 

சூரியனுக்கு

எதிர்த் திசையில்

குதிரை

இருக்கின்றது

என்ற

காரணத்தினால்

குதிரையின்

கருமையான

நிறம் கொண்ட

நிழல் தரையில்

விழுகிறது

 

அந்த நிழலைப்

பார்த்துத் தான்

தன்னுடைய

நிழலைப்

பார்த்துத் தான்

குதிரை

பயப்படுகிறது

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-6-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-6-செயற்கரிய-

திருக்குறள்

 

தந்தையிடமும்,

தாயிடமும்

அனுமதி பெற்ற

12-வயது

சிறுவனான

அலெக்சாண்டர்

மைதானத்தில்

இறங்கினான்.

குதிரையின்

அருகில் சென்றான்.

மைதானமே

அமைதியாக

இருந்தது.

மிகச் சிறந்த

குதிரை வீரர்கள்,

குதிரைப்

பயிற்சியாளர்கள்

அனைவரும்

அடக்க முடியாமல்

தோற்றுப்போன

குதிரையை

12 வயது சிறுவனான

அலெக்சாண்டரால்

அடக்க முடியுமா

என்று அனைவரும்

ஆச்சரியத்துடனும்

அமைதியுடனும்

நடக்கப் போகும்

செயல்களைப்

பார்த்துக் கொண்டு

இருந்தனர்.

 

அந்த மைதானமே

அமைதியாக

இருந்தது.

 

பியூசிபேலஸ்

அடங்காத

குதிரை என்றால்

மிகச் சிறந்த

குதிரைப்

பயிற்சியாளர்கள்,

குதிரை வீரர்கள்

அடக்கி

இருக்க வேண்டும்

ஆனால்

அடக்கவில்லை.

அப்படி என்றால்

பியூசிபேலஸ்

அடங்காத குதிரை

கிடையாது

எதையோ பார்த்து

பயப்படும் குதிரை

 

குதிரை

பயப்படுகிறது

என்றால்

எதற்காக

பயப்படுகிறது

என்ன

காரணத்திற்காகப்

பயப்படுகிறது

எதைப் பார்த்து

பயப்படுகிறது

என்பதைக்

கண்டறிந்து

குதிரைக்கு

இருக்கும் பயத்தை

நீக்கி விட்டால்

குதிரையை

அடக்கிவிடலாம்.

 

குதிரை எதற்காக

பயப்படுகிறது

என்பதை

அதன்

கண்களைப்

பார்த்து தெரிந்து

கொள்ளலாம்

என்ற சிந்தனையுடன்

அலெக்சாண்டர்

குதிரையின்

அருகில் சென்றான்.

 

குதிரையின் மேல்

மெதுவாக

கையை வைத்தான்.

குதிரை உடலை

மெதுவாக

சிலிர்த்தது

கனைத்தது.

அலெக்சாண்டர்

குதிரையின் மீது

கைகளை வைத்து

மெதுவாக

தடவிக் கொடுத்தான்.

மெதுவாக வருடிக்

கொடுத்தான்

 

பியூசிபேலஸ்

கறுப்பு நிறத்தில்

அழகாக இருந்தது

 

குதிரையைத்

தடவிக் கொண்டே

குதிரையின்

காதுகளில்

அலெக்சாண்டர்

பேசுகிறான்

நீ பார்ப்பதற்கு

அழகாக இருக்கிறாய்

அனைவரையும்

மயக்கும்

விதத்தில்

இருக்கிறாய்

அனைவரையும்

உன்னுடைய அழகால்

கவர வேண்டிய நீ

எதற்காக

அனைவரையும்

பயமுறுத்துகிறாய்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-5-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-5-செயற்கரிய-

திருக்குறள்

 

மைதானத்தில்

அமர்ந்து

இருந்தவர்கள்

அனைவருமே

குரல் வந்த

திசையை நோக்கி

திரும்பினர்.

நான் அடக்குகிறேன்

என்று மீண்டும்

குரல் எழுப்பினான்

அலெக்சாண்டர்.

 

அனைவரும் அந்த

12-வயது சிறுவனை

ஆச்சரியத்துடன்

பார்த்து

அலெக்சாண்டர் வாழ்க

என்று குரல்

எழுப்பினர்.

 

அப்பா நான் அந்த

குதிரையை

அடக்குகிறேன்

எனக்கு அனுமதி

கொடுங்கள் என்று

அலெக்சாண்டர்

கேட்ட போது

மன்னன் பிலிப்

ஆச்சரியத்தால்

உறைந்து போனான்.

 

அவனுடைய தாயார்

தன் மகனையே

பார்த்துக்

கொண்டிருந்தார்.

அந்த மைதானம்

முழுவதும்

அலெக்சாண்டர்

வாழ்க

என்ற பெயரே

எதிரொலித்துக்

கொண்டிருந்தது.

 

குதிரையை அடக்க

அலெக்சாண்டரை

அனுப்பலாம்.

தோல்வியுற்றாலும்

பரவாயில்லை

காயம் பட்டாலும்

பரவாயில்லை

போராடினான்

என்று எடுத்துக்

கொள்ளலாம்.

அலெக்சாண்டர்

உயிருக்கு ஏதேனும்

ஆபத்து ஏற்பட்டால்

என்ன செய்வது  

என்று யோசித்துக்

கொண்டு இருந்தான்.

மன்னன் பிலிப்

 

ஒலிம்பியஸ்

தன் மகன்

அலெக்சாண்டரையே

பார்த்துக் கொண்டு

இருந்தாள்.

அமைதியாக

இருந்தாள்,

 

அலெக்சாண்டர்

வாழ்க என்ற

குரல்கள்

மைதானத்தில்

தொடர்ந்து

எதிரொலித்துக்

கொண்டு இருந்த

காரணத்தினால்

மன்னன் பிலிப்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்குவதற்காக

மகன்

அலெக்சாண்டருக்கு

அனுமதி

கொடுத்தான்.

 

இந்த

விலையுயர்ந்த

குதிரையை நீ

அடக்கி விட்டால்

இந்த குதிரையை

விலைக்கு வாங்கி

உனக்கே கொடுத்து

விடுகிறேன்.

செல்வாயாக

குதிரையை

அடக்குவாயாக

வெல்வாயாக என்று

அனுமதி

கொடுத்தான்

மன்னன் பிலிப்.

 

அனுமதி பெற்ற

அலெக்சாண்டர்

தன்னுடைய தாயைப்

பார்த்தான்.

மகனைப் பார்த்து

கண்களால் சம்மதம்

தெரிவித்து விட்டு

தலையையும்

அசைத்தாள்

ஒலிம்பியஸ்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

பதிவு-4-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-4-செயற்கரிய-

திருக்குறள்

 

குதிரையை

அடக்குவதற்கான

உத்தரவு

கிடைத்தவுடன்

குதிரை வீரர்கள்

ஒவ்வொருவராக

மைதானத்தில்

இறங்கி

குதிரையை

அடக்க முயன்றனர்.

குதிரையை

அடக்க முயன்ற

வீரர்கள்

குதிரையை

அடக்க

முயன்ற போது

அடிப்பட்டனர்

காயம் பட்டனர்

குதிரையால்

உதை பட்டனர்

குதிரையை

அடக்க முடியாமல்

திணறினர்

குதிரையை

அடக்க முடியாமல்

தோல்வி அடைந்தனர்.

ஒவ்வொருவராக

சென்று

குதிரையை

அடக்க முடியாமல்

திரும்பி வந்தனர்.

 

மிகச் சிறந்த

குதிரை வீரர்கள்

குதிரையேற்றத்தில்

கைதேர்ந்தவர்கள்

கூட குதிரையை

அடக்க முடியாமல்

திரும்பி வந்தனர்.

 

மைதானத்தில்

இருந்த அனைத்து

குதிரை வீரர்களும்

பியூசிபேலஸ்

குதிரையை அடக்க

முயன்றும் அடக்க

முடியாமல்

தோல்வியையே

தழுவினர்.

 

வெற்றி என்பது

அவர்களுக்கு

எட்டாக் கனியாகவே

இருந்தது.

தோல்வியையே

அனைவரும்

சுவைத்தனர்.

 

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்க முயன்ற

அனைவரும்

தோல்வியுற்ற

நிலையில்

பியூசிபேலஸ்

குதிரையை

யாராலும் அடக்கி

தோற்கடிக்க

முடியாத நிலையில்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்க ஆள்

இல்லாததால்

தன்னந்தனியாக

நின்று

கொண்டிருந்தது.

 

பியூசிபேலஸ்

குதிரையை அடக்கக்

கூடியவர்கள்

மாசிடோனியாவில்

யாரும் கிடையாதா

திறமைசாலிகள்

யாரும் கிடையாதா

மாவீரர்கள்

யாரும் கிடையாதா

என்று

கவலையுடனும்

பியூசிபேலஸ்

குதிரையை

யாராலும்

அடக்க

முடியாதா

தோற்கடிக்க

முடியாதா

பியூசிபேலஸ்

குதிரையை அடக்கி

யாராலும் வெற்றி

பெற முடியாதா

வெற்றி

பெறக்கூடியவர்கள்

யாரும் கிடையாதா

என்ற கேள்விக்

குறியுடன்

அனைவருடைய

இதயங்களும்

துடித்துக் கொண்டு

இருந்தது

 

இந்த சமயத்தில்

பியூசிபேலஸ்

குதிரையை

அடக்கக்

கூடியவர்கள்

யாரும் இல்லையா

என்ற கேள்வி

மைதானத்தில்

எதிரொலித்த போது

நான் இருக்கிறேன்

என்று 12-வயது

சிறுவன்

அலெக்சாண்டர்

தான் அமர்ந்து

இருந்த

இருக்கையை விட்டு

எழுந்து நின்றான்.

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////