October 17, 2022

ஜபம்-பதிவு-871 மரணமற்ற அஸ்வத்தாமன்-3 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-871

மரணமற்ற

அஸ்வத்தாமன்-3

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

எனவே வெற்றி

பெற வேண்டும்

என்றால்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய

மூன்றும் தான்

ஒன்றாக சேர

வேண்டுமே ஒழிய

அனுபவம்

ஆர்வம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

ஒன்றாக

சேரக்கூடாது

 

துருபதன் :

அப்படி என்றால்

நான் வெற்றி

பெறவே முடியாதா

 

துரோணர் :

துருபதா

 

நீ பிறக்கும் போதே

அரச குலத்தில்

பிறந்தவன்

 

சுபபோகத்தில்

திளைத்தவன்

 

உன் முன்னால்

நின்று பேசவே

பயப்படுபவர்கள்

 

உன்னை எப்படி

இழிவு படுத்துவார்கள்

அவமானப் படுத்துவார்கள்

அசிங்கப்படுத்துவார்கள்

 

ஆனால்

நாளை நான்

உனக்கு

விரோதியாகலாம்

என்னால் ஏற்பட்ட

அவமானத்தைத்

துடைக்க வெறித்தனம்

உன் மனதில்

குடிபுகலாம்

என்னை

அழிப்பதற்காக

நீ உழைக்கலாம்

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

ஆகிய மூன்றும்

சேர்ந்து

நீ எடுத்த

காரியத்தில்

வெற்றியும்

பெறலாம்

 

துருபதன் :

துரோணா

நீ எனக்கு

நண்பன்

நீ எப்படி

எனக்கு

விரோதியாக

முடியும்

 

துரோணர் :

நண்பர்கள் தான்

விரோதியாகவும்

முடியும்

துரோகியாகவும்

முடியும்

 

நண்பர்கள்

இறுதிவரை

நண்பர்களாக

இருக்கவே

முடியாது

 

துருபதன் :

நீண்ட

நாட்கள்

நண்பர்களாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

ஏதோ ஒரு

காரணத்திற்காகத்

தான் நண்பர்களாக

இருப்பார்களே

ஒழிய

காரணமில்லாமல்

நண்பர்களாக

இருக்க

மாட்டார்கள்

 

துருபதன் :

எந்தக்

காரணமும்

இல்லாமல்

நட்பாக

இருப்பவர்கள்

 

துரோணர் :

கோடியில்

ஒரு நட்பாக

இருக்க முடியும்

 

துருபதன் :

ஏன் அந்த

நட்பு

நம்முடைய

நட்பாக

இருக்கக்

கூடாது

 

துரோணர் :

என்னால்

முடியும்

உன்னால்

முடியாது

 

துருபதன் :

ஏன் முடியாது

 

துரோணர் :

நான்

ஒரு ஏழை

பிராமணன்

நீயோ

அரச குலத்தில்

பிறந்தவன்

கல்வி

கற்பதற்காகத்

தான் நாம்

இருவரும்

இங்கே

ஒன்றாக

இருக்கிறோம்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

 

 

ஜபம்-பதிவு-870 மரணமற்ற அஸ்வத்தாமன்-2 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-870

மரணமற்ற

அஸ்வத்தாமன்-2

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

இந்த மூன்றும்

வெவ்வேறு நிலைகளில்

இருந்து

இயங்கக் கூடியது

 

ஒன்றொக்கொன்று

சம்பந்தமே

இல்லாத இவைகள்

எப்படி ஒன்றாக

சந்திக்க முடியும்

 

அப்படியே

சந்தித்தாலும்

இவைகள் எப்படி

ஒன்றாக இணைந்து

இயங்க முடியும்

 

துரோணர் :

வெவ்வேறு

இடங்களில்

உற்பத்தியாகும்

ஆறுகள்

கடலில் ஒன்றாக

சங்கமிக்கவில்லையா

 

அதைப்போலத்

தான் இவைகள்

மூன்றும் ஒன்றாக

சங்கமிக்கும்

போது வெற்றி

என்பது கிடைக்கும்

 

துருபதன் :

எப்போது ஒன்றாக

சங்கமிக்கும்

 

துரோணர் :

அவமானங்கள்

அசிங்கங்கள்

ஏளனங்கள்

ஆகியவற்றால்

பாதிக்கப்படும் போது

கிடைக்கக்கூடிய

அனுபவமே

நம்முடைய மனதில்

வெற்றி பெற

வேண்டும் என்ற

வெறித்தனத்தை

கொழுந்து விட்டு

எரியச் செய்யும்

 

அந்த வெறித்தனமே

எந்த ஒன்றை

நாம் அடைய

முடியாது என்று

இந்த உலகம்

அவமானப் படுத்தியதோ

எந்த ஒன்றாக

நாம் ஆக

முடியாது என்று

இந்த உலகம்

அசிங்கப்படுத்தியதோ

எந்த ஒன்று நமக்கு

கிடைக்கவே

கிடைக்காது என்று

இந்த உலகம்

ஏளனப்படுத்தியதோ

அந்த ஒன்றை

நாம் அடைய

வேண்டும் என்பதற்காக

உண்ணாமல்

உறங்காமல்

அயராது உழைப்போம்

 

அந்த உழைப்பால்

கிடைக்கக்கூடிய

வெற்றி இருக்கிறது

அல்லவா

அந்த வெற்றி

வெற்றி மட்டும்

கிடையாது

சாதனையும் கூட

 

துருபதன் :

வெறித்தனத்திற்கு

பதில்

நாம் ஏன்

ஆர்வத்தைப்

பயன்படுத்தக்கூடாது

 

துரோணர் :

வெறித்தனத்தை

ஆரம்பித்து வைக்க

வேண்டிய அவசியம்

இல்லை

அனுபவம்

ஏற்படும் போது

வெறித்தனம்

தானாகவே

தோன்றி விடும்

 

அது தன்னுடைய

இலக்கை

அடையும் வரை

தன்னுடைய

இயக்கத்தை நிறுத்தாது

இயங்கிக் கொண்டே

தான் இருக்கும்

 

தன்னுடைய

இலக்கை அடைந்த

பிறகு தான்

தன்னுடைய

இயக்கத்தை நிறுத்தும்

 

ஆனால்

ஆர்வம் அப்படி

கிடையாது

அதை ஆரம்பித்து

வைக்க வேண்டும்

இலக்கை அடையும்

வரை தொடர்ந்து

இயங்கிக்

கொண்டிருக்காது

 

இலக்கை அடைவதற்கு

முன்பாகவே

தன்னுடைய

இயக்கத்தை

நிறுத்தி விடும்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-869 மரணமற்ற அஸ்வத்தாமன்-1 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-869

மரணமற்ற

அஸ்வத்தாமன்-1

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(அக்னிவேஸ்யர்

ஆஸ்ரமம்,

துரோணருக்கும்,

துருபதனுக்கும்

இடையே தனிப்பட்ட

முறையில்

இருவருக்கும்

இடையே நடைபெற்ற

போட்டியில்

துரோணர் வெற்றி

பெற்றார்.)

 

துரோணர் :

வெற்றி

வெற்றி

வெற்றி

நான் வெற்றி

பெற்று விட்டேன்

 

துருபதன் :

வெற்றி

பெறுவதற்காகவே

நீ பிறந்திருக்கிறாய்

துரோணா

 

உன்னை வீழ்த்தி

வெற்றி பெறும்

திறமை படைத்தவர்

இந்த உலகத்தில்

இது வரை

பிறக்கவேயில்லை

 

துரோணர் :

வெற்றி பெற

வேண்டும் என்றால்

 

துருபதன் :

இனி பிறந்து தான்

வர வேண்டும்

 

துரோணர் :

ஏன் இப்படி

சொல்கிறாய்

 

துருபதன் :

உன்னிடமுள்ள

அளவிட முடியாத

திறமையினால்

வெற்றியை

உன்னுடையதாக்கிக்

கொண்டிருக்கிறாய்

 

வெற்றி உனக்கு

மட்டுமே

உரிமையுடையதாய்

இருக்கிறது

 

துரோணர் :

வெற்றி எனக்கு

மட்டுமே

உரிமையுடையது

இல்லை

 

மாறிக் கொண்டே

இருக்கும்

இந்த உலகத்தில்

எதுவுமே

நிரந்தரம் இல்லை

 

இன்று வெற்றி

பெறுபவர் நாளை

தோல்வியடையலாம்

இன்று

தோல்வியடைபவர்

நாளை

வெற்றி பெறலாம்

 

துருபதன் :

நம் இருவரிடையே

நடைபெற்ற

அனைத்து

போட்டிகளிலும்

நீ தானே

வெற்றி

பெற்று

இருக்கிறாய்

 

துரோணர் :

நான் வெற்றிகளை

எளிதாகப்

பெற்று விட்டேன்

என்று நினைத்தாயா

 

துருபதன் :

கஷ்டப்பட்டு

பெற்றேன்

என்கிறாயா

 

துரோணர் :

கஷ்டப்பட்டால்

வெற்றி பெற

முடியும் என்றால்

கஷ்டப்பட்டடவர்கள்

அனைவருமே வெற்றி

பெற்றிருக்க வேண்டுமே

 

ஏன் வெற்றி

பெறவில்லை

 

கஷ்டப்படுகிறவர்கள்

இன்னமும்

கஷ்டப்பட்டுக் கொண்டு

தானே இருக்கிறார்கள்

 

கஷ்டப்பட்டால்

வெற்றி பெற

முடியாது

 

துருபதன் :

வெற்றியை

எப்படித் தான்

பெறுவது

 

துரோணர் :

அனுபவம்

வெறித்தனம்

உழைப்பு

இந்த மூன்றும்

ஒன்றாக சேரும்

போது தான்

பெற முடியும்

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

 

September 05, 2022

சிகண்டியாகி பீஷ்மரைக் கொன்ற அம்பை புத்தக வெளியீடு

 அன்பிற்கினியவர்களே!

 

காஞ்சி சங்கர மடம்

தமிழ்நாட்டின்

காஞ்சிபுரத்தில்

அமைந்துள்ள ஓர்

இந்து சமய துறவியர்

இருப்பிடமாகும்.

 

இது காஞ்சி

காமகோடி பீடம்

என்றும்

அழைக்கப்படுவதுண்டு.

 

காமகோடி பீடம்

ஆதி சங்கரரால்

ஸ்தாபிக்கப்பட்டது

ஆகும்.

அதன் முதல்

பீடாதிபதியும் அவரே.

கி.மு.480-ல் அவர்

பதவி ஏற்றார்.

 

அன்று தொட்டு

இன்று வரை

காஞ்சி காமகோடி பீடம்

தொடர்ச் சங்கிலியாய்

2000 ஆண்டுகளாகப்

பீடாதிபதிகளைக்

கொண்டுள்ளது.

 

காஞ்சி காமகோட்டி

பீடத்தின் 70-வது

சங்கராச்சாரியார்

ஜகத்குரு ஶ்ரீ சங்கர

விஜயேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகள் அவர்கள்

ஆவார்.

 

03-09-2022-ம் தேதி

சனிக்கிழமை மாலை

 

“””சிகண்டியாகி பீஷ்மரைக்

கொன்ற அம்பை”””

 

என்ற தலைப்பைக்

கொண்ட என்னுடைய

மூன்றாவது

படைப்பானது

டைப் செய்யப்பட்டு

பிரிண்ட் எடுக்கப்பட்டு

SPIRAL BINDING

செய்யப்பட்டு இருந்த

என்னுடைய

படைப்பிற்கு

உயிர் அளிக்கும்

வகையில்

காஞ்சி காமகோட்டி

பீடத்தின் 70-வது

சங்கராச்சாரியார்

ஜகத்குரு ஶ்ரீ சங்கர

விஜயேந்திர ஸரஸ்வதி

ஸ்வாமிகள்

அவர்கள் தன்னுடைய

அன்பு அருள் ஆசி

ஆகியவற்றை

அளித்து

ஆடிட்டர் குருமூர்த்தி

அவர்களின்

அரவணைப்பில்

ஆந்திராவில்

காக்கிநாடாவில் உள்ள

ஆசிரமத்தில்

பொது மக்கள்

முன்னிலையில்

புத்தகமாக வெளிவர 

இருக்கும் என்னுடைய

படைப்பை

வெளியிட்டு என்னை

வாழ்த்தியருளினார்

 

இத்தகைய

பெரும் பயனை

அடைவதற்கு

எனக்கு வழிகாட்டிய

மனிதருள் மாணிக்கம்

திரு.கிருஷ்ணன்,

தொழில் நுட்பப் பிரிவு,

தலைமையகம்

அவர்களுக்கு

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நடந்த நிகழ்வுகளின்

காட்சிகளை

உங்களுடைய

கண்களுக்கு விருந்தாகப்

படைப்பதில்

நான் மிக்க மகிழ்ச்சி

அடைகிறேன்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி!

 

--------என்றும் அன்புடன்

 

---------எழுத்தாளர்

---------K.பாலகங்காதரன்

 

-------05-09-2022

-------திங்கட் கிழமை

//////////////////////////////////////////////