December 31, 2023

ஜபம்-பதிவு-942 மரணமற்ற அஸ்வத்தாமன்-74 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-942

மரணமற்ற அஸ்வத்தாமன்-74

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(அஸ்வத்தாமன் கிருஷ்ணனை சந்திக்கச் செல்கிறான்,)

 

கிருஷ்ணர் : அதிசயமாக இருக்கிறது!

அஸ்வத்தாமன் : எதைச் சொல்கிறாய் கிருஷ்ணா?

கிருஷ்ணர் : அஸ்வத்தாமன் என்னைப் பார்க்க வந்தது?

அஸ்வத்தாமன் : ஏன் உன்னைப் பார்க்க வரக்கூடாதா?

கிருஷ்ணர் : துரியோதனனின் நண்பர்கள் யாரும் என்னைப் பார்க்க வருவதில்லை.

அஸ்வத்தாமன் : என்ன காரணம்?

கிருஷ்ணர் : துரியோதனன் என்னை எதிரியாக நினைப்பதால்!

அஸ்வத்தாமன்: துரியோதனன் யாரையும் எதிரியாக நினைப்பதில்லை. அவனைத் தான் அனைவரும் எதிரியாக நினைக்கிறார்கள்.

கிருஷ்ணர் : என்னிடம் சண்டையிட வேண்டும் என்பதற்காகவே வந்தாயா?

அஸ்வத்தாமன் : இப்போது இல்லை.

கிருஷ்ணர் : பிறகு?

அஸ்வத்தாமன் : எதிர்காலத்தில்?

கிருஷ்ணர் : எதிர்காலத்தில் சண்டையிடுவதற்கு இப்போது எதற்காக வந்தாய்?

அஸ்வத்தாமன் : உங்களிடம் ஒன்று வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன். நீ கொடுப்யாய் என்று நம்பி வந்தேன்.

கிருஷ்ணர் : என்னை நம்பி வந்தவர்களை நான் என்றுக்குமே கைவிட்டதில்லை.

அஸ்வத்தாமன் : அதனால் தான் ன்னைத் தேடி வந்திருக்கிறேன்.

கிருஷ்ணர் :  என்ன வேண்டும் என்று சொல்

அஸ்வத்தாமன்: எதிர்காலத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சண்டை நடக்கும்.

கிருஷ்ணர் : சண்டை நடக்கும் என்று முடிவே எடுத்து விட்டாயா?

அஸ்வத்தாமன்: நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சண்டை நடக்காமல் இருந்தால் தான் அதிசயம். நடந்தால் அதிசயம் இல்லை.

கிருஷ்ணர் : எனக்குத் தெரியாது?

அஸ்வத்தாமன் : னக்குத் தெரியாதது என்று எதுவும் இல்லை.

அனைத்தும் அறிந்தவர் நீங்கள்.

 

கிருஷ்ணர் :  என்னை உயர்த்திப் பேசினால், என் மனம் குளிரும்படி பேசினால், நீ கேட்டதை நான் தந்து விடுவேன் என்று நினைத்தாயா?

 

அஸ்வத்தாமன் : யாரையும் புகழ்ந்து பேசித் தான் ஒன்றை பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அது கடவுளாக இருந்தாலும் சரி. மனிதனாக இருந்தாலும் சரி.

 

புகழ்ந்து பேசி எந்த ஒன்றையும் பெற மாட்டான் இந்த அஸ்வத்தாமன்.

 

தகுதி இருந்தால் எனக்கு கிடைக்கப் போகிறது.

 

ன்னிடம் இருக்கும் ஒன்றை பெறுவதற்கும். அதைப் பயன்படுத்துவதற்கும் எனக்கு தகுதி இருக்கின்ற காரணத்தினால் அதை ன் அனுமதியோடு வாங்கிச் செல்லலாம் என்று வந்தேன்,

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------31-12-2023

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////////////////////////////

 

 

December 28, 2023

ஆன்மீகம்-(18)-தாரை,தப்பட்டை,சங்கு - இறுதி சடங்கில் வாசிக்கப்படுவதின் அர்த்தம்-28-12-2023

 

 

ஆன்மீகம்-(18)-தாரை,தப்பட்டை,சங்கு - இறுதி சடங்கில் வாசிக்கப்படுவதின் அர்த்தம்-28-12-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தாரை, தப்பட்டை,சங்கு

என்பது

மரணம் ஏற்பட்டவர்களின்

இறுதி சடங்கில்

வாசிக்கப்படுகிறது

 

தாரை, தப்பட்டை,சங்கு

என்பது

ஜீவசமாதி

அடைந்தவர்களின்

இறுதி சடங்கில்

வாசிக்கப்படுவதில்லை

 

ஏன் என்பதற்கான

விளக்கத்தைப்

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 28-12-2023

------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




December 22, 2023

கோயில்கள்-(16)-மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சுந்தரேசபுரம்-பாகம்-(8)-22-12-2023

 

கோயில்கள்-(16)-மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சுந்தரேசபுரம்-பாகம்-(8)-22-12-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்,

சுந்தரேசபுரத்தில்,

உள்ள

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

திருக்கோயிலைப்

பற்றியும்,

இக்கோயிலில்

அருள் புரிந்து கொண்டிருக்கும்

மீனாட்சி சுந்தரேஸ்வரரைப்

பற்றியும்,

 

அனந்த பத்மநாபன்,

ஏழு சக்கரங்கள்,

மாந்தி,

 

ஆகியவற்றைப் பற்றியும்,

அனைவரும் அறியும்

வண்ணம்

அனைத்து விஷயங்களையும்

தெளிவாக விளக்கி சொன்ன

 

டாக்டர்.திரு.S.கணபதி சுப்ரமணியன்,

தலைவர், திருக்கோயில் நிர்வாகி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

தொடர்பு எண்.6374340690

 

அவர்களுக்கு

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 22-12-2023

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////