August 18, 2024

ஜபம்-பதிவு-1008 மரணமற்ற அஸ்வத்தாமன்-140 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1008

மரணமற்ற அஸ்வத்தாமன்-140

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

பாஞ்சாலி : என்னுடைய பிள்ளைகளைக் கொன்றவனைப் புகழ்கிறீர்கள்

கிருஷ்ணன் : அஸ்வத்தாமன் என்பவன் யார் அவன் எப்படிப்பட்டவன் என்பதைச் சொன்னேன்.

பாஞ்சாலி : அஸ்வத்தாமனின் இறந்த உடல் எனக்கு வேண்டும்

கிருஷ்ணன் : அது முடியாத காரியம்

பாஞ்சாலி : ஏன் முடியாது

அர்ஜுனன் பீமன் போன்ற வீரர்கள் இருக்கும் போது கூட முடியாதா

கிருஷ்ணன் : அவர்களால் மட்டுமல்ல. பாண்டவர்களால் மட்டுமல்ல. இந்த உலகத்தில் உள்ள யாராலும் முடியாது

பாஞ்சாலி : ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்

கிருஷ்ணன் : ஏனென்றால்

மரணமற்றவன் அஸ்வத்தாமன்

அவனுக்கு மரணம் என்பதே கிடையாது

இந்த உலகத்தில் உள்ள கடைசி உயிர் இருக்கும் வரை அவன் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பான்

மனித குலத்தின் கடைசி மனிதன் இறந்த பிறகு இறக்கக் கூடியவன்

கடைசி உயிர் இறந்த பின் தான் அவன் இறப்பான்

பாஞ்சாலி : அவனைக் கொன்று வர வேண்டாம்

கொண்டு வரலாம் அல்லவா

அடிமைப்படுத்தி கொண்டு வரலாம் அல்லவா

கிருஷ்ணன் : அதுவும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல

18 நாள் குருஷேத்திரப் போரில் யாரும் செய்ய முடியாததை அவன் செய்து முடித்து இருக்கிறான்.

இந்த உலகத்திற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டான்

இறந்து போன உன் பிள்ளைகளை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கிறாய். அதனால் உன்னைச் சுற்றி நடத்தப்பட்ட அழிவுகளை நீ பார்க்கத் தவறி விட்டாய். பார்த்து இருந்தால் நீ இவ்வாறு பேசிக் கொண்டு இருக்க மாட்டாய்.

பாஞ்சாலி : அவனை வீழ்த்தி விட்டு வரலாம் அல்லவா?

கிருஷ்ணன் : அவனை வீழ்த்த முடியாது

பாஞ்சாலி : அவனைக் கொல்ல முடியாது

அவனை அடிமைப்படுத்த முடியாது

அவனை வீழ்த்த முடியாது

வேறு என்ன தான் செய்ய முடியும் அஸ்வத்தாமனை

இறந்து கிடப்பது என்னுடைய பிள்ளைகள் என்பதை கருத்தில் கொண்டு அஸ்வத்தாமனை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். அவனை என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

கிருஷ்ணன் : அஸ்வத்தாமனே அனைத்தையும் விட்டு விட்டு அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

நாட்டில் இருக்க விரும்பவில்லை என்று அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

மக்களிடம் இருக்க விரும்பவில்லை என்று அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

யாருடனும் வாழ விரும்பவில்லை என்று அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

பணம் பதவி அதிகாரம் என்று எதுவும்

எனக்கு வேண்டாம் என்று அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

உறவுகள் வேண்டாம், சொந்தங்கள் வேண்டாம்,

நண்பர்கள் வேண்டாம் என்று

அவனே அனைவரையும் விட்டு விட்டு

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

அனைத்தையும் துறந்து விட்டு அவனே

விலகிச் சென்றால் தான் உண்டு.

 

நம்மால் அஸ்வத்தாமனை ஒன்றும் செய்ய முடியாது.

 

யாராலும் அஸ்வத்தாமனை ஒன்றும் செய்ய முடியாது

 

பாஞ்சாலி : இறந்த என்னுடைய பிள்ளைகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அஸ்வத்தாமன் நாட்டில் இருக்கக் கூடாது. மக்களிடையே இருக்கக் கூடாது. உறவுகளிடையே இருக்கக் கூடாது.  யாருடனும் இருக்கக் கூடாது. யாருடனும் வாழக் கூடாது. அவனைக் காட்டிற்குள் விரட்டுங்கள். நாட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதையாவது செய்யுங்கள்.

கிருஷ்ணன் : பாஞ்சாலி! உன்னுடைய ஐந்து பிள்ளைகள் இறந்ததற்கே இப்படி துடிக்கிறாய் காந்தாரி தன்னுடைய 100 பிள்ளைகளை இழந்து தவிக்கிறாளே அவள் எப்படி துடித்து இருப்பாள்

பாஞ்சாலி : அவர் பிள்ளைகளும் என் பிள்ளைகளும் ஒன்றா

கிருஷ்ணன் : தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.

பாஞ்சாலி : ஏன் என்னுடைய பிள்ளைகளை தன்னந்தனியாக கூடாரத்தில் இரவில் விட்டு விட்டு சென்றீர்கள் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்று இருந்தால் அவ்ரகளுக்கு இத்தகைய ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது அல்லவா?

கிருஷ்ணன் : எல்லா விஷயங்களையும் மாற்ற முடியாது. ஒரு சில விஷயங்களை மட்டுமே மாற்ற முடியும்

பாஞ்சாலி : நீங்கள் நினைத்தால் அனைத்தையும் மாற்றலாமே. என் பிள்ளைகளைக் காப்பாற்றி இருக்கலாமே.

கிருஷ்ணன் : விதிக்கு உட்பட்டுத் தான் எதையுமே செய்ய முடியும்

விதியை மீறி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

நான் விதிக்கு கட்டுப்பட்டுத்தான் பாண்டவர்களை அழைத்துச்சென்றேன்

பாஞ்சாலி : அதே விதிக்கு கட்டுப்பட்டு என் பிள்ளைகளை அழைத்துச் சென்று இருக்கலாமே

கிருஷ்ணன் : விதியை மீறிய செயலைச் செய்ய முடியாது.

ஒன்று வேண்டும் என்றால் ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும் இரண்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அது பிரபஞ்ச விதிகளுக்கு மாறானது.

ஒன்றாவது இருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டும்

மற்றொன்று இல்லையே என்று வருத்தப்படக் கூடாது.

பாஞ்சாலி : பாண்டவர்களின் விதியை மாற்றீனீரகள்

ஏன் என் பிள்ளைகளின் விதியை மாற்றவில்லை

கிருஷ்ணன் : பாண்டவர்களால் சில விஷயங்கள் நடக்க வேண்டி இருக்கிறது

பாஞ்சாலி : என் பிள்ளைகளால் எந்தப் பயனும் இல்லையா?

அதனால் தான் அவர்கள் இறக்கட்டும் என்று விட்டு விட்டீர்களா?

அஸ்வத்தாமன் வருவான் என்று தெரிந்து இருக்கும் போது பாண்டவர்களை

விட்டு  சென்றிருந்தால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டு இருக்காது அல்லவா, என் பிள்ளைகளும் இறந்து இறக்க மாட்டார்கள் அல்லவா

 

ஏன் பாண்டவர்களை மட்டும் கூட்டிக் கொண்டு சென்றீர்கள்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

ஜபம்-பதிவு-1007 மரணமற்ற அஸ்வத்தாமன்-139 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1007

மரணமற்ற அஸ்வத்தாமன்-139

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

(பாண்டவர்களின் பாசறை, இறந்து கிடக்கும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கிறாள் பாஞ்சாலி.)

பாஞ்சாலி : பாண்டவர்களின் பிள்ளைகளைக் கொல்லும் அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கிறது.

பாண்டவர்களின் பிள்ளைகள் என்று தெரிந்திருந்தும் கொன்று இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

அவர்களுக்கு அந்த தைரியம் எங்கிருந்து வந்தது.

அந்த தைரியத்தை அவர்களுக்கு கொடுத்தது யார்.

கிருஷ்ணன் : புலியைக் கொல்ல வந்தவர்கள், மானை வேட்டையாடி விட்டு சென்றிருக்கிறார்கள்.

கடன், நெருப்பு, பகை இந்த மூன்றையும் எப்போதும் யாரும் மிச்சம் வைக்கக் கூடாது. அப்படி யார் மிச்சம் வைக்கிறாரோ, மிச்சம் வைத்தவரையே இந்த மூன்றும் அழித்து விடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே மிகச் சிறந்த உதாரணம்.

பாஞ்சாலி : பாண்டவர்களின் பகைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லவா.

கிருஷ்ணன் : அப்படி நினைத்தால் அது நம்முடைய தவறு. மிச்சம் இருந்த பகை எஞ்சி நின்று தன்னுடைய வேலையைச் செய்து விட்டது.

பாஞ்சாலி : பாண்டவர்களின் பிள்ளைகள்

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்

 

பாண்டவர்களின் பிள்ளைகளைக் கொன்று விட்டு

இந்த உலகத்தில் உயிரோடு இருக்க முடியாது

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்.

 

பாண்டவர்களைப் பகைத்துக் கொண்டால் தங்களுக்கு அழிவு நிச்சயம்

என்று தெரிந்திருந்தும் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது யார்

யார் , யார்,

யார் என்னுடைய பிள்ளைகளைக் கொன்றது

கிருஷ்ணன் : அஸ்வத்தாமன்

பாஞ்சாலி : துரோணரின் மகன் அஸ்வத்தாமனா?

கிருஷ்ணன் : ஆமாம்! அவனே தான்.

பாஞ்சாலி : எதற்காக? இந்தக் காரியத்தைச் செய்தான்.

கிருஷ்ணன் : தன்னுடைய நண்பன் துரியோதனனுக்காக இந்தக் காரியத்தைச் செய்தான்.

பாஞ்சாலி : துரியோதனனின் நண்பன் கர்ணன் அல்லவா?

கிருஷ்ணன் : அப்படித் தான் இந்த உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது.

இந்த உலகம் அறியாத சரித்திரம் ஒன்று இருக்கிறது

மறைக்கப்பட்ட வீர சரித்திரம் ஒன்று இருக்கிறது

யாரிடமும் சொல்லப்படாத சரித்திரம் ஒன்று இருக்கிறது

எழுதப்படாத ரத்த சரித்திரம் ஒன்று இருக்கிறது

ஏட்டில் வராத மறைக்கப்பட்ட சரித்திரம் ஒன்று இருக்கிறது

யாரும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாத சரித்திரமாக ஒரு விஷயம் இருக்கிறது. அந்த விஷயத்தை இந்த உலகம் அறிந்து கொள்ள முயற்சி செய்யாத விஷயமாக இருக்கிறது.

நாம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களைத் தவற விட்டு விடுகிறோம். நாம் தவற விட்ட அந்த விஷயங்கள் தான் நமக்கு தொல்லை கொடுக்கக் கூடியவையாக நம் முன்னால் வந்து நிற்கிறது.

அது தான் நமக்கு எமனாக வந்து நிற்கிறது

அது தான் நம்மை ஆட்டிப் படைக்கக் கூடியவையாக வந்து நிற்கிறது

அது தான் நம்முடைய நிம்மதியைக் கெடுக்கக் கூடியவையாக வந்து நிற்கிறது

சாதாரணமாக நினைக்கும் விஷயங்கள் தான்,

 

இந்த விஷயத்தால் நமக்கு பாதிப்பு கிடையாது என்று

நினைக்கும் விஷயங்கள் தான்,

 

நாம் அக்கறை காட்டாத விஷயங்கள் தான்,

 

நாம் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் விஷயங்கள் தான்,

 

நாம் அலட்சியமாக நினைக்கும் விஷயங்கள் தான்

 

நம்முடைய விதியையே முடிக்கும் நிலைக்கு

 

நம்மைக் கொண்டு சென்று விடுகிறது.

 

துரியோதனனுக்கு இரண்டு நண்பர்கள், ஒன்று அஸ்வத்தாமன், இரண்டு கர்ணன்.

அஸ்வத்தாமனைப் பற்றி முழுவதும் அறிந்து வைத்திருந்தவர்கள் இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒன்று துரோணர், இரண்டு நான்.

அஸ்வத்தாமனை மட்டும் கௌரவர்களின் படைத்தளபதியாக துரியோதனன் நியமித்து இருந்திருந்தால் முதல் நாள் போரிலேயே பாண்டவர்கள் வீழ்த்தப்பட்டு இருப்பார்கள். கௌரவர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள்.

அஸ்வத்தாமனை கௌரவர்களின் படைத்தளபதியாக நியமனம் செய்யாதது துரியோதனன் செய்த மிகப்பெரிய தவறு.

துரியோதனனுக்கு அஸ்வத்தாமன் மேல் ஏற்பட்ட சந்தேகம் அவனை இந்தச் செயலை செய்ய விடாமல் தடுத்து விட்டது.

அஸ்வத்தாமனையும், கர்ணனையும் ஒப்பிடும் போது அஸ்வத்தாமன் தான் துரியோதனனுக்கு உண்மையான நண்பனாக இருந்திருக்கிறான். கர்ணன் துரியோதனனுக்கு உண்மையான நண்பனாக இருந்தது இல்லை.

நம்முடன் இருப்பவர்களுடைய மதிப்பு நமக்குத் தெரியவில்லை என்றால் நமக்கு அழிவு என்பது நிச்சயம் என்பதை துரியோதனன் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

துரியோதனனுடைய வாழ்க்கையை பார்த்தாவது இனி மேல் நாம் நம்முடன் இருப்பவர்களுடைய மதிப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----18-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

August 17, 2024

சிலப்பதிகாரம்-(6)-அண்ணனுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த தம்பி இளங்கோவடிகள்-17-08-2024

 

சிலப்பதிகாரம்-(6)-அண்ணனுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்த தம்பி இளங்கோவடிகள்-17-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நல்லவர்கள் போல்

நடிக்கும் இந்த உலகத்தில்

நல்லவர்களாக வாழ்ந்து

கொண்டிருப்பவர்களை

இந்த உலகம்

புரிந்து கொள்வதில்லை

 

பணம் பதவி அதிகாரம்

ஆகியவற்றிற்காக ஆசைப்படும்

இந்த உலகத்தில்

அனைத்தையும் துறந்து

விட்டு செல்வது அனைவராலும்

இயலாத காரியம்

 

அண்ணனுக்காக

பணம் பதவி அதிகாரம்

ஆகிய அனைத்தையும்

துறந்த காரணத்தினால் தான்

காலத்தை வென்று

நிற்கக் கூடிய மாபெரும்

காவியமான

தமிழின் முதல் காவியமான

சிலப்பதிகாரத்தை

படைக்க முடிந்தது

என்ற வரலாற்றை

நினைவில் நிறுத்துவோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----17-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////




August 15, 2024

குடைவரைக் கோயில்-(17)-தளவானூர் குடைவரைக் கோயில்-15-08-2024

 

குடைவரைக் கோயில்-(17)-தளவானூர் குடைவரைக் கோயில்-15-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

விழுப்புரம் மாவட்டம்

செஞ்சி மண்டகப்பட்டு

ஊர்களுக்குஇடையே

அமைந்த தளவானூரில்

தளவானூர்

குடைவரைக் கோயில்

அமைந்துள்ளது.

 

தளவானூர் குடைவரைக் கோயில்

பல்வேறு சிறப்புகளைப் பெற்றது

 

அதைப்பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----15-08-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




August 14, 2024

தமிழ்-(7)-கண்ணகியின் பத்தினி கோட்ட திறப்பு விழாவிற்கு வந்த நான்கு பெண்கள்-14-08-2024

தமிழ்-(7)-கண்ணகியின் பத்தினி கோட்ட திறப்பு விழாவிற்கு வந்த நான்கு பெண்கள்-14-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பத்தினி தெய்வம்

கண்ணகிக்கு

பத்தினி கோட்டம்

கட்டி கும்பாபிஷேகம்

திறப்பு விழா

நடத்தும் போது

வந்த நான்கு

பேர்கள்

சிலப்பதிகாரத்தின்

முக்கிய கதாபாத்திரம்

மட்டுமல்ல

கோவலன் கண்ணகியின்

வரலாறு தெரிந்தவர்கள்

கூட

 

இவர்கள் யார்

என்று பார்ப்போம்

 

நன்றி

 

----K.பாலகங்காதரன்

----எழுத்தாளர்

 

-----14-08-2024

-----புதன் கிழமை

/////////////////////////////////////////////// 






August 12, 2024

தமிழ்-(5)-கணவனுக்காக நாட்டையே எரித்த ஒரே பெண் கண்ணகி தான்-12-08-2024

 

தமிழ்-(5)-கணவனுக்காக நாட்டையே எரித்த ஒரே பெண் கண்ணகி தான்-12-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கணவனுக்காக

மதுரையையே

எரித்த ஒரே பெண்

கண்ணகி மட்டும் தான்

 

மதுரையில் உள்ள

அனைத்தையும்

அவள் எரிக்கவில்லை

 

எதை எரிக்க வேண்டுமோ

அதை மட்டுமே எரித்தாள்

 

நன்றி

 

----K.பாலகங்காதரன்

----எழுத்தாளர்

 

-----12-08-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




 

August 10, 2024

வரலாறு-(19)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(1)-10-08-2024

 வரலாறு-(19)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(1)-10-08-2024


அன்பிற்கினியவர்களே!


சிலம்பம் அ.அருணாசலம்

அவர்கள்

சிலம்பத்திற்காக தன்

வாழ்க்கையையே

அர்ப்பணித்தவர்


சிலம்பத்தின்

சூட்சும விஷயங்கள்,

நுணுக்கங்கள்,

போர்முறைகள்

ஆகியவற்றைப்

பற்றி பல நூல்கள்

எழுதி இருக்கிறார்


பல விருதுகள்

பல பெற்று 

இருக்கிறார்


சிலம்பம் இவரால்

இந்த மண்ணில்

வாழ்ந்து 

கொண்டிருக்கிறது


சிலம்பத்தின்

தன்மைகளை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள் 

உணர்ந்து கொள்ள

இவர் ஒரு 

முக்கிய காரணம்


நன்றி


-----10-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////