February 10, 2012

இயேசு கிறிஸ்து-உரோமரிஷி-ஆமென்றே-பதிவு-8




          இயேசு கிறிஸ்து-உரோமரிஷி-பதிவு-8
      
                               “”பதிவு எட்டை விரித்துச் சொல்ல
                                                              ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
ஜீவனைப் பற்றி விளக்கும் பொழுது , இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

வசனம்-1:
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக் கொண்டாலும் , தன் ஜீவனை நஷ்டப் படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?”
                                                                           மாற்கு - 8 : 36

பொய் கதைகள் பல பேசி ,
பித்தலாட்டங்கள் பல செய்து ,
ஏமாற்றும் வித்தை பல செயல்படுத்தி ,
ஊர்  ஊராகத் திரிந்து அலைந்து ,
நல்வழியில் முடிந்தால் நல்வழியிலும் ,
தீய வழியில் தவறு செய்து மாட்டாவிட்டால் தீய வழியிலும் ,
பொருள் பல சம்பாதித்து ,
இன்பம் துய்க்க இடங்கள் பல வாங்கி  ,
மகிழ்ச்சி களிக்க வீடுகள் பல கட்டி ,
புகழில் திளைக்க பதவிகள் பல பெற்று வாழ்ந்தாலும் ,
இந்த உலகத்தையெல்லாம் தன் காலடியில் கொண்டு வந்து ஆண்டாலும் ,
உலக மக்களை தனக்கு அடிமையாகக் கொண்டாலும் ,
        
                                                    ஓன்றிலிருந்து ஒன்று ,
                                                   ஓன்றுடன் கலக்க ஒன்று ,
                                                   ஓன்றைப் பெற ஒன்று ,
                                                   ஓன்றை அறிய ஒன்று ,
                                                    ஓன்று உயர ஒன்று ,
                                                    ஓன்று இணைய ஒன்று ,
                                                    ஓன்று துளிர்க்க ஒன்று,
                                                    ஒன்று பிரிய ஒன்று,
                                                    ஒன்று முடிய ஒன்று ,
                                                    ஒன்றில் ஒன்று ,
                                                    ஒன்றாக ஒன்று ,
என்பதில் தெளிவு பெற்று ,
நடக்கப் போவதை உணரும் வழி இது தான் என்பதை ,

                               ஒன்றில் உணர்ந்து ,
                               இரண்டில் பழகி ,
                               மூன்றில் தெளிந்து ,
                                நாலும் அறிந்து ,
                                 ஐம்பூதம் சாரம் உணர்ந்து ,
                                அறுசுவை புரிந்து ,
                                ஏழுநிலை கடந்து ,
                                 எண்திசை பார்த்து ,
                                 ஒன்பதை ஆட்சி செய்து ,
                                பத்தில் பக்குவம் முடிந்து ,

                                                                      உணர்வற்ற நிலையை
                                                                      உணர்வில் கலந்து ,
                                                                      தெளிவின் சாரத்தை
                                                                      உண்மையில் புரிந்து ,
                                                                      பொய் - உண்மை முகமூடிட்டு 
                                                                       அலைவதை தெளிந்து ,

                                 சூதின் தன்மை ,
                                மாயையின் மருட்சி ,
                                நிலையற்றதின் நிகழ்வு ,
                               முகவரியற்ற வாழ்க்கை அறிந்து ,

                                                                நடந்ததை தெளிவுப்படுத்தி ,
                                                                நடக்க வேண்டியதை ,
                                                               ஞாபகத்தில் வைத்து ,
                                                                 உண்மை அரியணை ஏற
                                                                உயிரைத் தர வேண்டும்
                                                                என்பதை உணர்ந்து ,


                         சரித்திரத்தின் ரத்த நாளங்களுக்கு
                         தன் இரத்தத்தை
                        அளித்து ,
                         சுவாசக் காற்றை இழந்த
                         பூகோளத்திற்கு
                         சுவாசத்தை தந்து ,
                        முழுமையின் நிலை அறிந்து
                        அமைதி பெற்று ,
                        பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பாய்
                       பிரம்ம ரகசியமாய்
                        இருக்கும் ,

ஜீவனை சூட்சும ரகசியங்களை தன்னுள் கொண்ட ,
ஜீவனின் மதிப்பு உணராமல் ,
அதனை நஷ்டப் படுத்தினால் ,
நஷ்டப்படுத்துவதால் மனிதனுக்கு ஒரு லாபமும் இல்லை .

ஜீவனின் சக்தி குறைய ,
ஜீவனின் அழுத்தம் குறைய ,
மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும் .
இறந்த பிறகு நாம் ஒன்றையும் கொண்டு செல்ல முடியாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் மனிதனுக்கு மரணம் தான் உண்டாகும், ஒரு லாபமும் உண்டாகாது .
ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு லாபமும் கிடைக்காது என்கிறார்  இயேசு .


வசனம்-2:
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?”
                                                                                         மாற்கு - 8 : 37

ஜீவனுக்கு ஈடாத இந்த உலகத்தில் எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது ,
ஜீவனுக்கு ஈடானது இந்த உலகத்தில் எதுவும் இல்லை ,
ஜீவன் இந்த உடலை விட்டு வெளியேறிய பிறகு பிணம் என்று பெயர்  பெறும்.

மனிதன் ஜீவனை இழந்து , மரணித்த பிறகு , மீண்டும் ஜீவனை உயிர்ப்பிக்க முடியாது .
எனவே தான் இயேசு ஜீவனுக்கு ஈடாக மனிதன் எதைக் கொடுப்பான் .

இந்த உலகத்தை எல்லாம் ,
தான் சம்பாதித்ததை எல்லாம் ,
தன்னுடையதை எல்லாம் கொடுத்தாலும் ,
அவன் மீண்டும் உயிர்  பெற முடியாது .

ஜீவனை நஷ்டப் படாமல் இருக்க வழி என்ன?
வைத்துக் கொள்வதற்கு வழி என்ன?
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதற்கான ரகசியங்கள் எவை என்பதை உணர்ந்து ,
ஜீவனை நஷ்டப் படாமல் வைத்துக் கொள்வதால் பலன் என்ன?
என்பதை உணர்ந்து தெளிந்து ,
அறிவு விளக்கம் பெற வேண்டும் என்கிறார்  இயேசு .

ஜீவனை நஷ்டப் படுத்தினால் ,
செத்த பிணத்தை ,
சாகும் பிணங்கள் ,
துhக்கிக் கொண்டு செல்லும் நிலை தான் ஏற்படும் என்கிறார்  இயேசு .



உரோமரிஷி:
             “””“ஆமென்றே இருபத்தோ ராயிரத்தோ
                                       டறுநுhறு சுவாசமல்லோ ஒருநாளைக்குப்
                   போமென்று போனதனால் நாள்குறைந்து
                                      போச்சுதுபோ காவிட்டால் போவதில்லை”””””
                                                          - உரோமரிஷி- உரோமரிஷி ஞானம்
காற்றை உள்ளே இழுத்து ,
வெளியே விடுவதை சுவாசம் என்கிறோம் .
இது உட்சுவாசம் , வெளி சுவாசம் என இரு வகைப்படும் .

இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21, 600 முறை நடக்கிறது .
இந்த உடம்பில் உட்சென்று இயல்பாகத் தங்குவது 14, 400 சுவாசமாகும் .
வீணாகச் செலவாகும் சுவாசம் 7, 200 ஆகும் .
இதன் விளைவால் வாழ்நாள் குறைந்து ,விரைவில் மரணம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளது .
எனவே , வீணாகச் செலவாகும் பிராணணை உடலில் சேமிக்க என்ன வழி என்று கண்டறிய வேண்டும் .

அவ்வாறு கண்டறிந்து வீணாகச் செலவாகும் ,
சுவாசத்தை வெளியே விடாமல் ,
உடலிலேயே அடக்கி விட்டால் ,
மரணம் என்பது ஏற்படாது.
மரணம் என்பது ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இல்லை என்கிறார்  உரோமரிஷி .

வீணாகச் செல்லும் பிராணணை உடலில் நிறுத்தக் கூடிய ரகசியத்தை அறிந்து கொண்டால் ,
எவ்வாறு நிறுத்த வேண்டும் ,
அவ்வாறு நிறுத்துவதால் என்ன பலன் ,
பிராணணை உள்ளே நிறுத்துவதன் மூலம் ,
கிடைக்கும் சக்தி என்ன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
அவ்வாறு உணர்ந்து கொண்டால் மரணமற்று வாழலாம் .

உள்ளிழுக்கும் பிராணனுடன் , அபானனும் கலக்கிறது .
பிராணன் என்பது உயிர்க்காற்று ,
அபானன் என்பது மலக்காற்று ,
உள்ளே இழுக்கப்பட்ட பிராணன் என்னும் உயிர்க்காற்றை ,
மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் என்னும் மலக் காற்றோடு கலக்கின்றது .
கலக்கப்பட்ட இரண்டும் ஆற்றல் மிகு வளியாகிக் குண்டலினி என்னும் பாம்பை மூலாதாரத்தில் விழிக்கச் செய்து ,

மூலாதாரம் , சுவாதிஷ்டானம் , மணிப்பூரகம் , அநாகதம் , விசுக்தி ,ஆக்கினை என்னும் ஆறு ஆதாரங்களைக் கடந்து,
ஆறு ஆதாரங்களுக்குரிய சக்தியை வெளிப்படச் செய்து ,
ஆறு ஆதாரங்களை விழிக்கச் செய்து ,
பிரம்மரந்திரத்தில் அதாவது சகஸ்ராரத்தில் நுழைகிறது ;
சகஸ்ராரத்தில் உள்ள சிவனுடன் கலக்கிறது ;
இதனால் பிறப்பு , இறப்பற்ற நிலையை மனிதன் அடைகிறான் .
மரணம் அற்ற நிலையை அடைகிறான் .
மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறான் .
பிறப்பு , இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபடுகிறான் .

மரணம் இன்றி வாழ வேண்டுமானால் ,
சுவாசத்தை வீணாக்காமல் ,
சுவாசத்தை வீணாக்காமல் இருப்பதற்கு உரிய ரகசியத்தை உணர்ந்து ,
வீணாக்காத சுவாசத்தை வைத்துக் கொண்டு ,
எவ்வாறு மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வது ,
என்பதைப் பற்றிய ரகசியங்களைத் தெரிந்து , அதனைப் பின்பற்றி அதன் வழி நடந்தால் ,
அந்த வழி முறைகளைப் பின் பற்றினால் மரணமில்லாப் பெருவாழ்வு
பெற்று வாழலாம் என்கிறார்  உரோமரிஷி .



இயேசு கிறிஸ்து - உரோமரிஷி:
இயேசு , எல்லாம் அடைந்தாலும் , ஜீவனை நஷ்டப் படுத்தினால் , ஜீவனை நஷ்டப் படுத்துவதால் ஒரு பயனும் இல்லை என்கிறார் .
அவ்வாறே,
உரோமரிஷி ஜீவனை நஷ்டப் படுத்தினால் ஒரு பயனும் இல்லை ,
ஜீவனை நஷ்டப் படுத்தாமல் சேமித்து வைப்பதால் மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்று வாழலாம் என்கிறார் .

                               “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                     போற்றினேன் பதிவுஎட்டு ந்தான்முற்றே “”

February 08, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-புத்தகங்களைச்-பதிவு-7




        இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-பதிவு-7
      
                               “”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
                                                                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
அனைத்து மனிதர்களும் , பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பரலோக ராஜ்யத்தைப் பற்றி பல்வேறு வசனங்கள் மூலம் விளக்கிய இயேசு,
மனிதர்களை பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய விடாமல் தடுப்பவர்களைப் பற்றி கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார்:

மாயக் காரராகிய வேதபாரகரே!  பரிசேயரே!  உங்களுக்கு ஐயோ, மனுஷர்   பிரவேசியாத படி பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப் போடுகிறீர்கள் ; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை , பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.
                                                                                  மத்தேயு - 23 : 13

வேதபாரகர்  பரிசேயர்  ஆகியோரைப் பார்த்து இயேசு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:                                                                        
பரலோக ராஜ்யம் என்றால் என்ன என்றும்  ,
அதன் சிறப்புகள் என்ன என்றும் ,
அதனை அடையக் கூடிய வழி முறைகள் எவை என்றும் ,
அதனை அடைந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்றும் ,

உணராமல் இருக்கிறார்கள் ,
உணர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருக்கிறார்கள் ,
உணர வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் ,
உணர்ந்தவர்களை அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ,
உணர்ந்தவர்களை அண்டி கேட்டுத் தெரிந்து கொள்ளும் மனப் பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள் ,

அறிவு விளக்கம் பெறாமல் இருப்பவர்களுக்கும் ,
உணரத் துடிப்பவர்களுக்கும் ,
உணர்ந்து அதன் பலனை ருசிக்க நினைப்பவர்களுக்கும் ,
அதனை அடையும் வழிகளை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கும் ,
தவறான வழியைக் காட்டும் முட்டாள்களாக இருக்கிறார்கள் ,
என்கிறார்  இயேசு .

மேலும் அவர்களைப் பார்த்து ,
பரலோக ராஜ்யத்தின் மகிமையை உணர்ந்து ,
பரலோக ராஜ்யத்தை அடையும் வழிகளைக் கண்டறிந்து ,
உட்பிரவேசிக்கத் துடிக்கும் மனிதர்கள் ,
பரலோக ராஜ்யத்திற்குள்
பிரவேசியாத படி இருப்பதற்காக மக்களை தவறான வழியில் நடத்துகிறீர்கள் ,
முட்டாளாக வைத்திருக்கிறீர்கள் ,
அறிவு விளக்கம் பெறாமல் வைத்து இருக்கிறீர்கள் ,
சுயமாக சிந்தித்து செயலாற்றும் தன்மையை மழுங்கடித்து வைத்திருக்கிறீர்கள் ,
அடிமையாக வைத்து நீங்கள் இன்பத்தில் திளைக்கிறீர்கள் ,

பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைப் பெற்று ,
பரலோக ராஜ்யத்திற்குள் உட்பிரவேசித்து ,
வாழ்வதற்கு தேவையானவற்றைப் பெற்று விட்டால் ,

தங்களை மதிக்காத நிலை உண்டாகி விடும் ,
தங்கள் ஆதிக்கம் உடைந்து விடும் ,
தங்கள் மணிமுடிகள் கழன்று விடும் ,
தங்கள் சாம்ராஜ்யம் அழிந்து விடும் ,
தங்கள் இன்பக் கோட்டைகள் தவிடு பொடியாகி விடும் ,
என்ற காரணத்தினால் ,
என்ற நினைவுகளை  ,
என்ற சிந்தனையை ,
நீங்கள் மனதில் கொண்டிருப்பதால் ,

பரலோக ராஜ்யத்தின் திறவு கோலை மனிதர்  பெறமுடியாமல் இருப்பதற்காக ,
பரலோக ராஜ்யத்தின் திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ,
பரலோக ராஜ்யத்தை பூட்டு போட்டு பூட்டி வைத்திருக்கிறீர்கள் ,
பரலோக ராஜ்யத்தை அடைய முடியாமல் தடுக்கிறீர்கள் ,
பரலோக ராஜ்யத்தை நெருங்க விடாமல் குழப்புகிறீர்கள் ,
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க முடியாத படி தடுத்து வைத்திருக்கிறீர்கள் ,
என்கிறார்  இயேசு .


மேலும் ,
பரலோக ராஜ்யத்தைப் பற்றி தெரியவும் இல்லை ,
அதில் பிரவேசிக்கும் வழி நீங்கள் அறியவும் இல்லை ,
உள்ளே பிரவேசித்ததும் இல்லை ,
பிரவேசிக்கப் போகிறதும் இல்லை ,
இத்தகைய நிலை கொண்டவர்கள் நீங்கள் ,
உங்களுக்குத் தான் ஒன்றும் தெரியாது ,
உண்மை விளக்கம் புரியாது ,
பரலோக ராஜ்யத்தைப் பற்றித் தெரியாத ,
நீங்கள்
அமைதியாக இல்லாமல் ,
பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க நினைப்பவர்களை ,
பிரவேசிக்க துடிப்பவர்களை ,
தொல்லை கொடுக்கிறீர்கள் ,
தவறான வழி காட்டுகிறீர்கள் ,
அனைத்தும் உணர்ந்தது போல் நாடகம் ஆடுகிறீர்கள் ,
ஆர்வத்தை குறைக்கிறீர்கள் ,


பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கத் தகுதி இல்லாத நீங்கள்
தகுதி உடையவர்களையும் பிரவேசிக்க விடாமல் தடுக்கிறீர்கள் என்கிறார் இயேசு .



சிவவாக்கியர் :

           """""""புத்தகங் களைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்
                          செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென் றறிகிலீர்
                         அத்தனைய சித்தனை யறிந்துநோக்க வல்லிரேல்
                         உத்தமத்து ளாயசோதி யுணரும்போக மாகுமே""""
                                                                -------சிவவாக்கியர்------

            “””புத்தகங் களைச்சுமந்து பொய்களைப் பிதற்றுவீர்””
அனுபவ ரீதியாக உணர்ந்தவைகளை வார்த்தைகளாக்கி எழுத்தில் கொண்டு வர முடியாது .
வார்த்தைகளாக்கி எழுத்தில் கொண்டு வந்தால் அவை அனுபவ ரீதியாக உணர்ந்தவைகளாக இருக்க முடியாது .
                           கண்டவர்  விண்டிலர் ;
                           விண்டவர்  கண்டிலர்
என்பது இதன் அடிப்படையில் எழுந்தது தான் .

கடவுள் எந்த உருவத்தில் இருப்பார் ,
எந்த உடைகளை அணிந்து இருப்பார் ,
எந்த அணிகலன்களை அணிந்து இருப்பார் ,
எந்த விதமான குணங்களைப் பெற்று இருப்பார் ,
எந்த விதமான நிறத்துடன் இருப்பார் ,
போன்றவற்றை எல்லாம் வகைப்படுத்தி ,

இப்படித் தான் கடவுள் இருப்பார் என்று
வார்த்தைகளாக்கி எழுதி வைத்து இருந்தால்
அவர்கள் கடவுளைக் கண்டவர்களாக இருக்க மாட்டார்கள் .
கடவுளை கண்டு அறிந்து உணர்ந்து இருப்பவர்கள்
அதை வார்த்தைகளாக்கி எழுத்தில் கொண்டு வர மாட்டார்கள் .

கடவுளை
                                      ஒரு குறிப்பிட்ட வார்த்தையில் ,
                                      ஒரு குறிப்பிட்ட இலக்கணத்திற்குள் ,
                                      ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் ,
                                      ஒரு குறிப்பிட்ட குணத்திற்குள் ,
                                      ஒரு குறிப்பிட்ட நிறத்திற்குள் ,
                                       ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் ,
கொண்டு வர முடியாது .
எல்லையில்லாத ஒன்றை எல்லை கொண்ட
வார்த்தைகளுக்குள் , சொற்களுக்குள் , மொழிகளுக்குள்
கொண்டு வர முடியாது .

கடவுளை உணர்ந்தவர்கள்
கடவுளைப் பற்றி வார்த்தைகளைக் கொண்டு
சொல்ல மாட்டார்கள் .
கடவுளைப் பற்றி எழுத்துகளைக் கொண்டு
எழுதி வைக்க மாட்டார்கள் .
ஏனென்றால் ,
கடவுளைப் பற்றி வார்த்தைகளால்
சொல்லவும் முடியாது ;
கடவுளைப் பற்றி எழுத்துக்களால்
எழுதவும் முடியாது ;

வார்த்தைகளற்ற ஒன்றை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது ,
சொல்லற்ற ஒன்றை சொல்லுக்குள் அடக்கி சொல்ல முடியாது ,
குணமற்ற ஒன்றை குணத்திற்குள் கொண்டு வந்து விளக்க முடியாது ,
நிறமற்ற ஒன்றை மற்றவற்றுடன் ஒப்பிட்டு வேறுபடுத்தி காட்ட முடியாது ,
உருவமற்றை ஒன்றை ஒரு குறிப்பிட்ட உருவத்திற்குள் அடக்கி காட்ட முடியாது .

உண்மை உணர்ந்தவர்கள் கடவுளைப் பற்றிய விளக்கங்களை ,
அடையும் வழி முறைகளை ,
அடைந்தால் கிடைக்கும் பலன்களை ,
சூட்சும ரகசியங்களாக ,
மறைபொருள்களாக ,
பாடல்களாக எழுதி வைத்து இருக்கின்றனர்.

உண்மையை உணராதவர்கள்
பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விட்டு
வசீகர வார்த்தைகளைப் பயன் படுத்தி
பல்வேறு புத்தகங்களாக ஆன்மீகம் என்ற பெயரில்
கிறுக்கி வைத்து இருக்கின்றனர்
மூளை குழம்பிய நிலையில் ,
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற
சுய நல நோக்குடன் பிதற்றி வைத்து வைத்து இருக்கின்றனர்.

அந்த புத்தகங்களை உண்மை என்று நம்பி ,
நல்லொழுக்க நெறிகளைப் பின்பற்றி ,
அனுபவ ரீதியாக பயிற்சிகள் செய்து ,
தவங்கள் பல இயற்றி ,
விரதங்கள் முறையாக கடைபிடித்து ,
உண்மை நிலை காணாமல் ,
உண்மை நிலை உணராதவர்களுடைய புத்தகங்களைப் படித்து ,

அவற்றை மனப்பாடம் செய்து கொண்டு  வெளிவிடப்பட்ட புத்தகங்களிலுள்ள பொய்களை எல்லாம் அறிந்தவர்  போல
உண்மையை அறியாதவர்களுக்கு உண்மை அறிந்தவர் போல்
பேசுவதாக நினைத்துக் கொண்டு பயித்தியம் போல் பிதற்றுகின்றீர்  என்கிறார் சிவவாக்கியர்.



             “””செத்திடம் பிறந்திடம் தெங்ஙனென் றறிகிலீர்””””
இந்த உலகம் எங்கிருந்து தோன்றியது
எங்கே முடியப் போகிறது
உயிர்களின் தோற்றம் எங்கே?
அவைகளின் முடிவு எங்கே?
மனிதனின் ஆரம்பம் எங்கே?
மனிதனின் முடிவு எங்கே?
பிரபஞ்சத்தின் தோற்றம் எங்கே?
பிரபஞ்சத்தின் முடிவு எங்கே?

பிரபஞ்சம் - பிரபஞ்ச மாற்றம் ,
உயிர்கள் - உயிர்களின் மாற்றம் ,
ஆகியவைகளின் ஆரம்பம் எங்கே ?
ஆகியவைகளின் முடிவு எங்கே ?
ஆதி அந்தம் எங்கே என்பதை அறிந்து கொள்ள முடியாத ,
சூட்சும ரகசியத்தை  அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்து கொள்ள முடியாது .



             “””அத்தனைய சித்தனை யறிந்துநோக்க வல்லிரேல்
                  உத்தமத்து ளாயசோதி யுணரும்போக மாகுமே”””
ஆதி அந்தம் பற்றி அறியாமல் இருக்கிறார்கள் .
ஆதி அந்தத்தின் ரகசியத்தை உணர்ந்து அனுபவ ரீதியாக ,
பிறப்பிடம் - இறப்பிடம் ஆகியவற்றின் உண்மை தெளிந்து ,
ஞானத்திற்கான திறவு கோலைப் பெற்றவர்கள்

யார்  என்பதைக் கண்டறிந்து ,
அவர்களைப் பற்றி அறிந்து ,
சித்தர்களின் நிலைதனை உணர்ந்து ,
உண்மையாக சித்தர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .


அவர்களைப் பின்பற்றி அவர் அடியொற்றி
அவர்  வழிமுறைகளை அனுபவ ரீதியாக செயல் முறைக்கு கொண்டு வந்து தெளிவு பெற்றால் ,
இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை
ஆதி அந்தம் இல்லாத அருட்பெருஞ்ஜோதியை
நம் உள் ஜோதியாக இருப்பதை உணர்ந்து கொள்ளலாம் என்கிறார் சிவவாக்கியர் .



இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர்:
இயேசு , பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்காதவர்கள் மற்றவர்களை பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க விடாமல் தடுக்கின்றனர்  என்கிறார்.

அவ்வாறே ,
சிவவாக்கியரும் , கடவுளை உணராதவர்கள் கடவுளை உணரத் துடிப்பவர்களை உணர விடாமல் தடுக்கின்றார்  என்கிறார் .


                            “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                                     போற்றினேன் பதிவுஏழு  ந்தான்முற்றே “”