March 11, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-புறந்துhய்மை- பதிவு-22




             இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-புறந்துhய்மை- பதிவு-22

                  “”பதிவு இருபத்துஇரண்டை விரித்துச் சொல்ல
                                                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
அகத்தை துhய்மையாக எவ்வாறு வைத்திருக்க வேண்டும்
என்பதைப் பற்றி இயேசு உவமைகள் மூலம்
கீழ்க்கண்ட வசனங்கள் வாயிலாக விளக்குகிறார் :

“மாயக்காரராகிய வேதபாரகரே ! பரிசேயரே ! உங்களுக்கு ஐயோ , போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள் ; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.”
                                                                         --------மத்தேயு - 23 : 25
                                                      
“குருடனான பரிசேயனே ! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும் படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு”
                                                                     -----------மத்தேயு - 23 : 26

அகத்திலே நஞ்சை வைத்துக் கொண்டு
புறத்திலே அமிர்தம் நிறைந்த வார்த்தை பேசுபவர் ;

அகத்திலே துரோகத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே நட்பின் இலக்கணமாகத் திகழ்பவர் ;

அகத்திலே பொய்யை வைத்துக் கொண்டு
புறத்திலே உண்மையின் வடிவமாக உலவுபவர் ;
   
அகத்திலே காமப் பிசாசை வைத்துக் கொண்டு
புறத்திலே காதல் கீதம் இசைப்பவர் ;

அகத்திலே அழிக்கும் எண்ணத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே கருணையின் வடிவமாக நடப்பவர் ;

அகத்திலே சுயநலத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே பொது நலம் கொண்டவர்  போல் பாசாங்கு செய்பவர் ;

அகத்திலே களங்கங்களை வைத்துக் கொண்டு
புறத்திலே கண்ணியவானாக திரிபவர்  ;

அகத்திலே வஞ்சனைகளை வைத்துக் கொண்டு
புறத்திலே கருணையின் இலக்கணமாய்த் திகழ்பவர் ;

அகத்திலே தன்னலத்தை வைத்துக் கொண்டு
புறத்திலே தியாகி வேடம் போடுபவர் ;

அகத்திலே அளவற்ற அழுக்குகளை வைத்துக் கொண்டு
புறத்திலே துhய்மையானயவராக உலா வருபவர் ;

இவ்வாறு பல்வேறுபட்ட தன்மைகளை தன்னுள் கொண்டு
                                    உண்மை உருவை மறைத்து ,
                                    பொய் வேஷம் போட்டு ,
                                   போலி வேடம் தரித்து ,
                                   உதட்டில் புன்னகையையும் ,
                                   வார்த்தையில் வசீகரத்தையும் ,
                                 முகத்தில் கவர்ச்சியையும் ,
                                  செயலில் பொய்மையையும் ,
                                  வைத்துக் கொண்டு திரியும்
             வேதபாரகரே!
             பரிசேயரே !

வேதபாரகர்  என்றால் அனைவருக்கும் தெரியும்
பரிசேயர்  என்றால் என்ன என்று பார்ப்போம் .

பரிசேயர் :
பரிசேயர் என்றால் பிரிந்து நிற்பவர் .
அதாவது சட்டத்தை மிக நுணுக்கமாக கடை பிடிக்கும்
பொருட்டுச் சாதாரண மக்களிடமிருந்து தம்மையே
பிரித்துக் கொண்டவர்  எனப்பொருள் .

இவர்கள் 10 கட்டளைகளைப் பல நுhறு சட்டங்களாகப் பகுத்து ,
613 துணைச் சட்டங்களாகப் பிரித்து அவற்றுக்கு அதிகாரப் பூர்வமான
விளக்கம் கொடுத்து வந்தார்கள்.

அத்தகைய வேதபாரகரையும் , பரிசேயரையும் பார்த்து இயேசு
அகத் துhய்மையை உவமை கொண்டு விளக்குவதன் மூலம்
இந்த சமுதாயத்திற்கு தேவையானவற்றை விளக்குகிறார் .

ஒரு பாத்திரத்தின் வெளிப்புறம் துhய்மையாக இருந்து
உட்புறம் துhய்மையாக இல்லையெனில்
அந்த பாத்திரத்தை நீர்  ஊற்றி வைப்பதற்கோ ?
பொருட்களை வைத்து பாதுகாப்பாக வைப்பதற்கோ ?
உணவுப் பண்டங்களைப் போட்டு வைப்பதற்கோ ?
காய்களை போட்டு சமைப்பதற்கோ ?
அரிசியை போட்டு சாதம் வடிப்பதற்கோ ?
எண்ணெய் ஊற்றி பலகாரம் செய்வதற்கோ ?
உபயோகப்படாது .

எந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டாலும்
அதன் உட்புறம் துhய்மையாக இருக்க வேண்டும்
உட்புறம் துhய்மையாக உள்ள பாத்திரம் மட்டுமே நமக்கு பயன்படும்
உட்புறம் துhய்மையாக உள்ள பாத்திரம் மட்டுமே
பயன்படுத்தும் தகுதியை உடையது .

வெளிப்புற துhய்மையை மட்டுமே வைத்துக் கொண்டு
உட்புறம் துhய்மையில்லாத பாத்திரத்தை நாம் பயன்படுத்த முடியாது .
எதற்கும் பயன் படாது ஒன்றுக்கும் உதவாது .

அதைப் போல ,
அகத்தை அழுக்காக வைத்துக் கொண்டு ,
அழுகிய பிணத்தின் நாற்றத்தை அகத்தில் வைத்துக் கொண்டு ,
புறத்தே நல்லவர் போல் நடமாடுகிறீர்கள் .

இதனால் சமுதாயம் கெடுகிறது ;
மக்கள் கெடக்கூடிய நிலை உருவாகிறது ;
நல்லவர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது ;
                                           கருணை கொல்லப்படுகிறது ;
                                          இரக்கம் அழிக்கப்படுகிறது ;
                                          அன்பு சிதைக்கப்படுகிறது ;
                                         அறிவு முழுங்கடிக்கப்படுகிறது ;
                                         சிந்தனை புதைக்கப்படுகிறது ;
                                         பகுத்தறிவு எரிக்கப்படுகிறது ;
                                         முன்னேற்றம் தடைபடுகிறது ;
                                         இன்பம் குலைக்கப்படுகிறது ;
                                        துரோகம் சதிராட்டமாடுகிறது ;
                                        துன்பங்கள் உயர்த்தப்படுகிறது ;
                                        கவலைகள் முடிசூட்டப்படுகிறது ;
                                       ஆணவம் எள்ளிநகையாடுகிறது ;
                                       அறியாமை தவழ்கிறது ;
                                       ஏழ்மை உயர்கிறது ;
                                       வறுமை சிறக்கிறது ;
                                       துhய்மை அழுக்காகிறது ;
                                       உண்மை இறக்கிறது ;
                                       பொய்மை சிரிக்கிறது ;
                                        உவகைகள் அழுகிறது ;
                                        காலங்கள் மறைகிறது ;
                                        கடமைகள் தொலைகிறது ;
                                        பொறுமைகள் இறக்கிறது ;
                                        நிதானங்கள் மரிக்கிறது ;
                                        உழைப்பு வாடுகிறது ;
                                       சோம்பல் துளிர்க்கிறது ;
                                       வாழ்க்கை வெறுக்கிறது ;
                                       மனிதத்தன்மை அழிகிறது ;
                                       நீதி விலையாகிறது ;
                                      சட்டம் சிறையாகிறது ;
                                      அநீதி ஆனந்தமாகிறது ;
                                      சாத்தான் வளர்கிறது ;

எனவே அகத்தை துhய்மைப் படுத்துங்கள் என்கிறார்  இயேசு .



திருக்குறள்    :

              “”“புறந்துhய்மை நீரான் அமையும் அகந்துhய்மை
                   வாய்மையால் காணப் படும்””””
                                             ---------திருவள்ளுவர்------திருக்குறள்---

சிந்தனையை சிலந்தி வலை பின்னி இருக்கிறதா ?
உள்ளத்தை கரையான் அரித்து விட்டிருக்கிறதா ?
அறிவை அறியாமை சூழ்ந்து இருக்கிறதா ?
அன்பை அரக்கத்தனம் ஆண்டு கொண்டு இருக்கிறதா ?
கருணையை கள்ளத்தனம் அடிமைப் படுத்தி வைத்து இருக்கிறதா ?
இரக்கத்தை நயவஞ்சகம் நசுக்கிக் கொண்டு இருக்கிறதா ?
பொது நலத்தை சுயநலம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறதா ?

( அல்லது )
                              அன்பு அரசாட்சி செய்கிறதா ?
                             ஆணவம் அடங்கி கிடக்கிறதா ?
                             இரக்கங்கள் பூத்து குலுங்குகிறதா ?
                             ஈகை உயர்ந்து இருக்கிறதா ?
                             எளிமை நாட்டியம் ஆடுகிறதா ?
                             ஏழ்மை மதிக்கப் படுகிறதா ?
                            ஐம்புலன் ஒடுங்கி இருக்கிறதா ?
                            ஓற்றுமை போற்றப் படுகிறதா ?
                            ஓருயிராக உணரப் படுகிறதா ?
                            ஓளஷதகுணம் நிரம்பி இருக்கிறதா ?

நல்லெண்ணங்கள் சிறந்து விளங்குகிறதா ?
துரோகங்கள் துண்டிக்கப் படுகிறதா ?
உண்மைகள் விதைக்கப் படுகிறதா ?
பொய்மைகள் புதைக்கப் படுகிறதா ?
களங்கங்கள் கழற்றப் படுகிறதா ?
அழுக்குகள் நீக்கப் படுகிறதா ?
துhய்மைகள் போற்றப் படுகிறதா ?
நற்பண்புகள் ஏற்றம் பெறுகிறதா ?
கருணைகள் வளர்க்கப் படுகிறதா ?

என்ற இரு வேறுபட்ட ,இரு நிலைகள் கொண்ட ,
இரு துருவங்களை,
அகத்தில் உள்ள மாறுபட்ட நிலைகளை ,
எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும் .

புறத்தை நீரால் துhய்மைப் படுத்தலாம் ,
பன்னீரால் நீராட்டலாம் ,
வாசனை திரவியங்களால் குளிப்பாட்டலாம் .

பல்வண்ண ஆடைகளை ,
உயர்தரமான ஆடைகளை ,
கவர்ச்சிகரமான ஆடைகளை ,
மதி மயக்கும் ஆடைகளை ,
அணிவிக்கலாம் .

சந்தனம் ,ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களால்
வாசனைக்கு உட்படுத்தலாம் .

தங்கம் ,பிளாட்டினம் , பஞ்சலோகம் ,முத்து ,வைரம்
பவளம் ,மாணிக்கம் ,புஷ்பராகம் என்று பலவித அணிகலன்களை
கொண்டு அழகு செய்யலாம் .

புறம் துhய்மையாக இருக்கிறது
அழகாக இருக்கிறது - என்று
வெளிக் காட்டிக கொள்ளலாம் .
அகம் துhய்மையாக இருக்கிறதா இல்லையா?
என்பதை எவ்வாறு உணர்வது

பேசும் பேச்சும் ; செய்யும் செயலும் ;
ஒன்றாக இருக்க வேண்டும் .
அப்பொழுது தான் அகம் துhய்மையாக இருக்கிறதா ?
அழுக்காக கரைப்படிந்து இருக்கிறதா ?
என்று உணர்ந்து கொள்ள முடியும் .

நான் ,
ஏழ்மையைக் கண்டு வருந்துபவன் ;
ஏழையைக் கண்டு இரங்குபவன் ;
துன்பத்தைக் கண்டு துயர்  துடைப்பவன் ;
ஆபத்து என்று வந்தவர்க்கு அபயம் அளிப்பவன் ;
கண்ணீருடன் வருபவர்க்கு உதவும் கரமாக இருப்பவன் ;
கொடுமை கண்டு கொதிப்பவன் ;
தவறுகளைக் கண்டு மிதிப்பவன் ;
ஏமாற்றுபவர்களை கழுவில் ஏற்றுபவன் ;
பகைவனை பஞ்சாக்கி காற்றில் துhற்றுபவன் ;

என்று வீர வசனம் பேசிவிட்டு ,
உதவி என்று அபயக்கரம் நீட்டி
துன்பத்தை நீக்குங்கள் என்று ஓடிவரும்
ஏழைக்கு உதவாமல் ஓடி ஒளிந்து கொள்பவர் ;
அகம் அழுக்கால் கரை படிந்திருக்கிறது என்றும்
துன்பம் நீக்கி அவர்  வாழ்வு சிறக்க செயற்கரிய செயல் செய்பவர் ;
                  அகம் துhய்மையாக இருக்கிறது ;
                               உண்மையாக இருக்கிறது ;
                                நேர்மையாக இருக்கிறது ;
                                களங்கமற்று இருக்கிறது ;
                                அழுக்கற்று இருக்கிறது ;
என்பதை உணர்ந்து கொள்ளலாம் ;

ஒருவன் பேசும் உண்மையிலிருந்து
அவன் மனத்துhய்மை உடையவன் என்பதை அறியலாம்
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :
இயேசு ,புறத்தே எவ்வளவு தான் நல்லவனாக நடித்தாலும்
அகத்தே அழுக்கு நிறைந்து இருந்தால்
புறத்தே உங்கள் உண்மை நிலையை வெளிக்காட்டி விடும்
ஆகவே அகத்தை முதலில் துhய்மைப் படுத்துங்கள் என்கிறார்  .


அவ்வாறே ,
திருவள்ளுவரும் ,புறத்தே எவ்வளவு தான் நல்லவனாக நடித்தாலும்
உங்கள் பேச்சும் ,செயலும்
ஒன்றுக்கொன்னு மாறுபட்டு செயலைச் செய்யும் போது
உங்கள் அகம் அழுக்கடைந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டி விடும்
எனவே முதலில் அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார் .

இயேசு , அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார் .

அவ்வாறே ,
திருவள்ளுவரும் , அகத்தை துhய்மைப்படுத்துங்கள் என்கிறார்.

                      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                போற்றினேன் பதிவுஇருபத்துஇரண்டு  ந்தான்முற்றே “”

March 09, 2012

இயேசு கிறிஸ்து-உலகநாதர்-கோயில்இல்லா-பதிவு-21



       இயேசு கிறிஸ்து -உலகநாதர் -கோயில் இல்லா-பதிவு - 21    

                         “”பதிவு இருபத்துஒன்றை விரித்துச் சொல்ல
                                                          ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
கடவுள் இருக்கும் இடத்தைப் பற்றியும் ,
கடவுள் இருக்கும் இடத்தை எவ்வாறு
துhய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் ,
இயேசு தன் வாழ்வில் செயல்படுத்தி காட்டிய விதத்தைப் பற்றி
கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் :

இயேசு எருசலேமுக்குப் போய் ,

“தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும் , காசுக்காரர்  உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, ”
                                                                        ----------யோவான் - 2 : 14

“கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டு பண்ணி , அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்தி விட்டு , காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி பலகைகளைக் கவிழ்த்துப் போட்டு, ”
                                                                        -----------யோவான் - 2 : 15  

“புற விற்கிறவர்களை நோக்கி : இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக் கொண்டு போங்கள் ; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .”
                                                                          -----------யோவான் - 2 : 16

                         அறியாமையை அடித்தளமாக்கி ;
                         மடமையைச் சுவராக்கி ;
                        மத வெறியை மாளிகையாக்கி ;
                        கண்மூடிப் பழக்கங்களைக் கதவாக்கி ;
                        வேற்றுமையை வேலியாக்கி ;
                         கடவுளை வியாபாரப் பொருளாக்கி ;

பக்தி என்னும் போர்வையில்
தின்று கொழுக்கும் பருந்துகள் ;
இரத்தம் குடிக்கும் ஓநாய்கள் ;
இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் ;
சாக்கடையில் நெளியும் புழுக்கள் ;
அழுக்கை சாப்பிடும் காகங்கள் ;
பிணம் தின்னும் கழுகுகள் ;


நல்லவர்கள் என்ற போர்வையில் ,

நல்லவர்கள் போல் நடித்து ,
உண்மை உணர்ந்தவர்  ;  ஊருக்கு உழைப்பவர்  - என்று

பகல் வேஷம் போட்டுக் கொண்டு
தன்னையும் தன் குடும்பத்தையும்
உயர்த்திக் கொள்ளும் சுயநல விரும்பிகள் ;


மதத்தின் பெயரால் ; கடவுளின் பெயரால் ; பக்தியின் பெயரால் ;
உண்மையை வெளிப்படுத்தாமல் ,
அறியாமையை விதைத்து ,
பணத்தை அறுவடை செய்து ,
வயிறு வளர்க்கும் தவறானவர்கள் - ஓரு சிலர்

வியாபாரம் செய்து கொண்டிருக்கும்
எல்லாம் வல்ல இறைவனுடைய புனித வீட்டில் ;
அனைத்தையும் அளிக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
அன்பு குடி கொண்டிருக்கும் இறைவனுடைய புனித வீட்டில் ;
கருணை நிரம்பி வழியும் இறைவனுடைய புனித வீட்டில் ;

துன்பம் என்று வந்தவர்க்கு துன்பம் நீக்கி
இன்பம் தரும் இறைவனுடைய வீட்டில் ;

கண்ணீருடன் வந்தவர்க்கு கண்ணீரைத் துடைத்து
புன்னகை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

சோகத்தின் சுமையை தோளில் சுமந்து வந்தவர்க்கு
சோகத்தின் சுமையை முற்றிலும் நீக்கி
மகிழ்ச்சி கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வாழ்க்கையை வெறுத்து வாழ முடியாமல் போனவர்க்கு
வாழ்வின் இனிமையை அளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

பாவத்தால் பாதிக்கப்பட்டவருக்கு
பாவத்தைக் கழித்து நல்வழி காட்டும் இறைவனுடைய வீட்டில் ;

வருந்தி உழைப்பவர்க்கு
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை - என்று
வருத்தப்படுவர்க்கு செல்வம் அடைவதற்கான
திறவு கோலைத் தரும் இறைவனுடைய வீட்டில் ;

தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப் பட்டிருப்பவரையும்
நோயைத் தீர்த்து சுகமளிக்கும் இறைவனுடைய வீட்டில் ;

வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்க்கும்
வறுமையை நீக்கி ஏற்றத்தைக் கொடுக்கும் இறைவனுடைய வீட்டில் ;

இறைவனின் வீட்டை அசுத்தப்படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை அவமானம் செய்தவர்களை ,
இறைவனின் வீட்டை இழிவு படுத்தியவர்களை ,
இறைவனின் வீட்டை வியாபாரம்  செய்ய பயன்படுத்தியவர்களை

ஏன் என் பிதாவின் வீட்டை கள்ளர்  குகை ஆக்கினீர்கள்
என்று அடித்து துரத்தினார் .

என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் .
கடவுள் இருக்கும் இடத்தை வியாபார ஸ்தலமாக்காதீர்கள் என்றார்.
இயேசு .

கடவுள் இருக்கும் இடம் துhய்மையாக இருக்க வேண்டும் என்றும்
அதை அசுத்தப் படுத்தக் கூடாது என்றும் விளக்குகிறார் .

துhய்மையாக இருக்கும் இடத்தில் தான் கடவுள் வந்து தங்குவார்
அசுத்தமான இடத்தில் கடவுள் வந்து தங்க மாட்டார்
என்ற காரணத்திற்காகவே இயேசு இச்செயலைச் செய்தார்.


இதில் இன்னொரு ரகசியமும்  மறைந்து இருக்கிறது
அகத்தில் துhய்மை இருந்தால் தான் ,
இறைவன் வந்து தங்குவார்  என்று பொருள் .

புற வழிபாட்டிற்காக அமைக்கப்பட்ட கோயில்கள்
துhய்மையாக இருந்தால் எப்படி இறைவன் எவ்வாறு வந்து தங்குவாரோ?
அதைப் போல ,
உடலாகிய ஆலயத்தில் உள்ளமாகிய கோயில்
துhய்மையாக இருந்தால் தான் இறைவன் வந்து தங்குவார்
என்கிறார்  இயேசு .



உலகநாதர்:

       “””கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்”””
                                                    -----உலகநாதர்-----உலக நீதி------

மிகவும் புகழ் பெற்ற இந்தப் பாடல் பெரும்பாலான நுhல்களில்
ஔவையார்  என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .
பலரும் அவ்வாறே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த புகழ்மிக்க சிறப்புமிக்க பாடலைப் பாடியவர்  
உலகநாதர்  என்பதையும்,
அதை அவர்  தன்னுடைய உலகநீதி என்ற நுhலில்
எழுதியிருக்கிறார் என்பதையும் ,
அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் .

இந்த பாடலில் உலகநாதர்  என்ன கருத்தை
சொல்ல வருகிறார்  என்பதை இப்பொழுது பார்ப்போம்:


கடவுளிடம் இருந்து சக்திகளைப் பெற வேண்டும் ;
கடவுளிடம் இருந்து வரங்கள் பலவற்றைப் பெற வேண்டும் ;
கடவுள் விளக்கம் பெற வேண்டும் ;
கடவுள் நிலை புரிய வேண்டும் ;
கடவுள் தன்மை உணர வேண்டும் ;
கடவுள் உண்மை நிலை விளங்க வேண்டும் ;
கடவுளை அறிய வேண்டும் ;
கடவுளை அடைய வேண்டும் ;
கடவுளாய் மாற வேண்டும் - என்று
கடவுள் பற்றி நிதம் சிந்தித்துக் கொண்டிருப்பவர் ;
கடவுளை அறிய முற்படுபவர் ;


அறிய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இரண்டு :
ஒன்று -------- கர்ம வினை,
இரண்டு ------ மறுபடியும் பிறத்தல்
இவைகள் இரண்டும் மறைக்கப்பட்டதால் ;
விளக்கம் தெரியப்படுத்தப் படாததால் ;
சூட்சுமம் விளக்கப் படாததால் ;
ரகசியங்கள் அவிழ்க்கப் படாததால் ;

கடவுளை அடையும் வழி மறைக்கப் பட்டது ;
கடவுளை உணரும் வழி சிக்கலாக்கப் பட்டது ;
கடவுளை அறியும் வழி புதைக்கப் பட்டது ;
இதனால் தான் இந்த உலகம்
மூவரின் ஆளுகைக்குள் வந்து விட்டது ;

மக்கள் கடவுளின் மேல் வைத்த பக்தியை
தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு
மதத் தலைவர்கள் பெருகி விட்டனர்;

மதத்தின் மூலம் கிடைக்கும் பணம் அளவற்றது என்பதால்
பொருளாதாரத் தலைவர்கள் வளர்ந்து விட்டனர்;

இரு நிலையில் உள்ளவர்களும்
தான் பெற்றதைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்
இனி பெறப் போவதை வளர்த்துக் கொள்வதற்கும் ;
அரசியல் தலைவர்களுடன்  இணைந்து விட்டனர் ;
இணக்கமாக சென்று விட்டனர் ;

அரசியல் தலைவர்கள்,  மதத் தலைவர்கள் , பொருளாதாரத் தலைவர்கள்,
இந்த மூவரின் ஆளுகைக்குள்  - தான்
இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது .
இந்த உலகம் வந்து விட்டது .

தாங்கள் வாழ்வதற்காக கடவுளின் உண்மை நிலை
மக்களை உணர விடாமல் தடுத்து விட்டனர் .

இதனால் தான் ,
புற வழிபாட்டில் உள்ள ஆளுமைத் தன்மையையும் ,
அக வழிபாட்டில் உள்ள உண்மைத் தன்மையையும் ,
அறியும் அறிவு இல்லாமல் போய் விட்டது .

இந்தத் தன்மையைத் தான் புறத்தை சொல்வது போல் இருக்கும்
இந்த அடிகளில் தான் உலகநாதர்
அகத்தை அக வழிபாட்டில் உள்ள,  
சூட்சும ரகசியங்களை கட்டவிழ்க்கிறார்.



கோயில் :
கோ என்றால் அரசன் என்று பொருள் .
இல் என்றால் இறைவன் , அரசன் , தலைவன் , உறைவிடம்
இருக்குமிடம் என்று பொருள் .
கோயில் என்றால் இறைவன் இருக்குமிடம் என்று பொருள் .

இந்த உடலாகிய ஆலயத்தில்
உள்ளம் என்ற கோயிலில் இறைவன் இருக்கிறான் .

                                                          மயக்கு மொழி பேசி
                                                         மங்கையர்  வாழ்வை
                                                         நிர்மூல மாக்குபவன் !
          காவி வேடம் தரித்துக் கொண்டு
          கயமைத் தனம் புரியும்
          கபட வேடதாரிகள் !
                                                         அறியாத நெஞ்சை
                                                         அடிமையாக்கி
                                                         அழவைத்து ரசிப்பவர்கள் !
         ஏழ்மையில் உழல்பவர்களை
         ஏளனம் செய்து
         எள்ளி நகையாடுபவர்கள்!
                                                      நாவின் நுனியில்
                                                      நயவஞ்சக வார்த்தை வைத்துக் கொண்டு
                                                      நல்லவர்களை அழிப்பவர்கள் !
         தலைக் கணம் மிகுதி கொண்டு
         தலை கால் புரியாமல்
         தறி கெட்டு நடப்பவர்கள் !
                                                      பொய் பேசி
                                                      பித்தலாட்டம் செய்து
                                                      கூட இருந்தே குழிபறிப்பவர்கள் !
        அஞ்சாது தவறுகளைச் செய்து
        சுக போகங்களில்
        திளைப்பவர்கள் !
                                                   நஞ்சை நெஞ்சிலும்
                                                   போலித் தனத்தை முகத்திலும்
                                                   வைத்துக் கொண்டு குடி கெடுப்பவர்கள் !    
                  
        பேதையராய் பெண்டிரைக் கண்டு
        அவர்களை ஊமையராக்கி
        போகப் பொருளாக்கி துய்க்கும்
        இழி குணம் கொண்டவர்கள் !

                                               பஞ்சமா பாதகங்களை
                                               மனதிற்கு பயப்படாமல்
                                               மனம் அறிந்து செய்பவர்கள் !
        ஆகியோருடைய உள்ளத்தில் அதாவது
        கலங்கமுள்ள அசுத்தமுள்ள உள்ளத்தில்
        இறைவன் குடி இருக்க மாட்டான் .


                                              இத்தகைய தன்மை கொண்டவரிடம்
                                             அசுத்தம் நிறைந்த உள்ளம் கொண்டவரிடம்
                                             இறைவன் இருக்க மாட்டான் .


உடலாகிய ஆலயத்தில் , உள்ளம் என்ற கோயிலில் , இருக்கும் இறைவன்
அசுத்தமுள்ள , களங்கம் நிறைந்த அகத்தில், அதாவது
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து இருக்க மாட்டான் .
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .


உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்குவான் .
உள்ளம் சுத்தமாக இல்லையெனில் ,
உள்ளமாகிய கோயிலில் இறைவன் வந்து தங்க மாட்டான் .
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , அதாவது
உடலாகிய ஆலயத்தில் , உள்ளமாகிய கோயிலில் ,
இறைவன் இல்லையெனில்
உயிரே நீ உடலில் இருக்க வேணடாம் .
உடலாகிய ஆலயத்தில், உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அத்தகையவன் இழிவான குணத்தை உடையவன் .
அத்தகைய தன்மை உடையவன் இருப்பதை விட இறப்பதே மேல் .
உடலாகிய ஆலயத்தில்,உள்ளமாகிய கோயிலில்,

இறைவன் இல்லையெனில்
அதாவது இறைவன் இல்லாத உடம்பில் குடியிருக்க வேண்டாம் .
அதாவது உயிரே நீ உடலில் குடி இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் இருக்க வேண்டாம் .
உயிர் உடலில் தங்க வேண்டாம் .
உயிரே நீ வெளியே வந்து விடு என்கிறார்  உலகநாதர்
ஒருவனுடைய அகம் துhய்மையாக இல்லையெனில்
இறைவன் வந்து அகத்தில் தங்க மாட்டான் .
அத்தகைய நிலை உடைய மனிதன் ,
துhய்மையான அகம் இல்லாத மனிதன் ,
இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்  உலகநாதர் .



இயேசு கிறிஸ்து - உலகநாதர்:

இயேசு ,
அகத்தை துhய்மையாக வைத்திருந்தால் இறைவன் வந்து

குடியேறுவார், இருப்பார்,  தங்குவார், என்கிறார் .


அவ்வாறே,
உலகநாதரும் ,
அகம் துhய்மையாக இருந்தால் இறைவன் வந்து தங்குவார்.
அகம் துhய்மையாக இல்லையெனில் இறைவன் வந்து

தங்க மாட்டார் என்கிறார்.
மேலும் ,
ஒரு படி மேலே போய் அகத்தில் இறைவன் இல்லாதவன்

இருப்பதை விட இறப்பதே மேல் என்கிறார்.


                         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                      போற்றினேன் பதிவுஇருபத்துஒன்று  ந்தான்முற்றே “”