April 10, 2012

இயேசு கிறிஸ்து-வள்ளலார்-உள்ளொன்று- பதிவு - 32




       இயேசு கிறிஸ்து-வள்ளலார்-உள்ளொன்று  - பதிவு - 32

       “”பதிவு முப்பத்திரெண்டை விரித்துச் சொல்ல
                      ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து , மற்றவனைச் சிநேகிப்பான் ; அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு ; மற்றவனை அசட்டை பண்ணுவான் ; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது. ”
                                                                       ----------மத்தேயு - 6 : 24

சிந்தனை என்பது வேறு
கற்பனை என்பது வேறு

சிந்தனையால் பலன் உண்டு
கற்பனையால் பலன் உண்டு என்று சொல்ல முடியாது

சிந்தனையோடு கூடிய கற்பனையே சிறந்தது
கற்பனையோடு கூடிய சிந்தனை சிறந்தது அல்ல

சிந்தனையோடு கூடிய கற்பனையே பலன் தரும்
கற்பனையோடு கூடிய சிந்தனையால் எந்தப் பலனும் இல்லை

சிந்தனையோடு கூடிய கற்பனையே வெற்றிக்கு வழி
கற்பனையோடு கூடிய சிந்தனையோ தோல்விக்கு வழி

சிந்தனையோடு கற்பனை செய்து சிந்திப்பது வாழ்க்கை உயர்வுக்கு வழி
கற்பனையோடு சிந்தனை செய்து சிந்திப்பது தோல்விக்கே வழி

சிந்தனையோடு கற்பனை செய்து சிந்தித்து முன்னேறியவர்கள் பலர்
கற்பனையோடு சிந்தனை செய்து சிந்தித்ததால் தாழ்ந்தவர்கள் பலர்

வெற்றி என்பது சிந்தனையோடு கற்பனை செய்வதே
தோல்வி என்பது கற்பனையோடு சிந்தனை செய்வதே

சிந்தனையே சிறந்தது
சிந்தனையோடு கூடிய கற்பனையே சிறந்தது!
என்ற இரு வேறுபட்ட நிலைகளில்
முரண்பாடுகளின் மொத்த தொகுப்பாக
உலகம் சுழன்று கொண்டிருக்கிறது .

மனிதனும் இரண்டு மாறுபட்ட முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும்
வெளியில் ஒரு முகத்தை மட்டுமே காட்டிக் கொள்கிறான் .
பிடித்தவை – பிடிக்காதவை ,
நல்லவை – கெட்டவை ,
உயர்ந்த குணம் - தாழ்ந்த குணம் ,
என்ற இரு வேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும்
நல்ல குணங்களை வெளிக் காட்டிக் கொண்டும்
கெட்ட குணங்களை உள்ளே மறைத்து கொண்டும்
மனிதன் நடமாடுகிறான் .

நல்லவனாக வெளியில் நடமாடினாலும்
கெட்டவைகளை உள்ளே வைத்துக் கொண்டு
சுமந்து கொண்டு தான் திரிய வேண்டும் .
மனிதன் அவ்வாறே திரிந்து கொண்டிருக்கிறான் .

ஒருவனால் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்
மேல் சவாரி செய்ய முடியாது !
ஒரு குதிரையின் மேல் பயணம் செய்தால்
செல்ல வேண்டிய இலக்கை
செய்ய வேண்டிய காலத்திற்குள் ,
செல்ல வேண்டிய நேரத்திற்குள் ,
சென்று முடிக்க வேண்டிய காரியத்தை
செயல்படுத்த வேண்டிய நிகழ்வுகளை முடிக்க முடியும் .
அதை விடுத்து இரு மாறுபட்ட
இரு தன்மைகளைக் கொண்டு
இரு குதிரைகளின் மேல் பயணம் செய்தால்
ஒவ்வொரு குதிரையும் ஒரு குறிப்பிட்ட
காலம் வரை ஒன்றாக வரும் .
ஒன்றாக செயல்படும் .

காலம் மாறும் போது
பருவங்கள் மாறும் போது  இரண்டு குதிரையும்
வெவ்வேறு இலக்கை நோக்கி ,
வெவ்வேறு திசைகளை நோக்கி ,
வெவ்வேறு துருவங்களை நோக்கி ,
வெவ்வேறு மாற்றங்களை நோக்கி ,
வெவ்வேறு பகுதியை நோக்கி ,
வெவ்வேறு இடத்தை நோக்கி ,
வெவ்வேறு தன்மையை நோக்கி ,
வெவ்வேறு குறிக்கோள்களை நோக்கி ,
வெவ்வேறு செயல்பாடுகளை நோக்கி ,
பயணித்தால் பயணம் செய்பவன்
அதல பாதாளத்தில் வீழ்வான் ;
தலை குப்புற வீழ்வான் ;
மண்ணைக் கவ்வி வீழ்வான் ;
காயம் பட்ட உடலுடன் வீழ்வான் ;
புண்பட்ட மனதுடன் வீழ்வான் ;

எப்பொழுதும் மனிதன் இருவேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளை தன்னுள் கொண்டு இயங்க முடியாது
ஓன்று நல்லவனாக  இருக்க முடியும் ;
அல்லது கெட்டவனாக இருக்க முடியும் .

ஒரே நேரத்தில் ஒருவனால் நல்லவனாகவும்
கெட்டவனாகவும் இருக்க முடியாது .

ஒருவன் நல்லவனாக இருந்தால்
அவனுள் கெட்டவை அடங்கி கிடக்கும் .
ஒருவன் கெட்டவனாக இருந்தால்
அவனுள் நல்லவை வெளிப்படாமல் அமிழ்ந்து கிடக்கும் .

அதைப் போல ஒருவனால் இரண்டு முதலாளிகளிடம்
இரண்டு எஜமானர்களிடம் வேலை செய்ய முடியாது
ஏனென்றால் இரண்டு பேரிடமும்
உண்மையாக இருக்க முடியாது  ;
நேர்மையாக இருக்க முடியாது ;
கண்ணியமாக இருக்க முடியாது ;
கடமை தவறாமல் இருக்க முடியாது ;
பொய் உரைக்காமல் இருக்க முடியாது ;
தவறு செய்யாமல் இருக்க முடியாது ;
பாதை மாறாமல் இருக்க முடியாது ;
ஒழுக்கத்துடன் இருக்க முடியாது ;
உண்மையாக இருக்க முடியாது ;
நல்லெண்ணத்துடன் இருக்க முடியாது ;

ஒருவரிடம் உண்மையாக இருந்தால்
மற்றொருவரிடம் உண்மையாக இருக்க முடியாது .

ஒருவரிடம் உண்மையாக இருந்தால்
மற்றொருவரிடம் நல்லவன் வேஷம் போட்டு
கெட்டவனாகத் தான் இருக்க முடியும் .
ஒருவனை ஏற்றுக் கொண்டால் மற்றவனை புறக்கணிப்பான் .
புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான் .

அதைப் போல நம்முள் இரண்டு மாறுபட்ட
முரண்பாடுகள் இருக்கின்றன
ஒன்று     - உலகியல் வாழ்க்கை
மற்றொன்று - அருளியல் வாழ்க்கை
உடலியல் வாழ்க்கையில் உடலை வளர்க்கிறோம் !
அருளியல் வாழ்க்கையில் உயிரை வளர்க்கிறோம் !

உலகியல் வாழ்க்கையில் கவலையற்று இருக்க ,
துன்பம் நீங்கி இன்புற்று இருக்க ,
செல்வம் பெற்று செழிப்புடன் இருக்க ,
வாழ்க்கைத் தேவைகளைப் பெற்று சிறப்புடன் இருக்க ,
செயல்கள் பல செய்து உடலை வளர்க்கிறோம்
அருளியல் வாழ்க்கையில் ஆண்டவனை உணர்ந்து
ஆண்டவன் அருளைப் பெற்று
ஆண்டவன் ஆசியைப் பெற்று
ஆண்டவனுக்கு சேவை செய்து
உயர்வான நிலையை அடைய முயற்சிக்கிறோம் .

உலகியல் வாழ்க்கை  ; அருளியல் வாழ்க்கை ;
இரண்டும் இருவேறுபட்ட துருவங்கள் ,
இரண்டும் இருவேறுபட்ட பாதைகள் ,
இரண்டும் இருவேறுபட்ட செயல்முறைகள் ,

உலகியல் வாழ்க்கை அனைத்தையும் பெற முயற்சிப்பது
உலகியல் வாழ்க்கை இவ்வுலகில் ஒருவன்
வாழ்வதற்கு தேவையானவற்றை பெற முயற்சிப்பது .

அருளியல் வாழ்க்கை உண்மையில் அனைத்தையும்
துறந்தால் மட்டுமே கிடைப்பது .
அருளியல் வாழ்க்கையை உணர்ந்து
ஆண்டவன் அருளைப் பெற்று விட்டால்
உலகியல் வாழ்க்கைக்குத் தேவையான
எல்லாவற்றையும் பெற முடியும் .

ஆனால் நாம் அருளியல் வாழ்க்கையில் மனதை ஈடுபடுத்தாமல்
உலகியல் வாழ்க்கையில் தான் அதிக அளவில்
மனதை செலுத்துகிறோம் .
அருளியல் வாழ்க்கையில் மனதை ஈடுபடுத்தாமல் இருக்கிறோம் .

ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு குதிரைகளின்
மேல் சவாரி செய்ய முடியாது !
ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு எஜமானர்களிடம்
உண்மையாக வேலை செய்ய முடியாது !
ஒரு மனிதனால் ஒரே சமயத்தில் இரண்டு மாறுபட்ட
வாழ்க்கை வாழ முடியாது !

உலகியல் வாழ்க்கையில் மனதை செலுத்தியவருக்கு ,
அருளியல் வாழ்க்கையில் மனதை செலுத்த முடியாது .

அருளியல் வாழ்க்கையில் மனதை செலுத்தியவருக்கு ,
உலகியல் வாழ்க்கையில் மனதை செலுத்த முடியாது .

இரண்டு நிலைகளிலும் ஒருவனால் முழுமையாக ஈடுபட முடியாது .
ஏதாவது ஒன்றை துறந்தால் தான் முழுமையான வாழ்க்கையை
முழுமையான ஒன்றைக் கொண்டு நடத்த முடியும் .

எதை துறப்பது , எதை பின்பற்றுவது இரண்டில் ஒன்றை
எதை தொடர்வது என்பதை அவனவன் தான் முடிவு செய்ய வேண்டும் .

அருளியல் வாழ்க்கையில் ஈடுபட்டு
ஆண்டவன் அருளைப் பெற்று
உயர்வான நிலையை அடைய வேண்டுமானால்
உலகியல் வாழ்க்கையை துறந்தால் மட்டுமே முடியும்  ;
ஆண்டவனிடம் முழுமையாக மனதை செலுத்த முடியும் ;
ஆண்டவன் அருளைப் பெற முடியும் ;
ஆண்டவனை உணர முடியும் ;

உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டு
தன் தேவையை நிறைவேற்றிக் கொள்பவர்,
அருளியல் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாது  ;
ஆண்டவனுக்கு சேவை செய்ய முடியாது ;
ஆண்டவனை அடைய முடியாது ;
ஆண்டவன் அருளைப் பெற முடியாது ;

ஒருவனால் ஒரே சமயத்தில்
இரு மாறுபட்ட வாழ்க்கை  வாழ முடியாது .
ஏதாவது ஒன்றை துறந்தாக வேண்டும் .
ஏதாவது ஒன்றை துறந்து ஒன்றை ஏற்று
உண்மையாக இருக்க வேண்டும் .

எதை தேர்ந்தெடுப்பது என்பதை ஒவ்வொருவரும்
அவரவருடைய சுய அறிவின் மூலம் முடிவு செய்து கொள்ளுங்கள் .
எது நமது வாழ்க்கைக்கு தேவையோ ?
எது நமது வாழ்க்கைக்கு பொருந்துமோ ?
எதன் வழி நடக்க விரும்புகிறோமோ ?
எதன் மேல் மனம் செல்கிறதோ ?
எதை அடைய வேண்டும் என்று மனது துடிக்கிறதோ ?
எதை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறக்குமோ ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது திருப்தி அடையுமோ ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது சாந்தி அடையுமோ?
எதை ஏற்றுக் கொண்டால் மனது நிம்மதி அடையுமோ?
அதை ஏற்றுக் கொண்டு அதன் வழி உண்மையாக நடங்கள்

இரண்டு விதமான நிலைகளைக் கொண்டு
இரண்டு விதமான மனங்களைக் கொண்டு
ஒருவனால் ஒரு சமயத்தில் வாழ முடியாது .
என்பதை உணர்ந்து கொண்டு
இரண்டு விதமான வாழ்க்கை வாழாமல்
ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஒன்றைப் பற்றி
நின்று கொண்டு உண்மையாக வாழுங்கள் .
இரண்டு முரண்பட்ட வாழ்க்கையை வாழாதீர்கள்
வாழவும் முடியாது என்கிறார்  இயேசு .



வள்ளலார்:
“”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
                  உறவு கலவாமை வேண்டும்”””
              ------வள்ளலார்-திருவருட்பா--
                                        ----முதல் திருமுறை-தெய்வமணிமாலை--

ஒரு சமயத்தில் இருவேறுபட்ட துருவங்கள் ;
மாறுபட்ட நிலைகள் ; முரண்பாடுகளின் விளக்கங்கள் ;
வெளிப்பட முடியாது .

ஒன்று வெளிப்படும்போது மற்றொன்று உள்ளே மறைந்திருக்கும் ;
ஒன்றுடன் மற்றொன்று வெளிப்படாமல் கலந்திருக்கும் ;
ஒன்றில் ஒன்று புதைந்திருக்கும் ;
ஒன்றுக்குள் ஒன்று மறைந்திருக்கும் ;
ஒன்றுடன் ஒன்று பிணைந்திருக்கும் ;
ஒன்றில்லாமல் ஒன்று இயங்காது ;
ஒன்றை விட்டு ஒன்று இருக்காது ;

அமைதியின் விளக்கமாய் ;
அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ;
அமைதியின் உருவமாய் ;
அமைதிக்கு அடிப்படையாய் ;
அமைதியின் கலங்கரை விளக்கமாய் ;
அமைதிக்கு மூலமாய் ;
அமைதிக்கு சான்றாய் ;
அமைதிக்கு ஆதாரமாய் ;
இருப்பதாக வெளிக் காட்டிக் கொண்டு,
இந்த உலகத்தில் வாழ்பவர் ;
வாழ்க்கையை நடத்துபவர் ;

பலரும் தொழும்படி ,
பலரும் பாராட்டும்படி ,
பலரும் வணங்கும் படி ,
பலரும் பின்பற்றும் படி ,
பலரும் போற்றும் படி ,
வாழ்க்கையை ஒட்டி இந்த அவனியில்
வலம் வருபவரின்
உண்மை உணர்வுகளை ; உண்மை தன்மையினை ;
உண்மை நிலைகளை அறிந்து கொள்ள வேண்டுமானால்
அவரின் உள்ளே மறைந்திருக்கும்
உண்மை தன்மையினை உணர வேண்டும் .

அவரை சிறிது சினம்கொள்ளும் படி செய்தால்
சினத்தை உண்டாக்கும் செயல்களைச் செய்தால்
சினம் உண்டாகும் படி உணர்வுகளைத் துhண்டினால்
சினமானது பீறிட்டு வெளிக்கிளம்பும் .
சினத்தின் வெளிப்பாடால் அவர்  பழக்கங்கள் மாறும் .
என்ன செய்வது என்று தெரியாமல்
அவர்  தடுமாறும் நிலைதனை தெரிந்து கொள்ளலாம் .

அவருடைய உண்மை தன்மை இது தான்
தன்னுடைய உண்மை தன்மையினை
அடியாழத்தில் மறைத்து வைத்திருக்கிறார் ;
முகமூடி போட்டு மூடி வைத்திருக்கிறார் ;
யாரும் அறியாதவாறு ஒளித்து வைத்திருக்கிறார் ;
யாரும் பார்க்காதவாறு புதைத்து வைத்திருக்கிறார் ;

உண்மை தன்மையை உள்ளே மறைத்து விட்டு
இந்த உலகத்தில் அமைதியின்
இலக்கணமாக நடமாடி இருக்கிறார் ;
போலி வேஷம் போட்டிருக்கிறார் ;
நல்லவன் போல் நடித்து இருக்கிறார் ;
அமைதியானவன் என்று ஏமாற்றி இருக்கிறார் ;
கோபப்படாதவன் என்று நடித்திருக்கிறார் ;

ஒருவருடைய உணர்வுகள் துhண்டப்படும் போது தான்,
அவருடைய உண்மை தன்மை ; உண்மை முகம் வெளிப்படும்;
ஒருவருடைய உணர்வுகள் துhண்டப்படவில்லை எனில்
அவருடைய பொய் முகம் தான் வெளிப்படும் .

அமைதி - கோபம் என்ற இரண்டு வேறுபட்ட நிலைகளை
முரண்பாடுகளை வைத்துக் கொண்டு
அமைதியை வெளிப்படுத்தி விட்டு
கோபத்தை உள்ளே மறைத்திருக்கிறார்.
ஆனால் இரண்டையும் தன்னுள் சுமந்து கொண்டு திரிகிறார் ;
வாழ்கிறார் ;  உலாத்துகிறார் ;

இரண்டும் அவருள் இருக்கிறது
ஒன்று வெளிப்படுகிறது ; ஒன்று மறைந்திருக்கிறது ;
ஓவ்வொருவரிடமும் இதேபோல் இரண்டு
மாறுபட்ட நிலைகள் இருக்கிறது .

காதல் – காமம் ,
அமைதி – கோபம் ,
நல்லவை – கெட்டவை ,
உயர்வு மனப்பான்மை - தாழ்வு மனப்பான்மை ,
போன்ற இரு வேறுபட்ட நிலைகள் இருக்கிறது .


ஆனால் பெரும்பாலானவர்களுக்கு வெளியே
நல்லவைகள் தான் வெளிப்படுகிறது
நல்லவைகளைத் தான் காட்டுகிறார்கள் ;
நல்லவைகளைத் தான் வெளிப்படுத்துகிறார்கள் ;
நல்லவர்  போல் நடிக்கிறார்கள் ;
நல்லவர்  போல் வாழ்கிறார்கள் ;


ஒருவருடைய உணர்வுகள் புண்பட்டாலோ ,
மனது காயம் பட்டாலோ ,
இதயம் தாக்கப் பட்டாலோ ,
மரியாதை பாதிக்கப் பட்டாலோ ,
தன்மானம் தகர்க்கப் பட்டாலோ ,
சுயமரியாதை  இழக்கப் பட்டாலோ ,
வார்த்தையால் தாக்கப் பட்டாலோ ,
செயலால் பாதிக்கப் பட்டாலோ ,
எழுத்துக்களால் அவமானப் படுத்தப் பட்டாலோ ,
தான் ஒருவருடைய உண்மை தன்மை வெளிப்படும் .

இத்தகைய இரு மாறுபட்ட மாறுபாடுகளைக் கொண்ட
முரண்பாடுகளைக் கொண்ட
மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .


அவர்கள் தங்கள் உண்மைத் தன்மையினை மறைத்து வாழ்பவர்கள்
உண்மைத் தன்மையினை வெளிப் படுத்தாதவர்கள்
தான் வாழ , தன் பெயர்  நிலைபெற ,
தன் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள ,
தன் வாழ்க்கை நிலைபெறச் செய்ய ,
எத்தகைய அடாத செயலையும் செய்யத் தயங்காதவர் .
எதனையும் அழிக்கக் கூடத் தயங்காதவர் .


ஆகவே இத்தகைய இருநிலைகளைக் கொண்டவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடப்பவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று செயல்படுபவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று நடந்து கொள்பவரிடம் ;
உள்ளொன்று வைத்துப் புறமொன்று வாழ்பவரிடம் ;
உறவு கொள்ளக் கூடாது .
நட்பு பாராட்டக் கூடாது .
தோழமை கொள்ளக் கூடாது .
அப்படி காட்டினால் அத்தகைய
இருவேறுபட்ட நிலைகளைக் கொண்டவர்கள்
தான் வாழ பிறரையும் யாரையும் அழிக்க தயங்க மாட்டார்கள் .


இரு வேறு பட்ட நிலைகளைக் கொண்டவரிடம்
முரண்பாடுகளைக் கொண்டவரிடம்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவரிடம்
உறவு கொள்ளக் கூடாது .
நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது .
என்கிறார்  வள்ளலார் .



இயேசு கிறிஸ்து - வள்ளலார் :
இயேசு,  ஒருவனால் இரண்டு மாறுபட்ட நிலைகளைத் தன்னுள் கொண்டு
ஒரே சமயத்தில் இரண்டையும் வெளிப்படுத்தி வாழ முடியாது .
ஒன்று வெளிப்படும் போது , மற்றொன்று மறைந்திருக்கும் என்கிறார்.


அவ்வாறே , வள்ளலாரும் ,
ஒருவனால் இரண்டு மாறுபட்ட நிலைகளைத் தன்னுள் கொண்டு
ஒரே சமயத்தில் இரண்டையும் வெளிப்படுத்தி வாழ முடியாது .
ஒன்று வெளிப்படும் போது , மற்றொன்று மறைந்திருக்கும் .
அத்தகைய இரட்டைத் தன்மை கொண்டவரிடம் உறவு
கொள்ளக் கூடாது என்கிறார் .
                                

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                          போற்றினேன் பதிவுமுப்பத்திரெண்டு  ந்தான்முற்றே “”

April 06, 2012

இயேசு கிறிஸ்து-நாலடியார்-என்னானும் - பதிவு - 31



              இயேசு கிறிஸ்து-நாலடியார்-என்னானும்- பதிவு- 31    

              “”பதிவு முப்பத்தொன்றை விரித்துச் சொல்ல
                               ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் ; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது .
                                                             ----- மத்தேயு - 5:14

விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல் , விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள் ; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும் .
                                                            -------மத்தேயு- 5 : 15

ஆண்டவனை உணர்ந்தவர் ;
ஆண்டவனை அறிந்தவர் ;
ஆண்டவர்  வசனத்தை கைக்கொண்டவர் ;
ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் ;
ஆண்டவரால் ஆசிர்வதிக்கப் பட்டவர் ;
ஆண்டவரே அனைத்தும் என்று தெளிவு நிலை அடைந்தவர் ;
ஆண்டவர்  அன்றி ஒரு அணுவும் அசையாது என்று உணர்ந்தவர் ;
ஆண்டவரின் ஆசி இல்லை எனில் எதுவும் நடக்காது என்று புரிந்தவர் ;

ஆண்டவர்  ஒருவரால் மட்டுமே நம்முடைய
பாவங்களை ஏற்க முடியும்
போக்க முடியும் என்று தெளிந்தவர் ;
ஆண்டவர்  தான் நம்மை வழி நடத்துபவர்
என்ற உண்மையை அறிந்தவர் ;
ஆண்டவரிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பவன்
வாழ்வு சிறக்கும் என்று உணர்ந்தவர் ;

ஆண்டவரால் மட்டுமே
நம் கவலைகளை நீக்கி அமைதியையும்  ,
துன்பத்தை நீக்கி இன்பத்தையும் ,
தாழ்வை நீக்கி ஏற்றத்தையும் ,
வறுமையை நீக்கி உயர்வையும் ,
நோயை நீக்கி சுகத்தையும் ,
தரமுடியும் என்று உணர்ந்தவர் .

பாவம் என்றால் என்ன என்றும் ,
அதை நீக்கும் வழிவகைகள் எவை என்றும் ,
அதை நீக்கும் சாத்தியக்கூறுகள் எவை என்றும் ,
அதை நீக்கும் நடைமுறைகள் எவை என்றும் ,
அறிவில் தெளிந்து ,
ஆண்டவனின் அருளாசியாலும் ,
ஆண்டவரின் வழி நடத்துதலினாலும் ,
ஆண்டவரின் நேரடிப் பார்வையினாலும் ,
ஆண்டவரின் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதினாலும் ,

பாவத்தை எரித்து ,
பாவமூட்டையைத் தொலைத்து ,
பாவசுமையைக் கழற்றி வைத்து ,
புண்ணியத்தின் சாயலாக ,
புண்ணியத்தின் தன்மையாக ,
புண்ணியத்தின் உதாரணமாக மாற்றப்பட்டு ,
அறியாமை என்ற இருளில் செய்த
பல்வேறு தீவினைகளை பாவப்பதிவுகளை  ,
ஆண்டவரின் அருளினால் நீக்கி ,
பாவப்பதிவுகளை எரித்து ,
பாவமற்றவனாக மாற்றமடைந்து இருப்பவர்களால் மட்டுமே ,

           ஒளிக்கற்றைகளை பாய்ச்ச முடியும் ;
           பிரகாசத்தை உண்டாக்க முடியும் ;
           இருளை நீக்க முடியும் ;
           அன்பை பொழிய முடியும் ;
           ஆற்றொணாத் துயரை கழிக்க முடியும் ;
            நோயை விலக்க முடியும் ;
            துன்பத்தை நீக்க முடியும் ;
            மடமையை மாற்ற முடியும் ;
           பகுத்தறிவை விதைக்க முடியும் ;
           சுயநலத்தைப் போக்க முடியும் ;
          பொதுநலத்தை உண்டாக்க முடியும் ;
          இரக்கத்தை வளர்க்க முடியும் ;
          கருணையை பெருக்க முடியும் ;
          உண்மையை விளக்க முடியும் ;
          பொய்மையை புதைக்க முடியும் ;
         பண்பை வளர்க்க முடியும் ;
        சிந்தனையை செதுக்க முடியும் ;
         மாற்றத்தை உருவாக்க முடியும் ;
        முன்னேற்றத்தை உண்டாக்க முடியும் ;
        மமதையை அடக்க முடியும் ;
        ஈகையை உணர்த்த முடியும் ;
        அறியாமையை எரிக்க முடியும் ;
       பிரிவுகளை விலக்க முடியும் ;
       சமதர்மத்தை போதிக்க முடியும் ;
      பெண்மையை மதிக்க முடியும் ;
       சுயசிந்தனையை உணர்த்த முடியும் ;
       மடமைகளை கொளுத்த முடியும் ;
       மருட்சிகளை அழிக்க முடியும் ;
       தடைகளை உடைக்க முடியும் ;
       ஒற்றுமையை உணர்த்த முடியும் ;
      பிழையை மன்னிக்க முடியும் ;
       ஆண்டவரை உணர்த்த முடியும் ;

அதனால் தான் இயேசு ,
அறியாமை இருளில் மாட்டிக் கொண்டு ,
பாவங்கள் பலவற்றைச் செய்து ,
துன்பச் சகதியில் சிக்கி ,

வாழ்க்கை நீரோட்டத்தில்
கண்ணீர்  கடலில் நீந்தியவர்கள் ,
அறிவு விளக்கம் பெற்று,
ஆண்டவர் பால் மனதை செலுத்தி ,
ஆண்டவர்  அருள் பெற்று பாவங்களை எரித்தவர்கள்
ஆண்டவர்  அருளாசி பெற்றவர்களால் மட்டுமே
மற்றவர்களுக்கு வழி காட்டியாக இருக்க முடியும் .

பாவம் என்றால் என்ன என்றும் ,
பாவத்தை நீக்கும் முறை எவை என்றும் ,
பாவத்தை நீக்க எத்தகைய முறைகளை
கைக்கொள்ள வேண்டும் என்றும் ,
பாவத்தை நீக்க ஆண்டவரின் தாள் எப்படி பணிய வேண்டும் என்றும் ,
பாவத்தை நீக்க ஆண்டவரின் அருளை எப்படி பெற வேண்டும் என்றும் ,
வழி காட்டுவதால்
இயேசு அவர்களை நீங்கள் உலகத்திற்கு
வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்கிறார் .

தன்னையே அக்கினியாக மாற்றி
தன்னுடைய பாவங்களை நீக்கியவர்களால் மட்டுமே
நீக்கும் திறன் படைத்தவர்களால் மட்டுமே
வெளிச்சமாயிருக்க முடியும் .

அதனால் தான் இயேசு நீங்கள் உலகத்திற்கு
வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்றார் .
உலகத்திற்கே வெளிச்சம் தரும் தகுதியைப் பெற்றவர்கள்
தாழ்ந்த நிலையில் இருக்க முடியாது .

அதாவது அவர்  யாரும் அறியா வண்ணம் ;
அவரை யாரும் உணர்ந்து கொள்ளா வண்ணம் ;
அவரை யாரும் தெரிந்து கொள்ளா வண்ணம் ;
அவரை யாரும் பரிந்து கொள்ளா வண்ணம் ;
மக்களோடு மக்களாக இருக்க முடியாது .

மலைமேல் இருக்கும் பட்டணத்தை
யாரும் பார்க்காமல் இருக்க முடியாது
உயர்ந்த இடத்தில் உள்ளவை தாழ்ந்த இடத்தில்
உள்ளவர்களின் பார்வைக்கு தென்படும் .
அதைப்போல ,
ஆண்டவரின் அருள்பெற்று
பாவத்தைக் கழித்து
உயர்ந்த நிலை அடைந்து
இந்த உலகத்திற்கு வெளிச்சமாயிருப்பவர்கள் ;
அதாவது இந்த உலகத்திற்கு வழிகாட்டியாக இருப்பவர்கள் ;
இந்த உலகத்திற்கு உதாரணமாக இருப்பவர்கள் ;
எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் ;
அனைவரும் எளிதில் அவருடைய புகழை , தன்மைகளை,
உணர்ந்தும் கொள்ளும் வகையில் இருப்பார்கள் ;
அவர்  அடைந்த ஞானத்தை புகழை யாராலும் மறைக்க முடியாது .


மலையின் மேல் இருக்கிற பட்டணம்
எவ்வாறு மறைவாக யாரும் காணாத படிக்கு
மறைவாக இருக்க முடியாதோ  அவ்வாறே
அவர்  புகழையும் மறைக்க முடியாது
யாரும் அவரை அறியாமல்
இருக்க முடியாது என்கிறார்  இயேசு .

விளக்கை ஏற்றுவது வெளிச்சம் பெறுவதற்காக ,
இருளை நீக்கி ஒளி பெறுவதற்காக ,
இருளில் உள்ளவைகளை அறிந்து கொள்வதற்காக ,
மறைந்து இருந்தவைகளை தெரிந்துகொள்வதற்காக ,
இருளில் உள்ளவைகள் எவை என்று புரிந்து கொள்வதற்காக ,
தனக்கு தேவையானவை இருளில் உள்ளதா என்று
அறிந்து கொள்வதற்காக ,
விளக்கமற்று இருந்தவர்  விளக்கம் பெறுவதற்காக ,
அத்தகைய நிலைக்காக ஏற்றப்பட்ட விளக்கை
உணர்வுகள் பெறுவதற்காக
அறிவு தெறிவடைவதற்காக
ஏற்றப்பட்ட விளக்கை மூடிவைத்து விட்டால்
யாராலும் இருளில் உள்ளது எவை என்று
உணர்ந்து  விளக்கம் பெற முடியாது .

அதனையே அனைவரும் பயனடையும் வகையில்
உயர்வான இடத்தில் வைத்தால்
அனைவருக்கும் வெளிச்சம் கிடைக்கும்
அனைவரும் இருள் நீக்கி ஒளி பெறுவார்கள் .

அதைப்போல ,
ஆண்டவன் அருளைப் பெற்று
அறிவு விளக்கம் பெற்றவர்கள்
தன்னை நாடி வந்தவர்களுக்கு
தன்னை நம்பி வந்தவர்களுக்கு
தன்னை உணர்ந்து வந்தவர்களுக்கு
அறிவின் விளக்கத்தை ,
ஆன்மாவின் இருப்பிடத்தை ,
உண்மையின் பிறப்பிடத்தை ,
பாவத்தின் கழிப்பிடத்தை ,
புண்ணியத்தின் மூலத்தை ,
சொல்லி அவர்களை வழி நடத்த வேண்டும் .

அவ்வாறு வழி நடத்தாமல் தன்னை
அனைவரும் வணங்க வேண்டும் ;
தன்னை அனைவரும் போற்ற வேண்டும் ;
பாராட்ட வேண்டும் ;
வணங்க வேண்டும் ;
துதிபாட வேண்டும் ;
புகழ்மாலை சூட்ட வேண்டும் ;
பாமாலை பாட வேண்டும் ;
அடிமையாக இருக்க வேண்டும் ;
அடி தொழ வேண்டும் ;
தாள் பணிய வேண்டும் ;
என்று எண்ணம் கொண்டு
தாழ் நெஞ்சம் கொண்டவர்
பெற்ற பலன் ஒருவருக்கும் பயன் படாது .

ஆண்டவன் அருளால் தான் பெற்ற
அன்பின் நல்லிணக்கத்தை மூடி
வைத்து மறைத்து வைப்பதால்
ஒருத்தருக்கும் உதவாது யாருக்கும் பயன்படாது.
ஆண்டவர்  மூலம் தான் பெற்ற அருள் விளக்கத்தை
இந்த அவனியில் உள்ள மக்களுக்கு அளிப்பதன் மூலம்
மக்கள் கவலை அகற்றி
சிந்தனை தெளிவு பெற்று
ஆண்டவரை உணர்ந்து
உண்மையில் தெளிவு பெற்று
மனது விளக்கம் அடைந்து வாழ முடியம்
சமதர்ம சமுதாயம் உருவாக முடியும்
அதனால் இயேசு நீங்கள் இந்த உலகத்திற்கு
வெளிச்சமாயிருக்கிறீர்கள் என்கிறார் .
வெளிச்சத்தை மறைக்காமல் அனைவரும்
அந்த வெளிச்சத்தை பெற்று
பயன் அடையுமாறு இருங்கள் என்கிறார் .

அதாவது ஆண்டவனின் அருளைப் பெற்று
பாவத்தை போக்கிய நீங்கள்
மற்றவர்களுக்கும் அதை போதியுங்கள்
மறைக்காதீர்கள் என்கிறார்
அதாவது ,
ஒருவன் தான் கற்றதை அதை அறியாதவருக்கு
மறைக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டுமே ஒழிய
மறைக்கக் கூடாது .
மறைப்பதால் கற்றது பாழாகும் ஒருவருக்கும் பயன்படாது
என்கிறார்  இயேசு .



நாலடியார் :

""“என்னானும் ஒன்று தன் கையுறப் பெற்றக்கால்
     பின் ஆவது என்று பிடித்திரா - முன்னே
     கொடுத்தோர்  உயப்போவர்  கோடில் தீக் கூற்றம்
     தொடுத்தாறு  செல்லும் சுரம்”""
                                  ------நாலடியார்---தொகுத்தவர்-பதுமனார்---

கதிரவனின் பிளப்பு பூமியின் உதயம் ,
பூமியின் பிளப்பு கண்டங்களின் உதயம் ,
கண்டங்களின் பிளப்பு நாடுகளின் உதயம் ,
நாடுகளின் பிளப்பு எல்லைகளின் உதயம் ,
எல்லைகளின் பிளப்பு வேற்றுமைகளின் உதயம் ,
வேற்றுமைகளின் பிளப்பு மதங்களின் உதயம் ,
மதங்களின் பிளப்பு சாதிகளின் உதயம் ,
சாதிகளின் பிளப்பு சண்டைகளின் உதயம் ,
சண்டைகளின் பிளப்பு இரத்தத்தின் உதயம் ,
இரத்தத்தின் பிளப்பு மரணத்தின் உதயம் ,
மரணத்தின் பிளப்பு சிந்தனையின் உதயம் ,
சிந்தனையின் பிளப்பு தேடுதலின் உதயம் ,
தேடுதலின் பிளப்பு கண்டுபிடிப்பின் உதயம் ,
கண்டுபிடிப்பின் பிளப்பு  வெற்றியின் உதயம் ,
அரிய கண்டுபிடிப்புக்கு வெற்றி விலாசம் தருகிறது .


அரங்கேற்றம் முடிசூட்டிக் கொள்கிறது   ;
சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது ;
முகவரி போடப் படுகிறது ;
வாழ்வு உதயம் ஆகிறது ;
துன்பங்கள் பறந்து போகிறது ;
வரலாறு அரவணைத்துக் கொள்கிறது ;
புதியபாதை போடப் படுகிறது ;
புதுமைகள் தொடங்கப் படுகிறது ;
மாற்றங்கள் நிகழத் தொடங்குகிறது ;
வரலாறு படைக்கப் படுகிறது ;
வெற்றி அரியணை ஏறுகிறது ;
புகழ்ச்சிகள் தீட்டப் படுகிறது ;
கவிதைகள் புனையப் படுகிறது ;

அரிய ஒன்றை ஒருவர் கண்டு பிடித்தால்
கண்டு பிடிப்புக்கும் கண்டு பிடித்தவருக்கும்
உலகம் காட்டும் நிலைகள் இவை .

அத்தகைய அரிய ஒன்றை கண்டுபிடித்து விட்டு
சமுதாயம் பயனுற கொடுக்காமல்
மூலத்தை முழுங்கி விட்டு
சூட்சுமத்தை ஏப்பம் விட்டு விட்டு
கரும்பு சாற்றை உண்டுவிட்டு
கரும்பு சக்கையை மட்டும் கொடுக்காமல்
காலம் வரும் காட்டுகிறேன்
கதவு திறக்கும் ஞாயிறு ஒளி வீசும்
உண்மையின் உருபொருளை விளக்குகிறேன்
என்று சொல்லாமல் ;
காலத்தை கடத்தாமல் ; மக்களை ஏமாற்றாமல்;
நம்பியவரை மோசம் செய்யாமல்;
அண்டியவரை ஏறி மிதிக்காமல்;
காலம் உள்ளபோதே விளக்கம் பெற்றதை
தான் கண்டதை தான் உணர்ந்ததை
தான் தெளிவு பெற்றதை
கொடுத்து விட வேண்டும் .

இந்த சமுதாயம் பயன்பெற வேண்டும்;
உயர்வு அடைய வேண்டும்;
நல்லவை பெற வேண்டும்;
என்ற நோக்கில் கொடுத்து விட வேண்டும்;
காலம் தாழ்த்தக் கூடாது.

பிறகு கூறுகிறேன் காலம் வரும் பொழுது உரைக்கிறேன்
என்று சேர்த்து வைக்கக் கூடாது
மறைத்து வைக்கக் கூடாது
ஒளித்து வைக்கக் கூடாது
பூட்டி வைக்கக் கூடாது
தான் கற்றதை பிறர்  கேட்கும் முன்னே விளக்க வேண்டும் .

தங்களுக்கு விளக்க வேண்டும் என்று சொல்வதற்கு முன்பே
தங்களுக்கு உரைக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன்பே
தான் பெற்ற அரிய பொக்கிஷத்தை
அளிக்கவல்ல பெருந்தன்மை கொண்டவர்  வாழ்க்கை
இன்பம் சூழ்ந்ததாய் இருக்கும்;
புகழ்ச்சிகள் வரையறுக்கப் பட்டதாய் இருக்கும் ;
இனிமைகள் விதைக்கப்பட்டதாய் இருக்கும்;
உயர்வுகள் அளிக்கப்பட்டதாய் இருக்கும் ;

அவ்வாறு அளிக்காமல்
மறைத்து வைத்துக் கொண்டு,
அதன் பலனை தான் மட்டுமே அனுபவித்துக் கொண்டு ,
சுவையில் மிதந்து கொண்டு ,
கற்பனையில் வாழ்ந்து கொண்டு ,
சுகத்தில் திளைத்துக் கொண்டு ,
இருப்பவரின் வாழ்வானது,
தொடக்கத்தில் இன்பமாக இருந்தாலும் ,
கர்மவினையின் தாக்கம் சூழ்ந்து அழுத்தும் போது ,
பாவங்களின் பலன் வெளிப்பட்டு நடமாடும் போது,
கிரகங்கள் தன்னை வெளிக்காட்டும் போது,

துன்பங்களின் சுமை தோளை அழுத்தும் .
கண்ணீரின் விழுதுகள் இதயத்தை நனைக்கும்.
கவலையின் வருடல்கள் மூளையை குழப்பும் .
காலதேவன் தன் கணக்கை முடிக்கும் நாளில்
தீர்ப்பு நாளில் தீர்க்கப்பட வேண்டிய கணக்குகள்
கணக்கில் கொள்ளப்படும் போது

வார்த்தையில் சொல்ல முடியாத ,
எழுத்துக்களால் எழுத முடியாத,
சித்திரத்தால் தீட்ட முடியாத,
சிற்பத்தால் செதுக்க முடியாத,
கற்பனையால் உருவகிக்க முடியாத,
மனதால் நினைக்க முடியாத,
துன்பத்திற்குரிய பாதைகள் போடப்படும் .
கொடிய பாதைகள் ஏற்படுத்தப்படும்.

உயிர்  உடலை விட்டு பிரிந்தால்
ஏற்படும் மரண அவஸ்தை
உயிருடன் இருக்கும் போதும்,
உயிர்  உடலை விட்டு பிரிந்த போதும்,
ஆகிய இரு வேறுபட்ட நிலைகளில்
துன்பங்களின் கொடிய பலனை அனுபவிக்க நேரும்.

ஆகவே தான் பெற்ற அறிவின் விளக்கத்தை
கண்டுபிடிப்பின் தன்மையை இந்த அவனி உய்ய
அளித்து விட வேண்டும் .
அளித்தவர்  வாழ்வு இன்பத்தில் சிறக்கும்.
அளிக்காதவர்  வாழ்வு துன்பத்தில் மரிக்கும்.

அதாவது ஏதாவது ஒரு பொருளை ஒருவர்  ஈட்டுவராயின்
அதனை பிறர்க்கு ஈந்து உதவுபவர்
வாழ்க்கை பாதை இனிது இன்பமுடன் செல்லும்.
அவ்வாறு செய்யாதவரின் இறுதிக் காலம்
துன்பம் மிகுந்ததாயும் இறப்புற்று உடலிலிருந்து உயிர்
பிரிந்து செல்லும் பாதை கொடிய பாதையாக இருக்கும்
என்கிறது நாலடியார்.



இயேசு கிறிஸ்து - நாலடியார்:
இயேசு ,

ஒருவன் தான் பெற்ற அறிவின் விளக்கத்தை
அனைவருக்கும் பயன் படும் வகையில் வெளிவிட வேண்டும்
மறைத்து வைக்கக் கூடாது என்கிறார்.

அவ்வாறே,
நாலடியாரும்,
ஒருவன் தான் பெற்ற அறிவின் விளக்கத்தை அனைவருக்கும்
பயன்படும் வகையில் வெளிவிடவேண்டும.
அதனை வெளியிடாதவர்  வாழ்க்கை சொல்லொணாத்
துயரில் உட்படுவதோடு நரகத்திலும் தள்ளப்படுவர் 
 என்கிறது நாலடியார்.
                                                     

           “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                               போற்றினேன் பதிவுமுப்பத்தொன்று  ந்தான்முற்றே “”