August 15, 2012

இயேசுகிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்பதிவு50



    இயேசு கிறிஸ்து-அழுகணிச்சித்தர்-புல்லரிடத்திற்-பதிவு-50
               
      “”பதிவு ஐம்பதை விரித்துச் சொல்ல    
                     ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :  

விபசாரத்திலே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டு வந்து , அவளை நடுவே நிறுத்தி :
                                                -------யோவான் - 8 : 3

போகதரே , இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
                                                -----யோவான் - 8 : 4

இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டுமென்று மோசே நியாயப் பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே , நீர்  என்ன சொல்லுகிறீர்  என்றார்கள் .
                                                -----யோவான் - 8 : 5

அவர் மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும் பொருட்டு அவரைச் சோதிக்கும் படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து , விரலினால் தரையிலே எழுதினார்  . “
                                                -----யோவான் - 8 : 6

அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில் , அவர்  நிமிர்ந்து பார்த்து : உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக் கடவன் என்று சொல்லி , “
                                                -----யோவான் - 8 : 7

அவர்  மறுபடியும் குனிந்து தரையிலே எழுதினார்  . “
                                                ----யோவான் - 8 : 8

அவர்கள் அதைக் கேட்டு , தங்கள் மனச் சாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு , பெரியோர்  முதல் சிறியோர்  வரைக்கும் ஒவ்வொரு வராய்ப்போய் விட்டார்கள் . இயேசு தனித்திருந்தார்  , அந்த ஸ்திரீ நடுவே நின்றாள் .
                                                -----யோவான் - 8 : 9

"இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல் : ஸ்திரீயே உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 10

அதற்கு அவள் : இல்லை , ஆண்டவரே , என்றாள் .இயேசு அவளை நோக்கி : நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை ; நீ போ , இனி பாவஞ் செய்யாதே என்றார்  . “
                                                -------யோவான் - 8 : 11

இக்கட்டான சூழ்நிலை என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும்
ஏதாவது ஒரு காலகட்டத்தில் , ஏதாவது ஒரு நிலையில்,
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வந்து விட்டு சென்றிருக்கும்.

வாழ்க்கையில் ஒரு முறையோ , இரு முறையோ ,பல முறையோ
இக்கட்டான சூழ்நிலை வந்து ,
வாழ்க்கையை பதம் பார்த்து சென்றிருக்கலாம் அல்லது
வாழ்க்கையை பதப்படுத்தி சென்றிருக்கலாம் .

வாழ்க்கையை உயர்வான நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கலாம் அல்லது
தாழ்வான நிலைக்கு தள்ளி விட்டிருக்கலாம் .

அரியணையில் அமர்த்தி இருக்கலாம் அல்லது
புதைச் சேற்றில் புதைத்து இருக்கலாம் .

வெற்றியின் இன்பங்களை சுவைத்து இருக்கலாம் அல்லது
தோல்வியின் துன்பச் சுமைகளை சுமந்து இருக்கலாம் .

சிரிப்புகளில் விளையாடி இருக்கலாம் அல்லது
கண்ணீரில் கரைந்து இருக்கலாம் .

முன்னேற்றத்தின் முகவரியைப் பார்த்து இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியுற்றதின் காயங்களை கண்டு இருக்கலாம் .

சுகபோகத்தின் இன்ப நாளங்களை வருடி இருக்கலாம் அல்லது
ஏழ்மையின் தாக்கத்தினை புரிந்து இருக்கலாம் .

நினைத்தது கிடைத்ததில் மகிழ்ந்திருக்கலாம் அல்லது
நினைத்தது கிடைக்காததில் கவலையுற்றிருக்கலாம் .

மதியினால் வென்று விட்டேன் என்று பெருமை பட்டிருக்கலாம் அல்லது
விதி என்னை வென்று விட்டது என்று மனம் சோர்ந்து விட்டிருக்கலாம் .

காலத்தை நான் வென்றுவிட்டேன்
என்று மகிழ்ச்சி கொண்டிருக்கலாம் அல்லது
காலம் என்னை வென்றுவிட்டது என்று வருத்தப்பட்டிருக்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் எடுக்கப்படும் முடிவு - நம்
வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவாக இருக்கலாம் அல்லது
வாழ்க்கையை முடிக்கும் தீர்மானமாக இருக்கலாம்.

மாற்றத்தை உருவாக்குவதாக இருக்கலாம்  அல்லது
மனதைக் கொன்று வருத்தப்பட வைப்பதாக இருக்கலாம்

விண்ணைத் தொடுவதாக இருக்கலாம் அல்லது
வீழ்ச்சியைத் தருவதாக இருக்கலாம் .

ஏற்றத்தை தருவதாக இருக்கலாம் அல்லது
ஏமாற்றத்தை கொடுப்பதாக இருக்கலாம் .

இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்கும் நிலை என்பது
இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலை .
அத்தகைய நிலை வாழ்க்கையில் எட்டி பார்க்கும் ;
உரசிப் பார்க்கும் ; தாக்கிப் பார்க்கும் ; தள்ளிப் பார்க்கும் ;
தயங்காமல் , தள்ளாடாமல் ,
சிந்தனை தடுமாறாமல் ,
உயர்ந்த நோக்கத்துடன் ,
மாறா குறிக்கோளுடன் ,
சாயா இருதயத்துடன் ,
தள்ளாடா மனதுடன் ,
தயங்காத உள்ளத்துடன் ,
அறிவின் வழிநின்று ,
தொலைநோக்கு பார்வையுடன் ,
துல்லியமான கணிப்புடன் ,
காலத்தை கருத்தில் கொண்டு ,
எதிர்காலத்தை நினைவில் கொண்டு ,
அனுபவத்தை மனதில் கொண்டு ,
அறிவுரைகளை சிந்தனையில் கொண்டு ,
அலசிப் பார்த்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு ,
வேற்றுமைகளை அறிந்து தீர்க்கமான எண்ணத்துடன் ,
இக்கட்டான சூழ்நிலையில் ,
இத்தகைய தன்மைகளைக் கொண்டு முடிவெடுத்தவன் சிறப்படைவான்.
எடுக்காதவன் விரக்தியடைவான் .
இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையை
பலமுறை , பல நிலைகளில் , பல்வேறுபட்ட உருவங்களில்
இயேசுவின் வாழ்க்கையில் கொண்டு வந்து
அவரை குற்றவாளியாக்கிட துடித்தது ஒரு கூட்டம்
அவரை மாய்த்து விட நினைத்தது மமதையர்  நெஞ்சம் .

வாழ்க்கையில் இன்பங்களைத் தேடியோ
வசந்தங்களை நாடியோ தன் மானத்தை விற்கவில்லை.
தான் பெற்ற அன்பை பாதுகாக்கவும் ,
தன்னுடன் பிணைக்கப்பட்ட பாசத்தை பாதுகாக்கவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்  கொடுப்பதற்காகவும் ,
தன்னுடன் இணைந்த உயிர்களை உயிர்பிப்பதற்காகவும் ,
உறவுகளை வாழ்விப்பதற்காகவும் ,
உண்மைகளை உறங்க வைத்து ,
சத்தியத்தை சாய வைத்து ,
சமுதாயம் தந்த களங்கத்தை ஏற்று ,
ஏளனப் பேச்சுக்களையும் ,
ஆணவ செயல்களையும் ,
அடிமைத்தன நெஞ்சங்களையும் ,
வெறிகொண்ட வேங்கையின் தாகத்தையும் ,
தணிக்கும் வகையில் நடந்து ,
ஓரமாகச் சென்றாலும் ஓடி வந்து முட்டும்
சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு ,
கண்ணீர்  கடலில் நீந்தி
கவலை தோய்ந்த இதயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இனம்

காலத்தால் கைவிடப்பட்டு சமுதாயத்தால் தண்டிக்கப்பட்டவள் ;
இயற்கை தந்த பிழை  ; காலம் செய்த களங்கம் ;
விலை மகளிர்  இனம் .

இத்தகைய விலைமகள் ஒருத்தியை
நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தினர்.
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநுhல் வல்லுநரும்,
பரிசேயரும் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி ,
போதகரே இப்பெண் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டாள் .
இப்படிப்பட்டவர்களை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது
மோசஸ் நமக்கு கொடுத்த சட்டம்
நீர் என்ன சொல்கிறீர்கள் என்றனர் .
அவர்  மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டு பிடிக்கும் படி
அவரை சோதிக்க இப்படிக் கேட்டனர்.
இயேசுவை இக்கட்டான சூழ்நிலையில் தள்ள வேண்டும்
அவர்  மேல் குற்றம் கண்டுபிடிக்க
அவர்  மேல் குற்றம் சுமத்த
அவரை குற்றவாளியாக்க இவ்வாறு கேட்டனர் .

மோசஸ் கூறியது போல் செய்யுங்கள் என்று இயேசு கூறினால்
இயேசு மீது குற்றம் சாட்ட முடியும்
இயேசுவை களங்கப்படுத்த முடியும்
இயேசுவை அவமானப் படுத்த முடியும்
உங்களது கருணை எங்கே போயிற்று ?
உங்களது மன்னித்தல் என்னவாயிற்று ?
அன்பு எங்கே சென்று விட்டது ?
என்று கேட்க முடியும் .

மோசஸ் கூறியது நியாயமல்ல என்று கூறினால் ,
நீங்கள் மோசஸை அழிக்கவும்,
எங்கள் மதத்தைக் குலைக்கவும் ,
களங்கப் படுத்தவும் வந்திருக்கிறீர்கள்
ஆனால் மக்களிடம் அழிப்பதற்காக நான் வரவில்லை
நிறைவு செய்யவே வந்துள்ளேன் என்று கூறி வருகிறீர்கள் .
அது எப்படி நிறைவு செய்ய வந்திருந்தால்
மோசஸை பின்பற்றுங்கள் என்று எப்படி கூற முடியும் என்று
ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இயேசுவை குற்றவாளியாக்க
பொறியில் சிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இயேசுவோ குனிந்து தரையில் தன் விரல்களால்
எழுதிக் கொண்டிருந்தார்.
எதிராளி கோபமாக இருக்கும் போது
நம்மை பகையாளியாக நினைப்பவன்
நம்மை எதிரியாக பாவிப்பவன்
நம்மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை வீசினால்
நாமும் எதிர்  வார்த்தை பேசக் கூடாது
அமைதியாக இருக்க வேண்டும்.

ஒருவர்  கோபமாக இருக்கும் போது
அவர் கண்களை நேருக்கு நேர் பார்க்கக்கூடாது
அதனால் தான் இயேசு
தன்னை குற்றவாளியாக்க கோபத்துடன் துடிப்பவர்களை
நேருக்கு நேர்  பார்க்காமல்
தரையில் குனிந்து எழுதத் தொடங்கினார்.
ஆனால் நீர்  என்ன சொல்கிறீர்
நீர்  என்ன கூறுகிறீர்  என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்டதால்
அவர்  தலை நிமிர்ந்து
உங்களில் பாவம் செய்யாதவர்  யாரோ
அவர்  அவள் மீது முதலில் கல் எறியட்டும் என்றார்
மீண்டும் தலை குனிந்தார்.

பாவமில்லாதவர்களால் மட்டுமே தண்டனை வழங்க முடியும்
பாவம் செய்யாதவர்கள் மட்டுமே தண்டனை வழங்க
தகுதியில்லாதவர்  என்கிறார் .
பாவம் செய்யாதவர்  யார் ?
பாவம் செய்யாவிட்டாலும்
பாவம் செய்யாவாவது நினைத்திருப்பர்
பாவம் செய்ய நினைப்பதவும்
கிட்டத்தட்ட பாவம் செய்வதற்கு சமம் .

அதனால் தான் இயேசு உங்களில் பாவமற்றவராக
யார்  இருக்கிறாரோ ?
அவர்  முதலில் அவள் மீது கல் எறியட்டும் என்றார்.
மீண்டும் அவர்  தலைகுனிந்தார் .
ஏனெனில் ஜனங்களை பார்த்துக் கொண்டேயிருந்தால்
கோபத்தால் கட்டுண்டவர்கள்
அறிவு தடுமாறி அவள் மீது கோபத்தில் கல் எறிந்து விடக்கூடும்
என்ற காரணத்திற்காக அவர்  தலை குனிந்தார்.

அதைக் கேட்ட அவர்கள் தங்கள் மனசாட்சியால் தண்டிக்கப்பட்டு
முதியவர்கள் முதலில் மறைந்து விட்டனர்.
ஏனெனில் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து வருபவர்களாதலால்
மிக அதிகமாக பாவம் செய்திருப்பர்.
இளைஞர்கள் அந்த அளவிற்கு பாவிகள் அல்லர்.
ஏனெனில் அவர்கள் பாவம் செய்ய போதுமான நேரம் இல்லை.
அதனால் தான் முதியவர்கள் முதலிலேயே சென்று விட்டனர்.
இறுதியில் சிறியோர்  வரை ஒவ்வொருவராக சென்று விட்டனர் .
இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அனைவரும் போய் விட்டதைக் கண்டார்.

இயேசு தலை நிமிர்ந்து பார்த்த போது
அம்மாதைத் தவிர வேறு யாரும் இல்லை
அவர்  அவளிடம் பெண்ணே உன் மீது
குற்றம் சுமத்தியவர்கள் எங்கே என கேட்டார்
 அதற்கு அவள் யாருமேயில்லை என்றாள் .

கடந்த காலம் கடந்துவிட்டது சென்றது சென்றதுதான் .
அதனை மறந்துவிடு .
இந்தச் சூழ்நிலையில் இருந்து ,
இந்த நிகழ்வில் இருந்து ,
இந்த செயலில் இருந்து ,
சில பாடங்களைக் கற்றுக் கொள் .
சில அனுபவங்களைக் கற்றுக் கொள் .

அவை தவறுகள் என்று நினைத்தால்
அதே தவறுகளை எதிர்காலத்திலும் செய்து கொண்டிராதே .
நான் உன் மீது குற்றஞ் சொல்லவில்லை.
தவறுகள் ஏதேனும் செய்ததாக நீ உணர்ந்தால்
அது உன்னைப் பொறுத்தது அதை மீண்டும் செய்யாதே
நடந்ததை மறந்து விடு .

ஏதேனும் தவறு செய்வதாக நீ உணர்ந்தால்
அதை மீண்டும் செய்யாதே.
உன்னை நானும் நிந்திக்க மாட்டேன்.
நான் உன் மீது குற்றஞ்சொல்லவில்லை.
தவறு என்று நீ உணர்ந்தால் அந்த தவறை செய்யாதே
அது போதும் என்றார்.
அம்மாதிற்கு மன மாற்றத்தை உண்டாக்கினார்.

கடந்தது கடந்தாதக இருக்கட்டும்
சென்றது சென்றதே நீ புதுமை பெற்று விட்டாய் .
எல்லாமே நல்லது தான் நீ மன்னிக்கப்பட்டாய் என்றார்.

கடந்த காலத்தில் நீ செய்த தவறால்
நிகழ் காலத்தில் நீ பாதிக்கப்பட்டால்
அத்தகைய தவறை
தவறென நீ உணர்ந்தால்
அதை உணரக்கூடிய பக்குவம் உனக்கு வந்து விட்டால்
மீண்டும் அந்த தவறை செய்யாதே
என்கிறார்  இயேசு .



அழுகணிச்சித்தர்  :

புல்ல ரிடத்திற்போய்ப் பொருள் தனக்குக் கையேந்திப்
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லைமிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என்கண்ணம்மா
                பொருளெனக்குத் தாராயோ
                                -----அழுகணிச் சித்தர்---பெரியஞானக் கோவை----

பாவத்தை உண்டு பண்ணக் கூடிய ,
பாவத்தை ஏற்படுத்தக் கூடிய ,
பாவத்தை விளைவிக்கக் கூடிய ,
பாவத்தை தரக்கூடிய ,
செய்களைச் செய்வதால் மட்டும் பாவம் உண்டாகாது .
பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
செயல்களை சிந்திப்பதாலோ
மனதில் நினைப்பதாலோ
எண்ணத்தால் எண்ணுவதாலோ
கூட பாவம் உண்டாகும் .

செயல்களைச் செய்வதால் உண்டாகும் பாவமும்
எந்தச் செயல்களைச் செய்வதால் பாவம் உண்டாகுமோ?
அந்தச் செயல்களை நினைப்பதாலும் உண்டாகும் பாவமும் சமம் .
செயல்களை வெளிப்படையாகச் செய்யும் போது
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட செயலாக இருந்தால்
சட்டதிட்டதிற்கு உட்பட்ட செயலாக இல்லாமல் இருந்தால்
சமுதாய ஒழுக்க நெறிக்குள் உட்படாததாக இருந்தால்
சமுதாயத்தால் செய்யக்கூடாதவை செய்யத் தகாதவை என்று
ஒதுக்கி வைக்கப்பட்டதாக இருந்தால்
சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்குள் கட்டுப்பட்டு
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

பாவத்தை தரக்கூடிய செயலை
துன்பத்தை அளிக்கக்கூடிய செயலை
மனவருத்தத்தை உண்டாக்கக்கூடிய செயலை
செய்வதன் மூலம் சட்டத்தின் மூலம்
நீதிபதியின் மூலம் தண்டனை தரப்படுகிறது .

தவறான செயலை செயல்படுத்துவதே
பாவமாக கொள்ளப்பட்டு தண்டனை தரப்படுகிறது .
சமுதாயமும் செயலின் மூலம் உண்டாக்கக்கூடிய பாவத்திற்கு
தான் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறது .
பாவம் என்பது செயலின் மூலம் விளைவது
அதற்குரிய தண்டனையை நீதிபதி கொடுப்பார்  என்று
சமுதாயம் நினைத்துக் கொண்டிருக்கிறது .

பாவம் தரக்கூடிய செயலை ஒருவன் நினைக்கும் போதே
அவன் பாவம் செய்தவனாகிறான்.
நினைப்பின் அடிப்படையில் உண்டாகும்
பாவத்திற்கு தண்டனை இல்லை என்று
மனிதன் நினைத்து கொள்கிறான் .
எனவே தவறானவைகளை மனதில் நினைக்கிறான் .
மனதில் நினைப்பவைகளை யாரும் பார்க்கமுடியாது என்று
எண்ணம் கொண்டு தவறாக எண்ணங்களை எண்ணுகிறான் .

மனதில் பாவத்தை உண்டு பண்ணக்கூடிய
தவறானவைகளை எண்ணினால்
யாரும் பார்க்க மாட்டார்கள்
யாரும் அறிய மாட்டார்கள்
யாரும் தண்டனை கொடுக்க மாட்டார்கள் என்று
மனிதன் தவறாக நினைத்துக் கொள்கிறான் .

மனிதன் மனதில் நினைப்பவைகளை
இறைவன் வாசித்துக் கொண்டிருக்கிறான்.
காலம் வரும் போது , நேரம் கனியும் போது ,
பாவத்தை உண்டு பண்ணக் கூடிய தவறான எண்ணங்களுக்கு
இறைவன் தண்டனை தருகிறான் .
செயலுக்கு உரிய தண்டனையை நீதிபதி கொடுத்தால்
தவறான எண்ணங்களை நினைப்பவர்களுக்கு
ஆண்டவன் தண்டனை தருகிறான் .

தண்டனைகள் சட்ட திட்டத்திற்கு உட்பட்டோ
இறைவன் நியதிக்கு உட்பட்டோ
தண்டனை கொடுக்கப்பட்டாலும்
இவைகள் கர்மவினையின் தாக்குதலுக்கு ஏற்ப
கர்ம வினையின் பாதிப்புக்கேற்ப
கர்மவினையின் ஆளுகைக்கு உட்பட்டே
நடக்கும் செயல்கள் ஆகும் .

கர்மவினைகள் எழக்கூடாது என்றால்
மாயை வலைக்குள் சிக்கக்கூடாது.
மாயை வலைக்குள் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால்
சிற்றின்ப சகதியில் மாட்டக்கூடாது .
சிற்றின்ப சகதியில் மாட்டக் கூடாது என்றால்
பேராசையில் மூழ்கி திளைக்கக் கூடாது .
பேராசையே புறத் தேவைகளை நிறைவு செய்ய
ஒருவரிடம் போய் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விடுகிறது .

புல்லர்  என்றால் சிறுமைக்குணம் கொண்டவர்  என்று பொருள் .
நல்லவைகளை எண்ணாதவர்
நல்லவைகளை செய்யாதவர்
என்றும் பொருள் கொள்ளலாம் .
அத்தகைய சிறுமைக் குணம் கொண்ட
புல்லரிடம் போய் , புல்லர்  பலரிடம் போய் ,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
புறத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருளுக்காக
அன்றாடத் தேவையை முடித்து வைக்கும் பொருளுக்காக
சிற்றின்பத் தேவையை நிறைவு செய்யும் பொருளுக்காக
அடிமையாக கையேந்தி
செயற்கையாக முகத்தில் சிரிப்பை வரவழைத்து
பல்லைக் காட்டி விழிகள் அடிமைத் தனத்தால் பிதுங்க
கண்களை அலை பாய விடுகிறேன் .

அழியக்கூடிய நித்தியமில்லாத பொருளுக்காக
ஒன்றும் இல்லாதவர்களிடம்
சிறுமைக்குணம் கொண்டோரிடம்
கயமைத் தனம் கொண்டோரிடம்
நல்லெண்ணம் இல்லாதவரிடம் சென்று நிற்கிறேன் .
புறத் தேவைகளை நிறைவு செய்ய அழியக்கூடிய பொருளுக்காக
சிறுமைக்குணம் கொண்டோரிடம் சென்று நிற்காமல்,
அவரிடம் கையேந்தி நிற்காமல் , பல்லைக் காட்டாமல்,
விழிகளை அலை பாயவிடாமல்
நித்தியமாய் அழிவில்லாமல் இருக்கும்
என்றும் நித்தியமாய் இருக்கும்
எல்லையில்லாத காலத்தை கடந்த , உருவமில்லாத ,
குணமில்லாத , நித்தியமான பொருளை
எனக்கு கிடைக்கும் படிச் செய்து
தான் அவனாக மாறும் நிலையை எனக்கு அளித்து
இணையில்லாததுடன் இணையும் அருளை எனக்குக் கொடுத்து
பேரின்ப பெருவாயிலைத் திறந்து
முக்தி என்னும் நிலையை எனக்கு
தந்தருள்வாய் என்கிறார் .

சிற்றின்பத் தேவைகள் சுவை தரக் கூடியவை
இன்பம் அளிக்கக் கூடியவை
மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை
நிரந்தரமானவை என்ற எண்ணம் கொண்டு
மாயை வலையில் சிக்கி
தகாத செயல்கள் செய்து
பாவத்தை உருவாக்கி கர்மவினையில் மாட்டிக் கொண்டேன் .

அழியக்கூடிய அநித்தியத்தின் மேல் பற்றுள்ளவன்
அதனை  தேடி ஓடுபவன்
அதனை நாடி அலைபவன்
கர்மவினையில் மாட்டிக் கொள்வான் .
பிறப்பு - இறப்பு சுழற்சியில் சிக்கிக் கொள்வான்
என்பதை உணர்ந்து கொண்டேன் .

கடந்த காலத்தில் நான் செய்த தவறுகளை உணர்ந்துகொண்டேன்
புத்தி தெளிந்தேன் ; அறிவு விளக்கம் பெற்றேன் ;
சிந்தனை திறக்கப் பெற்றேன் ;
அநித்தியத்தை நாடி ஓடுபவன் அநித்தியமானவன் ;
நித்தியத்தை நாடி ஓடி நித்தியத்தை அடைபவன் ;
நித்தியமாவான் என்பதை உணர்ந்து கொண்டேன் .
தவறுகளை திருத்திக் கொண்டேன் ;
செயல்களை மாற்றிக் கொண்டேன் ;
ஒழுக்கங்களை நெறிப்படுத்திக் கொண்டேன்;
அநித்தியத் தன்மை கொண்ட பொருட்களின் பின் ஓடாமல்
அதை அளிக்கக்கூடியவர்களிடம் சொல்லாமல்
சிறுமைக்குணம் கொண்டோர்கள் முன் நில்லாமல்
பல்லைக் காட்டாமல் விழிகளை பிதுக்காமல்
நித்தியத்தையும்
நித்தியத்தை அடையும் வழிமுறைகளையும் எனக்கு தந்து
நித்தியத்தை அடைந்து இறைவனுடன் கலக்கும்
பெறும் பேற்றினை எனக்கு அளித்து
நித்திய வாழ்வை எனக்குத் தர வேண்டும்
என்கிறார்  அழுகணிச் சித்தர் .



இயேசு கிறிஸ்து - அழுகணிச்சித்தர் :

இயேசு ,
கடந்தகாலத்தில் சிற்றின்பத் தேவைக்காக
செய்த செயல் தவறு என்று உணர்ந்து கொண்டாயானால்
இனிவரும் காலங்களில் அத்தகைய தவறை செய்யாதே .
தவறை உணர்ந்து , நல்ல வழியில் செல்
என்கிறார் .

அவ்வாறே ,
அழுகணிச் சித்தரும் ,
கடந்த காலத்தில் சிற்றின்பத் தேவைகள்
அநித்தியமானவை என்பதை உணராமல்
தவறான வழியைப் பின்பற்றி அதன் வழி சென்றேன் .
தவறை உணர்ந்து கொண்ட எனக்கு
பேரின்பத்தை காட்டி நித்தியத்தை
எனக்கு அளிக்க வேண்டும்
நான் செய்த தவறை உணர்ந்து கொண்டேன்
நல்ல வழியை எனக்குக் காட்டுவாயாக என்கிறார்.

         “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                     போற்றினேன் பதிவுஐம்பது  ந்தான்முற்றே “”

August 05, 2012

இயேசு கிறிஸ்து-திருநாவுக்கரசர்-நாமார்க்கும்பதிவு49



        இயேசு கிறிஸ்து-திருநாவுக்கரசர்-நாமார்க்கும்-பதிவு-49
               
         “”பதிவு நாற்பத்திஒன்பதை விரித்துச் சொல்ல
                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான் .
                                                ------மத்தேயு - 13 : 3
அவன் விதைக்கையில் , சில விதை வழியருகே விழுந்தது ; பறவைகள் வந்து அதை பட்சித்துப் போட்டது .
                                                ------மத்தேயு - 13 : 4
சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது ; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது .
                                                -----மத்தேயு - 13 : 5
வெயில் ஏறின போதோ , தீய்ந்து போய் வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று .
                                                -----மத்தேயு - 13 : 6
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது ; முள் வளர்ந்து அதை நெருக்கிப் போட்டது .
                                                -----மத்தேயு - 13 : 7
சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து , சிலது நுhறாகவும் , சிலது அறுபதாகவும் , சிலது முப்பதாகவும் பலன் தந்தது .
                                                -----மத்தேயு - 13 : 8
கேட்கிறவனுக்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றார் .”
                                                -----மத்தேயு - 13 : 9

ஒருவன் , ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும் போது , பொல்லாங்கன் வந்து , அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக் கொள்ளுகிறான் ; அவனே வழியருகே விதைக்கப் பட்டவன் .
                                                -----மத்தேயு - 13 : 19
கற்பாறை இடங்களில் விதைக்கப் பட்டவன் , வசனத்தைக் கேட்டு உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக் கொள்ளுகிறவன் ;”
                                                -----மத்தேயு - 13 : 20
ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய் , கொஞ்சக் காலமாத்திரம் நிலைத்திருப்பான் ; வசனத்தினிமித்தம் உபத்திரவனும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான் .
                                                -----மத்தேயு - 13 : 21
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்டவன் ,வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும் , உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால் , அவனும் பலனற்றுப் போவான் .
                                                -----மத்தேயு - 13 : 22
நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து , நுhறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார் .”
                                                -----மத்தேயு - 13 : 23

அன்று சரியாக இருந்தது ;  இன்று தவறாக இருக்கலாம்.
அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கலாம் .
சரியாக இருப்பது என்றும் சரியாக இருக்காது
தவறாக இருப்பது என்றும் தவறாக இருக்காது
சரியாக இருப்பதும் , தவறாக இருப்பதும்
காலமாற்றத்திற்கு ஏற்றபடி ,
எப்பொழுதும் மாறிக் கொண்டே தான் இருக்கும் .

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
மாறாதது மாற்றம் மட்டும் தான் .
மாறிக் கொண்டே இருப்பதும் மாற்றம் மட்டும் தான்.

இயக்க நிலையில் உள்ளவை ,
இயக்கத்திற்கு உட்பட்டவை ,
இயக்கத்திற்கு கட்டுப்பட்டவை ,
இயங்கிக் கொண்டிருப்பவை ,
மாற்றத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும்
மாற்றத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்
மாற்றம் நிகழ்ந்தே ஆக வேண்டும்
மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்.

அன்று சரியாக இருந்தது ; இன்று எவ்வாறு தவறாகலாம்,
அது எப்படி என்பதை பார்ப்போம் :
வெகுதொலைவு பிரயாணங்களுக்கு
மாட்டு வண்டியோ , குதிரை வண்டியோ
பயன்படுத்துவது  அன்று சரி ;
இன்று அதைப் பயன்படுத்துவது தவறு ;
அறிவியல் வளர்ச்சி ,
விஞ்ஞான முன்னேற்றம் ,
இவற்றின் தாக்கங்களினால் ஏற்பட்ட மாற்றங்களினால்
பிரயாணத்திற்கு மகிழுந்து , பேருந்து , தொடர்வண்டி
போன்றவற்றைப் பயன்படுத்துவதே இக்காலத்திற்கு சரி .

மாட்டு வண்டியையோ , குதிரை வண்டியையோ
பயன்படுத்துவது தவறாக கருதப்படுகிறது இன்று;
அன்று சரியாக இருந்தது ; இன்று தவறாக இருக்கிறது .

அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கிறது .
அது எப்படி என்று பார்ப்போம் :
டியூஷன் படிப்பது அன்று தவறாக கருதப்பட்டது
மதிப்பெண் குறைந்தவர்கள் ,
மதிப்பெண் எடுக்க தடுமாறுபவர்கள் ,
பாடத்தின் மேல் விருப்பமில்லாதவர்கள் ,
படிப்பறிவு குறைந்தவர்கள் ,
படிப்பின் மேல் ஈடுபாடு இல்லாதவர்கள்,
பாடம் புரியாதவர்கள் ,
பாடத்தை படிக்க முடியாதவர்கள் ,
பாடத்தின் மேல் பிடிப்பு குறைந்தவர்கள் ,
என்று பொதுவாக மந்தமானவர்கள் ,
அறிவுத்திறன் குறைவு உடையவர்களாக கருதப்படுபவர்கள் ,
என்று டியூஷன் படிப்பவர்களை இந்த சமுதாயம்
தவறான பார்வையில் பார்த்தது ;
தவறான கண்ணோட்டத்துடன் நோக்கியது ;
அன்று டியூஷன் படிப்பது தவறாக கருதப்பட்டது ;
ஆனால் இன்று டியூஷன் படிப்பது கல்வியின் பிரிக்க முடியாத
ஒரு அங்கமாகி விட்டது .
டியூஷன் படித்தால் தான் அதிக மதிப்பெண் பெற முடியும்
என்ற நிலை உருவாகி விட்டது .
அன்று அறிவுத்திறன் குறைந்தவர்களால்
படிக்கப்பட்ட  டியூஷன் இன்று அனைவராலும் படிக்கப் படுகிறது .

அன்று தவறானதாகக் கருதப்பட்டது ;
இன்று சரியாக கருதப்படுகிறது.
அன்று சரியாக இருந்தது  ; இன்று தவறாக இருக்கிறது .
அன்று தவறாக இருந்தது ; இன்று சரியாக இருக்கிறது .
சரியும் ,  தவறும் கால மாற்றத்தால் மாற்றமடைகிறது .

மாற்றத்தின் தன்மையையும் ,
வேறுபாட்டின் அர்த்தத்தையும் , உணர்ந்து கொண்டால்
உண்மையின் உருவம் உள்ளத்தில் தெளிவாகும்.
வேறுபாட்டினை உணர்பவர்களால் மட்டுமே
உண்மையின் உருவினை உணர முடியும்.
அறிவில் தெளிவு பெற முடியும்.
அறிவில் தெளிவு பெற வேறுபாட்டின் தன்மையினை அறிந்து கொள்ள
பல்வேறு இடங்களில் விதைக்கப்பட்ட விதைகளின் தன்மையினை
அர்த்தத்தின் ஆழத்தினை உணர வேண்டும்.

விதைக்கிறவன் விதைக்கப் புறப்பட்டான்.
விதைத்தல் என்றால் ஒன்றை உருவாக்க முயலுதல் என்று பொருள்.
விதைப்பவன் என்றால் உருவாக்குபவன் என்று பொருள் கொள்ளலாம் .

இந்த வசனத்தில் விதைக்கிறவன் என்றால் ஆண்டவர்  என்றும்
விதைகள் என்றால் ஆண்டவர் அருளிய வசனங்கள்
ஆண்டவர்  காட்டிய வழிகள்
ஆண்டவர்  கொடுத்த உண்மைகள் என்றும் பொருள் .

ஆண்டவராகிய விதைக்கிறவர்  அருளுரைகளாகிய விதைகளை
பலதரப்பட்ட மனம் கொண்ட மனிதர்  இதயங்களில் விதைக்கும் போது
ஏற்படக் கூடிய மாற்றங்களின் தன்மைகளை , விளைவுகளை
ஒப்பிடுதல் மூலம் இயேசு விளக்குகிறார் .

வழியருகே விதைக்கப்பட்ட விதைகளை எப்படி
பறவைகள் வந்து கொண்டு சென்று விடுகிறதோ ? அதைப் போல,
ஆண்டவர் அருளிய வசனங்களை
ஏற்றுக் கொள்ளாதவன் ;
சிந்தித்துத் தெளியாதவன் ;
நல்லவை எவை என்று புரியாதவன் ;
அல்லவைகளை புரிந்து கொள்ள முடியாதவன் ;
காதால் கேட்டு விட்டு வசனங்களை கைக்கொள்ளாதவன் ;
மனதில் விதைக்கப்பட்ட ஆண்டவரின் அருளுரைகள் , வசனங்கள்
காலத்தால் அழிந்துவிடும்
காலத்தால் கரைந்து விடும்
காலம் களவாடி சென்று விடும் என்பதைத் தான்
பொல்லாங்கன் பறித்து சென்று விடுவான் என்கிறார் .

மண் அதிகம் ஆழமில்லாத கற்பாறைகள் நிறைந்த இடத்தில்
விழுந்த விதை சீக்கிரமாய் முளைத்து
வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல்
வேரில்லாமல் உலர்ந்து போயிற்று .
அதைப்போல ,
பழமையில் ஊறிப் போனவன்
புதியதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நினைப்பில் ,
புதியதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையில் ,
புதியதை சுவைக்க வேண்டும் என்ற உந்துதலில் ,
புதியதில் திளைக்க வேண்டும் என்ற கற்பனையில் ,
ஆண்டவரின் வசனங்களை அருளுரைகளை ஏற்றுக் கொள்கிறான்.

மகிழ்ச்சியுடனும் , அதிக ஆர்வத்துடனும் ,
இன்ப வேகத்துடனும் ஏற்றுக் கொள்கிறான் .
எந்த அளவு வேகத்துடன் ஆண்டவரின் வசனங்களை
ஏற்றுக் கொள்கிறானோ ?
அதே அளவு வேகம் தொடர்ந்து இருப்பதில்லை
ஆர்வம் நீடிப்பதில்லை .

ஆண்டவரின் வசனத்தை ஏற்றுக் கொண்டாலே
எல்லாம் கிடைத்து விடும் ;
வாழ்வு வசந்தமாகி விடும் ;
என்ற நினைப்பில் இருப்பதனால் வாழ்வில் எதிர்ப்படும்
தாளாத சோகங்கள் ,
மாறாத துயரங்கள் ,
கவலையின் தாக்கங்கள் ,
கண்ணீரின் தாக்குதல்கள் ,
ஆகியவற்றால் தாக்குண்டு
ஆண்டவர்  நம்மை காப்பாற்றுவார்
என்ற அறிவு இல்லாமல்
ஆண்டவர்  மேல் நம்பிக்கை இல்லாமல்
ஆண்டவர்  மேல் வைத்த விசுவாசம் குறைந்ததால்
வாழ்வில் இடறலடைவான் ;
உள்ளத்தில் கலக்கமடைவான் ;
மனதில் இருளடைவான் ;
இதனால் எவ்வளவு விரைவாக ஆண்டவரை ஏற்றுக் கொள்கிறானோ
அவ்வளவு விரைவாக ஆண்டவரை மறப்பான் .
ஆண்டவரிடமிருந்து விலகிச் செல்வான் .

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப் பட்ட விதையை
முள் வளர்ந்து அதை நெருக்கியது
வளர விடாமல் தடுத்தது
அதைப் போல ,
உலகப் பற்றுதல்களில் மாட்டிக் கொண்டவன் ;
தன் வீடு , தன் மக்கள் , தன் குடும்பம் என்று சிக்கிக் கொண்டவன் ;
எதிர்கால பாதுகாப்பிற்காக சொத்துக்களை சேர்த்து வைப்பவன் ;
மகிழ்ச்சியான வாழ்வைப் பெற ஐஸ்வரியத்தை நாடுபவன் ;
நிம்மதியான வாழ்க்கை அமைதியான மனம் வேண்டும்
என்று நினைப்பவனுக்கு ,
புயலடிக்கும் கவலை ,
சுழன்றடிக்கும் துன்பம் ,
கலங்கடிக்கும் கண்ணீர் ,
வருந்தவைக்கும துயரம் ,
மிரளவைக்கும் தோல்வி ,
பதறவைக்கும் இழப்பு ,
கதறவைக்கும் வருத்தம் ,
திகைக்க வைக்கும் கஷ்டம் ,
தன்னை தன் வாழ்வை சுக்கு நுhறாக்கும் போது
துயர மேகங்கள் சூழும் போது
சாத்தான் கபட நாடகம் போடும் போது
ஆண்டவர்  மேல் உள்ள பற்றை விலக்க
சாத்தான் நடத்தும் நயவஞ்சக வேலை இது என்று உணராமல்
ஆண்டவர்  மேல் உண்மையான அன்பு இருந்தும்
ஆண்டவர்  மேல் உண்மையான பற்று இருந்தும்
சாத்தான் செய்யும் சதி வேலைகளில் சிக்கிக் கொள்வதால்
அவனும் ஆண்டவர்  மேல் உள்ள நம்பிக்கையை இழப்பதால்
அவனும் பயனற்றுப் போகிறான் .

நல்ல நிலத்தில் விழுந்து விதையானது
பல்கி பெருகி பலன் தரும்  .
அதைப் போல ,
ஆண்டவரை உண்மையாக ஏற்றுக் கொண்டவர் ;
ஆண்டவரே உண்மை என்று அறிந்து ஏற்றுக் கொண்டவர் ;
ஆண்டவரே நித்தியம் ; ஆண்டவரே சத்தியம் ;
என்பதை உணர்ந்தவர்
இன்பம் , துன்பம் இரண்டும் இறைவன் வகுத்த நீதி
இதை ஏற்றுக் கொள்வதே மனித ஜாதி
என்ற நிலை கொண்டு ,
இன்பம் வந்தால் இறைவன் அளித்தார்  என்றும் ,
துன்பம் வந்தால் இறைவன் கைவிட்டார்  என்றும் நினையாமல் ,
வருத்தம் கொள்ளாமல் ,
இன்பம் வந்த போது இறைவன் நம்மை
உயர்த்தி கொண்டு செல்கிறார்  என்றும் ,
துன்பம் வந்த போது இறைவன் நம்மை கைவிட மாட்டார்
நம்மை காப்பாற்றுவார்  ;  வழி நடத்திச் செல்வார் ;
என்ற நம்பிக்கை கொண்டு ஆண்டவர்  மேல் உண்மையாக
விசுவாசம் நம்பிக்கை கொள்பவன் வாழ்க்கையானது
இன்ப ஊற்றாய் பல்கிப் பெருகும் .
உயர்வுகள் ஒன்று நுhறாகவும் , நுhறு ஆயிரமாகவும் ,
ஆயிரம் பத்தாயிரமாகவும் ஆகும்.

ஆண்டவரின் மேல் உண்மையான விசுவாசமும்
ஆண்டவர்  வசனத்தின் மேல் உண்மையான கைக் கொள்ளளும்
கொண்டவர்  வாழ்க்கையானது
இன்பங்கள் பெருகி நன்மை பயக்கும் என்கிறார்  இயேசு.



திருநாவுக்கரசர் :
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
                நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
                இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
                சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
                கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
                 -----திருநாவுக்கரசர்--தேவாரம்-ஆறாந் திருமுறை----

சரி என்பதற்கும் , தவறு என்பதற்கும் ,
சிறிதளவு வேறுபாடு உள்ளது .
சரி இல்லாதது தவறு ; தவறு இல்லாதது சரி ;
சரி என்றால் முழுவதும் சரியாக இருக்கும் என்றோ ?
தவறு என்றால் முழுவதும் தவறாக இருக்கும் என்றோ  ?
சொல்ல முடியாது .
சரிக்குள்ளும் தவறு இருக்கும் ;
தவறுக்குள்ளும் சரி இருக்கும் ;

ஒருவரை முற்றிலும் சரியானவர்  என்றோ
முற்றிலும் தவறானவர்  என்றோ கூறிவிட முடியாது .
சரியானவருக்குள்ளும் தவறானவைகள் இருக்கும் ;
தவறானவருக்குள்ளும் சரியானவைகள் இருக்கும் ;

சமுதாயத்தில் சரியாக உள்ளவரிடம் தவறுகள்
இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை .
அதே போல் ,
தவறுகள் உள்ளவரிடம் சரியானவைகள் இருக்கும் என்பதை
ஏற்றுக் கொள்ளும் மனநிலை நமக்கு இல்லை .

சமுதாயத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளவரிடம்
கெட்ட பழக்க வழக்கங்கள் இருக்காது என்றும் ,
கெட்ட பழக்க வழக்கங்கள் உள்ளவரிடம்
நல்ல பழக்க வழக்கங்கள் இருக்காது என்றும் ,
ஒரு வரையரையை நாம் வகுத்து வைத்திருக்கிறோம் .

சமுதாயத்தில் உயர்ந்தவர்
உயர்ந்த நிலையில் இருப்பவர்
நல்லவை பல செய்பவர் ;
தர்மங்கள் பல ஆற்றுபவர் ;
தொண்டுகள் பல செய்பவர் ;
கருணை உள்ளம் கொண்டவர் ;
இரக்க சுபாவம் பெற்றவர் ;
மற்றவர்  துயர்நீக்க உழைப்பவர் ;
மற்றவர்  துன்பம் கண்டு கலங்குபவர் ;
என்று பல்வேறு நல்ல குணங்களைப் படைத்து
உயர் நெறியில் நின்று உத்தமராக
நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வாழ்பவர் ;
என்ற நிலையில் உள்ளவரை குற்றம் சுமத்தி
அவரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டும் போது
அவரிடம் மறைந்துள்ள தீய பழக்கங்களை விளக்கிக் காட்டும் போது
அவரிடம் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டும் போது
இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை .
நல்லவரை எப்படி குற்றம் சுமத்தலாம்
குறைகளை கண்டு பிடிக்கலாம்
தவறுகளை சுட்டி காட்டலாம்
என்று நம் மீது பாய்கிறது ;
நம்மை பிராண்டுகிறது ;
வார்த்தைகளால் விளாசுகிறது ;
எழுத்துக்களால் வசைபாடுகிறது ;
கூக்குரலால் கதறுகிறது ;
போராட்டங்களால் எதிர்க்கிறது ;

சரியா ? தவறா? என்று யோசிப்பதில்லை .
சரிக்குள் சரி தான் இருக்கும்  ;தவறு இருக்காது ;
என்ற நினைப்பில் தான் இந்த சமுதாயம்
கண்ணை மூடிக் கொண்டு கதறுகிறது .

தவறுகள் பல செய்தவர் ;
குற்றங்களை கூசாமல் நிகழ்த்தியவர் ;
பிறர்  மனம் வாடும் படி செயல்கள் செய்பவர் ;
உயிரினங்களை வாட்டுபவர் ;
ஏழ்மையை பரிகாசம் செய்பவர் ;
வறுமையை ஏறி மிதிப்பவர் ;
துன்பங்களை பிறருக்கு அளிப்பவர் ;
என்று பல்வேறு மனம் கொண்டோரை
தவறுகள் பல செய்பவரை தவறானவர்  என்ற முத்திரை குத்தி
தவறானவருக்குள்ளும்  சரியானவைகள் இருக்கும் 

என்பதை ஏற்க மறுத்து
தவறானவராகவே இந்த சமுதாயம் கருதுகிறது .

தவறானவருக்குள்ளும் சரியானவைகள் இருக்கும் என்பதை
மனதில் கொண்டு சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் ,
காலமாற்றத்தின் தன்மைகளாலும் செய்யப்பட்ட குற்றங்களுக்கு
உரிய தண்டனைகளை குற்றவாளிகளுக்கு அளித்து
அவர்கள் மன மாற்றம் அடைந்து
சிந்தனை தெளிவு பெற்று
அறிவு விளக்கம் பெற்று
தவறானவர்  சரியானவராக வெளியே வந்தாலும்
சமுதாயம் தவறானவரை சரியானவராக ஏற்றுக் கொள்ள மறுப்பதினால்
தவறானவர்  சரியானவராக மாறினாலும் ,
சமுதாய துhண்டுதலினாலும் ,
முறையற்ற பேச்சுக்களினாலும் ,
தரங்கெட்ட நடத்தைகளினாலும் ,
தவறானர்  சரியானவராக இல்லாமல்
சரியானவைகளை வெளிப்படுத்தாமல்
தவறானவர்  தவறானவைகளையே வெளிப்படுத்துகிறார் .

தவறானவருக்குள் இருக்கும் சரியானவைகளை
இந்த சமுதாயம்  ஏற்றுக் கொள்ளாததே
தவறானவர்  சரியானவைகளை வெளிப்படுத்தாமல்
தவறானவராக இருக்க காரணம் .

சரியானவைக்குள் இருக்கும் தவறுகளையும் ;
தவறானவைக்குள் இருக்கும் சரியானவைகளையும் ;
அறிந்தாலும் , உணர்ந்தாலும் சுட்டிக் காட்டாமல்
சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டாமல்
அமைதியாக இருப்பவரால் மட்டுமே
நிம்மதியான , அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் .

சமுதாய அவலங்களை சுட்டிக் காட்டினால்
தன் அமைதி போகும் என்று தெரிந்தும்
சமுதாய அவலங்களை எதிர்ப்பவன் ;
காலத்தை கடந்து நிற்பான் ;
சமுதாய அலங்கோலங்களை மனதில் கொண்டு
அதை சீர்படுத்த வேண்டும் என்று
செயல் மேற்கொள்ளுபவன் தான் காலத்தை கடந்து நிற்பான் ;
பொதுவுடைமைவாதியாக , சமுதாய சீர்திருத்த வாதியாக ,
பகுத்தறிவுப் பாசறையாக இருப்பான் .
நிம்மதியான  வாழ்க்கை , அமைதியான குடும்பம் வேண்டும்
என்று நினைப்பவன் யாருக்கும் தெரியாமல்
மண்ணோடு மண்ணாக மட்கிப் போவான் .

இவைகளில் எவை தேவை என்பதை அவனவனே
தன் தன்மைக்கேற்ப தீர்மானித்துக் கொள்கிறான் .
சுயநலமாக இருப்பதற்கு தைரியம் தேவையில்லை.
பொதுநலமாக இருப்பதற்குத் தான் அதிக அளவு தைரியம் தேவை ;
உண்மையை ஓங்கி ஒலிப்பதற்கு அதிக அளவு தைரியம் தேவை ;

உண்மையை உண்மையாக உணர்ந்தவனால் மட்டுமே
உண்மையை உண்மையென உணர்ந்தவனால் மட்டுமே
உண்மையின் உண்மை மற்றதெல்லாம் பொய்மை
என்று அறிந்தவனால் மட்டுமே ,
உண்மையின் வழி நின்று செல்படுபவனால் மட்டுமே ,
உண்மையுடன் இணைந்து உண்மையாக மாறியவனால் மட்டுமே ,
உண்மைக்குள் கலந்தவனால் மட்டுமே ,
உண்மையில் கரைந்தவனால் மட்டுமே ,
உண்மையின் பிம்பமாகத் திகழ்பவனால் மட்டுமே ,
உண்மையை உண்மையாக உண்மைத் தன்மையுடன் விளக்க முடியும் .
அத்தகைய உண்மையை திருநாவுக்கரசர்  

 கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் .

இட்ட பணி செய்து , ஏவல் பணி ஆற்றி ,
கைகட்டி , வாய் பொத்தி , சொல்லியதை செய்து வாழும்
அடிமை அல்ல நான் .யாருக்கும் நான் அடிமை இல்லை .
கேட்டுப் பெற வேண்டிய நிலையில்
அண்டி அடிமையாக வாழ வேண்டிய நிலையில் நான் இல்லை .

வாழ்வை முடிவுக்கு கொண்டு வரும்
இறப்பைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் .
ஏனென்றால் , இறப்பின் மேல் எனக்கு பயமில்லை .
இறப்பைக் கண்டு பயப்படுபவனுக்கு தான்
இறப்பின் மேல்பயம் இருக்கும் .
சிற்றின்ப சகதியில் புரள்பவனுக்குத் தான்
இறப்பின் மேல் பயம் இருக்கும் .
பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்துபவனுக்கு
இறப்பின் மேல் பயமில்லை.
அதனால் நான் இறப்பைக் கண்டு கலங்க மாட்டேன் ;
இறப்பைக் கண்டு பயப்படமாட்டேன் ;
இறப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன் என்கிறார் .

நரகச் சேற்றில் விழ மாட்டேன் ;
துன்பச் சேற்றில் மூழ்க மாட்டேன் ;
வறுமைச் சேற்றில் புரள மாட்டேன் ;
ஏழ்மைச் சேற்றில் மாட்ட மாட்டேன் ;
கவலைச் சேற்றில் சிக்க மாட்டேன் ;
கண்ணீர்  சேற்றில் உருள மாட்டேன் ;
துயரச் சேற்றில் கலங்க மாட்டேன் ;
யாரிடத்தும் சென்று கையேந்த மாட்டேன் ;
தேவை இதுவென சொல்லி நிற்க மாட்டேன் ;
தேவையை தீர்க்கச் சொல்லி
யாரிடத்தும் சென்று பணிய மாட்டேன் ;
சிற்றின்பத் தேவையை தீர்க்க யாரிடத்தும் பணிய மாட்டேன் ;

பணிந்து நின்று என் தேவையை தீர்த்துக் கொள்ள வேண்டிய
அவசியம் எனக்கு இல்லை . ஏனெனில் ,
என் வாழ்வில் என்றும் , எப்பொழுதும் , எக்காலமும் ,
என் வாழ்வில் நடப்பது இன்பமே துன்பம் இல்லை ;
இன்பம் அன்றி எதுவும் என் வாழ்வில் நிகழ்வதில்லை ;
துன்பம் அற்ற நிம்மதியான அமைதியான மகிழ்வுகள் பூத்துக் குலுங்கும் ;
இன்பங்கள் காய்த்துக் குலுங்கும் ;
நறுமணம் கமழும் ; தென்றல் வீசும் ; இனிமையாக வாழ்வு
என் வாழ்வு துன்பங்கள் அற்ற  வாழ்வு என்கிறார் .

இத்தகைய ஒரு அருமையான ஒரு வாழ்வை அடைய
காரணம் என்ன என்பதை விளக்குகிறார் .
யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவனை ;
வாக்குக்கு எட்டாதவனை ;
வார்த்தைக்குள் அகப்படாதவனை ;
எல்லாம் வல்ல சங்கரனை ;
வெண்மையான சங்கினை  ; காதில் அணியாகக் கொண்டவனை ;
இத்தகைய தன்மைகளை தன்னுள் கொண்டவனை ;
சிறப்புகள் பல பெற்றவனை ;
மகிமைகள் பல புரிபவனை ;
அருளாசிகள் பல வழங்குபவனை ;
கொடைகள் பல தருபவனை ;
கேட்டவைகள் பல கொடுப்பவனை ;
கவலைகள் பல தீர்ப்பவனை ;
துன்பங்கள் பல கரைப்பவனை ;
கண்ணீர்  பல துடைப்பவனை ;
அத்தகையவனுக்கே மீளா அடிமையாகி இருக்கிறேன் .
பரிபூரண சரணாகதி அடைந்து இருக்கிறேன் ;
எல்லாம் அவனே என்று என்னை ஒப்புக் கொடுத்திருக்கிறேன் ;
அவனே ஆதி அந்தம் என்பதை உணர்ந்திருக்கிறேன் ;
அவனனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை அறிந்திருக்கிறேன் ;
இயக்கமும் அவனே , இயக்கமற்று இருப்பவனும் அவனே ,
என்பதை புரிந்து இருக்கிறேன் ;
அதனால் தான் அவன் தாள் வணங்கி
சிவந்த திருவடிகளைப் பற்றி அவனே கதி என்று இருக்கிறேன் ;
இறைவனே எல்லாம் என்று இருக்கிறேன் ;
என்னை இயக்குபவனும் அவனே ,
என்னுள் இருந்து இயங்குபவனும் அவனே ,
என்பதை நான் உணர்ந்துள்ளதால்,
எந்த நிலையிலும் என்னை தாழ்ந்த நிலைக்கு தள்ள மாட்டான் ;
வருத்த நிலைக்கு விட மாட்டான் ;
என்ற என்னுடைய முழு நம்பிக்கையே
இறைவனிடம் வைத்துள்ள என் முழு நம்பிக்கையே
நான்  துன்பமற்று இன்பம் நிறைந்து வாழக் காரணம்
என்கிறார்  திருநாவுக்கரசர் .



இயேசு கிறிஸ்து - திருநாவுக்கரசர் :
இயேசு ,
பலவகைப்பட்ட மனிதர்  மனங்களில்
ஆண்டவருடைய வசனங்கள் விதைக்கப்பட்டாலும்
ஆண்டவரை உண்மையாக விசுவாசித்து
ஆண்டவர்  வசனங்களை கைக் கொண்டு
ஆண்டவர்  வழி நடப்பவர்  வாழ்க்கை மட்டுமே
இன்பங்கள் பல்கிப் பெருகி வாழ்க்கை உயர்வான நிலையை
அடைந்து நன்மைகளைக் கொடுக்கும் என்கிறார் .

அவ்வாறே ,
திருநாவுக்கரசரும் ,
ஆண்டவர்  மேல் நான் வைத்த உண்மையான நம்பிக்கையே
ஆண்டவரிடம் நான் கொண்ட பரிபூரண சரணாகதியே
என் வாழ்வு துன்பங்கள் அற்று ; கவலைகள் அற்று ;
இன்பமாக இருக்கக் காரணம்
ஆகவே கடவுளை உண்மையாக நம்பியவனுக்கு
வாழ்வில் எந்த நாளும் துன்பமில்லை என்கிறார் .

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                      போற்றினேன் பதிவுநாற்பத்திஒன்பது  ந்தான்முற்றே “”