May 13, 2018

உலக அன்னையர் தினம்-13-05-2018


உலக அன்னையர் தினம்-13-05-2018

“””””ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
   சான்றோன் எனக்கேட்ட தாய்”””””
                         -----திருக்குறள்

பாராட்டு இரண்டு விதங்களில்
வழங்கப்படுகிறது

ஒன்று : படிப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு
இரண்டு : உழைப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு

ஒரு மாணவன்
ஒரு வகுப்பில்
அனைத்து மாணவர்களையும்
விட படித்து
முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றால் அதற்கு
அளிக்கப்படும் பாராட்டு
படிப்பதினால் கிடைக்கும் பாராட்டு

விளையாட்டுப் போட்டியில்
ஒருவன் அனைவரையும்
தோற்கடித்து
முதலில் வந்தால்
கிடைக்கும் பாராட்டு
உழைப்பின் மூலம்
கிடைக்கும் பாராட்டு

இந்த பாராட்டு நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு
படிப்பு என்று எடுத்துக்  கொண்டாலும்
உழைப்பு என்று எடுத்துக் கொண்டாலும்
அளிக்கப்படும் பாராட்டு
மாறிக்கொண்டே இருக்கும் பாராட்டு

படிப்பிலும், உழைப்பிலும்
முதலிடம் பெறுவது என்பது
மாறிக்கொண்டே இருக்கும்
இன்று ஒருவர் முதலில் வருபவர்
நாளை வேறொருவர் முதலில் வருவார்
இது நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

இந்த நிலையில்லாத பாராட்டைக்
கேட்டு எந்த தாயும் மகிழ மாட்டாள்

பாராட்டை இரண்டு நிலைகளில்
பிரிக்கலாம்
ஒன்று  : நிலையில்லாத பாராட்டு
இரண்டு : நிலையான பாராட்டு

படிப்பதின் மூலமும்,
உழைப்பின் மூலமும்
பெறப்படும் பாராட்டு
நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

குணத்தின் மூலம் பெறப்படும்
பாராட்டே
நிலையான பாராட்டு

அடுத்தவர் கண்ணில் வரும்
கண்ணீரைக் கண்டு
எதற்காக அந்த கண்ணீர் வருகிறது
என்பதை அறிந்து அந்த
கண்ணீருக்கு காரணமான துன்பத்தை
நீக்க ஓடோடி சென்று உதவி செய்யும்
கருணை உள்ளம் கொண்டு
அன்பு காட்டி உதவி செய்பவன்
தன் மகன் என்று பிறர் சொல்ல
கேட்கும் போது
ஒரு தாய் மகிழ்கிறாள்

சான்றோன்
என்றால் அறிவாளி என்று பொருள்
கொள்ளக் கூடாது
சான்றோன் என்றால்
உயர்ந்த குணங்களைக் கொண்டவன்
என்று பொருள் கொள்ள வேண்டும்

பிறர் துன்பம் கண்டு
வருத்தப்பட்டு அதை துடைக்க
ஓடுபவன் தன் மகன்
என்று பிறர் சொல்லும் போது
எவ்வளவு பெரிய
உயர்ந்த குணத்தைக் கொண்ட
மகனைப் பெற்று இருக்கிறேன்
என்று ஒரு தாய்
அவனைப் பெறும் போது
அடைந்த மகிழ்ச்சியை
விட அதிக மகிழ்ச்சி
அடைவாள்

என்பது தான்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பதற்கான அர்த்தம்

அன்னையர் தின வாழ்த்துக்கள் – 13-05-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்



May 10, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்


           ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்

நிறைய நபர்கள்
போட்டியாக இருந்து
கோடிக்கணக்கில் பணம்
தருகிறோம் என்று
சொல்லியும்
அவைகளை மனதில்
கொள்ளாமல்
பணத்திற்கு ஆசைப்படாமல்
கொடுத்த வாக்கு
தவறாமல்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும்
நம்முடைய
அந்த செயல்
கோடி ரூபாய் மதிப்பு பெறும்
அல்லது
கோடி பொன் மதிப்பு பெறும்
என்று நினைக்க
வேண்டாம்

இது நான்காம் செயல்
இது நான்காம் கோடி
பெறும் செயல்
இது செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொன்ன செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
என்று
நினைக்க வேண்டாம்
இது கோடி  புண்ணியம்
பெறும் செயல்

முதல் மூன்று செயல்களும்
கோடி மதிப்பிலான பணமோ
அல்லது
கோடி மதிப்பிலான பொன்னோ
பெறக்கூடிய செயல் ஆகும்

ஆனால்
நான்காவது செயல் மட்டும
கோடி புண்ணியம் பெறும்
செயல்

நாம் ஒருவருக்கு
நல்லது செய்வதாக
வாக்கு கொடுத்து
வாக்கு தவறாமல்
நாம் சொன்னதை
செய்வது என்பது
கோடி புண்ணியம்
கொண்டதாகும்

வாழ்வில்
எத்தனை செயல்கள்
செய்தாலும்
எல்லா செயல்களையும்
விட உயர்வான செயல்
வாக்கு தவறாமை ஆகும்

அதனால் தான்
மற்ற செயல்களான
மூன்று செயல்களையும்
கோடி பணத்திற்கோ
அல்லது
கோடி பொன்னிற்கோ
ஒப்பிட்ட
ஔவையார்
நாக்கோடாமையை
அதாவது
வாக்கு தவறாமையை மட்டும்
கோடி புண்ணியத்திற்கு
ஒப்பிட்டு சொல்கிறார்.

இது தான்
நான்கு கோடி பாடல்
இந்த பாடலை
நன்கு உற்று பார்த்தால்
நான்கு கோடியும்
ஒன்றுடன்
ஒன்று தொடர்பு
கொண்டிருப்பது தெரியும்

முதல் கோடி
வரவேற்பையும்
இரண்டாவது கோடி
உபசரிப்பையும்
மூன்றாவது கோடி
உறவு முறையையும்
நான்காவது கோடி
உறுதி மொழியையும்
குறிக்கும்

முதல் மூன்று கோடியும்
செயலைக் குறிக்கும்
நான்காவது கோடி
சொல்லைக் குறிக்கும்
அதாவது
வாக்கு தவறாமையைக்
குறிக்கும்

ஒவையார் தன்னுடைய
நான்கு கோடி பாடலில்
முதல் செயலையும்
இரண்டாம் செயலையும்
செய்ய வேண்டாம்
என்றும்
மூன்றாம் செயலையும்
நான்காம் செயலையும்
செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொல்கிறார்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

--------- சுபம்
///////////////////////////////////////////////////


May 09, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15


               
          ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு- 15

நாம் நல்ல நிலைமைக்கு
வந்து விடுகிறோம்
நமக்கு உதவி செய்தவரை
மறந்து விடுகிறோம்
அவரை பார்த்து
பல மாதங்கள்
பல வருடங்கள்
கழிந்து விட்டன
காலம் ஓடி விட்டது

பல வருடங்கள் கழித்து
ஒரு நாள் நமக்கு
உதவி செய்தவர்
நம்மை சந்திக்க
வருகிறார்
அவர் நம்மை சந்தித்து
ஒரு உதவி கேட்கிறார்

பிஸ்னஸ் கொஞ்சம்
நஷ்டத்தில் ஓடுகிறது
நான் கஷ்டப்படுகிறேன்
கொஞ்சம் கடன்
ஆகிவிட்டது
கடனை அடைக்க
முடியவில்லை
குடும்பத்தை ஓட்டுவது
கஷ்டமாக இருக்கிறது
பல்வேறு நெருக்கடிக்கிடையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

எனக்கு
ஒரு காண்டிராக்ட்
கிடைத்தால்
நன்றாக இருக்கும்
அதை அனுமதி அளிப்பது
நீங்கள் தான் என்று
கேள்வி பட்டேன்
அதனால் நானே
நேரில் வந்தேன்
எனக்கு அந்த
காண்டிராக்ட்
உங்கள் முயற்சியால்
கிடைத்தால்
நான் சந்தோஷப்படுவேன்

கஷ்டத்தில் இருந்து
கொஞ்சம் விடுபடுவேன்
கடனை அடைத்து
விடுவேன்
குடும்பம் கொஞ்சம்
மகிழ்ச்சியாக இருக்கும்
நீங்கள் எனக்கு
உதவி செய்வீர்கள்
என்று வந்தேன்
நீங்கள் எனக்கு
அந்த காண்டிராக்டை
வாங்கித் தருவீர்களா
என்று கேட்கிறார்.

ஆனால் அந்த
காண்டிராக்டை பெறுவதில்
பயங்கரமான போட்டி
நிலவுகிறது
கோடிக்கணக்கில்
பணம் தருகிறோம்
எங்களுக்கு
அந்த காண்டிராக்டை
கொடுங்கள் என்று
நிறைய பேர்
நம்மை கேட்கிறார்கள்

நாம் வாழ வழி
இல்லாமல்
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்தபோது
நமக்கு உதவி
செய்தவருடைய
உதவியை
நினைத்துப் பார்த்து
கோடிக்கணக்கில்
பல்வேறு நபர்கள்
கொடுக்க
முன்வந்த நிலையிலும்
அதனை ஏற்றுக்கொள்ளாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
நாம் அந்த
காண்டிராக்ட்
கிடைப்பதற்கான
முயற்சிகள் செய்து
அவருக்கு
அந்த காண்டிராக்டை
கொடுக்கிறோம்

நீங்கள் செய்த
உதவியை நான்
மறக்க மாட்டேன்
உயிர் உள்ளவரை
நினைப்பேன்
என்று வாய் அளவில்
மட்டும் சொல்லாமல்
நமக்கு உதவி
செய்தவருக்கு
உதவி செய்வதற்கான
வாய்ப்பு வந்தபோது
நாம் உதவி செய்கிறோம்

இக்கட்டான சூழ்நிலையில்
நாம் இருக்கும் போது
நமக்கு உதவி
செய்தவர்களுடைய
உதவியை நாம்
என்றும் மறக்கக் கூடாது
அவர்களுக்கு நாம்
கொடுத்த வாக்குறுதியை
நாம் நினைவில் கொண்டு
அவர்களுக்கு நாம்
உதவி செய்யும்
காலம் வரும்போது
கண்டிப்பாக
உதவி செய்ய வேண்டும்
என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 08, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14



               
            ஔவையார்- நான்கு கோடி பாடல்-பதிவு-14

"""""கோடானு கோடி
கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

நாம் ஒருவரிடம்
சென்று
நான் ரொம்ப
கஷ்டப்படுகிறேன்
எனக்கு உதவி
செய்யுங்கள்
நான் படிப்பதற்கு
எனக்கு உதவி
செய்யுங்கள்
எனக்கு படிப்பதற்கு
உதவி செய்தால்
என் கஷ்டம்
குறைந்து
என் வீட்டை
பார்த்துக் கொள்ள
உதவியாக இருக்கும்

குடும்பத்தை பார்த்துக்
கொள்ள உதவியாக இருக்கும்
எனக்கு உதவி செய்யுங்கள்
என்று கேட்கிறோம்

அவர் நம்
ஏழ்மை நிலையை
அறிந்து
அவர் நம்மை
படிக்க வைப்பதற்கு
தேவையான பொருள்
உதவி அளித்து
வழிகாட்டி
படித்து முடித்தவுடன்
நமக்கு
அது சம்பந்தமாக
நல்ல வேலைக்கு
ஏற்பாடு செய்து
வேலை
வாங்கித் தருகிறார்.

நமக்கு உதவி செய்தவர்
நல்ல வேலைக்கு
வந்து விட்டாய்
உன்னை
உன் குடும்பத்தை
நன்றாக
பார்த்துக் கொள்
என்று அறிவுரை
கூறுகிறார்

நீங்கள் செய்த
இந்த உதவியை
நான்
உயிர் உள்ளவரை
மறக்கவே மாட்டேன்
நீங்கள் செய்த
உதவியை
என்றுமே
மறக்க மாட்டேன்
என்று சொல்கிறோம்

அதுமட்டுமல்லாமல்
பிற்காலத்தில்
உங்களுக்கு
ஏதேனும் உதவிகள்
தேவைப்பட்டால்
நான் எங்கிருந்தாலும்
உங்களை தேடி வந்து
உதவிகள் செய்வேன்
என்கிறோம்

நாம் தொடர்ந்து
முயற்சி செய்து
உயர்ந்த பதவிக்கு
வந்து விடுகிறோம்,


---------- இன்னும் வரும்
/////////////////////////////////////////////////////


May 07, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-13



            ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-13

அதைப்போல
நமக்கு ஒரு ஆபத்து
என்றாலும்
நமக்கு ஒரு துன்பம்
என்றாலும்
நமக்கு ஒரு கெடுதல்
என்றாலும்
நமக்கு ஒரு சோகம்
என்றாலும்
ஓடோடி வருவதும்
துயரை துடைப்பதும்
நம்முடைய
சொந்தக்காரர்கள் தான்

வாழ்க்கையில் சந்தோஷம்
என்றாலும்
சோகம் என்றாலும்
அதில் கலந்து கொண்டு
நமக்கு ஆதரவாக
இருப்பவர்கள்
நம்முடைய சொந்தக்
காரர்கள் தான்.

நம்முடைய நண்பர்கள்
நமக்கு
கோடி ரூபாய் மதிப்புடைய
உதவிகள் செய்து
இருந்தாலும்
அல்லது
கோடி பொன் மதிப்புடைய
உதவிகள் செய்து
இருந்தாலும்
வீட்டில் நல்லது
நடந்தாலும்
அல்லது
கெட்டது நடந்தாலும்
நமக்கு
சொந்தக் காரர்களின்
தயவு தேவை,

நம்முடைய நண்பர்கள்
நமக்கு
கோடி ரூபாய்க்கு
சமமான உதவிகள்
செய்து இருப்பினும்
நாம் நம்முடைய
சொந்தக் காரர்களுடன்
நாம் சேர்ந்து இருக்க
வேண்டும்

எனவே,
சொந்தக் காரர்களுடன்
எவ்வளவு தான்
சண்டை இருந்தாலும்,
மனக் கசப்பு இருந்தாலும்
எங்கிருந்தாலும்
எந்த ஊரில் இருந்தாலும்
எந்த நாட்டில் இருந்தாலும்
நமக்கும்
நம்முடைய
சொந்தக்காரர்களுக்கும்
இடையே உள்ள
பகைமை
உணர்ச்சியை நீக்கி
சுமூகமாக உறவுடன்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து இருக்க
வேண்டும்

சொந்தக் காரர்களுடன்
நட்புடன்
பிணைந்தே இருக்க
வேண்டும்

கோடி ரூபாய்க்கு
சமமான உதவிகளை
நம் நண்பர்கள் செய்து
இருந்த போதிலும்
சொந்தக்காரர்களுடன்
இணைந்து இருக்கக்கூடிய
இந்த செயல் தான்
கோடி ரூபாய் பெறும்
அல்லது
கோடி பொன் பெறும்
என்கிறார் ஔவையார்

இது மூன்றாம் செயல்
இது மூன்றாம் கோடி
பெறும் செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
இது செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொன்ன செயல்

ஔவையார்
செய்ய வேண்டும்
என்று சொன்ன
நான்காவது செயல்
என்ன என்று
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////