May 16, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-2


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-2

மக்கள் நடமாட்டம்
அதிகம் இல்லாத
அடர்ந்த காட்டில்
ஒரு பகுதியில்
குடில் அமைத்து
ஒரு குருவும்
பல சீடர்களும்
வாழ்ந்து வந்தார்கள்

அவர்கள் அனைவரும்
அவர்களுக்கு என்று
ஒதுக்கப்பட்ட
அன்றாடபணிகள்
அனைத்தையும்
முடித்து விட்டு
மாலை வந்ததும்
ஒன்றாகக் குடிலில்
கூடுவார்கள்.

மாலை 06.00 மணிக்கு
குரு சீடர்களுக்கு
சொற்பொழிவின் மூலம்
ஆன்மீகக் கருத்துக்களையும்,
கடைபிடிக்க வேண்டிய
ஒழுக்கங்களையும்,
பின்பற்ற வேண்டிய
பழக்க வழக்கங்களைப்
பற்றியும் சொற்பொழிவு
ஆற்றுவார்

அவ்வாறு ஒரு நாள்
குரு சொற்பொழிவு
ஆற்றிக் கொண்டிருக்கும்போது
ஒரு பூனை அங்கும்
இங்கும் ஓடியது,
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது

இரண்டாம் நாள்
குரு பேசும்போதும்
முதல் நாள் வந்த
அந்த பூனையே
மீண்டும் அந்த
குடிலைச்சுற்றி
சுற்றி வந்தது
குருவின் பேச்சுக்கு
இடையூறாக இருந்தது
எனவே, குரு
அந்த பூனையை பிடித்து
தன் பேச்சு
முடியும் வரை.
தூணில் கட்டி
வைக்கச் சொன்னார்

மூன்றாம் நாளும்
அந்த பூனை
இடையூறு செய்தது
குரு தன்
சீடர்களை நோக்கி
நாளை முதல் நான்
பேச்சை ஆரம்பிப்பதற்கு
முன்னர் அந்த பூனை
எங்கிருந்தாலும் கண்டு
பிடித்து கொண்டு வந்து
என் கண்ணில் படுமாறு
பூனையை தூணில்
கட்டி வைக்க வேண்டும்
என்று ஆணை இட்டார்

அவ்வாறே நான்காம் நாள்
சீடர்களும் குரு பேச்சை
ஆரம்பிப்பதற்கு முன்
பூனையை
தேடிக்கண்டு பிடித்து
குருவின் பார்வையில்
படும்படி
குருவின் அருகில் உள்ள
ஒரு தூணில் கட்டி
வைத்து விட்டனர்.

இவ்வாறே தொடர்ந்து
வந்த நாட்களிலும்
குரு உரை ஆற்றும் முன்னர்
சீடர்கள் பூனை எங்கிருந்தாலும
அதை தேடிக்கண்டுபிடித்து
பிடித்து வந்து
குருவின் அருகில்
உள்ள ஒரு தூணில்
குரு கண்ணில் படுமாறு
கட்டி வைத்து விட்டனர்

சிறிது நாட்கள் கழிந்த பின்பு
குரு இறந்து விட்டார்
அதே நாளில் அந்த
பூனையும் இறந்து விட்டது
எனவே குருவுக்கு சமாதி
வைக்கும் போது
குரு அருகிலேயே
பூனையையும் அடக்கம்
பண்ணி விட்டனர்.

குருவுக்கு செய்ய
வேண்டிய காரியங்கள்
அனைத்தும்
முடிந்த பின்பு
அடுத்த ஒருவர்
குரு என்ற நிலைக்கு
வந்தார்.

அவர் முதல் நாள்
மாலை பேச ஆரம்பிக்கும்
போது கோபத்துடன்
சீடர்களை நோக்கி
குரு பேசும்போது
தூணில் ஒரு பூனை
கட்ட வேண்டும்
என்ற முறை உங்களுக்கு
தெரியாதா
முதலில் ஒரு பூனையை
பிடித்து வாருங்கள்
அதை அந்த
தூணில் கட்டுங்கள்
நான் பேசுகிறேன் என்றார்

தனக்கு முன்னால்
இருந்த குரு
பேசும் போது
பூனையை எதற்காக
தூணில் கட்டி வைத்தார்
என்ற விவரம் கூட
தெரியாமல்
அடுத்த வந்த குரு
தனக்கு முன்னால்
இருந்த குரு பின்பற்றிய
அதே முறையை
பின்பற்றி
தான் பேசும் போதும்
பூனையை தன் கண்ணில்
படுமாறு தூணில்
கட்டி வைக்கச் சொல்கிறார்.

இதைப்போலத் தான் நாம்
நம்முடைய முன்னோர்கள்
நமக்கு சொல்லி
விட்டுச் சென்ற
பழக்க வழக்கங்களில்
உள்ள அர்த்தம்
சரியா தவறா
என்று புரியாமல் நாம்
சடங்குகளையும்
பண்டிகைகளையும்
விழாக்களையும்
பின்பற்றி வருகிறோம்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 15, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-1


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-1

கொண்டு வந்தால் தந்தை ;
கொண்டு வந்தாலும்
வராவிட்டாலும் தாய் ;
சீர் கொண்டு வந்தால் சகோதரி ;
கொலையும்  செய்வாள் பத்தினி ;
உயிர் காப்பான் தோழன் ;

      -----எழுதிய ஆசிரியர்
         பெயர் தெரியவில்லை

இந்த சமுதாயத்தை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : முன்னோர்கள் சொல்லிச்
        சென்ற பழக்கவழக்கங்களை
         நம்புகிறவர்கள்

இரண்டு : முன்னோர்கள் சொல்லிச்
          சென்ற பழக்க வழக்கங்களை
         நம்பாதவர்கள்

சமுதாயத்தில் இருக்கும்
சடங்குகளை
பண்டிகைகளை
விழாக்களை
நாம் எதற்காக
கொண்டாடுகிறோம்
என்று கூட தெரியாமல்
அதில் உள்ள உண்மை
அர்த்தம் புரியாமல்
நாம் தொடர்ந்து
கண்ணை மூடிப்
பின்பற்றி வருகிறோம்

நம்பியவர்கள்
அவைகளை
நம்பிக்கையுடன்
இதில் ஏதாவது
அர்த்தம் இருக்கும்
நம் முன்னோர்கள்
நாம் நன்றாக
வாழ வேண்டும்
என்பதற்காக தான்
இதை உண்டாக்கி
வைத்து இருப்பார்கள்
என்ற நோக்கத்துடன்
அதில் உள்ள அர்த்தம்
புரியா விட்டாலும்
நம் முன்னோர்களின்
மேல் உள்ள
நம்பிக்கையினால்
அதை பின்பற்றி
வருபவர்கள்
முதல் பிரிவினர்.

நாம் கொண்டாடும்
சடங்குகள்
பண்டிகைகள்
விழாக்கள்
ஆகியவற்றில்
எந்தவித அர்த்தமும்
கிடையாது
அது மூட நம்பிக்கை
என்று அதை
கிண்டல் ,கேலி
செய்வதுடன்
அதை கொண்டாடுபவர்களை
அதாவது நம்முடைய
முன்னோர்களின்
பழக்க வழக்கங்களை
பின்பற்றுபவர்களை
கிண்டல், கேலி
செய்து வருபவர்கள்
இரண்டாம் பிரிவினர்.

நம் முன்னோர்கள்
ஒன்றும்
முட்டாள்கள் அல்ல
நாம் பின்பற்றும்
பழக்கவழக்கங்கள்
நம் வாழ்க்கையுடன்
ஒன்றுபட்டு
நமக்கு பயன் அளிக்கும்
என்ற நிலையில் தான்
வாழ்வியலை ஒட்டி
சடங்குகளையும்,
பண்டிகைகளையும்,
விழாக்களையும்,
உண்டாக்கி வைத்தனர்.

நாம் கண்ணை மூடி
பின்பற்றாமல் அதில் உள்ள
ஆழ்ந்த அர்த்தங்களை
புரிந்து கொண்டு
பயன்படுத்த வேண்டும்

அது மட்டுமல்லாமல்
மூடப் பழக்கம் என்று
கிண்டல், கேலி
செய்பவர்களையும்
அந்த பழக்கவழக்கங்களில்
உள்ள உள்ளளார்ந்த
அர்த்தத்தை சொல்லி
விளங்க வைக்க வேண்டும்

நம்புகிறவர்களுக்கே
அதில் உள்ள அர்த்தம்
தெரியாமல் பின்பற்றும்போது
நம்பாதவர்களுக்கு
எப்படி சொல்லி
புரிய வைக்க முடியும்

அதனால் தான்
சமுதாயம் இரண்டாக
பிரிந்து கிடக்கிறது
முன்னோர்களின்
பழக்க வழக்கங்களை
நம்புகிறவர்கள்
முன்னோர்களின்
பழக்கவழக்கங்களை
நம்பாதவர்கள்
என்ற இரண்டு பிரிவுகள்
ஏற்படக் காரணமாக
இருக்கிறது

முன்னோர்களின் பழக்க
வழக்கங்களை நம்புகிறவர்கள்
அதில் உள்ள அர்த்தத்தை
தெரிந்து கொண்டு
பின்பற்றுவார்களேயானால்
நம்பாதவர்களுக்கும்
அதை சொல்ல முடியும்
அதை விளக்க முடியும்

முன்னோர்களின் பழக்க
வழக்கங்களில் உள்ள
அர்த்தத்தை நாம்
தெரிந்து கொள்ள
முயற்சி செய்வோம்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////


May 13, 2018

உலக அன்னையர் தினம்-13-05-2018


உலக அன்னையர் தினம்-13-05-2018

“””””ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
   சான்றோன் எனக்கேட்ட தாய்”””””
                         -----திருக்குறள்

பாராட்டு இரண்டு விதங்களில்
வழங்கப்படுகிறது

ஒன்று : படிப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு
இரண்டு : உழைப்பதினால் கிடைக்கும்
         பாராட்டு

ஒரு மாணவன்
ஒரு வகுப்பில்
அனைத்து மாணவர்களையும்
விட படித்து
முதல் வகுப்பில் தேர்ச்சி
பெற்றால் அதற்கு
அளிக்கப்படும் பாராட்டு
படிப்பதினால் கிடைக்கும் பாராட்டு

விளையாட்டுப் போட்டியில்
ஒருவன் அனைவரையும்
தோற்கடித்து
முதலில் வந்தால்
கிடைக்கும் பாராட்டு
உழைப்பின் மூலம்
கிடைக்கும் பாராட்டு

இந்த பாராட்டு நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு
படிப்பு என்று எடுத்துக்  கொண்டாலும்
உழைப்பு என்று எடுத்துக் கொண்டாலும்
அளிக்கப்படும் பாராட்டு
மாறிக்கொண்டே இருக்கும் பாராட்டு

படிப்பிலும், உழைப்பிலும்
முதலிடம் பெறுவது என்பது
மாறிக்கொண்டே இருக்கும்
இன்று ஒருவர் முதலில் வருபவர்
நாளை வேறொருவர் முதலில் வருவார்
இது நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

இந்த நிலையில்லாத பாராட்டைக்
கேட்டு எந்த தாயும் மகிழ மாட்டாள்

பாராட்டை இரண்டு நிலைகளில்
பிரிக்கலாம்
ஒன்று  : நிலையில்லாத பாராட்டு
இரண்டு : நிலையான பாராட்டு

படிப்பதின் மூலமும்,
உழைப்பின் மூலமும்
பெறப்படும் பாராட்டு
நிலையில்லாத பாராட்டு
மாறிக் கொண்டே இருக்கும் பாராட்டு

குணத்தின் மூலம் பெறப்படும்
பாராட்டே
நிலையான பாராட்டு

அடுத்தவர் கண்ணில் வரும்
கண்ணீரைக் கண்டு
எதற்காக அந்த கண்ணீர் வருகிறது
என்பதை அறிந்து அந்த
கண்ணீருக்கு காரணமான துன்பத்தை
நீக்க ஓடோடி சென்று உதவி செய்யும்
கருணை உள்ளம் கொண்டு
அன்பு காட்டி உதவி செய்பவன்
தன் மகன் என்று பிறர் சொல்ல
கேட்கும் போது
ஒரு தாய் மகிழ்கிறாள்

சான்றோன்
என்றால் அறிவாளி என்று பொருள்
கொள்ளக் கூடாது
சான்றோன் என்றால்
உயர்ந்த குணங்களைக் கொண்டவன்
என்று பொருள் கொள்ள வேண்டும்

பிறர் துன்பம் கண்டு
வருத்தப்பட்டு அதை துடைக்க
ஓடுபவன் தன் மகன்
என்று பிறர் சொல்லும் போது
எவ்வளவு பெரிய
உயர்ந்த குணத்தைக் கொண்ட
மகனைப் பெற்று இருக்கிறேன்
என்று ஒரு தாய்
அவனைப் பெறும் போது
அடைந்த மகிழ்ச்சியை
விட அதிக மகிழ்ச்சி
அடைவாள்

என்பது தான்

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

என்பதற்கான அர்த்தம்

அன்னையர் தின வாழ்த்துக்கள் – 13-05-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்



May 10, 2018

ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்


           ஔவையார்-நான்கு கோடி பாடல்- பதிவு-16-சுபம்

நிறைய நபர்கள்
போட்டியாக இருந்து
கோடிக்கணக்கில் பணம்
தருகிறோம் என்று
சொல்லியும்
அவைகளை மனதில்
கொள்ளாமல்
பணத்திற்கு ஆசைப்படாமல்
கொடுத்த வாக்கு
தவறாமல்
உதவி செய்தவருக்கு
உதவி செய்யும்
நம்முடைய
அந்த செயல்
கோடி ரூபாய் மதிப்பு பெறும்
அல்லது
கோடி பொன் மதிப்பு பெறும்
என்று நினைக்க
வேண்டாம்

இது நான்காம் செயல்
இது நான்காம் கோடி
பெறும் செயல்
இது செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொன்ன செயல்
இது கோடி ரூபாய்
பெறும் செயல்
அல்லது
இது கோடி பொன்
பெறும் செயல்
என்று
நினைக்க வேண்டாம்
இது கோடி  புண்ணியம்
பெறும் செயல்

முதல் மூன்று செயல்களும்
கோடி மதிப்பிலான பணமோ
அல்லது
கோடி மதிப்பிலான பொன்னோ
பெறக்கூடிய செயல் ஆகும்

ஆனால்
நான்காவது செயல் மட்டும
கோடி புண்ணியம் பெறும்
செயல்

நாம் ஒருவருக்கு
நல்லது செய்வதாக
வாக்கு கொடுத்து
வாக்கு தவறாமல்
நாம் சொன்னதை
செய்வது என்பது
கோடி புண்ணியம்
கொண்டதாகும்

வாழ்வில்
எத்தனை செயல்கள்
செய்தாலும்
எல்லா செயல்களையும்
விட உயர்வான செயல்
வாக்கு தவறாமை ஆகும்

அதனால் தான்
மற்ற செயல்களான
மூன்று செயல்களையும்
கோடி பணத்திற்கோ
அல்லது
கோடி பொன்னிற்கோ
ஒப்பிட்ட
ஔவையார்
நாக்கோடாமையை
அதாவது
வாக்கு தவறாமையை மட்டும்
கோடி புண்ணியத்திற்கு
ஒப்பிட்டு சொல்கிறார்.

இது தான்
நான்கு கோடி பாடல்
இந்த பாடலை
நன்கு உற்று பார்த்தால்
நான்கு கோடியும்
ஒன்றுடன்
ஒன்று தொடர்பு
கொண்டிருப்பது தெரியும்

முதல் கோடி
வரவேற்பையும்
இரண்டாவது கோடி
உபசரிப்பையும்
மூன்றாவது கோடி
உறவு முறையையும்
நான்காவது கோடி
உறுதி மொழியையும்
குறிக்கும்

முதல் மூன்று கோடியும்
செயலைக் குறிக்கும்
நான்காவது கோடி
சொல்லைக் குறிக்கும்
அதாவது
வாக்கு தவறாமையைக்
குறிக்கும்

ஒவையார் தன்னுடைய
நான்கு கோடி பாடலில்
முதல் செயலையும்
இரண்டாம் செயலையும்
செய்ய வேண்டாம்
என்றும்
மூன்றாம் செயலையும்
நான்காம் செயலையும்
செய்ய வேண்டும்
என்று ஔவையார்
சொல்கிறார்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்

--------- சுபம்
///////////////////////////////////////////////////