June 25, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-31



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-31

எண்ணம், சொல்,
செயலால்
பிற உயிர்களின்
உயிருக்கும், உடலுக்கும்
துன்பத்தை விளைவிக்கக்
கூடியவை அனைத்தும்
பாவம் எனப்படும்

பொய் பேசுதல்,
பொய் சாட்சி சொல்லுதல்,
பிறரை ஏமாற்றி பணம்
சம்பாதித்தல்,
பிறருடைய நிலத்தை
அபகரித்தல்,
பிறருடைய வீட்டை
ஏமாற்றி வாங்கிக்
கொள்ளுதல்,
நம்பிக்கை துரோகம்
செய்தல்,
கொலை செய்தல்,
பிறர் பொருட்களை
திருடுதல்,
ஊர் மக்களை
எமாற்றி கொள்ளை
அடித்தல்,
பிறன்மனை நோக்குதல்,
இன்னும் பல
குற்றங்களும்
பாவத்தில்  வரும்

மனிதன் தெரிந்து
செய்த பாவங்களையும்,
தெரியாமல் செய்த
பாவங்களையும்,
ஆராய்ந்து பார்த்தால்
அவைகள் அனைத்தும்
பொய், சூது, கொலை,
கொள்ளை,
கற்பு நெறி பிறழ்தல்
என்ற ஐந்து
நிலைகளுக்குள்
தான் இருக்கும்
என்பதை
நாம் அறிந்து
கொள்ளலாம்

ஒரு(1)
மனிதன்
பாவம், புண்ணியம்
என்ற
இரண்டு(2)
செயல்ளைச் செய்தாலும்
பாவத்தை
அறியாமை, அலட்சியம்,
உணர்ச்சி வயப்படுதல்
என்ற
மூன்று(3)
நிலைகளில் இருந்து
செய்கிறான்

அதனால் மனிதனுக்கு
இன்பம், துன்பம்
அமைதி, பேரின்பம்
என்ற
நாலறிவு(4)
என்று சொல்லப்படக்
கூடியவைகள்
எப்படி உண்டாகின்றன
என்பதை
தன் வாழ்வில்
அறிய முடியாமலேயே
மனிதன்
போய் விடுகிறான்

இதனால் மனிதன்
பஞ்சமா
பாதகங்கள்
என்று சொல்லப்படக்
கூடிய
பொய், சூது,
கொலை, கொள்ளை
கற்புநெறி பிறழ்தல்
ஆகிய
ஐந்து(5)
பாவங்களை
மனிதன்
காம, குரோத, லோப,
மோக, மத, மாச்சரியம்
என்று சொல்லப்படக்
கூடிய
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற பால்கவர்ச்சி.
உயர்வு தாழ்வு
மனப்பான்மை.
வஞ்சம்  
என்ற
ஆறு(6)
குணங்களைக் கொண்டு
பாவங்களைச் செய்கிறான்
அதனால் மனிதன்
ஏழு(7)
ஜென்மத்திற்கும்
துன்பங்களை
அனுபவித்து
கஷ்டப்படுகிறான்
இதனால் மனிதனுக்கு
நிம்மதி, அமைதி
இன்பம், நோயற்ற வாழ்க்கை
என்பது
எட்டும்(8)
கனியாக இல்லாமல்
எட்டாக் கனியாகி
விடுகிறது
இதனால் மனிதன்
ஒன்பது(9)
ஓட்டைகளைக் கொண்ட
இந்த உடலைக்
கொண்டு
துன்பங்களை அனுபவித்து
பிறவி தோறும்
கஷ்டங்களில் உழன்று
இறக்கிறான்
பசி வந்தால்
எப்படி
பத்தும்(10)
பறந்து போகுமோ
அதைப்போல
மனிதன் பாவம்
செய்தால்
அவனிடமிருந்து
நிம்மதி போய் விடும்

என்பதை
மனிதன்
உணர்ந்து கொண்டால்
பாவம் செய்யாமல்
இருப்பான்
உணர்ந்து கொள்ளவில்லை
என்றால்
மனிதன் தொடர்ந்து
பாவம் செய்து
கொண்டே இருப்பான்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////



June 23, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-30



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-30

இயேசுவே
விபச்சாரத்தில் ஈடுபட்ட
இந்த பெண்
கையும் களவுமாக
பிடிபட்டாள் என்று
மக்கள் ஒரு பெண்ணை
பிடித்து வந்தனர்.

இப்படிப்பட்டவர்களை
கல்லால் எறிந்து
கொல்ல வேண்டும்
என்பது மோசஸ்
நமக்கு கொடுத்த சட்டம்
நீர் இது பற்றி
என்ன சொல்ல வருகிறீர்
என்றார்கள் மக்கள்

மோசஸ் கூறியது
நியாயமல்ல
கல்லால் அடித்துக்
கொல்லக் கூடாது என்று
இயேசு கிறிஸ்து
சொன்னார் என்றால்
நீங்கள் மோசஸ்
உருவாக்கி வைத்த
சட்டதிட்டங்களை
அழிக்கப் பார்க்கிறீர்
நீங்கள் மோசஸை
எதிர்க்கவும்,
எங்கள் மதத்தை
குலைக்கவும்
களங்கப்படுத்தவும்
பார்க்கிறீர்கள்
என்று இயேசுவை
குற்றம் சுமத்தி விடலாம்

மோசஸ் சொல்லியுள்ளபடி
கல்லால் அடித்து
அந்த பெண்ணை
கொல்லாம் என்று
இயேசு கிறிஸ்து
சொன்னார் என்றால்
அன்பு, கருணை என்று
நீங்கள் சொன்னதெல்லாம்
சுத்த பொய்
நீங்கள் சொன்ன
அன்பு எங்கே போயிற்று
கருணை எங்கே போயிற்று
இயேசு
சொன்னதெல்லாம் பொய்
அன்பு, கருணை
என்று நம்மை
நடித்து ஏமாற்றியிருக்கிறார்
அவருக்கு உயிரின் மேல்
அக்கறை இல்லை
என்று அவரை
குற்றம் சுமத்தி விடலாம்

இயேசு கிறிஸ்து
எந்த பதில் சொன்னாலும்
அவரை குற்றம்
சுமத்தி விடலாம்
என்று ஒரு கூட்டம்
இயேசுவின் பதிலுக்காக
காத்துக் கொண்டிருந்தது

ஒருவர் கோபப்பட்டு
இருக்கும் போது
கோபப்பட்டவருடைய
கண்ணை
நேருக்கு நேராக
பார்க்க கூடாது
நேருக்கு நேராக பார்த்தால்
கோபப்பட்டவருக்கு
மேலும் கோபம்
ஏற்பட வாய்ப்பு உள்ளது

எனவே தான் இயேசு
கோபப்பட்டு நின்று
கொண்டிருந்த
மக்களை நேருக்கு
நேராக பார்க்காமல்
தரையில்
ஏதோ ஒன்றை
எழுதிக் கொண்டு
இருந்தார்

இயேசு தலையை
நிமிர்த்தி
மக்களைப் பார்த்து
“””””””உங்களில் பாவம்
செய்யாதவன் முதலில்
அவள் மேல் கல்
எறியட்டும்”””””””
என்று கூறி விட்டு
மீண்டும் தரையில்
எழுதத் தொடங்கினார்

இரண்டு பதில்களில்
எந்த பதில் சொன்னாலும்
இயேசுவை
குற்றவாளியாக்கி விடலாம்
என்று நினைத்த
ஒரு கூட்டம்
இயேசுவின் பதிலைக்
கேட்டு அமைதியானது

இயேசு
மோசஸ் சொல்லிச் சென்ற
சட்டதிட்டங்களுக்கு
எதிராக எதையும்
கூறவில்லை
அதேபோல்
இயேசு போதித்து வந்த
அன்பு, கருணைக்கு
பாதிப்பு வரும் வண்ணமும்
எதுவும் சொல்லவில்லை

எக்காலத்துக்கும் பொருந்தும்
ஒரு வாக்கியத்தை
அருமையாக சொன்னார்
இயேசு கிறிஸ்து
உங்களில் பாவம்
செய்யாதவன் முதலில்
அவள் மேல் கல்
எறியட்டும் என்று

வயதானவர்கள்
முதலில் கல்லை
தரையில் எறிந்து விட்டு
அந்த கூட்டத்தை
விட்டு வெளியேனார்கள்
நீண்ட காலம் வாழ்ந்ததால்
அவர்கள் அதிக அளவில்
பாபம் செய்து இருப்பார்கள்
எனவே அவர்கள் முதலில்
வெளியேறினார்கள்,

அடுத்து
இளவயது நிரம்பியவர்கள்
வெளியேறினார்கள்
குறைந்த காலமே
வாழ்ந்திருக்கிறார்கள்
எனவே குறைந்த அளவே
பாவம் செய்திருப்பார்கள்

இயேசு கிறிஸ்துவை
பொறியில் மாட்டி
வைக்க நினைத்தவர்கள்
அவர்களாகவே பொறியில்
மாட்டிக் கொண்டார்கள்

நாம் பிறரை
குற்றம் சுமத்துவதற்கு முன்
நம் குற்றத்தை நாம்
பார்க்க வேண்டும்
என்ற நீதியும்
பாவத்தைப் பற்றியும்
இந்த நிகழ்வில்
சொல்லப்படுகிறது

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////


June 22, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-29


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-29

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களைப் பற்றி
அறிந்து கொள்ள வேண்டுமானால்
நாம் நிறைய விவரங்களை
தெரிந்து கொள்ள
வேண்டியது அவசியமாகிறது,

உலகம் முழுவதும்
மனிதனால் செய்யப்படும்
பாவங்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று   : தெரிந்து
          செய்யும் பாவம்
இரண்டு : தெரியாமல்
          செய்யும் பாவம்

தெரிந்து
செய்யும் பாவத்தை
நேரடியாக செய்யும்
பாவம் என்றும்
தெரியாமல்
செய்யும் பாவத்தை
மறைமுகமாக
செய்யும் பாவம்
எனறும் சொல்லலாம்

ஒருவர் பாக்கெட்டில்
கொஞ்சம் பணம்
வைத்திருக்கிறார்  
அவருக்கு தெரியாமல்
அவருடைய பாக்கெட்டில்
வைத்திருக்கும்
பணத்தை திருடுவது
தெரிந்து செய்யும்
பாவம் அதாவது
நேரடியாக செய்யும்
பாவம்

குடும்பத் தலைவர்
ஒருவர் தினமும்
மதுபானம்
அருந்தி விட்டு
வருகிறார்
வீட்டை கவனிக்காமல்
மனைவி, மக்களைக்
கவனிக்காமல்
இருக்கிறார்.
சாப்பாட்டிற்காகவும்
குடும்பத்தை
நடத்துவதற்காகவும்
மனைவி, மக்கள்
மிகுந்த துயரம்
அடைகிறார்கள்
குடும்பத்தை
நடத்தமுடியாமல்
கஷ்டப்படுகிறார்கள்.

தான் மது அருந்துவதால்
தன்னுடைய குடும்பம்
பாதிக்கப்படுகிறது
தன்னுடைய மனைவி
மக்கள் கஷ்டப்படுகிறார்கள்
என்ற எண்ணம்
சிறிது கூட இல்லாமல்
மதுபானம் அருந்தும்
கெட்ட பழக்கமான
அதே தவறை செய்கிறார்
குடும்பத் தலைவர்.

இது தெரியாமல்
செய்யும் பாவம்
அதாவது மறைமுகமாக
செய்யும் பாவம்

பாவங்களில்
முக்கிய பாவமாக
கருதப்படுவது
நம்பிக்கை துரோகம்
நம்பிக்கை துரோகத்தை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : எதிர்பார்த்து
        காத்துக்
        கொண்டிருக்கும்போது
        செய்த நம்பிக்கை
        துரோகம்

இரண்டு : எதிர்பார்க்காமல்
          இருக்கும் போது
          செய்த நம்பிக்கை
          துரோகம்

ஒருவர் தன் மகளுக்கு
திருமணம் செய்ய
நாள் குறித்து விட்டு
திருமணம் செய்ய
தன் நண்பரிடம்
திருமணத்திற்காக
கொஞ்சம் பணம்
கடன் கேட்டார்
நண்பரும் தருகிறேன்
தருகிறேன் என்று
சொல்லி விட்டு
கடைசியில் பணம்
கொடுக்காமல்
ஏமாற்றி விடுகிறார்
  
கடைசியில் அவர்
வேறு ஒருவரிடம்
கடன் வாங்கி
திருமணத்தை முடித்து
விடுகிறார்
  
இது தான்
எதிர்பார்த்து காத்துக்
கொண்டிருந்து போது செய்த
நம்பிக்கை துரோகம்

நாம் ஒரு வியாபாரம்
செய்கிறோம்
நம்பிக்கையான நபர்
என்று ஒருவரை
சேர்த்துக் கொள்கிறோம்
அவருக்கு வியாபாரம்
பற்றிய எல்லா
விஷயங்களையும்
கற்றுத் தருகிறோம்
வியாபார தந்திரங்களை
கற்றுத் தருகிறோம்
பல்வேறு வியாபாரிகளை
அறிமுகப் படுத்துகிறோம்
வெவ்வேறு வியாபாரிகளிடம்
எவ்வாறு பழக வேண்டும்
என்பதை கற்றுத் தருகிறோம்

பல ஆண்டுகள் நம்முடன்
இருந்து நம்முடன்
வியாபார நுணுக்கங்களை
கற்றுக் கொண்டவர்
நம் நம்பிக்கைக்கு
உரியவர் என்று நாம்
யாரை நினைத்துக்
கொண்டிருந்தோமோ அவர்
நம்மை விட்டு
பிரிந்து சென்று
நம்முடைய
விரோதியிடமே சேர்ந்து
நமக்கு எதிராக
வியாபாரம் செய்கிறார்

இது தான்
எதிர்பார்க்காமல்
இருக்கும் போது செய்த
நம்பிக்கை துரோகம்

 ----------இன்னும் வரும்
////////////////////////////////////////////


June 21, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-28



            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-28

வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்

பிற மதத்தவர்கள்
ஒன்றாகக் கூடி
வழிபாடு செய்யும்
வழிபாட்டுத்
தலங்களை அழிப்பது
இடித்து தரைமட்டமாக்கி
இல்லாமல் செய்வது
எரித்து இருந்த
இடம் தெரியாமல்
ஆக்குவது
பிற மதத்தவர்களின்
வழிப்பாட்டுத் தலங்களை
கைப்பற்றி
தங்கள் வழிபாட்டுத்
தலங்களாக மாற்றிக்
கொள்வது போன்ற
செயல்களையும்

பிற மதத்தவர்கள்
புனிதமாக் கருதும்
வழிபாட்டு
பொருட்களை எரிப்பது
வழிபாட்டுச் சின்னங்களை
இழிவு படுத்துவது
வழிபாட்டு
நூல்களை அழிப்பது
போன்ற செயல்களையும்

பிற மதத்தவர்கள்
வழிபாடு செய்யும்
கடவுள் உருவங்களை
சிதைப்பது
இழிவு படுத்துவது
அழிப்பது
போன்ற செயல்களையும்

பிற மதத்தின்
தெய்வங்களை வழிபாடு
செய்பவர்களின்
தலையை வெட்டுவது
கழுவேற்றி கொல்வது
உயிருடன் எரிப்பது
தூக்கிலிடுவது
துப்பாக்கியால் சுட்டுக்
கொல்வது
போன்ற செயல்களையும்
செய்வார்கள்

இத்தகைய
நினைத்து கூட
பார்க்க முடியாத
கொடுமையான செயல்களை
எந்தவித அச்சமுமின்றி
செய்து தாங்கள்
சார்ந்திருக்கும் மதத்தை
நிலைநிறுத்த
முயற்சி செய்வது
வெறியுடன் கடவுளை
வணங்குபவர்கள்
செய்யும் செயலாகும்.

அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
உலகில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
இந்தியாவில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
தமிழ்நாட்டில் நடைபெற்ற
வரலாறுகளை எடுத்துக்
கொண்டாலும் சரி
தங்கள் மதத்தை
நிலைநாட்ட
தங்கள் கடவுளை
வணங்க வைக்க
பிற மதம் மற்றும்
கடவுளை அழிப்பதை
குறிக்கோளாகக் கொண்டு
செயல்பட்டவர்கள்
கடவுளை வெறியுடன்
வணங்கியவர்கள்
என்பது தெளிவாகும்

தங்கள் மதத்தை
பிறரை பின்பற்றச் செய்ய
தங்கள் கடவுளை
பிறரை வணங்க வைக்க
உலக அளவில்
மூன்று வழிமுறைகள்
வரிசையாக கடை
பிடிக்கப்பட்டு
பின்பற்றப்பட்டு வருகிறது

முதலில்
தங்கள் மதத்தை
பற்றியும்
தங்கள் கடவுளைப்
பற்றியும்
மக்களிடையே சொல்லி
மதத்தையும், கடவுளையும்
பரப்ப முயற்சி செய்வார்கள்
மக்கள் நம்பவில்லை
என்றால்
இரண்டாவதாக
பிற மதத்தையும்
பிற மதத்தின்
கடவுள்களையும்
இழிவாகப் பேசுவார்கள்
இந்த முயற்சியிலும்
வெற்றி அடைய
முடியவில்லை என்றால்
மூன்றாவதாக
பிற மதத்தில்
உள்ளவர்களை
விலை கொடுத்து
வாங்குவார்கள்

மதத்தை பரப்ப
நினைப்பவர்கள்
இந்த முறையைப்
பின்பற்றித் தான்
தங்கள் மதத்தையும்
தங்கள் கடவுளையும்
பரப்பி வருகின்றனர்
என்பதை
நம்மைச் சுற்றி
நடைபெறும்
நிகழ்வுகளை வைத்து
நாம் அறிந்து
கொள்ள முடியும்

இத்தகைய நிகழ்வுகள்
அனைத்தும் கடவுளை
வெறியுடன்
வணங்குபவர்களால்
மட்டுமே
செய்யப்பட்டு வருகிறது

தன்னுடைய மதமே
உயர்ந்தது
தன்னுடைய தெய்வமே
உயர்ந்தது
பிற மதங்கள்
உயர்ந்தவை அல்ல
பிற மதத்தினுடைய
தெய்வங்கள்
உண்மையானது அல்ல
என்று சொல்பவர்கள் தான்
கடவுளை வெறியுடன்
வணங்குபவர்கள்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்
  
பயத்துடன்
கடவுளை வணங்குபவர்கள்
இதிலிருந்து மாறுபட்டவர்கள்

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்களை
அடுத்து பார்ப்போம்

--------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////