July 06, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37

குடிகாரன்
ஒருவனுக்கு குடிப்பதற்கு
பணம் வேண்டும்
மனைவியிடம் செல்கிறான்
மனைவியிடம் சண்டை
போட்டு அவளை
மிரட்டி அடிக்கிறான்
மனைவி
வைத்திருந்த பணத்தை
அவளிடமிருந்து பிடுங்கி
எடுத்துக் கொண்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு விட்டு
பணத்தை எடுத்துக்
கொண்டு செல்கிறான்

குடிகாரன் செய்த
இந்த பாவத்தின்
செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
விளைவு தானாகவே
வெளிப்படும்.

குடிகாரன் செய்த
பாவத்திற்குரிய
விளைவை
குடிகாரன்
அனுபவிக்கும்
காலம் வரும்போது
குடிகாரன்
நோக்கம், திறமை,
தொடர்பு கொள்ளும் பொருள்
காலம், இடம்
ஆகியவற்றைப் பொறுத்து
செயலுக்குரிய விளைவை
அனுபவிப்பான்.

குடிகாரன்
எந்த தவறான
காரியத்தை செய்தானோ
அதாவது
குடிகாரன்
மனைவியை மிரட்டி
அவளை அடித்து
பணத்தை பிடுங்கி விட்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு
சென்றானோ
அந்த செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
எத்தகைய தவறான
செயலைச் செய்தானோ
அதே மாதிரியான
துன்பத்தை தரக்கூடிய
விளைவானது
அப்படியே குடிகாரனுக்கு
வெளிப்படும்

அந்த குடிகாரன்
பணத்தை எடுத்துக் கொண்டு
காட்டின் வழியே
வீட்டிற்கு வந்து
கொண்டு இருக்கிறான்
திருடன் ஒருவன்
அவனிடம் கத்தியை
காட்டி மிரட்டி
அவனை அடித்து
பணத்தை
பிடுங்கிக் கொண்டு
குடிகாரனை கீழே
தள்ளி விட்டு
செல்கிறான்

இந்த நிகழ்வில்
நோக்கம் என்பது
திருடனுக்கு பணம்
வேண்டும் என்பது
திறமை என்பது
மிரட்டுவது
தொடர்பு கொள்ளும்
பொருள் என்பது
குடிகாரன்
காலம் என்பது
திருடனுக்கு பணம்
இல்லாத கஷ்டமான
காலம்
இடம் என்பது
வீட்டிற்கு வெளியே
யாரும் இல்லாத
இடம்

குடிகாரன் மனைவியை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
திருடன் குடிகாரனை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
ஒப்பிட்டு
பார்த்தோமேயானால்
செய்த
செயலுக்குரிய தன்மையும்
விளைவின் தன்மையும்
ஒன்றாக இருப்பதை
புரிந்து கொள்ளலாம்

குடிகாரனுக்கு பணம்
வேண்டும்
திருடனுக்கும் பணம்
வேண்டும்

குடிகாரன் மனைவியை
மிரட்டி அடித்தான்
திருடனும் குடிகாரனை
மிரட்டி அடித்தான்

குடிகாரன் மனையிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்

குடிகாரன் மனைவியிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன் அவளை
கீழே தள்ளி
விட்டு சென்றான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன்
அவனை கீழே
தள்ளி விட்டு சென்றான்

இரண்டு நிகழ்வுகளையும்
ஒப்பிட்டு நோக்கினால்
குடிகாரன் மனைவியிடம்
இருந்து
பணத்தை எடுக்க
பாவத்தை எத்தகைய
நிலையில்
செய்தோனோ
அப்படியே அந்த
பாவத்தின் விளைவு
திருடனின் மூலமாக
குடிகாரனுக்கு
வெளிப்பட்டதை 
அறிந்து கொள்ளலாம்

இந்த நிகழ்விலிருந்து
ஒன்றை தெரிந்து
கொள்ளலாம்
எந்த செயலைச் செய்தாலும்
அது பாவமாக இருந்தாலும் சரி
புண்ணியமாக இருந்தாலும் சரி
அதற்குரிய விளைவை
அனுபவித்தே ஆக வேண்டும்

எனவே,
செயலைச் செய்து விட்டு
யாரும் விளைவிலிருந்து
தப்ப முடியாது
என்பதை உணர்ந்து
நன்மையான செயல்களான
புண்ணியச் செயல்களை
மட்டுமே செய்து
நன்மைகளைப் பெற
நாம் முயற்சி
செய்ய வேண்டும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////


July 04, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 36


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 36

உலகில் மனிதர்கள்
அனைவரும்
செய்யும் செயல்களை
எல்லாம் இரண்டே
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று  : நன்மையான 
         செயல்கள்
இரண்டு : தீமையான
          செயல்கள்

நன்மையான செயல்களை
புண்ணியமான செயல்கள்
என்றும்,
தீமையான செயல்களை
பாவமான செயல்கள்
என்றும் சொல்லலாம்

ஒருவர் செய்யும்
செயலை வைத்து
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று சொல்ல முடியாது
செயலை எதற்காக
செய்தார் என்பதை
வைத்துத் தான்
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று சொல்ல
முடியும்

செய்த செயல்
நன்மையான பலனைத்
தந்தால்
புண்ணியம் என்றும்
அதைச் செய்த செயல்
நன்மையான செயல் என்றும்
தீமையான பலனைத்
தந்தால் பாவம் என்றும்
அதைச் செய்த செயல்
தீமையான செயல் என்றும்
செய்த செயல்
எதற்காக செய்தார்
என்பதை வைத்து
செய்த செயல்
நன்மையான செயலா
தீமையான செயலா
என்று தீர்மானம்
செய்யப்படுகிறது.

முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
என்ற செயலை வைத்து
இந்த செயல்
நன்மையான செயலா அல்லது
தீமையான செயலா என்று
சொல்ல முடியாது
எதற்காக இந்த
செயலை செய்தார்
என்பதைப் பார்க்க
வேண்டும்
முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
இரண்டாம் நபருடைய
குடும்ப கஷ்டம்
தீர வேண்டும்
என்பதற்காக
என்று பார்க்கும் போது
புண்ணியத்தை தரக்கூடிய
செயலை செய்கிறார்
எனவே இந்த செயலை
நன்மையான செயல்
என்று சொல்லலாம்

முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
என்ற செயலை வைத்து
இந்த செயல்
நன்மையான செயலா அல்லது
தீமையான செயலா என்று
சொல்ல முடியாது
எதற்காக இந்த
செயலை செய்தார்
என்பதைப் பார்க்க
வேண்டும்
முதல் நபர்
இரண்டாம் நபருக்கு
பணம் தருகிறார்
மூன்றாம் நபரை
கொலை செய்வதற்கு
என்று பார்க்கும்போது
பாவத்தை தரக்கூடிய
செயலை செய்கிறார்
எனவே இந்த செயலை
தீமையான செயல்
என்று சொல்லலாம்

நாம் எந்த
செயலைச் செய்தாலும்
புண்ணியச் செயலை
செய்தாலும்,
பாவச் செயலை
செய்தாலும்,
செய்யக்கூடிய
ஒவ்வொரு செயலுக்கும்
விளைவு உண்டு
செய்த செயலுக்குரிய
விளைவானது
அந்த செயலிலேயே
தொக்கி நிற்கும்
அதாவது
செய்த செயலிலேயே
செய்த செயலுக்குரிய
விளைவும் அதனுள்ளே
அடங்கி இருக்கும்
காலம் வரும்போது
செய்த செயலுக்குரிய
விளைவு தன்னால்
வெளிப்படும்.

நாம் ஒரு பாவத்தை
செய்தால்
பாவப்பதிவின் விளைவு
வெளியாக
வேண்டிய சந்தர்ப்பம்
வெளியாக வேண்டிய
காலம் வரும் போது
பாவத்தின் விளைவு
ஒரு சிறு துன்பமோ
அல்லது ஒரு
பெருந்துன்பமோ
தந்துவிட்டுத் தான்
செல்லும்

அதைப்போல்
நம்மிடம் பதிந்துள்ள
பதிவுகளின் விளைவுகள்
அனைத்தும்
விளைவுகள் வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
அவை வெளிப்படும்

செய்த
செயலுக்குரிய
விளைவுகள்
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
நோக்கம், திறமை,
தொடர்பு கொள்ளும் பொருள்
காலம், இடம்
ஆகியவற்றைப் பொறுத்து
செய்த செயலுக்குரிய
விளைவானது
உண்டாகி வெளிப்படுகின்றது

செய்த செயலுக்குரிய
விளைவானது
எவ்வாறு வெளிப்படுகிறது
என்பதைப் பற்றி
பார்ப்போம்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////

June 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35



              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-35

அமைச்சர்கள்
அரசரைப் பார்த்து
இதுவரை
ஆராய்ச்சி மணியை
பசு அடித்து
நீதி கேட்டதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
அதைப்போல
பசுவதைக்காக
மனிதனைக் கொன்றதாக
எந்த
வரலாற்றிலும் இல்லை
வழக்கிலும் இல்லை
என்றனர்.

பசுவின் துயரை
நீக்குந் திறமையில்லாத
நான் அதன்
துன்பத்தை அடைதலே
செய்யத் தக்கதாகும்
ஆகவே மகனை
இழந்து நான்
வாட வேண்டும்
அதற்காக என் மகன்
கொல்லப்பட வேண்டும்
என்று கூறி
காவலரை அனுப்பி
தன் மகனை வரவழைத்து
கொலை புரிந்தார்க்குரிய
நிலையில் நிறுத்தி
விசாரணை நடத்தி
முடித்தபின்
தன் அமைச்சர்களில்
ஒருவராகிய கலாவல்லபரை
நோக்கி அமைச்சரே
வீதிவிடங்கனை பசுவின்
கன்று இறந்த இடத்தில்
படுக்க வைத்து
அவன் மேல்
தேர் ஏற்றிக்
கொல்வாயாக என்றார்
மனுநீதிச் சோழன்

அமைச்சர் அந்த
இடத்தில் இருந்து
விலகிச் சென்று
சிறுமகனை எப்படி
கொல்வேன்
அரச கட்டளையை
எப்படி மீறுவேன்
சிறுமகனை நான்
கொல்வதும் குற்றம்
அரச கட்டளையை
மீறுவதும் குற்றம்
நான் என்ன
செய்வேன்
அரசவையில்
பலர் இருக்க
அரசர் என்னை ஏன்
தேர்ந்து எடுத்தார்
அரசன் மகனுக்காக
நானே உயிரை விடுவேன்
என்று சிந்தனை செய்து
கன்று இறந்த
இடம் சென்று
தன்னுயிரைத் தானே
துறந்து இறந்தார்
இச்செய்தியைத்
தூதர் மூலம்
கேட்டறிந்தார் அரசர்

என் மகன்
பசுவின் கன்றைக்
கொன்றான்
நான் அமைச்சரைக்
கொன்றேன்
என் நீதிநெறி
தவறாத ஆட்சி
நீதிநெறி தவறி விட்டதே
கன்றுக்காக மகனையும்
அமைச்சருக்காக நானும்
உயிரை விடுவதே
இனி நான்
செய்ய வேண்டிய
செயலாகும் என்று
மகனின் முகம்
நோக்காமல்
மகனிடம்
பசுவின் கன்று
இறந்த இடத்திற்கு
போய் படுக்குமாறு
கட்டளை இட்டார்

மகன் தந்தையின்
சொல் கேட்டு
கன்று இறந்த
இடத்திற்கு சென்று
மல்லாந்து படுத்துக்
கண்களை மூடிக்
கொண்டு படுத்தார்.

இந்நிகழ்வைக் கண்ட
மாந்தர்கள் அனைவரும்
ஐயோ இது என்ன
கொடுமை என்று
கதறி அழுதனர்

மனுநீதிச் சோழர்
சிவபெருமானை சிந்தை
செய்து தேரின் மீது ஏறி
மகன் உடம்பின் மீது
தேரை ஏற்றினார்.
வீதி விடங்கருடைய
உடல் தேர்ச்சக்கரத்தில்
சிக்குண்டு
அரைப்பட்டது சிதைந்தது

மக்கள் கண்ணிலிருந்து
கண்ணீர் பொழிய
விண்ணிலிருந்து
மலர்மாரி பொழிந்தது

சிவபெருமான்,
உமையம்மையாரோடு
காட்சி தந்து
மனுநீதி சோழா
உன் புகழ்
உலகமெல்லாம் ஓங்குக
உன் செங்கோல்
வாழ்க என்று
வாழ்த்தி அருள்
புரிந்தார்
சிவபெருமானின்
அருளால்
வீதிவிடங்கரும்,
பசுவின் கன்றும்,
அமைச்சரும்
உயிர் பெற்று எழுந்தனர்

இந்த அதிசயத்தைக்கண்டு
அனைவரும்
மகிழ்ச்சி அடைந்தனர்

ஒருவன்
தெரிந்து பாவம்
செய்தாலும்
தெரியாமல் பாவம்
செய்தாலும்
பாவத்திற்குரிய
தண்டனை கிடைக்கும்
என்பதையும்
ஒருவன்
குற்றம் செய்தால்
செய்த குற்றம்
கண்டுபிடிக்கப்பட்டால்
குற்றத்தை விசாரித்து
குற்றத்திற்குரிய
தண்டனையை வழங்கி
அந்த குற்றத்தை
செய்தவனை
உடனே அனுபவிக்கச்
செய்வான் அரசன்
என்பதையும்
அரசன் அன்றே
கொல்வான் என்பதற்கான
அர்த்தத்தையும்
இந்தக் கதையின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தக் கதைதான்
அரசன் அன்றே
கொல்வான்
என்பதற்கு அர்த்தம்

தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தத்தை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////