July 09, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-39


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-39

ஒருவன் தான்
செய்த பாவத்திற்குரிய
விளைவுகள்
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
தன்னுடைய சந்ததிகளையும்
பாதிக்கும் என்பதை
அனுபவ ரீதியாக
உணர்ந்து
தான் செய்த
பாவத்திற்குரிய விளைவானது
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
தன்னுடைய சந்ததிகளையும்
பாதிக்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
செய்யும் செயல்களை
மூன்று நிலைகளாக
பிரித்து விடலாம்

அதாவது
பாவங்களைப் போக்குவதற்காக
மனிதர்களால்
கையாளப்படும் முறைகளை
மூன்று நிலைகளில்
பிரித்து விடலாம்

1.பிராயச்சித்தம்
2.மேல் பதிவு
3.அடியோடு அழித்தல்

1.   பிராயச்சித்தம்
செய்த பாவத்தை
உணர்ந்து வருந்தி
இனிமேல் பாவம்
செய்யக்கூடாது
என்று முடிவெடுத்து
அன்னதானம் செய்வது
கன்னிப் பெண்களுக்கு
திருமணம் செய்வது
ஏழைகளுக்கு உதவுவது
போன்ற பல்வேறு
செயல்களைச் செய்து
பாவத்திற்குரிய
விளைவைக் குறைக்க
பாவத்தின் விளைவு
தங்களை பாதிக்காமல்
இருப்பதற்காக
செய்வது தான்
பிராயச்சித்தம் எனப்படும்.

2.   மேல்பதிவு
செய்த பாவத்தினால்
விளையும் துன்பங்கள்
தன்னை அதிக அளவில்
பாதிக்காமல் இருக்க
வேண்டும் என்பதற்காக
தொடர்ந்து நல்ல
செயல்களையே
செய்து கொண்டிருந்தால்
தொடர்ந்து
நல்ல விளைவுகளையே
தரக்கூடிய
செயல்களைச் செய்து
கொண்டிருந்தால்
புண்ணியத்தின்
எண்ணிக்கை அதிகமாகி
புண்ணியத்தின் விளைவான
நன்மைகளைக் கொடுத்து
பாவத்தின் விளைவான
துன்பங்கள் நம்மை
அதிக அளவில்
பாதிக்காமல்
இருக்கும்படிச் செய்யும்
அதனைத் தொடர்ந்து
பாவங்களின்
எண்ணிக்கை குறைந்து
படிப்படியாக பாவமே
இல்லாமல் போய்விடும்
இது தான்
மேல்பதிவு எனப்படும்

3.   அடியோடு அழித்தல்
பக்தி மார்க்கத்தின்               
மூலமாகவோ
ஞான மார்க்கத்தின்
மூலமாகவோ
ஏதேனும் ஒரு
வழியைப் பின்பற்றி
பாவத்தை எப்படி
அழிக்க வேண்டும்
என்ற வழி
முறையை அறிந்து
அத்தகைய முறையைப்
பயன்படுத்தி
பாவத்தின் விளைவுகள்
தன்னை தாக்கி
தீமைகளை
அளிக்காமல் இருக்க
பாவங்களை முற்றிலுமாக
அழித்து விட வேண்டும்
பாவத்தை முற்றிலுமாக
அழிந்து விட்டால்
எந்த ஒரு தீய
விளைவும் ஏற்படாது,
இது தான்
அடியோடு அழித்தல்
எனப்படும்.

பிராயச்சித்தம் என்றால்
செய்த தவறுக்கு
வருந்தி
அதே தவறை
மீண்டும் செய்யாமல்
இருப்பது
என்று பொருள்
இதனை உணராமல்
பிராயச்சித்தம்
செய்பவர்கள் தொடர்ந்து
செய்த பாவத்தையே
மீண்டும் மீண்டும்
செய்து பிராயச்சித்தம்
தேடுவதால்
ஒரு பயனும் இல்லை.

தாங்கள் செய்த
பாவத்தின் விளைவு
தன்னை தன்னுடைய
சந்ததிகளை பாதிக்காமல்
இருப்பதற்காக
கடவுளை வணங்குபவர்களை
பயத்துடன் கடவுனை
வணங்குபவர்கள்
என்று சொல்லலாம்.

பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
பிராயச்சித்தம்
மட்டும் செய்வர்
அவர்களால் மேல்பதிவு
அடியோடு அழித்தல்
ஆகியவற்றைச்
செய்ய முடியாது

மேல்பதிவு
அடியோடு அழித்தல்
ஆகியவைகளை
பக்தியுடன்
வணங்குபவர்களால்
மட்டுமே செய்ய
முடியும்

செய்த தவறு
தன்னையும்
தன்னுடைய குடும்பத்தையும்
சந்ததிகளையும்
பாதிக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக கடவுளை
பயத்துடன் வணங்குகின்றனர்
இத்தகையவர்களைத்
தான் நாம்
பயத்துடன் கடவுளை
வணங்குபவர்கள்
என்கிறோம்

தவறு செய்யாதவன்
கடவுளை பயத்துடன்
வணங்க வேண்டிய
அவசியம் இல்லை
தவறு செய்பவன் தான்
கடவுளை பயத்துடன்
வணங்க வேண்டும்

இவர்கள் தான்
கடவுIளை பயத்துடன்
வணங்குபவர்கள்

பக்தியுடன் கடவுளை
வணங்குபவர்களைப் பற்றி
இனி பார்ப்போம்

--------- இன்னும் வரும்
//////////////////////////////////////////////////


July 07, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 38


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 38

இராமர்
அனுமாரை அழைத்து
சீதையிடம் சென்று
இராவண வதத்தைத்
தெரிவிப்பாயாக
என்றார்.

அனுமார்
அசோகவனம் சென்று
சீதையின் கால்களில்
வீழ்ந்து வணங்கி
அன்னையே
இராவணன்
இராம பானத்தால்
இறந்தான்
என்று கூறினார்.

அனுமாரின் இந்த
மகிழ்ச்சியைத்
தரக்கூடிய
செய்தியைக்
கேட்ட சீதை
இந்த மகிழ்ச்சியான
செய்தியைச் சொன்ன
உனக்கு நான் என்ன
கைமாறு செய்வேன்
உனக்கு என்ன வரம்
வேண்டும் கேள்
தருவேன் என்று
சீதை கூறினார்.

இதைக் கேட்ட
அனுமார்
அன்னையே நான்
திருமணம் ஆகாத
பிரம்மச்சாரி
எனக்கு இந்த
உலகத்தில்
தேவைப்படுவது
ஒன்றும் இல்லை.
இருந்தாலும்
தாங்கள் வரம்
தருகிறேன்
என்று கூறியதால்
நான் கேட்கிறேன்
உங்களை இத்தனை
மாதங்களாக
சித்ரவதை செய்த
இந்த கொடிய
அரக்கியரை
நான் கொல்லுவேன்
இவர்களைக்
கொல்ல வேண்டும்
என்ற வரத்தை
எனக்கு தாருங்கள்
என்றார் அனுமார்,.

சீதை அனுமாரை நோக்கி
இந்த அரக்கிமார்கள்
எனக்கு எந்த தீங்கும்
செய்யவில்லை
நான் இழைத்த
வினையினால்
இந்தத் துன்பம்
ஏற்பட்டது.
என் துன்பத்திற்குக்
காரணம்
நான் செய்த
வினை தான்.
வினையைத் தான்
நோக வேண்டுமேயன்றி
இவர்களை
நோகக் கூடாது.

நான் விருப்பப்பட்டு
கேட்ட மானுக்காக
துரத்திச் சென்ற
என் கணவருக்கு ஆபத்து
நேரிட்டு விட்டது
என்று கருதி
லட்சுமணரை அழைத்து
என் கணவரை
போய்ப் பார்த்து அவரை
காப்பாற்றச் சொன்னேன்
அதை கேட்காத
லட்சுமணரை நான்
பலவாறாக திட்டினேன்
மனம் வருத்தப்படும்படி
பேசினேன்

பல ஆண்டுகள்
கண்களை
இமை காப்பது போல்
உண்ணாமல்
உறங்காமல்
நிலத்தில் உட்காராமல்
என் கணவருக்கு
தொண்டு செய்த
என் மைத்துனரான
லட்சுமணரை தன்
வாழ்க்கையைப் பற்றி
கவலைப்படாமல்
என் கணவரின்
வாழ்க்கையைப் பற்றி
மட்டுமே
கவலைப் பட்ட
லட்சுமணரை
நீ மாற்றாந்தாய் மகன்
நயவஞ்சகன் என்று
பலவாறாக பேசி
அவர் மனதை
புண்பட வைத்தேன்
அல்லவா
அவ்வினையினால்
இவ்வினை வந்தது,
வினையைத் தான்
நோக வேண்டுமே தவிர
இவர்களை நோகக் கூடாது

எனவே இந்த
அரக்கியர்களை
கொல்ல வேண்டாம்
நான் செய்த
வினையின் விளைவை
நான் அனுபவித்துத் தான்
ஆக வேண்டும்
என்றார் சீதை

ஒருவன்
தெரிந்து பாவம்
செய்தாலும்
தெரியாமல் பாவம்
செய்தாலும்
பாவத்திற்குரிய தண்டனை
இறைவனால்
குறிப்பிட்ட காலத்தில்
வழங்கப்படும்
என்பதையும்,
ஒருவன் குற்றம்
செய்தால் செய்த
குற்றத்திற்குரிய
தண்டனையை
இறைவன் வழங்கி
அந்த குற்றத்தை
செய்தவனை
அதற்குரிய விளைவை
அனுபவிக்கும்
காலம் வரும்போது
இறைவன் அனுபவிக்கச்
செய்வான்
என்பதையும்,
செய்த செயலுக்குரிய
விளைவிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது
என்பதையும்,
தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தத்தையும்,
இந்தக் கதையின்
மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தக் கதைதான்
தெய்வம் நின்று
கொல்லும் என்பதற்கான
அர்த்தம்

----------இன்னும் வரும்
///////////////////////////////////////////////



July 06, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-37

குடிகாரன்
ஒருவனுக்கு குடிப்பதற்கு
பணம் வேண்டும்
மனைவியிடம் செல்கிறான்
மனைவியிடம் சண்டை
போட்டு அவளை
மிரட்டி அடிக்கிறான்
மனைவி
வைத்திருந்த பணத்தை
அவளிடமிருந்து பிடுங்கி
எடுத்துக் கொண்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு விட்டு
பணத்தை எடுத்துக்
கொண்டு செல்கிறான்

குடிகாரன் செய்த
இந்த பாவத்தின்
செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
விளைவு தானாகவே
வெளிப்படும்.

குடிகாரன் செய்த
பாவத்திற்குரிய
விளைவை
குடிகாரன்
அனுபவிக்கும்
காலம் வரும்போது
குடிகாரன்
நோக்கம், திறமை,
தொடர்பு கொள்ளும் பொருள்
காலம், இடம்
ஆகியவற்றைப் பொறுத்து
செயலுக்குரிய விளைவை
அனுபவிப்பான்.

குடிகாரன்
எந்த தவறான
காரியத்தை செய்தானோ
அதாவது
குடிகாரன்
மனைவியை மிரட்டி
அவளை அடித்து
பணத்தை பிடுங்கி விட்டு
மனைவியை கீழே
தள்ளி விட்டு
சென்றானோ
அந்த செயலுக்குரிய
விளைவானது
வெளிப்படக்கூடிய
காலம் வரும்போது
எத்தகைய தவறான
செயலைச் செய்தானோ
அதே மாதிரியான
துன்பத்தை தரக்கூடிய
விளைவானது
அப்படியே குடிகாரனுக்கு
வெளிப்படும்

அந்த குடிகாரன்
பணத்தை எடுத்துக் கொண்டு
காட்டின் வழியே
வீட்டிற்கு வந்து
கொண்டு இருக்கிறான்
திருடன் ஒருவன்
அவனிடம் கத்தியை
காட்டி மிரட்டி
அவனை அடித்து
பணத்தை
பிடுங்கிக் கொண்டு
குடிகாரனை கீழே
தள்ளி விட்டு
செல்கிறான்

இந்த நிகழ்வில்
நோக்கம் என்பது
திருடனுக்கு பணம்
வேண்டும் என்பது
திறமை என்பது
மிரட்டுவது
தொடர்பு கொள்ளும்
பொருள் என்பது
குடிகாரன்
காலம் என்பது
திருடனுக்கு பணம்
இல்லாத கஷ்டமான
காலம்
இடம் என்பது
வீட்டிற்கு வெளியே
யாரும் இல்லாத
இடம்

குடிகாரன் மனைவியை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
திருடன் குடிகாரனை
அடித்து பணம்
பிடுங்கியதையும்
ஒப்பிட்டு
பார்த்தோமேயானால்
செய்த
செயலுக்குரிய தன்மையும்
விளைவின் தன்மையும்
ஒன்றாக இருப்பதை
புரிந்து கொள்ளலாம்

குடிகாரனுக்கு பணம்
வேண்டும்
திருடனுக்கும் பணம்
வேண்டும்

குடிகாரன் மனைவியை
மிரட்டி அடித்தான்
திருடனும் குடிகாரனை
மிரட்டி அடித்தான்

குடிகாரன் மனையிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கினான்

குடிகாரன் மனைவியிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன் அவளை
கீழே தள்ளி
விட்டு சென்றான்
திருடனும் குடிகாரனிடமிருந்து
பணத்தை பிடுங்கி
எடுத்தவுடன்
அவனை கீழே
தள்ளி விட்டு சென்றான்

இரண்டு நிகழ்வுகளையும்
ஒப்பிட்டு நோக்கினால்
குடிகாரன் மனைவியிடம்
இருந்து
பணத்தை எடுக்க
பாவத்தை எத்தகைய
நிலையில்
செய்தோனோ
அப்படியே அந்த
பாவத்தின் விளைவு
திருடனின் மூலமாக
குடிகாரனுக்கு
வெளிப்பட்டதை 
அறிந்து கொள்ளலாம்

இந்த நிகழ்விலிருந்து
ஒன்றை தெரிந்து
கொள்ளலாம்
எந்த செயலைச் செய்தாலும்
அது பாவமாக இருந்தாலும் சரி
புண்ணியமாக இருந்தாலும் சரி
அதற்குரிய விளைவை
அனுபவித்தே ஆக வேண்டும்

எனவே,
செயலைச் செய்து விட்டு
யாரும் விளைவிலிருந்து
தப்ப முடியாது
என்பதை உணர்ந்து
நன்மையான செயல்களான
புண்ணியச் செயல்களை
மட்டுமே செய்து
நன்மைகளைப் பெற
நாம் முயற்சி
செய்ய வேண்டும்

---------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////