July 23, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-47


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-47

“”””முகநக நட்பது
நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு”””””

பார்க்கும் போது
முகத்தில் சிரிப்போடு
பழகுவது மட்டுமே
நட்பு ஆகாது.
உள்ளத்தின் உள்ளே
மகிழ்ச்சி கொண்டு
பழகுவதே நட்பு ஆகும்
என்று இந்த
திருக்குறளுக்கு
அர்த்தம் சொல்லப்படுகிறது

இந்த திருக்குறளுக்கு
இப்படியும் அர்த்தம்
சொல்லலாம்

நட்பு கொள்பவனின்
நட்பை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

   ஒன்று : உண்மையாக நட்பு
            கொள்பவனின் நட்பு

  இரண்டு : பொய்யாக நட்பு
            கொள்பவனின் நட்பு

உண்மையாக நட்பு
கொள்பவனை
நெஞ்சத்து அகநக
நட்பு கொள்பவன்
என்றும்
பொய்யாக நட்பு
கொள்பவனை
முகநக நட்பு
கொள்பவன்
என்றும் சொல்லலாம்

 “””நெஞ்சத்து அகநக
நட்பு என்றால்”””
நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச் செய்யும்
உண்மையாக நட்பு
கொள்பவனின் நட்பு
என்று பொருள்.

“””””முகநக நட்பு
என்றால்”””””
நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச் செய்யாமல்
தீமை தரும்
செயல்களைச் செய்யும்
பொய்யாக நட்பு
கொள்பவனின் நட்பு
என்று பொருள்

ஒன்று : உண்மையாக
         நட்பு
        கொள்பவனின்
        நட்பு

முதல் நண்பன்
ஒரு வியாபாரத்தை
தொடங்க அளவுக்கு
அதிகமான பணத்தை
முதலீடு செய்து
வியாபாரம் செய்ய
நினைக்கும் போது,
தெரியாத ஒரு
வியாபாரத்தை செய்ய
முயற்சிக்கும் போது,
சக்திக்கு மீறிய
மனித உழைப்பை
அதில் பயன்படுத்த
நினைக்கும் போது,
இது தப்பான
செயல்
இதனைச் செய்ய
வேண்டாம் என்று
செய்யப்போகும்
வியாபாரத்தால்
ஏற்டக்கூடிய
கெடுதலான விளைவுகளை,
அதிகமான பாதிப்புகளை ,
உண்டாகும் இழப்புகளை,
ஏற்படுத்தும் நெருக்கடிகளை,
விளக்கமாக எடுத்துக்கூறி
இந்த
வியாபாரத்தைச் செய்தால்
பெரும் இழப்பு
ஏற்படுவதுடன்
கடனிலும் தள்ளாட
வேண்டி இருக்கும்
மிகப் பெரிய
மனவேதனையையும்,
கஷ்டத்தையும்,
சோகத்தையும்,
கொண்டு வரக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது
என்பதை
நண்பனுக்கு
வலியுறுத்தி சொல்லி
அந்த வியாபாரத்தை
செய்ய வேண்டாம்
என்று செய்ய
விடாமல் தடுத்து
முதல் நண்பன்
அறியாமல் செய்ய
இருந்த தப்பான
ஒரு செயலை செய்ய
விடாமல் தடுத்து,
வியாபாரத்தால்
ஏற்பட இருந்த
பேராத்திலிருந்து
முதல் நண்பனை
பாதுகாக்கிறான்
இரண்டாம் நண்பன்

இத்தகைய
செயலைச் செய்யும்
இரண்டாம்
நண்பன் தான்
உண்மையான நண்பன்
இத்தகைய
உண்மையான நண்பனின்
நட்பு தான்
உண்மையாக நட்பு
கொள்பவனின் நட்பு

அதாவது
நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச்
செய்பவன் தான்
உண்மையாக நட்பு
கொள்பவன்
இத்தகைய
உண்மையாக நட்பு
கொள்பவனின்
நட்பு தான்
நெஞ்சத்து அகநக
நட்பு எனப்படும்.

---------இன்னும் வரும்
-----------23-07-2018
//////////////////////////////////////////////


July 20, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-46


            நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-46

வீடு, மனைவி, மக்கள்
ஆகியோர் மீது
காணப்படும் செல்வச்
செழிப்பை கண்டு
வியந்தார் குசேலர்.

கிருஷ்ணா உன்னுடைய
நட்பு எவ்வளவு
உயர்ந்த நட்பு
நான் உன்னிடம்
எதையும் கேட்கவில்லை
என் வறுமையைச்
சொல்லி நான்
உதவி செய் என்று
உன்னிடம் கேட்கவில்லை
ஆனால் செல்வச்
செழிப்பை என்
வீடு, மனைவி, மக்கள்
அனைவரின் மீதும்
பொழிந்து கருணை
செய்திருக்கிறாய்
நான் கேட்டிருந்தால்
கூட இவ்வளவு
செல்வச் செழிப்பை
கேட்டிருக்க மாட்டேன்
ஆனால் நீ வழங்கி
இருக்கும் இந்த
செல்வச் செழிப்பு
அளவுக்கு மீறியது
என்று கிருஷ்ணர்
செய்த செயற்கரிய
செயலை நினைத்து
மகிழ்ச்சி அடைந்தார்
குசேலர்

அளவற்ற செல்வச்
செழிப்பு தனக்கு
கிடைத்தாலும் குசேலர்
பற்றற்று இருந்து
கிருஷ்ணரை
நினைத்து ஆழ்ந்த
தியானத்தில் இருந்தார்
செல்வச் செழிப்பு
குசேலருக்குள்
எந்தவிதமான பாதிப்பையும்
ஏற்படுத்தவில்லை
செல்வச் செழிப்பு
அவருடைய
எண்ணத்திலும்,
சொல்லிலும், செயலிலும்
எந்தவிதமான
மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை
அவர் ஏழ்மையில்
இருந்தபோது
எத்தகைய உயர்ந்த
குணங்களைக் கொண்டு
வாழ்ந்து கொண்டு
இருந்தாரோ அவ்வாறே
செல்வச் செழிப்பு
வந்தபோதும் தன் உயர்ந்த
குணங்களை மாற்றாமல்
நல்ல குணங்களை
கொண்டவராகவே
வாழ்ந்தார் குசேலர்

கிருஷ்ணரையே
நினைத்துக் கொண்டு
தியானம் செய்து
வைகுந்தம் அடைந்தார்
குசேலர்,

கிருஷ்ணர் தன்
மீது வைத்திருக்கும்
நட்பைக் கண்டு
வியந்த குசேலர்
ஏழ்மை நிலையில்
இருக்கும் தன்னை
எந்தவித ஆதாயமும்
இல்லாத ஒருவனை
ஒரு காலத்தில்
ஒன்றாக படித்தோம்
நண்பர்களாக இருந்தோம்
என்பதை
நினைவில் வைத்து
ராஜா என்ற உயர்ந்த
நிலையில் இருந்தும்
ஏழையாக இருக்கும்
என்னை
நினைவில் வைத்து
நட்பு பாராட்டிய
கிருஷ்ணரின் உயர்ந்த
குணத்தை எண்ணி
மகிழ்ச்சி கொண்ட
குசேலர் இவ்வளவு
உயர்ந்த குணங்கள்
கொண்ட கிருஷ்ணரிடம்
உதவி கேட்பது
எனது நட்புக்கு களங்கம்
ஏற்படுத்தி விடும்
என்று நினைத்த
குசேலர் கிருஷ்ணரிடம்
தன் குடும்ப ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்கவில்லை.
குசேலரின் இத்தகைய
நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு,
அதாவது குசேலர்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்

கிருஷ்ணர்
குசேலர் கஷ்டத்தில்
இருக்கிறார் என்பதை
உணர்ந்தும்
குசேலர் நான் ஏழ்மையால்
கஷ்டப் படுகிறேன்
என்னுடைய கஷ்டத்தை
போக்குவதற்கு
உதவி செய்யுங்கள்
என்று தன்னிடம்
கேட்கவில்லை
என்பதை உணர்ந்தும்
குசேலர் ஏழ்மையால்
கஷ்டப்படுகிறார்
என்பதை உணர்ந்து
குசேலருக்கு
உதவி செய்த
கிருஷ்ணரின் இத்தகைய
நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு
அதாவது கிருஷ்ணர்
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்

துரியோதனனும்,
கர்ணனும் கொண்ட
நட்பு எதையும்
எதிர்பார்க்கும் நட்பு
அதாவது இவர்கள்
இருவரும் எதிர்பார்ப்புடன்
நட்பு கொண்டவர்கள்.


கிருஷ்ணரும், குசேலரும்
கொண்ட நட்பு எதையும்
எதிர்பார்க்காத நட்பு
அதாவது
எதிர்பார்ப்பு அற்று
நட்பு கொண்டவர்கள்

உயிர் காப்பான் தோழன்
என்பதற்கு எடுத்துக்காட்டாய்
விளங்கும் நட்பு.

உயிர்காப்பான்
தோழன் என்றால்
நண்பன் கஷ்டப்படும்போது
உதவி என்று
கேட்டு வந்தால்
உதவி செய்பவனும்
நண்பன் கஷ்டப்படுவதைக்
கண்டு தானே சென்று
உதவிகள் செய்து
கஷ்டத்தைப்
போக்க முயற்சிகள்
மேற்கொள்பவனும் தான்
உயிர் காப்பான் தோழன்

நாம் எதிர்பார்ப்பு
அற்று பிறருடன்
நட்பு கொள்ளலாம்
ஆனால் எதிர்பார்ப்பு
அற்ற நண்பர்கள்
நமக்கு கிடைப்பது தான்
கடினம் என்பதைத்தான்
நண்பனுக்காக நாம்
உயிரைக் கொடுக்கலாம்
ஆனால், உயிரைக்
கொடுக்கக்கூடிய
நண்பர்கள் நமக்கு கிடைப்பது
தான் கடினம் என்பதை
சொல்லிச் சென்ற
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்.

----------இன்னும் வரும்
-----------20-07-2018
///////////////////////////////////////////////////////////


July 19, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-45



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-45

கிருஷ்ணர் தன்
மேல் வைத்துள்ள
நட்பைப் பார்த்து
வியந்து தன்
கஷ்டத்தை சொல்லி
உதவி கேட்பது
நட்புக்கு களங்கம்
விளைவிப்பது போலாகி
விடும் என்று நினைத்த
குசேலர் கிருஷ்ணரிடம்
தன் ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்கவில்லை.

தன் ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்பதன் மூலம்
நட்புக்கு களங்கம்
ஏற்பட்டு விடும்
என்று உதவி
கேட்காமல் இருக்கும்
குசேலரின்
எண்ணவோட்டத்தை
உணர்ந்த கிருஷ்ணர்
இத்தகைய
உயர்ந்த குணங்களைக்
கொண்ட நண்பனின்
நட்புக்கு உதவி
செய்ய வேண்டும்
என்று நினைத்து
ஒருபிடி அவல்
எடுத்து சாப்பிடும்போதே
குசேலருக்கே தெரியாமல்
குசேலருடைய
ஏழ்மையை போக்கினார்
கிருஷ்ணர்.


குசேலர் அன்று
இரவு முழுவதும்
கிருஷ்ணருடன்
இருந்து விட்டு
மறுநாள் காலை
கிருஷ்ணரிடம்
எந்த பொருளும்
பெறாமல்
கிளம்பிய குசேலரை
கிருஷ்ணரும்,
ருக்மணியும்
வாசல் வரை வந்து
வழியனுப்பி வைக்க
குசேலர் தன் வீடு
நோக்கி நடந்தார்.

பொருள் வேண்டும்
என்று கேட்டிருந்தால்
கிருஷ்ணர்
நிறைய செல்வம்
கொடுத்திருப்பார்
ஆனால் நான்
கிருஷ்ணரிடம் யாசித்து
எதுவும் பெறவில்லை
கேட்டுக்கூட
தானம் பெறவில்லை
என்று நினைத்த
குசேலரின் மனம்
முழுக்க கிருஷ்ணரின்
புன்னகையும்,
பேச்சுக்களும்
நட்பும் நிறைந்து
இருந்தது
கிருஷ்ணரின்
நட்பையே
நினைத்துக் கொண்டு
தன் வீட்டை
நோக்கி நடந்து சென்று
கொண்டு இருந்தார்
குசேலர்.

தன்னுடைய மனைவி
செல்வம் எங்கே
என்று கேட்டால்
என்ன சொல்வது
தன்னுடைய குடும்ப
கஷ்டத்தை நீக்க
முடியவில்லையே
என்று பலவாறாக
சிந்தித்துக் கொண்டு
தன் வீட்டை
நோக்கி நடந்து
சென்று கொண்டு
இருந்தார் குசேலர்

தன் வீடு
இருந்த இடத்தில்
மிகவும் பிரம்மாண்டமான
மாளிகை
இருப்பதைக் கண்டார்.
ரத்தினங்கள் பதிக்கப்பட்ட
பல்வேறுபட்ட கலைவண்ண
வேலைப்பாடுகள் கொண்ட
மிகப் பிரம்மாண்டமான
அரண்மனையை
தன் வீடு
இருந்த இடத்தில்
கண்டார்.
இது என்னுடைய வீடா
அல்லது
நான் வீடு தவறி
வந்து விட்டேனா அல்லது
பாதை மாறி
வந்து விட்டேனா என்று
சுற்றும் முற்றும்
திரும்பிப் பார்த்தார் குசேலர்,

அப்பொழுது ஒரு கூட்டம்
மேளதாள வாத்தியங்கள்
முழங்கிக் கொண்டும்
வாத்தியங்களை
இசைத்துக் கொண்டும்
பூரண கும்ப
மரியாதையுடன்
குசேலரை வரவேற்றார்கள்
குசேலருக்கு
சாமரம் வீசியும்
சந்தனம் பூசியும்
அவரை வரவேற்று
அழைத்து சென்றார்கள்

அப்போது
செல்வச் செழிப்புடன்
காணப்பட்ட
அழகான பெண் ஒருத்தி
அவர் காலில்
விழுந்து வணங்கினாள்
தீர்க்க சுமங்கலி பவ
என்று வாழ்த்திய குசேலர்
காலில் விழுந்து
வணங்கிய பெண்
எழுந்து நின்ற போது
அதிர்ந்தார்

காலில் விழுந்து
வணங்கிய பெண்
குசேலருடைய
மனைவி சுசீலை
தன்னுடைய மனைவியா
இவ்வளவு அழகாகவும்,
செல்வச் செழிப்போடும்
இருக்கிறார்  என்று
வியந்தார் குசேலர்

குசேலர் அனைவருடன்
வீட்டிற்குள் சென்றார்
வீட்டிற்குள் தந்தத்தினாலும்,
தங்கத்தினாலும் செய்யப்பட்ட
பல்வேறு விதமான
கட்டில்கள்  இருந்தன
அழகான மென்மையான
படுக்கைகள் இருந்தன
தங்கப்பிடியுள்ள சாமரங்களும்,
விசிறிகளும் இருந்தன
எங்கு பார்த்தாலும்
முத்துச் சரங்கள்
தோரணமாக தொங்கின
வீடு, மனைவி, மக்கள்
அனைவரும்
செல்வச் செழிப்புடன்
காணப்பட்டனர்.

அரண்மனை போன்ற
வீட்டில்
வீடு முழுவதும்
செல்வச் செழிப்பு
நிறைந்து இருந்தது.

----------இன்னும் வரும்
----------19-07-2018
///////////////////////////////////////////////////////////