August 29, 2018

திருக்குறள்-பதிவு-10


                        திருக்குறள்-பதிவு-10

“”””எனைத்தானும்
எஞ்ஞான்றும்
யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை””””

ஒருவரை அறிமுகப்
படுத்தும் போது
இரண்டு விதமான
செயல்களைச்
செய்யக் கூடாது.

 ஒன்று :ஒருவரை குறை
         சொல்லி அறிமுகப்
         படுத்தக் கூடாது

இரண்டு :ஒருவருடைய
         குறையை சொல்லி
         அறிமுகப்படுத்தக்
         கூடாது

ஒருவரை குறை சொல்லி
அறிமுகப் படுத்துவதற்கும்,
ஒருவருடைய
குறையை சொல்லி
அறிமுகப்படுத்துவதற்கும்
சிறிதளவு
வேறுபாடு இருக்கிறது.

ஒரு அதிகாரி
ஒரு அலுவலகத்திற்கு
புதியதாக
மாற்றலாகி வருகிறார்
அவருக்கு கீழ் உள்ள
மற்றொரு அதிகாரி
அலுவலகத்தில்
வேலை செய்பவர்களை
ஒவ்வொருவராக அறிமுகம்
செய்து வைக்கிறார்.

ஒவ்வொருவராக அறிமுகம்
செய்யும் போது,
முதலாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும்போது
இவர் கடின உழைப்பாளி;
இவர் நன்றாக
வேலை செய்வார்;
இவர் சொல்வதை
புரிந்து கொண்டு
விரைவாக வேலை செய்வார்;
என்று அறிமுகம்
செய்து வைக்கிறார்.

இரண்டாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும்போது,
இவர் கால நேரம்
பார்க்காமல்
வேலை செய்வார்;
இவர் கடினமாக உழைப்பார்;
இவர் கொடுத்த வேலையை
முடித்து விட்டுத் தான்
வீட்டிற்கு செல்வார்;
என்று அவரை அறிமுகம்
செய்து வைக்கிறார்.

ஆனால்,
மூன்றாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
இவர் சுமாராகத் தான்
வேலை செய்வார்;
இவர் வேலையை எளிதில்
புரிந்து கொள்ள மாட்டார்;
இவர் ஒரு வேலையை
செய்ய நீண்ட நேரம்
எடுத்துக் கொள்வார்;
என்று அறிமுகம்
செய்து வைக்கிறார்.
          
இது தான் ஒருவரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
ஓருவரை குறை சொல்லி
அறிமுகம் செய்து வைப்பது.

ஒரு நண்பர்
மற்றொரு நண்பரிடம்
தன்னைப் பார்க்க வந்த
மூன்று நண்பர்களை
அறிமுகம்
செய்து வைக்கிறார்.

முதல் நபரை அறிமுகம்
செய்து வைக்கும் போது,
இவர் பட்டம்
முடித்து இருக்கிறார்;
பெரிய கம்பெனியில்
வேலை செய்கிறார்;
நிறைய சம்பளம்
வாங்குகிறார்; என்று
முதல் நபரை அறிமுகம்
செய்து வைக்கிறார்.

இரண்டாம் நபரை அறிமுகம்
செய்து வைக்கும்போது,
இவர் இஞ்சினியர்
படிப்பு படித்திருக்கிறார்;
நிறைய கட்டிடங்கள்
கட்டி இருக்கிறார்;
இவர் கட்டிய கட்டிடங்கள்
பிரமிப்பாகவும்,
அற்புதமாகவும்  இருக்கும்;
வீடு கட்டினால் அது
வித்தியாசமாக இருக்கும்;
என்று இரண்டாம் நபரை
அறிமுகம் செய்து வைக்கிறார்.

மூன்றாவது நபரை
அறிமுகம் செய்து
வைக்கும் போது
இவருக்கு வலது
காது கேக்காது;
எது பேசினாலும்
இடது காதில் தான்
பேச வேண்டும்;
நீங்கள் ஏதாவது
பேச நினைத்தால்
அல்லது கேட்க நினைத்தால்
இடது புறம் இருந்து
பேசுங்கள்; என்று
அறிமுகம் செய்து வைக்கிறார்.

இது தான் ஒருவரை
அறிமுகப் படுத்தும்போது
ஒருவருடைய குறையைச்
சொல்லி அறிமுகப்படுத்துவது.

ஒருவரை
அறிமுகப்படுத்தும்போது
ஒருவரை குறை சொல்லியும்
அறிமுகப்படுத்தக் கூடாது;
ஒருவருடைய குறையைச்
சொல்லியும்
அறிமுகப்படுத்தக் கூடாது;

ஒருவரை குறை சொல்லி
அவமானப்படுத்துவது தவறு
அதைவிட பெரிய தவறு
ஒருவருடைய குறையைச்
சொல்லி அவமானப்
படுத்துவது ஆகும்.
இதனால்
அவமானப் படுத்தப்
படுபவருடைய
மனம் எவ்வளவு
வருத்தப்படும் என்பதை
நினைத்துப் பார்க்க
வேண்டும்

இதைத் தான்
திருவள்ளுவர்
எவ்வளவு சிறியதாயினும்
எக்காலத்திலும்
எவரிடத்திலும்
பிறரை மனம்
வருத்தப்பட வைக்கும்
மனதால் எண்ணி
செய்யக்கூடிய
துன்பச் செயல்களை
செய்யாமல்
இருக்க வேண்டும்
என்பதைத்தான்

“”””எனைத்தானும்
எஞ்ஞான்றும்
யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை””””

என்ற திருக்குறளின் மூலம்
தெரிவிக்கிறார் திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  29-08-2018
///////////////////////////////////////////////////


August 28, 2018

திருக்குறள்-பதிவு-9


                        திருக்குறள்-பதிவு-9

“”””எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு””””

உலகில் செய்யப்படும்
செயல்களை எல்லாம்
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று : விளைவு
        தெரிந்த செயல்

இரண்டு:விளைவு
        தெரியாத செயல்

ஒரு செயலைச்
செய்யும்போது
இத்தகைய விளைவு
தான் ஏற்படும்
என்று தெரிந்து
செய்யப்படும் செயல்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

ஒரு செயலைச்
செய்யும்போது
இத்தகைய விளைவு
தான் ஏற்படும்
என்று தெரியாமல்
செய்யப்படும் செயல்
விளைவு தெரியாத
செயல் எனப்படும்

ஒரு செயல்
கடந்த காலத்தில்
செய்யப்பட்ட செயலாக
இருந்தாலும் சரி;
நிகழ்காலத்தில்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயலாக
இருந்தாலும் சரி;
எதிர்காலத்தில்
செய்யப்படும்
செயலாக
இருந்தாலும் சரி;
விளைவு ஒரே
மாதிரியாக வந்தால்
அந்த செயல்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

ஒரு செயல்
கடந்த காலத்தில்
செய்யப்பட்ட செயலாக
இருந்தாலும் சரி;
நிகழ்காலத்தில்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
செயலாக
இருந்தாலும் சரி;
எதிர்காலத்தில்
செய்யப்படும்
செயலாக
இருந்தாலும் சரி;
விளைவு
மாறிக்கொண்டே
இருந்தால்,
அந்த செயல்
விளைவு தெரியாத
செயல் எனப்படும்

அதாவது விளைவு
தெரிந்த செயல்
எந்தக் காலத்திலும்
மாறாது; ஆனால்
விளைவு தெரியாத
செயல் மாறிக்
கொண்டே இருக்கும்;


நெருப்பைத்
தொட்டால் சுடும்
என்பது தெரியும்
நெருப்பைத்
தொடும் போது
இறந்த காலத்திலும்
சுட்டது;
நிகழ்காலத்திலும்
சுடுகிறது;
எதிர்காலத்திலும் சுடும்;
அதாவது
நெருப்பைத் தொடுவது
என்ற செயலுக்குரிய
விளைவானது
மாறாது என்றும்
ஒரே மாதிரியாகத்
தான் இருக்கும்
இது தான்
விளைவு தெரிந்த
செயல் எனப்படும்

நாம் ஒரு வியாபாரம்
செய்யப்போகிறோம்
வியாபாரம் செய்வதால்
இலாபம் என்ற
நன்மையான செயல்
நடக்குமா
நஷ்டம் என்ற
தீமையான செயல்
நடக்குமா
என்று தெரியாது
இது தான் விளைவு
தெரியாத செயல்
அதாவது விளைவு
நன்மையான விளைவாகவும்
இருக்கலாம் அல்லது
தீமையான விளைவாகவும்
இருக்கலாம்

இது தான் மாறிக் கொண்டே
இருக்கும் விளைவு
இது தான் விளைவு
தெரியாத செயல் எனப்படும்

விளைவு தெரிந்து
செயல்களைச் செய்பவர்கள்
விளைவு தெரிந்து
செய்வதால்,
அவர்கள் விளைவைப்
பற்றி கவலைப்பட
வேண்டிய அவசியம்
இல்லை ஆனால்
விளைவு தெரியாமல்
செயலைச் செய்பவர்கள்
கவலைப்பட வேண்டிய
அவசியம் இருக்கிறது

எண்ணித் துணிக
கருமம் என்றால்,
விளைவு தெரியாத
ஒரு செயலைச்
செய்யும் போது
அதாவது நன்மையான
விளைவைத் தருமா
அல்லது தீமையான
விளைவைத் தருமா
என்பதைத் தெரியாமல்
செயலைச் செய்யும்போது
பலமுறை யோசிக்க
வேண்டும்
யோசித்தப் பிறகே
விளைவு தெரியாத
செயலைச் செய்ய
வேண்டும் என்று பொருள்

துணிந்தபின் எண்ணுவம்
என்பது இழுக்கு என்றால்,
விளைவு தெரியாத
செயலைச் செய்து விட்டு
தீமையான விளைவு
ஏற்பட்டால் அதைப்பற்றி
கவலைப்படுவதால்
ஒரு பயனும் இல்லை
என்று பொருள்

ஒருவர் ஒரு விளைவு
தெரியாத செயலைச்
செய்யும் போது
அதாவது ஒரு வியாபாரம்
செய்யும் போது
பலமுறை யோசித்து
பிறகே செய்ய வேண்டும்
யோசித்து அந்த
வியாபாரத்தை
செய்த பின் அதனால்
நஷ்டம் வந்தால்
நஷ்டத்தைப்பற்றி
கவலைப்படுவதால்
ஒரு பயனும் இல்லை
என்பதைத் தான்
எண்ணித் துணிக
கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது
இழுக்கு
என்ற திருக்குறளின்
மூலம் தெரிவிக்கிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  28-08-2018
//////////////////////////////////////////////////


August 27, 2018

திருக்குறள்-பதிவு-8


                        திருக்குறள்-பதிவு-8

பாண்டிய மன்னன்
தமிழ்ச் சங்கத்தில்
உள்ள புலவர்களைப்
பார்த்து புலவர்களே
தமிழ் மூதாட்டி
ஔவையார்
இந்த சங்கத்திற்கு
வந்திருக்கிறார்
வள்ளுவர் குறள்
அனைத்து மக்களுக்கும்
தேவையான
உயர்ந்த படைப்பு என்று
அவர் கூறுகிறார்
வள்ளுவர் குறளை
சங்கம் கேட்க வேண்டும்
என்று அவர்
கேட்டுக் கொண்டுள்ளார்
என்றான்
பாண்டிய மன்னன்

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள புலவர்கள்
திருவள்ளுவரை நோக்கி
திருவள்ளுவரே
உமக்கு
இலக்கணம் தெரியுமா
அந்தாதி பாடுவீரா     
உமக்கு சிலேடை
வருமா என்று
பல்வேறு விதமாக
கேள்விகளைக் கேட்டு
திருவள்ளுவரை
அவமானப்படுத்த
வேண்டும்
என்ற நோக்கத்தில்
பல்வேறு விதமான
கேள்விகளைக்
கேட்டனர்

இந்நிகழ்வு நடந்து
கொண்டிருக்கும் சமயத்தில்
பாண்டிய மன்னன்
வள்ளுவர் இயற்றிய
நூலை கேட்கலாம்
என்று கேட்டுக்
கொண்டதற்கிணங்க
வள்ளுவர் திருக்குறளை
வாசிக்கத் தொடங்கினார்

திருக்குறளின்
ஒரு பாடலைக்
கேட்டவுடனேயே
தமிழ்ச்சங்கத்தில்
உள்ளவர்கள் திருக்குறளை
ஆடசேபம்
செய்யத் தொடங்கினர்
இது செய்யுள்
இலக்கணத்தை
மீறி இருக்கிறது
வெண்பா என்றால்
நான்கு அடி இருக்க
வேண்டும்
ஈரடி வெண்பாவை
ஏற்க முடியாது
சங்கத்தின் விதிகளுக்கு
முரண்பாடாக இருக்கிறது
திருக்குறளை ஏற்றுக்
கொள்ளவே
முடியாது என்று
தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப் புலவர்கள்
பல்வேறு குற்றச்
சாட்டுக்களையும்,
பல்வேறு குறைகளையும்
சுட்டிக் காட்டி
திருக்குறளை
அவமானப்படுத்தி
திருவள்ளுவரை
இழிவு படுத்தி
திருக்குறளை
அரங்கேற்றம்
செய்யவிடாமல்
தடுத்தனர்.

தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்புலவர்கள்
செய்த செய்கைகளை
கண்டு வெகுண்டெழுந்த
ஔவையார்

மதுரை தமிழ்ச்சங்கத்தில்
உள்ள தமிழ்ப்
புலவர்களைப் பார்த்து
தன்னலம் மிக்க
புலவர்களே
உங்களுடைய
தன்னலம் மிக்க
செயல்பாட்டால்
திருக்குறளை
அரங்கேற்றம் செய்ய
விடாமல் தடுத்து
மக்களுக்கு
கிடைக்க வேண்டிய
உயர்ந்த படைப்பை
கிடைக்க விடாமல்
செய்கிறீர்கள்
இந்தச் சங்கத்தில்
உள்ள புலவர்களிடம்
தன்னலம் தான்
நிரம்பி இருக்கிறது
இந்த தன்னலம்
மிக்க புலவர்களிடம்
பேசிக் கொண்டிருப்பதால்
ஒரு பயனும்
விளையப் போவதில்லை

இதற்கு மேல்
பேசி பயன் இல்லை
நான் பொற்றாமரையை
பொங்கச் செய்கிறேன்
சங்கப்பலகையை
வரவழைக்கின்றேன்
அதில் வள்ளுவர்
குறளை வைப்போம்
அந்த ஈசன் என்ன
சொல்கிறார் பார்ப்போம்
என்றார் ஔவையார்

ஔவையார்
சொன்னவாறே
பொற்றாமைரையை
பொங்கச் செய்தார்
சங்கப்பலகை
திருக்குறளை
ஏற்றுக் கொண்டது
ஈசன் அருட்குரல்
கேட்டது
வள்ளுவன் வாக்கு
என் வாக்கு என்று
கேட்டது

ஈசனே ஏற்றுக் கொண்ட
பிறகு எந்தவித
தடையும் இல்லை
என்ற முடிவு
அனைவராலும்
எடுக்கப்பட்டு
மதுரை தமிழ்ச்சங்கத்தில்
திருக்குறள்
திருவள்ளுவரால்
அரங்கேற்றம் செய்யப்பட்டது

இன்று உலகப்பொதுமறை
என்று அனைவராலும்
பெருமையாக
அழைக்கப்படும் திருக்குறள்
உலகம் முழுவதும்
அதிக மக்களால் படித்து
பின்பற்றப்படும் திருக்குறள்
அன்றைய தமிழ்ச்சங்கத்தால்
ஏற்றுக் கொள்ளப்படவிலை
மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்டது என்பது
எத்தனை பேருக்குத்
தெரியும்

மனிதர்களால்
புறக்கணிக்கப்பட்ட
திருக்குறள்
இறைவனால் ஏற்றுக்
கொள்ளப்பட்டது
என்பதை நினைத்தாலே
திருக்குறளின்
பெருமை நமக்கு
தெள்ளத் தெளிவாக
விளங்கும்

---------  இன்னும் வரும்
---------  27-08-2018
///////////////////////////////////////////////////////////