September 13, 2018

திருக்குறள்-பதிவு-19


                       திருக்குறள்-பதிவு-19

டார்வினின்
பரிணாமக் கோட்பாட்டை
அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
ஹக்ஸ்லி பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய வார்த்தைகளில்
உண்மைகள் இருப்பதையும்,
டார்வினின் கண்டுபிடிப்பு
உண்மை தான்
என்பதையும்,
உணர்ந்த மக்கள்
ஹக்ஸ்லியின்
பேச்சுக்கு நடு, நடுவே
தங்களை மறந்து
மெய்மறந்து
கரகோஷம் எழுப்பினர்
இது அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஹக்ஸிலியின்
வார்த்தைகளைக் கேட்ட
மக்கள் கூட்டம்
அவருடைய கருத்தை
ஏற்றுக் கொண்டது;
நிதானமான
அவருடைய பேச்சும்
மக்கள் புரிந்து கொள்ளும்
வகையில் அவர்
அளித்த விளக்கங்களும்
அங்குக் குழுமியிருந்த
மக்கள் அனைவருடைய
மனங்களையும் கவர்ந்தது;
உண்மைகளை
அழகாக எடுத்துரைத்த
விதம் அனைவரையும்
வியப்படைய வைத்தது;
ஹக்ஸ்லியின்
பேச்சின் முடிவில்
மக்கள் அனைவரும்
இவர் எவ்வளவு
அழகாக பேசினார் என்று
ஒரே நேரத்தில் ஒன்றாக
விண்ணை பிளக்க
வாழ்க டார்வின்
நிலைபெறுக
டார்வினிஸம் என்று
கரகோஷமிட்டு
தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்
இது அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

உண்மையை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளும் வகையில்
அற்புதமாக பேசுபவருக்கே
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷமும்,
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷமும் கிடைக்கும்.

இத்தகைய
இந்த இரண்டு விதமான
கரகோஷங்களும்
டார்வினின் பரிணாமக்
கோட்பாட்டை
உதாரணங்களுடன்
அனைவரும் புரிந்து
கொள்ளும் வகையில்
எளிமையாக பேசிய
ஹக்ஸிலிக்கு கிடைத்தது.

அன்றைய விவாதத்தில்
டார்வின் கண்டுபிடிப்பு
வெற்றி பெற்றாலும்
அன்று முதல் இன்று வரை
டார்வின் கண்டுபிடிப்பு
ஒரு விவாதப்
பொருளாகவே இருந்து
வருகிறது.

பரிணாமக் கோட்பாடு
உலகிடையே மிகுந்த
தாக்கத்தை ஏற்படுத்தி
மாபெரும் புயலைக்
கிளப்பி இருந்தாலும்
அதனைக் கொஞ்சமும்
பொருட் படுத்தாமல்
டார்வின் தனது
ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தார்

அந்தக் கால வரலாறு
முதல் இந்தக் கால
வரலாறு வரை
எடுத்துப் பார்த்தால்,
விஞ்ஞானமானது
மதத்திற்கு
அடிமையாகத் தான்
இருக்க வேண்டும்
என்ற எழுதப்படாத
விதி இந்த
சமுதாயத்தில் இருக்கிறது

விஞ்ஞானமானது
மதத்தை எதிர்த்து
கருத்து சொல்வதோ,
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக்
காட்டி பேசுவதோ,
கூடாது
அப்படி விஞ்ஞானமானது
மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
செயல்படும் போது
மதமானது அதைப்
பொறுத்துக் கொள்ளாமல்
விஞ்ஞானத்திற்கு எதிராக
செயல்களைச் செய்ய
ஆரம்பிக்கும்

மதத்தில் உள்ள
தவறுகளை சுட்டிக் காட்டி
கருத்து சொல்பவர்களை
மதமானது விட்டு
வைப்பதில்லை
மதத்தில் உள்ள தவறுகளை
சுட்டிக் காட்டுபவர்களை
தாங்கள் சொன்ன
கருத்துக்கள் தவறு என்று
மதமானது சொல்ல
வைக்கிறது;
அவர்களை அடிமையாக
வைக்கிறது;
அடிமையாக இருக்க
மறுப்பவர்களை கொல்கிறது;
இது தான் மதத்தின்
முக்கிய செயல்பாடாக
அன்று முதல் இன்று
வரை இருந்து இருக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக
ஆண்டவன் தான்
மனிதனைப் படைத்தான்
என்று பைபிளில்
சொல்லப்பட்டவைகளுக்கு
எதிராக இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
வெளியிட்டால்
எத்தகைய பிரச்சினைகள்
ஏற்படும் என்பதை
சார்லஸ் டார்வின்
உணர்ந்து இருந்தும்
தன்னுடைய உயிருக்கே
ஆபத்து ஏற்படும்
என்று தெரிந்து இருந்தும்
மதத்திற்கு எதிராக
இருக்கும்
தன்னுடைய கண்டுபிடிப்பை
சார்லஸ் டார்வின்
வெளியிட்டது
அவருடைய தைரியத்தை
குறிக்கவில்லை;
உண்மை இந்த
சமுதாயத்திற்கு கிடைக்க
வேண்டும் என்ற
சார்லஸ் டார்வினின்
உயர்ந்த குணத்தைக்
குறிக்கிறது;

சார்லஸ் டார்வின்
நினைத்தது போலவே
உலகெங்கும் உள்ள
கிறிஸ்தவர்கள்
சார்லஸ் டார்வினுக்கு
எதிராகவும்
அவருடைய கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
ஒன்றாக அணி
திரண்டு நிற்கிறார்கள்

--------- இன்னும் வரும்
--------- 13-09-2018
/////////////////////////////////////


September 11, 2018

திருக்குறள்-பதிவு-18


                      திருக்குறள்-பதிவு-18

ஒருவர் பேசிய
கருத்துக்களை மக்கள்
ஏற்றுக் கொண்டார்களா
அல்லது
ஏற்றுக் கொள்ளவில்லையா
என்பதை மக்கள்
எழுப்பும்
கரகோஷத்தை வைத்து
தெரிந்து கொள்ளலாம்.

கர+கோஷம்=கரகோஷம்
கர என்றால்
கையினால்
எழுப்பப்படும் ஒலி என்று
பொருள் எடுத்துக்
கொள்ள வேண்டும்

கோஷம் என்றால்
வாயினால் எழுப்பப்படும்
ஒலி என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

கரகோஷம் என்றால்
கையினாலும், வாயினாலும்
ஒரே சமயத்தில்
எழுப்பப்படும் ஒலி
என்று பொருள்
எடுத்துக் கொள்ள
வேண்டும்

மக்கள் எழுப்பும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்

ஒன்று  : அறிந்து
         எழுப்பப்படும்
         கரகோஷம்

இரண்டு :அறியாமல்
         எழுப்பப்படும்
         கரகோஷம்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வுடன்
எழுப்பப்படுவது

அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
உணர்வு இல்லாமல்
எழுப்பப்படுவது

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தும் இருக்கலாம்
பிடிக்காமலும்
இருக்கலாம்
ஆனால்,
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது
பிடித்தால் மட்டுமே
எழுப்பப்படுவது ஆகும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷத்தை இரண்டு
நிலைகளில் பிரிக்கலாம்


ஒன்று:
ஒருவர் பேச்சை
முடித்தவுடன்
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும்
கரகோஷம் அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
எனப்படும்

இரண்டு:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
அவருடைய பேச்சு
பிடித்திருந்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எழுப்பப்படும் கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்


அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் என்பது ஒரே
ஒரு நிலையை மட்டும்
தான் தன்னுள்
கொண்டிருக்கும்

ஒன்று:
ஒருவர் பேசிக்
கொண்டிருக்கும் போது
பேசுபவருடைய
பேச்சில் கவரப்பட்டு
மெய்மறந்து
நம்மை அறியாமல்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

ஒருவர் பேசிக்
கொண்டிருக்கிறார்
அவருடைய பேச்சு
பிடித்து போய்
விட்டதால் ஏற்பட்ட
மகிழ்ச்சியில்
கரகோஷம் எழுப்பினால்
அது அறிந்து
எழுப்பப்படும் கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு பிடிக்கவில்லை
என்றால் பேசுபவருடைய
பேச்சை நிறுத்தச்
சொல்லி
கலாட்டா செய்து
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக்
கொண்டிருப்பவருடைய
பேச்சு அற்புதமாக
இருந்து
தன்னை மறந்து
அதாவது மெய்மறந்து
எழுப்பப்படும் கரகோஷம்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம்
பேசுபவர் பேசி
முடித்து விடும்போது
அற்புதமாக பேசினார்
என்று கரகோஷம்
எழுப்பினால் அது
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
பேசிக் கொண்டிருந்தவர்
பேசி முடித்தவுடன்
பேசி முடித்தான்
கழுத்தை அறுத்து
விட்டான் பாவி
என்று வெறுப்புடன்
எழுப்பப்படும்
கரகோஷம்
அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம் எனப்படும்

அறிந்து எழுப்பப்படும்
கரகோஷம்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
பேச்சின்
இடையிலும்
பேச்சின் முடிவிலும்
எழுப்பப்படும்
ஆனால்
அறியாமல் எழுப்பப்படும்
கரகோஷம் பேச்சிற்கு
இடையில் மட்டுமே
எழுப்பபப்படும்

ஹக்ஸ்லிக்கு
மக்கள் எந்தவிதமான
கரகோஷத்தை
எழுப்பினார்கள் என்பதை
இனி பார்ப்போம்.

--------- இன்னும் வரும்
--------- 11-09-2018
/////////////////////////////////////////////////////


September 10, 2018

திருக்குறள்-பதிவு-17


                     திருக்குறள்-பதிவு-17

ஹக்ஸிலி சிரித்துக்
கொண்டே மேடை
மீது ஏறினார்
அன்பார்ந்த மக்களே
நான் இங்கே
விஞ்ஞானத்தைப்
பற்றித் தான்
பேச வந்திருக்கிறேன்
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
நான் வரவில்லை
மதத்தைப் பற்றி
பிரச்சாரம் செய்வதற்கு
பிஷப் வில்பர்போர்ஸ்
போன்ற மதவாதிகள்
நம் நாட்டில்
நிறைய
எண்ணிக்கையில்
உள்ளார்கள்
ஆகவே நான்
பேசுவதை
மதரீதியாக
பார்க்காமல்
விஞ்ஞான ரீதியாக
பாருங்கள் என்று
தன் பேச்சை
துவங்கினார்.

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து
முழுமை அடைகிறது

பரிணாமத்தில் முழுமை
அடைந்த ஒன்று
தன் நிலையில்
முழுமை
அடைந்த பிறகு
அதாவது இறுதிநிலை
அடைந்து விட்ட பிறகு
பரிணாமம் என்பது
கிடையாது

ஒரு மாமர
விதையை
விதைத்தால்
அந்த விதை
மாஞ் செடியாகி,
மா மரமாகிறது
மாமரத்தில்
பூ உற்பத்தியாகி,
பூ - மாங்காயாகி,
மாங்காய் - மாம்பழம் ஆகி
பல்வேறு மாற்றங்களை
அடைகிறது
மாமர விதையின்
இறுதி வடிவம்
மாம்பழம் என்பதால்
அதற்கு மேல்
பரிணாமம் என்ற
ஒன்று கிடையாது

ஒன்று பரிணாமத்தில்
பல்வேறு மாற்றங்களை
அடைந்து முழுமை
அடைந்த பின்பு
பரிணாமம் என்பது
கிடையாது

தாயின் வயிற்றில்
பிஷப் வில்பர்போஸ்
ஐந்து நாள்
பிண்டமாயிருக்கும் போது
அந்தப் பிண்டம்
ஒரு பென்சிலின்
முனையளவு கூட
இருந்திருக்காது
அதுவே
பத்து மாதத்திற்குப்
பின் ஒரு முழு
உருவமாய் வளர்ச்சி
பெற்ற பின்பு
தான் இவர்
பிறந்திருக்கிறார்
முழு வளர்ச்சி
அடையாமல்
பிறக்கவிலை,

கரு உருவாகி
பல்வேறு மாற்றங்களை
அடைந்து குழந்தை
என்ற முழுமை
நிலையை அடைந்த
பின்பு பரிணாமம்
முடிவடைந்து விடுகிறது
பரிணாமம் என்பது
முடிவடைந்த பின்னர்
தான் அவர்
பிறந்தார்
என்பதை சிறிதும்
சிந்திக்காமல்
பேசி விட்டார்

எந்த ஒன்று
முழுமை அடைந்து
விட்டதோ
அந்த ஒன்று
அதற்கு மேல்
மாற்றமடையாது
மனிதன் என்பவன்
முழுமையான வளர்ச்சி
அடைந்தவன்
அதனால் பரிணாமத்தில்
மனிதனுக்கு பின்
எதுவும் தோன்றவில்லை

என் முன்னோர்கள்
குரங்காக இருந்தார்கள்
என்று கூறிக்
கொள்வதில்
எனக்கு சிறிதளவு கூட
தயக்கம் இல்லை
ஆனால் பிஷப்
வில்பர்போர்ஸின்
பரம்பரை என்று
என்னைக்
கூறிக்கொள்ளத் தான்
நான் பெரிதும்
வெட்கமடைகிறேன்
என்றார்

ஹக்ஸ்லி பேசி
முடித்து விட்டு
திரண்டு இருந்த
மக்கள் கூட்டத்தைப்
பார்த்தார்

சார்லஸ் டார்வினை
ஆதரிப்பவர்கள்
சார்லஸ் டார்வினை
எதிர்ப்பவர்கள்
என்ற இரண்டு
நிலையிலேயே மக்கள்
பிரிந்து நின்று
அவர்களுடைய
பேச்சை கேட்க
குழுமியிருந்ததால்
மூன்றாவதாக
தனியாக நின்று
தீர்ப்பு சொல்வதற்கு
யாரும் இல்லை

டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
ஆதரவாகவும்
டார்வினின்
கண்டுபிடிப்புக்கு
எதிராகவும்
இருவேறுபட்ட
எண்ணங்களைக்
கொண்ட
பிரிவினரிடையே
நடைபெற்ற
விவாதத்தில்
மக்கள் யாருடைய
பக்கம் இருந்தார்கள்
யாருடைய
கருத்துக்கு
ஆதரவாக
இருந்தார்கள்
யாருடைய கருத்தை
உண்மை என்று
ஏற்றுக்
கொண்டார்கள்
என்பதை இனி
பார்ப்போம்

--------- இன்னும் வரும்
--------- 10-09-2018
/////////////////////////////////////