October 15, 2018

திருக்குறள்-பதிவு-34


                     திருக்குறள்-பதிவு-34

(10)கல்கி அவதாரம்

தான் நலமாக வாழ
வேண்டும் என்பதற்காக
எச்செயலையும்
செய்யத் தயாராக
இருந்த மனிதர்கள்
வாழ்ந்து கொண்டிருந்த
சமயத்தில் அதாவது
அதர்மத்தின் உச்சத்தில்
மக்கள் வாழ்ந்து
கொண்டிருந்த நிலையில்
உண்டான
கல்கி அவதாரம்
இரண்டு விதமான
விஷயங்களை தெளிவு
படுத்துகிறது

ஒன்று :யாருக்கு
       மறுபிறவி
       உண்டு
       என்பதைத் தெளிவு
       படுத்துகிறது

இரண்டு: யாருக்கு
         மறுபிறவி
         இல்லை
         என்பதைத் தெளிவு
         படுத்துகிறது

கடவுள் எங்கே இருக்கிறார்
அவரை அடையக்கூடிய
வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விட்டவர்களுக்கு
மறுபிறவி என்பது
கிடையாது
அத்தகையவர்களுக்கு
கல்கி அவதாரம்
என்பது தான் கடைசி
அதற்கு மேல்
அவர்களுக்கு அவதாரம்
என்பது இல்லை

கல்கி அவதாரம்
படத்தை எடுத்துப்
பார்த்தால் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்,
முன்னங்கால்கள்
இரண்டும் பூமியில்
படாமல் மேல்
நோக்கியும் தூக்கிக்
கொண்டு இருக்கும்
இது எதை குறிக்கிறது
என்றால் தன்னிலும்
மேல் நிலையில் உள்ள
சக்தியுடன் அதாவது
இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாகவே
மாறி விட்டவர்களுக்கு
பிறவி என்பது கிடையாது
என்பதைக் குறிக்கிறது

நீரில் தோன்றிய உயிரினம்
விலங்காகி, மனிதனாகி
இறைவனாகும் போது
பரிணாமம் முடிவடைகிறது
என்பதால் கல்கி
அவதாரத்துடன்
அவதாரங்கள்
முடிந்து விடுகிறது

கடவுள் எங்கே
இருக்கிறார் அவரை
அடையக்கூடிய வழி என்ன
அதற்கு பயன்படுத்தப்
படுவது எது
என்பதை உணர்ந்து
கர்மாவைக் கழித்து
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே
மாறாதவர்களுக்கு
மறுபிறவி என்பது உண்டு

அதனால் அவர்கள்
மீண்டும் இந்த
கர்மாவின் காரணமாக
பிறக்க வேண்டும்
அதாவது தாயின்
வயிற்றில் தண்ணீரில்
இருந்து ஆரம்பிக்க
வேண்டும்.

அதனைத் தொடர்ந்து
குழந்தை பூமியில்
விழுந்து தவழ்ந்து
நின்று ,ஓடி,
முழுமைத் தன்மை
பெற பல்வேறு
நிலைகளைக் கடக்க
வேண்டும் என்ற
நிலைகளைக் காட்டும்
தசாவதாரத்தின்
பத்து நிலைகளைத்
தொடர வேண்டும்

ஒவ்வொரு முறையும்
பிறந்து வரும்
மனிதன் தனது
கர்மாவைக் கழித்து
இறைவனை உணர்ந்து
இறைவனாக மாறவில்லை
எனில் மீண்டும் மீண்டும்
பிறக்க வேண்டும்

கல்கி அவதாரம்
படத்தில் குதிரையின்
பின்னங்கால்கள்
இரண்டும் தரையிலும்
இரண்டு கால்கள்
பூமியில் படாமல்
மேல்நோக்கியும் இருக்கும்
அந்தக் குதிரையின்
மேல் ஒருவன்
அமர்ந்தபடி கத்தியை
சுழற்றுவது போலவும்
படம் வரையப்பட்டிருக்கும்

அதாவது ஒருவன்
தன்னிலும் மேலான
சக்தியான இறைவனுடன்
தொடர்பு கொண்டு
இறைவனாக மாறாமல்
சிற்றின்பத்தில்
ஈடுபட்டு சண்டையிட்டுக்
கொண்டு வாழ்பவருக்கு
கர்மா என்பது
கூடிக்கொண்டே செல்லும்
அவருக்கு மறுபிறவி
உண்டு என்பதை
இப்படம் குறிக்கிறது

மறுபிறவி யாருக்கு
உண்டு என்பதையும்
மறுபிறவி யாருக்கு
இல்லை என்பதையும்
கல்கி அவதாரம்
விளக்குகிறது

குரங்கிலிருந்து
மனிதன் வந்தான் அதாவது
விலங்கிலிருந்து
மனிதன் வந்தான் என்றார்
சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வினுக்கு
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
தசாவதாரத்தின் மூலம்
நரசிம்ம அவதாரத்தில்
சிங்கம் முகமும்
மனித உடலும்
கொண்ட உயிரினத்திலிருந்து
மனிதன் வந்தான் என்று
நம் முன்னோர்கள்
சொன்னார்கள்

விலங்கும், மனிதனும்
சேர்ந்த நிலையான
யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு மனிதன்
வந்தான் என்பதையும்,

மனிதனிடம் ஏற்படும்
மாற்றத்தை கவனித்தாலே
உயிரினங்களின் பரிணாமக்
கோட்பாட்டைமனிதனே
வெளிப்படுத்துகிறான்
என்பதையும் நாம்
தெரிந்து கொண்டோம்
  
--------- இன்னும் வரும்
---------- 15-10-2018
////////////////////////////////////////////


October 13, 2018

திருக்குறள்-பதிவு-33


                    திருக்குறள்-பதிவு-33

(8) பலராமர் அவதாரம்

நாட்டில் தனக்கென்று
ஒரு இராச்சியத்தை
அமைத்துக் கொண்டு,
சட்ட திட்டங்களை
அமைத்துக் கொண்டு,
வாழ்ந்த மனிதன்
தன் பசியின்
தேவையைத் தீர்த்துக்
கொள்வதற்காக
உழுது பயிரிட்டு
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
விவசாயம் செய்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தினான்

உயிரினங்களின்
பரிணாமக்
கோட்பாட்டின்படி
நாட்டில் வாழ்ந்த
மனிதன் விவசாயம்
செய்து வாழ்வதற்கு
ஏதுவாக கலப்பையை
பயன் படுத்தி
விவசாயம் செய்து
வாழ்ந்தான்
என்பதைக் குறிப்பதே
பலராமர் தன் தோளில்
சுமந்திருக்கும்
கலப்பை ஆகும்.

இது தான்
பலராமர் அவதாரம்
எனப்படும்.

(9)கிருஷ்ண அவதாரம்

பல்வேறு குழுக்களாக
பிரிந்து தனித்தனியாக
தங்களுக்கென்று ஒரு
ராச்சியத்தை அமைத்துக்
கொண்டு தங்களுடைய
உணவுத் தேவையை
தாங்களே பூர்த்தி
செய்து கொள்ளும்
வகையில் விவசாயம்
செய்து வாழ்ந்த
மனிதன் நாளடைவில்
நிலம், நீர், ஆகாயம்
ஆகியவற்றில்
எல்லைகளை
வகுத்துக் கொண்டு
பல்வேறு
சட்டதிட்டங்களை
உருவாக்கிக் கொண்டு
வாழ்ந்தான்

பல்வேறு
சட்டதிட்டங்களை
வகுத்துக் கொண்டு
மனிதன் வாழ்ந்தாலும்
விலங்கின் தலையும்,
மனித உடலும்
கொண்ட யாளி என்ற
உயிரினத்திலிருந்து
விலங்கு நிலை
கழிக்கப்பட்டு
தோன்றிய மனிதனிடம்
விலங்கின் முக்கியமான
இரண்டு செயல்கள்
அப்படியே மனிதனிடம்
பதிந்து விட்டது

ஒன்று : உயிர் பறித்தல்
இரண்டு: பிறர்
         சுதந்திரத்தை
         பறித்தல்

சிங்கம் மானைக்
கொல்லும் செயல்
என்பது,
மானின் உயிரை
பறித்தலையும்,
மானின் சுதந்திரத்தை
பறித்தலையும்
குறித்தாலும்
அவைகள் தங்கள்
உணவுத் தேவைக்காகத்
தான் கொல்கிறதே
ஒழிய பிற
உயிர்களை
துன்புறுத்தி கொல்ல
வேண்டும் என்ற
தப்பான எண்ணம்
கொண்டு
கொல்லவில்லை

ஆனால் மனிதன்
தான் வாழ
வேண்டும் என்பதற்காக
மனதால்
நினைத்து கூட
பார்க்க முடியாத
எல்லாவிதமான
தப்பான காரியத்தையும்
செய்யத் துணிவதுடன்,
பிற உயிரை
பறித்தலையும்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தலையும்
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற
பால்கவர்ச்சி,
உயர்வு - தாழ்வு
மனப்பான்மை,
வஞ்சம் ஆகிய
ஆறு வகையான தீய
குணங்களைக் கொண்டு
பாவம் என்று
தெரிந்தும் துணிந்து
பாவத்தைச்
செய்கிறான்.

உலகில் செய்யப்பட்டுக்
கொண்டிருக்கும்
அனைத்து
பாவங்களையும்
நாம் நன்கு
ஆராய்ந்து பார்த்தால்
உலகில் செய்யப்படும்
பெரும்பாலான
பாவங்கள் அனைத்தும்
உயிர் பறித்தல்,
பிறர் சுதந்திரத்தைப்
பறித்தல் என்ற
இரண்டுக்குள்
தான் இருக்கும்
என்பதையும்
இதிலிருந்து
மனிதன்
விலங்குத் தன்மையுடன்
தான் இருக்கிறான்
மனிதத் தன்மையை
அடையவில்லை
என்பதையும்
நாம் தெரிந்து
கொள்ளலாம்

இவ்வாறு
தான் நலமாக
வாழ வேண்டும்
என்பதற்காக
பிற உயிரை
பறிப்பது
பிறர் சுதந்திரத்தை
பறிப்பது
போன்ற செயல்களை
செய்யும் மனிதர்கள்
வாழ்ந்த நிலையை
அதாவது அதர்மத்தின்
உச்சத்தில்
மனிதனுடைய வாழ்க்கை
இருந்ததைக் குறிப்பது
கிருஷ்ண அவதாரம்
ஆகும்

--------- இன்னும் வரும்
---------- 13-10-2018
///////////////////////////////////////////


October 10, 2018

வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் மடல்



அன்பிற்கினியவர்களே,
10-10-2018-ம் தேதி
அன்று பிறந்த நாள்
கொண்டாடும் எனக்கு
வாழ்த்து தெரிவித்த
அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும்
என் நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

நான் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்த
காலத்தில்
தலைப்பு கொடுத்தவுடன்
கவிதை எழுதும் பழக்கமும்,
ஒரு காட்சியைக்
காண்பித்தால்  உடனே
கவிதை எழுதும் பழக்கமும்
எனக்கு இருந்தது

சில கவிதைகளுக்கு
என்று தனிப்பட்ட
கதைகள் உண்டு
அந்த கதைகளை
நான் நினைக்கும் போது
நான் எந்த நிலையில்
இருந்திருக்கிறேன்
என்பதை நினைத்துக்
கொள்வேன்

என்னுடன் படித்துக்
கொண்டிருந்த நண்பர்கள்
கவிதை எழுதுவதற்கு
சில சமயம் தலைப்பு
சொல்வார்கள்
சில சமயம் காட்சியைக்
காண்பித்து கவிதை எழுதச்
சொல்வார்கள் நான்
அவர்கள் சொன்னதற்கு
ஏற்ப கவிதைகள்
எழுதுவேன்


பெரும்பாலும் நான்
கவிதைகளை பேருந்து
பயணச்சீட்டின் பின்புறத்திலும்,
சிறு சிறு துண்டு பேப்பரிலும்
தான் எழுதினேன்
எங்கே நிற்கிறேனோ
அந்த இடத்திலேயே நின்று
கவிதை எழுதி விடுவேன்

அப்புறம் வீட்டிற்கு
வந்த உடன் நோட்டில்
எழுதி வைப்பேன்

அவ்வாறு நான்
கவிதைகள் எழுதிக்
கொண்டிருந்த காலத்தில்
ஒரு நாள் பேருந்து
நிலையத்தில் நான்
நண்பர்களுடன் நின்று
கொண்டிருந்தேன்
அப்பொழுது என்
நண்பர்கள் ஒரு
காதல் கவிதை எழுது
என்றார்கள்
நான் காதல் கவிதை
தானே எழுதித் தருகிறேன்
காட்சியை சொல்லு
அல்லது காட்சியைக்
காட்டு என்றேன்

ஒரு நண்பன் சொன்னான்
காதல் கவிதை
அகர வரிசையில்
இருக்க வேண்டும் என்றான்

சரி நான் எழுதுகிறேன்
ஆனால் கல்லூரியில்
சென்று எழுதுகிறேன்
என்றேன் இல்லை நீ
இங்கேயே எழுத
வேண்டும் என்றார்கள்
நான் எழுதாமல்
தப்பிப்பதற்காக
நான் சொல்கிறேன்
யாரேனும் எழுதுங்கள்
என்னை மறுபடியும்
கேட்கக் கூடாது
நான் ஒரு முறை தான்
கூறுவேன் என்று கூறினேன்

நாங்கள் எழுதுகிறோம்
நீ சொல்லு என்றார்கள்
இந்த பதிலை நான்
எதிர்பார்க்கவில்லை
சரி என்று நான்
நிதானமாக மெதுவாக
ஒரு ஒரு
வார்த்தையாக சொன்னேன்
சொன்ன வார்த்தையை
நான் மீண்டும் திருப்பி
சொல்லவேயில்லை
நான் கண்ணை மூடிக்
கொண்டு தொடர்ச்சியாக
கவிதையைக் கூறி முடித்து
நண்பர்களைப் பார்த்தேன்

உணர்ச்சி வசப்பட்டு
ஒரு நண்பன் சொன்னான்
நண்பா இன்று நாம்
ஓட்டலுக்கு போகிறோம்
என்ன வேண்டுமானாலும்
சாப்பிடு அனைத்து
செலவும் என்னுடையது
என்றான்
மற்ற நண்பர்களும்
சொன்னார்கள்
நாங்கள் அனைவரும்
சேர்ந்தே செய்கிறோம்
இன்று முழுவதும்
சுற்றப் போகிறோம்
உனக்கு என்ன
வேண்டுமானாலும்
வாங்கிக் கொள்
செலவுகள் அனைத்தும்
எங்களுடையது என்று
சொன்னார்கள்
நான் வேண்டாம் என்று
எவ்வளவு எடுத்துச்
சொல்லியும் யாரும்
என்னை விடவில்லை
நண்பர்களுடன் அன்று
முழுவதும் பொழுதைக்
கழித்தேன்

நான் கல்லூரியில்
படித்துக் கொண்டிருந்தபோது
நடந்த இன்பமான
நிகழ்வுகளை நினைத்துக்
கொண்டிருந்தபோது
இந்த நிகழ்வும்,
நான் கையினால் எழுதாமல்
வாயினால் வார்த்தையால்
சொல்லிய அந்தக்
கவிதையும் என்
நினைவுக்கு வந்தது
அந்தக் கவிதை இது தான்

ன்பே
சையுடன் கேட்கிறேன்
ல்லை என்று
      சொல்லாதே
  ந்து விடு
       உன் இதயத்தை
  னக்காகத் தான் நான்
 ரைப்பற்றி
     கவலைப்படாதே
   ன்னுடன் ஓடிவா
   க்கம் கொள்ளாதே
  யப்பாட்டை நீக்கி வா
  ன்றாக இருப்போம்
  ரிடத்தில்-நீ
 வையாராய்
      ஆனாலும்
     உன்னை நான்
     காப்பாற்றுவேன்”


என்ற கவிதையைஅன்று
நான் சொல்லிய போது
நான் எத்தகைய நிலையில்
இருந்திருக்கிறேன்  என்பதை
என்னுடைய பிறந்த
நாளான இன்று நினைத்துப்
பார்த்துக் கொள்கிறேன்

என்னுடைய பிறந்த
நாளில் அந்த நிகழ்வை
நான் தங்களுடன்
பகிர்ந்து கொள்வதில்
நான் மனம் மகிழ்கிறேன்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்