November 03, 2018

திருக்குறள்-பதிவு-45


                       திருக்குறள்-பதிவு-45

பிரபஞ்சத்தின்
மையப்பகுதி பூமி
இந்த பூமியை
மையமாக வைத்துத்தான்
சூரியன் சுற்றி
வருகிறது என்ற
பூமி மையக்
கோட்பாட்டை
(Geo-Centric Theory)
தாலமி (கி.பி.85-165)
சொன்னார்

எகிப்து நாட்டின்
விஞ்ஞானியான
தாலமி பூமி மையமாக
இருப்பது போலவும்
பூமியைச் சுற்றி
8 கோள வளையங்களில்
முறையே சந்திரன்,
புதன், வெள்ளி,
சூரியன், செவ்வாய்,
வியாழன், சனி
மற்றும் நிலையான
நட்சத்திரங்கள்
இருப்பது போலவும்
ஒரு வரைபடத்தை
உருவாக்கினார்
இந்த வரைபடம்
பிரபஞ்சத்தில் உள்ள
கோள்களை
தொலை நோக்கியால்
ஆராய்ந்து பார்த்து
வரையப் படவில்லை

இந்த வரைபடம்
பிரபஞ்சத்தில் உள்ளவற்றை
வெறும் கண்களால்
மட்டுமே பார்த்து
குறிப்பிட்ட அனுமானத்தை
அடிப்படையாகக் கொண்டு
பொருட்களின் இயக்கத்தைப்
பற்றி விளக்கியது

டாலமி வரைந்த
வரைபடம்
விஞ்ஞான ரீதியாக
இல்லாமல் இருந்தாலும்
டாலமியின் பூமி
மையக் கோட்பாடு
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஒத்துக் கொள்ளப்பட்ட
காரணத்தினால்
உலகம் தாலமியின்
கண்டுபிடிப்பான
பூமி மையக் கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டது

பூமி மையக்
கோட்பாட்டை தாலமி
சொன்ன நாள் முதல்
பல நூற்றாண்டுகளாக
பூமி தான் பிரபஞ்சத்தின்
மையப்பகுதி என்றும்
அதனையே சூரியன்
சுற்றி வருகிறது என்றும்
நம்பப்பட்டு வந்தது

தாலமிக்கு பல
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வந்த போலந்து
நாட்டைச் சேர்ந்த
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் (1473 - 1543)
என்பவர் சூரியன்
நிலையானதாக அமைந்து
பூமி உட்பட கோள்கள்
அதனைச் சுற்றி
நுட்பமாக வட்டப்
பாதையில் இயங்குகின்றன
என்ற சூரிய மையக்
கோட்பாட்டை
(Heliocentric Theory) கூறினார்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
சேகரித்து வைத்த
தகவல்கள் மற்றும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து வைத்த
தகவல்கள் ஆகியவற்றைச்
சேர்த்து வைத்து
பல நூற்றாண்டுகளாக
மக்கள் சரியானது என்று
நம்பிக் கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டிற்கு பதில்
சூரிய மையக்
கோட்பாட்டை சொன்னார்

மேலும், அறிவியல்
மூலம் ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்டு
சேகரித்து வைக்கப்
பட்டிருக்கும்
பல்வேறு தகவல்களை
அடிப்படையாகக் கொண்டு
எந்த கண்டு பிடிப்பை
நாம் கண்டு பிடித்துக்
கொண்டிருக்கிறோமோ
அந்த கண்டுபிடிப்பு
இப்படித் தான்
இருக்க வேண்டும் என்ற
முடிவுக்கு வரலாம்
என்ற வழிமுறையை
புதியதாக ஏற்படுத்தினார்

டாலமியால் சொல்லப்பட்ட
பூமி மையக் கோட்பாடு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
இருந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
அதனால் உலகம்
ஏற்றுக் கொண்டது

ஆனால்,
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸால் சொல்லப்பட்ட
சூரிய மையக் கோட்பாடு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதவாதிகளால்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை
எனவே, உலகம்
ஏற்றுக் கொள்ள்வில்லை

இவர்கள் இருவருக்கும்
பிறகு வந்த கலிலியோ
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும்;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக்
கோட்பாடே சரி என்றும்;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
தனது கருத்தை
சொன்ன காரணத்தினால்,
உலகில் உள்ள அனைத்து
கிறிஸதவ மதவாதிகளும்
ஓரணியில் திரண்டு
கலிலியோவிற்கு
எதிராக நின்றனர்.

கலிலியோ தன்னுடைய
கண்டுபிடிப்பான
சூரிய மையக் கோட்பாட்டை
மக்கள் மத்தியில்
கொண்டு செல்வதற்கு
கிறிஸ்தவ மதவாதிகளுக்கு
எதிராக அவர் நடத்திய
போராட்டங்கள்
மனித வரலாற்றில்
ஒரு மைல்கல் என்று
கம்யூனிஸ சிந்தனையாளர்
பிரடெரிக் ஏங்கல்ஸ்ஸால்
புகழ்ந்து உரைக்கப்பட்ட
வார்த்தைகளை நாம்
நினைக்கும் போது
கலிலியோ எவ்வளவு
தன் வாழ்க்கையில்
கஷ்டப்பட்டிருப்பார்
என்பதை நாம்
அறிந்து கொள்ளலாம்

கலிலியோ தன்னுடைய
கண்டுபிடிப்பை
மக்கள் மத்தியில்
கொண்டு செல்வதற்கு
கிறிஸ்தவ மதவாதிகளுக்கு
எதிராக அவர் நடத்திய
போராட்டங்களைப்
பற்றி இனி பார்ப்போம்

---------  இன்னும் வரும்
---------  02-11-2018
///////////////////////////////////////////////////////////


November 01, 2018

திருக்குறள்-பதிவு-44


                      திருக்குறள்-பதிவு-44

பிரபஞ்சத்தின்
மையப்பகுதி பூமி
இந்த பூமியை
மையமாக வைத்துத்தான்
சூரியன் சுற்றி
வருகிறது
இதற்கு பூமி
மையக் கோட்பாடு
(Geocentric Theory)
என்று பெயர்
இதனை
தாலமி (கி.பி.85-165)
என்பவர் கூறினார்

தாலமியின் காலகட்டத்தில்
கிறிஸ்தவ மதம்
அதிக அளவு
அதிகாரத்தை
உடையதாக இருந்தது;
அளவிடற்கரிய
செல்வாக்கை
கொண்டதாக இருந்தது;
எத்தகைய ஒன்றையும்
நிர்ணயிக்கக்கூடிய
சக்தியாக இருந்தது;
தேவையுள்ள
அரசை உருவாக்கக்கூடிய
சக்தியாகவும்;
தேவையுள்ள
அரசையே ஆட்டி வைக்கக்
கூடிய சக்தியாகவும்;
தேவையில்லாத
அரசை அகற்றக்கூடிய
சக்தியாகவும்;
அது திகழ்ந்தது

கிறிஸ்தவ மதம்
அசைக்க முடியாத
மாபெரும் சக்தியாக
திகழ்ந்து கொண்டிருந்த
அந்த காலகட்டத்தில்
வாழ்ந்த விஞ்ஞானிகளை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

ஒன்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்

இரண்டு
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்


பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
ஒன்றுபட்டு கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்
மதிக்கப்பட்டனர்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக கண்டுபிடிப்பை
கண்டுபிடித்து
சொன்னவர்கள்
துன்புறுத்தப்பட்டனர்
அல்லது
கொல்லப்பட்டனர்

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு ஒன்றுபட்டு
கண்டுபிடிப்பை
கண்டுபிடித்தவர்கள்
எந்தவித அச்சமும்
இல்லாமல் தாங்கள்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை
இந்த சமுதாயத்திற்கு
சொன்னார்கள்

பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக கண்டுபிடிப்பை
கண்டுபிடிக்கிறவர்கள்
தண்டிக்கப் படுகிறார்கள்
என்பதை உணர்ந்த
சில விஞ்ஞானிகள்
தாங்கள் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை வெளியே
சொல்லவே பயந்தனர்
அவர்களில் ஒரு சிலர்
தாங்கள் கண்டுபிடித்த
கண்டுபிடிப்புகள்
பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருந்தாலும்
எதைப் பற்றியும்
கவலலைப்படாமல்
துணிந்து தாங்கள்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை
இந்தச் சமுதாயத்திற்கு
சொன்னார்கள்

இத்தகைய
விரும்பத்தகாத
சூழ்நிலை நிலவிய
சமயத்தில்
தாலமி சொன்ன
கருத்தானது
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
எதிராக இல்லாமல்
இருந்ததாலும்;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்களுடன்
ஒன்று பட்டு
இருந்ததாலும்;
கிறிஸ்தவ மதக்
கோட்பாட்டை
எந்தவிதத்திலும்
பாதிக்காமல் இருந்த
காரணத்தினாலும்;
கிறிஸ்தவ சமயவாதிகளின்
மனம் புண்படும்
வகையில் இல்லாத
காரணத்தினாலும்;
தாலமியின்
கண்டுபிடிப்பில் உள்ள
கருத்தானது
முதலில் கிறிஸ்தவ
மதவாதிகளால் ஏற்றுக்
கொள்ளப்பட்டு சரி
என்று ஒப்புதல்
அளிக்கப்பட்ட பிறகே
தாலமியின்
கண்டுபிடிப்பான
பூமி மையக் கொள்கையை
இந்த உலகம்
ஏற்றுக் கொண்டது

பூமி மையக்
கோட்பாட்டை தாலமி
சொன்ன நாள் முதல்
பல நூற்றாண்டுகளாக
பூமி தான்
பிரபஞ்சத்தின்
மையப்பகுதி என்றும்
அதனையே சூரியன்
சுற்றி வருகிறது
என்றும்
நம்பப்பட்டு வந்தது

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு
ஒன்றுபட்டு தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பான
பூமி மையக் கொள்கையை
தாலமி சொன்னார்

தாலமிக்கு பல
நூற்றாண்டுகளுக்குப்
பின்னர் வந்த
நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
என்பவர் பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்கு
எதிராக உள்ளதாகக்
கருதப்படும் தான்
கண்டுபிடித்த
கண்டுபிடிப்பே
சரி என்றும்
தாலமி சொன்ன
பூமி மையக்
கொள்கை தவறு
என்றும் சொன்னார்.

---------  இன்னும் வரும்
---------  01-11-2018
///////////////////////////////////////////////////////////


October 31, 2018

திருக்குறள்-பதிவு-43


                     திருக்குறள்-பதிவு-43

இத்தாலி நாட்டிலுள்ள
பைசா நகரத்தில்
கி.பி.1564-ஆம் ஆண்டு
பிப்ரவரி 15-ம் நாள்
வின்சென்சோ கலிலி
என்பவருக்கும்
குயுலியோ அம்மன்னடி
என்பவருக்கும்
ஆறு பிள்ளைகளில்
மூத்த மகனாகப் பிறந்து
விஞ்ஞான உலகில்
புரட்சியை ஏற்படுத்திய
அந்த விஞ்ஞானி தான்
கலிலியோ கலிலீ,
(Galileo Galilei)

அதிகமாக
சிந்திக்கும் திறனும்,
ஆழமாக யோசிக்கும்
தன்மையும்,
இளமையில் இயல்பாகவே
பெற்றிருந்தார் கலிலியோ
கலிலியோ
17 வது வயதை
அடைந்த போது
பிசா பல்கலைக் கழகத்தில்
(University of Pisa)
சேர்ந்தார்
கணிதத்தையும்,
இயற்பிலையும்
கற்றார்
அந்த பல்கலைக்
கழகத்தில் அதிகமான
கேள்விகளைக்
கேட்ட மாணவர்களில்
முதல் மாணவனாக
இருந்தவர் கலிலியோ

மாணவர்களுக்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளை
மற்ற மாணவர்கள்
எந்தவிதமான
கேள்விகளையும்
கேட்காமல்
அப்படியே ஏற்றுக்
கொண்டு மறுப்பு
ஏதும் சொல்லாமல்
கல்வியை
கற்றுக் கொண்டு
வந்த சூழலில்
கலிலியோ மட்டும்
அறிவியல் கோட்பாடுகளுக்கான
ஆதாரங்களைக் கேட்பார்
ஆதாரங்கள் இல்லாத
அறிவியல் கோட்பாடுகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்

கலிலியோவிற்கு
கற்பிக்கப்பட்ட அறிவியல்
கோட்பாடுகளில் ஒன்றான
அரிஸ்டாட்டிலின் விதி
வெவ்வேறு
எடையுடைய இரண்டு
பொருட்களை
உயரத்திலிருந்து
கீழே போட்டால்
அதிக எடையுடைய
பொருள் முதலிலும்
லேசான பொருள்
பின்னரும் தரையில்
விழும் என்று
கற்பிக்கப்பட்டது

அரிஸ்டாட்டில்
கூறியிருந்த இந்த
விதியை
கலிலியோ ஏற்றுக்
கொள்ளவில்லை
ஒருவர் சொன்ன
விஞ்ஞான கருத்து
உண்மை என்று நம்பி
நாம் அப்படியே
ஏற்றுக் கொள்ளக்
கூடாது
விஞ்ஞானக் கருத்துக்களை
நாம் ஏற்றுக் கொள்ள
வேண்டுமானால்
அந்த விஞ்ஞானக்
கருத்துக்கள்
அறிவியல்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டிருக்க
வேண்டும் என்று
கூறிய கலிலியோ
அரிஸ்டாட்டில்
கூறிய இந்த விதியை
ஏற்றுக் கொள்ளவில்லை
இதனால் ஆசிரியர்களின்
கடுமையான கோபத்திற்கு
ஆளாகக்கூடிய நிலை
கலிலியோவிற்கு ஏற்பட்டது.

பட்டம் பெற்ற
கலிலியோ
தன்னுடைய 25-ம் வயதில்
அதே பல்கலைக்கழகத்தில்
கணித ஆசிரியராக
சேர்ந்தார்

படிக்கும் காலத்தில்
தவறான விதி
என்று கலிலியோவால்
நம்பப்பட்ட
அரிஸ்டாட்டிலின் விதியை
ஆசிரியராக மாறிய
கலிலியோ
தவறு என்று
சோதனை மூலம்
நிரூபிக்க முயன்றார்

அதற்காக நிறைய
மக்களை அழைத்து
பைசா நகரத்தின்
சாய்ந்த கோபுரத்தின்
தரையில் நிற்க
வைத்து விட்டு
பிசாவின் சாய்ந்த
கோபுரத்தின் மீது
ஏறி நின்று மேலிருந்து
வெவ்வேறு
எடையுள்ள இரண்டு
குண்டுகளை
ஒரே சமயத்தில்
கீழே விழ விட்டு
அவை இரண்டும்
ஒரே சமயத்தில்
பூமியில் வந்து
விழுவதை
தனது சோதனை மூலம்
நிரூபித்துக் காட்டி
அரிஸ்டாட்டில்
சொன்ன விதியை
தவறு என்று
நிரூபித்தார்

அறிவியல் கருத்துக்கள்
தத்துவ ரீதியாக
சொல்லப்பட்டு வந்த
நிலையில்
முதன் முதலாக
சோதனையின் மூலம்
செயல்முறை விளக்கங்கள்
மூலம் அறிவியல்
கருத்துக்களை
வெளியிட்ட பெருமை
கலிலியோவையேச் சாரும்

இந்த நிகழ்ச்சியைத்
தொடர்ந்து
கலிலியோவால்
பிசா பல்கலைக்
கழகத்தில் பணியாற்ற
முடியவில்லை
University of Padua
பல்கலைக் கழகத்தில்
ஆசிரியராகச் சேர்ந்தார்

அரிஸ்டாட்டிலின்
ஒரு சிறிய விதியை
தவறு என்று
நிரூபிக்கவே கலிலியோ
கஷ்டப்பட வேண்டி
இருந்தது
அப்படி இருக்கையில்
உலகம் முழுவதும்
பல ஆண்டுகளாக
மக்களால் சரி
என்று ஏற்றுக்
கொள்ளப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
ஒரு முக்கியமான
விதியை தவறு என்று
நிரூபிப்பதற்கும்,
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
கருத்தை சொல்லி
அதை நிரூபிப்பதற்கும்,
கலிலியோ அதிக
கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டி இருந்தது
கலிலியோ பட்ட
கஷ்டங்கள் என்ன
என்பதைப் பற்றி
இனி பார்ப்போம்

---------  இன்னும் வரும்
---------  31-10-2018
///////////////////////////////////////////////////////////