November 19, 2018

திருக்குறள்-பதிவு-52


                       திருக்குறள்-பதிவு-52

சமுதாயத்தில்
ஒரு செய்தியை
மறைமுகமாக
சொல்வதற்கு இரண்டு
விதமான முறைகள்
பின்பற்றப்படுகின்றன

ஒன்று :
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இரண்டு:
ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

இலங்கையில்
இருந்து ஒரு மந்திரி
தமிழ்நாட்டின்
தலைநகரமான
சென்னைக்கு ஒரு
விஷயமாக வருகிறார்
அவரை எதிர்த்து
தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களில் அதாவது
மதுரை, தென்காசி
திருநெல்வேலி,
கன்னியாகுமரி போன்ற
மாவட்டங்களில்
இலங்கை மந்திரியை
எதிர்த்து போஸ்டர்கள்
அடித்து ஒட்டப் படுகிறது;
போராட்டங்கள்
நடத்தப் படுகிறது;

இந்த செயலைப்
பார்ப்பவர்கள் இந்த மந்திரி
சென்னைக்கு வருகிறார்
இவரை எதிர்ப்பவர்கள்
தென்காசியில் எதற்கு
போஸ்டர் ஒட்டுகிறார்கள்
தென்காசியில் எதற்கு
போராட்டம் நடத்துகிறார்கள்
சென்னைக்கும் தென்காசிக்கும்
என்ன சம்பந்தம்
இருக்கிறது என்று
கேள்வி கேட்கிறார்கள்

சென்னைக்கு வருபவருக்கு
இங்கே தென்காசியில்
நடப்பது எப்படி தெரியும்
இலங்கை மந்திரிக்கு
எதிராக தென்காசியில்
ஒட்டப்பட்ட போஸ்டரை
அவர் என்ன தென்காசியில்
வந்து படிக்கவா
போகிறார் அல்லது
தென்காசியில் அவருக்கு
எதிராக நடக்கும்
போராட்டத்தை நேரில்
வந்து பார்க்கவா போகிறார்
என்று கிண்டல்
செய்கிறார்கள்

இலங்கையில் இருந்து
சென்னைக்கு வரும்
இலங்கை மந்திரியை
எதிர்த்து
ஒட்டப்படும் போஸ்டர்
நடத்தப்படும் போராட்டம்
ஆகிய செயல்கள்
அனைத்தும் இலங்கை
மந்திரிக்கு ஒரு
செய்தியை சொல்வதற்காக
நடத்தப்பட்ட செயல் அல்ல

பல தவறுகள் செய்த
இலங்கை மந்திரியைப்
பற்றி மக்கள்
தெரிந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக
செய்யப்பட்ட
செயல்கள் தான்
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகிய செயல்கள்
அனைத்தும்
அதாவது தவறுகள்
பலவற்றைச் செய்த
இலங்கை மந்திரி
நம் நாட்டுக்குள்
வருகிறார் என்ற
செய்தியை மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
இவரை நம் நாட்டிற்குள்
அனுமதிப்பதன் மூலம்
அவர் செய்த தவறுகள்
நம் நாட்டிலும்
நடப்பதற்கு வாய்ப்புகள்
இருக்கிறது என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும் ;
மக்கள் அனைவரும்
விழிப்புடன் இருந்து
தவறுகள் நடக்காத
வண்ணம் தங்களை
பாதுகாத்துக் கொள்ள
வேண்டும் என்பதை
தெரியப்படுத்த வேண்டும்
என்பதற்காகவும்
செய்யப்பட்ட செயல்கள்
தான் இலங்கை
மந்திரியை எதிர்த்து
போஸ்டர் ஒட்டியது
போராட்டம் நடத்தியது
ஆகியவை எல்லாம்
என்பதை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்

அதாவது
ஒரு நல்ல
செயலின் மூலம்
ஒரு நல்ல செய்தி
மறைமுகமாக
சொல்லப்படுகிறது

கலிலியோவின்
புத்தகத்தை எரிக்க
உத்தரவிட்டது
கலிலியோவை வீட்டுக்
காவலில் வைக்க
உத்தரவிட்டது ஆகிய
இந்த செயல்கள்
அனைத்தும் கலிலியோ
தன்னை திருத்திக்
கொள்ள வேண்டும்
என்பதற்காக வழங்கப்
பட்ட தண்டனை இல்லை
கலிலியோவிற்கு
வழங்கப்பட்ட
தண்டனையைப்
பார்த்து இந்த உலகம்
ஒன்றை தெரிந்து
கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான்
வழங்கப்பட்டது

அதாவது பைபிளுக்கு
எதிராக யார் கருத்து
சொன்னாலும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக யார் நடந்து
கொண்டாலும்
அவர்களுக்கும்
கலிலியோவிற்கு
ஏற்பட்ட இந்த கதிதான்
அனைவருக்கும் ஏற்படும்
என்பதை ஒரு கெட்ட
செயலின் மூலம்
ஒரு கெட்ட செய்தி
இந்த மக்களுக்கு
மறைமுகமாக
தெரிவிக்கப்பட்டது

ஒரு நல்ல செயலின்
மூலம் ஒரு நல்ல
செய்தி மறைமுகமாகவும்;
ஒரு கெட்ட செயலின்
மூலம் ஒரு கெட்ட
செய்தி மறைமுகமாகவும்;
இரு வேறுபட்ட
செயல்களின் மூலம்
இரு வேறுபட்ட செய்திகள்
இந்த சமுதாயத்தில் உள்ள
மக்கள் அனைவருக்கும்
தெரியப்படுத்தும் பொருட்டு
தெரியப்படுத்தப் பட்டு
வருகிறது என்பதை நாம்
நினைவில் கொள்ள
வேண்டும்

---------  இன்னும் வரும்
---------  19-11-2018
///////////////////////////////////////////////////////////


November 17, 2018

திருக்குறள்-பதிவு-51



                       திருக்குறள்-பதிவு-51

பைபிளுக்கு எதிராக
நாங்கள் ஒரு சிறு
வார்த்தையையும்
அனுமதிக்க மாட்டோம்;
அப்படி இருக்கும்போது
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறு
என்று சொல்வதையும்
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்படுவதையும்
நாங்கள் எப்படி
பார்த்துக் கொண்டு
இருக்க முடியும்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படுமானால்
பைபிளில் உள்ள
கருத்துக்கள் சரியானதா
என்று சந்தேதிக்கும்
நிலை வந்து விடும்
கிறிஸ்தவ கடவுள்
உண்மையான
கடவுளா என்று
மக்கள் சிந்திக்கத்
தொடங்கி விடுவார்கள்
அது மட்டுமல்ல
இயேசு கிறிஸ்துவின்
வார்த்தைகளும்
சரியானவைகள் தானா
என்று கேள்வி
கேட்கும் நிலைக்கு
மக்கள் வந்து
விடுவார்கள்
கடவுளின் பிரதிநிதிகளாகிய
எங்களையே
சந்தேகக் கண் கொண்டு
பார்க்கும் நிலைக்கு
தள்ளப்பட்டு விடுவோம்

பைபிளில் ஒரு
தவறு இருந்தால்
இன்னும் எத்தனை
தவறுகள்
பைபிளில் இருக்கிறதோ
என்று பைபிளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை
அருளிய கடவுளை
தப்பாக நினைப்பார்கள்;
பைபிளை போதிக்கும்
எங்களை தப்பாக
நினைப்பார்கள்;
இவைகளை எல்லாம்
நாங்கள் எப்படி
அனுமதிக்க முடியும்;
என்றார் விசாரணை
நடத்திய போப்

பைபிள் ஒன்றும்
அறிவியல்
கண்டு பிடிப்புகளின்
ஆவணமோ
தகவல் களஞ்சியமோ
கிடையாது
அது ஒரு
வாழ்வியல் நூல்

பைபிள் மனிதன்
இந்த உலகத்தில்
எப்படி வாழ வேண்டும்
என்பதை போதிக்கக்கூடிய
ஒரு மத நூல்
அப்படி இருக்கும்போது
பைபிளில் உள்ள
விஞ்ஞான கண்டுபிடிப்புகள்
சரியானவை என்று
எப்படி சொல்ல முடியும்

நான் ஒரு விஞ்ஞானி
நான் கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
சொன்னேன்;
நான் பைபிளில்
சொல்லப்பட்டதற்கு
எதிராக சொன்னேன்
என்பதையும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறேன்
என்பதையும்,
என்னால் எப்படி
ஏற்றுக் கொள்ள
முடியும்

நான் பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்ல
வேண்டும்
என்பதற்காக கருத்து
சொல்லவில்லை
நான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
இருக்கிறது
அவ்வளவு தான்

பைபிளில் உள்ள
கருத்து தவறு
என்று சுட்டிக்
காட்டப்படும்போது
அந்த தவறை ஏற்று
திருத்திக் கொள்ள
வேண்டும்
அப்படி திருத்திக்
கொள்ளாமல்
தவறை சுட்டிக்
காட்டுபவர்களை
விசாரரிப்பதில்
ஒரு நியாயமும்
இல்லை

நான் கண்டுபிடித்து
சொன்ன கருத்து
சரிதான்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நான் சொன்ன
கருத்து சரிதான்
நான் என்னுடைய
கருத்தை மாற்றிக்
கொள்ள மாட்டேன்
என்றார் கலிலியோ

இதனால் கலிலியோவை
விசாரித்த போப்புகள்
கலிலியோ சாகும்வரை
பிளாரென்ஸ் நகர்க்கருகில்
அர்செற்றி (ARCETRI)
என்னுமிடத்தில்
வீட்டுக் காவலில்
(HOUSE ARREST)
வைக்க உத்தரவு
இட்டனர்

இரு பிரதான உலக
அமைப்புகள் தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning the
Two Chief World
Systems)
என்ற கலிலியோவின்
நூலைத் தீயிட்டுக்
கொளுத்தும்படி
ரோமபுரி மடாதிபதிகள்
கட்டளையிட்டனர்

கலிலியோவிற்கு
அளிக்கப்பட்ட
வீட்டுக் காவல்
என்ற
தண்டனைச் செய்தி
எல்லாப்
பல்கலைக் கழகங்களிலும்
வாசிக்கப்பட வேண்டும்
என்று கட்டளை
இடப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  17-11-2018
///////////////////////////////////////////////////



November 16, 2018

திருக்குறள்-பதிவு-50


                        திருக்குறள்-பதிவு-50

மக்களுக்கு பயன்படும்
வகையில் கண்டு
பிடிக்கப்படும்
சரியான ஒரு செயலை
தவறு என்று சொல்வதற்கு
அந்தக் காலம் முதல்
இந்தக் காலம் வரை
இந்த உலகத்தில்
நிறைய பேர்கள்
இருந்து வந்திருக்கிறார்கள்

சூரியனை மையமாக
வைத்து பூமி
சுற்றுகிறது என்று
சரியான ஒரு செயலை
கலிலியோ சொன்னதை
தவறு என்று சொல்லி
கலிலியோவை
விசாரணைக்கு அழைத்த
விசாரணைக்குழு முன்பு
கலிலியோ நின்று
கொண்டு இருந்தார்

பைபிளில்
சொல்லப்பட்டது போல்
தாலமி சொன்ன பூமியை
மையமாக வைத்து
சூரியன் சுற்றுகிறது
என்ற பூமி மையக்
கோட்பாடு சரி என்றும்
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நிகோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரியனை மையமாக 
வைத்து பூமி
சுற்றுகிறது என்ற
சூரிய மையக்
கோட்பாடு தவறு
என்றும் சொல்லி
எழுதி கொடுக்க
வேண்டும் என்று
போப்புகள் அடங்கிய நீதி
விசாரணைக் கூடத்தின்
தலைமைப் போப்பு
விசாரணைக்
கைதியாக இருக்கும்
கலிலியோவைப்
பார்த்து கூறினார்


தலைமைப் போப்பு
கலிலியோவைப்
பார்த்து நீ இறந்து
விடுவதற்கு முன்பாக
நீ சொன்ன உன்னுடைய
அறிக்கையை மாற்று
ஏனென்றால் நீ
சொன்ன கோட்பாடு
பைபிள் என்ற
புனிதமான நூலுக்கு
எதிராக இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருக்கிறது;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
யார் கருத்து
சொன்னாலும்
அது குற்றம் தான்;
அது தவறு தான்;
ஏனென்றால்
கிறிஸ்தவர்கள்
புனிதமாகக் கருதும்
பைபிள் கடவுளால்
அருளப்பட்டது
பைபிளில் உள்ள
கருத்துக்களை தவறு
என்று சொல்வதற்கு
யாருக்கும் அதிகாரம்
இல்லை என்று
கூறினார்

இந்த பிரச்சினை
ஒன்றும் பெரிய
பிரச்சினையும்
கிடையாது;
ஒன்றும் வருத்தப்பட
வேண்டிய
பிரச்சினையும்
கிடையாது;
எப்படி மாற்ற
வேண்டும் என்று
நீங்கள் நினைக்கிறீர்களோ
அப்படி நானே இதை
மாற்றி விடுகிறேன்;
கடவுள் பைபிளில்
என்ன சொல்லி
இருக்கிறாரோ அப்படியே
மாற்றி விடுகிறேன்;
அப்படியே அறிக்கை
விடுகிறேன்;
ஆனால் ஒரு
விஷயத்தை நீங்கள்
அனைவரும் புரிந்து
கொள்ள வேண்டும்

என்னுடைய அறிக்கையை
சூரியனோ அல்லது
பூமியோ படிக்கப்
போவதில்லை
அவைகள் தங்கள்
நிலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
உண்மையைப்
பொறுத்தவரை
அவைகள் தங்கள்
வேலையை மாற்றிக்
கொள்ளப் போவது
இல்லை;
பூமி எப்போதும்
சூரியனைச் சுற்றியே
வலம் வரும் என்ற
நிலை இருக்கும் போது
நீங்கள் ஏன் என்னை
மாற்றி சொல்ல
வேண்டும் என்று
இப்படி வற்புறுத்துகிறீர்கள்

நான் இந்த
ஆராய்ச்சியை
செய்வதற்காக
என்னுடைய வாழ்க்கையை
முழுவதுமாக
செலவு செய்திருக்கிறேன்
நான் ஆராய்ச்சி
செய்து உண்மையைக்
கண்டுபிடித்ததற்கான
ஆதாரங்கள
என்னிடம் இருக்கின்றன

மற்ற விஞ்ஞானிகள்
அனைவரும் என்னுடைய
ஆராய்ச்சி சரி என்றும்
என்னுடைய கருத்து
சரி என்றும்
என்னுடைய கோட்பாடு
சரி என்றும்
ஏற்றுக் கொண்டு
உள்ளனர்

என்னுடைய கருத்தை
இன்று நீங்கள்
ஏற்றுக் கொள்ளாமல்
இருக்கலாம்
ஆனால் வருங்காலத்தில்
நீங்களும் என்னுடைய
கருத்தை ஏற்றுக்
கொள்ளத்தான்
போகிறீர்கள்

ஏனென்றால்
“உண்மை மறைந்து
இருக்கும்
ஆனால் ஒரு
போதும் உண்மை
இறந்து விடாது”
என்பதை மட்டும்
நினைவில்
கொள்ளுங்கள்
என்றார் கலிலியோ

---------  இன்னும் வரும்
---------  16-11-2018
///////////////////////////////////////////////////////////