January 09, 2019

திருக்குறள்-பதிவு-82


                        திருக்குறள்-பதிவு-82

விசாரணைக் குழு :
"Father
Bruno…………!
கிறிஸ்தவம் போதித்து
பின்பற்றும் புனித
தெய்வத்தின் மீதும்
நரகத்தின் மீதும்
தாங்கள் வைத்திருக்கும்
நம்பிக்கை என்ன…………?"

ஜியார்டானோ புருனோ :
கிறிஸ்தவம்
போதிக்கும்
புனித தெய்வங்களை
ஏன் மூன்று
நிலைகளில்
பிரித்து வைத்தார்கள்
என்ற விஷயம்
எனக்கு புரியவில்லை ;
பிதா, சுதன்,
பரிசுத்த ஆவியில்
முதல் இரண்டு
விஷயங்களான
பிதா, சுதன்
ஆகிய இரண்டு
விஷயங்களை
நான் ஏற்றுக்
கொள்கிறேன் ;
ஆனால் மூன்றாவது
விஷயமான
பரிசுத்த ஆவியை
என்னால் ஏற்றுக்
கொள்ள
முடியவில்லை ;
புரியாத ஒன்றை
நான் எப்படி ஏற்றுக்
கொள்ள முடியும் ;

“ பரிசுத்த ஆவி
என்பது
உருவமுடையதா
(அல்லது)
உருவமற்றதா
(அல்லது)
அது ஒரு குறியீடா
என்பது பற்றி
தெளிவாக எதிலும்
குறிப்பிடப்
படவில்லை  ;
தெளிவாக யாருக்கும்
சொல்லப்படவும்
இல்லை ;
பரிசுத்த ஆவியை
ஒரு மனிதனாகவும்
என்னால் பார்க்க
முடியவில்லை ;
அப்படி
இருக்கும் போது
எந்த ஒரு
நிலையிலும்
வைத்து பார்க்க
முடியாத பரிசுத்த
ஆவியை என்னால்
எப்படி ஏற்றுக்
கொள்ள முடியும்…………………? ”

" பரிசுத்த ஆவி
என்றால் என்ன
என்பதற்கான
விளக்கத்தை
சுவிசேஷமும்,
எந்த ஒரு
புனிதரும்
சொன்னதாக
எனக்குத்
தெரியவில்லை ! "

" நரகம் என்பது
பேய், பிசாசு வாசம்
பண்ணும் இடம்
அடைந்து
கிடக்கும் இடம்
அதனை நான்
ஏற்றுக் கொள்கிறேன் "

விசாரணைக் குழு :
“கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நம்பிக்கைகளின் படி
ஏற்றுக் கொள்கிறீர்களா? “

ஜியார்டானோ புருனோ :
நீங்கள் கேட்ட
கேள்வியில்
இரண்டு விதமான
நம்பிக்கைகள்
அடங்கி இருக்கிறது
ஒன்று
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின் மீது
வைக்கும் நம்பிக்கை
இரண்டு
தத்துவத்தின் மீது
வைக்கும் நம்பிக்கை

விசாரணைக் குழு :
“இந்த
உலகத்தில்
இரண்டு விதமான
நம்பிக்கைகள்
இல்லை
ஒரே ஒரு
நம்பிக்கை
மட்டுமே உள்ளது
அந்த நம்பிக்கை
கடவுளால்
வெளிப்படுத்தப்பட்டு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்
படுத்தப்பட்டு
வருகிறது “

ஜியார்டானோ புருனோ :
“என்னிடம்
எந்தவிதமான
கேள்விகளை
நீங்கள் கேட்க
வேண்டும் என்று
நினைக்கிறீர்களோ
அத்தகைய
கேள்விகளை
நேரடியாக
கேட்டு விடுங்கள்
மறைமுகமாக
மறைத்து மறைத்து
கேட்க வேண்டிய
அவசியம் இல்லை.
என்னிடம்
எதைத்தான் நீங்கள்
எதிர்பார்க்கிறீர்கள்…………?
நான் என்ன
பேச வேண்டும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்கள்”

---------  இன்னும் வரும்
---------  09-01-2019
///////////////////////////////////////////////////////////


January 08, 2019

திருக்குறள்-பதிவு-81


                        திருக்குறள்-பதிவு-81

"Father Bruno……….!
நீங்கள் இந்த
நீதிமன்றத்தில்
ஒரு குற்றவாளியாக
குற்றம் சுமத்தப்பட்டு
கைதியாக நின்று
கொண்டிருக்கிறீர்கள் !
உங்கள் மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களுக்கு பதில்
சொல்வதற்கு மட்டுமே
உங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது !
எதிர்த்துக் கேள்வி
கேட்பதற்கு உங்களுக்கு
எந்தவிதமான அனுமதியும்
வழங்கப்படவில்லை
என்பதை முதலில்
நீங்கள் தெரிந்து
கொள்ளுங்கள்…………..! “

" பல குற்றங்களுக்கு
காரணமானவர் நீங்கள் !
குற்றவாளி என்று
சொல்வதற்கு முழுத்
தகுதியுடையவர் நீங்கள் !
ஒரு குற்றவாளி எங்களைப்
பார்த்து எப்படி கேள்விகள்
கேட்க முடியும்…………………! "

"கேள்விகள் கேட்கும்
அதிகாரம் எங்களிடம்
மட்டுமே உள்ளது
கேட்கும் கேள்விகளுக்கு
மட்டுமே பதில்
சொல்லுங்கள் என்றார்
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori) “

"உங்கள்மேல் குற்றம்
சுமத்தி உங்களை
குற்றவாளி என்று
நிரூபிக்க பல்வேறு
விதமான ஆதாரங்கள்
உள்ளன "

"நீங்கள் எழுதிய
அறிக்கைகள் ;
வெனிஸ் நகரத்தில்
நடத்தப்பட்ட விசாரணையில்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
நீங்கள் அளித்த பதில்கள் ;
நீங்கள் எழுதியுள்ள
புத்தகங்கள் ;
மற்றும் பைபிளில்
ஆண்டவரால் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொல்லியுள்ள
கருத்துக்கள் ; ஆகிய
அனைத்தையும் நாங்கள்
ஆராய்ந்து பார்த்ததில்
ஒரே ஒரு விஷயம்
மட்டும் தெள்ளத்
தெளிவாக விளங்குகிறது "

"அதாவது நீங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிரானவர்
என்பதும் ;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்பதும் ;
கிறிஸ்தவ மத
நம்பிக்கைக்கு
எதிரானவர் என்பதும் ;
தெளிவாகிறது "
என்றார் விசாரணைக்குழு
கார்டினல்களில் ஒருவர் “

"எனக்கு இயேசு
கிறிஸ்துவின் மீதும்
கிறிஸ்தவ மதத்தின்
மீதும் நம்பிக்கை
உண்டு ஆனால்
கிறிஸ்தவ மதத்தில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
நம்பிக்கைகளின் மேல்
நம்பிக்கை கிடையாது"

"நான் ஒரு தத்துவவாதி
நான் ஒரு மிகப்பெரிய
தத்துவ அறிஞனும்
கிடையாது : மிகப்பெரிய
விஞ்ஞானியும் கிடையாது :
தத்துவமும், விஞ்ஞானமும்
எனக்குப் பிடிக்கும் :
த‘த்துவமும், விஞ்ஞானமும்
என்ன சொல்கிறதோ
அதை பேசினேன் :
அது உங்களுக்கு
பிடித்து இருந்தால்
ஏற்றுக் கொள்ளுங்கள் :
பிடிக்கவில்லை என்றால்
விட்டு விடுங்கள்  :
அப்படி செய்யாமல்
என்னை கைது பண்ணி
குற்றவாளியாக்க ஏன்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள்…………….? "

"நான் தத்துவமாகவும்,
விஞ்ஞான ரீதியாகவும்
பேசிய பேச்சுக்களையும்       
கண்டு பிடித்து சொன்ன
கருத்துக்களையும் கிறிஸ்தவ
மதத்துடன் இணைத்து
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டான் ;
என்று குற்றம் சுமத்தி
கிறிஸ்தவ மதத்திற்கு
விரோதியாக என்னை
அடையாளப்படுத்தி ;
கிறிஸ்தவ மக்கள்
என்னை விரோதியாக
நினைக்கும்படி வைத்ததோடு
மட்டுமல்லாமல் ;
என்னை குற்றவாளி என்று
நிரூபிக்க முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள் !"
என்றார் ஜியார்டானோ
புருனோ.

" நீங்கள் எழுதிய
எழுத்துக்கள் பேசிய
பேச்சுக்கள் அனைத்தும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக இருக்கிறது
என்று ஒரு நாள்
கூட நீங்கள் நினைத்துப்
பார்த்ததில்லையா……………………..?

“ Father Bruno
நீங்கள் கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக
இருந்த நீங்கள் :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக் கற்று
கிறிஸ்தவ
மதபோதகரான நீங்கள் :
கிறிஸ்தவ மதபோதகர்களில்
சிறந்தவராகக்
கருதப்படும் நீங்கள்
ஏன் நீங்கள் சார்ந்துள்ள
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறீர்கள் ”
என்றார் விசாரணைக்
குழுவில் உள்ள
கார்டினல்களில்
இன்னொருவர்.

“ நான் மதவாதி அல்ல !
ஒரு தத்துவவாதி !!
நான் மதத்தை
பின்பற்றவில்லை ;
தத்துவத்தைத் தான்
பின்பற்றினேன் ;
நான் சொன்னது
தத்துவ ரீதியாக
சரியானது ;
நீங்கள் அதை
மத ரீதியாக
தவறு என்கிறீர்கள் ;
உங்களுக்கும் எனக்கும்
ஒரே ஒரு
வித்தியாசம் தான்
நீங்கள் மதவாதி
நான் தத்துவவாதி
அவ்வளவு தான்” என்றார்
ஜியார்டோனோ புருனோ

---------  இன்னும் வரும்
---------  08-01-2019
///////////////////////////////////////////////////////////


January 06, 2019

திருக்குறள்-பதிவு-80


                      திருக்குறள்-பதிவு-80

ரோம் நகரம்
வந்தடைந்த
ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைக்கப் பட்டார்.

ஜியார்டானோ
புருனோவை
விசாரிப்பதற்காக
அமைக்கப்பட்ட
விசாரணைக் குழுவில்
சிறப்பு வாய்ந்த
கார்டினல்கள் ,
திறமை வாய்ந்த
கிறிஸ்தவ
மதபோதகர்கள் ,
ஆகியோர் இருந்தனர்

சிறையிலிருந்து
அழைத்து வரப்பட்ட
ஜியார்டானோ புருனோ
விசாரணை
மண்டபத்தில் ,
விசாரணைக் குழு
முன்னிலையில் ,
தன்னந்தனியாக
கைதியாக நின்று
கொண்டிருந்தார்.

ரோம் நகரத்தில்
விசாரணை
மண்டபத்தில்
விசாரணை
ஆரம்பமானது

“நோலா (Nola)
என்ற நகரத்திலிருந்து
வந்திருக்கும்
தந்தை (Father)
ஜியார்டானோ
புருனோ அவர்களே ! ”

“நீங்கள் சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்து
சரியானது என்றும் ;
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்றுகிறது என்று
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்து தவறானது“
என்றும் சொல்லி
இருக்கிறீர்கள்”

“இதன் மூலம்
நீங்கள் கிறிஸ்தவ
கடவுளுக்கு எதிராகவும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராகவும் ;
புனித தந்தையாக
கருதப்படும் போப்புக்கு
எதிராகவும் ;
கருத்து சொல்லி
இருக்கிறீர்கள்“

“மேலும் நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதபோதனைகளுக்கு
எதிராகவும் ;
தீங்கு விளைவிக்கும்
நடவடிக்கையில்
ஈடுபட்டதாக
குற்றம் சாட்டப் பட்டு
இப்போது நீங்கள்
எங்கள் முன்னால்
நின்று கொண்டு
இருக்கிறீர்கள் ”

“இந்த நீதிமன்றம்
உங்களுக்கு
நல்ல முறையில்
நல்லவிதமாக
தீர்ப்பு வழங்கவே
விரும்புகிறது ”

“நீங்கள் பரிசுத்த
ஆவியின் பெயராலே
உங்களுக்காக
வாதாடுவதற்கு
யாரேனும் இருந்தால்
அவர்களை நீங்கள்
கேட்கலாம் “ என்றார்
விசாரணை அதிகாரி.

“நான் யார்
என்பதும் ;
நான் படைத்த
படைப்புகள் எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவை
என்பதும் ;
அவைகள் எத்தகைய
அர்த்தத்தை
கொடுக்கக் கூடியவை
என்பதும் ;
எனக்கு தெரியும் ! ”

“விசாரணையின் போது
எப்படி பேச
வேண்டும் என்ற
கலையும் ;
பேச்சு வார்த்தையை
எப்படி நடத்த
வேண்டும்
என்ற கலையும் ;
எனக்கு நன்கு தெரியும்
அதனால் எனக்காக
நானே வாதாடிக்
கொள்கிறேன்” என்றார்
ஜியார்டானோ புருனோ ! “

“ உங்களுக்காக
நீங்கள் வாதிடுவது
என்பது உங்கள்
தனிப்பட்ட உரிமை
உங்களுக்கென்று
வழங்கப்பட்ட
அந்த உரிமையை
நல்ல முறையில்
பயன்படுத்திக் கொண்டு
உங்கள் தரப்பு
வாதங்களை
நீங்கள் எடுத்து
வைக்கலாம்”என்றார்
விசாரணை அதிகாரி

“வெனிஸ் நகரத்தில்
நான் சொல்லிய
கருத்துக்கள்
கிறிஸ்தவ மதத்தைச்
சேர்ந்தவர்களுக்கு
மன வருத்தத்தை
தந்து இருக்குமேயானால்
அதற்காக நான்
வருத்தம் தெரிவிக்கிறேன்
என்று நான்
வெனிஸ் நகரத்தில்
கேட்டுக் கொண்டும்
அதனை ஏற்றுக்
கொள்ளாமல்
ரோம் நகரம்
அழைத்து வந்து
நீதி மன்றத்தில்
விசாரணை என்ற
பெயரில் என்னை
கைதியாக நிற்க
வைத்தது மட்டுமல்லாமல்
ஒரு நீதிபதி
முன்னால் நின்று
கொண்டு நான்
விசாரிக்கப்பட வேண்டுமா…..?
ஏன் என்னுடைய
வார்த்தைகள்
உங்களுக்கு போதாதா…………….?
ஏன் அவைகளை
என்னுடைய தரப்பு
வாதங்களாக
நீங்கள் எடுத்துக்
கொள்ளக் கூடாதா ……………….?”
என்றார் ஜியார்டானோ
புருனோ ! “

---------  இன்னும் வரும்
---------  06-01-2019
///////////////////////////////////////////////////////////