January 21, 2019

திருக்குறள்-பதிவு-86


                       திருக்குறள்-பதிவு-86

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
எதிராக ரோம்
நகரத்தில் நடைபெற்ற
முதல் கட்ட
விசாரணையின்
குறிப்புகள்
அடங்கிய கோப்பு
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களால் தயார்
செய்யப்பட்டு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்கள் மூலமாக
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது ”

“ போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
அந்த கோப்பை
முழுமையாக
கவனத்துடன்
படித்து முடித்தார் “

போப் கிளமெண்ட்-VIII :
(Pope Clement-VIII)
 “கிறிஸ்தவ
குடும்பத்தில் பிறந்து ;
கிறிஸ்தவ
குடும்பத்தில் வளர்ந்து ;
கிறிஸ்தவராக வாழ்ந்து :
கிறிஸ்தவ பழக்க
வழக்கங்கங்களைக்
கற்று அதனைக்
கடைபிடித்து
கிறிஸ்தவராக வாழ்ந்து
வருவதோடு மட்டும்
அல்லாமல் ,
Father ஆக இருக்கும்
ஜியார்டானோ புருனோ
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு எதிராகவும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கிறிஸ்தவ மதத்தில்
உள்ள நம்பிக்கைகளுக்கு
எதிராகவும் ;

கருத்து சொல்கிறார்
என்றால் அது
ஆச்சரியப்பட
வேண்டிய விஷயம்

 “ ஏனென்றால்
கிறிஸ்தவ மத
வரலாற்றில்
இத்தகைய நிகழ்வு
நடைபெறுவது
என்பது இது தான்
முதல் முறை ”
.
“பிரச்சினைக்குரிய
இந்த விஷயத்தை
உலகமே உற்று
நோக்கி இமை
கொட்டாமல் கவனித்துக்
கொண்டு இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளுக்கு
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காக
அவரை நெருப்பில்
எரித்து கொல்ல
வேண்டும் என்று
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
முடிவு செய்து
இருந்தால் ,
வெனிஸ் நகரத்தின்
விசாரணைக்குழு
அளித்த
ஆதாரங்களைவிட
வலுவான
ஆதாரங்களை
ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு
சமர்ப்பிக்க வேண்டும் “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
சிறையில்
அடைப்பதையும்
நெருப்பில் இட்டு
கொல்லுவதையும்
விரும்பவில்லை. “

“ கிறிஸ்தவ மத
வரலாற்றில்
நடக்காத ஒரு
விஷயம் இப்போது
நடந்து கொண்டிருக்கிற
காரணத்தினால்
இந்த விஷயத்தை
கவனமுடன் எந்தவித
தவறுகளும் நேராத
வண்ணம் கையாள
வேண்டும் என்றும் ;
அவ்வப்போது
நடக்கும்
விசாரணைப் பற்றிய
நிகழ்வுகளை
உடனுக்குடன்
தனக்கு தெரிவிக்க
வேண்டும் என்றும் ;
கார்டினல் சார்டோரி
(Cardinal Sartori)
அவர்களிடம் இந்த
தகவலை சேர்க்குமாறு
ஃபாதர் டிராக்காலியோலோ
(Father Tragagliolo)
அவர்களிடம்
போப் கிளமெண்ட்-VIII
(Pope Clement-VIII)
அவர்கள்
வலியுறுத்தினார் ”

 ‘ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையின்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராக செயல்பட்டார்
என்பதற்கு ,
ஆதாரமாக அவர்
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
பேசிய பேச்சை
எடுத்துக் கொண்டு
ஆராயலாம் என்று
ரோமன்
விசாரணைக்குழு
முடிவு எடுத்து
அந்த பேச்சை
ஆராய்ந்தது.

ஜியார்டானோ புருனோ
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள்
மத்தியில் பேசிய
பேச்சு இது தான் !

---------  இன்னும் வரும்
---------  21-01-2019
/////////////////////////////////////////////////////////////


January 13, 2019

திருக்குறள்-பதிவு-85


                       திருக்குறள்-பதிவு-85

ஜியார்டானோ புருனோ :
“ பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்திற்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட
கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

கிறிஸ்தவ
மதத்தில் உள்ள
நம்பிக்கைகளுக்கு
எதிராக நான்
எழுதியதாக
சொல்லப்படும்
கருத்துக்களைப்
பற்றி நீங்கள்
கேட்ட கேள்விகளைப்
பார்க்கும் போதும் ;

இப்படித்தான்
தீர்ப்பு வழங்க
வேண்டும்
என்று முன்கூட்டியே
தீர்மானித்து விட்டு ,
என்னை
குற்றவாளி என்று
நிரூபிப்பதற்காக
விசாரணை
என்ற பெயரில்
சாட்சியங்களை
உருவாக்க
முயற்சி செய்து
கொண்டிருப்பது
தெரிகிறது. “

விசாரணைக் குழு :
Father Bruno………!
போதும்
நிறுத்துங்கள்……………………!
போதும்
நிறுத்துங்கள்………………………!
போதும்………………………..
நி……றுத்துங்……………கள்………!!

ஜியார்டானோ புருனோ :
“ நான்
எழுதிய புத்தகத்தில்
உள்ள எந்த
ஒரு பக்கத்தையும்
கிழிக்காமல்
முழுமையான
புத்தகத்தை
முழுமையாக
கொண்டு வாருங்கள் “

“ தேவாலயத்தில்
(Church)
உள்ள அனைத்து
அறிஞர்களையும்
(Scholar)
அழைத்து வாருங்கள் “

“ நான் எழுதிய
புத்தகத்தில் உள்ள
அனைத்து
கருத்துக்களைப் பற்றியும்
அவர்கள்
ஒவ்வொருவரிடமும்
விவாதிக்க
நான் தயாராக
இருக்கிறேன் “

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோ கேட்ட
கேள்விக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக்
குழுவில் உள்ள
அனைவரும்
மௌனமாக
இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக
இருந்தது)

ஜியார்டானோ புருனோ :
“ அமைதியாக
இருந்த
விசாரணைக்குழு
அதிகாரிகளைப்
பார்த்து,
ஜியார்டானோ
புருனோ கேட்டார்
உங்களுக்கு
உண்மையில்
என்ன தான்
வேண்டும்………?
என்னிடம்
நீங்கள் எதை
எதிர்பார்க்கிறீர்கள்…………!

விசாரணைக் குழு :
(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைக்கு
எந்தவித பதிலும்
சொல்லாமல்
விசாரணைக் குழுவில்
உள்ள அனைவரும்
மௌனமாக இருந்தனர்
நீதிமன்றம்
அமைதியாக இருந்தது)
///////////////////////////////////////////////////

“ஜியார்டானோ
புருனோவின்
மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்களின்
மேல்
ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல்
விசாரணையானது
முடிவடைந்தது “

“ முதல் விசாரணை
முடிவு அடைந்ததும்
ஜியார்டானோ
புருனோ
சிறைக்கு கொண்டு
செல்லப்பட்டு
சிறையில்
அடைக்கப்பட்டார் “

---------  இன்னும் வரும்
---------  13-01-2019
/////////////////////////////////////////////////////////////


January 12, 2019

திருக்குறள்- பதிவு-84


                      திருக்குறள்- பதிவு-84

விசாரணைக் குழு :
“ இயேசு கிறிஸ்து
சிலுவையில்
அறையப்படவில்லை ;
அவர் தூக்கில் இடப்பட்டார் ;
அவர் இறக்க  
விரும்பவில்லை ;
அவருடைய
விருப்பத்திற்கு
மாறாகத் தான்
அவர் இறந்தார் ;
அவர் ஒரு
சோகமான மனிதர் ;
அவர் மக்களை
கவருவதற்காக
அற்புதங்களை செய்ய
விருப்பப் பட்டார் ;என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கன்னியர்கள்
(Convents)
குருக்கள் (Priests)
ஆகியோரிடம் உள்ள
அனைத்து
வருமானங்களையும்
திரும்பப் பெற வேண்டும்
ஏனென்றால் அவர்கள்
இந்த உலகத்தை இழிவு
படுத்துபவர்கள் என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“குருக்கள் திருமணம்
செய்வது என்பது
தேவாலயத்தை
அசிங்கப்படுத்துவது
போன்றது
மற்றும்
அது ஒரு பாவச்
செயல் என்று
கருதப்பட்டு வருகிறது
உண்மையில்  
திருமணம் என்பது
இயற்கையின் ஒரு
அற்புதமான பரிசு என்று
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ தற்போது
உள்ள எந்த
ஒரு மதத்தையும்
உத்தமமான மதம் என்று
ஏற்றுக் கொள்ள முடியாது
ஏனென்றால் ஒவ்வொரு
மதமும் மனிதனை
அடிமையாக வைத்து
தனக்குத் தேவையானதை
நிறை வேற்றிக் கொள்ளும்
ஒரு மாபெரும் சக்தியாகத்
தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
ஒற்றுமையை குலைத்து
பிரிவினையை ஏற்படுத்தி
உறவுகளை பிரிக்கும்
மோதலை உண்டாக்கும்
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும் )
தனது மதத்தை
நிலை நிறுத்துவதற்காக
பிற மதத்தையும்
பிற மதத்தைச் சார்ந்த
மக்களையும் பிற
நாட்டையும் இரக்கமின்றி
அழிக்கக் கூடிய
ரத்தப் போர்களை
உண்டாக்கக் கூடிய
ஒரு மாபெரும்
சக்தியாகத் தான் மதம்
இருந்து வருகிறது
( என்றும்)
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள் “

விசாரணைக் குழு :
“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைகள் பயன்படுத்தும்
செயல்முறைகள்
அப்போஸ்தலர்கள்
பயன்படுத்தும்
முறைகளைப் போல்
இருப்பது இல்லை என்று
நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ ஏனென்றால்
அப்போஸ்தலர்கள்
நல்ல உதாரணங்களைக்
கொண்டு மக்களுக்கு
உபதேசம் செய்வார்கள்
ஆனால் நீங்கள்
அப்படி செய்வதில்லை “

ஜியார்டானோ புருனோ :
“நீங்கள்
என் மேல்
தொடர்ந்தாற்போல்
பல்வேறு விதமான
குற்றச் சாட்டுக்களைச்
சுமத்தி வார்த்தை
ஜாலங்களைப் பயன்படுத்தி
பல்வேறு விதமான
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே வருகிறீர்கள்
நீங்கள் கேட்கும்
கேள்விகளை தவறு
என்று நிரூபிக்க என்
சார்பாக என் தரப்பு
நியாயங்களை
எடுத்துக் கூறி
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் எனக்கு வாய்ப்பு
அளிக்காமல் தொடர்ந்து
கேள்விகளைக் கேட்டுக்
கொண்டே இருக்கிறீர்கள் “

“ நீங்கள் தொடர்ந்தாற்போல்
கேள்விகளைக் கேட்டு
என்னை பதில் சொல்ல
விடாமல் தடுப்பதன் மூலம்
எனக்காக நான்
வாதிடுவதற்குக் கூட
நீங்கள் என்னை
அனுமதிக்கவில்லை
என்பதிலிருந்து
என்னை நீங்கள்
குற்றவாளியாக்க முயற்சி
செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பது தெள்ளத்
தெளிவாக தெரிகிறது “

“ நான் நிறைய புத்தகங்களை
எழுதி இருக்கிறேன்
மக்களுக்கு பயன்படும்
வகையில் அறிவியல்
கண்டுபிடிப்புகளை
தத்துவங்களை
என்னுடைய
புத்தகங்களின் வாயிலாக
நல்ல கருத்துக்களை
நல்ல விவாதங்களாக
எழுதி இருக்கிறேன் “

“ நான் எழுதியுள்ள
பல்வேறு புத்தகங்களில்
உள்ள வார்த்தைகளை
வெட்டி எடுத்து
உங்களுக்கு எத்தகைய
அர்த்தங்கள்
தேவைப்படுகிறதோ
அத்தகைய அர்த்தங்களுக்கு
ஏற்ப வார்த்தைகளை
ஒன்றாகக் கோர்த்து
வரிசையாக அடுக்கி
கேள்விகளை உருவாக்கி
அவைகளைக் கேட்டு
என்மேல் குற்றச்
சாட்டுக்களைச் சுமத்தி
என்னை கிறிஸ்தவ
மதத்திற்கு
எதிரானவன் என்ற
நிலையை உருவாக்க
உங்களால் என்ன
என்ன செயல்களைச்
செய்ய முடியுமோ அந்த
செயல்களை எல்லாம்
நீங்கள் திறம்படச் செய்து
இருக்கிறீர்கள் என்பது
நீங்கள் கேட்கும்
கேள்விகளில் இருந்து
தெள்ளத் தெளிவாக
தெரிகிறது “

விசாரணைக் குழு :
போதும்…………………!
போதும்…………………!
போதும்………………..!

---------  இன்னும் வரும்
---------  12-01-2019
/////////////////////////////////////////////////////////////